வரும் சனிக்கிழமை சதாப்தியில் பெங்களூர் வருகிறேன். அடுத்த வாரம் செவ்வாயன்று லால்பாக்கில் சென்னை திரும்புகிறேன்.
பெங்களூரில் உள்ள வலைப்பூ நண்பர்களை கண்டு பேச ஆசை. சனிக்கிழமை மாலை சந்திப்பை வைத்துக் கொள்ளலாம் என நினைக்கிறேன். எங்கு வைத்து என்பது புரியவில்லை. நண்பர் ம்யூஸ் மற்றும் ஹமீத் அவர்களுடன் தொலை பேசினேன். ஐயப்பன் அவர்கள் செல்பேசி வாய்ஸ் மெயிலுக்கு அழைத்து செல்கிறது. கோபி அவர்களது தொலைபேசி எண் தெரியாது.
ஆகவே இப்பதிவைப் போட்டேன். எனது செல்பேசி எண் 09884012948 மற்றும் லேண்ட்லைன் 04422312948.
அன்புடன்,
டோண்டு ராகவன்
என்.கல்யாணராமனுக்கு அ.முத்துலிங்கம் விருது
-
அசோகமித்திரன், பூமணி, பெருமாள் முருகன், தேவிபாரதி ஆகியோருடைய
மொழிபெயர்ப்பாளரான என்.கல்யாணராமனுக்கு விஜயா வாசகர் வட்டம் வழங்கும்
அ.முத்துலிங்கம் விருது 2024...
5 hours ago
32 comments:
வாருங்கள் பெங்களூருக்கு!
பாலச்சந்தர்
தமிழ்ப் பதிவுகள் - www.tamilblogs.com
எனது தமிழ் பக்கங்கள் - www.balachandar.net/pakkangal
நன்றி விசாலாட்சி அவர்களே. சொந்த வேலையாகத்தான் செல்கிறேன். வலைப்பதிவாளர்களை சந்திப்பது விருப்பத்துடன் செய்யப்போகும் அதிகப்படி வேலையே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நன்றி பாலசந்தர் அவர்களே. பெங்களூரில்தான் இருக்கிறீர்களா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
இந்தப் புலிகளை பற்றி படிப்பதிலிருந்து மாவீரன் என்றாலே பயமாக இருக்கிறது. எனக்கு என்ன அவ்வளவு வயதாகி விட்டதா என்ன? இன்னும் சில ஆண்டுகள் உயிருடன் இருக்க ஆசைப்படுகிறேன்.
உங்கள் ஆசைக்கு பின்னூட்டமிட்டு விட்டேன். தயவு செய்து எனது வேண்டுகோளை ஏற்று "ரசிகர் மன்றத்தை" கலைத்து விடவும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
உங்களை பெங்களூரில் சந்திப்பதில் ஆவலாக உள்ளோம்...
சந்திப்பு பற்றிய தகவலை வலைப்பதிவில் விரிவாக இடவும்..
டோண்டு ஸார்,
வலைப்பதிவர்களை பற்றி கவனிப்பதைவிட, அவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்பதில் கவனம் அதிகம் வைப்பதால் யார் யார் பெங்களூரிலிருந்து வலைப்பதிகிறார்கள் என்கிற முழுவிவரம் அறிய வேண்டியுள்ளது.
ஐயப்பனுடன் தொலைபேசினேன். அவர் உங்களை பார்க்க ஆவலாக உள்ளார். ஆனால், சனிக்கிழமை அவருக்கு அலுவலகம் உண்டு. சுதர்ஷன் கோபாலுக்கும் மெயில் அனுப்பியுள்ளேன். ராகவனுக்கு அனுப்புவதாய் உள்ளேன். வேறு யார் யார் பெங்களூரில் இருந்துகொண்டு வலைப்பதிகிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள இந்த சந்திப்பும் அதற்கான ஏற்பாடுகளும் உதவும் என்று தோன்றுகின்றது.
தங்களது இந்த பதிவை பார்த்து சந்திக்க விரும்பும் நண்பர்களும் (மற்றவர்களும் :-) !) இருக்கலாம். எங்கே சந்திப்பது என்பது பற்றி அவர்கள் கூற வேண்டுகிறேன்.
லால்பாக்கில் ஏற்கனவே ஒருமுறை வலைப்பதிவர் சந்திப்பு நடந்திருக்கிறது. அமைதியான, அழகான இடம். ரொமாண்டிக்கான இடமும்கூட.
கண்டிப்பாக சந்திப்போம் ரவி அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நல்ல காரியம் செய்தீர்கள் ம்யூஸ் அவர்களே. லால்பாக்கில் சனிக்கிழமை மாலை 6 மணியளவில் சந்திக்கலாம். நான் தங்கியிருக்கப்போகும் இடம் HAL,16F,2,INDIRA NAGAR,560 038
சதாப்தி முற்பகல் 11 மணியளவில் வரும். ஆகவே மாலை வரை போதுமான நேரம் உள்ளது.
The more the merrier.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பெங்களூரில் டோண்டு! கலக்குங்கள். சந்திப்பு நன்றே நடைபெறட்டும். நான் தற்போது அமெரிக்காவில் இருப்பதால் கலந்து கொள்ள இயலாததற்கு வருந்துகிறேன். இந்த மாத இறுதியில் இந்தியா திரும்புவேன். அடுத்த முறை எப்போது பெங்களூர் வருகிறீர்கள்? ;-)
வாருங்கள் சுபமூகா அவர்களே. உங்களை பார்க்க முடியாமல் போவதற்கு வருந்துகிறேன். அடுத்த முறை பார்ப்போம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வயதுக்கும் அனுபவத்துக்கும் உண்டான மரியாதை கூட அளிக்காத மூடர்களையும் மதித்து பின்னூட்டம் அளித்து, அவர்களை சந்திக்கவும் இசைவு தெரிவுக்கும் டோண்டு அவர்களின் பெருந்தன்மையை என்ன சொல்ல...salute...
புலிப்பாண்டி அவர்களே,
சற்றே அதிகமாக உணர்ச்சி வசப்படுகிறீர்கள். அமைதி கொள்ளவும். இது வலைப்பதிவர் உலகம். இங்கு வயது மட்டும் மரியாதைக் கொணராது. எழுத்திலும் ஆழம் இருக்க வேண்டும், அதையும் மற்றவர்கள்தான் கூற வேண்டும். நேரில் பார்த்தால் பல விஷயங்கள் தெளிவாகும். அது எனது அனுபவம்.
ஆக, சந்திக்க இசைவது என்பது இருபக்க நலனுக்கும் வழிவகுக்கும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு சார் நானும் தங்களைச் சந்திக்க ஆவலாக உள்ளேன். சந்திப்புக்கு வரப் போகும் வலைப் பதிவர் யாரேனும் தங்களுடைய கை தொலை பேசி எண்ணை எனக்கு senthil.c.kumaran@gmail.com என்ற முகவரிக்கு தந்தால் நான் லால் பார்க் வந்த பிறகு எங்கிருக்கிறீர்கள் என்று தொடர்பு கொண்டு சந்திக்க வசதியாக இருக்கும்.
குமரன் எண்ணம் அவர்களே,
எனது செல்பேசி எண் இந்த இடுகையில் கொடுக்கப்பட்டுள்ளது. அது சென்னை எண்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
தங்கள் எண் ரோமிங்கில் அல்லவா இருக்கும் ஆகவேதான் பெங்களூர் வலைப் பதிவாளர் எண்ணைக் கேட்டேன். மேலும் லால் பார்க்கில் பல கேட் இருக்கிறது. எந்த கேட்டில் சந்திக்கப் போகிறோம் என்பதெல்லாம் பற்றி சற்று தெளிவாக சொன்னால் நன்றாக இருக்கும்.
குமரன், நீங்க என் தொலைபேசிக்கு அழையுங்க.
"மேலும் லால் பார்க்கில் பல கேட் இருக்கிறது. எந்த கேட்டில் சந்திக்கப் போகிறோம் என்பதெல்லாம் பற்றி சற்று தெளிவாக சொன்னால் நன்றாக இருக்கும்."
நல்ல கேள்வி. ம்யூஸ் இதை ஃபிக்ஸ் செய்ய உங்கள் ஆலோசனை ப்ளீஸ். மற்றவர்களுக்கும் அதே வேண்டுகோள். முக்கியமாக நல்ல போண்டா (!) கிடைக்கும் ஹோட்டல் இருக்கும் கேட்டாக இருந்தால் நலம். :))))
அன்புடன்,
டோண்டு ராகவன்
நான் லால் பார்க் வந்த பிறகு எங்கிருக்கிறீர்கள்
லால் பாக்கில் (laal baagh) க்ளாஸ் ஹவுஸ் எல்லாருக்கும் தெரிந்த இடம். யாரை கேட்டாலும் சொல்லிவிடுவார்கள். நானும் கேட்டுக்கொண்டுதான் வரப்போகிறேன். :-) !!
க்ளாஸ் ஹவுஸின் மையப் பகுதியில் எப்போதும் கூட்டம் குறைவு. எளிதாகக் கண்டு பிடித்துவிடலாம். வேறு எங்கேனும் போனால் ஜோடிகளை தொந்திரவு செய்ததால் விளையும் "ஜோடிதொந்தரவஷ்டக" தோஷம் விளையும் என்று கருட புராணம் படித்துவிட்டு அன்னியன் சொல்லியிருக்கிறார்.
என்னிடம் செல்பேஸி இல்லை. இருந்தாலும் கண்டுபிடிப்பது கஷ்டமாக இருக்காது. கூட்டத்தில் தொலைந்த குழந்தைபோன்ற பாவத்துடன் யாரேனும் ஒரு வயதான ப்ரக்ருதி நின்றுகொண்டிருந்தால் அது நானேதான்.
எல்லாரையும் கண்டுபிடித்தபின்னால் பக்கத்தில் உட்கார வஸதியான இடத்தை கண்டு பிடித்துக்கொள்ளவேண்டியதுதான்.
பக்கத்தில் நல்ல ஹோட்டல்கள் இல்லை. இட்லிவடை வருகிறாரா?
"இட்லிவடை வருகிறாரா?"
இல்லை, டோண்டு ராகவன் வருகிறார்.
ஓக்கே லால் பாக் க்ளாஸ் ஹவுஸ். உங்கள் ஃபோட்டோவை பார்த்ததால் எனக்கு உங்களை அடையாளம் காண்பதில் பிரச்சினை இருக்காது என நினைக்கிறேன். செந்தழல் ரவி நான் தங்கும் இடத்துக்கு அருகாமையில் இருப்பதாகக் கூறியிருக்கிறார். அவருடன் சேர்ந்து கொண்டு லால் பாக் வர எண்ணியிருக்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பெங்களூர் ட்ராபிக்கிற்கு எதற்கும் ஒருநாள் முன்னதாகவே கிளம்பினால்தான் சரியாக இருக்கும். அப்படியே நல்ல பப் ஒன்றில் ஜமா வைத்துக்கொண்டால் சந்திப்பும் நல்லா இருக்கும், வராதவகள் படிக்கவும் விருவிருப்பாக இருக்கும்!
"பெங்களூர் ட்ராபிக்கிற்கு எதற்கும் ஒருநாள் முன்னதாகவே கிளம்பினால்தான் சரியாக இருக்கும்."
பெரியார் சொன்னா பெருமாள் சொன்னா மாதிரி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு...
ஒரு திட்டம்..
இந்த மீட்டிங்ல நாங்க எல்லாரும் பேசறமாதிரி நடிப்போமாம்..
நீங்க ஊமை மாதிரி நடிப்பீங்களாம்...
இந்த ஐடியா எப்படி இருக்கு ?
மியூஸ்...அங்க வந்து அது ஸரியில்லை, இது ஸரியில்லை என்று சொன்னீங்க...
அவ்ளோதான்..:))))
"இந்த மீட்டிங்ல நாங்க எல்லாரும் பேசறமாதிரி நடிப்போமாம்.. நீங்க ஊமை மாதிரி நடிப்பீங்களாம்... இந்த ஐடியா எப்படி இருக்கு?"
இது என்ன கொடுமை சரவணன்?
"மியூஸ்...அங்க வந்து அது ஸரியில்லை, இது ஸரியில்லை என்று சொன்னீங்க..."
இது ஷரியேயில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Welcome to bangalore.
I can see your webpage.However,
I am unable to see comments page of all your webpages. If you have any idea, pls help.
சிவப்பிரகாசம் அவர்களே,
நீங்கள் சிக்கல் எனக் கூறுவது வியப்பாக உள்ளது. எனது பதிவின் கீழ்
எழுதியவர்: dondu(#4800161) @ 9/13/2006 07:37:00 AM 26 மறுமொழிகள்(show/hide) என்று இருக்குமே, அதில் show/hide மேல் க்ளிக் செய்ய வேண்டியதுதானே?
அன்புடன்,
டோண்டு ராகவன்
கண்டிப்பாக வரலாம், மவுல்ஸ் அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இப்போது பொதுவாகவே கூறுகிறேன். வலைப்பதிவாளர்கள் யாராக இருந்தாலும் வரலாம். பதிவு போடாத வாசகர்களும் வரலாம். என் செல் பேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது. அது சென்னை செல்பேசி என்பதால் 0 போட்டு எண் டயல் செய்ய வேண்டும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டொண்டு அண்ணா!
சந்திப்பை நல்லபடி முடித்துக் கொண்டு பதிவு;படத்துடன் எங்களுக்கும் போடுங்கோ!!
யோகன் பாரிஸ்
கண்டிப்பாக, யோகன் பாரிஸ் அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு ஐயா,
லேட்டா படிச்சாலும் லேட்டஸ்ட்டா விவரம் தெரிஞ்சிக்கிட்டேன்.
லால்பாக் சந்திப்புக்கு நானும் வருகிறேன்.
எழுத்துக்களால் அறிமுகமான சக வலைப்பதிவர்களை முதன்முறையாய் நேரில் சந்திக்கப் போகிறேன் :-)
நன்றி.
திரு. டோண்டு அவர்களுக்கு,
அ ம க பெங்களுர் கிளை சார்பாக ஒரு வாழ்த்து பா வழங்குகிறோம்...
அதை வாசிக்க கீழ் கண்ட லின்க்,
amkblr.blogspot.com
முடிந்தால் அனானியாகவே வர முயற்சிக்கிறேன்
இதோ வந்து விட்டேன் டோண்டு. மாலை லால்பாக் க்ளாஸ் ஹவுஸில் சேர்ந்து கும்மியடிப்போம்.
உள்ளூர் தொலை பேசி எண் 25287122 மற்றும் 25285043. என் செல்பேசி எண் 09884012948.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment