கடந்த காலத்துக்கு செல்வது என்பது பலருக்கு பிடிக்கும். எனக்கும்தான். அதே சமயம் அது முடியாது என்பதும் தெரியும். அப்படியே கற்பனை செய்து போனாலும் தற்கால சிந்தனைகள் அறிவுகள் ஆகியவை அவற்றை முழுமையாக அனுபவிக்க விடாது. இது பற்றி ஏற்கனவே ஒரு பதிவு போட்டுள்ளேன்.
நான் அப்பதிவில் குறிப்பிட்டபடி அந்தக் காலம் போல இப்போதெல்லாம் அதிகம் புத்தகம் படிக்க பொறுமையில்லை. அப்போதெல்லாம் ஒரு சராசரி புத்தகம் ஆங்கிலத்தில் இருந்தால் ஒரு நிமிடத்திற்கு ஒரு பக்கம் என்ற வேகத்தில் படிப்பேன். தமிழாக இருந்தால் ஒரு நிமிடத்துக்கு இரு பக்கங்கள். ஆனால் இப்போது, சில பக்கங்கள் படித்த உடனேயே ஆர்வம் குன்றி விடுகிறது. வேறு வேலையில் மனம் செல்கிறது. நூலகத்திலிருந்து கொண்டு வரும் சில புத்தகங்கள் படிக்கப்படாமலேயே திருப்பி கொடுக்கப்பட்டுள்ளன.
பழைய வேகத்தில் புத்தகங்கள் படிப்பது ரொம்ப குறைந்து விட்டது. 2003, 2005 மற்றும் 2007-ல் மூன்று புத்தகங்களை அவ்வாறு முடிக்க முடிந்தது. அவை முறையே ஹாரி பாட்டர் புத்தகத்தின் ஐந்தாவது, ஆறாவது மற்றும் ஏழாவது புத்தகங்கள். நேற்றைக்கு புத்தகம் வாங்கி வந்ததும் நிறைய வேலைகள். இருப்பினும் நேரம் திருடி படித்தேன். இன்று கணினியை திறந்து வைத்திருந்தாலும் வேலை எல்லாவற்றையும் ஒத்திப் போட்டு விட்டு முப்பது வருடங்களுக்கு முந்தைய ராகவனாக மாறினேன். அந்த அளவுக்கு அந்தக் காலம் திரும்ப வந்தது.
ஹாரி பாட்டரின் கடைசி புத்தகம் என்பதால் இது பற்றிய எதிர்பார்ப்புகள் மிக அதிகமாகவே இருந்தன. கதையின் ஓட்டத்தை ஊகித்து பலர் பல கதைகள் விட்டார்கள். அவ்வாறு நான் படித்ததில் ஒன்று கூட உண்மையில்லை. இந்தப் புத்தகம் என்னைப் பொருத்தவரை முழுக்கவும் புதிதாகவே இருந்தது. சும்மா சொல்லக்கூடாது. ரௌலிங் பின்னி பெடல் எடுத்துள்ளார். இரண்டு நாட்கள் முன்னால் கதையின் அச்சிட்ட பக்கங்களை சில நாதாறிகள் இணையத்தில் வெளியிட்டு இழிந்த காரியம் செய்தனர். என்னிடம் அதை கூறிய எனது நண்பர் சுட்டி வேண்டுமா எனக் கேட்டார். வேண்டவே வேண்டாம் எனக் கூறிவிட்டேன்.
ரௌலிங் ஏற்கனவே சொன்னது போல பல மரணங்கள் நிகழ்கின்றன. யார் யார் என்று நான் கூறப் போவதில்லை நன்மைக்கும் தீமைக்கும் இடையில் நடக்கும் போராட்டத்தில் வேடிக்கை விளையாட்டு ஒன்றும் இல்லை என்பது இப்புத்தகத்தின் அடிப்படை நாதம். அதை இந்த மரணங்கள் உறுதி செய்கின்றன. வெற்றியோ தோல்வியோ, கடமையைச் செய்யவும் என்று கூறிய கீதாசார்யனின் அறிவுரையைக் கடைபிடிக்கிறான், பகவத் கீதையின் பெயரைக் கூட கேட்டிருக்க முடியாத ஹாரி பாட்டர். அவன் தோழர்கள் ரானும், ஹெர்மியானும் அவனுக்கு உறுதுணையாக இருக்கின்றனர். கதையின் பிற்பகுதியில் டம்பிள்டோரேயின் சேனை வேறு வந்து சேர்ந்து கொள்கிறது. மந்திரச் சொற்கள் வழக்கம் போல லத்தீன மொழியில் இருப்பது கம்பீரமாக உள்ளது. டாபி, க்ரீச்சர் போன்ற எல்ஃபுகள் அமர்க்களம் செய்கின்றன. ஆறாவது மற்றும் ஏழாவது புத்தகங்கள் ரொம்பவும் சீரியசான விஷயங்களை கூறுகின்றன. இதற்கு மேல் கதையை கூற மாட்டேன். போன தடவை ராபணா என்று போட்டு உடைத்ததைப் போல் இம்முறை சேய்ய மாட்டேன்.
எதேச்சையாக ஆரம்பித்த ஹாரி பாட்டர் கதை இப்படி பல கோடிக்கணக்கான வாசகர்களை புரட்டிப் போட்டு விட்டது. மிக அதிக அளவு விற்பனையான புத்தகங்களில் இவையும் அடங்கும்.
கூழாங்கல்லில் இருந்து மலைகளை உருவாக்க நான்கு வழிகள்
-
பயணங்கள் வழியாக இயற்கையை விரித்துக்கொள்ளும் கனவு இன்று நம்மில் சிலருக்கு
உண்டு. ஆனால் அப்பயணத்தை எப்படி நடத்துவதென்று தெரிவதில்லை. பெரும்பாலும்
தவறான சுற்ற...
14 hours ago
24 comments:
படம் தான் வந்து விட்டதே, சிரியஸ் பிளாக் இந்தப்பகுதியில் இறக்கிறார் என்பதையாவது சொல்லலாமே ?
ஆறில் யார், ஏழில் யார் எல்லாம் இறந்துபோவார்கள் என்று சொல்லவேண்டாம். கதை சுவாரிசியம் குறையக்கூடும்.
மேலும், இப்போதெல்லாம் ஹாரி பாட்டரை படத்தில் பார்த்துத் தெரிந்து கொள்பவர்கள்தான் அதிகம். புத்தகத்தைப் படித்து தெரிந்து கொள்பவர்கள் மிகக்குறைவு.
சிறியல் பிளாக் ஐந்தாம் பகுதியிலேயே இறந்து விடுகிறாரே? ஆறாம் பகுதி வந்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது கூறினால் பாதகம் இல்லை. ஆனால் ஏழாவது பகுதி கதையை இப்போது கூறாமல் இருப்பதே நலம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
படித்து விட்டீர்களா? :-)
இப்பொழுதுதான் இளவஞ்சியின் பழைய பதிவில் இதைப் பற்றி ஒரு பின்னூட்டம் இட்டேன். நீங்கள் லேட்டஸ்டாக பதிவிட்டிருக்கிறீர்கள். நன்றி!
எழுத்துப் பிழை தலைப்பில். Hallows என்று வந்திருக்க வேண்டியது Hollows என்று வந்து விட்டது.
திருத்தி விடுகிறேன். ஆனால் ஒன்று, தமிழ்மணம் லிஸ்டில் பழைய தலைப்புத்தான் வரும்.
அன்புடன்,
டோண்டு ராகவ
// இதற்கு மேல் கதையை கூற மாட்டேன். போன தடவை ராபணா என்று போட்டு உடைத்ததைப் போல் இம்முறை சேய்ய மாட்டேன்.
//
வணக்கம் டோண்டு.
ரொம்ப நன்றி ;)
வெளிநாடு(இந்தியா) சென்றிருக்கும் மகன் ஊர் திரும்பியவுடன் சேர்ந்து படிக்க பொறுமையைக் கடைபிடித்துக் கொண்டுள்ளேன் !
எழுத்துப்பிழை ஒழுங்கா பார்க்க தெரியலை, நீ எல்லாம் ஒரு மொழிமாற்றி?
அடத்தூ..
பாப்பார பரதேசி நாயே!
மடிப்பாக்கம் மக்கு அவர்களுக்கு,
எழுத்து பிழை இருக்கா என பார்ப்பது ப்ருஃப் ரீடர் வேலை. நீ போய் உன் வேலைய பாரு கீழ்மகனே.
உன்னை எல்லாம் நம்பி வேலை கொடுக்கிறான் பாரு, அவனை முதலில் செருப்பால் அடிக்க வேண்டும்.
///மடிப்பாக்கம் மக்கு அவர்களுக்கு,
எழுத்து பிழை இருக்கா என பார்ப்பது ப்ருஃப் ரீடர் வேலை. நீ போய் உன் வேலைய பாரு கீழ்மகனே. ///
மடிப்பாக்கம் மக்குவுக்கு நல்ல திட்டு. தம்பிக்கு போலியிடம் கூலிக்கு வேலை.
டோண்டு ரொம்ப சுயநலமா இருக்கீங்க... குழந்தை மாதிரி கதைய சொல்ல மாட்டேன்னு அடம் புடிக்கீறீங்க...
யான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெற வேண்டும் என்று பெரியவர்கள் கூறியுள்ளார்கள். சும்மா கொஞ்சம் அவுத்து வுட வேண்டியதுதானே.... அத விட்டுட்டு.....
Dondu Anna,
Unless Indians start respecting the IPR (Intellectual property Rights) India , with all its knowledge might will never succeed. It is not the tools that matters, but the intend and power of integrity will make the race succeed.
I was in USA for short period and I was really taken aback by the amount of respect they pay to IPR. You cannot borrow unregistered (Thiruttu VCD) VCD and Tapes.
Thanks for supporting this little bit.
Regards,
Murali Natarajan
Singapore
//மடிப்பாக்கம் said...
உன்னை எல்லாம் நம்பி வேலை கொடுக்கிறான் பாரு, அவனை முதலில் செருப்பால் அடிக்க வேண்டும//
உனக்கு வேலையே இல்லாமல் போக போகிறதுடா.வையிட் பண்ணுடா
ஹாரி பாட்டர் = ஹரி க்ருஷ்ணன். ரொவ்லிங் எழுதியது நம்ம கிருஷ்ண பகவான் கதை தான்...அதான் நம்ம மாயா ஜாலங்கள் எல்லாம் அதுல வருது...என்ன சரியா டோண்டு சார்?
இதை மற்றவர்கள் யாரும் நோண்டி நொங்கெடுக்க வேண்டாம் எண்டு கேட்டுக்கொள்கிறேன்...நான் பொல்லாதவன் ஆகிவிடுவேன்..
//ஷோப்பிங் - www.futurebazaar.com - ஒண்லினே ஷோப்பிங் கம்மி விளாயில்//
இப்படி spelling mistakeஉடன் gmailலில் ஒரு ad வருகிறது. இதுக்கு தமிழ்.haplog.காம் பரவாயில்லை.
It is really true that Harry Potter series are the sugar coated sweet mints concealing Hindu philosophy and theat the Christian world is committed to outwit it through its Christina version. Yet, it has not succeeded so far. Your presumptiomt that harry does not know Geeta is incorrect. If you read the volumes deep, you will understand.
கடைசி சேப்டர்கள் குழப்புகின்றன. மந்திர கத்தியை பேங்க் நடத்தும் கோப்லின் பிடுங்கிக்கொண்டுவிட அது இல்லாமல் ட்ராகன் மேல் ஏறி ஹாரி அண்ட் கோ தப்பிக்கிறார்கள்.
ஆனால், கடைசியில் "நாகினியை" ஹாரி பாட்டரின் நண்பன் அந்த கத்தியால் வெட்டுகிறான். அவனுக்கு கத்தி எப்படி கிடைத்தது?
ஒண்ணும் புரியலடா சாமி.
ஒரு குழப்பமும் இல்லை. ஜிக்சா புதிர்கள் போல துண்டுகள் அழகாகப் பொருந்தின. அந்த கத்தியின் முதல் சொந்தக்காரர் போல உண்மையான வீரம் காட்டுபவர்களுக்கு அக்கத்தி தானாகவே கிடைக்கும். அதுவும் அத்தொப்பி வழியாகவே. இரண்டாம் புத்தகத்தில் ஹாரிக்கும் அக்கத்தி அதே முறையில் கிடைக்கிறது.
அந்த கோப்லின் முட்டாள். யாராலும் அக்கத்தியை நிரந்தரமாக வைத்திருக்க இயலாது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
தெளிவுபடுத்தியமைக்கு நன்றி.
தமிழ்மணத்தில் உங்களைப்போன்ற தெளிவுள்ளவர்கள் இருப்பதால்தான் அதற்கு ஓரளவேனும் டிமாண்ட் இருக்கிறது. மற்றபடி சாக்கடைதான். அதில் அல்லி போல நீங்கள்.
என்ன, சாக்கடையில் இருக்கும்வரை எடுத்து அழகு பார்க்கவோ, முகர்ந்து நறுமணம் (?) அறியவோ முடியாது.
ஆனால், சாக்கடையின் "கருப்பு" நிறத்திற்கு அல்லியின் வெண்மை வித்தியாசம் காட்டும் அழகில் அல்லி சாக்கடையிலேயே இருக்க முடிவு செய்துவிட்டது.
தூரத்தில் இருந்துதான் ரசிக்க முடிகிறது.
புதிர்கள் போட்டு நாளாச்சே....புதிர்கள் கொஞ்சம் போடுங்களேன்...
புதிர் ரசிகன்,
டோண்டு ரசிகர் மன்றம்
பெங்களூர்...:))
இதனை யாராவது தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டால் வாங்கி படிக்க தயாராக இருக்கிறேன்...
நமது மொழியில் வெளியிட பர்மிஷன் கொடுக்கமாட்டாங்களா ன்ன அந்த பதிப்பகத்தார் ?
ஏன் இன்னும் வரவில்லை ?
//இதனை யாராவது தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டால் வாங்கி படிக்க தயாராக இருக்கிறேன்...//
தமிழில் இன்னும் ஒரு ஹாரி பாட்டர் புத்தகமும் வரவில்லை, எனக்கு தெரிந்து.
குஜராத்தியில் அவற்றை மொழிபெயர்த்தவரை சந்தித்து பேசியிருக்கிறேன்.
தமிழில் மொழி பெயர்க்க வாய்ப்பு வந்தால் செய்ய காத்திருக்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//புதிர்கள் போட்டு நாளாச்சே....புதிர்கள் கொஞ்சம் போடுங்களேன்...//
போட்டா போச்சு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அருமையான புத்தகம். இதன் தமிழாக்கமும் கிடைத்தால் இன்னமும் பலர் படிக்கலாம்.
//இதன் தமிழாக்கமும் கிடைத்தால் இன்னமும் பலர் படிக்கலாம்.//
படிக்கலாம்தான். ஆனால் என்ன செய்வது, ஒரு புத்தகம் கூட இதுவரையில் வரவில்லையே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment