11/15/2006

புதிர்கள் புதுசு

புதிர்கள் போட்டு கொஞ்ச நாளாச்சு. என்ன கூறுகிறீர்கள்? இப்புதிர்களை உங்கள் நண்பர்களிடம் பிறகு கேளுங்கள். அவர்கள் ரசித்தாலோ அல்லது துரத்தித் துரத்தி உதைத்தாலோ என்னை ஒண்ணும் கேக்கப்படாது.

1. கோவிந்தாச்சாரியின் மனைவி கனகவல்லி தன் கணவர் கேட்டுக் கொண்டபடி நடுக்கடலில் அவரை எறிகிறார். ஆனால் கோவிந்தாச்சாரி திரும்பப் பறந்து வந்து கப்பலை சேருகிறார். என்ன நடந்தது?

2. சிறுவன் கிட்டுவை அவனுக்கு மிகவும் வேண்டிய ஒருவரே நாற்காலியுடன் சேர்த்து கட்டுகிறார். ஆனாலும் கிட்டு எதிர்ப்பு ஒன்றும் தெரிவிக்கவில்லை.

3. நெருப்புக்குள் ஓடியவன் பிழைத்தான். நெருப்பில்லாத இடத்தில் இருந்தவன் இறந்தான், ஆனால் நெருப்பால் அல்ல.

4. ராமமூர்த்தி மோட்டல் ஒன்றில் தங்கியிருக்கிறார். அன்று இரவு வெளியே செல்கிறார், சற்று நேரம் கழித்து கார் ஹாரனை அழுத்துகிறார், பிறகு ரூமுக்கு திரும்புகிறார்.

5. புது காலணிகளை அணிந்து வேலைக்கு போன பிரதீபா அதனாலேயே மரணம்

6. பெட்டியில் பத்து வெள்ளை சாக்ஸுகளும் பத்து கறுப்பு சாக்ஸுக்களும் உள்ளன. கும்மிருட்டில் இருக்கிறீர்கள். விளக்கு கிடையாது. வெளியே செல்ல வேண்டும் எவ்வளவு குறைந்த பட்ச சாக்ஸுகள் எடுத்தால் ஒரு ஜோடி நிச்சயம்?

7. தஞ்சையில் பிறந்து, திருச்சியில் வளர்த்து சென்னையில் இறந்தவரை என்னவென்று அழைப்பீர்கள்?

8. பத்தொன்பதிலிருந்து ஒன்றை எடுத்தால் இருபது ஆகிறது என்று உப்பிலி கூற ஆசிரியர் ரங்காராவ் அவனை பெஞ்சு மேல் ஏற்றுகிறார். ஆனால் உப்பிலி கூறியது சரியே.

9. டோண்டு ராகவன் ஜெயராமனிடம் கூறுகிறான்: நீங்கள் இந்த அறையில் உள்ள நாற்காலியில் உட்காருங்கள், உங்களை சுற்றி 3 முறை ஓடுவேன். அதற்குள் நீங்களாகவே சேரை விட்டு எழுந்து விடுவீர்கள்."
ஜெயராமன்: என்னை என்ன காதில் பூ வைத்தவன் என எண்ணி விட்டீரா? ஏதாவது குண்டூசி வைத்து குத்துவீர்.
டோண்டு: சத்தியமாக இல்லை உம்மை தொடவே மாட்டேன், நேரடியாகவும் சரி அல்லது ஏதாவது குச்சியை வைத்தும் சரி.
அதே போல ஜெயராமன் உட்கார்ந்து கொள்ள, டோண்டு இரு முறை சுற்றியதும் தானே எழுந்து விடுகிறார். என்ன நடந்தது?

10. மைனஸ் வராமல் 21-லிருந்து 2-ஐ எத்தனை முறை கழிக்கலாம்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

விடை கிடைக்காத புதிர்களை அடுத்தப் பதிவுக்கு கேரி ஓவர் செய்து, சில புதிர்களையும் புதிதாகச் சேர்த்துள்ளேன். எல்லா புதிர்களுக்கும் விடைகளை அங்கேயே அளிக்கவும். இப்பதிவின் பின்னூட்டப் பெட்டியை மூடி விடுகிறேன்.

38 comments:

லதா said...

6. 3
7. பிணம்
8. XIX - I = XX
10, ஒரு முறைதான் கழிக்க முடியும்.

dondu(#11168674346665545885) said...

லதா அவர்களே, 7 மற்றும் 8ன் விடை சரி. 6 மற்றும் 10ன் விடை தவறு.

7க்கு நீங்களும் தினகரும் விடை சரியாக அளித்துள்ளீர்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

தினகர் அவர்களே, ஆறாம் கேள்விக்கான உங்கள் விடை தவறு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

லதா said...

3. கிட்டு சீட் பெல்ட் கட்டாயம் போடவேண்டிய இருக்கையில் அமர்வதால் (விமானம் / கார் / அம்யூஸ்மெண்ட் பார்க்கில் ஏதாவது ஒரு விளையாட்டுச் சாதன இருக்கை)

4. மோட்டலில் மின்சாரம் இல்லாததால் அழைப்புமணி வேலைசெய்யவில்லை.

5. காலணி உள்ளேஇருந்த விஷ ஜந்து கடித்ததால்

லதா said...

6. 2 எடுத்தால் ஒரு ஜோடிதானே. (கடி தாங்க முடியல :-)))

dondu(#11168674346665545885) said...

ஜெகன் மற்றும் லதா, 6வதுக்கான உங்கள் விடை சரி. லதா அதை ஜஸ்டிஃபையும் செய்து விட்டார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

லதா இதுவா கடி என்கிறீர்கள்? ஜெயராமன் அப்படியானால் டோண்டு ராகவன் மேல் எவ்வளவு கோபமடைந்திருப்பார்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

பிரதீப் said...

6. 11

பிரதீப் said...

மன்னிக்க... ஒரே நிறத்தில் ஜோடி சேர வேண்டுமென்றால்தான் 11
இல்லையென்றால் 2

dondu(#11168674346665545885) said...

பிரதீப் அவர்களே,

நீங்கள் அளித்தது தவறான விடை. மேலும் சரியான விடையை லதா ஏற்கனவே கூறியுள்ளார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

மன்னிக்கவும் பிரதீப் அவர்களே,
ஒரே நிறத்தில் ஜோடி சேர 3 சாக்ஸுகள் போதும்.

மற்றப்படி 2 தான் சரியான விடை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

லதா அவர்களே,
3, 4 மற்றும் 5ஆம் கேள்விகளின் விடை தவறு. ஒரு கேள்வியின் எண்ணைத் தவறாகக் கூறியிருக்கிறீர்கள். :((
சரி செய்து விடை மீண்டும் அளிக்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Hariharan # 03985177737685368452 said...

பதில் சொல்லி முடிக்கட்டும் அப்புறம் வந்து படித்தபின் விடையளிக்கிறேன்!

Hariharan # 03985177737685368452 said...

டோண்டுசார்,

"உஷர்" இதில் புள்ளியை எப்படி எடுப்பது? shaa என்று அடித்தால் "ஷஅ" என்று வருகிறது அதே மாதிரியே sr என்று தட்டச்சினால் "ச்ர்" என்று வருகிறது shri வரவில்லை. E-kalappai in alt+2 configuration தான் பயன்படுத்துகிறேன்.

உதவ முடிந்தால் மகிழ்ச்சி மற்றும் நன்றிகள் அட்வான்ஸாக!

Kodees said...

1. அவரை (காய்!) தானே வீசினார்
2. வேண்டியவர் என்பதால்
3. பாம்பு அல்லது கட்டிடம் இடிதல்
4. யாரையாவது கூப்பிட
5. செருப்பு கடித்துவிட்டதால்
6. 2
7. பிணம்
8. XIX - I = XX
9. வாந்தி செய்வதால்
10. 1 முறை

சென்ஷி said...

டோண்டு அவர்களுக்கு

அவரை என்பது அவரைக்காய்

அவரையை கடலில் எறிந்த பிறகு கணவர் கப்பல் ஏறுவது கடினமா என்ன?

Doctor Bruno said...

1. Space ship
2. Aeroplane Seat Belt

கார்மேகராஜா said...

1. கோவிந்தசாரியும் கனகவல்லியும் ஏதேனும் பறவைகளாக இருக்கலாம்.

2. கிட்டு சிறுவன் என்பதால் பேச தெரியாது.

3.நெருப்பு.

4.ஏதேனும் தேவையெனில் சத்தம் கொடுக்க என்னும் வாசகம் இருக்கலாம்.

5. வாக்கியத்தை முடிக்க வில்லையே.

6.2 ( ஏற்கனவே விடை வந்துவிட்டது)

7. பிணம் (ஏற்கனவே விடை வந்துவிட்டது)

8. இதற்கும் விடை வந்தது.

9. காலுக்கும் நாற்காலிக்கும் கயிறை வைத்து கட்டப்பட்டிருக்கும்.

10. மைனஸ் வராமல் 21 லிருந்து 2 ஐ கழிக்க முடியாது.

21-2 என்று முதல் முதல் முறையே மைனஸ் வரும்.

dondu(#11168674346665545885) said...

சென்ஷி அவர்களே, தவறான விடை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ஹரிஹரன் அவர்களே இது என்ன போங்கு?

விண்டோஸ் எக்ஸ்பிதானே பாவிக்கிறீர்கள்? ஒழுங்காக வரவேண்டுமே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

1. அவரை (காய்!) தானே வீசினார் - தவறான விடை
2. வேண்டியவர் என்பதால் - தவறு
3. பாம்பு அல்லது கட்டிடம் இடிதல் - இல்லை
4. யாரையாவது கூப்பிட - தவறு
5. செருப்பு கடித்துவிட்டதால் / தவறு
6. 2 - ஏற்கனவே கூறிய விடை
7. பிணம் - ஏற்கனவே கூறிய விடை
8. XIX - I = XX - ஏற்கனவே கூறிய விடை
9. வாந்தி செய்வதால் - யார் டோண்டு அல்லது ஜெயராமன்? தவறான விடை
10. 1 முறை - தவறு

dondu(#11168674346665545885) said...

1. கோவிந்தசாரியும் கனகவல்லியும் ஏதேனும் பறவைகளாக இருக்கலாம். - இல்லை

2. கிட்டு சிறுவன் என்பதால் பேச தெரியாது. - இல்லை

3.நெருப்பு - ???? இல்லை

4.ஏதேனும் தேவையெனில் சத்தம் கொடுக்க என்னும் வாசகம் இருக்கலாம். - இல்லை

5. வாக்கியத்தை முடிக்க வில்லையே. இல்லையே முடித்தேனே.

9. காலுக்கும் நாற்காலிக்கும் கயிறை வைத்து கட்டப்பட்டிருக்கும். இல்லவே இல்லை

10. மைனஸ் வராமல் 21 லிருந்து 2 ஐ கழிக்க முடியாது.

21-2 என்று முதல் முதல் முறையே மைனஸ் வரும்.

10ஆம் கேள்விக்கு விடை தவறு.

Doctor Bruno said...

எனது விடைகள் தவறு என்று கூறவில்லையே ???

ஜயராமன் said...

படு உற்சாகமாய் மூளைக்கு வேலை கொடுக்கும் சுவாரசியமான பதிவு.

என் பெயரையும் புதிராக போட்டிருக்கிறீர்கள். டோண்டுதான் எல்லாவற்றையும் விட பெரிய புதிர்.

1. கோவிந்தாச்சாரி ஏதாவது bungee jumping பண்ணுகிறாரோ?

2. கிட்டு ஏதாவது disney land ல் குடை ராட்டினத்தில் உட்கார்ந்திருக்கிறானோ? அவன் உறவினர்களோடு?

3. இன்னும் யோசிக்கவேண்டும்.

4. ராம்மூர்த்தி ஹோட்டல் என்பதே அந்த விடுதியின் பெயரோ? அவன் திரும்பி வரும்போது ரிசப்ஷனில் சாவி கொடுக்க யாரும் இல்லையோ?

5. பிரதீபாவின் மரணம் செருப்பினாலா இல்லை வேலைக்கு போனதாலா? தமிழ் குழப்புகிறது. இல்லை இதேதான் விடையோ?

சந்தனமுல்லை said...

1.that is a dream.
2. Accident while going to her work

dondu(#11168674346665545885) said...

மன்னிக்கவும் டாக்டர் ப்ரூனோ அவர்களே. உங்கள் இரண்டாம் கேள்விக்கான விடை சரி. முதல் கேள்விக்கான விடை சரியில்லை. லதா அவர்கள் இரண்டாம் கேள்விக்கான விடை எழுதி விட்டு மூன்று என கேள்வி எண்ணை குறிப்பிட்டிருந்தார். அதையும் நான் சூசகமாக தெரிவித்தேன்.

இங்கு ஒரு விஷயம் தெளிவுபடுத்த விரும்புகிறேன். முதல் கேள்விக்கான விடை நம்மை தத்துவ விசாரணையில் ஆழ்த்தக் கூடியது. உண்மையிலேயே நடந்தது. என்ன, பெயர்கள் மட்டும் மாற்றப்பட்டுள்ளன.

முயற்சி செய்யுங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

சந்தனமுல்லை அவர்களே. உங்கள் வலைப்பூ பக்கம் வந்து பார்த்தேன். கரையோர முதலையை குறித்து பின்னூட்டமும் இட்டேன்.

சென்னை வலைப்பதிவர் சந்த்ப்பு வரும் ஞாயிறன்று நடைபெறுகிறது. வரப்பாருங்களேன். விவரத்துக்கு பார்க்கவும்: http://balabharathi.blogspot.com/2006/11/blog-post_10.html

பை தி வே உங்கள் விடைகள் தவறு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

கேள்விகள் 1, 3, 4, 5, 9 மற்றும் 10-க்கான விடை இன்னும் வரவில்லை.

9-ஆம் கேள்வியை பற்றி இன்னொரு சுவாரசியமான விஷயம். இக்கேள்வியை வேறு எங்கோ படித்திருக்கிறேன். பிறகு ஒரு தூக்கம் போட்டபோது நிஜமாகவே ஜயராமன் கனவில் வந்தார். அவரிடம் இதை பிரயோகித்ததில் ரொம்ப கோபம் அடைந்தார், கனவில்தான், ஹி ஹி ஹி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

லதா said...

4. வேறெங்கோ இருக்கும் அந்த வாகனத்தின் சாரதியை அழைக்க அப்படிச் செய்கிறார்.

dondu(#11168674346665545885) said...

விடா முயற்சிக்கு பாராட்டுக்கள் லதா அவர்களே. ஆனால் இது தவறான விடை. சரியான விடை ரொம்ப சுவாரசியமானது. ஒரு க்ளூ தருகிறேன். சஞ்சீவ் குமார் மற்றும் வித்தியா சின்ஹா நடித்த "பதி, பத்னி அவுர் ஓ" என்ற படத்தைப் பார்த்தவர்களுக்கு இது சற்று சுலபமான கேள்வி.

2-ஆம் கேள்விக்கு விடை சரியாக அளித்தாலும் நீங்கள் கேள்வி எண்ணை 3 என எழுதி விட்டீர்கள். நான் கோடி கூட காட்டினேன். அச்சமயம் நீங்கள் இணையத்தில் இருந்திருக்க மாட்டீர்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

யாரோ ஒருவன் has left a new comment on your post "புதிர்கள் புதுசு":

விடைக்காக காத்திருக்கிறேன், அருமை(வை!) யான கேள்விகள்.

xxxxxxxxxxxxxxxxxxx Edited.

நான் புறங்கையால் ஒதுக்கித் தள்ளிய அப்பிரச்சினை என்னைப் பொருத்தவரை இல்லை, என் உள்ளங்கவர் என் அப்பன் தென் திருப்பேரை மகரநெடுங்குழைகாதன் அருளால்.

"அதுவாங்க முக்கியம், விஷயம் தாங்க முக்கியம்."

அதேதாங்க, விடைகள்தான் முக்கியம். பை தி வே, என் காரணத்தால் உங்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு வருந்துகிறேன்.

பின்னூட்டத்துக்கு நன்றி யாரோ ஒருவன் அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"3. புகையை சுவாசித்ததால் இறந்தான். 10. 0 முறை"

ஜே அவர்களே, 3-ஆம் கேள்வி நிஜமாகவே நடந்த நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. நெருப்புக்குள் பாய்ந்து வெளியில் ஓடியவன் காயங்களுடன் பிழைத்தான். உள்ளே இருந்தவன் அறைக்கு நெருப்பு வரவில்லை. ஆயினும் அவன் இருந்த அறையில் ஆட்டமேட்டிக் தீயணைக்கும் கருவி இருந்தது. அது ட்ரிப் ஆகி கரிமில வாயு வெளிப்பட அதை சுவாசித்து இறந்தான். உங்கள் விடையும் ஏற்கப்படக் கூடியதே.

10ஆம் கேள்விக்கான உங்கள் விடை தவறு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

கேள்வி ஒன்றிற்கான பதில்:
கோவிந்தாச்சாரியும்,கனகவல்லியும் விமானத்தில் பயணம் செய்கிறார்கள்.கோவிந்தாச்சாரி பாராசூட் அணிந்துகொண்டு ஸ்கைடைவிங் செய்கிறார்.பத்திரமாக கீழே உள்ள கப்பலை வந்தடைகிறார்.

dondu(#11168674346665545885) said...

திரும்ப கப்பலுக்கு வருகிறார் என்றால் அவரை கப்பலிலிருந்துதானே எறிந்திருக்க முடியும்? உங்கள் விடை தவறு.

இது நிஜமாக நடந்த நிகழ்ச்சியாதலால் சற்று கஷ்டமான கேள்விதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

டிபிஆர்.ஜோசப் said...

என்ன சார் நீங்க..

இதெல்லாம் எங்கக்கிட்ட போய் கேட்டுக்கிட்டு..

அப்படீன்னு கேக்க வரலை.. சும்மா வந்து ப்ரெசெண்ட் சார்ன்னு சொல்லிட்டுப் போலாம்னுதான்:((

dondu(#11168674346665545885) said...

நன்றி ஜோசஃப் அவர்களே. இவை சற்று தளம் மாறி சிந்திக்க வேண்டிய பிரச்சினைகள். உங்கள் அலுவலகச் சிக்கல்களை இவ்வளவு வெற்றிகரமாகக் கையாண்ட உங்களுக்கு இதெல்லாம் தூசுதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மு.கார்த்திகேயன் said...

என் பதிவுக்கு வந்து பின்னூட்டம் இட்டதற்கு நன்றி டோண்டு சார்..

உங்கள் புதிர்கள் அவிழ்க்க முயற்சி செய்கிறேன்..

dondu(#11168674346665545885) said...

வெற்றி பெற வாழ்த்துக்கள் கார்த்திகேயன் அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது