போன பதிவில் எழுதியது முதல் சந்திப்பைப் பற்றியது. அதில் செந்தழல் ரவி சற்று தாமதமாக வந்தார். அவருக்காகக் காத்திருந்த மற்றவர் அடுத்த சில நிமிடங்களிலேயே போண்டா சாப்பிட அவரையும் அழைத்துப் போய் விட்டோம். போன இடத்திலும் போண்டா, ரவா இட்டலி ஆகியவற்றின் ஒப்பீடு நடந்ததுதான் அதிகம். மைசூர் போண்டாவை பெங்களூரில் என்ன பெயர் வைத்து அழைப்பார்கள் என்ற அதி முக்கியமான விஷயத்தைப் பற்றி வேறு அலசல். ஆகவே ரவி என்னுடன் பேச நினைத்ததையெல்லா பேச முடியவில்லை என்று நாங்கள் இருவருமே அபிப்பிராயப்பட்டோம்.
ஆகவே அடுத்த நாள் ஞாயிறு மாலை ரவியும் குமரன் எண்ணமும் நான் தங்கியிருந்த இடத்திற்கு வந்தனர். அவர்களுடன் வேறு ஒருவர் வந்தனர். ஜெர்மன் கற்றுக் கொள்வதை பற்றி என்னிடம் ஆலோசனை கேட்க வந்தனர். மேக்ஸ் ம்யுல்லரை விட்டால் வேறு வழியே இல்லை என்று நான் ஒரே வரியில் கூறிவிட, சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டது அவர்கள் விடை பெற்று சென்றனர்.
மாலை 8 மணி முதல் இரவு 10 வரை பெரிய மீட்டிங் நடந்தது. குமரன் எண்ணம் எனது ஆண் பெண் கற்பு நிலை பற்றிய பதிவுகளைப் பற்றி கேள்விகள் கேட்டார். பார்ப்பனனாக நான் இருப்பதை பற்றிய எனது வெளிப்படையான எண்ணங்களைப் பற்றியும் கேள்விகள் கேட்டார். ஆணித்தரமான கேள்விகள். இது சம்பந்தமாக நாங்கள் பரிமாறிக் கொண்ட பின்னூட்டங்களை இப்பதிவில் பார்க்கலாம். உதாரணத்துக்கு:
குமரன் எண்ணம் எழுதியது:
"நீங்கள் ஜாதி மத பேதத்தை ஒரு சீரிய முயற்சியான தமிழ் மணத்தில் கூட விட்டு வைக்காமல் பரப்பிக் கொண்டுள்ளீர்கள். நீங்கள் வயதில் பெரியவராக இருந்தாலும் எண்ணங்களில் சிறுமை கொண்டுள்ளீர்கள். இதை உங்கள் மணம் புண்படுத்த சொல்ல கூறவில்லை".
எனது பதில்:
"இதிலெல்லாம் நான் மனம் புண்பட்டு விட மாட்டேன். உங்கள் கருத்து உங்களுக்கு, என் கருத்து எனக்கு. அவ்வளவுதான் விஷயம். நான் வெளிப்படையான எண்ணங்கள் பதிவு போட்டதற்கானக் காரணத்தை பல முறை வெளிப்படையாகவே கூறி விட்டேன். நீங்கள் ஒரு நாள் நான் சொல்ல வருவதை சரியான முறையில் புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் let us agree to disagree என்ற முத்தாய்ப்புடன் இது பற்றி மேலும் பேசுவதை நிறுத்திக் கொள்கிறேன்."
அது பற்றி மேலும் பேசினோம் இந்த சந்திப்பில். அதை பற்றி தன் கருத்தை குமரன் எண்ணம் இங்கு பின்னூட்டமாகவோ அல்லது தனிப்பதிவாகவோ வெளியிடுவார் என எதிர்ப்பார்க்கிறேன்.
ஆண் பெண் கற்பு நிலை பற்றிய எனது பதிவுகள் பற்றியும் பேசப்பட்டது. ஈ.வே.ரா. அவர்கள் கூறியதுடன் கம்பேர் செய்தால் நான் கூறியது ஒன்றுமேயில்லை. அதே சமயம் அவர் கூறியதற்காகத்தான் நானும் கூறினேன் என்றும் கூறவரவில்லை. ஆனால் கூறியவர்களைப் பொருத்துத்தான் மற்றவர்களின் எதிர்வினை அமைகிறது என்பதையும் இங்கு கூறிட வேண்டும். இதை பின்னணியாக வைத்துத்தான் ரவி மற்றும் குமரன் எண்ணத்தின் கேள்விகளுக்கு பதிலளித்தேன். அதை பற்றியும் அவர்கள் கருத்துக்களை எதிர்ப்பார்க்கிறேன்.
அடுத்து பேசிய விஷயம் போலி டோண்டுவை பற்றியே. நான் எவ்வாறெல்லாம் அவன் செய்த வேலைகளுக்கு செக் வைத்து வந்தேன் என்பதைப் பற்றி எடுத்துக் கூறினேன். இப்போது தமிழ்மணம் மட்டுறுத்தலால் எவ்வாறு தன்னைக் பாதுகாத்துக் கொண்டது என்பது பற்றியும் பேசினோம். அதர் மற்றும் அனானி ஆப்ஷன்கள் சேர்ந்து வருவதால் அவற்றை மொத்தமாக தடை செய்ய வேண்டியுள்ளது என்றும் கூறினேன். ரவி அவர்கள் பெயரில் அதர் ஆப்ஷனை உபயோகித்து ஒரு போலி கமெண்ட் வந்ததையும் அவருக்கு சுட்டிக் காட்டினேன். அவரும் தான் ஜாக்கிரதையாக இருந்து மட்டுறுத்தலை சரியாக நிறைவேற்றப்போவதாக கூறினார்.
இவ்வாறாக இந்த மீட்டிங் முடிந்தது. இதற்கு அடுத்த நாளும் அவரும் குமரன் எண்ணமும் மறுபடி வருவதாகக் கூறினர் ஆனால் வர இயலவில்லை.
திங்கள் கிழமை வந்தது தேசிகன், ம்யூஸ் மற்றும் ஜடாயு. அது பற்றி அடுத்தப் பதிவில்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
கூழாங்கல்லில் இருந்து மலைகளை உருவாக்க நான்கு வழிகள்
-
பயணங்கள் வழியாக இயற்கையை விரித்துக்கொள்ளும் கனவு இன்று நம்மில் சிலருக்கு
உண்டு. ஆனால் அப்பயணத்தை எப்படி நடத்துவதென்று தெரிவதில்லை. பெரும்பாலும்
தவறான சுற்ற...
9 hours ago
31 comments:
வேலை இருப்பதால் உங்களுடன் discuss செய்தது குறித்து இந்த வார இறுதியில் பதிவிடலாம் என்றிருக்கிறேன்.
செவ்வாயன்று சென்னை வந்து விட்டேன், டோண்டு பேரவை அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
உங்கள் பதிவை ஆவலுடன் எதிர்ப்பார்ர்க்கிறேன். குமரன் அண்ணம் அவர்களே. உங்களை நேரில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
குமரன் அண்ணம் --> குமரன் எண்ணம் என்று வாசிக்கவும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
போலீஸ்காரன் அவர்களே, இதையெல்லாம் மெனக்கெட்டு பின்னூட்டக் கயமையின் ஊற்றுக் கண்ணான டோண்டு ராகவனிடம் கூறி என்ன பலன் காணப் போகிறீர்கள்? அவன் இதற்கெல்லாம் அஞ்சான். வாழ்க பின்னூட்டக் கயமை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அஞ்சான் --> அஞ்ச மாட்டான் என்று திருத்துகிறேன் என்பதை முழக்கத்துடன் அறிவிக்கிறேன் . யாரப்பா அது, சோடா கொண்டா.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அதர் மற்றும் அனானி ஆப்சன்களை எடுக்கும் எண்ணம் இப்போதைக்கு இல்லை...
காரணம் பிலாக்கர் அக்கவுண்டு இல்லாத அனானிகள் பலர் (என் நன்பர்கள்) தங்கள் கருத்துக்களை பதிவு செய்ய முடியாமல் போய்விடும்..
மற்றபடி, சந்திப்பு பற்றி விரைவில் பதிவு இடுகிறேன்..
காபி ஷூப்பர்...
சந்திப்பு முடிந்து நமது தோழி வீட்டுக்கு சென்றபோது, ஏன் ஏதாவது பிரச்சினையா ? ஏன் நீங்களும் அவரும் அவ்வளவு சண்டை போட்டீங்க என்று கேட்டனர்.
நான் சொன்னேன், சண்டை ஏதும் போடலைங்க...அது வெறும் டிபேட் / ஆர்குமெண்ட் தான் என்று.....
அனானி மற்றும் அதர் ஆப்ஷனின் ரிஸ்குகளை உணர்ந்து செயலாற்றினால் பிரச்சினை வரக்கூடாதுதானே.
மற்றப்படி சண்டையா? அப்படீன்னா என்ன?
அன்புடன்,
டோண்டு ராகவன்
"பின்னூட்ட கயமை கொடுமையை விட அதர்-அனானி ஆப்ஷன் எவ்வளவோ மேல்"
இம்மாதிரி சுவாரசியமான அப்சர்வேஷன்களைப் போட்டுக் கொண்டேயிருக்கவும். எனக்கும் பொழுது போகும், பின்னூட்டங்களும் சேரும்.: ))))
அன்புடன்,
டோண்டு ராகவன்
//அடுத்து பேசிய விஷயம் போலி டோண்டுவை பற்றியே. நான் எவ்வாறெல்லாம் அவன் செய்த வேலைகளுக்கு செக் வைத்து வந்தேன் என்பதைப் பற்றி எடுத்துக் கூறினேன்//
ஒங்க பதிவுல பின்னுட்டம் போட்டதுக்கே என் பிளாக்கிற்கு வந்து ஒங்கள திட்டறான் ஒங்க போலியார்....
எங்க போலியாரா? இந்த போங்குதானே வாணாங்கறது.
திட்டினால் திட்டட்டுமே. வேடிக்கையாகப் பொழுது போகிறது. அவன் திட்டிய சில திட்டுகளை என்னை சந்திக்க வந்தவர்களிடம் கூற,ஒரே சிரிப்புத்தான் போங்கள். அந்தக் கோமாளியால் இந்த தமாஷாவது நடக்கட்டுமே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
///ஒங்க பதிவுல பின்னுட்டம் போட்டதுக்கே என் பிளாக்கிற்கு வந்து ஒங்கள திட்டறான் ஒங்க போலியார்....////
என்ன தலை மௌல்ஸ்....எதோ ஒங்க பதிவுல..ஒங்கள...ஒங்க போலியார் என்று...
ஏதோ அவங்களுக்கு பூர்வஜென்ம பந்தம் இருக்காப்போல சொல்லுறீங்க ?
//மற்றப்படி சண்டையா? அப்படீன்னா என்ன?///
தமிழ் புரியாத நமது தோழி, நாம் சத்தமாக ஆர்க்கியூ செய்ததை சண்டை என்று புரிந்துகொண்டார்.
சில திட்டுகளை என்னை சந்திக்க வந்தவர்களிடம் கூற,ஒரே சிரிப்புத்தான் போங்கள்.
வயிறெரிகிறது டோண்டு ஸார். உங்களுக்கு மட்டும் உட்கார்ந்து யோஸித்து நல்ல நகைச்சுவையாக அனுப்புகிறார்போலும். எனக்கு எப்போதும் ஒரே விஷயம்தான். வெறுமே கட் அன்ட் காப்பி செய்து, அவுட்லுக்கில் தேதி குறித்து மெக்கானிக்கலாக அனுப்புகிறார். எத்தனையோ சுவையான கெட்ட வார்த்தைகளை எம் தாய்மொழியாம் தமிழ் கொடுத்திருக்கும்போது, வொக்கேபுலரி சிக்கனத்தை இதில் ஏன் மெய்ன்டெய்ன் செய்ய வேண்டும்? கல்வி கரையில என்று ஒளவையார் சொன்னதை மறக்கலாமா?
அடுத்தமுறையாவது போலியார் கொஞ்சம் ஆற அமர உட்கார்ந்து யோஸித்து எழுதினேன் என்று மெயில் அனுப்பினால்தான் அவர் அனுப்புகிற ஆபாஸ காமெண்ட்டுக்களை படிப்பேன் என்று இதன்மூலம் தெரிவித்துக்கொள்கிறேன். இல்லாவிட்டால் வழக்கம்போல உடனடி டெலிட்தான்.
போலியார் இந்த விஷயத்தில் வல்லவர். உங்கள் கோரிக்கையை வெகுசீக்கிரம் நிறைவேற்றுவார், ம்யூஸ் அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//ஏதோ அவங்களுக்கு பூர்வஜென்ம பந்தம் இருக்காப்போல சொல்லுறீங்க ?//
செந்தழலாரே!
பூர்வஜென்மமோ என்னமோ, அது தெரியாது ஆனா, இத்தனை பிளாக்கர்களில், டோண்டு ஒருவருக்குத்தான் தொடர்ச்சியான ரசிகன் இருக்கிறான். டோண்டு மன்றத்தினருக்கும் முன்னே போலி பின்னுட்டமிடுகிறான்....ஸொ, அவன் மற்றும் அவனை முதல் வாசகராக கொண்ட டோண்டு இருவரும் பந்தமுள்ளவர்கள், பங்காளிகள் தாம்....
//உங்களுக்கு மட்டும் உட்கார்ந்து யோஸித்து நல்ல நகைச்சுவையாக அனுப்புகிறார்போலும். எனக்கு எப்போதும் ஒரே விஷயம்தான். வெறுமே கட் அன்ட் காப்பி செய்து, அவுட்லுக்கில் தேதி குறித்து மெக்கானிக்கலாக அனுப்புகிறார். //
ஆம் மியுஸ், எனக்கு இன்று மட்டும் 8 வந்ததது, எல்லாம் ஒரே கழிசடை.
"அவன் மற்றும் அவனை முதல் வாசகராக கொண்ட டோண்டு இருவரும் பந்தமுள்ளவர்கள், பங்காளிகள் தாம்...." :)))))
"ஆம் மியுஸ், எனக்கு இன்று மட்டும் 8 வந்ததது, எல்லாம் ஒரே கழிசடை.":))))
அன்புடன்,
டோண்டு ராகவன்
விசலாக்ஷி,
இதுவரை இங்கு பின்னூட்டமிடுபவர்களுக்கு மட்டுமேதான் அன்பரிடமிருந்து தூது வரும். நீங்கள் தற்போது ஏதேனும் பின்னூட்டம் இட்டதுபோல தெரியவில்லையே. பிறகு எதற்கு உங்களுக்கும் இப்படி ஒரு மெயில்?
முத்திவிட்டது என்று நினைக்கிறேன்.
நானும் கலந்து கொள்ள வேண்டும் என்று முயற்சி செய்தேன். பெங்களூருக்கு மாறி சில நாட்கள் தான் ஆவதால் சொந்த வேலைகள் அதிகம் உள்ளன. அதனால் இயலவில்லை. அடுத்த முறை நாம் சந்திக்கலாம் நண்பர்களே!.
Bravo Visalakshi. I wish other bloggers were as courageous as you are.
Sorry for the delay in replying. Fact is I am being plagued by Dishnet glitch right from yesterday night. I was able to open the mails only in the HTML mode and just accept the comments. But I am not in a position to respond.
This comment too I am doing it after coming to a cybercafe but then the comments are just illegible squares here. I am replying from memory.
Other bloggers please excuse the delay in replying, I mean Muse, Mouls, UnggaL nanban and others.
Heard that the situation should improve in one or two hours.
Regards,
Dondu N.Raghavan
விசாலாக்ஷி டோண்டு வாசகர்கள் பதிவில் பின்னூட்டமிட்டிருந்தார், (அது எனது பதிவல்ல, ஆனால் என்னை ஆதரித்தப் பதிவு). ஆகவே அவருக்கும் அசிங்கப் பின்னூட்டங்கள் வந்ததாக நினைக்கிறேன்.
அவரது தைரியம் பாராட்டுக்குரியது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
I reproduce below Visalakshi's comment after xxx-ing two words in 2 places. I am sure she will understand.
Regards,
Dondu N.Raghavan
மியூஸ் அண்ணா
நான் முன்பு போட்டிருந்த மறுமொழிக்கு சில நாட்கள் கழித்து தான் அந்த xxx xxx ஆபாச பின்னூட்டம் அனுப்பியிருந்தான்.
அதற்கு பதிலடியாக இரண்டு பின்னூட்டங்களை நேற்று இட்டேன்.இன்றும் ஏன் பின்னூட்டம் இட்டாய் என கேட்டு அந்த xxx xxx 3 பின்னூட்டம் அனுப்பியிருந்தான்.
அதை கண்டித்து அவன் போட்ட ஒவ்வொரு பின்னூட்டத்துக்கும் டோண்டுவுக்கு இரண்டு பின்னூட்டம் அனுப்ப உள்ளேன்.
விசாலாக்ஷி,
பாராட்டுக்கள்.
எறிந்தது பைத்தியம் என்பதற்காக எறியப்பட்ட கல் காயம் ஏற்படுத்தாமல் இருக்காது. விலகிப்போனாலும் கல் எறியும் பைத்தியம் இது. கையை கட்டிப்போடுவதுதான் தீர்வு.
வேடிக்கை பார்க்கும் சில மடையர்கள் "இந்த வேலை உங்களுக்கு எதற்கு?" என்று கேட்கலாம். கோழைகளின் குணம் கொடியவர்களுக்குப் பணிவது.
தங்களைப் போன்றவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.
"வேடிக்கை பார்க்கும் சில மடையர்கள் "இந்த வேலை உங்களுக்கு எதற்கு?" என்று கேட்கலாம். கோழைகளின் குணம் கொடியவர்களுக்குப் பணிவது."
நானும் அதைத்தான் கூறுவேன். யாருக்குப் பின்னூட்டம் இடுவது, இடாமல் இருப்பது என்பதெல்லாம் சம்பந்தப்பட்டவர்களாகத் தீர்மானிக்க வேண்டியது. கண்ட கண்ட இழிபிறவிகள் எல்லாம் அதை மற்றவர்களுக்குக் கூறக்கூடாது. நடப்பது யுத்தம். அதில் பங்கு பெறுவதும் [எறாததும் மற்ரவர் விருப்பம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Mr. Dondu்,
இது மாதிரி ஆபாசமான வார்த்தைகளால் தனி மனித தாக்குதல் செய்யும் மன
நோயுள்ளவர்களைக் கண்டுபிடித்து வைத்தியம் செய்வது மிக அவசியமானது. I am new to the blogsworld and I am surprised to see somebody (defenitely a psyche) is doing like this. I donot know how people are able to leave that fellow so long. He should be behind bars for humiliating many people many times. Let me know wheather you have done any of these.
(1) Have u complained to blogger maintainence team?
(2) Did u look for any cybercrime prevention team to post your complaint? I am sure that there are many to support you to make the complaint stronger. Indeed you can add me too in that group.
(3) It is not at all difficult to locate such persons whereever he may be in this universe. And there are n number of free tools to help us in that. Only, thing is that we should be ready to spend some time to find and to learn how to use these.
தட்டிக் கேட்பவன் அவர்களே,
இது ஒரு வருடத்துக்கும் மேலாக நடந்து வருகிறது. இது பற்றி நான் போட்ட பதிவுகள்:
1. http://dondu.blogspot.com/2005/12/2.html
2. http://dondu.blogspot.com/2005/06/blog-post_25.html
3. http://dondu.blogspot.com/2005/06/blog-post_30.html
4. http://dondu.blogspot.com/2006/01/blog-post_26.html
5. http://dondu.blogspot.com/2006/05/4.html
அவற்றை படித்தால் பிரச்சினையின் தீவிரம் விளங்கும்.
"It is not at all difficult to locate such persons whereever he may be in this universe."
அவன் யார் என்பது எனக்கு முதலிலிருந்தே தெரியும். மற்றும் பலருக்கும் தெரியும். பிளாக்கரிடம் புகார் செய்து அவனது ஒரு போலி வலைப்பூவை மூட வைத்தேன், உடனே பத்து புது வலைப்பூக்களை திறந்து கொண்டான். சைபர் கிரைமிடமும் சென்றோம். அவர்கள் இவனை வாட்ச் செய்து வருகிறார்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//அவன் யார் என்பது எனக்கு முதலிலிருந்தே தெரியும். மற்றும் பலருக்கும் தெரியும். பிளாக்கரிடம் புகார் செய்து அவனது ஒரு போலி வலைப்பூவை மூட வைத்தேன், உடனே பத்து புது வலைப்பூக்களை திறந்து கொண்டான். சைபர் கிரைமிடமும் சென்றோம். அவர்கள் இவனை வாட்ச் செய்து வருகிறார்கள்.//
I donot think you have got him. A person under watch cannot behave like this. Even I too have reported to blogger. Let me see their response. I will contact to your personal id to know more about this psyche so that I can take necessary and immediate action. We have to make clear the cyberworld for the sake of coming generations.
I moved my blog to beta-blogger and my new blog is http://thatiswrongmr.blogspot.com/.
பின்னூட்டம் 5-க்கு நன்றி. உங்கள் மனநிலை புரிகிறது. அது அமைதி அடைய என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென் திருப்பேரை மகர நெடுங்குழைகாதனை வேண்டுகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பின்னூட்டம் 7-க்கு நன்றி. பொருளாதார மனிதன் விஷயமாகப் பக்கம் பக்கமாகப் பேசலாம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Hello Mr. Dondu,
This is the reply I have received from blogger support team. Let us hope that they will do something positive in this regard.
Blogger Help
support-AT-blogger.com to me
More options Sep 27 (20 hours ago)
Hello,
Thanks for writing us regarding this possible Terms of Service violation.
We will examine it soon and take action as necessary.
Please note that if you encounter other such content in the future, you
can use our automated flagging mechanism to bring this to our attention.
For further information on the "Flag As Objectionable" feature, please see
Blogger Help:
http://help.blogger.com/bin/answer.py?answer=1200
Sincerely,
The Blogger Team
Post a Comment