இது ஒரு மீள்பதிவு, சற்று கூடுதல் விஷயங்களுடன்.
ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் நான் கூறும் ஆண்டுகள் சிலருக்கு வியப்பைத் தரலாம். உதார் விடுகிறேன் என்ற ரேஞ்சுக்கு ஒருவர் போய் விட்டார். ஆனால் அவருக்காக மட்டுமல்ல இந்தப் பதிவு. (அவருக்கு மட்டும் காதோடு ஒரு வார்த்தை. நான் எப்படியுமே பழைய பதிவுகளை இற்றைப்படுத்துவதாகத்தான் இருந்தேன். நீங்கள் வெறும் ட்ரிக்கர் மட்டுமே. ட்ரிக்கரை தமிழாக்கம் செய்யலாம் என்று பார்த்தால், அதற்கு இரண்டு வார்த்தைகள்தான் எனக்குத் தெரிந்து தமிழில் உள்ளன, அதாவது, 'குதிரை' மற்றும் 'சனியன்'. ஆகவே ஏன் வம்பு? ஆங்கிலமே உத்தமம்). இப்போது பதிவுக்கு செல்வோம்.
எனக்கு நல்ல ஞாபக சக்தி உண்டு. இதில் வேடிக்கை என்னவென்றால் இந்தச் சக்தி எதிர்ப்பாராத நேரங்களில் வந்து என்னையே வியப்பிலாழ்த்தி விடுகிறது.
வருடம் 1972. பம்பாயில் விநாயக சதுர்த்தி தினம். பல பொது இடங்களில் இலவச சினிமா காட்சிகள் காண்பிக்கப்படும். மாதுங்காவில் ஒரு இடத்தில் "சபாஷ் மீனா" படம் போட்டார்கள்.
இப்படத்தை நான் முதலில் 1958-ல் சென்னையில் ஒரு முறை பார்த்ததோடு சரி. கடந்த 14 வருடங்களில், அதாவது 1972 வரை அப்படத்தைப் பற்றி நினைத்துக்கூடப் பார்த்ததில்லை.
ஆனால் என்ன ஆச்சரியம்! காட்சிகள் ஒவ்வொன்றாகத் திரைக்கு வரவர சில நொடிகள் முன்னால் அவற்றுக்குரிய வசனங்கள் தாமாகவே எனக்கு நினைவுக்கு வந்தன.
சிவாஜி வாயைத் திறப்பதற்கு முன்னமேயே அவர் வசனங்களை நான் கூற ஆரம்பித்தேன். என் நண்பர்களுக்கு ஒரே ஆச்சரியம். எனக்கும்தான்.
இப்போது என் நண்பன் ஒருவனின் ஞாபக சக்தியைப் பற்றிக் கூற வேண்டும்.
வருடம் 2002. ஒரு பேட்டன்ட் வக்கீலின் பெயரை டாட்டா மஞ்சள் பக்கங்களில் பார்த்தேன். அவர் பெயர் ஈ. ஆர். நாராயணன். முகவரி திருவல்லிக்கேணியில். என்னுடன் இந்து உயர் நிலைப் பள்ளியில் படித்தவனாக இருப்பானோ என்ற ஒரு சம்சயம் (மண்டையில் பல்ப்!).
அவனுக்கு டெலிஃபோன் செய்தேன். அவன் ஹல்லோ என்று சொல்லும்போதே அவன் குரலை அடையாளம் கண்டு கொண்டேன். இருந்தாலும் சற்று முன் ஜாக்கிரதையுடன் பேச ஆரம்பித்தேன்.
நான்: "ஹல்லோ, நாராயணன்தானே?"
அவன்:"ஆம் நீங்கள் யார்?"
நான்: "நீங்கள் 1962-ல் எஸ்.எஸ்.எல்.ஸி. ஹிந்து உயர்நிலைப் பள்ளியிலிருந்து, பொறியியல் வகுப்பில் பாஸ் செய்தீர்களா? வகுப்பு ஆசிரியர் என்.டி.சுப்பிரமண்யம் அவர்கள்?"
அவன்:"ஆமாம்".
நான்: "அப்படியென்றால் நான் உங்கள் வகுப்புத் தோழன், என் பெயர் ராகவன்" அவன்: (சிறிதும் தயக்கமின்றி): இந்து ரிப்போர்ட்டரின் பிள்ளைதானே, 15, வெங்கடாசல செட்டித் தெரு?"
100% சரி. இதில் என்ன விசேஷம் என்றால் நான் முதலிலேயே தயாராக இருந்து கொண்டுதான் அவனுடன் பேச்சை ஆரம்பித்தேன். அவனோ ஒரு தயார் நிலையிலும் இல்லாத போதே 40 வருடங்களாக என்னைப் பற்றி நினைக்காமலேயே இருந்தாலும் ஒரு நொடியில் என்னை அடையாளம் கண்டுக் கொண்டான்.
அதுவே இன்னொரு க்ளாஸ்மேட் ஸ்ரீராஜ் என்று பெயர். திருவல்லிக்கேணி தேரடி தெருவில் கடந்த 60 ஆண்டுகளாக வாசம். அவனுக்கு சுத்தமாக என் ஞாபகமே இல்லை. நாராயணனும் நானும் எவ்வளவோ முயன்றும் அவனுக்கு ஞாபகசக்தியை வரவழைக்க முடியவில்லை. நாராயணனை அவனுக்குத் தெரியும், ஏனெனில் அவர்கள் தினமும் சந்திக்கின்றனர்.
சுஜாதா அவர்கள் தான் 4 வயது குழந்தையாக இருந்தபோது மாட்டு வண்டி கட்டிக் கொண்டு சினிமாவுக்குத் தன்னை அழைத்துச் சென்றது நன்றாக ஞாபகம் இருக்கிரது ஆனால் படையப்பாவில் வில்லி கேரக்டரில் வரும் நடிகையின் உண்மைப் பெயர் மறந்து விட்டது என எழுதியிருந்தார்.
மனித மூளை ஒரு அற்புதமே. ஆயிரம் கணினிகளும் இதற்கு ஈடாகுமோ?
அன்புடன்,
டோண்டு ராகவன்
முத்துலிங்கம்
-
கவிஞர், திரைப்பாடலாசிரியர், இதழாளர். திரைப்படங்களில் பாடலாசிரியராகப்
பணியாற்றினார். இதழ்களில் துணை ஆசிரியராகப் பணிபுரிந்தார். அனைத்திந்திய அண்ணா
திராவிட மு...
1 day ago
14 comments:
சில நாட்களுக்கு முன்பு "Lateral thinking" என்ற புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன். அதில் சொல்லப்பட்டிருந்தது என்னவென்றால் மூளைக்கு வரும் தகவல்கள் அடிப்படையில் ஒரு விதமான pattern-ஆக மூளையில் பதிந்துக் கொள்கிறது. சில நாள் கழித்து அது சம்பந்தமான மற்றும் சில தகவல்கள் உள்ளே வரும்போது அந்த pattern-ஐ self maximize பண்ணிக் கொண்டே செல்கிறது. எனவே அவன் ஒரு விசயத்துக்கு முடிவு சொல்ல வேண்டுமானால் அவனறிந்த மற்றும் அவன் மூளைக்குள் இருக்கும் பேட்டர்னின் அடிப்படையில் தான் அவன் முடிவுக்கு வரவேண்டும். இந்த பேட்டர்ன்களையும் தாண்டி think பண்ணுகிறவர்கள் மிகச் சொற்பமே.
இந்த மூளை பேட்டர்ன்களில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் ஒவ்வொன்றுக்கு திறவுக் கோல்(கீ) போல சில வார்த்தைகள், நிகழ்ச்சிகள் திகழும். அந்த வார்த்தை அல்லது நிகழ்ச்சிகள் தகவல்களாக அவன் மூளைக்கு சென்றடையும் போது ஆச்சரியம் படும் வகையில் அதைச் சார்ந்த நிகழ்வுகளை மூளையால் வெளிக்கொணர முடியும். இது உண்மையில் நம் மூளையின் ஒப்பிட முடியாத அற்புத சக்தி.
என்னுடையப் பதிவுகளில் ஆரம்பத்திலிருந்து ஒரு இழை போல வந்து கொண்டிருக்கும் ஹைப்பெர்லிங்க்தான் இது என்றும் கூறலாம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஆம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.
அது இருக்கட்டும். ஞாபகசக்தியை பற்றிய உங்கள் ஞாபகங்கள்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
நாட்டாமை அவர்களே,
எதில் நமக்கு ஆர்வம் இருக்கிறதோ, அவற்றை நாம் மறப்பதில்லை. அதுதான் உண்மை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
தினகர் அவர்களே,
தூண்டுதல் என்பது ட்ரிக்கரிலிருந்து சற்றே மாறுபட்டுள்ளது. உதாரணத்துக்கு என்னை ஒரு குறிப்பிட்ட விஷயத்துக்காகப் பதிவு போடச் சொல்லும்போது அது தூண்டுதலாகும். அதன்றி தேமேனென்று யதார்த்தமாக் ஒரு விஷயத்தைக் கூறப்போக அது என்னைப் பல பதிவுகள் போட வைத்தால் அது ட்ரிக்கர். (சம்பந்தப்பட்ட ட்ரிக்கரே நொந்துப் போகும் அளவுக்கு!).
அன்புடன்,
டோண்டு ராகவன்
அப்போது, "முதன்முதலில்". இப்போது, யதார்த்தமாக....பல பதிவுகள்...ஹாஹாஹா
"அப்போது, "முதன்முதலில்". இப்போது, யதார்த்தமாக....பல பதிவுகள்...ஹாஹாஹா"
இனிமேல் என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளுங்கள் எனக்கு கவலையில்லை.
என்னுடைய பதிவுகள் இற்றைப்படுவதற்கு நீங்கள் ஒரு காரணம் மட்டுமே. அதுவும் இனிமேல் அவசியமில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
"இன்று மட்டும் மூன்று பதிவுகள் போட வைத்தது ட்ரிக்கரா தூண்டுதலா?"
இரண்டுமே. தனி மெயிலில் அது பற்றி பிறகு எழுதுகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நீங்கள்தான் ஞாபகசக்தி மன்னர் என்றால் உங்கள் நண்பர் நாராயணன்? நாராயணா!
கிருஷ்ணன்
நான் யார்?
நாராயணனும் என் க்ளாஸ்மேட், ஸ்ரீராஜும்தான். அன்ன வித்தியாசம் பாருங்கள்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
என்ன தமிழ்நாடு வினோத் து்வா ம்யூஸ், இது என்ன ரிவர்ஸ் ஆக்ஷன் ப்ளே? பக்கம் பக்கமாக எழுதப்பட்டதை ஒரு பாராவில் சுருக்கிச் சொல்லும் நீங்கள், இப்போது ஒரு சிறு கேள்வியைக் கேட்டு, ஞானியர் எல்லோரும் ஆயிரக்கண்க்கான ஆண்டுகளாக மன்றாடும் விஷயத்துக்கு அடிபோடுகிறீர்களே. தன்னை உணர்ந்தான் எல்லாவற்றையும் உணர்ந்தான் அல்லவா? (உணர்ந்தான் என்பது இங்கு வினையாலணையும் பெயராகும்).
அன்புடன்,
டோண்டு ராகவன்
நான் சும்மா கிண்டலுக்குத்தான் கேட்டேன். ஆனாலும், இது மிகவும் அதிர்ச்சி அளிக்கும் மிக மிகச் சிறிய கேள்வி என்பதில் ஸந்தேகமேயில்லை.
இந்தக் கேள்வியை நாம் அறிந்தும் அறியாமலும் வெவ்வேறு வகையில் கேட்டுக்கொண்டே இருக்கிறோம் என்றுதான் தோன்றுகின்றது. மிக அதிகமான துக்கம், வியப்பு, ஸந்தோஷம் என்பதை உணரும்போதும் ஒவ்வொருவகையில் இந்தக் கேள்வியை நமக்கு நாமே கேட்டுக்கொண்டிருக்கிறோம்.
கேள்வி இருக்கும் இடத்தில், கேட்கப்படும் பொருள் பற்றிய ஓரளவு விழிப்பு இருக்கிறது என்று பொருள். விழிப்பில் அறிந்ததை எப்போது மறந்தோம் என்பதுதான் தெரியவில்லை.
அது ஒரு புறமிருக்கட்டும். வேறொன்று.
எனக்கென்னவோ நாம் நமது வாழ்க்கையை இரண்டு வகையில் வாழ்வதுபோலத்தான் வாழ்கிறோம் என்று தோன்றுகின்றது.
1. ஞாபகத்தோடு, அத்தனையும் ஞாபகத்தில் உள்ளது போன்ற ஒருவகை தன்னுணர்வோடு இருப்பது
(மிக அபூர்வமாக நடப்பது. பெரும்பாலும் இயற்கையின் அரவணைப்பில், ப்ரம்மாண்டத்தின் முன்னிலையில் தோன்றுவது)
2. மற்ற எல்லா விஷயங்களையும் மறக்கும் வகையில் வாழ்வது
(காமம், ஸினிமா, முதலான அத்தனை புலனின்பங்களும், அந்த ஒன்றைத் தவிர்த்து வேறு ஏதையும் ஞாபகம் வராதவகையில் செய்கின்றன. எனக்கு வலைப்பதிவு படிக்கும்போதும், எழுதும்போதும்கூட ஏற்படுகின்றது.)
நான் இரண்டாவதில் அதிக அனுபவம் உடையவன்.
நான் யார் என்ற கேள்வியை உபநிஷத்துகள் பக்கம் பக்கமாக விவாதிக்கின்றன.
சமீபத்தில் 1964-ல் வெளி வந்த நம்ப வாத்தியார் படம் "வேட்டைக்காரனில் கூட "உன்னையறிந்தால், உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம்.." என்ற பாடல் வந்ததே.
I think, therefore I am என்கிறார் Descartes.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment