நம்ம பழூர் கார்த்தி (சோம்பேறி பையன்) திடீரென சிக்ஸர் அடித்துள்ளார். பூனாவில் நடந்த சிவாஜி பட ஷூட்டிங்கை நேரில் கண்டு அவர் வர்ணித்திருப்பது 19.11.2006 தேதியிட்டு, இன்று நியூஸ் ஸ்டாண்டுகளில் விற்பனைக்கு வந்துள்ள குங்குமம் இதழ் முதல் பக்கத்திலேயே வந்துள்ளது. அதே இதழின் ஐந்தாம் பக்கத்தில் நெற்றியில் விபூதியுடன் சிவப்பழமாகக் காட்சி அளிக்கிறார்.
கீப் இட் அப் பழூர் கார்த்தி அவர்களே. இந்தப் பழூர்தான் பழுவேட்டரையர்களின் ஊரா? வாழ்த்துக்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Manasa Book Club, Chennai.
-
Hi Sir, Hope you’re doing well. Manasa Publications has launched the
‘Manasa Book Club’ — a monthly gathering for readers and writers. The meet
will be on ...
21 hours ago

14 comments:
சோ..பையனே!!
இங்கிருந்தே உங்களை வாழ்த்துகிறேன்.
டோண்டு சார், பழுவூரும் பழூரும் ஒரே ஊரா?
அப்படியா?
உண்மையிலேயே பாராட்டுக்குரிய சாதனைதான்..
வாழ்த்துக்கள் சுறுசுறு பையன்!
பழுவூர் என்பதை வேகமாக பலமுறை சொல்லிப் பாருங்கள். பழூர் என்றுதான் வரும். அதனால்தான் கேட்டேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நன்றி, டோண்டு !!
பழவேட்டரையர்களின் ஊர்தான் எங்கள் பழூரா என்பதை என்னால் உறுதி செய்ய இயலவில்லை, ஆராய்ந்து சொல்கிறேன்...
<<>>
வடுவூர் குமார் & ஜோசப்,
நன்றி!!
<<>>
வாழ்த்துக்கள் கார்த்தி அவர்களே. குங்குமத்தில் வராது விட்டுப் போயிருக்கும் நிகழ்வுகள் ஏதேனும் இருந்தால் எழுதவும்.
பை தி வே நேற்று பலமுறை உங்களை செல்பேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்தேன். லைன் கிடைக்கவில்லை. நம்பர் ஏதேனும் மாற்றியிருந்தால் கூறவும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு சார் பார்வைக்கு "http://pkp.blogspot.com/2006/11/top-10.html"
சார்!
உங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!
வாழ்த்துக்கள் கார்த்திக்..என் அறை நண்பர்களுக்கு எல்லாம் உங்கள் புகை படத்தை காட்டி பெருமை பட்டுக் கொண்டேன்
நானும் அப்பொழுது அங்கு இருந்தேன் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நான் அவ்விடம் எடுத்த புகைப்படங்களை பிறகு ஒரு சமயம் upload செய்கிறேன்.
நன்றி
குரு பிரசாத்
நன்றி லக்கிலுக் அவர்களே, உங்களுக்கும் அதே காரணத்துக்காக வாழ்த்துக்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
உங்கள் பதிவையும் படங்களையும் எதிர்ப்பார்க்கிறேன் குருபிரஸாத் அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
புரிகிறது குருபிரசாத். மேலே என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். என்னைப் பொருத்தவரை இந்த விஷயத்தைப் பற்றி வேறு கமெண்டுகள் இல்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அவனது மெயிலை படித்தவுடன் எனக்கு சிரிப்பை தவிர வேறெதுவும் வரவில்லை. நான் இப்பொழுது எனது அனைத்து பதிவுகளிலும் "Comment Moderate"ஐ ஆன் செய்துள்ளேன்.
உங்களது பதிவை தொடர்ந்து நெடுநாளாக படித்து கொண்டு வருகிறேன். உஙகள் பணி தொடரட்டும்.
நன்றி
குரு பிரசாத்
நன்றி குருபிரஸாத் அவர்களே,
உங்கள் பதிவு மற்றும் புகைப்படங்களை எதிர்பார்க்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment