10/31/2007

The law of supply and demand

நண்பர் மதுசூதனன் அவர்களது இப்பதிவில் நான் போட்ட பின்னூட்டத்தை இங்கு விரிவாக்குகிறேன். முதலில் அங்கு இட்ட பின்னூட்டம் இதோ. (பதிவை எழுதும் இத்தருணத்தில் அது மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது).

"ஏதாவது ஒரு துறையில் திடீரென பெரிய முன்னேற்றம் வந்து அதில் வேலை செய்பபர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் அதில் வேலை செய்பவர்களை அதிக சம்பளம் கொடுத்துத்தான் அமர்த்துவார்கள். உதாரணத்துக்கு அமெரிக்காவில் வீட்டு வேலைகள் செய்ய ஆள் கிடைப்பது குதிரைக் கொம்பே. ஆகவே அவ்வாறு வேலைக்கு வருபவர்களுக்கு அதிக சம்பளம். அதே போல ப்ளம்பர்களுக்கு நல்ல கிராக்கி. அவர்கள் வருவாய் பல சமயங்களில் கல்லூரி பேராசிரியரின் சம்பளத்தையும் மிஞ்சி விடும். இது பற்றி பாதி நகைச்சுவையாகவும் பாதி வயிற்றெரிச்சலாகவும் அங்கு பலர் எழுதி விட்டனர்.

இப்போது இங்கே பொட்டி தட்டும் வேலைக்கு வருவோம். நமது மதிப்பு நமக்கு தெரியவில்லை என்பதே நிஜம். நமக்கு இயற்கையாகவே லாஜிக்கில் திறமை உண்டு. அத்துடன் ஆங்கில அறிவையும் சேர்த்து கொள்ளுங்கள். ஆகவேதான் அவுட்சோர்சிங்கிற்கு இந்தியாவை தேர்ந்தெடுக்கின்றனர். நல்ல சம்பளம் தரவும் தயாராக உள்ளனர். வெளிநாட்டு கம்பெனிகளில் உள்ள ரொட்டீன் வேலைகளுக்கெல்லம் அவுட்சோர்சிங் வந்து கொண்டிருப்பதால் இப்போதைக்கு இந்த நிலை அப்படியே இருக்கும் வாய்ப்பு உண்டு.

ஆக சம்பளம் கூடக்கூட வசதிகளை பெருக்கி கொள்கின்றனர். அதற்கான விலையையும் தரத் தயாராக உள்ளதால் பல சேவைகளின் விலைவாசிகள் கூடுகின்றன என்பது ஓரளவுக்கு உண்மையே. அதற்கு என்ன செய்ய முடியும்?

இது பற்றி தனிப்பதிவு போடும் எண்ணம் வருகிறது. அங்கு இன்னும் விரிவாக எழுதுகிறேன்".

இப்போது இப்பதிவுக்கு வருவோம்.

சமீபத்தில் 1956-ல் "அமெரிக்கா அழைக்கிறது" என்னும் தலைப்பில் திருமதி காந்திமதி அவர்கள் தனது அமெரிக்க அனுபவங்களை ஆனந்த விகடனில் ஒரு தொடரில் எழுதி வந்தார். அவர் பேயிங் கெஸ்டாக தங்கியிருந்த வீட்டின் சொந்தக்காரி இவரை தான் வேலை செய்யும் இடங்களுக்கு தனது படகு போன்ற காரில் ஏற்றிச் சென்றார். ஆம், இடங்கள்தான். அப்போதுதான் காந்திமதி அவர்களுக்கு வீட்டு சொந்தக்காரி பல வீடுகளில் பாத்திரம் கழுவி, துணி தோய்த்து, வீடு மெழுகி சம்பாதிப்பவர் என்ற உண்மை உறைத்ததாம். பல இடங்களில் வீடுகளில் உள்ள மனிதர்கள் வெளியே சென்றிருப்பார்கள். இந்த அம்மணி தனக்கு கொடுக்கப்பட்ட மாற்று சாவியை வைத்து வீட்டைத் திறந்து வேலை செய்து விட்டு செல்ல வேண்டியது. வேலை நேரம் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் (உதாரணத்துக்கு ஒரு மணி நேரம்). ஆகவே அதற்கான சம்பளம் ஏற்கனவே ஒரு கவரில் வைத்து விட்டு சென்றிருப்பார் வேலை தருபவர். இந்த அம்மணி அதை தன் பையில் போட்டு கொண்டு வீட்டை பூட்டிவிட்டு அடுத்த வீட்டுக்கு செல்ல வேண்டியதுதான் பாக்கி. காந்திமதி அவர்கள் கூடச் சென்ற தினம் வேலை செய்த் பெண்மணி அவரை ஹாலில் உட்கார வைத்து விட்டு டி.வி.யை ஆன் செய்து விட்டு, குளிர்பதனப் பெட்டியிலிருந்து ஒரு கூல் ட்ரிங்கை இவர் கையில் திணிக்கிறார். அந்த உரிமையும் உண்டு.

காரணம் என்ன? மேலே கூறிய ஆள் பற்றாக்குறைதான். அங்கும் ஓரளவுக்கு மேல் தாக்கு பிடிக்க முடியவில்லை என்னும்போது வெளிநாடுகளிலிருந்து வேலையாளர்களள வருவித்து கொள்கின்றனர். மெக்சிகோக்காரர்கள் பலர் சாரிசாரியாக வருகின்றனர். அவர்களில் பலரிடம் தேவையான வேலை அனுமதி ஆவணங்கள் இருக்காது. ஆகவே அவர்கள் ரகசிய முறையில் அமர்த்தப்படுகின்றனர். அவர்களுக்கு கட்டை சம்பளம்தான். வேலை உத்திரவாதமும் இல்லை. ஏனெனில் இருக்கும் குறிப்பிட்ட வேலைகலுக்கு பலர் போட்டி இடுகின்றனர். இதுதான் ஐயா உலகம். இது சரியா தவறா என்று கூற நாம் யார்?

இன்னொரு சுவையான உதாரணம் அகாதா கிறிஸ்டியின் "4.50 from Paddington" என்னும் நாவலில் பார்க்கலாம். அதில் வரும் லூசி என்னும் பெண்மணி கணிதத் துறையில் டாக்டரேட் பட்டம் பெற்றவர். ஆனால் அவர் அக்காலக்கட்டத்திற்கேற்ப இங்கிலாந்தின் நிலையை அவதானித்து தேர்ந்தெடுத்த வேலை மேலே சொன்ன வீட்டுவேலைதான். அவர் விஷயம் வேறு. அவர் ஒரு குறிப்பிட்ட வீட்டுக்கு குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே ஹவுஸ்கீப்பராக செல்வார். அக்காலத்தில் சம்பந்தப்பட்ட வீட்டினர் சொர்க்கத்தில் இருப்பது போல உணர்வர். பல சமயங்களில் அவர்கள் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றிருப்பர். அவர்கள் வீட்டு நிர்வாகத்தை அவர் அச்சமயத்தில் சரியான நிலையில் நடத்துவார். ஆனால் அவரிடம் என்ன கஷ்டம் என்றால் எங்குமே நிரந்தரமாக இருக்க மாட்டார். எவ்வளவு சம்பளம் தருவதாகக் கூறினாலும் அவரிடம் அது நடக்காது. ஏனெனில் அடுத்து பல மாதங்களுக்கு அவரை ஏற்கனவே பலர் புக் செய்திருப்பார்கள். பெண்மணியின் சௌகரியத்துக்கு ஒரு குறையும் இல்லை. அவர்பாட்டுக்கு வேலைகளை கச்சிதமாகச் செய்துவிட்டு தனது கணித அறிவை மேம்படுத்தும் வேலையில் இருப்பார். இது பாட்டுக்கு இது, அதுபாட்டுக்கு அது என்று இருக்கும் இவர் என்னைக் கவர்ந்தார். அகாதா கிறிஸ்டியின் அந்த நாவலை நான் சமீபத்தில் 1966-ல் படித்ததிலிருந்து இவரே என் ரோல் மாடல்.

அவரைப்போல நான் இருக்க முயற்சி செய்ததைப் பற்றி எனது ஐ.டி.பி.எல். நினைவுகளில் எழுதியுள்ளேன். என்ன, அவரைப் பற்றி அங்கு பெயரிட்டு குறிப்பிடவில்லை. ஆகவே இத்தருணத்தில் கூறிவிட்டேன். இப்போது மட்டும் என்ன, அதே நிலைதான் தொடர்கிறது.

அதாவது வாடிக்கையாளர்களுக்கு என்ன தேவைப்படும் என்பதைத் தீர்மானித்து அதை அவர்களுக்கு அளிப்பதுதான் அது. அதே சமயம் அதற்கான விலையையும் பெற்றுவிட வேண்டும். அதைத்தான் நண்பர் மாசிவக்குமாரிடம் கூறினேன். சில நாட்களுக்கு முன்னால் அவர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அவருக்கு சீன மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கும்படி ஒரு கோரிக்கை வந்துள்ளதால் என்ன ரேட் கேட்கலாம் என்பதைப் பற்றி என்னிடம் ஆலோசனை கேட்டார். நான் அவருக்கு கூறிய ஆலோசனையின்படி நடந்து அவர் அந்த வேலையும் செய்து பணமும் பெற்றதை பிறகு எனக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். அவரிடம் கூறிய முக்கிய ஆலோசனையே ரேட்டை கணிசமாக உயர்த்திச் சொல்ல சொன்னதுதான். அதில் உறுதியாக இருக்குமாறு அறிவுரை கூறினேன். அவ்வாறே செய்தார். ஏனெனில் சீன மொழிபெயர்ப்பாளர்கள் அதுவும் நண்பர் சிவகுமார் அளவுக்கு பொறியியல் பின்னணி உள்ளவர்கள் சென்னையில் இல்லை என்றே கூறிவிடலாம். சாதாரணமாக அவர் ரொம்ப சாஃப்ட் பேர்வழி. அவரை விட்டால் அடிமாட்டு விலைக்கு செய்திருப்பார். ஆகவேதான் எனது அறிவுரையை வலியுறுத்தி கூறினேன். அதே சப்ளை மற்றும் டிமாண்ட் கோட்பாடுதான்.

அதே போலத்தான் மென்பொருள் துறையில் இருப்பவர்களுக்கு கிடைக்கும் அதிக சம்பளம். இதை பொறாமையுடன் பார்த்து விமரிசனம் செய்வது "கற்றது தமிழ்" என்னும் படத்தில் இருப்பதாக அறிகிறேன். இதில் இன்னொரு வேடிக்கை. படத்தை எடுத்தவரோ, அதில் நடித்தவர்களோ பெறுவது பெரிய சம்பளங்கள். அது யாருக்கும் தெரியாது. இந்த விஷயத்தில் ஜெமினி நிறுவனம் எடுத்த படங்கள் நினைவுக்கு வருகின்றன. அவர்களது பல படங்களில் ஏழைகள் நல்லவர் எனவும் பணக்காரர்கள் சாதாரணமாகக் கெட்டவர்கள் என்றும் படமாக்கப்பட்டிருக்கும். அதைக் கூறியே வாசன் இன்னும் பெரிய பணக்காரர் ஆனதுதான் நடந்தது. தனது படங்களில் புரட்சி பேசும் தங்கர் பச்சான், ஒரு மேக்கப் பெண்மணி தனது சம்பளத்தை தருமாறு வற்புறுத்தியதால் அப்பெண்மணி செய்தது வேசித்தனம் என்னும் கூறும் அளவுக்கு சென்றது பெரிய நகைமுரண்தானே. அதே சமயம் அப்படத்தில் அவர் பெற்றது என்னவோ பெரிய சம்பளம்தானே.

வாசனை பற்றி எனது கருத்து? அவர் மேதை. அவரைத்தான் நாம் ரோல்மாடலாக வைத்து கொள்ள வேண்டும். தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு மார்க்கெட் ரேட்டை விட அதிக சம்பளம் கொடுத்தவர் அவர். அதே சமயம் தனது விஷயங்களையும் பார்த்து கொண்டவர் அவர். அவரிடம் மேலே நான் இப்பதிவில் குறிப்பிட்ட விஷயத்தை குறித்து சிலர் கேட்ட கேள்விகளுக்கு அவர்வ் அளித்த பதிலை நினைவிலிருந்து தருகிறேன். "ஐயா ஒரு சராசரி மனிதன் வேலையிலிருந்து களைத்து வரும்போது அவனுக்கு உல்லாசம் தேவைப்படுகிறது. அவன் மனதுக்கு பிடித்த விஷயத்தை சொன்னால்தான் அவன் படத்துக்கு வருவான். நான் குறி வைப்பது தரை டிக்கெட்டுக்கு வரும் ரசிகர்களே. படம் பிடித்திருந்தால் பல முறை பார்ப்பார்கள். ஆனால் பால்கனி சீட்காரர்கள் ஒரு முறைக்கு மேல் ஒரே படத்துக்கு வருவது அபூர்வம். அதிலும் அவர்கள் முடிதால் ஓசி பாஸ் பெற முயற்சிப்பவர்கள்".

அன்புடன்,
டோண்டு ராகவன்

25 comments:

Anonymous said...

அமெரிக்காவில் இப்படி வசதியாக இருந்துவிட்டு பின் ஏன் காந்திமதி சிறு வேடங்களில் நடிக்க திரைப்படத்திற்கு வந்தார்?

dondu(#11168674346665545885) said...

ஐயா அனானி,

நான் குறிப்பிட்ட காந்திமதி திருவல்லிக்கேணி லேடி வெல்லிங்டன் பள்ளியில் தலைமையாசிரியையாக இருந்தவர். சமீபத்தில் 1951-ல் அமெரிக்கா சென்றவர்.

நீங்கள் சொல்லும் காந்திமதி சமீபத்தில் 1965-ல் ஜெயசங்கர் முதன் முதலாக நடித்த "இரவும் பகலும்" பட்ட்த்தில் நாகேஷின் ஜோடியாக நடித்தவர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மங்களூர் சிவா said...

//
"The law of supply and demand"
//
தலைப்பு சூப்பர்.

பதிவும்தான்

K.R.அதியமான் said...

Law was once deemed a professional course on par with engg or medicine. now too much supply of lawyers has made the field unattractive to new entrants. same way, IT (which is still a young and new industry) will change in another 30 years when supply will overtake demand and salaries may fall.

also the profit margins of IT companies are some 40 % while for other old economy cos are less than 15 % average ; and the main 'raw material' for IT is only human resouces ; these contribute to the high salaries of IT pros for now...

dondu(#11168674346665545885) said...

நீங்கள் கூறுவது 100% சரியே அதியமான் அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

In the typical tamil movies, they will generally show all the poor as good and the rich as evil. This is kind of psychological which will work well the
bench ticket masses, as they get some kind of satisfaction that the
poor hero achieves something which they are not able to do in real life.
But the 'poor' hero takes crores of rupees as salary for a single movie!!!

The same tactics are followed by the politicians also who try to pose as saviours of the poor and loot in crores!!!

PPattian said...

//இதில் இன்னொரு வேடிக்கை. படத்தை எடுத்தவரோ, அதில் நடித்தவர்களோ பெறுவது பெரிய சம்பளங்கள். அது யாருக்கும் தெரியாது. //

இது நல்ல கருத்து.

கற்றது தமிழ் கேள்வி: இரண்டாயிரம் வருஷ தொன்மையான தமிழ் படித்தவனுக்கு ரெண்டாயிரம், இருபது வருஷ பழைய கம்ப்யூட்டர் படித்தவனுக்கு இருபதாயிரமா?

அந்த டைரக்டருக்கு கேள்வி: (கப்ம்யூட்டரோ, தமிழோ) படித்தவனுக்கு அதிகபட்சம் இருபதாயிரம், படிக்காமலே சினிமாவுக்கு ஓடிப்போனவனுக்கு இரண்டு லட்சமா!!!

Jay said...

Dear Dondu Sir,
Excellent Post. Thanks very much.

Athiyaman Sir,
//the profit margins of IT companies are some 40 % while//
IT cos are already hit by Dollar depreciating upto 15% and high Wage Inflation. The IT cos are striking back - lot of under-performing employees have been asked to go home. Senior employees are being given more work to justify their salaries.

dondu(#11168674346665545885) said...

வாருங்கள் அதியமான். நீங்கள் சொன்னது மிகவும் சரி. ஆனால் இப்போது மறுபடியும் சட்டப் படிப்புக்கு கிராக்கி இருப்பதாகக் கேள்விப்பட்டேன். இதே காரணத்தால்தான் சார்டர்ட் அக்கௌண்டண்டுகள் குறைந்த எண்ணிக்கையிலெய்யே ஆண்டுதோறும் ரிலிஸ் செய்யப்படுகின்றனர். அப்பரீட்சையில் பாஸ் செய்வதென்பது குதிரைக்கொம்பென்று கேள்விப்பட்டேன். இல்லாமல் போயிருந்தால் மாவட்டத்துக்கு மாவட்டம் கல்லூரிகள் திறந்து லட்சக்கணக்கில் அவர்கள் வந்து கடைசியில் குறைந்த சம்பளத்துக்கு வர வேண்டியிருந்திருக்கும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

நன்றி ஜயகமல் அவர்களே. பொருளாதாரம் தேர்வுகளைப் பற்றி வேடிக்கையாக கூறுவார்கள். ஆண்டுதோறும் ஒரே கேள்வித்தாள் கொடுப்பார்கள், கவலையேயின்றி. ஏனெனில் விடைகள் மட்டும் மாறிக் கொண்டே யிருக்கும் என்று.

எது எப்படியானாலும் இந்த சப்ளை டிமாண்ட் விதி மற்றும் மாறவேயில்லைதானே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Arun Kumar said...

டோண்டு சார்
நல்ல பதிவு
இந்த பதிவு தமிழ் எம் ஏ படம் தொடர்பாக பின் விளைவு என நினைக்கிறேன்

சமீபகாலங்களில் தியேட்டரில் சென்று பார்த்த படங்களில் அய்யோ கொடுமை தாங்கலை சாமி என்று நான் தியேட்டரை விட்டு ஓடி வந்த படம் இது..

பல பேருக்கு சும்மா ஊருக்கு தான் உபதேசம்..
"The law of supply and demand" சரியான பதிவு தலைப்பு..

நானும் தமிழில் 92 மதிப்பேண் எடுத்தேன் (பத்தாம் வகுப்பில்).. அதன் பின் நான் தமிழ் எந்த பாடவிரிவிலும் படிக்கவில்லை..படிக்கவும் தேவையும் இருக்கவில்லை.பொறீயியலில் தமிழ் பிரிவு என்ற அபத்தங்களையும் கடை பிடிக்கவில்லை..
அதாவது

Ghz என்ற தொகுப்பில் அனுப்பும்போது receiver அந்த frequencyயில் அதை receive செய்யும் போன்ற கொடுமையான அறிவியல்(அருவை) தமிழில் எழுதவதை விட when the signal sent in Ghz frequency the receiver will receive the signal என்று எழுதி விட்டு போய் விடலாம்..

2000 வருட பழமை என்பதாற்காக அதை படித்து விட்டு துட்டு இல்லை என்றவுடன் தான் கதாநாயகனுக்கு கோபம் வருகிறதாம்.. :))

ஏன் அதுக்கு முன்னாடி அவருக்கு தமிழ் படித்தால் காசு வராது என்று தெரியாதா??


பெங்களூரில் ஒரு முகம் தெரியாத கிறுக்கன் தன் வீட்டை சுவரை தவிர பொது இடங்களில் கொச்சை தமிழில் அல்லது பிழையான ஆங்கிலம் + தமிழில் ராஜபங்சேவை தூக்கில் போடு என்று யாருக்கும் புரியாத விழயங்களை எழுதி கொண்டு பொழுதை கழித்து கொண்டு இருப்பார்.

அவருக்கு சந்தோசம்.. ஏதோ சாதிட்டு விட்டு மாதிரி.. பெங்களூர் போன்ற மாநகரில் அதை போல மன சிதைவு ஆசாமிகள் இருக்கிறார்கள்..

அந்த கிறுக்கனுக்கும் ரசிகர்கள் இருப்பார்கள் போல... திருச்சி - சென்னை NH45 வழித்தடத்தில் வழிகாட்டி இருக்கும் இடங்களில் எல்லாம் முரளி வாழ்க என்று ஒரு இன்னோரு கிறுக்கன் எழுதி வைத்து இருப்பான்.. அதை போல ஆள் என இந்த இயக்குநரை சொல்ல தெரியவில்லை...இந்த படத்தை பார்த்து தமிழ் வால்க என்று புது தமிளு கோசம் போடுவர்களை பார்த்தால் அப்படி தான் தெரிகிறது..

Unknown said...

டோண்ட்ஸ்,

சமீபத்தில் 1956,சமீபத்தில் 1951 என்று குறிப்பிடுகின்றீர்கள். ஆவ்வ்வ்வ்... உங்கள் டைம் சென்ஸ், அடா அடா அடா...

dondu(#11168674346665545885) said...

//சமீபத்தில் 1956,சமீபத்தில் 1951 என்று குறிப்பிடுகின்றீர்கள். ஆவ்வ்வ்வ்... உங்கள் டைம் சென்ஸ், அடா அடா அடா...//


"சமீபத்தில் 1955-ல் நான் திருவல்லிக்கேணி ஹிந்து உயர்நிலை பள்ளியில் படித்த போது" என்று ஆரம்பித்து நான் எழுதிய/எழுதும் போதெல்லாம் பல வலைப்பதிவர்கள் டென்ஷன் ஆவது வழக்கம். என்ன செய்வது, எனக்கு எல்லாமே சமீபத்தில் நடந்தது போலவே தோன்றுகிறதே. என் வாழ்வில் நான் நேரடியாக அனுபவித்த பல நிகழ்ச்சிகள் என் நினைவுக்கு வரும்போது சும்மா வருவதில்லை. முழு அளவில் வருகின்றன. அவற்றை மறுபடியும் உணர முடிகிறது.

இது பற்றி நான் ஒரு பதிவில் கூறியதிலிருந்து இப்பதிவுக்கு ரெலெவண்டானதை கூறுவேன்.

"நான் சாதாரணமாக கிழமையைக் கூற சில நிமிடங்கள் ஆகும். கூறப்பட்டத் தேதிக்கு மிக அருகில் உள்ள தேதியில் என் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி ஏதாவது இருந்தால் அதிலிலிருந்து வொர்க் அவுட் செய்வேன். ஒருவர் 1964 ஜனவரி முதல் தேதிக்கானக் கிழமையைக் கேட்க, அவரிடம் புதன் என்று கூற, எப்படி கண்டு பிடித்தீர்கள் என்று கேட்க, அவரிடம் ஏப்ரல் முதல் தேதி 1957 ஆம் வருடம் திங்கள், அதிலிருந்து கண்டுபிடித்தேன் என்று கூறி விடுவேன். ஆகவே நேரம் பிடிக்கும். அதே நேரத்தில் என் வாழ்வில் நடந்த அந்த குறிப்பிட்ட நிகழ்ச்சியை அசைபோடவும் நேரம் கிடைக்கும். அதனால்தான் நான் என் பதிவுகளில் சமீபத்தில் 1955 வருடத்தில் என்றெல்லாம் எழுத முடிகிறது.

உதாரணமாக, மேலே குறிப்பிட்ட 1957, ஏப்ரல் 1-ஆம் தேதி நயா பைசா அமுலுக்கு வந்தது, அதன் சம்பந்தப்பட்ட நினைவுகள், அன்று என் வாத்தியார் கே. ராமஸ்வாமி அய்யர் அவரிடம் உதை வாங்கியது, நான் மட்டும் உதை வாங்குவானேன் என்ற நல்லெண்ணத்தில் என் நண்பன் டி.வி. ரங்காச்சாரியையும் போட்டுக் கொடுத்தது எல்லாம் ஞாபகம் வரும். மறுபடியும் என் வயது 11 ஆகி விடும். அம்புடுத்தேன்."

பொதுவாகவே என்னை மாதிரி பெருசுகள் காலம் எவ்வளவு வேகமாகச் செல்கிறது என்பதை குறித்து வியப்படைந்துள்ளோம். இது பற்றி யோசித்ததில் எனக்கு சில விஷயங்கள் தோன்றின. அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்.

முதலில் தோன்றுவது வாழ்நாளின் சதவிகிதம். விளக்குவேன். உதாரணத்துக்கு 1955-ஐயே எடுத்து கொள்வோம். கல்கியில் "அமரதாரா" என்ற தொடர்கதை வந்து கொண்டிருந்தது. அதில் ஒரு கோர்ட் சீன். நான்கு வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சியை பற்றி ஒரு சாட்சி வாக்குமூலம் அளிக்க எனக்கு சற்றே வியப்பு. அதாவது, அவ்வளவு ஆண்டுகளுக்கு பின்னால் சாட்சி எப்படி ஞாபகம் வைத்து கொண்டு சாட்சி அளிக்கிறார் என்று. ஆனால் இப்போது? 2003 நவம்பர் நமக்கு சமீபத்தில் இருப்பது போலத்தானே தோன்றுகிறது? என்னைப் பொருத்தவரை இப்போது நான்கு ஆண்டுகள் என்பது என் வயதில் 6.6% தான். ஆனால் 1954-ல் அதே காலம் என் ஆயுளில் 50%-க்கு மேல். இன்னும் கூறப்போனால் எனக்கு நினைவு தெரிந்து அப்போது 5 ஆண்டுகள்தான் ஆகியிருந்தன, ஆகவே 80% என்றுகூட கூறலாம். இதே கணக்கில் பார்த்தால் நான் திருவல்லிக்கேணியை விட்டு 23-ஆம் வயதில் நங்கநல்லூருக்கு குடிபெயர்ந்தபோது நான் நினைவு தெரிந்தபின் அங்கு வாழ்ந்த 14 ஆண்டுகள் என் அப்போதைய வயதில் 50%-க்கு மேல். ஆகவே ரொம்ப நாள் நான் திருவல்லிக்கேணியில் வாழ்ந்த உணர்வு. அதே உணர்வு இப்போது வர வேண்டுமானால் கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் தேவைப்படும்.

இப்போது வேறு கோணத்திலிருந்து நோக்குவேன். Windows 95 என்பது எவ்வளவு பழையதாகத் தோன்றுகிறது? பத்து ஆண்டுகளிலேயே எனக்கு அது அரதப் பழசாகத் தோன்றுகிறதே. ஆகவே இங்கே இன்னொரு மெக்கானிஸம் வேலை செய்கிறது. கணினித் துறையில் உள்ள தொழில் நுட்பங்களின் ஆயுள் ஓரிரு ஆண்டுகளே. ஏனெனில் நிகழ்ச்சிகள் அவ்வளவு அடர்த்தியாக வருகின்றன. பத்தாண்டுகளுக்கு முன்புவரை கூட இருந்த வி.சி.ஆர்கள் எங்கே போயின?

நான் விமானப்படையில் பொறியாளர் தேர்வுக்காக மைசூரில் மூன்று நாட்கள் நேர்க்காணலுக்காக சென்றிருந்தேன். எல்லா நாட்களும் நிகழ்ச்சிகளால் நிரம்பியிருந்தன. மூன்றாம் நாள் அன்று அங்கு ரொம்ப நாள் இருந்தது போல் உணர்வு.

Now to sum up:

காலத்தை பற்றி நம் புரிதல்கள் இரண்டு தளங்களில் நடக்கின்றன. சாதாரண ரொட்டீன் வாழ்க்கை மற்றும் பல நிகழ்ச்சிகளால் நிரம்பிய வாழ்க்கை ஆகியவையே அவை. வெறுமனே தினமும் எழுந்து, சாதாரணமாக பொழுதைக் கழிக்கும்போது நாட்கள் வெகு சீக்கிரம் ஓடி விடுவது போலத் தோன்றுகிறது. ஆனால் அதுவே ஒரு குறிப்பிட்ட காலநேரம் (உதாரணத்துக்கு ஒரு மாதம்) பல நிகழ்ச்சிகள் நிரம்பியிருந்தால் கணிசமானதாகவே தோன்றுகிறது. வாழ்நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருந்து பல நிகழ்ச்சிகளால் அதை நிரப்பிக் கொள்கிறவர்கள் தங்கள் வாழ்நாளை இன்னும் அதிக அளவில் அனுபவிக்கின்றனர் என்றே தோன்றுகிறது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

பெருசு,

பதிவ விட பின்னூட்டம் பெரிசா எளுதும் ஒரே ஆள் நீ தான்யா! வாள்க டோண்டுவின் தொண்டு!

bala said...

//பெருசு,

பதிவ விட பின்னூட்டம் பெரிசா எளுதும் ஒரே ஆள் நீ தான்யா! வாள்க டோண்டுவின் தொண்டு//

அனானி அய்யா,
தப்புங்க.பதிவைவிட பெரிசா பின்னூட்டம் போடுவதில் எங்க கட்சி தலலவர் அசுரன் அய்யாவை மிஞ்ச யாரும் இது வரை பிறந்ததில்லை.டோண்டு அய்யாவே இதை ஒத்துக் கொள்வார் என்று நினைக்கிறேன்.

பாலா

dondu(#11168674346665545885) said...

//பதிவ விட பின்னூட்டம் பெரிசா எளுதும் ஒரே ஆள் நீ தான்யா! வாள்க டோண்டுவின் தொண்டு!//
தவறு. பதிவில் 796 சொற்கள் உள்ளன. பின்னூட்டத்திலோ 467 மட்டுமே.
இன்னொரு விஷயம், இப்பின்னூட்டமும் இன்னொரு பதிவே. பார்க்க பின்னூட்டங்களுடன்: http://dondu.blogspot.com/2006/01/1955.html
அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//இல்லாமல் போயிருந்தால் மாவட்டத்துக்கு மாவட்டம் கல்லூரிகள் திறந்து லட்சக்கணக்கில் அவர்கள் வந்து கடைசியில் குறைந்த சம்பளத்துக்கு வர வேண்டியிருந்திருக்கும்//

'தமிழர் தலைவர் மானமிகு அய்யாவும்' 'தமிழினத்தலைவரும்' இந்த படிப்பையாவது உருப்படியாக விட்டுவைப்பார்களா? அல்லது இதிலும் 27% கோட்டா முஸ்லிம் மற்றும் கிருத்துவர்களுக்கு 3% தனி ஒதுக்கீடு வர பாடுபடுவார்களா?

சிங்கமுத்து

Anonymous said...

//அந்த டைரக்டருக்கு கேள்வி: (கப்ம்யூட்டரோ, தமிழோ) படித்தவனுக்கு அதிகபட்சம் இருபதாயிரம், படிக்காமலே சினிமாவுக்கு ஓடிப்போனவனுக்கு இரண்டு லட்சமா!!!
//

சினிமாவுக்கு ஓடிப்போனவனை விடுங்கள். ஒன்றும் படிக்காமலேயே படிப்படிப்படியாக வளர்ந்து அரசியல்வாதியாகியவர்களுக்கு கோடிக்கணக்கில் சொத்துக்கள் உள்ளதே? அதை அப்படத்தில் டைரக்டர் கேட்டாரா?

சிங்கமுத்து

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

முதல் முதலாக உங்கள் பதிவுக்கு வருபவர்களுக்கு என்ற தலைப்பில் உங்களின் இப்போதைய தலைப்புக்கு மேலே ஒரு லிங்க் கொடுத்துவிடுங்கள்.அதில் இந்த மாதிரி("சமீபத்தில் 1950...") என்ற விடயங்களையெல்லாம் சொல்லிவிடலாம்.

இசை,அவருக்கு போன ஜென்ம ஞாபகங்கள் எல்லாம் வருவதில்லை.தப்பித்தோம் . இல்லாவிடில் ...சமீபத்தில் கி.மு 505-ல் என்றெல்லம் போட்டிருப்பார்.

Jay said...

"a good professor and a good plumber earn about the same(both earn a notch above $100,000 in Australia today). This is due to very high productivity of the plumber who receievs extensive training in modern technology in free societies: always cutting edge innovation"

in 'Breaking Free of Nehru' by Sanjeev Sabhlok

http://www.sanjeev.sabhlokcity.com/breakingfree.html

Expatguru said...

நீங்கள் கூறியது மிகவும் practical ஆக உள்ளது. மிக நன்றாக எழுதியுள்ளீர்கள். ஆனால் நாணயத்துக்கு இரு பக்கம் இருக்கிறது இல்லையா? உங்களிடம் திறமை இருக்கிறது,நீங்கள் அதை capitalize செய்து கொள்கிறீர்கள். VRS வாங்கிக்கொண்டு வீட்டில் இருக்கும் ரிட்டயர் ஆன நடுத்தர ஆசாமியின் கதி என்ன ஆவது? தனியாக consultancy ஆரம்பிக்கும் அளவுக்கு தைரியமோ பணமோ இல்லாதவன் என்ன செய்வான்? இதே போல உடம்பில் உழைக்க வலுவில்லாத முதியோர்களின் கதி என்ன? அவர்களும் இந்த சமுதாயத்தில் தானே இருக்கிறார்கள்?

dondu(#11168674346665545885) said...

//VRS வாங்கிக்கொண்டு வீட்டில் இருக்கும் ரிட்டயர் ஆன நடுத்தர ஆசாமியின் கதி என்ன ஆவது? தனியாக consultancy ஆரம்பிக்கும் அளவுக்கு தைரியமோ பணமோ இல்லாதவன் என்ன செய்வான்? இதே போல உடம்பில் உழைக்க வலுவில்லாத முதியோர்களின் கதி என்ன? அவர்களும் இந்த சமுதாயத்தில் தானே இருக்கிறார்கள்?//
மனமிருந்தால் மார்க்கம் உண்டு. நானும் வி.ஆர்.எஸ். வாங்கினவனே, அதுவும் 47-ஆம் வயதில். கையில் எந்த வேலை நியமன உத்திரவின்றி அவ்வாறு எங்கள் கம்பெனியிலிருந்து சென்றவன் அச்சமயம் நான் மட்டுமே. ஏனெனில் என் கைத் தொழில் மேல் எனக்கு அவ்வளவு அசைக்க முடியாத நம்பிக்கை. அவ்வாறு இல்லாதவர்கள் வேறு ஏதாவது புதிய வேலையை கையில் வைத்துக் கொண்டுதானே இருக்கும் வேலையிலிருந்து வி.ஆர்.எஸ். வாங்க வேண்டும்?
எனது 56-ஆம் வயதில்தான் கணினியை நேரிடையாக முதன் முதலில் கையாண்டேன். இப்போது? நேற்று பின்வாசல் வழி வந்த சில ட்ரோஜன் வைரஸ்களை சேஃப் மோடில் ஏ.வி.ஜி-யை ஓட்டி நீக்கினேன். எர்ரர் மெசேஜ்களின் அர்த்தம் புரியாவிட்டால் அதற்கான மன்றங்களில் போய் தெரிந்து கொள்ளும் அளவுக்கு அறிவு வளர்த்துள்ளேன். இப்போது எனது வயது 61. ஒரு நாளைக்கு 16 மணி நேரம் கணினியில் வேலை. என்னாலேயே இதெல்லாம் முடிந்தபோது மற்றவரால் ஏன் முடியக்கூடாது? முடியவேண்டும் என்னும் பிடிவாதம் இருந்தால் போதும்.

பென்ஷனுடன் கூட வேறு பல வேலைகளை செய்யலாம். 'வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்' என்று பாடிய கண்ணதாசன் வாழ்ந்த தமிழகத்தில்தானே இருக்கிறீர்கள் எல்லோரும்? நல்ல மனநிலையை வளர்ப்பதுதானே? வேறு வழியில்லை வளர்த்துத்தான் தீர வேண்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

\\ஒரு நாளைக்கு 16 மணி நேரம் கணினியில் வேலை. என்னாலேயே இதெல்லாம் முடிந்தபோது மற்றவரால் ஏன் முடியக்கூடாது? முடியவேண்டும் என்னும் பிடிவாதம் இருந்தால் போதும்.//

Good one.

Jay said...

Dondu Sir,

I have a question. Is the retirement age of 58, compulsory in India?

//ரிட்டயர் ஆன நடுத்தர ஆசாமியின்/முதியோர்களின் கதி என்ன?//

Those who didn't save for retirement would be able to continue working since in a free society would have no mandatory retirement age.

//இதே போல உழைக்க வலுவில்லாதவர்களின் கதி என்ன?//

Former PM Rajiv Gandhi said this on govts welfare expenditure, that "Of every 1 rupee govt spends only 15 paisa reaches the poor"

Thats 85% wastage. Do you continue do an activity that has wastage as high this?

Also a free society would be a prosperous one there would be very few people who need support.In the case of private charity 3/4ths of the money reaches the poor. Those who need support will be supported by private charity.

dondu(#11168674346665545885) said...

வாருங்கள் ஜயகமல் அவர்களே,
நீங்கள் எழுதுவது ஆயிரத்தில் ஒரு வார்த்தை. ஓய்வு பெறும் வயது நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடும். மத்திய அரசு ஊழியர், வங்கி ஊழியர்கள் ஆகியோருக்கு 60 வயதிலும், மாநில அரசு ஊழியர்கள், அரசு கம்பெனி ஊழியர்களுக்கு 58 வயதிலும். ப்ரெஸ்டீஜ் பத்மனாபனுக்கு 55 வயதிலும். :)))))
அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது