7/14/2007

தாய் மொழி தரும் உற்சாகம் - 2

நேற்று நடந்த ஒரு விஷயம் எனது இப்பதிவின் இரண்டாம் பகுதியை இடத் தூண்டியது.

நான் proz.com என்னும் மொழிபெயர்ப்பாளர் தலைவாசலில் பிப்ரவரி 2003-லிருந்து சாதாரண உறுப்பினராக இருக்கிறேன். முழு உறுப்பினர்களுக்கு பிளாட்டினம் உறுப்பினர்கள் என்று பெயர். அதற்கு வருடம் 120 டாலர்கள் கட்ட வேண்டும். நம்மால் ஆகாது என்று விட்டு அப்போதைக்கு விட்டு விட்டேன். ஆனால் திடீரென நேற்று நான் பிளாட்டினம் உறுப்பினன் ஆனேன் என்பதை proz.com மின்னஞ்சல் மூலம் தெரிவித்தது? 120 டாலர்கள்? மூச், காலணா செலவில்லை. அதன் பின்புலன்? பொறுங்கள் அதைத்தான் இந்த இடுகையில் சொல்ல வந்தேன்.

ஆங்கிலத்தில் ஆரம்பமான இந்தத் தளம் விறுவிறுவென்று ஐரோப்பிய மொழிகளில் வர ஆரம்பித்தது. இங்குதான் தள நிர்வாகிகள் புத்திசாலித்தனமான வேலை செய்தனர். சம்பந்தப்பட்ட மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்களிடம் இந்த வேலையை கொடுத்தனர். அதை செய்பவர்களுக்கு ப்ரௌனீஸ் புள்ளிகள் தந்தனர். அப்புள்ளிகள் பல விஷயங்களில் உபயோகமானவை. உதாரணத்துக்கு 4000 ப்ரௌனீஸ் புள்ளிகளும் 80 டாலர்களும் கொடுத்தால் பிளாட்டினம் உறுப்பினர் ஆகலாம். அதாவது 40 டாலர்கள் கழிவு. பிளாட்டினம் அல்லாத உறுப்பினர்கள் அவற்றை பல ப்ரோஸ் சேவைகளுக்கு உபயோகிக்கலாம்.

தமிழிலும் ப்ரோஸ் வந்து விட்டது. நேரடியாக proz.com-க்கு போய் தளமொழி பெட்டியில் தமிழைத் தேர்ந்தெடுத்தாலும் தமிழ் பக்கத்துக்கு செல்லலாம்.

இப்போது சில வார்த்தைகள் இந்த மொழி பெயர்ப்பு வேலை பற்றி. சில உதாரணங்கள் தருகிறேன். நான் செய்தவை இவை.

ஆங்கிலம்: Impersonating others or using assumed identities is prohibited. Commenting on others' behalf, without permission ('Jenny thinks...'), is also not allowed.

தமிழ்: மற்றவர்களைப்போல தன்னைக் காட்டிக் கொள்ளல் அல்லது வேறு கற்பனை அடையாளங்களை பயன்படுத்தல் தடை செய்யப்பட்டுள்ளது. மற்றவர்கள் சார்பாக அனுமதியின்றி கருத்து சொல்லலுக்கும் ('கிருஷ்ணமூர்த்தி என்ன நினைக்கிறார் என்றால்...') தடை.

ஆங்கிலம்: For more info, see the FAQ.
தமிழ்: மேலதிகத் தகவலுக்கு பார்க்க, அகேகே. (அதிகம் கேட்கப்படும் கேள்விகள்)

இப்படியே கூறிக் கொண்டே போகலாம். தாய்மொழியில் எழுதுவது என்பதே போதை தரும் விஷயம்.

மறுபடியும் டோண்டு ராகவன். தமிழுக்கு மாற்ற நாங்கள் மூவர் இருந்தோம்: பொன்னன், குணசேகரன் மற்றும் நரசிம்மன் (டோண்டு) ராகவன். மே 22-ல் வேலை ஆரம்பித்து போன வார இறுதியில் எல்லா வேலையும் முடிந்தது. எனக்கு இந்த வேலை மூலம் ஐம்பதாயிரத்துக்கும் மேல் ப்ரௌனீஸ் புள்ளிகள் கிடைத்தன (கிட்டத்தட்ட 17000 சொற்கள்). இங்கு நான் ஒரு காரியம் செய்தேன்.

ஒரு மன்றப் பதிவை இட்டேன். ஒன்றுமில்லை ஜெண்டில்மென், இலவசமாக பிளாட்டினம் உறுப்பினர் ஆவது பற்றித்தான் கேட்டேன். அதில் வரும் எதிர்வினைகள் உலகெங்கிலும் உள்ள மனித இயற்கையையே பிரதிபலிக்கின்றன. அதில் ஒருவர் இம்மாதிரி கொடுத்தால் இத்தலைவாசல் போண்டியாகி விடும் என்ற கருத்தையும் கூறினார். அதாவது எல்லோரும் உழைத்து 12000 ப்ரௌனி புள்ளிகள் பெற்று விடுவார்கள். எனக்கு ஒரு கார்ட்டூன் ஞாபகத்துக்கு வந்தது. அன்னை தெரசா வாங்கிய சமாதான நோபல் பரிசுக்கு முழு வருமான வரி விலக்கு ஏன் அளிக்கக் கூடாது என்ற நிருபர்களின் கேள்விக்கு நிதி மந்திரி பதிலளிக்கிறார், "அப்படி செய்தால் நிறைய இந்தியர்கள் நோபல் பரிசு பெற்று இந்திய அரசாங்கத்துக்கு வரி இழப்பை ஏற்படுத்தி விடுவார்கள்" என்று. இதை ப்ரோஸின் அந்த மன்றப்பதிவில் என்னை எழுதாமல் இருக்கச் செய்தது எனது இயற்கையான தன்னடக்கமே! :) (உதை வாங்கப் போறே டோண்டு கொஞ்சமாவது சீரியசாக இரு என்று கத்துவது முரளி மனோஹர்).

சமீபத்தில் 1970-ல் வந்த வா ராஜா வா என்னும் படத்தில் ஒரு வசனம் வரும். விரும்பிப் போனால் விலகிப் போகும், விலகிப் போனால் விரும்பி வரும். அதற்கேற்ப, கொடுத்தால் கொடுக்கவும், இல்லையென்றாலும் பாதிப்பில்லை என்று நான் விட்டு விட்டிருந்தேன்.

நேற்று இரவு 9 மணி அளவில் நான் பாட்டுக்கு எனது திருக்குறள் வேலையில் மூழ்கியிருந்தேன். திடீரென ஜீ டாக் பலூன் மேலே எழும்பியது. நீங்கள் ப்ளாட்டினம் உறுப்பினர் ஆகி விட்டீர்கள் என ப்ரோஸிடம் இருந்து வந்த மின்னஞ்சல் கூறியது. என்ன, 20,000 புள்ளிகள் வாங்கி எனக்கு அது கிடைத்தது. அதே சமயம் ப்ரோஸ்.காம் சரித்திரத்திலேயே இம்மாதிரி முழு கட்டணக்கழிவு தருவது இதுதான் முதல் தடவை என்றும் அறியத் தந்தார்கள். பிளாட்டினம் உறுப்பினர்களுக்கு பல சலுகைகள். அவற்றில் மொழிபெயர்ப்பாளர்களை வரிசைப் படுத்துவதில் பிளாட்டினம் உறுப்பினர்களுக்கு முன்னுரிமை என்பதும் ஒன்று. இப்போது ஜெர்மனிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கும் இந்திய மொழிபெயர்ப்பாளர்களில் என் பெயர் முதலில் உள்ளது. பிரெஞ்சிலிருந்து ஆங்கிலம் என்று பார்த்தால் இரண்டாம் இடத்தில் உள்ளேன். ஆங்கிலத்திலிருந்து தமிழ் பற்றி கேட்கவே வேண்டாம்.

ஆக, இந்த மொழிபெயர்ப்பு வேலைக்கு நேரடியாக துட்டு கிடைக்காவிட்டாலும் பல இதர லாபங்கள் உண்டு. உறுப்பினர் கட்டணமே இந்த ஜூலை 1-லிருந்து 128 டாலர்கள். மிகவும் முக்கியமானது தாய் மொழியில் சிருஷ்டி செய்யும் மகிழ்ச்சி.

இச்செய்தி வந்ததுமே நான் அதை என் நண்பர் மா.சிவகுமார் அவர்களுடன் பகிர்ந்து கொண்டேன். தொலைபேசியிலேயே அவரது மகிழ்ச்சியை என்னால் உணர முடிந்தது.

இத்தருணத்தில் தமிழில் நான் எழுத தூண்டுகோலாக இருந்த தமிழ்மணத்துக்கும் என் நன்றிகள் உரித்தாகும். தமிழ் வலைப்பூக்கள் மூலம் பல அரிய நண்பர்களை பெற்றுள்ளேன். எனக்கு மிகுந்த உற்சாகம் அளித்த அவர்களுக்கும் மிக்க நன்றி.

என்னை உசுப்பிவிட்டு என்னை அவமானப்படுத்துவதாக நினைத்து எனது போராட்ட உணர்ச்சியைத் தூண்டிவிட்ட என் முக்கிய எதிரிக்கும் அவரது கூட்டாளிகளுக்கும் நன்றி. இன்னும் தமிழ்மணத்திலேயே இருந்து படுத்துவேன் என்றும் கூறி வைக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

36 comments:

Anonymous said...

Well done dondu

Anonymous said...

தமிழ்மணம் மூலமா பிச்சை எடுத்து வயிறு வளர்க்குறேன்னு சொல்லு?

Anonymous said...

சார், நீங்க கூகுள் டாக்கில் கானோமே? சிங்கப்பூர் நேரப்படி காலை 9மணிக்கு? காலையில் பல் விளக்காமலே பதிவு போடும் ஒரே பிராணி நீங்கள்தானாமே?

Anonymous said...

புல் ஷிட், நீ இன்னுமா உயிரோட இருக்கே? முகமூடி செத்த போதே நீயும் செத்து போயிருப்பேன்னுல்ல நெனைச்சேன்?

Anonymous said...

சார், ஆகஸ்டு ஐந்தாம் தேதி நாம் நடேசன் முதலியார் பார்க்கில் சந்திக்கிறோமா இல்லை வழக்கம்போல உட்லண்ட்சிலா? நான் உங்களுக்கு தொலைபேசி செய்து விபரம் கேட்பேன்.

Anonymous said...

ஓசியில் கோழியும் பிரியாணியும் சிகரெட்டும் பீரும் வாங்கி அடித்தபோதே நினைத்தேன். நீ சாவுகிராக்கின்னு!

Anonymous said...

எங்கள் மொட்டை பாஸையா எதிர்க்கிறே? எங்கள் கட்சி ஆட்களிடம் மொழிமாற்று வேலை வாங்க உனக்கு வெக்கமா இல்லே?

Anonymous said...

எவனாச்சும் கூட்டம் நடத்தினால் ஓசில முட்டை போண்டா தின்பே. சுத்தமான அசைவம். இதில பாப்பான்னு வேற பெருமையாசொல்லிக்கிறது!

வெட்கம் கெட்ட ஜென்மம்.

Anonymous said...

சார் மேலே வந்து எழுதியது யார் என்று எனக்கு தெரியும். அவன் வேற யாரும் இல்லே என் நெருங்கிய தோஸ்து. இரவுக்கழுகு.

அதர் ஆப்சனில் பின்னூட்டுவதற்கு மன்னிக்கவும். எங்கள் ஆபீசில் ப்ளாக்கர் தடை செய்து விட்டார்கள்.

Anonymous said...

வாழ்த்துக்கள் டோண்டு ஸார்.. இதுவும் ஒரு தமிழனுக்குக் கிடைத்த பெருமைதான். அதிலும் மூத்த வலைப்பதிவராகிய உங்களை சக பதிவர் என்ற முறையில் வாழ்த்துகிறேன்..

(உங்களைத் தாக்கி எழுதும் கமெண்ட்டுகளை ஏன் நீங்கள் அனுமதிக்கிறீர்கள்? எனக்குப் புரியவில்லை. என்னை எப்படியெல்லாம் திட்டுகிறார்கள் என்று வந்து பாருங்கள் என்று உங்கள் மீது படிக்கின்றவர்களுக்கு ஒரு சிம்பதி உருவாக்கவா? எதாக இருந்தாலும் மட்டுறுத்தலை மேற்கொள்ளுங்களேன்.. அனானியாக வருகின்ற என்னைப் போன்றவர்கள்கூட அதன் பின் தைரியமாக பெயரோடு வருவோம்)

dondu(#11168674346665545885) said...

//வாழ்த்துக்கள் டோண்டு ஸார்.. இதுவும் ஒரு தமிழனுக்குக் கிடைத்த பெருமைதான். அதிலும் மூத்த வலைப்பதிவராகிய உங்களை சக பதிவர் என்ற முறையில் வாழ்த்துகிறேன்..//
நன்றி.

//(உங்களைத் தாக்கி எழுதும் கமெண்ட்டுகளை ஏன் நீங்கள் அனுமதிக்கிறீர்கள்? எனக்குப் புரியவில்லை. என்னை எப்படியெல்லாம் திட்டுகிறார்கள் என்று வந்து பாருங்கள் என்று உங்கள் மீது படிக்கின்றவர்களுக்கு ஒரு சிம்பதி உருவாக்கவா?//
இனிமேல் எனக்கு சிம்பதி வந்து நான் என்ன செய்யப் போகிறேன்? கண்டிப்பாக அதற்கு இல்லை.

//எதாக இருந்தாலும் மட்டுறுத்தலை மேற்கொள்ளுங்களேன்.. அனானியாக வருகின்ற என்னைப் போன்றவர்கள்கூட அதன் பின் தைரியமாக பெயரோடு வருவோம்)//
இங்கு வந்துள்ளப் பின்னூட்டங்களை மட்டுறுத்தி தடுத்தி நிறுத்தியது அனேகம். இவை கொஞ்சம் பரவாயில்லை போன்ற ரகம். பாவம் அவர்களும் என்ன செய்வார்கள்? என்னைத் தேவையில்லாமல் சீண்டி வளர்த்து விட்டார்கள். ஆகவே நன்றி கூட கூறினேனே அதற்கு. ஏதோ கொஞ்சம்போல குரைத்து விட்டுப் போகட்டுமே என்ற எண்ணமே முக்கியக் காரணம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

ஐயா...இவர்கள் சொல்வது போல் நீங்கள் நிசமாலுமே மாமிச பட்சிணியா? அப்படியென்றால், தயவு செய்து நிறுத்தவும்..கோழியெல்லாம் இப்ப யானை விலைங்க சாமி!!!

dondu(#11168674346665545885) said...

கோழி திங்க முடியாதவன்,

எப்பவாவது சாப்பிடுவதில் என்ன ஆகிவிடப் போகிறது?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

ப்ரோஸ்.காம்மின் ஹீரோ டோண்டு ஐய்யா அவர்களுக்கு வாழ்துக்கள்!

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

vazhthugaL

Anonymous said...

Another classic case of 'தட்டுங்கள் திறக்கப்படும்'. வாழ்த்துகள் ! வணக்கங்கள் !! proud of your achievements - shivatma

dondu(#11168674346665545885) said...

நன்றி டோண்டு ரசிகர் மன்றம், சிவா மற்றும் சிவாத்மா.

சிவாத்மா எனது பழைய பதிவாம் "தட்டுங்கள் திறக்கப்படும்" ஐ ஞாபகம் வைத்திருப்பதற்கு நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

இது என்ன பிரமாதம். நான் 1 மணி நேரம் கூகிலில் தேடியே தமிழ் பாண்டை கண்டுபிடித்து 99 டாலர் சேமித்து விட்டேனே. இது என் சொந்த கணிணியாகவும் வேறு வழியே இல்லை என்றும் இருந்திருந்தால், 99 டாலர் கொடுதிருப்பேன்.

dondu(#11168674346665545885) said...

//இது என் சொந்த கணிணியாகவும் வேறு வழியே இல்லை என்றும் இருந்திருந்தால், 99 டாலர் கொடுதிருப்பேன்.//
எதற்கு 99 டாலர் தர வேண்டும்? புரியவில்லையே. விளக்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மா சிவகுமார் said...

தமிழ் மொழியின் கொடியை இன்னொரு தளத்திலும் நாட்டிய உங்களுக்கு வாழ்த்துக்கள்.

அனானி சொன்னது போல பொருத்தமில்லாத பின்னூட்டங்களை அனுமதிக்கதீர்கள். இது வரை அனுமதித்ததையும் நீக்கி விடுங்கள்.

அன்புடன்,

மா சிவகுமார்

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<--எதற்கு 99 டாலர் தர வேண்டும்? புரியவில்லையே. விளக்கவும் -->
மைக்ரோசாப்ட் இனையதளத்தில் தேடினால் அந்த FONT என் PC-ல் இறக்குவதற்க்கு 99 டாலர் கட்ட வெண்டும் என்றான்

Anonymous said...

மன்னிக்கணும் டோண்டு சார். ஒரு திராவிட பதிவரின் ஒரு இடுகையில் நான் இட்ட பின்னூட்டம் இது. அதை சம்பந்தப்பட்ட பதிவர் போடுவார் என நான் நினைக்கவில்லை. ஆகவே அதை இங்கும் போடுகிறேன். உங்களை மரியாதைக் குறைவாக ரெஃபர் செய்ததற்கு மன்னிக்கவும். ஏனெனில் உங்கள் கருத்துக்களுடன் மாறுபடுபவன் நான். உங்கள் சகிப்புத் தன்மை எப்படியிருக்குன்னு பாத்துடறேன்.

"என்ன லக்கி, என்னோட ரெண்டு பின்னூட்டங்களை போட மனசில்லையா? இல்லே தைரியமில்லையா? ஒன்னோட எஜமான் போலி டோண்டு கோவிப்பான்னு பயமா?

மறுபடி சுருக்கமா கேக்கறேன். அந்தக் கெழவன் போலி ரேஞ்சுல பின்னூட்டம் போடறான்னு சொன்னதை நிரூபி. சட்னி வடை போல ஆளுங்கள்ளாம் இன்னும் இருக்கச்சே போலி திருந்திட்டான்னு எப்படி சொல்லற நீ?

திருவொத்தியூர்
திருவள்ளுவன்

dondu(#11168674346665545885) said...

பாவம் சம்பந்தப்பட்ட திராவிட பதிவர். ஒரு காலத்தில் போலி டோண்டுவை ஆக்ரோஷமாக எதிர்த்தவர். போலி நிஜமாகவே ஆண்பிள்ளையா என அவனை தைரியமாகக் கேட்டவர். கருத்து.காமில் பல முறை அவனுடன் மோதியவர். இப்போது என்னவென்றால் போலி தன்மேல் கோபம் குறைந்து இருப்பதாக நம்புபவர்.

ஏனெனில், பிறகு அவர் தனிப்பட்ட தகவல்கள் போலியிடம் மாட்ட, அவனால் பிளாக்மெயில் செய்யப்படுகிறவர். அவன் சொல்வதை கேட்காவிட்டால் அவருக்கு மிகுந்த இழப்பு வரும்போல. ஆகவே இம்மாதிரி கேனத்தனமான பதிவெல்லாம் போட வேண்டியிருக்கிறது அவருக்கு. என்ன செய்வது விதி.

உங்கள் பின்னூட்டங்களை அவர் போட்டால் அவருக்கு பதிலாக நீங்களா போலியிடம் உதை வாங்கப் போகிறீர்கள்?

வேறு வேலை இருந்தால் பாருங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//பாவம் சம்பந்தப்பட்ட திராவிட பதிவர். ஒரு காலத்தில் போலி டோண்டுவை ஆக்ரோஷமாக எதிர்த்தவர். போலி நிஜமாகவே ஆண்பிள்ளையா என அவனை தைரியமாகக் கேட்டவர். கருத்து.காமில் பல முறை அவனுடன் மோதியவர். இப்போது என்னவென்றால் போலி தன்மேல் கோபம் குறைந்து இருப்பதாக நம்புபவர்.

ஏனெனில், பிறகு அவர் தனிப்பட்ட தகவல்கள் போலியிடம் மாட்ட, அவனால் பிளாக்மெயில் செய்யப்படுகிறவர். அவன் சொல்வதை கேட்காவிட்டால் அவருக்கு மிகுந்த இழப்பு வரும்போல. ஆகவே இம்மாதிரி கேனத்தனமான பதிவெல்லாம் போட வேண்டியிருக்கிறது அவருக்கு. என்ன செய்வது விதி.

உங்கள் பின்னூட்டங்களை அவர் போட்டால் அவருக்கு பதிலாக நீங்களா போலியிடம் உதை வாங்கப் போகிறீர்கள்?

வேறு வேலை இருந்தால் பாருங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்//

Cooooll.. finish :)))))))))))

Anonymous said...

//பாவம் சம்பந்தப்பட்ட திராவிட பதிவர். ஒரு காலத்தில் போலி டோண்டுவை ஆக்ரோஷமாக எதிர்த்தவர். போலி நிஜமாகவே ஆண்பிள்ளையா என அவனை தைரியமாகக் கேட்டவர். கருத்து.காமில் பல முறை அவனுடன் மோதியவர். இப்போது என்னவென்றால் போலி தன்மேல் கோபம் குறைந்து இருப்பதாக நம்புபவர்.

ஏனெனில், பிறகு அவர் தனிப்பட்ட தகவல்கள் போலியிடம் மாட்ட, அவனால் பிளாக்மெயில் செய்யப்படுகிறவர். அவன் சொல்வதை கேட்காவிட்டால் அவருக்கு மிகுந்த இழப்பு வரும்போல. ஆகவே இம்மாதிரி கேனத்தனமான பதிவெல்லாம் போட வேண்டியிருக்கிறது அவருக்கு. என்ன செய்வது விதி.

உங்கள் பின்னூட்டங்களை அவர் போட்டால் அவருக்கு பதிலாக நீங்களா போலியிடம் உதை வாங்கப் போகிறீர்கள்?

வேறு வேலை இருந்தால் பாருங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்//


Dondu Adichaa Six

Anonymous said...

//திருவொத்தியூர்
திருவள்ளுவன்
//

இதுவும் முரளி மனோஹர் சார்தானா?

Pot"tea" kadai said...

கமெண்டுகளை விட அதை "விளித்தவர்களின்" பெயர்கள் அருமை

கீப் இட் அப்

Anonymous said...

//பாவம் சம்பந்தப்பட்ட திராவிட பதிவர்//

யாரைச் சொல்றீங்க.கோவி.(முண்டக்)கண்ண அம்மன் அய்யாவைச் சொல்றீங்களா?

dondu(#11168674346665545885) said...

//யாரைச் சொல்றீங்க.கோவி. அய்யாவைச் சொல்றீங்களா?//

இல்லை. கண்டிப்பாக இல்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//யாரைச் சொல்றீங்க.கோவி. அய்யாவைச் சொல்றீங்களா?//

இல்லை. கண்டிப்பாக இல்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன் ///

why the hell not ? he is also talking to the so called "poli" everyday.

சீனு said...

//அனானி சொன்னது போல பொருத்தமில்லாத பின்னூட்டங்களை அனுமதிக்கதீர்கள். இது வரை அனுமதித்ததையும் நீக்கி விடுங்கள்.//

ஆமாம் சார்.

suvanappiriyan said...

Mr Ragavan!

Vazhtthukkal

Suvanappiriyan

dondu(#11168674346665545885) said...

நன்றி சுவனப்பிரியன் அவர்களே. ஹாஜியார் நலமா? அவருக்கு எனது வணக்கங்கKஐ தெரிவிக்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

mynah said...

திரு ராகவன் அவர்களுக்கு,
நான் உங்களது பதிவுகளைப் படித்து ரசிக்கும் ஒரு ரசிகை. (இணைய தளத்திற்கு நான் புதியவள். எனவே உங்களின் 2007 பதிவுகளை இப்பொழுதுதான் பார்க்க முடிந்தது). உங்கள் எழுத்துக்கள் எனக்குள் மொழி பெயர்க்கும் (தமிழ் - ஆங்கிலம், ஆங்கிலம் -- தமிழ்) ஆர்வத்தைத் தூண்டி விட்டது. இதற்கு உங்களிடம் அறிவுரை கேட்கலாம் என்றால் உங்கள் ஈமெயில் முகவரி என்னிடம் இல்லை. தயவு செய்து உதவ முடியுமா?
prez.com (Tamil) பதிய நினைத்தேன். அதற்கு முன் உங்கள் கருத்து தேவை.
தயவு செய்து உதவ வேண்டுமாய்க் கோருகிரேன்.
நன்றி
மைதிலி

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது