நான் நடித்த நாடகங்கள் எல்லாமே - அவற்றில் இரண்டு நாடகங்கள் தவிர - நான் சாரணர் இயக்கத்தில் இருந்தபோது நடந்தவை. முதலில் அந்த விதிவிலக்கு நாடகங்களை பற்றி கூறிவிட்டால் பிறகு பதிவில் சாரணர் இயக்கத்தைப் பற்றி எழுத தோதாக இருக்கும். நான் இந்தப் பதிவில் குறிப்பிட்ட அபிமன்யு வேடம் இதில்தான் போட்டேன். மாயா பஜார் கதை. சமீபத்தில் 1954-ல். அப்போது எனக்கு வயது 8. வத்சலாவாக நடித்தது ஒரு ஆறு வயது பெண். அதிலிருந்து அபிமன்யு எனக்கு மகாபாரதத்தில் மிகப் பிடித்த பாத்திரமாகிப் போனான். மாயா பஜார் (1957), வீர அபிமன்யு (1965) ஆகிய படங்கள் எனக்கு பிடித்த படங்கள்.
எனக்கு சுமார் ஆறு வயதாக இருக்கும் போது அப்போது படித்த வகுப்புக்குள்ளேயே ராமாயண நாடகம் போட்டார்கள். நான் டீச்சரின் ஃபேவரைட் மாணவன் ஆனதாலும், என் பெயர் பொருத்தத்தாலும் எனக்கு ராமர் வேடம், என்னுடன் கூடவே திரிந்து கொண்டிருக்கும் வெங்கடேசனுக்கு லட்சுமணன் வேடம், மைதிலி என்ற பெயர் இருந்ததால் அப்பெண்ணுக்கு சீதை வேடம், அன்று வெள்ளிக் கிழமை எண்ணெய் ஸ்நானம் செய்து கூந்தலை விரித்து போட்டு வந்ததால் கீதா என்ற அப்பெண்ணுக்கு கைகேயி வேடம். மற்ற சாய்ஸ்கள் ரேண்டமாக வந்தன. விஸ்வாமித்திரர் ராமனை தன் யாகத்தைக் காக்க அழைத்து போவதிலிருந்து ராமர் வனவாசம் செல்லும் வரை நாடகம். மேலும் நடந்திருக்கும், அதற்குள் பெல் அடித்து விட்டார்கள். அதில் நான் கடைசியாக பார்த்தபோது, ராமர் காட்டுக்கு போவதால், தசரதர் (கணேசன்) குப்புற படுத்துக்கொண்டு மயக்கமாக இருந்தார். விசுவாமித்திரரும் (ரங்கநாதன்) ராவணனும் (சந்தானம்) குனிந்து பார்த்து கொண்டு தசரதருக்கு கிச்சு கிச்சு மூட்டிக் கொண்டிருந்தார்கள். பெல் அடிக்க, தசரதர் உட்பட எல்லோரும் பைகளை தூக்கிக் கொண்டு ஓவென்று கத்திக் கொண்டே வீட்டுக்கு ஓடினோம்.
சாரணர் இயக்கத்தில் cubs (7 - 12 வயது), scouts (> 7 - 12 வயது) மற்றும் rovers (> 18 வயது) பிரிவுகள் உண்டு. 7 லிருந்து 16 வயது வரை முதல் இரண்டு பிரிவுகளில் செயலாற்றியிருக்கிறேன். கேம்புகளுக்கு செல்லுவோம். இரவுகளில் கேம்ப் ஃபயர் நடக்கும். நெருப்பு மூட்டி அதைச் சுற்றி உட்கார்ந்திருப்போம். cubs பிரிவில் அறுவர் கொண்ட குழுக்களாக பிரிந்திருப்போம். குழுத்தலைவருக்கு சிக்ஸர் என்று பெயர். ஒவ்வொரு குழுவாக வந்து ஏதேனும் பெர்ஃபார்மன்ஸ் தர வேண்டும். அவை பாடல்களாக இருக்கலாம் கத்தல்களாக (yelling) இருக்கலாம். சிறு நாடகங்களாகவும் இருக்கலாம். மேக்கப் ஒன்றும் கிடையாது.
கேம்புகள் பெரும்பாலும் ஆவடியில் டோனக்கேலா என்ற இடத்தில் நடக்கும். ஆவடி வரை ரயிலில் சென்று கேம்ப் நடக்கும் இடத்துக்கு நடந்து செல்வோம். போகும் போது களைப்பு தெரியாதபடி பாட்டுகள். உதாரணத்துக்கு:
ராமசாமிக்கு தோட்டம் உண்டு ஆவடி பக்கத்திலே
அங்கே சில நாய்கள் உண்டு ஆவடி பக்கத்திலே
அங்கே பாத்தா லொள் லொள் இங்கே பாத்தா லொள் லொள்
எங்கே பாத்தாலும் லொள் லொள்
ராமசாமிக்கு தோட்டம் உண்டு ஆவடி பக்கத்திலே
அங்கே சில பூனைகள் உண்டு ஆவடி பக்கத்திலே
அங்கே பாத்தா மியாவ் மியாவ் இங்கே பாத்தா மியாவ் மியாவ்
எங்கே பாத்தாலும் மியாவ் மியாவ்
இதே வகையில் கிளிகள், காக்காய்கள் என்றெல்லாம் வெவ்வேறு சுருதியில் கத்திக்கொண்டே செல்வோம். உள்ளூர் நாய்கள் பின்னணி இசையாக ஊளையிடும். இன்னும் ஓரிரு பாட்டுகள்:
We all belong to Bharat Scouts
We all belong to Bharat Scouts
We all belong to Bharat Scouts
And so say all of us.
Maugli is hunting
Kill Sherkhan
Skin the cattle eater
Kill Sherkhan
இரண்டாம் பாட்டில் ஒரு விசேஷம். கப்ஸ் ஆக இருக்கும்போது பல பதவிகள் Rudyard Kipling எழுதிய Jungle Book-ல் வரும் பாத்திரப் பெயர்களே. தலைவர் பெயர் அகேலா, உபதலைவர் பெயர் வைட் வூட் (நாங்கள் வைட்டூட்டு என்று கூப்பிடுவோம், போன மாதம்தான் என் அக்கால நண்பன் அதன் சரியான பெயரை எனக்கு சொன்னான்), பகீரா, பாலு, ஹாத்தி என்றெல்லாம் கூட இருந்தனர். மேலே உள்ள பாட்டில் வரும் ஷேர்கான் ஒரு புலி. அக்கதையின் ஒரே வில்லன் கூட.
யெல்லிங் எனப்படும் கத்தல் வேறுவகை. கேம்ப் ஃபயர் சமயம் இரவுக் குளிரை மறக்க செய்யப்படுவது. ஒரு உதாரணம்:
பூம சக்கா பூம சக்கா பூம் பூம் பூம்
ரக்க சக்கா ரக்க சக்கா ரா ரா ரா
பூம சக்கா ரக்க சக்கா
யார் நீங்கள்
நாங்கள் பாரத் ஸ்கௌட்ஸ் இது தெரியாதா?
எவ்வளவு உரக்க முடியுமா அவ்வளவு உரக்க கத்த வேண்டும். ஒவ்வொரு அடிக்கும் கையை டப்பாங்குத்து போடும் ஸ்டைலில் ஆட்ட வேண்டும். கடைசி அடி வரும்போது ஒரு கை விரலை உயர்த்தி ஒற்றைக் காலில் நின்று தன்னைத் தானே சுற்ற வேண்டும். பார்க்க வேடிக்கையாக இருக்கும். சுற்ற முடியாது பேலன்ஸ் தவறி சிலர் கீழே விழுவதும் உண்டு.
இப்போது நாடகங்கள். இவையும் கேம்ப் ஃபயர் போதுதான் அனேகமாக நடத்தப் படும். கற்பனை வரட்சி காரணமாக் பல நாடகங்கள் ரிபீட்டு என்று பலமுறை போடப்படும். ஒரு முறை எல்லா குழுக்களும் ஒரே நாடகத்தை ஒருவர் பின் ஒருவராக போட ஸ்கௌட் மாஸ்டர் டரியல் ஆனார். உதாரணத்துக்கு சில நாடகங்கள்:
முட்டாள்கள் வகுப்பு:
வாத்தியார்: சோமு பூமி உருண்டை என்பதற்கு ஆதாரம் கொடு.
சோமு: சார் ஆரஞ்சு பழத்தின் மேல் எரும்பை விட்டால் அது சுறிக் கொண்டு புறப்பட்ட இடத்துக்கே வரும். ஆகவே பூமி உருண்டை.
வாத்தியார்: கரெக்ட், சபாஷ்.
மாணிக்கம்: சார், வாழைப்பழத்தின் மேல் எறும்பை விட்டாலும் அப்படித்தான் ஆகும். ஆகவே உலகம் வாழைப்பழ வடிவமே.
ஆசிரியர்: (ஆழ்ந்த சிந்தனைக்கு பிறகு): கரெக்ட். உட்கார்
ஒரு பையன் லேட்டாக வர, ஆசிரியர் கேட்கிறார். இசக்கி, ஏன் லேட்?
இசக்கி: சார் ஸ்கூலுக்கு வரும்போது ஒரு கிழவி ஜானி ஜான் தெருவுக்கு வழி கேட்டாங்க. அவங்களை போய் கொண்டு விட்டேன். ஆனால் திரும்ப வரும் வழியை மறந்து விட்டேன்.
ஆசிரியர்: அப்புறம் என்ன ஆச்சு?
இசக்கி: அந்தக் கிழவிதான் சார் திரும்ப கொண்டு வந்து விட்டாங்க
இன்னொரு முக்கியமான நாடகம் "ஒற்றுமையில் உண்டு வாழ்வு" என்பதை விளக்குவதாகும்.
மரணப் படுக்கையில் தந்தை. அவருக்கு மூன்று பிள்ளைகள், ஒற்றுமையில்லாதவர்கள். தந்தை எல்லா பிள்ளைகளையும் அழைத்து, ஆளுக்கு ஒரு சுள்ளி கொடுப்பார். அதை உடைக்கும்படி கூறுவார். அவர்களும் சுலபமாக உடைப்பார்கள். பிறகு பல சுள்ளிகள் அடங்கிய காட்டு ஒன்றை கொடுப்பார். அதை உடக்க இயலாது. பின்னாலிருந்து ஒரு ஆழ்குரல் கேட்கும், "ஆகவே ஒற்றுமையில் உண்டு வாழ்வு, இல்லையேல் அனைவர்க்கும் தாழ்வு" என்று. ஒரே ஒரு நாள் மட்டும் சற்று வேறு சீன். நான் மரணப்படுக்கையிலிருக்கும் அப்பா வேடம் போட்டேன். ஒற்றை சுள்ளிகளை உடைத்தார்கள் பிள்ளைகள். கட்டு சுள்ளியை முதல் இரண்டு பிள்ளைகள் உடைக்க முடியாது மூன்றாம் பிள்ளையிடம் தர, அவன் தம் பிடித்து அதையும் உடைத்து தொலைத்தான். பிறகு என்ன எல்லோரும் (மரணப்படுக்கையில் இருக்கும் அப்பா உள்பட) எழுந்து ஓட்டம்தான்.
கை தட்டுவது கூட ஒரு கணித ஒழுக்கத்தில் இருக்கும். டக்டக்டடடக் டக்டக்டடடக் டக்டக்டடடக் (12123 12123 12123) என்பதற்கேற்ப தட்டி விட்டு அப்படியே விட வேண்டும் மூன்று முறைக்கு மேல் தட்டக்கூடாது. அவ்வாறு தட்டுவதற்கும் ஸ்கௌட் மாஸ்டர் Scout claps go என்று முதலில் கூற வேண்டும்.
அதெல்லாம் ஒரு கனாக்காலம். சாரணர் இயக்கம் பற்றி மேலும் அறிய நீங்கள் இந்த பக்கத்துக்கு போகலாம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
கூழாங்கல்லில் இருந்து மலைகளை உருவாக்க நான்கு வழிகள்
-
பயணங்கள் வழியாக இயற்கையை விரித்துக்கொள்ளும் கனவு இன்று நம்மில் சிலருக்கு
உண்டு. ஆனால் அப்பயணத்தை எப்படி நடத்துவதென்று தெரிவதில்லை. பெரும்பாலும்
தவறான சுற்ற...
7 hours ago
60 comments:
Wow Dondu Sir,
Really superb. It is always fun to remember good olden days. Thank you for making me to think about my school days.
\\கை தட்டுவது கூட ஒரு கணித ஒழுக்கத்தில் இருக்கும். டக்டக்டடடக் டக்டக்டடடக் டக்டக்டடடக் (12123 12123 12123) என்பதற்கேற்ப தட்டி விட்டு அப்படியே விட வேண்டும் மூன்று முறைக்கு மேல் தட்டக்கூடாது. //
அருமை டோண்டு சார்.. இன்னைக்கும் நாம் கும்மலாமா?
சிங்கமுத்து
நிச்சயமாக கும்மலாம். எல்லா சிங்கமுத்துகளும், சேத்தன் சம்பத்துகளும் வரலாம். ஆனால் யாரையும் வையாதே பாப்பா.
அன்புடன்,
டோண்டு ராகவன்
குட் போஸ்ட் !!!
அன்புள்ள டோண்டு,
சாரணர் இயக்கத்தில் மாணவர்களுக்கு சில பொது இடங்களில் பணி செய்ய வாய்ப்பு கொடுப்பார்கள்.
உதாரணமாக,திரு விழா காலங்களில் திருத்தலங்களில் மக்கள் கூட்டத்தினை ஒழுங்குபடுத்துவது போன்றவை.
உங்களுக்கு இதுபோன்ற அனுபவங்கள் உள்ளதா இருப்பின் பகிர்ந்துகொள்ளலாமே
அன்புடன்
அரவிந்தன்
பெங்களூர்
ராமசாமி என்று ஒரு பாடல் பற்றி கூறினீர்களே. எந்த ராமசாமி? அவர் சொந்த ஊர் ஈரோடா?
சிங்கமுத்து
//எந்த ராமசாமி? அவர் சொந்த ஊர் ஈரோடா?//
இல்லை. ஆவடி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//திரு விழா காலங்களில் திருத்தலங்களில் மக்கள் கூட்டத்தினை ஒழுங்குபடுத்துவது போன்றவை.
உங்களுக்கு இதுபோன்ற அனுபவங்கள் உள்ளதா இருப்பின் பகிர்ந்துகொள்ளலாமே//
துரதிர்ஷ்டவசமாக அவ்வாறு சேவை செய்யும் வாய்ப்புகள் கிட்டவில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு சார்.. பெரியார் திடலில் இருந்து வரிசையாக திராவிட குஞ்சுகள் வலைப்பூவுக்கு வருகின்றனவே?
http://mailango.blogspot.com/2007/10/blog-post_12.html
//பெரியார் திடலில் இருந்து வரிசையாக திராவிட குஞ்சுகள் வலைப்பூவுக்கு வருகின்றனவே?//
வரட்டுமே. நல்லதுதானே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ரெடி.. ஸ்டார்ட்... 1.2.3.
நான் வந்துட்டேன்...
டோண்டு சார்.. நீங்கள் படித்தது கோ-எட்டா? அப்படி படித்திருந்தால் பெண் நண்பர்கள் இருந்திருப்பார்களே?
சிங்கமுத்து
இன்னாபா..நோண்டு மாமாவுக்கு பத்து பின்னூட்டம் தான் அவரே போட்டுகிட்டு இருக்கார். ஒரு 30 போட்டு அவரை குஷி படுத்துங்க
ஹை சூப்பர் பார்ஸ்ட்டா ரிலீஸ் ஆகுது டோண்டு சார் பதிவுல கமெண்டு
டோண்டு சார் சமீபத்தில் 1960களில் உங்களுக்கு காதல் அனுபவங்கள் ஏதாவனு உண்டா?
சேத்தன் சம்பத்
முப்பது பின்னூட்டம் ஜுஜுபி...நானூறு பின்னூட்டம் வந்த பதிவு டோண்டு சார் பதிவு...போங்கடே...
ஏன் என்னை வம்புக்கு இழுக்கிறீர்கள் நோண்டு அய்யா?
சார், நீங்கள் பள்ளிக்காலத்தில் லவ்வியதுண்டா ?
அப்படி என்றால் குஷ்வந்த் சிங் பாணியில் அதை தொடராக எழுதுவதில் என்ன தயக்கம் ?
எட்டுவயசுல உச்சா போனது கூட நியாபகம் இருக்கும்போது, லவ் அனுபவங்கள், சைட் அடித்த அனுபவங்களை இந்த பதிவு போல் சுவையாக எழுதுங்களேன்...
டோண்டு சார்.. தினமும் ஒரு பதிவு போடுங்கள்.. உங்களுக்கு 40 பின்னூட்டத்துக்கு நாங்கள் கியாரண்டி..
இங்கே கும்மியடிப்பவர்கள் முதலில் சொந்த பெயரில் தில்லாக ஒரு பின்னூட்டம் போட்டுவிட்டு பிறகு தான் ஆரம்பிக்கவேண்டும்...
எங்களுடைய கமெண்ட்ஸ் எங்கே?
நங்கநல்லூர் அமுக
//டோண்டு சார்.. நீங்கள் படித்தது கோ-எட்டா? அப்படி படித்திருந்தால் பெண் நண்பர்கள் இருந்திருப்பார்களே?//
முதல் இரண்டு வகுப்புகள் மட்டுமே.
கிருபா, கீதா, மைதிலி, சியாமளா, வசந்தா, கோமளா, சாருமதி, பிருந்தா ஆகியோர் நண்பிகள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு சார் தற்சமயம் எலிக்குட்டி சோதனையில் இருப்பதால் உடனே பின்னூட்டங்கள் ரிலீஸ் ஆவாது என்று தெரிகிறது...
டோண்டு சாருக்கு இப்போதெல்லாம் அரைசெஞ்சுரிக்கு கம்மியாக பின்னூட்டங்கள் வருவதில்லை
சேத்தன் சம்பத்
//கிருபா, கீதா, மைதிலி, சியாமளா, வசந்தா, கோமளா, சாருமதி, பிருந்தா ஆகியோர் நண்பிகள்.///
சார் ரெண்டாப்புலே இவ்ளோ கேள்பிரண்டா ?
//கிருபா, கீதா, மைதிலி, சியாமளா, வசந்தா, கோமளா, சாருமதி, பிருந்தா ஆகியோர் நண்பிகள்.//
பிருந்தாவன கிருஷ்ணன் மாதிரி இருந்திருக்கீங்கன்னு சொல்லுங்க
அங்கமுத்து
நான் சமீபத்தில் 1961ல் திருவல்லிக்கேணி கே எஸ் அய்யர்வாள் அவர்களோடு லைட் அவுசில் தொடங்கி டிரிப்லிக்கேன் வரை சைட் அடித்துக் கொண்டே ஸ்டெல்லா மேரிஸ் க்யின் மேரிஸ், லேடி வெலிங்க்டன் என்று
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
ஹாய் ராகவ்? எப்படியிருக்கே? சமீபத்தில் 1954ல் நாம் ஒன்றாக படித்தது நினைவிருக்கா? தேவதாஸ் படம் ஸ்டார் தியேட்டரில் பார்த்தோமே? நினைவிருக்கா? டட்ச் ட்ரீட் முறையில் பாப்கார்ன் வாங்கி சாப்பிட்டோமே நினைவிருக்கா?
ஞாபகம் வருதே...
ஞாபகம் வருதே...
\\தில்லாக ஒரு பின்னூட்டம் போட்டுவிட்டு பிறகு தான் ஆரம்பிக்கவேண்டும்...//
நைசா கேப்புலே ஆப்பு வெக்கிறீயே மாமு..
கேப்பு
ஆப்பு
மாப்பு
இதெல்லாம்
இல்லாட்டா
எதுக்குடா
சோப்பு?
//செந்தழல் ரவி said...
இங்கே கும்மியடிப்பவர்கள் முதலில் சொந்த பெயரில் தில்லாக ஒரு பின்னூட்டம் போட்டுவிட்டு பிறகு தான் ஆரம்பிக்கவேண்டும்...//
தில் இல்லாதவன்
//டட்ச் ட்ரீட் முறையில் பாப்கார்ன் வாங்கி சாப்பிட்டோமே நினைவிருக்கா?//
அப்பவேவா? வெளங்கிச்சு
-போண்டா பவனில் டட்ச் ட்ரீட்டில் சாப்பிட்டவன்.
அய்யோ...அந்த பின்னூட்டத்தை அனானியா விட்டுடுங்கோ
மகரனெடுங்குழிகாதன் காப்பாத்துவான் உங்களை
//நான் சமீபத்தில் 1961ல் திருவல்லிக்கேணி கே எஸ் அய்யர்வாள் அவர்களோடு லைட் அவுசில் தொடங்கி டிரிப்லிக்கேன் வரை சைட் அடித்துக் கொண்டே ஸ்டெல்லா மேரிஸ் க்யின் மேரிஸ், லேடி வெலிங்க்டன் என்று
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே//
சான்ஸே இல்லை. கலக்கிட்டீங்க முத்து.
எலிக்குட்டி சோதனை நடந்துகொண்டிருப்பதால் புலிக்குட்டிகள் எல்லாம் கொஞ்சம் பின்னூட்ட கும்மியை ஸ்லோ செய்யவும்.
கிருஷணன் ஒரு நீக்ரோ. அதனால் தான் கோபியர்கள் சுற்றிச்சுற்றி வந்தனர். கிருஷ்னர் அலாவுதீன் கில்ஜி மாதிரி அடிமை வம்சத்தை சார்ந்த மன்னர். அவர் ஆப்ரிக்காவில் இருந்து கொண்டுவரப்பட்ட ஒரு ஆப்ரிக்க அடிமை நீக்ரோ குழந்தை...
பகுத்தறிவோடு சிந்தித்தால் மேலும் விளங்கும்...
அரசன் கம்சன் கனவன் மணைவி இருவரையும் அடைத்து வைத்ததாக சொல்கிறார்கள்...
அவர்களுக்கு குழந்தை பிறந்தால் அந்த குழந்தை தன்னை கொன்றுவிடும் என்று தெரிந்தால் அவர்களை ஒரே செல்லில் பூட்டி வைக்க அவன் என்ன அவ்வளவு மாங்கா மடையனா ?
கிருஷ்ணன் பிறந்தபோது ஏதும் ஆதாரம் இல்லை...கிருஷ்னன் பிருந்தாவனத்துக்கு 'கொண்டு வரப்பட்ட' ஒரு குழந்தை...
கிருஷ்னன் நீக்ரோ என்பதால் இயல்பாக இருந்த 'பெரிய' விடயம் காரணமாக பெண்கள் சுற்றி சுற்றி வந்தனர் என்கிறது ஒரு ரகசிய செப்பேடு.
டோண்டு சார் இதற்கு என்ன சொல்கிறார் ?
31 கமெண்டு வரை செந்தழல் ரவி போட்டோ - 9
டோண்டு சார் போட்டோ - 5
இப்பதிவில் இருக்கிறது
அடச்சே..அதை அனானியா போடலாமுன்னு நெனைச்சேன்...
இந்த பதிவின் பின்னூட்டங்களுக்கு பதில் ஒவ்வொன்றாக கிடைக்கும்போது நாப்பது வந்துவிடும்...
வாங்கப்பா போலாம்...வேற எடம் பார்க்கலாம்...
தமிழ்மணத்தை மதிக்கும் குழு இது...
பின்னூட்டத்திற்கு வேகத் தடை போட்டது ஏன்?
அம்பிகளா கொஞ்சம் வெயிட் செய்றேளா? மூச்சா போயிட்டு ஓடியாந்துர்ரேன்
dondu mamavukku ramar veshama!!! hahaha...
gundOtharan vesham than porutham.
//பகுத்தறிவோடு சிந்தித்தால் மேலும் விளங்கும்...
அரசன் கம்சன் கனவன் மணைவி இருவரையும் அடைத்து வைத்ததாக சொல்கிறார்கள்...
அவர்களுக்கு குழந்தை பிறந்தால் அந்த குழந்தை தன்னை கொன்றுவிடும் என்று தெரிந்தால் அவர்களை ஒரே செல்லில் பூட்டி வைக்க அவன் என்ன அவ்வளவு மாங்கா மடையனா?//
வாருங்கள் ரவி. உங்கள் கேள்விக்கு எனது விடை இப்பதிவில் ஏற்கனவே போடப்பட்டு விட்டது.
பெரிய விஷயம் பற்றி ஒரு சுவாரசிய தகவல். பிறகு கூறுகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு,
நீங்கள் இதற்கு முன் இடப்பட்ட என்னுடைய பின்னூட்டத்தை இது வரை பார்க்கவில்லையா?
ஒருவேளை நீங்கள் இதுவரை வெளியிட்டுள்ள பின்னூட்டங்களைவிட அருவருப்பாக ஏதேனும் அதில் இருக்கிறதா?
கீழான ஜந்துக்களோடு தைரியமாக மோதிய நீங்கள் இப்போது யாருக்காக அல்லது எதற்காக அஞ்சுகிறீர்கள்?
ஒருவருடைய பலகீனத்தை வைத்து நடக்கும் ப்ளாக் மெயில்கள் போல வேறு ஏதேனும் ப்ளாக்மெயில்களில் சிக்கியுள்ளீரா?
//நீங்கள் இதற்கு முன் இடப்பட்ட என்னுடைய பின்னூட்டத்தை இது வரை பார்க்கவில்லையா?
ஒருவேளை நீங்கள் இதுவரை வெளியிட்டுள்ள பின்னூட்டங்களைவிட அருவருப்பாக ஏதேனும் அதில் இருக்கிறதா?//
உங்கள் பின்னூட்டத்தை நான் கீழ்க்கண்ட காரணங்களுக்காக பிரசுரம் செய்யவில்லை.
1. பதிவுக்கு சம்பந்தமேயில்லாத பின்னூட்டம். அதைக் கூட பொறுத்து கொள்ளலாம், தமாஷ் கும்மியாக இருக்கும் பட்சத்தில், ஆனால்
2. நான் மிகவும் மதிக்கும் ஏசுபிரானை பற்றி மிக அவதூறுகள் அப்பின்னூட்டத்தில் உள்ளன. ஆகவே அதை நான் அனுமதிக்கவில்லை.
மற்றப்படி டோண்டு ராகவனை பிளாக்மெயில் செய்ய ஒருவர் இனிமேல் பிறந்துதான் வர வேண்டும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு,
தங்களுடைய ஜல்லி பதிலுக்கு நன்றிகள்.
>>>> 1. பதிவுக்கு சம்பந்தமேயில்லாத பின்னூட்டம். <<<<
அப்படியா? அப்படியானால் கிருட்டிணன் பின்னால் பெண்கள் சுற்றினார்கள் என்பது தங்களுடைய "என் நாடக மற்றும் சாரண இயக்க அனுபவங்களோடு" எங்கனம் தொடர்புடையது என்பதை விளக்க முடியுமா?
>>>> ஆனால்
2. நான் மிகவும் மதிக்கும் ஏசுபிரானை பற்றி மிக அவதூறுகள் அப்பின்னூட்டத்தில் உள்ளன. ஆகவே அதை நான் அனுமதிக்கவில்லை. <<<<
அவை கிருட்டிணனுக்கு 'பெரிய' விடயம் இருந்தது என்பதைவிட மோசமான அவதூறாக எங்கனம் ஆகிவிட்டது?
கவனித்துப் பார்த்தால் கிருட்டிணனைப் பற்றி வந்திருக்கும் அதே கருத்து மற்றும் வாக்கிய அமைப்பில்தான் இந்த ஏசு பற்றிய கருத்தும் வாக்கியங்களும் அமைக்கப்பட்டன.
மேலும் கைக்கு வந்தபடி கசுமாலம் எழுதியதுபோல இல்லாமல் ஆதாரங்களும் அளிக்கப்பட்டிருந்தன. ஆதாரங்களோடு பேசப்படுகிற ஒரு விடயத்தைவிட ஆதாரமில்லாமல் அவதூறு சொல்வது மட்டுமே காரணமாக இருக்கக்கூடிய விடயம் எங்கனம் உயர்ந்ததாகிவிட்டது?
கண்ணன் பெயரை சொல்லிக்கொள்ளுவது உங்களுக்கு ஒரு ஸ்டேட்டஸ் ஸிம்பலாக மட்டுமே இருக்கலாம். அவனுக்காக உருகி வாழ்க்கையை அர்ப்பணித்த உங்களுடைய முன்னோர்களைப் போல எளிமையான, நேர்மையான அந்தணனாக இருக்கவேண்டும் என்று உங்களிடம் சமூகம் எதிர்பார்க்கவும் இல்லை. ஆனால், உங்களைப் பெற்ற உத்தமர்களும், அவர்களது முன்னோர்களும் தங்கள் குலத்தில் பிறந்த ஒருவர் கிருட்டிணனைப் பற்றிய இந்த கேவலமான அவதூறை மக்கள் மத்தியில் மார்க்கெட்டிங் செய்து மகிழும் தங்களைப் பற்றி என்ன நினைப்பார்களோ?
ஒருவேளை முன்னோர்கள் எல்லாம் இல்லை. அதெல்லாம் பொய். உடல் நீத்த முன்னோர்கள் எல்லாம் "இறுதித் தீர்ப்பு நாளுக்காகவும்" "நரகத்தில் உழல்வதற்காகவும்" காத்திருக்கிறார்கள் என்றும் நீங்கள் நம்பலாம்.
கண்னனைப் பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால், ஏசு ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்பதுபற்றி மட்டும் சொல்லக்கூடாது என்பது என்ன நியாயம் என்று புரியவில்லை.
கொஞ்சம் விளக்குவீர்களா?
இதை ஏன் நான் கேட்கிறேன் என்றால், கண்னன் என் நண்பன். காலம் கடந்தும் என் போன்ற சாதாரண மனிதர்களை வழிநடத்தும் நண்பன். அவனைப் பற்றி அவதூறினை நீங்கள் பரப்புவதால் விளக்கம் வேண்டுகிறேன்.
இது தவறு என்று தோன்றினால் நீங்கள் மன்னிப்பு கேட்கக்கூடியது கண்ணனுக்காக வாழ்ந்த, கண்ணனின் பக்தர்கள் என்பதற்கு அடையாளமாக தங்களது திருமேனியில் சங்கு சக்கர அடையாளங்கள் நெருப்பினால் பதித்துக்கொண்ட உங்களுடைய முன்னோர்களிடம்தான் இருக்கும்.
இந்த பின்னூட்டத்தை நீங்கள் அனுமதிப்பீர்களா என்பது தெரியவில்லை.
starting ellam nalla than irunthuthu, ending than sari illa..
எங்கே போனாலும் சுத்தி சுத்தி சாதி மதம் பற்றி பேசி வம்பிழுப்பதே சிலருக்கு வேலையாய் போயிற்று. இது ஒரு சாதாரண அனுபவம் தொடர்பான பதிவு. இதிலும் சாதியா?
சிங்கமுத்து
//இதை ஏன் நான் கேட்கிறேன் என்றால், கண்னன் என் நண்பன். காலம் கடந்தும் என் போன்ற சாதாரண மனிதர்களை வழிநடத்தும் நண்பன். அவனைப் பற்றி அவதூறினை நீங்கள் பரப்புவதால் விளக்கம் வேண்டுகிறேன்.//
இது சீரியசான அப்சர்வேஷனாகப் பட்டதால் எனது பதிலை தாமதித்தேன்.
1. கண்ணனை பற்றி பின்னூட்டம் இட்டது செந்தழல் ரவி, தன்னுடைய சொந்தப் பெயரில்.
2. அதில் அவர் முதலில் கம்சன் சம்பந்தமாகக் கேட்ட கேள்விக்கு என்னிடம் பதில் இருந்தது. ஆகவே அதை அனுமதித்து கேள்விக்கும் பதில் சொன்னேன்.
3. மற்றப்படி அவர் நீக்ரோ சம்பந்தமாகப் பேசியது அப்பட்டமான உளறல். கண்ணன் பக்தர்கள் (நானும் அவர்களில் வருவேன்) இதை உணர்வார்கள். எதிர்வினை கொடுக்கக் கூட லாயக்கில்லாதது அது.
4. ஆனால் செந்தழல் ரவி ஏன் அதை கூறினார்? அவரே கூறியபடி இப்பதிவில் கும்மியடிக்கத்தான் வந்தார். அதில் இதை சும்மா கலாய்த்தலுக்காக போட்டிருக்கலாம். ஏனெனில் அவர் என்னுடைய சிறந்த நண்பர். நேரிலேயே பார்த்து பேசி பழகியிருக்கிறேன்.
5. ஆனால் உங்களை பற்றி என்ன கூறுவது?வெறுமனே மதுமேகம் என்ற பெயரில் அனானியாக வந்தீர்கள். உங்கள் பின்னூட்டத்தை அனுமதித்திருந்தால் பெரிய கலாட்டாவாகியிருக்கும். நீங்கள் யாரென்றே தெரியாத நிலையில் நாந்தான் அத்தனைக்கும் பதில் சொல்ல வேண்டியிருக்கும். இது எனக்கு தேவையா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
//எங்கே போனாலும் சுத்தி சுத்தி சாதி மதம் பற்றி பேசி வம்பிழுப்பதே சிலருக்கு வேலையாய் போயிற்று.//
என்ன செய்வது சிங்கமுத்து அவர்களே. அதுதான் தமிழர் இணைய உலகம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
என் நண்பனின் அனுபவம் இது. அவன் கல்லூரியில் NSS என்ற அமைப்பின் மூலமாக நாமக்கல் சேந்தமங்கலம் என்ற ஊருக்கருகில் ஒரு குக்கிராமத்தில் கேம்ப் சென்றுள்ளார்கள். மருத்துவசேவை, ரோடு போடுதல் போன்ற சேவைகளுக்காக. அது ஒரு பழங்குடிகள் வசிக்கும் இடம். கூட்டமாக இவர்கள் சென்றதை (வெள்ளை டி சர்ட் மற்றும் blue அரை டிராயர் - strict uniform) பார்த்து மிரண்ட பழங்குடிகள் ஏதோ திருடத்தான் வந்துள்ளார்கள் என்று கூட்டமாக கம்பு, வேல் போன்ற ஆயுத்ங்களுடன் துரத்த துண்டை காணோம் துணியை காணோம் என ஓடி வந்து விட்டார்கள்.
சிங்கமுத்து
//உங்கள் பின்னூட்டத்தை அனுமதித்திருந்தால் பெரிய கலாட்டாவாகியிருக்கும். நீங்கள் யாரென்றே தெரியாத நிலையில் நாந்தான் அத்தனைக்கும் பதில் சொல்ல வேண்டியிருக்கும். இது எனக்கு தேவையா?//
கலாட்டா நடக்காது என்பதால் கிருட்டிணனை இகழும் பின்னூட்டத்தை, உளறல் என்று தெரிந்தாலும் வெளியிடுவீர்கள்.
கலாட்டா நடக்கும் என்பதால் ஏசுவிற்கும் அவரது சீடர்களுக்கும் ஓரினச் சேர்க்கை உறவு இருந்திருக்கலாம் என்கிற பின்னூட்டத்தை வெளியிட மறுத்துவிட்டீர்கள்.
இதிலிருந்து தெரிவது என்னவென்றால், கலாட்டா, வன்முறை இவற்றிற்குப் பயந்து செல்லும் வாழ்க்கைதான் பெரும்பாலான மனிதர்களுடையது. நேர்மை, எது தவறு எது சரி என்பது குறித்த தெளிவு இருப்பினும் வன்முறையே சிலருடைய முடிவுகளுக்கு அடிப்படையாக அமைகிறது.
ஆனால், இந்த கிருட்டிணனோ சுயதர்மம் என்று பேசுகிறான். வெளியிலிருந்து கிடைக்கும் பாராட்டுக்கள், இகழ்ச்சிகள், கலாட்டாக்கள் இவற்றின் அடிப்படையில் இல்லாமல், ஒவ்வொருவரும் தன்னுடைய சுயதர்மத்தை செயல்படுத்தவேண்டும் என்கிறான்.
அப்படிப்பட்ட கிருட்டிணன் வழி நடப்பவர்களில் நானும் ஒருவன் என்று சொல்லுவதும், அதே சமயம் கலாட்டாவிற்கு அஞ்சுவதுமாக எதிரெதிர் செயல்பாடுகள் கொண்டிருப்பது சராசரி மனிதர்கள் செய்வது இல்லையே.
சுயதர்மம் பயிலும் சிலர் நீங்கள் வெளியிட மறுத்த பின்னூட்டத்தை (https://www.blogger.com/comment.g?blogID=15533422&postID=4743976792756049226) வெளியிட்டுள்ளார்கள். அவர்களுக்கு கிருட்டிணன் அருள் உண்டு என்பது தெரிகிறது.
தமிழ் இணையம் குறித்த ஆராய்ச்சிக்காக நான் எடுத்துக்கொண்ட பதிவுகளில் தங்களுடையதும் ஒன்று.
நடைமுறை உலகைவிட, இணையம் அதிக சுதந்திரம் தருகிறது என்பது உண்மையல்ல என நிறுவவும், இணையம் நடைமுறை உலகைவிட வன்முறையை அதிகம் வெளிப்படுத்தும் ஒரு கருவி எனவும் நிறுவுவதற்கு இதுவும் ஒரு உதாரணம்.
என்னுடைய தீஸிஸில் தங்களுக்கும் நன்றிகள் செலுத்த கடமைப்பட்டுள்ளேன்.
மற்றபடி, சிங்கமுத்து என்கிற பெயரில் புத்திமட்டாய் எழுதப்பட்ட பின்னூட்டத்திற்கு நீங்கள் கொடுத்த எதிர்விளைவு மற்றொரு நகைச்சுவை.
நான் எந்த சாதி பற்றியும், மதம் பற்றியும் குறிப்பிடாதபோது, சாதி மதம் பற்றி எழுதியுள்ளதாக அடித்திருப்பது அக்மார்க் கப்ஸா.
அந்த கப்ஸாவிற்கு நீங்கள் செய்யும் வக்காலத்துதான் கவலைக்குரியது.
இந்த சமுதாயம் எங்கே போகிறது?
உங்களுடையது நியாயமற்ற விளக்கம் என்பது தெரிகிறது. அதுகுறித்து என்னுடைய கருத்தோடு இந்த கேள்வி-பதில் விளையாட்டை நிறுத்திக்கொள்ளலாம். இப்பதிலை உங்களது பதிவில் பார்க்கும் வாய்ப்பு அவர்களுக்கு ஏற்படுமானால், இதைப் படிப்பவர்கள் எது சரி, எது தவறு என்று அவர்களே முடிவு செய்துகொள்வர்.
இப்பதிலை வெளியிடத் தேவையான தைரியம் உங்களிடம் இன்னும் இருக்கிறது என்றே நம்புகிறேன்.
சிங்கமுத்து என்பவரின் மற்றொரு பின்னூட்டமும் உளறலின் உச்சகட்டம்.
பழங்குடிகள் எல்லாம் அறிவற்றவர்கள் என்கிற உச்சப்படுத்தப்பட்ட மனோபாவத்தின் விளைவு. பழங்குடிகள் குறித்த என்னுடைய ஆய்வும், அதற்காக அவர்களோடு நான் கொண்ட பழக்கங்களும் இது தவறு என்பதை நிறுவுகின்றன.
திராவிட பாரம்பரியத்தில் வந்த எனது நண்பரும் மற்றொரு ஆராய்ச்சியாளரும், "அந்த காலத்தில் காப்பி இல்லை" போன்ற புத்தகங்களை எழுதியுள்ள வெங்கடாசலபதி இப்போக்கை உயர்சாதி கருத்தூக்கத்தின் மறைமுக வெளிப்பாடு என்று விளக்குவார்.
//இப்பதிலை வெளியிடத் தேவையான தைரியம் உங்களிடம் இன்னும் இருக்கிறது என்றே நம்புகிறேன்.//
என்னிடம் நிச்சயமாக தைரியம் உண்டு. ஆனால் அது அசட்டு தைரியம் ஆக முடியாது. நான் ஏற்கனவே சொன்னபடி கிருஷ்ணன் நீக்ரோ என்பது அப்பட்ட உளறல். அது பதில் பெற லாயக்கில்லாதது.
அதே சமயம் ஏசு பிரான் பற்றி நீங்கள் சொன்னதை சொந்த அடையாளங்களுடன் நீங்கள் சொல்லத் தயாரில்லை என்பது உங்கள் "தைரியத்தின்" நிரூபணமாகிறது.
நீங்கள் கொடுத்துள்ள சுட்டியின் மூலம் இப்பதிவை படிக்கும் மற்றவர் அங்கு போய் பார்த்து கொள்ள போகிறார்கள். அவ்வளவே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//சிங்கமுத்து என்பவரின் மற்றொரு பின்னூட்டமும் உளறலின் உச்சகட்டம்.
பழங்குடிகள் எல்லாம் அறிவற்றவர்கள் என்கிற உச்சப்படுத்தப்பட்ட மனோபாவத்தின் விளைவு//
அய்யா மதுமேகம் சார், நான் சொன்னது என் நண்பனுக்கு நடந்த உண்மை சம்பவம். இதில் பழங்குடிகளை தாழ்த்துவது போல கருத்து எங்குள்ளது?
இப்பதிவில் சாரண இயக்கத்தில் நடந்த சுவையான சம்பவங்களை டோண்டு சார் கூறியுள்ளார். அதுபோல NSS கேம்பில் நடந்த சுவையான சம்பவத்தை நான் கூறியுள்ளேன்.
ஏன் சம்பந்தமில்லாது பிரச்சினையை வளர்க்கிறீர்கள் சார்?
சிங்கமுத்து
//திராவிட பாரம்பரியத்தில் வந்த எனது //
திராவிட பாரம்பரியத்தில் வந்ததாக சொல்லிக்கொண்டு இல்லாத கடவுள் கண்ணனுக்கு ஜால்ரா அடிக்கிறீரே? உம் போன்றவர்களை திருத்தத்தான் பகுத்தறிவு தந்தை பெரியார் பாடுபட்டார்.
முங்கசித்து
முங்கசித்து, கயவரே, உமது கயமைக்கும் எல்லை இல்லையா?
நான் சொல்லியிருந்தது //திராவிட பாரம்பரியத்தில் வந்த எனது "நண்பரும்"//, ஆனால் கயமை உருவானவர்கள் "நண்பரும்" என்பதை வெட்டி, நான் திராவிட பாரம்பரியத்தில் வந்ததாகச் சொன்னதாய் திரிக்கிறார்கள். வெட்கமாயில்லை?
திராவிடப் பாரம்பரியம் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களோடு முடிந்துபோனதல்ல. அது அறிஞர் அண்ணாவால் மேலும் வளர்க்கப்பெற்றது. ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக்காண கற்றுக்கொடுத்த இயக்கம் திராவிட இயக்கம். திராவிட இயக்கத்தார் என்றும் தனது குடும்பத்தாரும், உறவினர்களும் இறை வணக்கம் செய்வதை எதிர்த்ததில்லை.
தமிழர் நாகரீகத்தில் சிறிதேனும் அனுபவமுமுள்ளவர்களால் அர்த்தம் புரிந்துகொண்டிருக்கமுடியும்.
சிங்கமுத்து என்னும் பின்னூட்டக்காரர் பழங்குடிகளை எங்கே தாழ்த்தியுள்ளேன் என வினவுகிறார். சீருடை அணிந்த பள்ளி மாணவர்களுக்கும் திருடர்களுக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் பழங்குடியினர் என்று சொல்லுவது பழங்குடியினரை கேவலப்படுத்துவதில்லையா? இது உண்மை சம்பவம் என சொல்லுகிறார். வெள்ளை நிறச் சீருடை அணிந்து கையில் ஒரு குறிப்பிட்ட புத்தகத்தைத் தூக்கிக்கொண்டு பழங்குடியினரை ரட்சிக்கச் சென்றவர்கள் பழங்குடிப்பெண்டிரை மானபங்கம் செய்து உதைவாங்கிய உண்மைக்கதைகள் என்னிடம் உள்ளன. ஆனால், டோண்டு போடமாட்டார் என்பதால் இத்தோடு நிறுத்திக்கொள்ளுகிறேன்.
தமிழரின் முன்னோர் அறம் மறுத்து வரலாற்றை மாற்றி ரோம நாட்டு கொள்கைகளுக்கு குரல் கொடுக்கும் எத்தர்களுக்கு தமிழர் பாரம்பரியம் பற்றி, திராவிடர் பாரம்பரியம் பற்றிப் பேச அருகதையில்லை.
இந்த சாக்கடை மனிதர்களின் சல்லி கேள்விகளுக்கு இனி நான் பதிலளிக்கப்போவதும் இல்லை.
//ராமசாமிக்கு தோட்டம் உண்டு ஆவடி பக்கத்திலே
அங்கே சில நாய்கள் உண்டு ஆவடி பக்கத்திலே
அங்கே பாத்தா லொள் லொள் இங்கே பாத்தா லொள் லொள்
எங்கே பாத்தாலும் லொள் லொள்
ராமசாமிக்கு தோட்டம் உண்டு ஆவடி பக்கத்திலே
அங்கே சில பூனைகள் உண்டு ஆவடி பக்கத்திலே
அங்கே பாத்தா மியாவ் மியாவ் இங்கே பாத்தா மியாவ் மியாவ்
எங்கே பாத்தாலும் மியாவ் மியாவ்
//
இது இந்த ரைம்ஸ் போல இருக்கே..
Old Macdougal had a farm in Ohio-i-o,
And on that farm he had some dogs in Ohio-i-o,
With a bow-wow here, and a bow-wow there,
Here a bow, there a wow, everywhere a bow-wow.
- வேல் -
நன்றி வேல்பாண்டி அவர்களே. உங்கள் முந்தையப் பின்னூட்டம் முதலில் புரியவில்லை. இப்போது புரிகிறது. ஆகவே அப்பின்னூட்டத்தை அழித்து விட்டேன். இதுவே போதும்.
நீங்கள் கூறுவது உண்மைதான். முக்கால்வாசி சாரணப் பாடல்கள் ஆங்கிலத்திலிருந்துதான் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இப்பாட்டைப் பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன். ஆனால் பார்த்த உடனேயே நீங்கள் கூறும் உண்மை வெளிப்படையாகத் தெரிகிறது. நன்றி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment