உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் ஒரு பகுதி கீழே தரப்பட்டுள்ளது. இதை எனக்கு அனுப்பிய நண்பர் ஜயகமல் அவர்களுக்கு நன்றி.
Let State show compelling logic
OPINION
Supreme Court / New Delhi April 01, 2007
Classifications for special preference must not be unfair for those left out.
In the writ petitions, the policy of 27 per cent reservation for the Other Backward Classes (OBCs) contained in the Central Educational Institutions (Reservation in Admission) Act, 2006, is the subject matter of challenge.
The primary ground of challenge is that the Union of India has failed in performing the constitutional and legal duties towards the citizenry. Consequently, the Act shall ... ultimately have the result of dividing the country on the basis of caste. The constitutional guarantee of equality and equal opportunity shall be seriously prejudiced. It has been contended that the time has come to replace the "vote bank" scenario with "talent bank".
The statute in question, it is contended, has lost sight of the social catastrophe it is likely to unleash. Not only would the products be intellectual pygmies as compared to normal intellectually sound students passing out, it has been highlighted that on the basis of unfounded and unsupportable data about the number of OBCs in the country the Act has been enacted.
It has been pointed out that this Court in Indra Sawhney v. Union of India and Ors. (1992 Supp. (3) SCC 217) had recognised the concept of "creamy layer" amongst the advanced OBCs to be kept out of preferential treatment. The population data of 52% projected by the Mandal Commission was not actually given the seal of acceptance. Though there is a specific provision in Section 11 of the Backward Classes Act for a periodic revision of the lists, the same has not been done, and on the contrary additions are being made.
The rationale of 27% has been arrived at on the basis of the myth that the OBCs are 52% (of the population) in the country and even the ratio of 27% reservation for the students belonging to other backward classes in the educational institutions is to be funded and controlled by the Central Government.
It is highlighted that after the 1931 census there has never been any caste-wise enumeration or tabulation, which in essence corrodes the credibility of the claim of 52% population of other backward classes. The concept of creamy layer cannot prima- facie be considered to be irrelevant. It has also to be noted that nowhere else in the world do castes, classes or communities queue up for the sake of gaining backward status. Nowhere else in the world is there competition to assert backwardness and then to claim we are more backward than you.
We reiterate that the ceiling of 50%, the concept of creamy layer and the compelling reasons, namely, backwardness, inadequacy of representation and overall administrative efficiency are all constitutional requirements without which the structure of equality of opportunity in Article 16 would collapse.
However, in this case, as stated, the main issue concerns the "extent of reservation". In this regard the State concerned will have to show in each case the existence of the compelling reasons, namely, backwardness, inadequacy of representation and overall administrative efficiency before making provision for reservation.
Differentiation or classifications for special preference must not be unduly unfair for the persons left out of the favoured groups.It, therefore, needs no reiteration that the creamy layer rule is a necessary bargain between the competing ends of caste-based reservations and the principle of secularism. It is a part of constitutional scheme. Therefore these cases have to be examined in detail as to whether the stand of the Union of India that the creamy layer rule is applicable to only Article 16(4) and not Article 15(5) is based on any sound foundations.
In the background of what has been explained above, it would be desirable to keep in hold the operation of the Act so far as it relates to Section 6 thereof for the OBCs category only. We make it clear that we are not staying the operation of the Statute, particularly, Section 6 so far as the Scheduled Castes and Scheduled Tribes candidates are concerned.
(Excerpts from the judgement delivered on 29/03/2007 on OBC reservation)
http://www.business-standard.com/opinionanalysis/storypage.php?tab=r&autono=279502&subLeft=2&leftnm=4
என் மனதில் சில கேள்விகள் எழுகின்றன.
1. 1931-ஆம் ஆண்டு தகவல்கள் இப்போதைய சரியான நிலையை பிரதிபலிக்கின்றனவா? ஆம் என்றால் எவ்வாறு?
2. கிரீமி லேயரை விலக்கி வைக்க அரசு சிறிதும் விரும்பாதது ஏன்?
3. நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்க இதை வைத்து பந்துகள் அறிவிப்பது எவ்வகையில் யோக்கியமான செயல்?
எழுபதுகளின் ஆரம்பத்தில் மண்டல் என்னும் அரசியல்வாதி தயாரித்த அறிக்கையே அப்போதே 40 ஆண்டு காலப் பழைய நிலையை வைத்துத்தானே. அதனால்தானே அப்போதைய பிரதம மந்திரி இந்திரா அதை கிடப்பில் போட்டு வைத்தார்? அதன் பிறகு வி.பி.சிங் முற்றிலும் தன து சுயநல அரசியல் நிலைப்பாடு காரணமாக அதை மீண்டும் எடுத்து தூசு தட்டி அமுலுக்கு கொண்டுவர முயன்றார். இந்த இடத்தில் அவர அதனால் எல்லாம் தனது நிலையை காப்பாற்றிக் கொல்ள முடியாது போயிற்று என்பதே ஆறுதலளிக்கும் ஒரே விளைவு.
கிரீமி லேயரை விலக்க அரசியல்வாதிகள் விரும்பாததற்கு காரணமே அவர்கள் சுயநலம் என்றுதான் கூறுவேன். ராமதாசு அவர்களின் பேரக்குழந்தைகள், முதல்வரின் கொள்ளு பேரன்கள் ஆகியோரும் இட ஒதுக்கீடு கேட்பது என்ன நியாயம். இப்போது கூட குடி முழுகவில்லை. தத்தம் குழந்தைகளை கிரீமி லேயர் அடிப்படையில் விலக்கி கொள்கிறோம் என்று சம்பந்தப்பட்ட தலைவர்கள் அறிவிக்க தயாரா? அதை செய்துவிட்டு மற்றவர்களுக்காகப் போராடுவார்களா?
அன்புடன்,
டோண்டு ராகவன் (விஜயவாடாவிலிருந்து)
அன்றாடத்தில் இருந்து பறந்தெழுதல்…
-
நாம் இந்த ஒரு தலைமுறைக்காலமாகத்தான் அடிப்படைப் பொருளியல் விடுதலையை
அடைந்துள்ளோம். நம் முந்தைய தலைமுறைக்கு அன்றாடமே வாழ்க்கை. உழைப்பே அதன்
நடைமுறை. நிரந்தரம...
3 hours ago
26 comments:
விஜயவாடாவுக்கு எப்போது போனீர்கள்?எப்போது வருவீர்கள்?சுற்றுப்பயணம் நல்லபடியாக அமைய வாழ்த்துக்கள்
இதனால வோட்டு நிறையா கிடைக்குமா? கிடைக்கும்ன்னு சொல்லுங்க. இந்த திட்டம் உடனடி அமல்.
- அனைத்து கட்சி கூட்டம் அறிவிப்பு
கையொப்பம்
ஜேயலலிதா, கருனாநிதி, இராமதாசு, வை.கோ, விஜயகாந்த், விரமணி.
வாருங்கள் புதியவன் அவர்களே. விஜயவாடாவுக்கு போனது சில பெருமாள் கோவில்கள் செல்லவே. அது பற்றி நாளை பதிவு போடுகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பிளாக்கர் கணக்கு வைத்திருக்கும் புதியவன்,
இப்படி ஒரு பெயரில் பிளாக்கர் கணக்கு இருப்பது எனக்கு தெரியாது.என் பின்னூட்ட பெயரை மாற்றிக் கொள்கிறேன்.
பிளாக்கர் கணக்கு இல்லாத
'EX புதியவன்'
"கிரீமி லேயர் அடிப்படையில் விலக்கி கொள்கிறோம் என்று சம்பந்தப்பட்ட தலைவர்கள் அறிவிக்க தயாரா? அதை செய்துவிட்டு மற்றவர்களுக்காகப் போராடுவார்களா?"
பதிவிற்கு நன்றி டோண்டு ஐய்யா. கிரீமி லேயரை விலக்கினால் கூட ரிசர்வேசன் ஒரு நிரந்தர தீர்வு கிடையாது.
ஏற்றத்தாவுகளை குறைக்க நினைத்தால் ஒரு நல்ல வழி, எல்லா குழந்தைகளுக்கும் கல்வி தரமான முறையில் அளிக்க வேண்டும். தரமான கல்வி அளிக்க கூப்பன் முறை மிகவும் சிறந்தது.
அரசு பள்ளிகள் கட்டி பணத்தை வீனடிப்பத்ற்கு பதிலாக இதை பெற்றோர், மாணவர் கைகளில் கொடுத்துவிட்டால் (வொவுச்சர் அல்லது கூப்பன்) அவர் அவர் தேர்ந்தெடுத்து நல்ல பள்ளியில் செரலாம், அது தனியார் பள்ளியாக கூட இருக்கலாம்.
அதனால்தான் அரசை 'Fund Students not Schools' என்று வலியுருத்த வேண்டும். பிறகு எல்லொருக்கும் நல்ல கல்வி கிடைக்கும், கல்வியின் பயன் கிடைக்கும். இன்றய கல்வியே நாளையின் எதிர்காலம்.
1.வால் ஸ்டிரிட் ஜெர்னலில் இதை பற்றி
http://indiauncut.blogspot.com/2007/01/why-india-needs-school-vouchers.html
tiny-url : http://tinyurl.com/249lgx
2.பங்களாதேஷ்'ல கூட இந்த திட்டம் இருக்காம். அதான் இந்தியா அவங்களோட தோத்து போச்சோ.....
http://www.tehelka.com/story_main23.asp?filename=Cr121606A_matter.asp
tiny-url: http://tinyurl.com/2ef7a4
பிளாக்கர் புதியவன் அவர்களே,
இன்னொரு புதியவன் அனானிதான். அதர் ஆப்ஷனில் வரவில்லை. நான் ஏற்கனவே கூறியபடி அனானியை கூட சேர்த்து கொள்ளலாம். ஆனால் அதர் ஆப்ஷன் கூடாது. இப்போதும் அதைத்தான் கூறுகிறேன்.
ஆனால் அதற்கு நீங்கள் செய்ய வேண்டிய இன்னும் இரு விஷயங்கள் உள்ளன. உங்கள் டிஸ்ப்ளே பெயருடன் உங்கள் பிளாக்கர் எண்ணை அடைப்பு குறிகளுக்குள் சேர்க்கவும். ஏதாவது போட்டோ ப்ரொஃபைலில் போடவும்.
மேலும், உங்கள் பதிவுகள் என்று ஏதாவது போடவும். இப்போது இருக்கும் நிலையில் அதர் ஆப்ஷன் போட்டு உங்கள் பெயரில் பின்னூட்டமிட்டாலும் அதை கண்டுபிடிப்பது கடினமே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நல்ல யோசனைகள் ஜே அவர்களே. ஆனால் அதை செய்ய அரசியல் மனத் திண்ணம் உண்டா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஒரு பக்கத்து வாதம் மட்டுமே சொல்லப்பட்டிருக்கிறது.திறமை என்பது வெறும் ஏமாற்று வார்த்தையாகவேதான் இருக்கிறது.இனியும் ஏமாற்றப் பயன் படுத்தத்தான் பார்க்கிறார்கள்.
the products will be intelligent pigmies என்ற வார்த்தைகள் ஆணவத்தின் எல்லையைக் குறிக்கிறது.
இதே AIIMS நிறுவனம் அங்கு படித்த மாணவர்கட்கு 100% மேல் படிப்புக்கு உத்தரவாதம் தந்து அவர்களைவிட அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் வெளியிலிருந்து படித்து வந்தவர்கட்கு இடந்தராது ஏமாற்றி பல வருடங்கள் செய்த சூழ்ச்சி ஒழிக்கப்பட்டது.
முதல் முதல் இட ஒதுக்கீடு கொண்டு வந்த போதே நன்றாக விவாதிக்கப்பட்டு socially and educationally backward ஒப்புக்கொள்ளப் பட்டு economically என்பது ஏற்றுக் கொள்ளப்படாமல் ஒதுக்கப்பட்டது தக்க காரணங்களால்.அதே மாவை மீண்டும் மீண்டும் அரசியல் சட்டத்தில் இல்லாததை அரைக்கிறார்கள்.இன்றைய ஏழை நாளை பணக்காரண்,இன்றைய பண்க்காரன் நாளையே ஏழையாகலாம்.
சாதி அப்படியா?பணக்காரன் பிறப்பால்,படிப்பால் பின்தங்கியில்லையா?பழைய மிராசுதாரர் வீட்டுப் பிள்ளைகள் எத்தனை பேர் பட்ட தாரிகள்,பொறியியல் மருத்துவப் பட்டதாரிகள்?
சட்டம் இயற்றுவதற்குத்தான் மக்கள் மன்றங்கள்.சட்டத்தைச் சரி பார்த்துச் சொல்லத்தான் நீதி மன்றங்கள்.சட்டத்தின் ஒரே ஒரு வார்த்தயைக் கூட மாற்றவோ,சேர்க்கவோ,நீக்கவோ உச்ச நீதி மன்றத்திற்குக்கூட உரிமை கிடையாது.
பல ஆண்டுகளாக,முதலாவது சட்ட திருத்த நாட்களிலிருந்து மறுக்கப்பட்ட சட்ட உரிமைதான் இடஒதுக்கீடு.இது யாரோ யாருக்கோப் போடும் பிச்சையல்ல!அதற்கு எவ்வளவோ தடைகள்,அதில் ஒன்றுதான் கமண்டலங்கள் மண்டலைவைத்து வி.பி.சிங் எனது ஆட்சியே போனாலும் மண்டலை நிறைவேற்றுவேன் என்று நிலைநாட்டி ஆட்சியிலிருந்து கவிழ்க்கப்பட்டார்.மண்டலை அரசியல் வாதி என்று சொல்வது மண்டூகம்!அவருடைய ஆழ்ந்த ஆராய்ச்சி ஒவ்வொரு இடத்திற்கும் நேரெ சென்று மக்களைப் பார்த்து பேசி ஆராய்ச்சி செய்து எழுதியுள்ள அந்த் மண்டல் ரிப்போர்ட்டைப் படித்துப் பார்த்தால் தெரியும் அவர் யார் என்று.
50 விழுக்காடுதான் என்று சொல்வதற்கும்,கிரிமி லேயர் என்று சொல்வதற்கும் உச்சநீதி மன்றத்திற்கு என்ன உரிமை உள்ளது?
எதிர் தரப்பு வாதங்களையும் படித்தால்தான் தெரியும் உண்மை எங்கே என்று.
ராம்ஜெத் மலாணி சட்ட நிபுணர்,சட்ட அமைச்சராக இருந்தவர்,அவ்ருடைய வாதங்களைப் பாருங்கள்,அவரிடம் உச்ச நீதிமன்ற் நீதிபதியின் கேள்விகள் அவ்ரின் பதில்களைப் பாருங்கள்.
மக்கள் மன்றத்திலே இருக்கும் போதே ரிப்போர்ட்டை அனுப்பச் சொல்லி பின் வாங்கிய நீதிபதி!அப்போதே மக்கள் மன்றம் அவரை அடக்கியிருக்க வேண்டும்.
சட்டத்தை வளைத்து தீர்ப்புகூட அல்ல வெறும் கால்ங்கடத்தும் சேட்டை செய்வது வழ்க்கமாகி விட்டது.சரியான
பதில் கிடைக்கத்தான் போகிறது.
தமிழன் அய்யா,
மஞ்ச துண்டு,மரம் வெட்டி,லலு யாதவ்,மற்றும் மானமிகு சூரமணி அய்யா எப்பய்யா ஏழை ஆவாங்க?கொஞ்சம் விளக்கமா சொல்லுங்கய்யா.எனக்கு தெரிந்தவரை அவங்க 5000 ஆண்டுகளா ஒடுக்கப்பட்ட ஆதிக்க சக்திகள் தானே அய்யா.
பாலா
தமிழன் ஐயா,
//// ஒரு பக்கத்து வாதம் மட்டுமே சொல்லப்பட்டிருக்கிறது.திறமை என்பது வெறும் ஏமாற்று வார்த்தையாகவேதான் இருக்கிறது.இனியும் ஏமாற்றப் பயன் படுத்தத்தான் பார்க்கிறார்கள். ////
இது மாதிரி சொல்வதும் ஒரு ஏமாற்றுவேலையாகத்தான் எதிரணிக்கு தோன்றுகிறது. இவ்வாறு வார்த்தையாடுவதால் ஒரு பயனுமில்லை.
/// the products will be intelligent pigmies என்ற வார்த்தைகள் ஆணவத்தின் எல்லையைக் குறிக்கிறது. ////
எவ்வாறு? தகுதியை சமரசம் செய்துகொண்டு முன்னேறுவோர் அறிவில் ஒரு குறையுள்ளவர்களே என்பதில் என்ன ஆணவம் என்று நிச்சயமாக புரியவில்லை? தயை செய்து விளக்குங்கள். இது தகுதிக்கு ஒவ்வாத ஒரு இடஒதுக்கீடு என்பதாலேயே, சில முக்கியமான வேலைகளில் (ஆகாயவிமானி, சிப்பாய் முதலிய...) இட ஒதுக்கீடு கூடாது என்று அரசே சொல்கிறது... இட ஒதுக்கீடு அறிவுடைமைக்கு எதிர் என்பது அடிப்படையில்லையா? இதில் உள்நோக்கம் எவ்வாறு சொல்கிறீர்கள். விளக்கம் தேவை.
//// இதே AIIMS நிறுவனம் அங்கு படித்த மாணவர்கட்கு 100% மேல் படிப்புக்கு உத்தரவாதம் தந்து அவர்களைவிட அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் வெளியிலிருந்து படித்து வந்தவர்கட்கு இடந்தராது ஏமாற்றி பல வருடங்கள் செய்த சூழ்ச்சி ஒழிக்கப்பட்டது. ////
விளங்கவில்லை.. என்னமோ சொல்ல முயன்றிருக்கிறீர்கள்...
/// முதல் முதல் இட ஒதுக்கீடு கொண்டு வந்த போதே நன்றாக விவாதிக்கப்பட்டு socially and educationally backward ஒப்புக்கொள்ளப் பட்டு economically என்பது ஏற்றுக் கொள்ளப்படாமல் ஒதுக்கப்பட்டது தக்க காரணங்களால். /////
என்னைப்போன்ற சமீபத்திய பொதுஅறிவு தேடர்களுக்கு என்ன காரணங்கள் என்று சொல்ல முடியுமா? மேலும், அவ்வாறான காரணங்கள் எப்போதுமே நிலையானவை என்பதும் நீங்கள் சொல்வதா?
/// அதே மாவை மீண்டும் மீண்டும் அரசியல் சட்டத்தில் இல்லாததை அரைக்கிறார்கள். ////
பொருளாதார இட ஒதுக்கீட்டின் புறம்பான காரணங்கள் அரசியலமைப்பில் எவை என்று நான் அறியேன் (மேலே சொன்னபடி..) ஆனால், அச்சட்டங்கள் ஐம்பது ஆண்டுகள் கழிந்து மீண்டும் ஒரு பரிசோதனைக்கு ஏற்கப்படக்கூடாது என்று நீங்கள் சொல்ல முயலுகிறீர்களா? அரைத்த மாவை ஐம்பது ஆண்டுகள் கழித்து மீண்டும் சோதித்து பார்க்கிறார்கள் என்று கொள்ளலாமே?
/// இன்றைய ஏழை நாளை பணக்காரண்,இன்றைய பண்க்காரன் நாளையே ஏழையாகலாம்.
சாதி அப்படியா? ////
இந்த ஒரு காரணமே பொருளாதார இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக இருப்பதாகவே நான் நினைக்கிறேன். பொருளாதார அடிப்படை ஒரு தானியங்கி கட்டுப்பாட்டில் சீரமைத்துக்கொள்ளும். ஒருவன் பணக்காரனால் தானாக அவனுக்கு அரசாங்கத்தின் ஊன்றுகோல் தேவையில்லை என்று அகற்றப்படும். இந்த ஒரு நல்ல காரணத்தை நீங்கள் எப்படி இட ஒதுக்கீட்டுக்கு விரோதமாக திரிக்கிறீர்கள். விளங்கவில்லை. ...
//// பணக்காரன் பிறப்பால்,படிப்பால் பின்தங்கியில்லையா?பழைய மிராசுதாரர் வீட்டுப் பிள்ளைகள் எத்தனை பேர் பட்ட தாரிகள்,பொறியியல் மருத்துவப் பட்டதாரிகள்? /////
பணக்காரன் பின்தங்கியிருந்தால் அவன் சொந்த இயலாமை மற்றும் விருப்பமின்மை. சமுதாயத்தை குறை கூற இயலாது. மிராசுவின் குழந்தைகள் பட்டப்படிப்பு படிக்காததும், படிப்பதும் அவர்கள் கையிலேயே இருக்கிறது... எத்தனையோ பணக்கார சேட் குழந்தைகள் பட்டப்படிப்பை புறக்கணித்து வியாபாரத்தில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் என்ன பின்தங்கியவர்களா? பட்டப்படிப்பில் எல்லா சமுதாயமும் சமமாக பங்கெடுத்துக்கொண்டுதான் ஆகவேண்டும் என்று நினைப்பதும் ஒரு ஆணவகுறியாகத்தான் படுகிறது...
//// சட்டம் இயற்றுவதற்குத்தான் மக்கள் மன்றங்கள்.சட்டத்தைச் சரி பார்த்துச் சொல்லத்தான் நீதி மன்றங்கள். சட்டத்தின் ஒரே ஒரு வார்த்தயைக் கூட மாற்றவோ,சேர்க்கவோ,நீக்கவோ உச்ச நீதி மன்றத்திற்குக்கூட உரிமை கிடையாது. ////
நீதி மன்ற அடிப்படையை இவ்வார்த்தைகள் திரிக்கின்றன. தன் சுயலாபத்திற்காக அரசியல்வாதிகள் குறுகியகால நோக்குடன் இயற்றும் சட்டங்களை அரசியலமைப்பு என்கிற உரைகல்லில் உரசி அதன் தரத்தை நிலை நிறுத்தவே சட்டமன்றங்கள். தன் சாதி, வகுப்பு என்பதற்காக எப்படியாவது இட ஒதுக்கீட்டை ஆதரித்து இந்திய இறையாண்மைக்கு ஊரு விளைவித்தாலும் பரவாயில்லை என்று சுயநலமிகளாக இருக்கும் தங்களைப்போல பலரின் செயல்களை தடுத்து நிறுத்தவே சட்டமன்றங்கள். ஐம்பது ஆண்டு ஆகியும் இட ஒதுக்கீடு என்ற ஒரு புண் புரையோடிப்போய் இந்திய சமுதாயத்தை துண்டாக்கி வருவது கண்டு வருந்தாமலும், அதற்கு என்ன நிரந்தர தீர்வு என்பது பற்றி ஒரு கணமும் யோசிக்காமலும், பேசாமலும் இன்னும் இந்தியாவை கூறு போட முயலும் பல பிராந்தீய, சிறு சிறு தலைவர்களின் சுயநலத்துக்கு தடை போடவை நீதி மன்றங்கள்.
தங்கள் வார்த்தைகள் அப்பட்டமான நீதிமன்ற அவமதிப்பு. சட்டப்படி குற்றம். இதற்கு நீங்கள் தண்டனைக்குள்ளாவீர்கள்...
தங்கள் விளக்கங்களை எதிர்நோக்கும்...
//அவருடைய ஆழ்ந்த ஆராய்ச்சி ஒவ்வொரு இடத்திற்கும் நேரெ சென்று மக்களைப் பார்த்து பேசி ஆராய்ச்சி செய்து எழுதியுள்ள அந்த் மண்டல் ரிப்போர்ட்டைப் படித்துப் பார்த்தால் தெரியும் அவர் யார் என்று.
50 விழுக்காடுதான் என்று சொல்வதற்கும்,கிரிமி லேயர் என்று சொல்வதற்கும் உச்சநீதி மன்றத்திற்கு என்ன உரிமை உள்ளது?//
சும்மா ஜல்லியடிக்காதீர்கள். மண்டல் அரசியல்வாதிதான் அதே சமயம் அவரும் 1931 வருடத்து தகவலை வைத்துத்தான் கும்மியடித்தார். அது இல்லை என சொல்வதுதான் மண்டூகத்தனமானது.
மேலும் ஏன் கிரீமி லேயரை பார்க்கக்கூடாது? அரசியல்வாதிகளே அந்த லேயரில் வருவதால்தானே?
அன்புடன்,
டோண்டு ராகவன்
// முதல் முதல் இட ஒதுக்கீடு கொண்டு வந்த போதே நன்றாக விவாதிக்கப்பட்டு socially and educationally backward ஒப்புக்கொள்ளப் பட்டு economically என்பது ஏற்றுக் கொள்ளப்படாமல் ஒதுக்கப்பட்டது தக்க காரணங்களால். //
அப்படி வாருங்கள் வழிக்க்கு. முதலில் கூறிய இட ஒதுக்கீடே பார்லிமெண்ட் மற்றும் சட்டசபைகளுக்கான உறுப்பினர் இட ஒதுக்கீடுதான், அதுவும் தாழ்த்தப்பட்ட மற்றும் ட்ரைபல் குடிமகர்களுக்கு மட்டுமே. பிற்படுத்தப்பட்டவர் எங்குமே இதில் வரவில்லை. ஆகவே அரசியல் சட்ட ஜல்லியடித்தால் உங்கள் கட்சிக்குத்தான் கேடு. மேலும் பதினைந்து ஆண்டுகளுக்கு மட்டுமே தரப்பட்டது. ஆகவே எதுவுமே நிரந்தரம் கிடையாது.
பிற்படுத்தப்பட்ட வன்னியர் ஆகியோர் தாழ்த்தப்பட்டவர் மீது செய்யாத செய்யாத வன்கொடுமையா? அவர்களுக்கு ஏன் இட ஒதுக்கீடு?
அன்புடன்,
டோண்டு ராகவன்
தமிழன்,
முதல் இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்ட போது 10 வருடங்களுக்கு பிறகு மறு ஆய்வுக்குட்படுத்தப்படவேண்டும் என்று குறிப்பிடப்பட்டிரு ந்தது உங்களுக்கு தெரியுமா? ஆனால் எ ந்தவித ஆய்வுமில்லாமல் அடுத்தடுத்து இட ஒதுக்கீடு நீட்டிக்கப்பட்டுக் கொண்டு வருகிறது.
பிற்படுத்தப்பட்டவர்களின் முன்னேறாம் தான் இட ஒதுக்கீட்டின் நோக்கமென்றால், எதிர்பார்க்கின்ற பலன் கொடுக்கிறாதா என்று சரிபார்க்கவேண்டும். பிற்படுத்தப்பட்டவர்கள் கோட்டா அ ந்த வகுப்பினரிடையே உள்ள ஏற்கனவே இட ஒதுக்கீட்டின் பலன் களை அனுபவித்த க்ரீமி லேயருக்கு சென்று விடுகிறது.
இட ஒதுக்கீட்டினால் மட்டும் எ ந்த சமூகமும் வளர்ச்சி அடை ந்துவிடாது. முன்னேற வேண்டும் என்ற உ ந்துதல் வேண்டும். இட ஒதுக்கீடு கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு மட்டுமல்ல, பதவி உயர்வுக்கும் இருப்பது தெரியுமா? ஒரே நேரத்தில் வேலைக்கு சேர் ந்த இருவரில் பிற்படுத்தப்பட்டவருக்கு 2 அல்லது 3 பதவி உயர்வு அனுமதிக்கப்பட்ட பிறகே முற்பட்டதாகக் கூறப்படும் பிரிவை சேர் ந்தவருக்கு பதவி உயர்வு கொடுக்கப்படுகிறது.
நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள். கவுண்டர்கள், தேவர்கள் முதலான அதிகார வர்க்க ஜாதிகள் பிற்படுத்தப்பட்டவர்களா?
தாழ் ந்த ஜாதியினர் என்று தம்மை கூறிக்கொள்வதற்கு வெட்கப்படவேண்டும். மாறாக அனைவரும் தம்மை தாழ் ந்த ஜாதியினராக ப்ரமோட் செய்து கொள்கிறார்கள்
முது நிலைப் பட்டம் பெற்ற ஒருவனுக்கு ஆராய்ச்சிப் படிப்புகளில் எதற்கு இட ஒதுக்கீடு? இதற்குப் பிறகும் அவனால் "எஸ்டாப்லிஷ்" செய்து கொள்ள முடியவில்லை என்றால் அவனுக்கு படிப்புதான் எதற்கு?
இட ஒதுக்கீடை ஆதரிப்பவர்கள், நாளைய தலைமுறை தாழ்த்தப்பட்டவர்களை உருவாக்குகிறீர்கள் என்று உணரவில்லையா.
கிரீமிலேயரை அரசியல்வாதிகள் எதிர்க்கிறார்கள் என்றால் அதற்கு ஒரே காரணம் அது அமலாக்கப்பட்டால் முதலில் வெளியேற்றப்படுவது அவர்களும், அவர்களுடைய குடும்பத்தினரும்தான். இது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். எல்லா அரசியல் கட்சிகளும் சாதி அடிப்படையில்தான் இட ஒதுக்கீடு என்று கத்தோ கத்து என்று கத்துகிறார்கள். ஆனால் தங்களது கட்சி சார்பாக தேர்தலில் நிற்க வேட்பாளர்களைத் தேர்வு செய்யும்போது மட்டும் லட்சாதிபதிகளாக, கோடீஸ்வரராகளாக தேர்வு செய்கிறார்களே.. ஏன்? குடிசையில் இருப்பவர்களையும், குடியிருக்க வீடில்லாத தொண்டனையும் எம்.எல்.ஏ. ஆக்கலாமே.. ஏன் முன்னுக்கு வரவிட மறுக்கிறார்கள். முதலில் எம்.எல்.ஏ. ஆனவன் அடுத்த தேர்தலில் தோற்றுப் போனாலும் அந்த ஐந்தாண்டு காலத்தில் சம்பாதிக்கும் பணத்தில் அடுத்த ஐம்பதாண்டுகளுக்கு அவன் குடும்பம் உட்கார்ந்தே சாப்பிடலாம். ஆனாலும் அவன் தன் சாதியைச் சொல்லி ஒதுக்கீடு கேட்பது சமூக அவலம்தானே.. இவன் நான் வளர்ந்து விட்டேன். சம்பாதித்துவிட்டேன். நான் இனி பிற்பட்டுத்தப்பட்டவன் அல்ல. தாழ்த்தப்பட்டவன் அல்ல.. முன்னேறிய தாழ்த்தப்பட்டவன். எனக்குப் பதிலாக என் ஊரில் பீ அள்ளும் ஒரு குடும்பத்துப் பையனுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று சொல்வானா? மாட்டார்கள்..
எல்லாமே நடிப்பு. இந்த கேடு கெட்ட அரசியல்வாதிகள் எப்போதும் தங்களுடைய சுய லாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு கத்துவார்கள், சுத்துவார்கள், மீட்டிங் போடுவார்கள், பேசுவார்கள் என்பதற்கு இந்த கிரீமிலேயர் தகுந்த எடுத்துக்காட்டு.
எல்லா சாதிகளிலும் கிருமி லேயர் எவ்வளவு % இருக்கும் ? ஒரு 3 முதல் 5 %. அவ்வளவு தானே ? சாதாரன டி பிரிவு க்ளார்க் லெவலில் இல்லாமல் IAS / IPS / தாசில்தார் / 100 ஏக்கருக்கு மேல் நிலம் உள்ளவர்கள் போன்றவர்களை மட்டும் எடுத்தால் அவர்கள் 1 - 2 % மட்டுமே வருவார்கள்...அவர்களை மட்டும் முதலில் நீக்கலாமே ? காரணம் அவர்களின் பிள்ளைகளை மட்டும் எடுத்துக்கொண்டால் 4000 - 5000 தகுதியான மாணவர்கள் / மாணவிகள் வருவார்கள்...அவர்கள் எங்கேயாவது அமவுண்டு கட்டி ( Pay & Learn Colleges) படிக்கட்டும்...மீதிப்பேர் தகுதியுள்ளவர்களாக ஆகட்டும்...
தமிழன் ஐயா இதுவரை என் கேள்விகளுக்கும், பிறரின் பின்னூட்டங்களுக்கும் பதில் சொல்லவில்லையே... நேரமில்லையா, மனமில்லையா இல்லை பதிலில்லையா....
அநானி அவர்களே,
பதிவு நீண்டு இருக்கிறதே என்பதால் சுருக்கமாகச் சொல்லிப் பார்த்தேன்.
இட ஒதுக்கீட்டின் ஆரம்பத்தை அறிந்து கொள்வது நல்லது.
அன்றைய மதராஸ் மாகாண்த்திலே படிப்பும் வேலைவாய்ப்பும் அப்பட்ட பார்ப்பன ராஜ்யமாக இருந்தது.விழுக்காடு படி பார்த்தால் சில நல்ல வேலைகளில் 80-90%கூட பார்ப்பனர்களே இருந்தார்கள்.சென்னை மருத்துவக் கல்லூரியிலே மருத்துவராகப் படிப்பதற்கு சமசுகிருதம் தெரிந்திருக்க வேண்டுமென்றால் யார் சேரமுடியும் என்பது தானே தெரியும்.
பிற்படுத்தப் பட்டவர்கள் மதிப்பெண்கள் பெற்றிருந்தாலுங்கூட அவர்கள் அனுமதிக்கப்படவில்லை.ஆரம்ப முதலே உனக்கெல்லாம் படிப்பு வராது போய் தொழில்செய் என்று"ஊக்கு விக்கப்பட்டனர்".ஆம் அறிஞர் அண்ணா அவர்களே பச்சையப்பன் கல்லூரியிலே பொருளாதார மேற்படிப்பில் சேர்ந்த போது அவருடைய பேராசிரியர் "நோக்கெல்லாம் இதெல்லாம் வராதுடா,வேரே ஏதாவது படி" என்று அறிவுரை தந்தாராம்.அண்ணா பல்கலைக் கழக முதல் பரிசுடன் தேறினார்.
பச்சையப்ப முதலியார் அறக்கட்டளையில் ஆரம்பித்தக் கல்லூரியில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு நுழைவு கிடையாது.இது மாதிரி பல.
நீதிக்கட்சி ஆட்சியிலே இதையெல்லாம் பார்த்துவிட்டு பிற்படுத்தப் பட்டவர்கள் முன்னேற வேண்டுமானால் படிப்பு அவசியம் என்று படிப்பில் பல் மாற்றங்கள் கொண்டு வந்தனர்.பல இடங்களில் விடுதிகள் நீதிக்கட்சி பிரமுகர்களாலும்,அரசாலும் கட்டப் பட்டன.அதனால் பல பிற்படுத்தப்பட்டவர்கள் அனைவரும் படிக்கவும் வேலை பெறவும் முடிந்தது.
சுதந்திரம் அடைந்தவுடனே புதிய இந்திய அரசியல் சட்டத்திலே இந்த இட ஒதுக்கீடு கூடாது என்று ஒருவருக்காகத் தமிழ்நாட்டிலேயிருந்து வழக்குத் தொடுக்கப்பட்டது.அந்த மாணவர் உண்மையிலேயே விண்ணப்பம்க்கூடப் போடாதவர் என்பது பின்னால் தெரிய வந்தது.
பெரியார் இட ஒதுக்கீடு எப்படி வந்தது எத்தனைபேர் எந்தெந்த வேலைகளில் இருக்கிறார்கள் என்பதையெல்லாம் பட்டியல் போட்டுக் காண்பித்து பண்டித ஜவஹர்லால் நேருவே இந்திய அரசியல் சட்டத்தின் முதல் திருத்தம் செய்ய்வைத்தார்.நீண்ட விவாதத்திற்குப் பின்தான் சமுதாய,கல்வி மட்டும் தகுதிகளாக ஏற்று பொருளாதார அளவு கோள் நிராகரிக்கப் பட்டது.
ராஜகோபாலாச்சாரியார் முதல்வராக இருந்த போது நிறைய பள்ளிகளை மூடிவிட்டு அரை நேரம் பள்ளி அரை நேரம் குலத்தொழில் என்று கொண்டு வந்தார்.அப்போதுதான் தமிழகம் பொங்கியெழுந்தது.அவர் பதவி விலகினார்.காமராஜரைப் பெரியார்,வரதராஜலு,அண்ணா அனைவரும் ஆதரித்து முதலமைச்சர் ஆனார்.
காமராசர் பள்ளிகளைத் திறந்தார்.அப்போது விஷமிகள் கேட்டனர்.ஏன் பள்ளிகளைத் திறக்கின்றீர்கள் என்று.காமராசர் சொன்னார் "எந்தக் காரணங்களுக்காகப்
பள்ளிகள் மூடப்பட்டனவோ அதே காரணங்களுக்காகத்தான் திறக்கப் படுகின்றன" என்றார்.பல்லாயிரக்கணக்கானப் பள்ளிகள் திறந்து,ம்திய் உணவளித்து அவர் கல்வி வள்ளல் காமராசர் ஆனார்.
இட ஒதுக்கீடு அந்த முதல் சட்ட திருத்ததின் படி அனைத்துப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் படிப்பிலும் வேலையிலும் கொடுத்திருக்க வேண்டும்.கொடுக்கப் படாமல் வேலை வாய்ப்பில் மட்டுந்தான் கொடுக்கப்பட்டது.
AIIMS பற்றி..
திறமை என்று ஏமாற்றுகிறார்களே ஒரு
எடுத்துக்காட்டு.அங்கே படித்த மாணவர்களுக்கு நூற்றுக்கு நூறு மேல் படிப்பில் நல்ல துறைகளில் இட ஒதுக்கீடு,குறைந்த மதிப் பெண் பெற்றிருந்தாலும்.அவர்களைவிட நிறைய மதிப்பெண்கள் பெற்றவர்கள் வெளி கல்லூரிகளிலிருந்து விண்ணப்பித்தவர்களுக்கு இடங்கிடையாது.இது நீண்ட கால்ப் பிரச்சினையாக இருந்து கடைசியில் ஒழிக்கப் பட்டது.திறமை என்பது வெறும் வெளி வேசந்தான்,எல்லாம் சாதி வெறி தான்.
சென்னை IIT யின் தலைவரின் திறமை தகுதியைப் பாருங்கள் தெரியும்.
ஆம்.இட ஒதுக்கீடு அனைவரும் சமம் என்பதற்கு எதிர்தான்.அதற்கு என்ன வழி.கட்டாயமாகச் செய்ய வேண்டியது என்ன?நான் உயர்ந்தவன் நீ தாழ்ந்தவன் என்று சொல்பவர்கள்,செய்பவர்கள் அனைவரையும் சிறையில் அடைத்துத் தண்டனை கொடுக்க வேண்டும்.சாதியை சட்ட பூர்வமாக,நேர்மை உள்ளத்தோடு ஒழிக்க வேண்டும்.இதைச் செய்துவிட்டு இனி இட ஒதுக்கீடு கிடையாது என்று சொல்ல வேண்டும்.
முடியாது என்பதெல்லாம் ஏமாற்று வேலை.நினைத்தால் செய்யலாம்.
மண்டல் இந்த மண்டல் கமிசனுக்கு முன்னே என்னென்ன செய்துள்ளார் என்பதைப் பார்த்துவிட்டுப் பின்னர் பதிவாளர் சொல்லட்டும் மண்டலைப் பற்றி.மண்டலையும்,அதை நிறைவேற்றிய வி.பி.சிங் கையும் குறை சொல்லுபவர்கள் அதைப் படிதுப் பார்த்தால் நான் ஒரு இந்தியன் என்று சொல்லவே வெட்கப் பட வேண்டும்.
இப்போது ஐக்கிய நாட்டு சபையிலே நமது மனிதநேய அநியாயங்கள் வெளியே வந்துவிட்டது.இனியும் சாதி இருந்தால் இந்தியா பழைய நிறவெறி தென் ஆப்பிரிக்காவை விட மோசமாகச் சித்தரிக்கப்படும்.
சாதி ஒழியட்டும்,சமத்துவம் தன்னால் வந்துவிடும்.
//ஆம் அறிஞர் அண்ணா அவர்களே பச்சையப்பன் கல்லூரியிலே பொருளாதார மேற்படிப்பில் சேர்ந்த போது அவருடைய பேராசிரியர் "நோக்கெல்லாம் இதெல்லாம் வராதுடா,வேரே ஏதாவது படி" என்று அறிவுரை தந்தாராம்.அண்ணா பல்கலைக் கழக முதல் பரிசுடன் தேறினார்.//
யாரோ ஒரு ஆசிரியர் தனிப்பட்ட முறையில் கூறியதற்காக ஒரு சாதியையே துவேஷிப்பதுதான் நீங்கள் செய்வது. ஏன் பெரியார் கூட பாம்பையும் பாப்பானையும் பார்த்தால் பாம்பை விடு பாப்பானை அடி என்று கூறினார். ஆகவே தி.க. காரர்கள் எல்லோரும் வன்முறையாளர் எனக் கூறி விடலாமா?
மேலும், வேண்டுமென்றே எஸ். சி. எஸ்.டி. யுடன் பிற்படுத்தப்பட்டவர்களை போட்டு குழப்புகிறீர்கள். முந்தியவர்களை மிக அதிகமாக வன்கொடுமை செய்த பிந்தையவர்கள் ஒட்டு அரசியல் என்ற நிழலில் இட ஒதுக்கீடு கேட்பதைதான் நாங்கள் எதிர்க்கிறோம். நேரு கொண்டு வந்த சட்டத் திருத்தம் முந்தையவர்களுக்க்குத்தான், மரம் வெட்டிகளுக்காக இல்லை என்பதை நினைவில் வைக்கவும்.
அதுவும் 1931-ஆம் ஆண்டு சென்சஸை எந்த முறையில் ஒத்துக் கொள்வது.
ராமதாஸ் கருணாநிதி போன்றவர்கள் வீட்டு பிள்ளைகளுக்கு வேண்டும் என்பதாலேயே கிரீமி லேயரைப் பற்றி பேச மறுக்கிறார்கள்.
மற்றப்படி மண்டலை பற்றி இங்கு ஜல்லியடித்தால் ஏமாற இங்கு யாரும் காதில் பூவைத்துக் கொள்ளவில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
தமிழன் ஐயா அவர்களின் நீ...ண்ட பதில் என் கேள்விகளுக்கு சிறிதும் சம்பந்தம் இல்லாதது. நேர்மையற்றது. தனக்கு தெரிந்த சில பழைய புராண கேள்விப்பட்டவைகளை வைத்து ஜல்லி அடிக்கும் ஒரு மலிவான தோற்றுப்போன உத்தி.
என் கேள்விகள் மூன்று. அவை அவரின் கருத்துகளிலிருந்து நான் திருப்பிக்கேட்டவைதான்.
இவற்றை அவர் கொஞ்சமும் காட்டிக்கொள்ளக்கூட இல்லை. இது ஒரு நேர்மையற்ற விவாதம்..
என் கேள்விகளை ஐயாவின் பார்வைக்கு மீண்டும் பதிகிறேன்...
1. இட ஒதுக்கீட்டில் தேர்வானவர்கள் intelligent pygmies ஆகத்தான் இருப்பார்கள். இதை ஒப்புக்கொள்கிறீர்களா?
2. பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீட்டு எல்லா விதத்திலும் நியாயமாக படுகிறது. அதை ஏன் எதிர்க்கிறீர்கள்?
3. இந்த சட்டம் நீதிமன்றத்தில் தரம் அறிந்து சோதிக்கப்பட எல்லா அதிகாரமும் நீதிமன்றத்துக்கு இருக்கிறது. சொல்லப்போனால், இந்திய இறையாண்மையை காப்பாற்ற இந்த அமைப்பு மிகவும் அவசியம்.
தயை செய்து சம்பந்தமில்லாத பொருட்களை பேசி தமிழன் ஐயா தமிழர்களை இழிவுபடுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்
"சமீபத்திய பொது அறிவு தேடல்" என்று கேட்டதால் வரலாறு சொன்னேன்.அதில் எது நேர்மை இல்லை?
1.கட்டாயம் கிடையாது.பொதுத் தேர்வில் வந்த intelligent pygmies உண்டு,திருடு,கொள்ளை ,ஊழல்களும் உண்டு.இந்திய அரசியலில் முதல் ஊழல் குற்றச் சாட்டால் பதவி விலகிய பெருமை டி.டி.கிருஷ்ணமாச்சாரிக்கு உண்டு.
இட ஒதுக்கீடில் வந்த intelligent pyramid கள் உண்டு.
2.நேர்மையான கிரிமி லேயர் என்றால்
எல்லோருக்கும் பொதுவாகக் கொண்டுவர வேண்டாமா?பொதுவிலேயும் அதே அளவுகோள் கொண்டு வரவேண்டாமா?அது என்ன பிற்படுத்தப்பட்டக் கிரிமி லேயர்?பொருளாதாரம் வேறு சாதி வேறு.தூங்குவது போல நடிப்பதுதான் அயோக்கியத்தனம்.மண்டல் 11 அளவு கோள்வைத்து ஒவ்வொன்றையும் விளக்கியிருக்கிறார்.
3.ராம்ஜெத் மலாணியின் வாதங்கள் தான்.எல்லாம் அறிந்த நீதிபதி திமிராகக் கேட்டார்.எவ்வள்வு விழுக்காடு?100 விழுக்காடு தர முடியுமா?என்று.
ஆம்.அங்கே நூறு விழுக்காடு பிற்படுத்தப் பட்டவர்கள் மட்டுமே இருந்தால் தரவேண்டியதுதான் என்றார்.
இந்திய இறையாண்மை பூச்சியெல்லாம் விடாதீர்கள்.50ஆண்டுகளாகச் சட்டத்தில் இருந்ததைச் செயல் படுத்தவில்லை.இப்போது என்ன தடை வேண்டியுள்ளது?கேட்டுப் பாரும்.மண்டல் அமலாக்கப்படும் வரை தாழ்த்தப்பட்ட சரியானவர்கள் இல்லை என்று சொல்லியே இடங்களை இவர்கள் எடுத்துக்கொண்டார்கள்.
இன்னொரு வீரவேங்கைக்கு.
பிற்படுத்தப் பட்டவர்,SC,ST அனைவர்க்குந்தான் சரியாகப் பாரும்.
வார்த்தைகளை அளந்து விடவும்.என்க்கும் நிறைய வார்த்தைகள் தெரியும்.தாங்கள்தான் தமிழர்களின் மொத்த அவதாரமோ?அது தெரியாமல் தங்களை அவமான்ப் படுத்திவிட்டேன் போல் இருக்கிறது.
//நேர்மையான கிரிமி லேயர் என்றால்
எல்லோருக்கும் பொதுவாகக் கொண்டுவர வேண்டாமா?பொதுவிலேயும் அதே அளவுகோள் கொண்டு வரவேண்டாமா//
என்ன உளறல்? இட ஒதுக்கீடு என்பது சில அளவுநிலைகளை வைத்து கொடுக்கும் சலுகை. ஆனால் பொது என்பது ஒரு சலுகையும் இல்லாது எல்லோருக்கும் அவரவர் திறமைக்கேற்றவாறு வருவது. இன்னும் பச்சையாகக் கூறவேண்டுமானால் அந்தச் சலுகையும் சம்பந்தப்பட்டவர்களில் அதற்கான தேவை இருப்பவர்களுக்கே போக வேண்டும் என்பதற்காகத்தான் கிரீமி லேயர் கான்சப்டே வந்தது.
மேலும், நீங்கள் கூறும் தோரணையைப் பார்த்தால் பொதுவில் உயர்சாதியினர் மட்டுமே வருவார்கள் என்ற அனுமானம் தெரிகிறது. அப்படியில்லீங்கோவ். நீங்கள் நினைப்பது பிற்படுத்தப்பட்டோரையும் தாழ்த்தப்பட்டோரையும் அவமானப் படுத்துவது போல இருக்கிறது.
நீங்கள் என்னதான் கதறினாலும் தாழ்த்தப்பட்டவர் பின்னால் பிற்படுத்தப்பட்டோரை ஒளித்து வைத்து நைசாக நுழைக்க முடியாது.
தாழ்த்தப்பட்டோரின் கோட்டா பாதிக்கவில்லை இந்த ஸ்டேயால் என்பதை சுப்ரீம் கோர்ட்டே கூறி விட்டது. வேறு ஏதாவது பூ சுற்ற முயற்சிக்கவும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
உளருவதும் சிண்டு முடியப் பார்ப்பதும் நீர்தான்.
சமுதாய அநீதிகள் இருப்பதை ஒத்துக்கொண்டு சமுதாய நீதி அளிப்பதற்காகக் கொண்டுவந்த சட்டம்.இட ஒதுக்கீடு சட்ட உரிமை.யாரோ போடும் பிச்சையல்ல.
சிண்டு முடியாதீர்.15(4)அய்ச் சரியாகப் பாரும்.சமுதாய,கல்வியிலே பிற்படுத்தப்பட்டோர் அல்லது செட்யூல்டு கேஸ்ட்,டிரைப் என்றுதான் போட்டிருக்கும்.
சமுதாய அநீதிக்குப் பொருளாதார அளவுகோள் நீதி அளிக்காது.
பொருளாதாரம் என்று பார்த்தால் முற்பட்டவர்களிலும் ஏழைகளுக்குப் பரிவு காட்டவேண்டும் என்று சொன்னால்தானே நியாயம்.
நீங்கள் சுற்றிய பூக்களிலிருந்துதான் சமுதாயம் விடுதலை அடையப் பார்க்கிறது.வார்த்தைகளை அடக்கி எழுதவும்.
இட ஒதுக்கீட்டிற்கு எத்தனை முட்டுக் கட்டைகள்,எப்படியெல்லாம் ஏமாற்றி கொடுக்கவேண்டிய இடங்களைக் கொடுக்காமல் பண்ணின காலித்தனங்கள் இதெல்லாம் ஒரு பட்டியலே உள்ளது.இப்போது நடக்கும் காலித்தனமும் முறியடிக்கப் படும்.
//15(4)அய்ச் சரியாகப் பாரும்.சமுதாய,கல்வியிலே பிற்படுத்தப்பட்டோர் அல்லது செட்யூல்டு கேஸ்ட்,டிரைப் என்றுதான் போட்டிருக்கும்.//
நான் பார்ப்பது இருக்கட்டும். அதை எடுத்து நீங்கள் அப்படியே ஆங்கிலத்தில் இருப்பதைப் போடுங்கள்?
மேலும் 15(4)அய்ச் எப்போது போடப்பட்டது? 1950-லா அல்லது மண்டலுக்கு பிற்பாடா? நிஜமாகவே தெரியாததால்தான் கேட்கிறேன்.
இன்னொரு கேள்வி. இதையெல்லாம் சுப்ரீம் கோர்ட்டிடம் கூறி அவர்கள் அதை பார்க்கவில்லை என்கிறீர்களா?
வேறு சில கேள்விகள்:
1. தலித்துகள் மேல் வன்கொடுமை செய்தவர்களில் பிற்படுத்தப்பட்டவர் இல்லவேயில்லை என்று நீங்கள் கூறத் தயாரா?
2. அவ்வாறு செய்தவர்கள் தலித்துகள் பின்னால் இப்போது ஒண்டிக் கொள்வது கேவலமாக இல்லையா?
3. ஸ்டேயில்தான் தாழ்த்தப்பட்ட சகோதரர்களுக்கான இட ஒடுக்கீட்டில் பிரச்சினை இல்லையே?
4. ஓபிசி கிரீமி லேயருக்காகவா உங்களுக்கு இத்தனை ஃபீலிங்ஸ்?
5. காவிரி தீர்ப்பு, முல்லையாறு தீர்ப்பு ஆகியவற்றை மட்டும் மதிக்க வேண்டும், ஆனால் கிரீமி லேயர் சம்பந்தமான தீர்ப்புக்கு எதிராக அரசே பந்த் நடத்துவது என்ன கேவலமானச் செயல்?
6. ஒரு நாள் பந்துக்கு என்ன நட்டம் ஆயிற்று என்பதாவது தெரியுமா? யார் அப்பன் வீட்டு சொத்து என நினைத்திருக்கிறார்கள்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
தமிழன் ஐயா அவர்களின் இன்றைய நகைச்சுவை பின்னூட்டத்தை ஆவலுடன் எதிர்பார்த்தேன். அவருக்கு மிக்க நன்றி. மிகவும் நகைச்சுவையாக இருக்கிறது. அதுவும் கஷ்டப்பட்டு மழுப்ப பார்த்து முடியாமல் சறுக்கும்போது அவரின் வார்த்தைகள் இன்னும் மனநிறைவை தருகின்றன. இம்மாதிரி பின்னூட்டங்களை தொடர்ந்து அவர் தரவேண்டும் என்று ஆசையாக இருக்கிறது.
/// 1.கட்டாயம் கிடையாது.பொதுத் தேர்வில் வந்த intelligent pygmies உண்டு,திருடு,கொள்ளை ,ஊழல்களும் உண்டு.இந்திய அரசியலில் முதல் ஊழல் குற்றச் சாட்டால் பதவி விலகிய பெருமை டி.டி.கிருஷ்ணமாச்சாரிக்கு உண்டு.
இட ஒதுக்கீடில் வந்த intelligent pyramid கள் உண்டு. ////
புத்திசாலிகளுக்கும், கயவர்களுக்கும் முடிச்சு போடுகிறார். இரண்டுக்கும் வித்தியாசம் தெரியவில்லை. படித்த கயவர்கள் இருக்கலாம். அதற்கும் இட ஒதுக்கீட்டும் என்ன சம்பந்தம்? தமிழன் ஐயா கூடத்தான் மெத்த படித்தவர். ஆனால், நேர்மையற்றவர் (இட ஒதுக்கீட்டை காரணத்தை ஆராயாமல் சுயநலத்துக்காக ஆதரிப்பவர்.)
//// 2.நேர்மையான கிரிமி லேயர் என்றால்
எல்லோருக்கும் பொதுவாகக் கொண்டுவர வேண்டாமா?பொதுவிலேயும் அதே அளவுகோள் கொண்டு வரவேண்டாமா?அது என்ன பிற்படுத்தப்பட்டக் கிரிமி லேயர்?பொருளாதாரம் வேறு சாதி வேறு.தூங்குவது போல நடிப்பதுதான் அயோக்கியத்தனம்.மண்டல் 11 அளவு கோள்வைத்து ஒவ்வொன்றையும் விளக்கியிருக்கிறார். ///
இதுதான் டாப் ஜோக். பொதுவிலே ஓபன் கோட்டாவிலே கிருமி லேயர் கிடையாது. கிருமி லேயர் என்பது எதிர்பார்த்த ஆட்களை போய் சேர விடுமால் தடுக்கும் ஒரு தேவையற்ற தளம். அது இட ஒதுக்கீட்டு கோட்டாவில் மட்டுமே சாத்தியம். ஓபன் கோட்டா என்பதே எல்லோருக்கும் சம உரிமை. அதில் கிருமி லேயர் இருக்க முடியாது. ஒருவேளை பணக்காரர்கள் அதில் வருகிறார்களே என்று சொன்னால், அது மானியம் சம்பந்தப்பட்ட விஷயம். அரசு குறைந்த விலையில் ஃபீஸ் வைப்பதால் கிடைக்கும் மானியத்தை பெற. அதற்கும் இட ஒதுக்கீட்டும் ஒரு சம்பந்தமும் இல்லை.. வழக்கமான தமிழன் ஐயாவின் சறுக்கலும், பூச்சுற்றலும்.
//// 3.ராம்ஜெத் மலாணியின் வாதங்கள் தான்.எல்லாம் அறிந்த நீதிபதி திமிராகக் கேட்டார்.எவ்வள்வு விழுக்காடு?100 விழுக்காடு தர முடியுமா?என்று.
ஆம்.அங்கே நூறு விழுக்காடு பிற்படுத்தப் பட்டவர்கள் மட்டுமே இருந்தால் தரவேண்டியதுதான் என்றார். ////
ஒரு இன்னொரு நல்ல ஜோக். 100% இருந்தால் அது எப்படி இட ஒதுக்கீடு ஆகும்? அங்கே ஏன் இட ஒதுக்கீடு தேவை? யாரை முன்னிறுத்த அங்கே இட ஒதுக்கீடு? 100% சதவீதம் பிற்படுத்தவர்கள் ஓரிடத்தில் இருந்தால் யார் அவர்களை பிற்படுத்தியவர்கள்? யாரை பின்னிருந்த இந்த இட ஒதுக்கீடு. தங்கள் லாஜிக் வாலைக்கடிக்கும் நாய் போல உங்களையே சுற்றி வருகிறது..
///// இந்திய இறையாண்மை பூச்சியெல்லாம் விடாதீர்கள். 50ஆண்டுகளாகச் சட்டத்தில் இருந்ததைச் செயல் படுத்தவில்லை.இப்போது என்ன தடை வேண்டியுள்ளது? ////
மறுபடியும் தவறான ஒரு தகவல். அரசியல் அமைப்பில் 50 ஆண்டுகளாக இருந்தது SC, ST மட்டுமே. அதுவும் இன்னேரம் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். இடையில் வந்ததுதான் இப்போது இருக்கும் குழப்பம். சுயநல அரசியல்வியாதிகளால் விளைந்தது. இதில் எதை இன்னும் அமல் படுத்தவில்லை என்று வருந்துகிறீர்கள். இட ஒதுக்கீடு நிறுத்தப்படவேண்டும் என்று அரசியல் சட்டம் சொன்னதை இன்னும் செய்யக்காணோமே என்றா வருத்தம்? அந்த வருத்தம் எனக்கும் நிறைய உண்டு.
//// தாங்கள்தான் தமிழர்களின் மொத்த அவதாரமோ?அது தெரியாமல் தங்களை அவமான்ப் படுத்திவிட்டேன் போல் இருக்கிறது.////
இந்த பூச்சியெல்லாம் காட்டவேண்டாம். இந்திய இறையாண்மையை பற்றி பேச ஒவ்வொரு இந்தியனுக்கும் உரிமை உள்ளது. நீங்கள் என்ன மொத்த பிற்படுத்தவரின் வாரிசா? நீங்கள் இட ஒதுக்கீட்டு பற்றி பேசுகிறீர்களே. அப்படியானால், நான் ஏன் தமிழர்களை பற்றி பேசக்கூடாது. உங்களுக்கு ஒரு நியாயம் எனக்கு வேறா?
நீங்கள் சொல்வதெல்லாம் வெத்து வேட்டு வார்த்தைகள். ஒன்றும் பொருளில்லாத போது ஏதோ நிரப்ப வைக்கப்படும் வெட்டி வார்த்தைகள். தங்கள் புரிதலில் மிகுந்த குறை உள்ளது. ஏதோ நமக்கு வேண்டும் என்ற ஒரே உந்துதலில் கொஞ்சமும் புரியாமல், ஆராயாமல் ஏதோ கதைக்கிறீர்கள். உங்கள் சாதி பற்றும், சுயநல ஆர்வமுமே (எரிகிற வீட்டில், பிடிங்கினது ஆதாயம் என்ற மனோபாவம்..) தங்கள் மழுப்பல் முயற்சிகளில் தெரிகிறது..
//2. கிரீமி லேயரை விலக்கி வைக்க அரசு சிறிதும் விரும்பாதது ஏன்?//
Because Constitution does not tell anything about that... That was invented by few facists judges
3. நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்க இதை வைத்து பந்துகள் அறிவிப்பது எவ்வகையில் யோக்கியமான செயல்?
Does this comment also apply to the fanatics of AIIMS who went on a strike and caused inconvenience to poor patients for weeks together and then shamelessly got their pay
//// இதே AIIMS நிறுவனம் அங்கு படித்த மாணவர்கட்கு 100% மேல் படிப்புக்கு உத்தரவாதம் தந்து அவர்களைவிட அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் வெளியிலிருந்து படித்து வந்தவர்கட்கு இடந்தராது ஏமாற்றி பல வருடங்கள் செய்த சூழ்ச்சி ஒழிக்கப்பட்டது. ////
விளங்கவில்லை.. என்னமோ சொல்ல முயன்றிருக்கிறீர்கள்...
அதாவது.. AIIMSla lots of QUota
For SC Quota.. You need to get 62 % to get a seat
There is another QUota called Institute Quota, where you are given seat even ifyou get 14 % of marks
But AIIMSonians never opposed the Institute QUota......
Why... Because Forward Caste students (inspite of their meritorious 18% marks) get selected by that
But they are worried about merit when a SC student with 62 % is selected
Dear DR,
Easiest way to measure the Creamy Layer- Any body who got any advantage from any reservation /Quota - In studies, Job etc., is deemed to have gone into the creamy layer. His/Her Generation is considered de facto forward.
Give the best possible quota to SC/ST and also for them only one genaration.
So we can cover all the down trodden segment of Back ward communities in 2 to 3 generations.
Rgds
Murali
Post a Comment