முதல் பதிவு
இரண்டாம் பதிவு
மூன்றாம் பதிவு
இந்தப் பதிவில் நான் கூறப்போகும் முரட்டு வைத்தியத்துக்கானப் பின்னணியை முதலில் கூறிவிடுகிறேன்.
"துர் உபயோகம் ஆகக்கூடிய அதர் மற்றும் அனானி ஆப்ஷன்களை நீங்கள் வைத்துள்ளதால், இந்தப் பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காட்ட அதன் நகலை என்னுடைய மேலே சுட்டியப் பதிவிலேயே பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க:பதிவின் சுட்டி" என்ற ரேஞ்சில் வரும் என் பின்னூட்டங்கள் பலருக்கு ரொம்ப பரிச்சயமானது. இப்பதிவு அந்த அதர் ஆப்ஷனைப் பற்றியது.
கல்லூரிகளில் இயற்பியல் வகுப்பில் அளக்கும் கருவிகளை காலிப்ரேஷன் செய்யும் பரிசோதனையை உங்களில் பலர் செய்திருப்பீர்கள். உதாரணத்துக்கு ஒரு ammeter-ஐ எடுத்துக் கொள்வோம். மின்சார கரெண்டை அளக்கும் இக்கருவியை உபயோகத்துக்கு அளிக்கும் முன்னால் அதை கேலிப்ரேட் செய்ய வேண்டும். அதற்கு என்ன செய்வார்கள் என்றால் அக்கருவியை ஒரு ஸ்டேண்டர்ட் கருவியுடன் சீரீஸில் இணைத்து கரெண்ட் ரீடிங்குகளை எடுப்பார்கள். 1, 2, 3, 4, 5, .... 27, 28, 29, 30 ஆம்ப்ஸ் ரீடிங்குகளை ஸ்டேண்டர்ட் காண்பிக்கும்போது சோதனைக்குட்படுத்தப்படும் கருவி என்ன ரீடிங்குகள் காட்டுகிறது என்பதையும் குறிப்பார்கள். பிறகு இரண்டு கருவிகள் ரீடிங்குகளையும் க்ராஃபில் ப்ளாட் செய்வார்கள். 0-30 A கருவியில் ஒரு ஆம்பியருக்கு ஒரு புள்ளி வீதம் 30 பாயிண்டுகள் கிடைக்கும். எல்லாவற்றையும் ப்ளாட் செய்து பிறகு அவற்றை ஒரு கோட்டால் இணைப்பார்கள். சாதாரணமாக நாம் ஸ்மூத் கர்வ் வருவது போல இணைக்க வேண்டும். ஆனால் இங்கு மட்டும் ஒரு பாயிண்டை அதன் அடுத்த பாயிண்டுடன் நேர்க் கோட்டால்தான் இணைக்க வேண்டும். ஏனெனில் இந்த இணைக்கும் கோடு கண்டின்யுவஸ் கர்வ் அல்ல. அப்படி ஸ்மூத் கர்வாக வெளியிடுவது நியாயப்படுத்தமுடியாத துல்லியம் என்று கூறுவார்கள்.
விஞ்ஞானத்தில் இது ரொம்ப முக்கியமான அடிப்படை. அதாவது தேவையில்லாமல் துல்லியம் தரக் கூடாது. சரி, இப்பதிவின் விஷயத்துக்கு வருவோம். அனானி ஆப்ஷன் என்பதில் ஒரு பொய்மையும் இல்லை. அது அனாமத்து என்பதில் எந்த சந்தேகமும் இல்லையாதலால் தவறாகப் புரிந்து கொள்ளும் ஆபத்து இதில் இல்லை என்றுதான் கூறவேண்டும். அதாவது கேலிப்ரேஷன் கிராஃபில் நேர்க்கோடுகளால் பாயிண்டுகளைச் சேர்ப்பது.
ஆனால் இந்த அதர் ஆப்ஷன் இருக்கிறதே, இது ரொம்ப அபாயகரமானது. இதை வைத்துக் கொண்டு பல விஷமக் காரியங்கள் செய்யலாம்.என் விஷயத்தில் செய்யப்பட்டன என்பதை இந்தத் தமிழ்மணத்தில் பலரும் அறிவார்கள். இதை நாம் கேலிப்ரேஷன் புள்ளிகளை smooth curve ஆக இணைப்பதற்கு சமம்.
பலருக்கு நான் இப்போது கூறப்போவது கசப்பாக இருந்தாலும் ஒன்றைக் கூறியே ஆக வேண்டும். வலைப்பதிவாளர்களில் கணிசமான பேர்கள் மென்பொருள் உணர்வு அதிகம் இல்லாதவர்கள். பார்ப்பதை அப்படியே நம்புபவர்கள். அதர் ஆப்ஷனில் வெறுமனே பெயர் மற்றும் வலைத்தள முகவரி மட்டும் கேட்கப்படும். இந்த அதர் ஆப்ஷனை உபயோகித்து யார் வேண்டுமானாலும் எவருடைய பிளாக்கர் எண்ணையும் உபயோகித்து பின்னூட்டம் இட்டு விடலாம். அப்போது டிஸ்ப்ளே பெயரில் எலிக்குட்டியை வைத்துப் பார்த்தாலும் சரியான பிளாக்கர் எண்ணே தெரியும். ஆனால் இதைப் பலமுறை கூறியும் பிரயோசனம் ரொம்ப இல்லை என்றுதான் கூறவேண்டும்.
இப்போதைய பிளாக்கர் வசதிகள்படி அனானி ஆப்ஷனும் அதர் ஆப்ஷனும் தனித்தனியே செயலற்றதாகச் செய்ய இயலாது. ஆகவேதான் வெறும் பிளாக்கர் பின்னூட்டங்களை மட்டும் அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அவ்வளவு அபாயம் இல்லாத அனானி ஆப்ஷனும் இதில் அடிபட்டாலும் வேறு வழியில்லை. பிளாக்கருக்கு இது பற்றி நான் ஏற்கனவே எழுதியுள்ளேன். அவர்களும் கவனிப்பதாகக் கூறியுள்ளனர்.
அதெல்லாம் சரிதான் முரட்டுவைத்தியம் இதில் எங்கே வந்தது என்று கேட்பவர்களுக்கு இதோ கூறிவிடுகிறேன்.
இந்த அதர் ஆப்ஷனால் நான் மிகவும் பாதிக்கப்பட்டேன் என்று கூறினேன் அல்லவா. அதை எப்படி எதிர்க்கொள்வது என்று யோசித்து செயல்பட்டதுதான் அந்த முரட்டு வைத்தியம். அம்மாதிரி யோசனையின் விளைவுதான் நான் பிரபலப்படுத்திய மூன்று சோதனைகள். அவை உருவானதுகூட ஒரு சுவாரஸ்யமான விஷயம்தான்.
முதலில் என் பெயரில் பிளாக்கர் கணக்கு துவங்கப்பட்டு அசிங்கப் பின்னுட்டங்கள் அப்பெயரில் வெளியிடப்பட்டன. என்னுடைய உடனடி எதிர்வினை எலிக்குட்டி சோதனையைப் பற்றிக் கூறுவதே. போலி ஆசாமி அவ்வாறு துவக்கிய பிளாக்கர் கணக்கில் ஒரு வலைப்பூவையும் துவக்கினான். அதை க்ளிக் செய்தால் அது மெடா ரீடைரக்ஷன் என்ற உத்தியைப் பயன்படுத்தி என்னுடைய வலைப்பூவுக்கு இட்டுச் சென்றது. இதை எப்படி முறியடிப்பது? அதில்தான் பிறந்தது "என் பெயரில் வெளியாகும் பின்னூட்டங்கள்" என்றப் பதிவு. சில நாட்களுக்கு புதுப்பதிவு ஒன்றும் போடாமல் இருந்ததில் மெடா ரீடைரக்ஷன் மூலம் என் வலைப்பூவுக்கு வந்தவர்களின் கவனம் இப்பதிவால் ஈர்க்கப்பட்டது. ஆகவே போலியின் எண்ணம் நிறைவேறவில்லை. ஓசைப்படாமல் மெடா ரீடைரக்ஷனை வாபஸ் பெற்றான்.
இப்போது அதர் ஆப்ஷனை உபயோகித்து எலிக்குட்டி வைத்தாலும் என் பிளாக்கர் எண் வருமாறு செய்தான். சிறிது நேரம் என்ன செய்வது என்று திகைத்தேன். அப்போதுதான் என் நண்பர் எஸ்.கே. துணைக்கு வந்தார். என் ப்ரொஃபைலில் போட்டோ போட்டுக் கொள்ளச் சொன்னார். அவ்வாறு செய்ததில் நிலைமை சீரானது.
அதர் ஆப்ஷனில் வரும் பின்னூட்டங்களில் போட்டோ தெரியாது. அதே போல என் போட்டோவைப் போட்டு போலி ஆசாமி ஆரம்பித்த பிளாக்கர் கணக்கிலிருந்து பின்னூட்டமிட்டால் எலிக்குட்டி சரியான எண்ணைக் காண்பித்து விடும். இவ்வாறு என் முதல் இரண்டு சோதனைகள் வடிவு பெற்றன, அதாவது எலிக்குட்டி மூலம் சரியான பிளாக்கர் எண் தெரிய வேண்டும், அதே சமயம் போட்டோவும் தெரிய வேண்டும். மேலும் இவை இரண்டும் சேர்ந்து நிறைவேற வேண்டும்.
ஆனால் பிரச்சினைகள் வேறு ரூபத்தில் வந்தன. பல வலைப்பதிவாளர்கள் போட்டோக்கள் எனேபிள் செய்யவில்லை. அவர்களில் சிலர் அதர் ஆப்ஷன் வேறு வைத்திருந்தனர். மேலும், பிளாக்கர் இல்லாத வேறு சேவை தளங்களில் வலைப்பூ வைத்திருப்பவர்கள் விஷயத்தில் எலிக்குட்டி சோதனையோ போட்டோவோ பிரயோசனப்படாது. இங்குதான் என் மூன்றாம் சோதனை உருவாயிற்று. நான் எங்கு பின்னூட்டமிட்டாலும் அதன் நகலை நான் இதற்காகவே வைத்திருக்கும் என் தனிப்பதில் பின்னூட்டமாக இடுவதைத்தான் கூறுகிறேன்.
என்னால் முடிந்த அளவுக்கு பாதுகாப்புகள் செய்து கொண்டேன். ஆனால் அவை மட்டும் போதாது என்பதுதான் நிஜம். எலிக்குட்டியை வைத்துப் பார்க்கக் கூட சோம்பல் பலருக்கு. சிலருக்கு அது பற்றி நிஜமாகவே தெரியாது என்பதையும் கூறிவிட வேண்டும். இங்குதான் என் முரட்டு வைத்தியத்தின் அடுத்த நிலை எட்டப்பட்டது. தமிழ் மணத்தில் மறுமொழியப்பட்ட முந்தைய நாள் ஆக்கங்கள், புதுப்பதிவுகள் எல்லாவற்றையும் படித்து என் பெயரில் ஏதாவது பின்னூட்டம் வந்திருக்கிறதா என்று பார்ப்பது எனக்கு வழமையான வேலையாயிற்று. அவ்வாறு வரும் பதிவுகளில் போய் சம்பந்தப்பட்ட வலைப்பதிவாளர்களின் கவனத்தை ஈர்ப்பது எனது அடுத்த நடவடிக்கை ஆயிற்று. வீர வன்னியன், மயிலாடுதுறை சிவா, ரயாகரன், வா. மணிகண்டன் போன்ற சிலரைத் தவிர்த்து எல்லோருமே உடனுக்குடன் போலிப் பின்னூட்டங்களை நீக்கினர். இத்தருணத்தில் என் சார்பில் போலி பின்னூட்டங்களை அடையாளம் கண்ட என் நண்பர்கள் ரோசா வசந்த், குழலி ஆகியோரை நான் நன்றியுடன் குறிப்பிடுகிறேன். பலர் எனக்கு இது சம்பந்தமாக தனி மின்னஞ்சல்கள் வேறு அனுப்பினர்.
ஆக, நிலைமை ஓரளவுக்குக் கட்டுக்குள் வந்தது. இங்குதான் போலி ஒரு தவறு செய்தான். என் பதிவில் யாருமே பின்னூட்டம் இடக்கூடாது என்று அடாவடி செய்ய ஆரம்பித்தான். அதன்படி யார் என் பதிவில் பின்னூட்டமிட்டாலும் அவர்கள் பதிவுகளில் போய் அசிங்கமாக பின்னூட்டம் என் பெயரில் இட ஆரம்பித்தான். அதன் விளைவாக தமிழ்மணத்தில் பின்னூட்ட மட்டுறுத்தல் கட்டாயமாக்கப் பட்டது. விரல் எண்ணிக்கையில் அடங்கக் கூடிய சிலரைத் தவிர எல்லோருமே இந்த விதியை ஆதரித்தனர். ஆகவே தமிழ்மணத்தில் ரிஜிஸ்டர் செய்யப்பட்டப் பதிவுகளிலிருந்து அசிங்கப் பின்னூட்டங்கள் மறைந்தன.
இன்னும் எனது இந்த முரட்டு வைத்தியம் தொடர்கின்றது. எல்லாம் என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதனின் அருள்.
"Constant vigilance is the price demanded by freedom" என்பது தாரக மந்திரம். சிறிது ஏமாந்தாலும் சுதந்திரம் பறிபோய்விடும் அபாயம் உண்டு. அதே போலத்தான் மன நிம்மதியும். சுற்றுப்புறத்தில் எப்போதும் ஒரு கண் வைத்திருக்க வேண்டும். எங்கிருந்து யார் வந்து நிம்மதியைக் குலைப்பார்கள் என்பது தெரியாது. ஆகவே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
‘உங்க கருத்தோட முரண்படுறேன், ஆனா…”
-
அன்புள்ள ஜெ அண்மையில் ஒரு கடிதத்தில் உறுதியான கருத்துக்கள்
கொண்டிருக்கக்கூடாது என்று சொல்லியிருந்தீர்கள். இளம்வாசகர்கள் உடனடியாக
உறுதியான கருத்துக்கள் கொண்...
15 hours ago
28 comments:
'விழித்திரு' ன்றதுதானே? கவனமாத்தான் இருக்கோம் இப்பெல்லாம்.
ஆனாலும் இன்னும் சில பின்னூட்டங்கள் வந்துக்கிட்டுத்தான் இருக்கு.
அசிங்கமா இல்லாட்டாலும், நல்லவர்கள் பேரில் போலியாக.
வழக்கமா நமக்கு வர்ற பின்னூட்டர்களோட ப்ரஃபைல் # ஒரு தாளில் எழுதிவச்சுக்கிட்டு,
அதைப் பார்த்துச் செக் செஞ்சுட்டு பப்ளிஷ் செய்யறது இப்ப வாடிக்கையா வச்சிருக்கேன்.
சிரமத்தைப் பார்த்தா, ஜீவிக்க வேணாமா? சந்தேகப்படும் பெயரையெல்லாம் ஃபில்டர் பண்ணி இருக்கு.
அதுவே இப்ப வடிகட்டி வுட்டுருது. என்ன, இதில் உண்மையான நபர்களோடது எதாவது வந்தால்
அதுவும் வடிகட்டியிலே போயிரும். வேற வழி தெரியலை(-:
இல்லேன்னா, எல்லா ஆபாசத்தையும் படிக்கணும், ரிஜெக்ட் செய்யுமுன்பு.
இப்பெல்லாம் பொறுமையும் இல்லை.
எப்படியோ ஒரு முடிவு சிக்கிரம் கிடைக்கணும்.
பி.கு:
நேத்துதான் உங்களை நினைச்சுக்கிட்டேன். 108 திருப்பதிகள் பார்த்தப்ப,உங்க மகர நெடுங்குழைக்காதன்
வந்தான். பூமாதேவி பிறந்த ஸ்தலமாமே!
நீங்கள் அதர் ஆப்ஷனை எடுத்து விட்டதால் உங்களுக்கு டெண்ஷன் கொஞ்சம் கம்மிதான்.
என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதனைப் பார்த்தீர்களா? கொடுத்து வைத்தவர் நீங்கள். இத்தலத்தில் இருக்கும் பூமிதேவி உண்மையில் ஸ்ரீதேவிதான். பூதேவி அவரை விட அதிக அழகு உடையவராதலால் அன்று ஸ்ரீதேவி பூதேவியின் கோலத்தைத் தரிக்க, அன்று தரிசனத்துக்கு வந்த முனிவர் அதைத் தன் ஞான திருஷ்டியால் அறிந்து அவரை அதே ரூபத்தில் ஃப்ரீஸ் செய்ய பிறகு இத்தலத்தில் லக்குமிக்கு விமோசனம் கிடைத்ததாகக் கூறுகிறது தல புராணம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வெங்கட ரமணி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. அது automatic moderation உபயோகித்து அருமையான முறையில் உடனுக்குடன் அச்சிடப்பட்டது.
இங்கு கூட அதர் மற்றும் அனானி ஆப்ஷன்கள் கூடாது என்பது அடிப்படைத் தேவை. பார்க்க: http://silandhivalai.blogspot.com/2006/05/smart-moderation_18.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
நன்றி திரு.டோண்டு. நீங்களும் அனானி,அதர் ஆபத்தானதுன்னு எல்லாருக்கும் சொல்லுங்க.
1. தொல்லைகள் கொடுப்பதில் அவற்றைக் கொடுப்பவருக்கு இருக்கும் இன்பம் அதை முறியடிப்பதிலும் இருக்க வேண்டும்.
"முரட்டு வைத்தியம்" என்ற வார்த்தைகளே அதிலிருக்கும் வலியை குறிக்கின்றது. வலியோடு ஒரு செயலை செய்வது கடினமான ஒரு விஷயம். அச்செயல் மிக விருப்பத்திற்குகந்த விஷயமாக இருக்க வேண்டும். விருப்பமான விஷயங்களை கண்டறிவது சற்று ஸைக்கலாஜிக்கலான விஷயம். வெற்றி கிட்டிய விஷயங்கள், அல்லது வெற்றி கிடைக்கும் என நம்பிக்கை ஊட்டுகின்ற விஷயங்களே நமக்கு பிடித்த விஷயங்களாகின்றன. இயல்பாகவே வெற்றியைத் தேடும் சுபாவம் இதற்கு வேண்டும். ஒரு குழந்தையைப் போல. உங்களுக்கு இது இயல்பானதாகவிருப்பதால் (அல்லது இயல்பானவொன்றாக நீங்கள் ஆக்கிகொண்டதால்) உங்களது முரட்டு வைத்தியங்களின் விவரணை உங்களுடைய மகிழ்ச்சியை அடிநாதமாக உணர்த்துகிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இதை (மற்ற கட்டுரைகளையும் சேர்த்து) படிக்கும் எங்களுக்கும் ஒரு சந்தோஷம் ஏற்படுகிறது. இதற்குக் காரணம் வெற்றி பற்றிய நம்பிக்கையை அதன் தேவையுள்ள நாங்கள் உங்கள் கட்டுரை மூலம் உணர்வதால் இருக்கலாம்.
2. இயல்பாகவே தாங்கள் சுய ஏளனத்தை தவிர்ப்பவரா?
3. அதெல்லாம் இருக்கட்டும் சார்.
நான் ஒரு இயற்பியல் பட்டதாரி என்பதற்கு என்னிடம் உள்ள சான்றிதழ் மட்டுமே அத்தாக்ஷி. படித்தவை முற்றிலும் ஞாபகம் இல்லை. இதற்கு அவற்றை மீண்டும் நினைவுறத் தேவையான சூழ்நிலை வாய்க்கவில்லை என்பதும் ஒரு முக்கிய காரணம்.
நீங்கள் எப்படி பல விஷயங்களை ஞாபகம் வைத்துள்ளீர்கள்? வாரம் ஒரு முறை ரூமின் கதவுகளையெல்லாம் சாத்திக்கொண்டு தனியாக உட்கார்ந்து ஒரு மூன்று மணி நேரம் படித்தது, நடந்தது எல்லாவற்றையும் மீண்டும் மீண்டும் யோசிப்பீர்களோ? :-)
அல்லது உங்களது சிறுவயது டையரி எழுதும் பழக்கம் தற்போதும் தொடர்கிறதோ?
4. இவை எல்லாவறிற்கும் ஒரு நிலையான நேரத்தை ஒதுக்கிக்கொண்டு செயல்படுகிறீர்களா?
அல்லது மூடை பொறுத்து வேலையா?
5. இந்த பதிவு எனக்கு வேறொரு வகையில் ஏமாற்றம்தான். ஏனென்றால் இத்தொடரின் முந்தைய பதிவில் என் கேள்விக்கு விடையளிக்கும்போது உங்களுடைய அடுத்த பதிவிற்குத் தேவையான விஷயங்கள் கிடைத்துவிட்டதாகக் கூறினீர்கள். அந்த விஷயங்கள்தானா இவை என்பதில் எனக்கு ஒரு சிறிய சந்தேகம்.
6. சுவையாக எழுதுகிறீர்களே. மக்கள் அதிகம் ரசித்த உங்களுடைய பதிவுகளை நீங்கள் ஏன் புத்தகமாகப் போடக்கூடாது? (அல்லது ஏதேனும் பொதுஜன பத்திரிக்கைகள் பிரசுரிக்க முன்வந்தால் மிகவும் சிறப்பு).
அந்த வகையில் திரு. கால்கரி சிவாவின் அரேபிய அனுபவங்களும் பொதுஜனப் பார்வைக்கு வைக்கத் தகுந்தவையாக சுவையுடன் இருக்கின்றன.
>>> எலிக்குட்டியை வைத்துப் பார்க்கக் கூட சோம்பல் பலருக்கு. <<<
இதற்குக் காரணம் படிக்கும்போதே அது தங்களுடைய கருத்துத்தானா என்பது உடனடியாக தெரிந்துவிடுவதால் இருக்கலாம். அப்படி சந்தேகம் வரும் பக்ஷத்தில் எலிக்குட்டி சோதனை செய்துவிட்டல் போயிற்று. புத்திசாலித்தனத்தை சோம்பல் என்கிறீர்களே சார். :-)
விட்டுப்போன இன்னொரு கேள்வி:
வேலை நேரத்தில் (உங்களுடையது போன்ற) சுவையான ப்ளாக்குகளை படிக்க வேண்டும் என்கிற டெம்ப்டேஷனிலிருந்து தப்பி வேலையை உருப்படியாய் எப்படி செய்து முடிக்கிறீர்கள் என்பதையும் கூறிவிடுங்கள். :-D
நீங்களும் அனானி,அதர் ஆபத்தானதுன்னு எல்லாருக்கும் சொல்லுங்க.
நிச்சயமாக வெங்கடரமணி அவர்களே. அதற்குத்தான் இப்பதிவையே போட்டுள்ளேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அடடடடடா..
சார் இந்த போலி ஆராய்ச்சியில பயங்கரமா தேறிட்டீங்க போலருக்கு!
எத்திக்கல் ஹாக்கிங்னு ஒரு உத்தியோகம் இருக்கு. அதப்பத்தி சிலர் புத்தகங்கள் எழுதியிருக்காங்க. அதுமாதிரி நீங்க போலிகளை தடுப்பது எப்படீன்னு ஒரு புத்தகம் போடலாம்:)
நன்றி ம்யூஸ் அவர்களே. உங்கள் கேள்விகளுக்கு ஒவ்வொன்றாக பதிலளிக்கிறேன்.
"இயல்பாகவே தாங்கள் சுய ஏளனத்தை தவிர்ப்பவரா?"
சோ மாதிரி என்னை நானே கிண்டல் செய்ய விரும்ப மாட்டேனா என்றுதானே கேட்கிறீர்கள்? என்னை பகிடி செய்து வந்த பல பதிவுகளை ரசித்திருக்கிறேன். போட்டவர்களில் நண்பர் மாயவரத்தானும் ஒருவர். பெயரிலி இன்னொருவர். மிக அருமையான பகிடிகள். தமிழ்மணத்தில் வைரஸ் பற்றி இட்லி வடை என்னைப் பற்றி எழுதிய ஒன் லைனரை மிக ரசித்தவன். ஆனால் என்னை நானே பகிடி செய்து கொள்ளவில்லை. அது எனது இயலாமையைத்தான் குறிக்கிறது. முயற்சிக்கிறேன்.
"ஒரு மூன்று மணி நேரம் படித்தது, நடந்தது எல்லாவற்றையும் மீண்டும் மீண்டும் யோசிப்பீர்களோ? :-)"
இதெல்லாம் நடக்கும் காரியமா சார்? கேலிப்ரேஷன் சோதனையையே எடுத்துக் கொள்ளுங்களேன். அது சமீபத்தில் 1966-ல் தானே நடந்தது. அதை ஞாபகம் வைத்து எழுதுவது பெரிய விஷயமா?
"இத்தொடரின் முந்தைய பதிவில் என் கேள்விக்கு விடையளிக்கும்போது உங்களுடைய அடுத்த பதிவிற்குத் தேவையான விஷயங்கள் கிடைத்துவிட்டதாகக் கூறினீர்கள். அந்த விஷயங்கள்தானா இவை என்பதில் எனக்கு ஒரு சிறிய சந்தேகம்."
இல்லை அவை வேறு. முரட்டு வைத்தியம் - 5ல் வரக்கூடும்.
"உங்களுடைய பதிவுகளை நீங்கள் ஏன் புத்தகமாகப் போடக்கூடாது?"
Too early to think on those lines.
"இதற்குக் காரணம் படிக்கும்போதே அது தங்களுடைய கருத்துத்தானா என்பது உடனடியாக தெரிந்துவிடுவதால் இருக்கலாம்."
இதில்தான் அதிக ஆபத்தே இருக்கிறது. என் பெயரில் வரும் ஆபாசமில்லாப் பின்னூட்டங்கள் இம்முறையில் அனுமதிக்கப்படும் ரிஸ்க் இருக்கிறது. அதுதான் மயிலாடுதுறை சிவா அவர்கள் பதிவில் நடந்தது. பார்க்க: http://manikoondu.blogspot.com/2005/06/242526.html
இதே தவறு சம்பந்தப்பட்டவரால் மயிலாடுதுறை சிவா அவர்களின் அடுத்தப் பதிவிலேயே செய்யப்பட்டது. பார்க்க: http://manikoondu.blogspot.com/2005/06/blog-post_27.html#comments
என் வேலைகளுக்கு டெட் லைன் என்று உண்டு. ஆகவே அவற்றை தாமதப்படுத்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
"சார் இந்த போலி ஆராய்ச்சியில பயங்கரமா தேறிட்டீங்க போலருக்கு!"
Necessity is the mother of invention.
தூத்துக்குடியிலே அடாவடி வாடிக்கையாளரை லோன் கட்ட வச்சது எல்லாம் பேங்க் ட்ரைனிங்கிலா சொல்லிக் கொடுத்தார்கள்? பிரச்சினையை கண்டு மலைக்காமல் யோசித்தாலே தீர்வுகள் பாதி கிடைத்த மாதிரித்தானே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
\\"Constant vigilance is the price demanded by freedom"\\
உண்மை.... ஆனால் constant vigilance ன் எல்லை நிற்நயம் செய்யாமல் போகும் போது, சுதந்திரத்தின் சுகம் போய்விடுமே!
யார் இந்த எல்லையை நிற்நயிப்பது??
நன்மனம் அவர்களே, நீங்கள் சுகம் என்று கூறுவதை காம்ப்ளசன்ஸ் (complacence) என்று கூறுவார்கள். விஜிலன்ஸ் என்பது ஒரு பழக்கமாக இருக்க வேண்டும். பழகி விட்டால் அதை பற்றி நினைக்காமலேயே செயல்பட முடியும்.
நிர்ணயம் செய்ய வேண்டியது ஒவ்வொருவரும்தான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நீங்கள் சொன்ன மாதிரியே வலைப்பதிவாளர்கள் நிறைய பேருக்கு முறையான சாப்ட்வேர் அறிவு இல்லை... என்னையும் சேர்த்து தான்....
நான் கூட ஒரு வாரத்துக்கு முன்னர் தான் Anony Optionஐ தூக்கினேன்.... ஆபாச மெயில் தொல்லை அடங்கி இருக்கிறது....
லேட்டாக செய்தாலும் லேட்டஸ்டாகச் செய்து விட்டீர்கள் லக்கி லுக் அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
சார்,
ஒரு சிலர், அனானி ஆப்ஷன் பயன் படுத்தி நல்ல கருத்துக்களைச் சொல்கின்றனர்...அதர் ஆப்ஷன் தான் ஆபத்தானது என்பது புரிகிறது.
Blogger ல் அதர் ஆப்ஷன் மட்டும் தூக்க வழி இல்லை. போலிப் பின்னூட்டத்தை சரி செய்ய பின்னூட்ட மாற்றி இருக்கிறது தெரிந்தது தானே. எனது பதிவில் லிங்க் கொடுத்துள்ளேன்.
வஜ்ரா ஷங்கர்
நல்லது சங்கர் அவர்களே,
நல்ல பலன் கிடைத்தால் யார் வேண்டாமெனக் கூறப்போகிறார்கள்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
போலி டோண்டு வந்து இவ்வளவு அமர்க்களம் செய்து எல்லோருடையப் பெயரிலும் போலிப் பின்னூட்டங்கள் போடுகிறான். அதைத் தவிர்க்க எல்லோரும் முயன்று கொண்டிருக்க, சுவனப்பிரியன் போன்ற சில வலைப்பதிவாளர்கள் பொறுப்பற்று நடந்து கொள்கிறார்கள். அவருடைய பதிவு ஒன்றில் நான் இது சம்பந்தமாக இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://suvanappiriyan.blogspot.com/2006/04/blog-post_114736724168527676.html
"நீங்கள் தானே மாயவரத்தான் பேரில் வந்ததும், காசி பெயரில் வந்ததும் போலி என்று சொன்னீர்கள்?"
நான் கூறியதற்கப்புறமாவது எலிக்குட்டியை வைத்துப் பார்த்திருக்க வேண்டாமா நீங்கள்? ஒரு நொடியில் செய்ய வேண்டிய வேலைக்கு இப்படி அழும்பு செய்கிறீர்களே.
"இப்படி ஒவ்வொன்றையும் பரிசோதித்துக் கொண்டிருந்தால் மற்ற வேலைகளுக்கு நேரம் இருக்காது அல்லவா?"
எந்த மற்ற வேலைகள் ஐயா? இம்மாதிரி பொறுப்பற்ற பதில்கள் போடுவதா?
போலிப் பின்னூட்டம் என்பது எந்த முறையில் பார்த்தாலும் வெறுக்கத் தக்கதே. அது ஆபாசமாகத்தான் இருக்க வேண்டும் என்பதல்ல. என் பெயரில் அவதூறு என்பதற்காகக் நான் கூறவில்லை. வேறு இரண்டு மதிப்புக்குரிய வலைப்பதிவாளர்கள் பெயரில் போலியாகப் பின்னூட்டம் இடப்பட்டிருக்கிறது. அதை நீங்கள் அனுமதித்து அழகு பார்க்கிறீர்கள். உம்முடைய மன நிலையில் ஏதோ பிறழ்வு இருக்கிறது.
அதுவும் தமிழ்மணத்தை நமக்கெல்லாம் கொடுத்த காசிக்கு நீங்கள் செய்தது நன்றி மறந்த செயல். இப்படி நடக்கத்தான் உங்கள் மார்க்கம் உங்களுக்கு சொல்லிக் கொடுத்தது என்றால் அதை உங்கள் அல்லாதான் காப்பாற்ற வேண்டும்.
"அடுத்து இத்தனை பேர் இருக்கும் போது உங்களை மட்டும் அவர் சுற்றி சுற்றி ஏன் வருகிறார்? அந்த அளவு அவர் மனம் காயப்படும்படி என்ன பதிவைப் போட்டீர்கள் என்று சிந்தியுங்களேன்."
உங்கள் கேள்வியில் பிழை உள்ளது. இம்முறை போலி என்னைத் தாக்கவில்லை. வேறு இருவரைத் தாக்கியிருக்கிறான். அவனுக்கு மனம் என்று இருந்தால்தானே காயம் எல்லாம் படுவதற்கு? உங்களுக்கு மனசாட்சி இருக்கிறதா என்பதுதான் இப்போதைய என் கேள்வி.
இப்பின்னூட்டத்தின் நகல் எனது "முரட்டு வைத்தியம் - 4" என்னும் பதிவிலும் பின்னூட்டமாக இடப்படுகிறது. பார்க்க: http://dondu.blogspot.com/2006/05/4.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
மகேந்திரன் அவர்கள் அப்திவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://kilumathur.blogspot.com/2006/06/blog-post.html
"நீங்கள் குறிப்பிடும் போலி ஜெயக்குமார் நான் தான் நிஜம் என்கிறாரே?"
என்ன சார் குழந்தை மாதிரி பேசுகிறீர்கள்? பதிவாளர் எண் என்று ஒன்று இருக்கிறது அல்லவா? எது சீனியர் என்பதை பாருங்கள்? பிறகு சம்பந்தப்பட்ட இரண்டு வலைப்பூக்களை போய் படிக்கவும். போலியின் பதிவில், தான் ஜயகுமார், வெறி பிடித்தவன் என்றெல்லாம் தாறுமாறாக எழுதியிருக்கிறார். மனதிருந்தால் போலியை கண்டு கொள்வது பெரிய காரியமே இல்லை.
முதலில் உங்கள் அதர் ஆப்ஷனை எடுத்தாலே பாதி குழப்பம் தீரும். இந்தப் பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதற்கு மூன்று சோதனைகள் உண்டு. முதலில் என் டிஸ்ப்ளே பெயரில் எலிக்குட்டியை வைத்துப் பார்த்தால் கீழே என் சரியான பிளாக்கர் எண் 4800161 தெரிய வேண்டும், என் போட்டோவும் வர வேண்டும். மேலும், இப்பின்னூட்டத்தை என் தனிப்பதிவு "முரட்டு வைத்தியம்-4" லும் பின்னூட்டமாக இடுவேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/05/4.html
மூன்று சோதனைகளும் ஒருபோல வெற்றி பெற வேண்டும். இன்னொரு விஷயம்: போலிப் பின்னூட்டம் என்பது மிகவும் சீரியஸ் விஷயம். ஆபாசமாக இல்லாமல் இருந்தாலும்கூட அவற்றை அனுமதிக்கலாகாது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
தமிழ்மணம் அறிவிப்புகள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://thamizmanam.blogspot.com/2006/06/blog-post.html
தவறான உபயோகத்துக்கு ஆளாகக் கூடிய அதர் ஆப்ஷனை எடுத்து விடுமாறு நான் பார்ப்பவர்களை எல்லாம் கேட்டு வருகிறேன். இங்கே வந்து பார்த்தால் இங்கேயே அது உள்ளது.
"கொடுமை கொடுமை என்று கோவிலுக்குப் போனா அங்கே ரெண்டு கொடுமை ஜிங்கு ஜிங்குன்னு ஆடிச்சாம்" என்கிற மாதிரியில்லை இருக்கு!
இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதை காட்ட அதன் நகலை என்னுடைய "முரட்டு வைத்தியம் - 4" என்னும் பதிவிலும் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/05/4.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
அஞ்சாத நிருபர் வீரபத்திரன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://nirubar.blogspot.com/2006/06/blog-post_06.html
"தமிழில் வலைபதிவுகளை ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக மவுனமாக பார்த்து வருகிறேன். அங்கங்கே பெயர் சொல்லாமல் பின்னூட்டியது உண்டு."
பெயர் சொல்லாமல்! ஏன், அஞ்சாத நிருபர் வீரபத்திரன் அவர்களே?
அபாயகரமான அதர் ஆப்ஷனை நீங்கள் வைத்திருப்பதாலும், உங்கள் பதிவில் போட்டோக்களை எனேபிள் செய்திருக்கிறீர்களா என்பது எனக்கு தெரியாததாலும், இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காட்ட அதன் நகலை என்னுடைய "முரட்டு வைத்தியம் - 4" என்ற பதிவிலும் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/05/4.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
முகமூடி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://mugamoodi.blogspot.com/2006/06/blog-post.html
"என்னை யாரும் ஏன் தாக்கவில்லை என்று எனக்கும்தான் தெரியவில்லை. தே மா புளி மா, உன் பெண்டாட்டியை, உன் மம்மியை ........... என்று இவனையும் நாலு பொளி பொளித்தால்தான் 'மப்பு' தெளியும் என்ற நோக்கத்துடன் போலிகள் யாருக்காவது எனக்கு விளக்கப்பாடம் எடுக்கும் நோக்கம் இருப்பின் என் பின்னூட்டப் பெட்டியில் வந்து, அங்கே இருக்கும் என் வேண்டுகோளையும் படித்துவிட்டு, விருப்பமிருப்பின் என்னைக்குறித்து வண்டி வண்டியாகத் தங்கள் மூளை நரகலைக் கழிந்துவிட்டுப் போகலாம், அதைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கையில் நீக்கிக்கொள்கிறேன். எத்தனையோ வேலை பார்த்தாயிற்று, தோட்டி வேலையும் சேர்த்துப் பார்த்துவிடுகிறேன். இதில் பிற பதிவர்களை இழுக்கவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளத்தான் முடியும்."
போலி பிரச்சினையை பற்றி நீங்கள் புரிந்து கொண்டது இவ்வளவுதானா? அவன் உங்கள் பெட்டிக்கு வந்து உங்களைத் திட்டுவது ஜுஜுபி. அவன் செய்வது என்னவென்றால் உங்களைப் போலவே ஐ.டி. உருவாக்கி, மற்றவர் பதிவுகளில் போய் உங்கள் பெயரில் மற்றவர்களைத் திட்டுவான். போய் போலி காசி, போலி டோண்டு, போலி மாயவரத்தான் (எல்லோரும் ஒருவரே, அவரும் யார் என்பது எல்லோருக்கும் தெரியும்) ஆகியோரது பதிவுகளில் போய்ப் பாருங்கள், விஷயம் புரியும்.
உங்கள் போட்டோ, உங்கள் குடும்பத்தார் போட்டோ எல்லாவற்றையும் போட்டு சந்திக்கு இழுப்பான். திருமலை அவர்கள் கூறியது முக்கியமாக அதைப் பற்றி.
பொட்டீக்கடையின் அந்தப் பதிவுக்கு அவ்வாறு லிங்க் எப்படி வந்திருக்க முடியும் என்று யோசித்தால் ஒரு விஷயம் புலப்படுகிறது. அதை பொட்டீக்கடை செய்யவில்லை என்ற வாதத்தை ஏற்றுக் கொண்டால், ஒன்று நிச்சயமாகிறது. அவர் அப்பதிவை வகைப்படுத்தாது விட்டிருக்க வேண்டும், அம்மாதிரி நிலையில் வேறு யார் வேண்டுமானாலும் வகைப் படுத்த முடியும், அச்சமயத்தில் இணைப்புச் சொற்களையும் உருவாக்கியிருக்க முடியும். அவ்வாறு வக்கிரமாகச் செய்யக் கூடியவர் தமிழ்மணத்தில் ஒருவரே, அதுதான் போலி டோண்டு. குறைந்த பட்சம் வகைபடுத்தாது தன் பதிவை விடுவது carelessness தான்.
இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காண்பிக்கும் வகையில் அதன் நகலை என்னுடைய "முரட்டு வைத்தியம்-4" என்ற பதிவிலும் பின்னூட்டமாக இடுவேன், பார்க்க: http://dondu.blogspot.com/2006/05/4.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
பட்டாம்பூச்சி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://agnisiragu.blogspot.com/2006/06/blog-post_15.html
"அது போலி டோண்டு என்று நினைக்கிறேன்...பதில் எல்லாம் சொல்லி நேரத்தை வீணடிக்கவேண்டாம்..."
இதில் நினைப்பதற்கு என்ன இருக்கிறது ஷங்கர் அவர்களே? அது என்னுடைய பின்னூட்டம் அல்ல. ஆபாசமோ இல்லையோ, அது போலி, என் பெயரில் அது இருப்பது நல்லதல்ல என்பதால், அதை நீக்குமாறு பட்டாம்பூச்சி அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
உண்மை டோண்டுவின் பின்னூட்டத்தை அறிய மூன்று சோதனைகள் உன்Dஉ. அதை பற்றி மேலும் அறிய என்னுடைய "முரட்டு வைத்தியம்-4" பதிவைப் பார்க்கவும். அதில் இப்பின்னூட்டத்தின் ந்கலையும் பின்னூட்டமாக இடுவேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/05/4.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
லக்கி லுக் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://madippakkam.blogspot.com/2006/06/blog-post_23.html
லக்கிலுக் அவர்களே, எனக்கு சில சந்தேகங்கள். தயவு செய்து நிவர்த்திக்க முடியுமா?
என்னுடைய முரட்டு வைத்தியம்-1 பதிவில் நீங்கள் இட்ட இந்தப் பின்னூட்டம்: "உங்க வீட்டு பக்கத்துலேயே வெற்றிவேல், வேலன் தியேட்டர்கள் இருக்கிறதே? அங்கே கூட படம் பார்க்க மாட்டிங்களா? நான் ஸ்கூல் படிக்கிறப்ப (நேரு ஸ்கூல்) எப்பவும் அந்த தியேட்டர்ல தான் கிடப்பேன்...
# posted by luckylook : April 19, 2006 3:47 PM
பார்க்க: http://dondu.blogspot.com/2006/04/1.html
நீங்கள் பிறந்து வளர்ந்தது மடிப்பாக்கம் என்று எழுதியுள்ளீர்கள். நேரு ஸ்கூல் சரிதான். ஆனால் சங்கர மடத்தால் நடத்தப்படும் ஸ்கூல் எங்கிருந்து வந்தது?
ஒன்றே ஒன்று இப்போது மடிப்பாக்கத்தில் இருப்பதாக அறிகிறேன். ஆனால் அதுவும் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் ஆரம்பிக்கப்பட்டது என்பதையும் கேள்விப்பட்டேன். ஆக, நீங்கள் 4 வயதில் சங்கர மடம் நடத்திய பள்ளியில் நீங்கள் படித்திருப்பதாகக் கூறுவது நம்பத் தகுந்ததாக இல்லை. ஏதோ இட்டுக் கட்டிப் போட்டது போல இருக்கிறது.
சில நாட்களாகவே எனக்கு வேறு ஒரு சந்தேகமும் உண்டு. நீங்கள் இருப்பதாகக் கூறிக் கொள்ளும் மடிப்பாக்கம் என் வீட்டிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரமே உள்ளது. நீங்கள் என் டெலிபோன் எண்ணைக் கேட்டதும் நான் உடனே என் பின்னூட்டத்தில் தந்தேன். ஆனால் நான் கேட்டும் நீங்கள் தரவில்லை. ஆகவே நீங்கள் நிஜமாகவே மடிப்பாக்கத்தில்தான் உள்ளீர்களா என்ற சந்தேகம் வேறு வந்து பிறாண்டுகிறது.
போன வலைப்பதிவர் மீட்டிங் போது நீங்கள் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஒரு கம்பெனியில் இருந்ததாகவும், நேரம் இருந்திருந்தால் ஒரு எட்டு வந்து பார்த்திருப்பேன் என்று வேறு கூறியிருந்தீர்கள். (உங்கள் பின்னூட்டம் என் பதிவில்: "அருமையான சந்திப்பு.... பெரிய கொடுமை என்னவென்றால் உங்கள் சந்திப்பு நடந்த 6 மணிக்கு உட்லண்ட்ஸ் எதிரே இருக்கும் ராம்ஸ் அபார்ட்மெண்டில் தான் நான் இருந்தேன்.... ஒரு 10 நிமிட அவகாசம் கிடைத்திருந்தாலும் எல்லோரையும் வந்து சந்தித்து விட்டு போயிருப்பேன்.....
# posted by luckylook : May 29, 2006 10:01 AM"
பதிவின் உரல்: http://dondu.blogspot.com/2006/05/blog-post_28.html
ஏன் செல்பேசியில் பேசியிருக்கலாமே.
இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதை காட்டும் வகையில் அதன் நகலை என்னுடைய முரட்டு வைத்தியம்-4ல் இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/05/4.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
இட்லி வடை அவர்களது பதிவில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://idlyvadai.blogspot.com/2006/06/blog-post_28.html
"இந்தியா அன்று எமது தலைவர் பிரபாகரனை கொன்றது [செய்தியின் படி] சரி என்றால், இந்தியாவின் தலைவர் ராஜீவ் காந்தியைக் கொன்றதுவும் சரியே. இதை எவ்வாறு இந்தியர்கள் தப்பு என்று சொல்ல முடியும்?"
இது சரி என்று ஒரு வாதத்துக்காக வைத்துக் கொள்வோம். அப்புறம் ஏன் புலிகள் பாலசிங்கம் மூலமாக பிச்சை எடுக்க வேண்டும் இந்திய ஆதரவு கேட்டு? அப்ப்டியே போய்த் தொலைவதுதானே. வெட்கமாக இல்லை புலிகளுக்கு?
இதனால் ஈழத் தமிழர்கள் பாதிக்கப்படுவது வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால் இப்படி முட்டாள்தனமாக நடந்து கொண்டு தங்களுக்கு உதவி செய்திருக்கக் கூடிய ஒரு நாட்டின் தலைவர் ஒருவரை போட்டுத் தள்ளியது புகிகளின் தவறே. இந்தியாவின் ஆதரவு கிடைக்காத காரணத்தால் ஏதேனும் இழப்பு வந்தால் அதற்கு புலிகள்தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.
பிரபாகரனை பிடித்து, வழக்கு நடத்தி தூக்கில் போடும்வரை புலிகள் இந்திய நிலைமையில் மாறுதல் எதிர்ப்பார்ப்பது பைத்தியக்காரத்தனமே.
இந்தச் சூழ்நிலையில்தான் தி.மு.க. பதவிக்கு வந்திருப்பது மனதை நெருடுகிறது.
தவறாக உபயோகம் ஆகக் கூடிய அதர் ஆப்ஷனை இந்த வலைப்பூ வைத்திருப்பதால், இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காட்டும் வகையில் அதன் நகல் என்னுடைய "முரட்டு வைத்தியம்-4" என்னும் பதிவிலும் பின்னூட்டமாக இடப்படுகிறது. பார்க்க: http://dondu.blogspot.com/2006/05/4.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
செந்தழல் ரவி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இப்பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://tvpravi.blogspot.com/2006/06/blog-post_27.html
ரவி அவர்களே,
நீங்கள் வஜ்ரா ஷங்கர் அவர்களுக்கு அநீதி இழைத்து விட்டீர்கள். அதர் ஆப்ஷன் உபயோகித்து போலி டோண்டு என்ற இழிபிறவி அன்னை தெரசா கல்கத்தாவில் விபசார விடுதி நடத்துவதாகப் போட்டுள்ளது. அதை அப்படியே போட்டு ஷங்கருக்கு பதில் சொல்வதாகக் கூறி அசிங்கப் படுத்தியுள்ளீர்கள். போலிப் பதிவில் போட்டோ இல்லை. அதை கூட யோசிக்காமல் என்ன காரியம் செய்கிறீர்கள் நீங்கள்? வஜ்ரா அவ்கள் சொல்லியும் இன்னும் அப்பின்னூட்டத்தை எடுக்காமல் இருப்பது அக்கிரமம்.
இப்போது புரிகிறதா, அதர் ஆப்ஷனின் விபரீத உபயோகம்? சாதாரணமாக உபயோகிக்க வேண்டிய பாதுகாப்புகளை கூட உபயோகிக்காது நீங்கள் என்ன செய்கிறீர்கள்.
ஒன்று அதர் ஆப்ஷனை எடுத்து விடுங்கள், இல்லையேல் அவ்வாறு வரும் பின்னூட்டங்களை மட்டுறுத்தும் சமயம் ஜாக்கிரதையாக இருங்கள்.
இவ்வாறு தவறாக உபயோகம் ஆகக் கூடிய (இந்தப் பதிவிலும் ஆன) அதர் ஆப்ஷனை இந்த வலைப்பூ வைத்திருப்பதால், இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காட்டும் வகையில் அதன் நகல் என்னுடைய "முரட்டு வைத்தியம்-4" என்னும் பதிவிலும் பின்னூட்டமாக இடப்படுகிறது. பார்க்க: http://dondu.blogspot.com/2006/05/4.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
பின் குறிப்பு: நேரம் கிடைத்தால் நான் சுட்டிய என் பதிவிற்கு போய் படிக்கவும்.
செந்தழல் ரவி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://tvpravi.blogspot.com/2006/07/blog-post_05.html
"ஆகவே, திங்கள் அன்று அவர்களிடம் உள்ள மென்பொருள் உதவியுடன் முயற்சி செய்யலாம் என்பதே திட்டம்.
ஆனால் நீங்கள் - அவசரப்பட்டுவிட்டீர்..என்னிடம் ஒரு மடல் அனுப்பி கேட்டிருந்தால் நான் தகுந்த தன்னிலை விளக்கம் கொடுத்திருப்பேன்..
இனிவரும் காலங்களிலாவது என் போல் யாரும் பாதிக்கப்படாமல் இருக்க யாராவது புகார் கொடுத்தால் - இருதரப்பு வாதங்களையும் கேட்டு பிறகு முடிவெடுக்கவும்..."
இன்று புதன். திங்கள் அன்று ஏதேனும் கண்டுபிடிக்க முடிந்ததா?
ஆனால் தமிழ்மணம் நிர்வாகிகள் தெளிவாகவே கூறியுள்ளனர், போலிப் பின்னூட்டங்களை சம்பந்தப்பட்டப் பதிவர் பல முறை பாதிக்கப்பட்டவர் கேட்டுக் கொண்ட பிறகும் எடுக்கவில்லையெனில் அவர் பதிவுகள் தமிழ்மணம் மறுமொழி இற்றைப்படுத்தலிலிருந்து தூக்கப்படும் என்று. சம்பந்தப்பட்டப் பதிவரிடம் போய் விளக்கங்கள் கேட்கப் போவதாக எங்கும் குறிப்பிடவில்லை என்பதை. ஆக, அவர்கள் தூக்கியது அவர்கள் அறிவித்த நெறிமுறையின்படியே.
போலிப் பின்னூட்டத்தை எடுத்து விட்டீர்கள், ஆனால் அதை உண்மையெனத் தவறாகக் கருதி நீங்கள் கொடுத்த எதிர்வினையை அப்படியே வைத்திருப்பதன் நோக்கம் என்ன? அது இதோ:
"வஜ்ரா..இதைவிட கொடுமையா அசிங்கப்படுத்த முடியுமா ? உங்கள் மேல் மரியாதை வைத்திருக்கும் செந்தழல் ரவியின் மனதை குத்தீட்டி கொண்டு கிழித்துவிட்டீரே...
மற்றவர்கள் தெரிந்து கொள்ளட்டும் என்பதற்காக தான் பிரசுரம் செய்துள்ளேன்..
மியூஸ் இதை ஆமோதிப்பார்..சில ஆன்லைன் லிங்குகளை கொடுப்பார்..என்ன அழுக்கு சிந்தனை.."
வஜ்ராவை இந்தப் போலிப் பின்னூட்டம் சம்பந்தமாக எதிர்த்து அனானி போட்டப் பின்னூட்டம் இதோ:
"போலி ரசிகர் மன்றம் said...
///அவர் கொல்கத்தாவில் விபசார விடுதி நடத்தி கோடி கோடியாக சம்பாதித்தார். அவ்வளாவுதான் இப்போது சொல்ல முடியும்.////
லவடிகோபால், அன்னை தெரசா என்ன உன் ஆத்தா ஜெயலலிதாவா? உன் பாப்பார பாம்பு புத்தியை கடைசியில காமிச்சுட்டே. ஒழுங்காக ஒருத்தனுக்கு பொறந்தவன் இதுமாதிரி எந்த காலத்திலேயும் நெனைக்க மாட்டாண்டா வஜ்ரா.
Thursday, June 29, 2006 2:45:15 PM"
நான் கூறுகிறேன், உங்கள் போலிப் பின்னூட்ட நீக்கமும் அரைகுறையாகத்தான் இருக்கிறதென்று. உங்களுக்கு வஜ்ரா மேல் இருக்கும் காழ்ப்புணர்ச்சியை இதைவிட மலிவாக நீங்கள் காட்டிட இயலாது.
போன வெள்ளியன்றே வஜ்ரா அவர்கள் அந்த அனானி பின்னூட்டம் இடவில்லை என்று தெரிந்தும், அது ஒருவனுடைய நற்பெயரைத் தாக்குகிறது எனத் தெரிந்த பிறகும் சாவகாசமாக விடுமுறை கழிக்கச் செல்கிறீர்கள், அதற்கானக் காரணத்தை இங்கு இப்பதிவில் கூறினீர்கள். ஆனால் அப்பதிவில் நீங்கள் கூறியது வேறு காரணம். அது இதோ:
"ஜெயராமன் அவர்களே...
அவனை நிறுத்தச்சொல்லு...நான் நிறுத்தரேன் என்கிறமாதிரி...
தாங்கள் இன்னும் மியூஸ் பின்னூட்டத்தை வைத்திருக்கிறீர்தானே...
( அது எங்கள் மனதை புன்படுத்தும் என்று தெரிந்தும்)
ஆகவே நீங்கள் நீக்கிவிட்டு வாருங்கள்...அப்போது நானும் பரிசீலனை செய்கிறேன்...
மேலும் இப்போதெல்லாம் நான் என் பழைய கொள்கைகளை தாங்கிக்கொண்டு இருக்கவில்லை...
Thursday, June 29, 2006 3:09:38 PM"
என்ன போங்குத்தனமான வாதம்? வஜ்ராவை பற்றிய தப்பெண்ணத்தை நீக்கிக் கொள்ள ஜெயராமன் அவர்கள் தன் பதிவிலிருந்து ஒரு பின்னூட்டத்தை நீக்க வேண்டுமெனக் கேட்கிறீர்களே, இதை என்ன சொல்வது?
இவ்வளவு நடந்த பிறகும் அதர் ஆப்ஷனை வைத்து அழகு பார்க்கிறீர்கள். அதை வைத்து நல்லது கெட்டதை பகுத்தறியும் அறிவு உங்களிடம் இல்லாதபோது, அதை நீக்கி பிளாக்கர் பின்னூட்டம் மட்டும் செயல்படுத்துவதுதானே புத்திசாலித்தனம்?
இந்தப் பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காட்ட இதன் நகல் என்னுடைய "முரட்டு வைத்தியம்-4" பதிவிலும் பின்னூட்டமாக இடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2006/05/4.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
/// நீங்கள் பிறந்து வளர்ந்தது மடிப்பாக்கம் என்று எழுதியுள்ளீர்கள். நேரு ஸ்கூல் சரிதான். ஆனால் சங்கர மடத்தால் நடத்தப்படும் ஸ்கூல் எங்கிருந்து வந்தது? ///
உங்கள் சந்தேகம் நியாயமானதே... என் பதிவிலேயே இதற்கு விடை இருக்கிறதே... சரியாகப் படிக்கவில்லையா? ///தான் செய்த தவறை உணர்ந்து என்னை அதன் பின்னரே வேறுப் பள்ளியில் சேர்த்தார்...////
நான் தெளிவாகவே சொல்லி இருக்கிறேன்... ஓரிரு வருடங்களில் என் தந்தை என்னை பள்ளி மாற்றம் செய்து விட்டார் என்று....
சங்கரமடம் அப்போது மடிப்பாக்கத்தில் சங்கர வித்யாலயா என்றப் பள்ளியை நடத்தி வந்தது.... இப்போதும் அந்தப் பள்ளி அங்கே இல்லை... மூடி விட்டார்கள்... ஆனாலும் பல்லாவரத்தில் சங்கரவித்யாலயா வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது.... பல்லாவரத்தில் ஆரம்பிக்கப்பட்ட அதே காலத்தில் தான் மடிப்பாக்கத்திலும் ஆரம்பிக்கப்பட்டது....
///நீங்கள் என் டெலிபோன் எண்ணைக் கேட்டதும் நான் உடனே என் பின்னூட்டத்தில் தந்தேன். ஆனால் நான் கேட்டும் நீங்கள் தரவில்லை.///
நான் கேட்டு நீங்கள் தரவில்லை... நீங்களாகத் தான் உங்களுடைய பதிவிலேயே உங்கள் தொலைபேசி எண்ணை பின்னூட்டம் இட்டிருந்தீர்கள்... அதை அழிக்கச் சொல்லி கூட நான் கேட்டது உங்களுக்கு நினைவிருக்கும்... நான் என்னுடைய செல்பேசியை அலுவலக நேரத்தில் பொதுவாக உபயோகிப்பதில்லை... வேலைக்கு தொந்தரவாக இருப்பதால் தொலைபேசி எண்ணை எல்லோருக்கும் தருவதில்லை....
உங்கள் வலைப்பதிவாளர் சந்திப்பு நடந்தபோது சென்னை உட்லண்ட்ஸ் தியேட்டருக்கு எதிரில் இருக்கும் ராம்ஸ் அபார்ட்மெண்டில் நான் ஏற்கனவே உங்கள் பதிவில் பின்னூட்டம் இட்டிருந்ததைப் போல ஒரு முக்கியமான கிளையண்ட் மீட்டிங்கில் இருந்தேன்... அதனால் பேச முடியவில்லை....
Post a Comment