1/14/2007

துக்ளக் 37-வது ஆண்டு விழா மீட்டிங்

இம்முறை இக்கூட்டம் தேனாம்பேட்டை காமராஜ் அரங்கத்தில் நடந்தது. 6.30 மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய கூட்டத்துக்கு மாலை 4.30-க்கு சென்றும் அரங்கத்தினுள்ளே இடம் கிடைக்கவில்லை. வெளியே ஹாலில் பல ஸ்க்ரீன்கள் ஏற்பாடு செய்திருந்தனர். நானும் ஒரு ஸ்க்ரீனுக்கு முன்னால் தரையில் அமர்ந்து கொண்டேன். கீழே உட்கார்ந்து ரொம்ப நாட்கள் ஆகியிருந்ததால் ரொம்ப கஷ்டப்பட்டேன். என்ன செய்வது மீட்டிங்கை அதற்காக மிஸ் செய்ய இயலுமா? கையில் காத்திருப்புக்கு என்றே கொண்டு சென்ற டெர்ரி ப்ராட்செட்டின் நாவல் கை கொடுத்தது.

மாலை 6.25 வாக்கில் வெங்கைய நாயுடு, ரஜனிகாந்த், எல்.கே. அத்வானி, எக்ஸ்பிரஸ் குருமூர்த்தி ஆகியோர் வந்து முதல் வரிசையில் அமர்ந்தனர். சரியாக 6.30-க்கு சோ மீட்டிங்கை எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை கூறி ஆரம்பித்து வைத்தார். முதலில் துக்ளக்கில் வேலை செய்பவர்கள் அறிமுகம். உதயசங்கர், சுந்தரம், மதலை, சத்யா, பர்க்கத் அலி, சுவாமிநாதன், தோஸ்த், துர்வாசர், இதயா, ஷண்முகம், ராமமூர்த்தி, வசந்தன் பெருமாள், ரா.கி. ரங்கராஜன் ஆகியோரை தனக்கே உரித்தான நகைச்சுவையுடன் அறிமுகப்படுத்தினார். குருமூர்த்தி அவர்களை பற்றி பேசும்போது பல பெரிய இடத்தொடர்புகள் இருந்தாலும் அவற்றிலிருந்து எந்த சுயலாபத்துக்கான விஷயங்களையும் அவர் பெற முயற்சி செய்ததில்லை என கூறினார். தன்னைப் போலவே இந்த விஷயத்தில் இருக்கும் குருமூர்த்தியை சோவுக்கு பிடித்து போனதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும் என நினைத்துக் கொண்டேன்.

பிறகு வாசகர்களை பேச அழைத்தார். இந்த இடத்தில் ஒன்று கூறவேண்டும். கையில் நோட்புக்கும் பேனாவும் எடுத்துச் சென்றாலும் அசௌகரியமான முறையில் உட்கார நேர்ந்ததாலும், ஒலிபெருக்கி மக்கர் செய்ததாலும், சுற்றியிருந்தவர்கள் பல சமயம் கைதட்டி ஆரவாரம் செய்ததாலும் சிலவற்றை சரியாகக் கேட்க இயலவில்லை. ஆகவே எனது நோட்ஸ், மற்றும் ஞாபகசக்தி ஆகியவற்றின் துணையோடு பதிவிடுகிறேன். பிறகு துக்ளக்கில் ரிப்போர்ட் வரும்போது ஏதெனும் முரண்பாடுகள் இருந்தால், துக்ளக் வெர்ஷனே சரியானதாக இருக்கும் என எடுத்துக் கொள்ளவும்.

ரமேஷ் என்னும் வாசகர் பேசும்போது வாக்கு வங்கி அரசியலைப் பற்றி சோ அவர்களின் கருத்தைக் கேட்டார். இலவசங்கள் நீண்ட காலத் திட்டங்களுக்கு உதவுவதாகத் தெரியவில்லையே என்றும் கூறினார். பல கோவில் நிலங்களில் உள்ள பல இந்து குத்தகைக்காரர்கள் குத்தகை பணத்தைத் தராது இழுக்கடித்தபோது இசுலாமிய குத்தகைக்காரர்கள் மட்டும் ஒழுங்காகப் பணம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறினார். அதே வாசகர் அத்வானிஜியிடம் பாஜக என்ன செய்ய திட்டம் வைத்துள்ளது என்ரு கேட்டார். இத்தனை ஆண்டுகள் துக்ளக்கின் இதழ்கKளை டிவிடியில் தர முடியுமா என்றும் கேட்டார்.

இதற்கு பதிலாக சோ பேசுகையில் இலவசம் என்பதை ஒரேயடியாக மறுக்க முடியாது என்பதை கூறினார். உதாரணத்துக்கு காமராஜரின் மதிய உணவுத் திட்டத்தை எம்ஜிஆர் அவர்கள் சத்துணவுத் திட்டமாக விரிவாக்கம் செய்தபோது தான் முதலில் அது பற்றி நல்ல அபிப்பிராயம் வைத்திருக்கவில்லை என்றும் ஆனால் காலப்போக்கில் எதனை பேருடைய வாழ்க்கையில் அது ஒளி கொண்டு வந்தது என்பதைப் பார்க்கையில் தன் கருத்தை அதிட்டத்தைப் பொருத்த வரை மாற்றிக் கொண்டதாகவும் கூறினார். ஆனால் டிவி, கேஸ் இணைப்பு என்று இழுத்ததும் அரங்கத்தின் உள்ளிலும் வெளியேயும் ஒரே சிரிப்பு. டிவிடி விஷயத்தை கவனிப்பதாக்க் கூறினார்.

அடுத்து பேசியது கும்மிடிப்பூண்டியிலிருந்து பாலகிருஷ்ணன். ஆனால் அவர் என்ன பேசினார் என்பதை இரைச்சலில் கேட்க இயலவில்லை. ரங்கநாதன் என்பவர் பேசும்போது பெரியார் படம் வெற்றி பெற்றால் ஆத்திகத்துக்கு பங்கம் வருமா என்று கேட்டார். டி.எம்.கே ஆட்சி 5 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்குமா என்றும் கேட்டார். ரஜனிகாந்த அரசியலில் நுழையாத பட்சத்தில் நதி இணைப்புகள் பற்றி ஏதேனும் ஃபாரம் உருவாக்கி வேலை செய்வாரா என்றும் கேட்டார். துக்ளக் மீட்டிங்கை நேரு ஸ்டேடியத்தில் வைத்து கொள்ளலாமே என்றும் ஆலோசனை கூறினார்.

அதற்கு பதிலளித்த சோ நிச்சயமாக தனது கூட்டங்களுக்கு நேரு ஸ்டேடியம் எல்லாம் தரமாட்டார்கள் என்று அபிப்பிராயப்பட்டார். தான் கலந்து கொள்வதாக இருந்த கார்பரேஷன் எலெக்ஷன் பற்றிய மீட்டிங்கையே தடை செய்து விட்டார்கள் என்பதையும் நினைவூட்டினார். திமுக ஆட்சி முழு 5 ஆண்டுகளும் இருக்க வேண்டும் என்ற ஆசையையும் வெளியிட்டார். அப்போதுதான் அவர்கள் முழு சுயரூபமும் தெரியவரும் என்றும் கூறினார். பெரியார் பிள்ளையார் சிலைகளை உடைக்க உடைக்க தெருவுக்கு நான்கு பிள்ளையார் கோவில்கள் உருவாயின. ராஜாஜி கூட பெரியாரை இன்னொரு ஆழ்வாராக அறிவிக்கலாம் என்று குறிப்பிட்டதையும் சோ அவர்கள் எடுத்து காட்டினார். அதையெல்லாம் பார்க்கும்போது இப்படம் வெற்றியடைவதால் ஆத்திகத்துக்கு ஒன்றும் ஆகாது என்றும் கூறினார்.

அழகப்பன் என்பவர் ஹிந்து மகாசமுத்திரம் ஆரம்பமே நன்றாக இருந்தது, ஆயினும் பள்ளி மாணவர்களுக்கும் புரியும் வகையில் எளிமைப்படுத்த வேண்டும் என்று கருத்து கூறினார். துக்ளக்கில் பல புது விஷயங்கள் செய்யலாம் என்றும் கேட்டுக் கொண்டார். மேலே அவர் கூறியது காதில் விழவில்லை. சோ அவர்கள் பதிலளிக்கும்போது இதற்கு மேல் ஹிந்துமகாசமுத்திரத்தை எளிமைப்படுத்த இயலாது என்று கூறினார்.

இன்னும் சிலர் பேசினர், ஆனால் என்னால் குறிப்பெடுக்க இயலவில்லை.

பிறகு சோ பேசினார். சதாம் பற்றி பேசுகையில் அவரை சரியான முறையில் விசாரித்துத்தான் தீர்ப்பு கூறப்பட்டது எனக் கூறினார். பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக பாவ்லா காட்டியது சதாம் ஹுசேன் மட்டுமே. அதன் பலனை அவர் அனுபவித்தார் என்று கூறினார். ஷியா பெரும்பான்மை மக்களை அவர் துன்புறுத்தியதற்கு கிடைத்த பரிசே தூக்கு தண்டனை என்றும் கூறினார். இப்போது தீவிரவாதிகளை ஒழிக்க அமெரிக்கா இஸ்ரேல் ஆகிய நாடுகளுடன் ஒத்துழைப்பதில்தான் இந்தியாவின் நலம் உள்ளது என்றும் கூறினார். சோவியத் யூனியன் பலமுறைகள் அடாவடி செய்த போது இந்தியா வெறுமனே வேடிக்கை பார்த்ததையும் அவர் சுட்டிக் காட்டினார்.

பிறகு தமிழ் நாட்டு அரசியலுக்கு வந்தார். மைனாரிட்டி அரசு என்று ஜெயலலிதா குறிப்பிடுவதை பற்றிப் பேசும்போது அவர் உண்மையைத்தானே கூறுகிறார் என்று கேட்டார். கூட்டணி ஆட்சி அமைக்காது வெளியிலிருந்து ஆதரவு பெற்றால் அது மைனாரிட்டி ஆட்சியல்லாது வேறென்ன என்றும் கேட்டார். திடீரென நடுவில் ஒரு பாட்டை எடுத்து விட்டார். சும்மா சொல்லப்படாது, நன்றாகவே பாடினார். பிறகு சீரியஸாக தனக்கப்புறம் கர்னாடக இசையை சோதான் காக்க வேண்டும் என்று செம்மங்குடி தன்னிடம் கூறியதாக சோ சொன்னார். ஒரே சிரிப்பு. இதுவே அண்ணா தன்னிடம் இதைக் கூறினார் அதைக்கூறினார் என்று யாராவது கூறும்போது நம்பத் தயாராக இருப்பவர்கள் தான் சொன்னபோது மட்டும் ஏன் சிரிக்க வேண்டும் என்று கேட்டு மேலும் சிரிப்பு மூட்டினார்.

தற்போதைய மத்திய அரசு பொருளாதாரத்தில் நன்றாகச் செயல்படுகிறது, ஆனால் தீவிரவாதிகள் விஷயத்தில் கோட்டை விடுகிறது என்று கூறினார். அதே போல க்வாட்ரோக்கி சோனியாவுக்கு வேண்டியவர் என்பதற்காக மட்டுமே போஃபோர்ஸ் விஷயத்தில் அரசு குளறுபடி செய்தது என்று குற்றஞ்சாட்டினார். தமிழகத்திலும் புலிகளுக்கு கலைஞர் பரிவு காட்டுவது கவலைகுரியது என்றும் கூறினார்.

நல்லமுறையில் ஆட்சி செய்வது குஜராத்தில் மோடி மட்டுமே என்று கூறினார். அதை மட்டம்தட்ட மத்திய அரசு செய்யும் முயற்சிகளையும் சோ சுட்டிக் காட்டினார். மோடி மேல் ஒரு ஊழல் புகாரும் இல்லை என்றும் கூறினார். கோத்ரா விஷயத்தில் மோடி அரசுக்கு எதிராக அமைக்கப்பட்ட கமிஷனின் லட்சணத்தைப் பற்றியும் பேசினார். இது பற்றி துக்ளக்கில் விரிவாக வரும் அதில் பார்க்கலாம், ஏனெனில் எனக்கு சரியாக குறிப்பு எடுக்க முடியாமல் போயிற்று.

பிறகு பிஜேபியினர் சோர்வை விட்டு விட்டு உற்சாகத்துடன் உழைக்க வேண்டும் என்று கூறினார். அஃப்சல் விஷயாத்தில் தேவையற்ற சர்ச்சை வருவதை கண்டித்தார். மூன்றாம் அணி வர வாய்ப்பு அதிகம் இல்லை எனக் கூறினார். அவர் தொட்ட வேறு விஷயங்கள்: சினிமாக்களுக்கு தமிழ்ப்பெயர், கார்ப்பரேஷன் தேர்தல், சட்டசபைக்கும் பாராளுமன்றத்துக்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்தும் வாய்ப்புக்கள், அப்போது நேரக்கூடிய அரசியல் திருப்பங்கள் ஆகியவை.

இப்போதுதான் ஒரு அதிசயம் நடைபெற்றது. சாதாரணமாக ஆண்டுவிழா கூட்டங்களில் சோ மட்டும்தான் பேசுவார். ஆனால் இம்முறை அத்வானிஜியும் பேசினார். அது பற்றி அடுத்தப் பதிவில்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

90 comments:

dondu(#11168674346665545885) said...

நன்றி நெருப்புசிவா அவர்களே.

ரஜனியை பேச விட்டிருக்க வேண்டுமா? நீங்க வேற. நாங்கள் கேட்கப் போனது முக்கியமாக சோவைத்தான். எனக்குத் தெரிந்து ஆண்டு விழா கூட்டங்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட வாசகர்களைத் தவிர சோ மட்டும்தான் பேசுவார். அதுதான் எனக்கும் பிடிக்கிறது. ஆனால் இம்முறை அத்வானிஜியை பேச அழைத்தார். மற்றப்படி ரஜனி அவர்கள் பல முறை வந்தாலும், எனக்குத் தெரிந்து, நான் நேரிடையாக அட்டெண்ட் செய்த கூட்டங்களில் வேறு யாரும் பேசியதாகத் தெரியவில்லை.

மிகக் களைப்புடன் ஆனால் களிப்புடன் வீடு திரும்பும்போது மணி பத்துக்கு மேல் ஆகி விட்டது. உடனே பதிவைப் போட்டு முடிக்கும்போது மணி கிட்டத்த நள்ளிரவு 12 மணி. சில விஷயங்கள் விட்டுப் போய் விட்டன. உங்கள் கேள்விகள் நினைவுபடுத்தியுள்ளன, அதற்கும் நன்றி.

தமிழ் அர்ச்சனை, இட ஒதுக்கீடு, காஞ்சிமட அரசியலைப் பற்றி நான் கவனிக்க முடிந்த வரை பேசவில்லை. ஆனால் ஏற்கனவே குறிப்பிட்டபடி பல அசௌகரியங்களுக்கு இடையில் குறிப்பெடுத்ததாலும், ஒலிபெருக்கி சதி செய்ததாலும் அவை விட்டுப் போயிருக்கக் கூடும், காஞ்சி மட அரசியல் மட்டும் இல்லை என்பதில் நிச்சயமாக உள்ளேன்.

தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியா அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் கைகோர்க்க வேண்டும் எனக் கூறினார். புஷ் பற்றி அவர் கூறியது சரியாக கவனிக்க இயலவில்லை.

கார்ப்பரேஷன் தேர்தலை கிழிகிழியென்று கிழித்தார். வரப்போகும் மானில மத்தியத் தேர்தல்களுக்கு செய்யவிருக்கும் அராஜகங்களுக்கு இது ஒத்திகை என்றும் அச்சம் தெரிவித்தார். என்னதான் அப்போது மத்தியத் தேர்தல் கமிஷந்தான் தேர்தலை நடத்தும் என்றாலும், மற்ற வாக்கு சாவடி அதிகாரிகள் மற்றும் போலீஸார் மானில அரசுக்கு கட்டுப் பட்டவர்கள்தானே என்றும் கூறினார். அப்படியே தேர்தல் கமிஷன் தலையிட்டாலும் ரொம்பவும் மோசமாக ஊழல் நடந்த தொகுதிகளை மட்டும் கவனத்தில் கொண்டு மற்றவற்றை கண்டு கொள்ளாமல் விடக்கூடும் என்றும் அவர் அச்சம் தெரிவித்தார்.

ஹமாஸ் மற்றும் அமெரிக்க தேர்தலைப் பற்றி அவர் எதுவும் பேசியதாகத் தெரியவில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

மிக்க நன்றி பிரகாஷ் அவர்களே. தினமலர் வாங்கி பார்க்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

தினமலர் வாங்கிப் பார்த்தேன், படங்கள் காணக் கிடைக்கவில்லையே. ட்ஜினமலர்தானா அல்லது வேறு பத்திரிகையா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

கால்கரி சிவா said...

டோண்டு சார் உடனடி ரிப்போர்ட்டுக்கு நன்றி. வலைப்பதிவர்கள் சார்பாக உங்களுக்கு அடுத்தமுறை அரங்கித்தினுள் டிக்கெட் வேண்டுமென சோவிடம் முறையிடலாம்.

dondu(#11168674346665545885) said...

வெளியில் இருந்து பார்ப்பதிலும் சௌகரியம் உண்டு. இடம் போய் விடும் என்ற பயத்தில் பாத்ரூம்கூட போகக் கூட அரங்கிற்கு வெளியே போக முடியாது. அப்படியே சென்றாலும் சில சமயம் காவலர்கள் உள்ளே விட மறுப்பதும் உண்டு.

வெளியே ஸ்க்ரீனில் பார்த்ததால் பல கோணங்களிலிருந்து பார்க்கக் கிடைத்ததும் ஒரு போனஸ்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

திரு டோண்டு சார் அவர்களே

அதென்ன பெரும்பாலான வலை நண்பர்கள் காமெடியான பெயர்கள் வைத்துக் கொண்டிருக்கிறார்கள் ?

நேற்று நானும் அதெ பெரிய ஸ்க்ரீனில்தான் பார்த்துக் கொண்டிருந்தேன். உங்கள் பதிவு நன்கு இருக்கிறது.

பொங்கல் வாழ்த்துக்கள்.

என் வலைப்பதிவுகளில் எனது சிறுகதைகள் பல உள்ளன. உங்கள் கருத்துக்களை வரவெற்கிறேன். பிடித்திருந்தால் மற்ற வலை நண்பர்களுக்கு தெரிவிக்கவும்

மெலட்டூர்.இரா.நடராஜன்

dondu(#11168674346665545885) said...

நன்றி நடராஜன் அவர்களே. உங்கள் ஊர் வரதராஜப் பெருமாள் கோவிலை பற்றி சற்றுவிவரமாக எழுத இயலுமா? 108 திவ்ய தேசங்களில் ஒன்றா?

சென்னையிலிருந்து காரில் செல்ல எது ஷார்ட் ரூட்? கோவில் நடை திறந்திருக்கும் நேரங்கள்?

என் வீட்டம்மா பெருமாள் கோவில்களாக பார்த்து தள்ளுவார். அடியேனையும் இழுத்துக் கொண்டு மாதம் ஒரு முறை கிளம்பி விடுவார்.

அடுத்த முறை செல்லும்போது உங்கள் கோவிலையும் பார்க்க ஆசை.

உங்கள் கதைகள் எல்லா படித்துள்ளேன். இப்போதுதான் இரண்டிற்கு பின்னூட்டமிட்டேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

டோண்டு என்பது நான் பிறந்ததிலிருந்து எனக்கிட்ட செல்லப்பெயர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வடுவூர் குமார் said...

துக்ளக்கில் இது பற்றி எழுதும்போது, பொது மக்களின் கேள்வியும் திரு சோ வின் பதிலும் நன்றாக இருக்கும்.எனக்கு தெரிந்து வேறு எந்த பத்திரிக்கையும் அதன் வாசகர்களை நேரில் சந்தித்து கேள்வி கேட்டு பதில் சொல்வதாக தெரியவில்லை.அதுவும் நாட்டு நடப்பில்.
உடனே பதிவை போட்டதற்கு நன்றி

dondu(#11168674346665545885) said...

நன்றி குமார் அவர்களெ. நீங்கள் சொன்னதைத்தான் அதவானிஜியும் தன் பேச்சில் கூறி ஆச்சரியப்பட்டார். சோவின் அருமை இந்தியாவில் எல்லோருக்கும் தெரிந்துள்ளது, நம் தாய்த் தமிழகத்தில் உள்ளவர்களைத் தவிர. ;)))

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

நீங்களும் மீட்டிங்கிற்கு வந்தீங்களா? எனது நண்பன் தயவில் நான் அரங்கத்தின் உள்ளேயே போக முடிஞ்சுது.

உங்கள் பதிவு நல்லா இருக்கு.

கட்டபொம்மன்

ஓகை said...

பதிவுக்கு நன்றி டோண்டு அவர்களே!

// நான் நேரிடையாக அட்டெண்ட் செய்த கூட்டங்களில் வேறு யாரும் பேசியதாகத் தெரியவில்லை.//

1970 அல்லது 71ல் நான் காமராஜ் திடலில் நடந்த கூட்டத்துக்கு சென்றிருந்தேன். அப்போது பார்வையாளராக திரு குமரி அனந்தன் அவராகவே வந்திருந்தார். அவர் வந்திருப்பதை அறிந்தததும் சோ அவரை மேடைக்கு அழைத்துப் பேசச் சொன்னார். அவரும் அழகாக சற்று நேரம் பேசினார்.

enRenRum-anbudan.BALA said...

டோண்டு சார்,
நேரடி ரிப்போர்ட்டுக்கு நன்றி ! தரையில் அமர்ந்து மிகவும் சிரமப்பட்டு நோட்ஸ் எடுத்து எங்களுக்கு சேவை செய்கிறீர்கள் :) நன்றி. அடுத்த பதிவை எதிர்பார்க்கிறேன்.

என் திருப்பாவைப் பதிவுகளை சமயம் இருக்கும்போது வாசிக்கவும்.
எ.அ.பாலா
**********************

dondu(#11168674346665545885) said...

நன்றி என்றென்றும் அன்புடன் பாலா அவர்களே. உங்கள் திருப்பாவை பற்றிய பதிவுகளில் சில படித்துள்ளேன். நிச்சயம் எல்லாவற்றையும் படிக்கிறேன்.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது தரப்பிலிருந்து பொங்கல் வாழ்த்துக்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

அப்படியா ஓகை அவர்களே. சமீபத்தில் 1971-ல் குமரி அனந்தன் பேசியிருக்கிறாரா?

அப்போது காமராஜர் திடல், அதே இடத்தில் இப்போது அரங்கம் என நினைக்கிறேன். சரிதானே?

பொங்கல் வாழ்த்துக்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

அடேடே உங்களை மிஸ் செய்து விட்டேனா கட்டபொம்மன் அவர்களே. பிறகு வாய்ப்பு கிடைக்காமலா போகிறது?

பொங்கல் வாழ்த்துக்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ஆன்லைனா ஓக்கே, பார்க்கிறேன்.

சோவை ஒருவருக்கு பிடிக்கிறதோ இல்லையோ அவர் தனிப்பட்ட முறையில் யாரையும் தாக்குவது இல்லை என்பதை எல்லோருமே ஒப்புக் கொள்வார்கள்.

சமீபத்தில் 1975-ல் சர்வாதிகாரி இந்திரா காந்தி தனது சொந்த நலனுக்காக நாட்டுக்கு விரோதமான அவசர நிலை கொண்டு வந்து ருத்ர தாண்டவம் ஆடிக் கொண்டிருந்த தருணம் அது. தமிழக அரசு மட்டும் அப்போது அவசர நிலையை எதிர்த்தது. இந்திரா காந்தி கொடுத்த சமிஞையின் பேரில் தமிழக பத்திரிகைகள் மானில அரசைத் தாக்கியபோது துக்ளக் மட்டும் கட்டம் கட்டி அறிவித்தது, அதாவது மத்திய அரசை விமரிசனம் செய்ய இயலாத நிலையில், மாநில அரசை எல்லா பத்திரிகைகளும் தாக்கும் நிலையில் மற்றும் அவற்றுக்கு எதிராக ஒன்றும் செய்ய முடியாது மாநில அரசை மத்திய அரசு கட்டிப் போட்ட நிலையில், தான் மாநில அரசை விமரிசனம் செய்யப் போவதில்லை என்ற சோவின் நிலையை தெரிவித்தது.

பிப்ரவரி 1976-ல் கருணாநிதி அரசை டிஸ்மிஸ் செய்த நிலையில் யாருமே, கட்சிக்காரர்கள் கூட, கருணாநிதியின் அருகில் செல்ல பயந்தனர். பத்திரிகையாளர்களில் ஒரே ஒரு ஆணாக அப்போது இருந்த சோ அவர்கள் கருணாநிதியின் வீட்டிற்கு சென்று அவர் ஆட்சியை கலைத்தது தவறு என்று கூறி தன் தார்மிக ஆதரவைத் தெரிவித்தார். அதை கருணாநிதி இன்று வரை மறக்கவில்லை என நினைக்கிறேன்.

சோ என்னும் மாமனிதர் எதிர்த்தாலும் சரி ஆதரித்தாலும் சரி அதில் ஒரு உள்ளூடிய நேர்மை இருக்கும். அக்காலக் கட்டத்தில் பிறக்காதவர்கள் அதை உணர்வது கடினம்.

இதை கூறுவது துக்ளக்கின் முதல் இதழிலிருந்து விடாது அதை படித்து வரும் (சில இதழ்கள் கிடைக்கவில்லை, தில்லியில் இருந்த 20 ஆண்டுகளில்) டோண்டு ராகவன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஜோ/Joe said...

டோண்டு சார்,
சமீபத்திய தமிழ் இந்தியா டுடே-வில் கலைஞர் பேட்டியில் அவரிடம் அரசியலுக்கு அப்பாற்பட்டு உங்கள் நண்பர் யார் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு கலைஞரின் பதில் "(சொன்னா சிரிக்க மாட்டீங்களே) நம்ம சோ! தான் .வெளியே என்னை விமர்சித்து விட்டு மனதுக்குள் என்னை ரசிப்பவர் அவர்"

dondu(#11168674346665545885) said...

இது, இது, இதைத்தான் தேடிக் கொண்டிருந்தேன் ஜோ அவர்களே. இன்று காலை வாங்கிய வாராந்தரி ராணியில் (21.01.2007) முதல் பக்கத்தில் வந்துள்ளது. கை மறதியாக வைத்து விட்டு தேடிக் கொண்டிருந்தேன். இப்போது தீவிரமாகத் தேடி கண்டுபிடித்தேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Madhu Ramanujam said...

பொங்கலுக்காய் இல்லாவிடிலும் இந்த கூட்டத்தை ரசிப்பதற்காக சென்னை வர எண்ணினேன்..ஆனால் முடியவில்லை. ஜெயா டிவியின் உபயத்தால் சோ அவர்கள் உள்ளாட்ச்சித் தேர்தல் பற்றி தனது கருத்தை கூறியதை கேட்க்க நேர்ந்தது.

"உள்ளாட்ச்சித் தேர்தலில் நடந்த்த சம்பவங்கள் வருங்கால சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஒத்திகைகள்" எனும் அவர் கருத்து சற்று பயமளிப்பதாகவே உள்ளது.

நம் அரசியல்வாதிகள் நம்மை எங்கு அழைத்துச் செல்கின்றனர் என்று சற்றும் புரியவில்லை.

dondu(#11168674346665545885) said...

நன்றி மதுசூதனன் அவர்களே.

6.30க்கு மீட்டிங். 4.30 மணியளவில் அரங்கம் நிரம்பி வழிந்தது. 5 மணியளவில் அரங்கத்துக்கு வெளியே இருந்த foyer நிரம்பி வழிந்து முக்கிய வெளிக்கதவுகள் மூடப்பட்டன. 5.30 மணியளவில் கட்டிடத்தின் வெளியே உள்ள இடங்கள் நிரம்பி வழிந்து சாலை பக்க கேட்டுகள் மூடப்பட்டன. மொத்தம் கிட்டத்தட்ட 10 ஸ்க்ரீன்கள் போடப்பட்டிருந்தன.

பார்வையாளர்கள் (நேரடி அல்லது மற்றமுறை) எண்ணிக்கை கண்டிப்பாக 2000க்கும் மேல்தான் இருக்கும். எல்லோரும் பொறுமை காத்தது துக்ளக் மற்றும் சோ மேல் மக்கள் வைத்திருந்த மதிப்பை காட்டியது.

லாரி வைத்து, பிரியாணி பொட்டலங்கள் அளித்து, கைக்காசு கொடுத்து, அதில் குட்டித் தலைவர்கள் காசு பார்த்து என்றெல்லாம் பல அரசியல் கட்சிகள் கூட்டம் போடும் இக்காலத்தில் சோவை பார்த்து பல தலைவர்களும் வயிறெரிந்திருப்பர் என்பதே நிஜம்.

அவருக்கு நேரு ஸ்டேடியத்தில் இடம் கொடுத்திருக்க மாட்டார்கள் என்பதும் நிஜமே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

மதுசூதனன் அவர்களே, உங்கள் மின்னஞ்ச தெரியாததால் எனது மின்னஞ்சலை உங்களது இப்பதிவில் பின்னூடமாக இட்டுள்ளேன். பார்க்க: http://enthanpaarvai.blogspot.com/2006/12/1-50.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

லக்கிலுக் said...

//என் வீட்டம்மா பெருமாள் கோவில்களாக பார்த்து தள்ளுவார். அடியேனையும் இழுத்துக் கொண்டு மாதம் ஒரு முறை கிளம்பி விடுவார். //

டோண்டு சார்!

நங்கநல்லூரில் இருக்கும் லஷ்மி நரஸிம்ம நவதீத கிருஷ்ணன் ஆலயத்துக்குச் சென்றதுண்டா?

dondu(#11168674346665545885) said...

வாருங்கள் லக்கிலுக்.

அக்கோவிலுக்கு என் மனைவி தினமும் செல்வாரே. நான் வேறொரு இடத்தில் எழுதியுள்ளபடி, ஒரு பிப்ரவரி 14 அன்று அவருக்கு வாலண்டைன் நாள் வாழ்த்துக்களை கூற, ஒரு நிமிடம் என்னை விழித்து பார்த்துவிட்டு, "இன்னிக்கு பிரதோஷம்" என்று கூறிக் கொண்டே அந்த லக்ஷ்மி நரசிம்மசுவாமி கோவிலுக்கு விரைந்தார். அதிலிருந்து என் மகள் பிப்ரவரி 14-ஐ பிரதோஷம் என்றும் ஒவ்வொரு பிரதோஷத்தையும் வாலண்டைன் நாள் என்றும் குறிப்பிடுவாள். :)))))))

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

வாருங்கள் நாட்டாமை அவர்களே,

அப்படித்தான் அக்காலக் கட்டத்தில் கல்கி பத்திரிகைக்கும் கூறினார்கள். 1954-ல் கல்கி மறைந்தார். இப்போது 2007. கல்கி நடக்கிறது இல்லையா. அது போலத்தான்.

தேவை ஏற்பட்டால் தானாக மாற்று அமைந்துவிடும் என்றே நினைக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

லக்கிலுக் said...

//சோவுக்கு பிறகு துக்ளக் என்ன ஆகும் என்று கவலையாக உள்ளது.அவரது இடத்தை யாரும் இட்டு நிரப்ப முடியாது.//

சோ இருக்கும்போதே துக்ளக்கின் நிலை கவலைக்கிடமாகத் தான் இருக்கிறது.

அவரால் மார்க்கெட்டிங் செய்ய முடியவில்லை என்று எக்ஸ்பிரசுக்கு கடந்தவருடம் தாரை வார்த்தார். துக்ளக்கை மார்க்கெட்டிங் செய்து போண்டியாகி விட்ட எக்ஸ்பிரஸ் நைசாக சோவை கைகழுவி விட்டது.

இப்போது அடுத்தப்படியாக போண்டி ஆக கல்கி குரூப் துக்ளக் மார்க்கெட்டிங்கை கையில் எடுத்திருப்பதாக தகவல் :-)))))

dondu(#11168674346665545885) said...

மார்க்கெட்டிங்கிற்கு தனித் திறமை தேவைப்படும், பல சமரசங்கள் செய்து கொள்ள நேரிடும்.

அதெல்லாம் இல்லாத சோ அவர்கள் இவ்வளவு ஆண்டு தாக்குப் பிடித்ததை வேறு யாராலும் மிஞ்ச முடியாது. அத்தனையும் அவரது உழைப்பு. மனிதர் என்ன இளமையாக செயலாற்றுகிறார்?

அவரை பார்க்கும்போது நினைவுக்கு இக்குறள் வருகிறது:

சொலல்வல்லன் சோர்விலான் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கு மரிது

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

i am aasath

I didn't attend this meeting. But, "CHO" trust his ideology is unique one. So, he oppose DMK for their misbehaviours on the election. He told that it is the trial for forthcoming elections. At the same time he want to execute the rebelions agaist USA/Israel like Castro/Sadam/Chavos ... etc.

For Gurumoorthy, if anyone has good by his personal life with worst public life should not accept. Fit your self-criticism.

Advani or Modi or your joker of Public Rajini can attend this meeting without self-respect. Nobody in TN have sufered by this MASS. This mass would come to Meenambakkam two-year back while yor AASAN Kamakaedi arrest for a Murder of Brahmin at Temple.

Without ADVT., two magazines (one is political /another is Cultural monthlys) had published last 25 years in TN. Do you know that they can't accept any ADVT also.

Yes "Puthiyakalachaaram & Puthiyajananayagam)

dondu(#11168674346665545885) said...

"For Gurumoorthy, if anyone has good by his personal life with worst public life should not accept. Fit your self-criticism."

"Nobody in TN have sufered by this MASS. This mass would come to Meenambakkam two-year back while yor AASAN Kamakaedi arrest for a Murder of Brahmin at Temple."

For the life of me I cannot understand what you mean. Please spare the Queen's English. I guess this is your first comment to my post. Why don't you write in தமிழ்?

"Do you know that they can't accept any ADVT also."
I guess none in their right mind would give them any. Such dry content presented in a muddled manner! Typical commie literature. No thanks.

Regards,
Dondu N.Raghavan

லக்கிலுக் said...

//I guess none in their right mind would give them any. Such dry content presented in a muddled manner! Typical commie literature. No thanks.//

டோண்டு சார்!

துக்ளக்குக்கு சிட்டுக்குருவி லேகியம் புகழ் டாக்டர் காளிமுத்து மட்டுமே தொடர்ந்து விளம்பரம் தருகிறாரே? என்ன ரகசியம்? வேறு எந்த நிறுவனமும் விளம்பரம் தருகிறது போல தெரியவில்லையே?

டாக்டர் காளிமுத்து தன்னுடைய Audience ஆக ஏன் குறிப்பாக துக்ளக் வாசகர்களை குறிவைத்து விளம்பரம் கொடுக்கிறாரோ தெரியவில்லை :-)))))

Anonymous said...

i am aasath

why are you recognise the centre pt of quests rather than yrs queens language

dondu(#11168674346665545885) said...

காளிமுத்து எனக்கு தெரிந்து எல்லா பத்திரிகைகளுக்குமே விளம்பரம் கொடுக்கிறார் என்றுதான் கூற வேண்டும்.

இன்னொன்றையும் கூறிவிடுகிறேன். விளம்பரங்களை பொருத்தவரையில் துக்ளக்குக்கு அவை குறைவுதான். இருப்பினும் அதையெல்லாம் மீறி பத்திரிகை சக்கைபோடு போடுகிறஹ்டு என்பது மகிழ்ச்சிக்குரியதே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"why are you recognise the centre pt of quests rather than yrs queens language"

என்ன பெரிய புடலங்காய் பாயிண்டை கூறிவிட்டீர்கள். சோ உங்கள் டேஸ்டுக்கு ஒத்துவரவில்லை அவ்வளவுதானே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

from aasath

i can't see/read your answer

Could you please help me?

லக்கிலுக் said...

///காளிமுத்து எனக்கு தெரிந்து எல்லா பத்திரிகைகளுக்குமே விளம்பரம் கொடுக்கிறார் என்றுதான் கூற வேண்டும்.////

இல்லை சார். சிட்டுக்குருவி காளிமுத்துவின் விளம்பரங்கள் துக்ளக் எந்தப் பத்திரிகையிலும் 15 வருடங்களாக வருவதாக தெரியவில்லை. 15 வருடங்களுக்கு முன்பு மற்ற பத்திரிகைகளுக்கு கொடுத்தாரா என்று எனக்குத் தெரியாது.




///இன்னொன்றையும் கூறிவிடுகிறேன். விளம்பரங்களை பொருத்தவரையில் துக்ளக்குக்கு அவை குறைவுதான். இருப்பினும் அதையெல்லாம் மீறி பத்திரிகை சக்கைபோடு போடுகிறஹ்டு என்பது மகிழ்ச்சிக்குரியதே////

சார்! சும்மா வடிவேலு மாதிரி காமெடி பண்ணாதீங்க சார் :-))))))))))

ஞானப்பழம் என்ற படத்தில் பாக்யராஜ் ஒரு பத்திரிகை நடத்துவாரே அந்த நிலையில் தான் துக்ளக்கும் இருக்கிறது....

dondu(#11168674346665545885) said...

I don't understand Aasath,

Why are you unable to read my Tamil comments? Has it happened suddenly? Or, is your operating system not Tamil fonts-enabled?

Anyhow don't lose heart. Copy my comments as such and paste it to the top box in the Suratha converter. Then click the radio button "romanized" at the bottom row, next to the radio button TSC. You will see readable Tamil in the bottom box.

Kindly include this page among your favorites. You can use it to post comments in Tamil as well. Type Tamil in Latin alphabets, say, ammaa, appaa etc. You will get them in Tamil fonts.

I guess you used the PDF option to read my post in the first place. Unfortuanately it is of no use to read the comments.

Good luck.

Regards,
Dondu N.Raghavan

PS. The English translation for my last comment is: What point are you talking about. Cho is not to your taste, that's all?

dondu(#11168674346665545885) said...

Sorry Aasath,

Forgot to give you the link to Suratha converter.

Here you are. http://www.suratha.com/reader.htm

Regards,
Dondu N.Raghavan

dondu(#11168674346665545885) said...

"ஞானப்பழம் என்ற படத்தில் பாக்யராஜ் ஒரு பத்திரிகை நடத்துவாரே அந்த நிலையில் தான் துக்ளக்கும் இருக்கிறது.... "

அப்படீங்கறீங்க? விளம்பரத்துறையில் இருக்கும் நீங்கள் கூறினால் சரியாகத்தான் இருக்கும்.

பின்னே இவ்வளவு ஆண்டுகள் எப்படி தாக்குப் பிடித்தது? பத்திரிகையும் டாண் என்று வாராவாரம் வந்து விடுகிறதே?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

டோண்டு சார் உங்கள் பதிவுகள் பல படித்திருக்கிறேன்.அநேகமாக எல்லாவற்றிலும் ''சமீபத்தில்'' வார்த்தையைப் போட்டு 1960,75 களில் நடந்ததை கூறுகிறீர்.
சமீபத்தில் என்பது ஓராண்டுக்குள் நடந்த நிகழ்வுகளுக்கு பொருந்தலாம் ,30 ,40 வருடத்திய நிகழ்வுகளை எப்படி அப்படி குறிப்பிடலாம்.பெரிய மேதையான உங்களுக்கு இது ஏன் தெரியாமல் போனது.

லக்கிலுக் said...

//பின்னே இவ்வளவு ஆண்டுகள் எப்படி தாக்குப் பிடித்தது? பத்திரிகையும் டாண் என்று வாராவாரம் வந்து விடுகிறதே?//

வேறென்ன? சமீபத்தில் 1970களில் வாங்கிய சந்தா தான். FDயாக போட்டு வைத்திருப்பார்கள். வருடாவருடம் அதில் இருந்து வரும் வட்டித் தொகையில் ஆயுள் முடியும் மட்டும் ஓட்ட வேண்டியது தான் :-)))))

dondu(#11168674346665545885) said...

வாருங்கள் ஏடாகூடம் அவர்களே. நான் சமீபத்தில் 1951-ல் என்று கூட கூறியிருக்கும்போது 1975 எல்லாம் எந்த மூலைக்கு? :)))

இது பற்றி நான் போட்ட இப்பதிவில் உங்கள் கேள்விக்கான விடை உண்டு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"வருடாவருடம் அதில் இருந்து வரும் வட்டித் தொகையில் ஆயுள் முடியும் மட்டும் ஓட்ட வேண்டியது தான் :-)))))"

யார் ஐயா அவ்வளவு வட்டி தருவது? நம்பும்படியாக இல்லையே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ரவி said...

ஆனால் சோ பேசிய ஒவ்வொரு மேட்டருக்கும் தட்னாம்பாரு கையை...ஜெயா டிவியில் பார்த்து மகிழ்ந்தேன் :))))))))))))))) துக்குளக்குன்னு பேருவச்சது சரியாத்தான் இருக்கு !!!

ரஜினி நிலைமைதான் தர்மசங்கடம்...தேமேன்னு உக்காந்திருந்தது புள்ளை பாவம்....

அத்துவானி தமிழ்ல பேசல்லியே...ஆங்கிலத்துல பேசுனாருதானே...அப்போ அங்கிருந்த எல்லாருக்கும் புரிஞ்சுருக்குமோ ?? எதுக்கு கேக்குறேன்னா, ஓரே வேட்டிகளா தெரிஞ்சது !!!

dondu(#11168674346665545885) said...

"ஆனால் சோ பேசிய ஒவ்வொரு மேட்டருக்கும் தட்னாம்பாரு..."

சமீபத்தில் 1959-ல் திரையிடப்பட்ட கல்யாணபரிசு படத்தை மேலேயுள்ள வரி ஞாபகப்படுத்திவிட்டது.

கீழே உள்ள வரிகளை டணால் தங்கவேலு மற்றும் எம்.சரோஜாவின் குரல்களில் கற்பனை செய்து கொள்ளவும்.

எழுத்தாளர் பைரவனாக தங்கவேலு வேடமிட்டது சரோஜாவுக்கு தெரிந்து விட்டது, ஆனால் இது சரோஜாவுக்கு தெரிந்து விட்டது என்பது தங்கவேலுவுக்குத் தெரிய இன்னும் சில நிமிடங்கள் தேவைப்படுகின்றன. அதற்கு முன் வரும் டயலாக்குகள் காசினோ அரங்கையே கிடுகிடுக்க செய்து விட்டது.

சரோஜா: ஆமா, நீங்க கூட்டத்துலே பேசல்லியா?
தங்கவேலு: டூ அவர்ஸ் பேசினேன், டூ அவர்ஸ். ஒரு இடத்துல எழுத்தாளன் இந்த நாட்டுக்கு முதுகெலும்புன்னு சொன்னேன், தட்னாம்பாரு..
சரோஜா: யாரு ஒங்களையா?
தங்கவேலு: (திணறியபடி): ஹ, ஹ என்னையா, நான் மேடை மேலே இல்ல நின்னூட்டிருந்தேன். கையைத் தட்டறாம்பாரு, தட்டறான். அமைதி அமைதின்னு சொன்னப்புறம்தான் மேலே பேச முடிஞ்சுது.

இதுக்கு மேலே தங்கவேலு மாட்டிக் கொள்ளும் சோகக் காட்சிகளெல்லாம் வேண்டாமே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

அத்வானிஜியின் ஆங்கிலம் பிரமாதம். அதை விட குருமூர்த்தி அவர்கள் அவருக்கு தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தது அருமை. ஸ்க்ரீனில் காட்டிய போது, குருமூர்த்தியின் உதட்டசவை வைத்து குன்ஸாக என்ன பேசுகிறார் என்பது புரிந்தது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

நன்றி டோண்டு சார்.உங்க வாதங்களில் உடன்பாடு இல்லாவிட்டாலும்,வாழ்க்கையின் நிகழ்வுகளை இரசித்து,நினைவு கூறும் உங்கள் மனதின் இளமைக்கு ஒரு ஹாட்ஸ் ஆப்.

Bajji(#07096154083685964097) said...

Well, Mr.Edakudam,

That is Dondu Raghavan.

Krishnan

dondu(#11168674346665545885) said...

மன்னிக்கவும் பிரகாஷ் அவர்களே. லக்கிலுக் மற்றும் செந்தழல் ரவி இருவருமே அற்புதமான மனிதர்கள். அதிலும் ரவி செய்து வரும் வேலை வாய்ப்பு சேவை மகத்தானது. லக்கிலுக் என் வயதைப் பொருத்தவரை ஒரு குழந்தை. அவரது கலாய்த்தலை நான் மிகவும் ரசிக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

மறுபடியும் உங்கள் கருத்தை நான் ஒப்புக் கொள்ளவில்லை என்று கூறுகிறேன் பிரகாஷ் அவர்களே.

Let us agree to disagree on this matter.

அன்புடன்,
டோண்டு ராகவன்

லக்கிலுக் said...

டோண்டு சார்!

பிரகாஷின் பின்னூட்டங்களை வெளியிட்டதிலிருந்தே உங்கள் உள்மன விகாரம் வெளிப்படுகிறது.

மற்றபடி என் கலாய்த்தலை ரசிப்பதற்கு நன்றி!!!!

பி.கு : எதையும் முகத்துக்கு நேராக தைரியமாக சொல்லிவிடுவது என் வழக்கம். பின்னால் வருவதைப் பற்றி கவலைப்படுவதில்லை.

dondu(#11168674346665545885) said...

"பிரகாஷின் பின்னூட்டங்களை வெளியிட்டதிலிருந்தே உங்கள் உள்மன விகாரம் வெளிப்படுகிறது.
மற்றபடி என் கலாய்த்தலை ரசிப்பதற்கு நன்றி!!!!
பி.கு : எதையும் முகத்துக்கு நேராக தைரியமாக சொல்லிவிடுவது என் வழக்கம். பின்னால் வருவதைப் பற்றி கவலைப்படுவதில்லை".

பிரகாஷும் நான் மதிக்கும் பதிவாளர்களில் ஒருவர். அவர் பின்னூட்டத்தை அவர் கருத்தாக எண்ணித்தான் போட்டேன். அதே நேரத்தில் அதனுடன் நான் ஒத்துப் போகவில்லை என்பதை ஒருமுறைக்கு இரு முறையாகக் கூறினேன்.

இப்போது உங்கள் கருத்தையும் மதிக்கிறேன். அதை நீங்கள் போடுவதற்கான காரணங்கள் மற்றும் நிர்ப்பந்தங்களையும் புரிந்து கொள்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ரவி said...

பிரகாஷ் சொல்வதை நான் பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை...அவர் சொல்வது போல் நானும் இக்னோர் செய்வதில் அவருக்கொன்றும் ஆட்சேபனை இல்லை என்று நினைக்கிறேன்...

அவர் நினைப்பதுபோல் நான் மதவெறியன் இல்லை...எல்லா மதமும் சம்மதம் என்று நான் இருந்த காலம் ஒன்று..ஆஞ்சநேயர் கோவிலுக்கும் போயிருக்கேன்..எங்களூர் பெருமாள் கோயிலுக்கும் போயிருக்கேன்...சமயபுரம் கோவிலில் மொட்டையும் போட்டிருக்கேன்...நாகூர் தர்காவில் காத்து கஞ்சியும் குடிச்சிருக்கேன்...வேளாங்கண்ணியில் புதிய கோவிலில் இருந்து பழைய கோவில் வரை முட்டியிலேயே நடந்திருக்கேன்...ஆனால் நான் சாமி கும்பிடுவதை நிறுத்தி வருடம் ஆச்சு...ஆத்தீகத்தை நான் வெறுக்கலை...அதே சமயம் ஆத்திகத்தின் பேரால் நடக்கும் ஏமாற்றுவேலைகளையும், மத ஜல்லிகளையும், மத தீவிரவாதத்தையும், பட்வாவையும் உயிர்வரை வெறுக்கிறேன்..

நான் வேலைவாய்ப்பு தகவல் வெளியிட்டுத்தான் ப்லாகு எழுதறவங்க வேலை வெட்டி தேடனும் என்று இல்லை...அதுக்கு நிறைய வழி இருக்கு...இது அவர்களை டார்கெட் செய்தும் இல்லை...மேலும் என்னால யார் யார் எல்லாம் பயன் அடைஞ்சாங்க என்று வரிசைப்படுத்தி சொல்லும் விளம்பர புத்தியும் எனக்கு இல்லை...

என்னைப்பத்தி எல்லாருக்கும் நல்லா தெரியும்...உங்களுக்கும் தெரியும்...ஆனால் முகமில்லாத ப்ரகாஷுக்கு தன்னிலை விளக்கம் கொடுக்கவேண்டும் என்று நான் எழுதலை...அவர் பின்னூட்டமா போட்டு அது வெளியாகியும் இருக்கு...அதனால் அட் லீஸ்ட் நீங்கள் தெரிஞ்சுக்கவேண்டும் என்று தான் எழுதுகிறேன்...

மேலும் மதம் பற்றிய அருமையான ஆத்திக கருத்துக்களை வெளியிடும் வலைப்பதிவர்கள் இருக்கிறார்கள்...நான் கடவுளை கும்பிடவில்லை என்பதால் அவர்களை வெறுக்கிறேன் என்று ஆகாது...எஸ்.கே, ஞானவெட்டியான், குமரன், ஜெயராமன் இவங்களை எதுக்காக நான் வெறுக்கனும் ? மாறாக தனிப்பட்ட முறையில் அவர்களை மிகவும் மதிக்கிறேன்...( உங்களையும்தான்)

ஒரு இளைஞனாக உங்களுக்கும் இந்த விஷயங்கள் புரியும் என்று நினைக்கிறேன்..

ஏன் பிரகாஷ் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோட எழுதுறார் ?

இந்த விளக்கம் பிரகாஷை மட்டும் டார்கெட் செய்து அல்ல டோண்டு அவர்களே..

dondu(#11168674346665545885) said...

செந்தழல் ரவி அவர்களே,

உங்களையும் லக்கிலுக்கையும் பற்றி பிரகாஷ் கூறியது அவரது கருத்து. அத்துடன் நான் ஒத்துப் போகவில்லை என்பது என் கருத்து.

இப்போது நீங்கள் அளித்துள்ள விளக்கம் உங்கள் கருத்து. அதனுடைய தன்னிலை விளக்கத்துடன் நான் ஒத்துப் போகிறேன்.

இந்த எனது பின்னூட்டத்தை எல்லோரையும் டார்கெட் செய்துதான் போட்டிருக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

லக்கிலுக் said...

//பிரகாஷும் நான் மதிக்கும் பதிவாளர்களில் ஒருவர்.//

அவர் அப்படியென்ன புடலங்காய் பதிவு எழுதி கிழித்து விட்டார் என்று சுட்டிக் காட்ட முடியுமா?

எனக்குத் தெரிந்து அவர் வலைப்பூவில் "வணக்கம்" சொல்லி ஒரே ஒரு பதிவு போடப்பட்டிருக்கிறது.

மற்றவர்களை புண்படுத்த வேண்டுமென்ற ஒரே நோக்கத்தில் பின்னூட்டத்துக்காக மட்டுமே அவர் பிரகாஷ் என்ற முகவரி வைத்திருக்கிறார். அவரைப் போய் என்னத்துக்கு மதிக்கிறீர்களோ தெரியவில்லை :-))))

மேலும் ரவி ஒரு மதவெறியர் என்பதை பிரகாஷ் மூலமாக தெரிந்து கொண்டேன். ரவி எப்படி மதவெறியர் என்று உங்கள் அபிமான பிரகாஷால் விளக்கம் கொடுக்க முடியுமா?

அனானி-அதர் ஆப்ஷனை எதிர்க்கும் நீங்கள் அதே அளவு ஆபத்தான பிரகாஷ் மாதிரி முகமிலிகளை (அதாவது பின்னூட்டத்துக்காக மட்டுமே வலைப்பூ தொடங்கியிருப்பவர்கள்) அனுமதிப்பது உங்கள் கொள்கைக்கு முரண்பாடாகத் தெரியவில்லையா?

ரவி said...

/////அனானி-அதர் ஆப்ஷனை எதிர்க்கும் நீங்கள் அதே அளவு ஆபத்தான பிரகாஷ் மாதிரி முகமிலிகளை (அதாவது பின்னூட்டத்துக்காக மட்டுமே வலைப்பூ தொடங்கியிருப்பவர்கள்) அனுமதிப்பது உங்கள் கொள்கைக்கு முரண்பாடாகத் தெரியவில்லையா?////

ஆமாம், நீங்கள் இதுக்கு விளக்கம் சொல்லுங்க...

மேலும், ப்ரகாஷ் உங்கள் மதிப்புக்குறிய பதிவர் என்றால் அவரைப்பற்றிய விவரம் உங்களுக்கு தெரிஞ்சு இருக்கனுமே ? அதை கூட நீங்கள் இந்த சமயத்தில் வெளியிடலாம்...

dondu(#11168674346665545885) said...

பின்னூட்டத்துகாக மட்டும் வலைப்பதிவை திறப்பது தற்போதைய நிலையில் இன்றியமையாததாகும். அதன் காரணங்களை நான் புரிந்து கொள்கிறேன்.

பிரகாஷைப் பற்றி எனக்கு தெரியும். ஆனால் அவரது விவரங்களை அவர்தான் கூற வேண்டும். அது அவரது விருப்பத்தைப் பொருத்தது.

உங்கள் நிர்ப்பந்தங்களையும் நான் புரிந்து கொண்டேன் என்றும் நான் கூறியுள்ளேன். அது என்னவென்று எழுதுவதாகவும் இல்லை என்பது ஒரு ஸ்ட்ராட்டெஜி. இதற்கு மேல் நான் இது பற்றி பேசுவதாயில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

நண்பர் வரதன் (நான் மிகவும் நட்பு பாராட்டும் இன்னொரு பதிவர்) அவர்களது பின்னூட்டம் இது. சிலவற்றை எடிட் செய்வதற்கு அவர் எனக்கு அனுமதி வழங்கியுள்ளார்).

டோண்டு சார்

முதலில் துக்ளக் மாநாட்டின் உடனடி வர்ணனைக்கு நன்றி. உங்களைப் போலவே நானும் சோ அவர்களின் வெல்விஷர், விசிறி எல்லாம். நானும் 70ல் இருந்து துக்ளக் படிப்பவன். சோவை ஒரு சில சமயங்களில் அருகில் இருந்து அவதானித்தவன். அவர் என்னை மறந்திருக்கலாம், ஆனால் இடம் சந்தர்ப்ப சூழ்நிலைகளைச் சொன்னால் என்னை அவர் மறக்க மாட்டார். மிகத் துணிவானவர். பாரத மாதாவின் மிகப் பெரும் புருஷர்களில் ஒருவர். இவரைப் போன்ற அறிவும், தீர்க்கதரிசனமும், நேர்மையும், துணிவும், வாக்கு வன்மையும், எழுத்து வன்மையும், நடிப்புத் திறனும், இன்னும் பல கலைகளிலும் சிறப்பும் பெற்ற மனிதர்கள் அபூர்வமாக நூறாண்டுகளுக்கு ஒரு முறைதான் அவதரிப்பார்கள். தமிழ் நாட்டின் தவப்புதல்வர் சோ. அவருக்கு எனது பணிவான வணக்கங்கள். ஆண்டவன் அவருக்கு நீண்ட ஆயுளையும் தேக ஆரோக்கியத்தையும் அருளப் பிரார்த்திக்கிறேன். இடிப்பாரா இல்லாத ஏமரா மன்னன் போல சோ பேச்சைக் கேட்காத கருணாநிதி அழிவது நிச்சயம். சோவுடன் ஆன எனது நேரடி அனுபவங்கள் பலவற்றையும் கூறலாம்தான், நேரமும், சமயமும் கிடைத்தால் சொல்லுகிறேன்.

ரவி என்ற 'பதிவர் வேட்டி கட்டியவர்கள் எல்லாம் இங்கிலீஷ் தெரியாது' என்கிறார்.

சில்வர் டங் சீனிவாச சாஸ்திரியும், சத்தியமூர்த்தியும் வேட்டி கட்டியவர்கள்தான் என்று அவருக்கு எடுத்துச் சொல்லுங்கள்.

உங்கள்,
வரதன்

dondu(#11168674346665545885) said...

லக்கிலுக் அவர்கள் விளம்பரம் பற்றி கூறியது உண்மையாகத்தான் இருக்கும், ஏனெனில் அவர் அத்துறையில் வேலை செய்பவர். மற்றப்படி FD விஷயம் ஒத்துக் கொள்ளும்படியில்லை என்பதை நானும் கோடி காட்டிவிட்டேன். மேலும், கருணாநிதியின் ஆதரவாளரான லக்கிலுக் இப்படித்தான் எழுத முடியும்.

வேட்டி கட்டியவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்று கூறுவது அதிக அளவில் எளிமைப் படுத்துவது ஆகும்.

சமீபத்தில் 1978-ல் மேக்ஸ் ம்யுல்லர் பவன் ஆதரவில் ஒரு ஜெர்மன் திரைவிழா நடந்தது. அதற்கு நான் முழுக்கை சொக்காய், எட்டுமுழம் வேட்டி கட்டிக் கொண்டு கையில் பாலகுமாரன் நாவல் ஒன்றை எடுத்துச் சென்றேன். அங்கு வந்த சில ஃபிகர்கள் என்னைப் பார்த்து தங்களுக்குள் ஏதோ பேசி சிரித்துக் கொண்டிருந்தனர்.

ஒரு ஜெர்மன் படத்தின் டைரக்டர் பார்வையாளர்கள் சந்திப்பு நடந்து கொண்டிருந்தது. டைரக்டருக்கு ஆங்கிலம் தகராறு. மேக்ஸ் ம்யுல்லர் பவன் நிர்வாக அதிகாரி தேசிகன் அவர்கள் என்னை டைரக்டர் அருகில் வரச் செய்து மொழிபெயர்ப்பு வேலைகளை செய்யுமாறு பணித்தார். நானும் செய்தேன். அந்த ஃபிகர்கள் முகத்தில் ஈயாடவில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ரவி said...

///சில்வர் டங் சீனிவாச சாஸ்திரியும்///

யாருங்க அது சில்வர் டங்கு சீனிவாச சாஸ்திரி ?

எங்க வீட்ல வேலை செய்த மேஸ்திரி தெரியும்....அவர் கட்டிட வேலை செய்வதால் அவரை மேஸ்திரிங்கறோம்...இவர் யார் சாஸ்திரி ? அது என்ன அவர் படிச்சு வாங்கின பட்டமா ?

ரவி said...

இங்கிலீஷ் தெரிஞ்சவங்க என்பது பொதுவா படிச்சவங்க...படிச்சவங்களில் பெரும்பான்மையானவர்கள் வேட்டியக்கட்டிக்கிட்டு திரியறாங்கன்னு சொல்லுங்க நான் ஒத்துக்கிடறேன்...

அது சரி !!! ஏதோ ஒரு சாப்ட்வேர் கம்பெனியில அல்லது கம்பூட்ட்டர்ல குந்திக்கினு தானே பின்னூட்டம் போடுறீர் ? நீர் வேட்டியா கட்டிக்கிட்டி இருக்கீர் ? ஏதாவது எத்தனிக் டே வந்தாக்கூட நாமெ வேட்டியில் போறதில்லை..அது அவ்ளோ அன் ஈஸியா இருக்கும்...எங்கே ஒரு போட்டோ வெளியிடுங்களேன்...

நான் வேட்டிகளை பற்றி சொல்லியது, அங்கே வந்திருந்த வாசகர் கூட்டத்தை விட பாரதீய ஜனதா / பஜ்ரங் தள் மற்றும் இந்துத்துவ கூட்டங்களை சொன்னேன் அய்யா...

பெரியார் சிலை உடைப்பு, தேசியபாதுகாப்பு சட்ட இந்து மக்கள் கழக அர்ஜுன் சம்பத் சிறையிலேயே கார்கோ பேண்டும், டீ ஷர்ட்டும் போட்டிருக்காரு, நானே பார்த்தேன்...அதுக்காக அவர் படிச்சவருன்னும் பண்பாணவருன்னும் ஒத்துக்க முடியுமா ?

dondu(#11168674346665545885) said...

நன்றி செந்தழல் ரவி அவர்களே, ஸ்ரீனிவாச சாஸ்த்ரி அவரைப் பற்றி எழுத வாய்ப்பளித்தற்கு (இதுக்காக உங்க கொலைவெறிப்படை அதுக்காக உங்களை மைதானம் முழுக்கத் துரத்தினா நான் அதுக்கு பொறுப்பு இல்லை என்பதை இங்கே முதற்கண் கூறிவிடுகிறேன்).

V. S. Srinivasa Sastri - Rt. Honourable Srinivasa Sastri was a freedom fighter, great orator and teacher. Was called the "Silver Tongued Orator of the British Empire" by Winston Churchill[2]

Rt. Hon'ble V. S. Srinivasa Sastri was an eminent Statesman, legislator and ambassodor from India. He was especially renowned for his exemplary command of the English language and remarkable oratorial skills.

Early Life:
He was born on September 22, 1869.Born in the village of Valangaiman, near Kumbakonam, to the poor Vaidik Sankaranarayana Sastri, Sastri had a brilliant stint at the Native High School, Kumbakonam, and then in the government college in the same town. Starting his life as a teacher he became the headmaster of the Hindu High School, Triplicane. His eight-year service there was memorable. Besides giving the students his attractive teaching of English and Sanskrit and the school his able administration, he gave the teaching community an organisation — the Madras Teachers Guild — to fight for their rights. It was he who founded the Triplicane Urban Co-operative Society, long before the government thought of starting co-operative societies in the State.

He gave up the profession he greatly loved to join the Servants of India Society started by Gokhale. Here the co-disciples Sastri and Gandhiji had so much love and respect for each other that Gandhiji took pride in addressing Sastri as his elder brother in all his correspondence. But this didn't mean that the two had similar views in their approach to the Freedom Struggle. When Gandhiji sought Sastri's advice before launching his non-cooperation movement, he stoutly opposed it warning that disregarding law and order would spell disaster to the country's future.

அவர் தலைமை ஆசிரியரா இருந்த எனது ஹிந்து உயர்நிலை பள்ளியில் என் அம்மாவின் அப்பா ரங்காச்சாரி அவர்கள் பள்ளியிறுதி வகுபொபில் படித்த போது இதே சாஸ்திரிதான் அவருக்கு ஆங்கில ஆசிரியர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"அது சரி !!! ஏதோ ஒரு சாப்ட்வேர் கம்பெனியில அல்லது கம்பூட்ட்டர்ல குந்திக்கினு தானே பின்னூட்டம் போடுறீர் ? நீர் வேட்டியா கட்டிக்கிட்டி இருக்கீர்?"
நான் எனது அலுவலகத்தில் கணினி முன்னால்தான் இருக்கிறே. வெறும் எட்டுமுழ வேட்டி மட்டும்தான். :))))

டிஸ்கி: என் வீட்டில் கணினி இருக்கும் எனது அறைதான் என் அலுவலகம். வாடகைக் காரெல்லாம் என் சொந்த கார். ஹி ஹி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ரவி said...

தமிழில் தந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்....( அய்யோ இன்னுமொரு காண்ட்ரவர்ஸி பதிவுக்கு வழி கொடுத்துவிட்டேனே !!!!)

லக்கிலுக் said...

டோண்டு சார்!

பிரகாஷ் யாருன்னு தெரிஞ்சிடுச்சி :-)

இன்னமும் யாஹூ Chattingல் வர்றாரா என்ன?

கத்துறது தவளை தான்னு கண்டுபுடிக்கிறதுக்கு அர்த்தசாஸ்திரம் எல்லாம் படிக்க வேண்டிய அவசியம் இல்ல....

Anonymous said...

அண்ணா!
தங்கள் சுடச்சுடப் பதிவையும் படித்துவிட்டு; அடுத்த புத்தகத்துக்குக் காத்திருக்கிறேன்.ஆண்டு தோறும் படிப்பேன். சிலகருத்துக்களில் மாற்றுக்கருத்துண்டு. எனினும் அவர் இதை நடத்தும் ஒழுங்கு எனக்குப் பிடித்தது.
யோகன் பாரிஸ்

ரவி said...

டோண்டு அவர்களே...நீங்களோ மற்ற யாருமோ, ஒருமுறையாவது அந்த போண்டா மாதவன் என்று சொல்லும் பின்னூட்டத்தை நீக்க சொல்லியதுண்டா ? நீங்கள் அதை ரசிக்கிறீர்கள் என்று உங்கள் வாயாலேயே தெரிந்துகொண்டேனே....பிறகுதானே அனுமதித்தேன்...இதை பிரகாஷ் / ஜாபர் பெரிய அளவில் சொல்வது சரியல்ல...எது விளையாட்டு எது சீரியஸ் என்று கூட தெரிந்துகொள்ளவில்லை என்றால் எப்படி ஐயா ?

ரவி said...

இந்த பதிவு பற்றி முகமது யூனுஸ் ( ஹாரி பாட்டர் ) என்ன சொல்கிறார் என்று தெரியவில்லையே ( இன்னும் ரெண்டு பின்னூட்டத்துக்கு வழி)

dondu(#11168674346665545885) said...

"நீங்கள் அதை ரசிக்கிறீர்கள் என்று உங்கள் வாயாலேயே தெரிந்துகொண்டேனே...."

கண்டிப்பாக ரசித்தேன், ரசிப்பேன் ரவி அவர்களே. பெங்களூரில் நமது சந்திப்பின்போது பலவற்றை verbatim ஆக கூறி ரசித்தவன் நான். மிதக்கும் வெளியின் பதிவிலும் ஜொள்ளுபாண்டி பதிவிலும் என்னையே கேலி செய்து கொண்டவன் நான்.

எல்லாவற்றையும் குழந்தைகளின் குறும்பாகத்தான் நான் பார்க்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"நீங்கள் அதை ரசிக்கிறீர்கள் என்று உங்கள் வாயாலேயே தெரிந்துகொண்டேனே...."

கண்டிப்பாக ரசித்தேன், ரசிப்பேன் ரவி அவர்களே. பெங்களூரில் நமது சந்திப்பின்போது பலவற்றை verbatim ஆக கூறி ரசித்தவன் நான். மிதக்கும் வெளியின் பதிவிலும் ஜொள்ளுபாண்டி பதிவிலும் என்னையே கேலி செய்து கொண்டவன் நான்.

எல்லாவற்றையும் குழந்தைகளின் குறும்பாகத்தான் நான் பார்க்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

bala said...

டோண்டு அய்யா,

குழந்தை லக்கியின் முழியே சரியில்லையே.எப்ப வேணா பாய்ந்து வந்து கடிச்சுடும் போலிருக்கே.பத்திரமா பாத்துக்கங்கய்யா.

பாலா

லக்கிலுக் said...

பீலா அய்யாவும் வந்துட்டாரா?

ஜமா களை கட்டிடிச்சி :-)))))

bala said...

//ஜமா களை கட்டிடிச்சி :-)))))//

டோண்டு அய்யா,


குழந்தை லக்கி கடிச்சி கடிச்சின்னு மழலையில் பேசுது பாருங்க..

குழலினிது, யாழினிது என்பர் லக்கியின்
மழலைச் சொல் கேளாதோர்..

பாலா

ஓகை said...

// யாருங்க அது சில்வர் டங்கு சீனிவாச சாஸ்திரி ?

எங்க வீட்ல வேலை செய்த மேஸ்திரி தெரியும்....அவர் கட்டிட வேலை செய்வதால் அவரை மேஸ்திரிங்கறோம்...இவர் யார் சாஸ்திரி ? அது என்ன அவர் படிச்சு வாங்கின பட்டமா ? //

dondu(#11168674346665545885) said...

ஓகை அவர்களே,

மேலே செந்தழல் ரவி அவர்கள் கேட்ட இதே கேள்விக்கு பதிலளித்திருக்கிறேன். பார்த்து தெளிவு பெறவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

GiNa said...

போட்டுத்தாக்குங்கோ! சீக்கிரம் செஞ்சுரிதான். ரொம்ப நாள் கழிச்சு கங்குலி ஆடுவதை பார்ப்பது போலிருக்கு!

dondu(#11168674346665545885) said...

நன்றி ஆதித்யன் அவர்களே. கங்குலியா? டோண்டுல்கர்னு சில பேர் சொல்றாளே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

நன்றி நாட்டாமை அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

Thanks a lot Dinakar. You are very kind.

Regards,
Dondu N.Raghavan

ரவி said...

இது அநியாயம் !!!!

dondu(#11168674346665545885) said...

" செந்தழல் ரவி Hat gesagt…
இது அநியாயம் !!!! "

எது அநியாயம்? (96 வது பின்னூட்டம்:)))))

அன்புடன்,
டோண்டு ராகவன்

லக்கிலுக் said...

//குழலினிது, யாழினிது என்பர் லக்கியின்
மழலைச் சொல் கேளாதோர்..//

நன்றி பாலா :-)))))

dondu(#11168674346665545885) said...

நண்பர் வரதன் அவர்கள் இட்ட பின்னூட்டம் எடிட் செய்யப்பட்டுள்ளது.

"முதலில் சீனிவாச சாஸ்திரி யாரென்றே தெரியவில்லை ஆனால் எடக்கு முடக்காக கேள்வி மட்டும் பிறக்கிறது. அந்தக் கேள்வியும் சொந்தக் கேள்வி அல்ல எந்தத் தற்குறியோ ஏதோ ஒரு சினிமாவில் கேட்டது. ஆக ஒரு கேள்வி கேட்கக் கூட சுய அறிவை பயன்படுத்தத் தெரியாத, முடியாத ஆசாமி கேட்கிறார் சீனிவாச சாஸ்திரி யார் என்று. சாஸ்திரி, மேஸ்திரி என்று எழுதி விட்டால் நாலு ஜென்மங்கள் சிரித்துக் கைதட்டி கும்மாளம் போடலாம். ஆனால் அந்தக் கேள்வியே அறிவீனம், பொது அறிவின்மை, வரலாறு, பொது அறிவு,பாரம்பரியம் போன்ற எந்த விஷயங்களிலும் அறிவோ அக்கறையோ கிடையாது என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது.

xxxxx xxxx and so on.

சாஸ்திரி என்பதும் பண்டிட் என்பதும் அறிஞர்கள், வேதங்களைக் கற்றவர்கள் என்பதைக் குறிக்கும். நீங்கள் ஐயங்கார்தான் ஆனால் நீங்கள் சாஸ்திரிகளோ கனபாடிகளோ வாத்தியாரோ ஆகி விட முடியாது. சீனிவாச சாஸ்திரியைப் போன்ற கற்றறிந்த அறிஞர்களைப் பற்றித் தெரியாவிட்டாலும் பரவாயில்லை அவ்வளவுதான் இவர்களுக்கு எல்லாம் அறிவு என்று விட்டு விட்டுப் போய் விடலாம் ஆனால் குசும்புத்தனமும் எடக்குத் தனமும் செய்தால் ஒட்ட நறுக்கத்தான் வேண்டியுள்ளது.

xxxx

இவர் சமீபத்தில் பல பொன்மொழிகள் உதிர்த்து உள்ளார். அதில் ஒன்று பா ஜ க காரர்களுக்கு இங்க்லீஷ் தெரியாது என்று. அவரைப் பார்த்து நான் கேட்கிறேன் "யாருக்கு ஆங்கிலம் தெரியாது, அமெரிக்கா போயிருக்கிறீர்களா நீங்கள்? அங்கு போய் பார்க்கவும், பெரிய பெரிய விஞ்ஞானிகளும், மருத்துவர்களும், புதிய தொழில் நுட்பங்களைக் கண்டு பிடித்து பில்லியனில் குளித்துக் கொண்டிருக்கும் சி இ ஓக்களும் பா ஜ காவிலும் ஆர் எஸ் எஸ்ஸிலும், பஜ்ரங்தள்ளிலும் கை கட்டி சேவகம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

xxxxxx

டோண்டு சார், எடிட் பண்ணுங்க ஆனா எடிட் பண்ணிய இடத்தை *** போட்டு ரொப்புங்க. அது போதும்".

dondu(#11168674346665545885) said...

100வது பின்னூட்டம் வரதன் அவர்களுடையது. எடிட் செய்து போட்டதால் என் பெயரில் வந்துள்ளது.

எடிட் செய்ய தேவையில்லாது நேரடியாக முதலிலேயே போட்டிருந்தால் நண்பர் லக்கிலுக் 100வது பின்னூட்டம் போட்டிருப்பார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ரவி said...

////பெரிய பெரிய விஞ்ஞானிகளும், மருத்துவர்களும், புதிய தொழில் நுட்பங்களைக் கண்டு பிடித்து பில்லியனில் குளித்துக் கொண்டிருக்கும் சி இ ஓக்களும் பா ஜ காவிலும் ஆர் எஸ் எஸ்ஸிலும், பஜ்ரங்தள்ளிலும் கை கட்டி சேவகம் செய்து கொண்டிருக்கிறார்கள். ////

மெய்யாலுமா ? கையை கட்டினா சேவகம் செய்யமுடியுமா ?

ஓகை said...

// யாருங்க அது சில்வர் டங்கு சீனிவாச சாஸ்திரி ?

எங்க வீட்ல வேலை செய்த மேஸ்திரி தெரியும்....அவர் கட்டிட வேலை செய்வதால் அவரை மேஸ்திரிங்கறோம்...இவர் யார் சாஸ்திரி ? அது என்ன அவர் படிச்சு வாங்கின பட்டமா ? //

இப்படி ஒரு கேள்வியை படிக்க நேர்ந்தது என் துர்ரதிருஷ்டம்! என்று எழுத நினைத்து எழுதியதுதான் அந்தப் பின்னூட்டம். ஆனால் அது அரை குறையாக வந்துவிட்டது.

அவரைப் பற்றி நான் நன்றாக அறிவேன்.

இன்றிருக்கும் பல திராவிடத் தலைவர்களும் அவரை மரியாதையுடனேயே பேசியிருக்கிறார்கள். இளசுகள் பாவம், தெரிந்து கொள்ள விரும்பாதவர்கள்...வார்த்தைகளை வீசும் வீரர்கள்.

ஒரு தகவல் சொல்கிறேன். என் சொந்த ஊர் கும்பகோணம். அவர் படித்த நேடிவ் உயர்நிலைப் பள்ளியிலும் அதைச் சார்ந்த நேடிவ் தொடக்கப்பள்ளியிலும் படித்தவன் நான். சமீபத்தில் 1962ல் ஒரு விஜய தசமி அன்று அரி ஓம் சிவாய நம என்று சொல்லி பள்ளியில் சேர்ந்த அந்த நிகழ்வு இன்னும் ஒரு புகை படிந்த ஓவியம் போல் என் நினைவுகளில் நிற்கிறது.

dondu(#11168674346665545885) said...

விளக்கத்துக்கு நன்றி ஓகை அவர்களே. ஆங்கில உச்சரிப்புக்கு அவர் ஒரு அத்தாரிடி. சர்ச்சில் அவர்களையே அவர் ஒரு முறை திருத்தியவர். அவர் வகுப்பில் படித்த மாணாக்கர்கள் (என் தாய்வழி பாட்டானார் உட்பட) எல்லோருமே கொடுத்து வைத்தவர்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

வடிவேலு என்றதும் ஞாபகத்துக்கு வருகிறது. வைகைப் புயல் வடிவேலுவைப் பற்றி நான் எழுதிய இப்பதிவை இங்கு நினைவுபடுத்துகிறேன், ஜாஃபர் அலி கான் அவர்களே.

மற்றப்படி செந்தழல் ரவி மற்றும் லக்கிலுக் விஷயத்தில் நான் ஏற்கனவே கூறியதை மறுபடியும் உறுதிப்படுத்துகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

டோண்டு அவர்களே,
தயவுசெய்து இடுகைக்கு தொடர்பில்லாத பின்னூட்டங்களை இனியாவது வெளியிடாமல் நிறுத்துங்கள். முடிந்தால் இதையும்........

dondu(#11168674346665545885) said...

அத்துவானிஜி ஆங்கிலத்தில் பேசினா என்ன? துக்ளக்கின் சராசரி வாசகர்கள படித்தவர்களே. மேலும் அத்வானிஜி தெளிவான, எளிய ஆங்கிலத்தில்தான் பேசினார்.

எனக்கே புரிந்து விட்டது, அப்புறம் என்ன? :)))

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"டோண்டு அவர்களே,
தயவுசெய்து இடுகைக்கு தொடர்பில்லாத பின்னூட்டங்களை இனியாவது வெளியிடாமல் நிறுத்துங்கள். முடிந்தால் இதையும்........"

சாதாரணமாக பதிவுக்கு சம்பந்தப்பட்ட, கூறப்பட்ட பின்னூட்டங்களுக்கு எதிர்வினை பின்னூட்டாங்கள் ஆகியவற்றைத்தான் அனுமதித்துள்ளேன். சில சற்று திசைதிரும்பியிருக்கலாம். சிலவற்றை நான் எடிட் செய்துள்ளேன் அல்லது ஒரேயடியாக நிராகரித்துமுள்ளேன்.

இங்கு ஒரு சின்ன டைவர்ஷன். முகில் அவர்கள் கூறியது எனக்கு ஒரு ஜோக்கை நினைவுபடுத்தி விட்டது.

All generalizations are false, including this generalization.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது