நண்பர்களுக்கு நன்றி - 1
இந்தப் பதிவை ஆரம்பிக்கும் நேரம் (14.02.2008, மணி 16.08 hrs IST) ஹிட் கவுண்டர் 199,756 காண்பிக்கிறது. இரண்டு லட்சம் எண்ணிக்கைக்கான கவுண்ட் டவுனை ஆரம்பிக்கிறேன். ஒரு லட்சம் வந்த நேரம் 19.12.2006, 20.45hrs. IST. ஹிட் கவுண்டர் பிப்ரவரியில் சில நாட்கள் செயல்பாட்டில் இல்லை, ஏனெனில் பிளாக்கரின் பீட்டாவுக்கு மாறியதில் அதை அங்கு எடுத்து போக தெரியவில்லை. நண்பர் மா.சிவகுமார் அவர்களது உதவியோடு அதை மறுபடியும் நிறுவினேன். ஆக, இப்போதைக்கு ஏற்கனவே இரண்டு லட்சம் தாண்டியிருக்க வேண்டும். இருந்தாலும் நான் அதை கணக்கில் எடுக்கவில்லை. ஒரு லட்சத்துக்கும் இரண்டு லட்சத்துக்கும் இடையில் 14 மாதங்களுக்கும் குறைவாகவே எடுத்து கொள்ளப்பட்டுள்ளது.
இந்த கவுண்டரின் விசேஷம் என்னவென்றால், நான் லாக்-இன் செய்து பார்ப்பதெல்லாம் கணக்கில் ஏற்றப்படாது. இந்த ஆதரவுக்காக நான் எனது நலம் விரும்பிகளுக்கும் மற்றவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.
முரளி மனோஹர், ஆரவாரப்பேய்கள் ஆகியோர் உபயத்தால் சில நாட்கள் தினசரி ஆயிரத்துக்கும் மேல் ஹிட்கள் இருந்தன.
போன தடவை போல இல்லாமல் சற்று முன்பே இப்பதிவை போட்டு விட்டேன். நாளை 2 லட்சம் தாண்டும் என நினைக்கிறேன். ஆகவே இப்பதிவையும் இப்போதே வெளியிடுகிறேன். இப்போது 16.23 மணிக்கு (இந்திய நேரம்) ஹிட்கள் 1,99,766.
10, 9, 8, 7, 6, .......
அன்புடன்,
டோண்டு ராகவன்
Manasa Book Club, Chennai.
-
Hi Sir, Hope you’re doing well. Manasa Publications has launched the
‘Manasa Book Club’ — a monthly gathering for readers and writers. The meet
will be on ...
5 hours ago

22 comments:
வாழ்த்துகள்...
பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதோர் - என்ற பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்டு உங்களது விடாமுயற்சியையும், இரண்டு இலட்சம் எண்ணிக்கையைத் தொடும் கண்ணுற்றோர் எண்ணிக்கையையும் கண்டு மகிழ்கிறேன்.
பகிர்ந்தபோது துன்பம் பாதியாகும்
பகிர்ந்தபோது இன்பம் இரட்டிப்பாகும், பன்மடங்காகும்.
இது போல உங்களது வலைப்பூவைக் கண்ணுற்றோரின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தைத் தொடுகிறது என்கிற நிகழ்தகவை நினைக்கிறபோதே மனம் மகிழ்வில் ஆனந்தமடைகிறேன்.
உங்களை வாழ்த்துவதற்கு வயது என்னிடம் இல்லை. உங்களது கருத்துக்களை ஆதரிக்கவோ / எதிர்க்கவோ நான் முன்வரவில்லை. இருப்பினும் உங்களது சந்தோசத்தில் பங்குகொள்ள எனக்கு உரிமையுள்ளதாக நினைத்தே இந்தப் பின்னூட்டத்தை எழுதுகிறேன்.
நன்றி வணக்கம். அன்புடன் தமிழ்நெஞ்சம்
என்னையும் சேர்த்து நண்பர்கள் என அழைத்ததை எண்ணி மகிழ்ச்சி.
புள்ளிராஜா
//ஹிட் கவுண்டர் பிப்ரவரியில் சில நாட்கள் செயல்பாட்டில் இல்லை, ஏனெனில் பிளாக்கரின் பீட்டாவுக்கு மாறியதில் அதை அங்கு எடுத்து போக தெரியவில்லை. நண்பர் மா.சிவகுமார் அவர்களது உதவியோடு அதை மறுபடியும் நிறுவினேன். ஆக, இப்போதைக்கு ஏற்கனவே இரண்டு லட்சம் தாண்டியிருக்க வேண்டும். இருந்தாலும் நான் அதை கணக்கில் எடுக்கவில்லை.//
அதுதான் டோண்டு! சட்டசபை பொன்விழா என்று பாராட்டு விழா எடுத்துக் கொண்டவர்கள் நடுவில் சட்டசபையில் இல்லாத வருடங்களையும் சேர்த்துக் கூட்டிக் கொண்டார்கள் என்ற சர்ச்சை இந்த சமயத்தில் அனாவசியமாக நினைவுக்கு வருகிறது! :-)
இரண்டு லட்சம் ஹிட் கண்ட எங்கள் அண்ணன் "பெரிய கவுண்டர்"(counter) டோண்டுவுக்கு அன்பான வாழ்த்துக்கள். உங்கள் நேர்மையான பணி தொடரட்டும் நெடுநாள்!
நல்லது நடந்தால் பொறுக்காத பொறுக்கி கூட்டம் இதையும் கிண்டல் செய்திருக்கிறது
http://amkworld.blogspot.com/2008/02/blog-post_14.html
வாழ்த்துக்கள்! டோண்டு சார்
DFC
தினமும் சராசரியாக 200 க்கும் மேலான ஹிட்கள். டோண்டு சார் நீங்க ஹீரோ தான்.
டோண்டு ரசிகர் மன்றம்
உடனுக்குடன் கிண்டல் பதிவு போட்ட அனானிகள் முன்னேற்றக் கழகத்திற்கு நன்றி!
தொண்டன் அவர்களுக்கு சிறப்பு பாராட்டுகள்.
உங்கள் பதிவின் மூலம் அதிக வாசகர்களை சென்றடைவோம். இலவச விளம்பரத்திற்கு நன்றி!
-டோண்டு ரசிகர் மன்றம்
வாசகர்களின் வசதிக்கு தொண்டன் அவர்களின் பதிவு இணைக்கப்ப்டுள்ளது.
//நண்பர்களுக்கு நன்றி!
by தொண்டன்
போலி, கோலின்னு சொல்லி எப்படியோ ரெண்டு லட்சம் ஹிட்டு தேத்திட்டேன். இந்த ரெண்டு லட்சத்துலே ஒண்ணேகால் லட்சம் ஹிட்டு நானே ரெப்ரெஷ் பண்ணி மறுபடி மறுபடி பாத்துக்கிட்டது.
அதுமட்டுமில்லாமல் எனக்காக மெனக்கெட்டு களத்தில் வந்த நண்பர்கள் முரளிமனோஹர், நாட்டாமை, தினகர், அறவாழி அந்தணன், வெங்கடேஷ் ஷர்மா, பிரகாஷ், நெப்போலியன், புதியவன், வரதன், கண்ணம்மா ஆகியோருக்கும் நான் மிக்க கடமைப்பட்டவன். நான் ஒரு பதிவு போட்டால் ஆளுக்கு ஐம்பது முறையாவது பார்த்து ஹிட் கவுண்டரின் சூட்டை ஏற்றுவார்கள்.
இந்த ரெண்டு லட்சம் ஹிட்டுகள் வந்த ரெண்டு வருஷத்தை திரும்பி பார்த்தால் போலி இல்லையென்றால் நான் காலி. இப்போது போலி வேறு ஒழிந்துவிட்டான். ஹிட்டு தேத்த வேறு எவனையாவது மகரநெடுகுழைகாதன் உருவாக்கணும்.
அன்புடன்
பேண்டு பலராமன்
- அனானிகள் முன்னேற்றக் கழகம் //
வாழ்த்துக்கள் டோண்டு சார்!
200,000 ஹிட்...ச்சும்மா அதிருதில்ல...!!! கோமாளிகள் முன்னேற்றக் கழகத்தில் ஜெலுஸில் விற்பனை அமோகமாக ஆரம்பித்து விட்டதை கவனித்தீர்களா?
தனக்குதானே விசிட் செய்துகொண்டால் கவுன்டர் சூப்பராக உயரும். இதில் வெட்டி ஜம்பம் தேவையா? என்ன சாதித்து விட்டாதாக இந்த இறுமாப்பு, ஆணவம், தற்பெருமை எல்லாம்? பைசா பிரயோசனம் உண்டா?
கோமணகிருஷ்ணன்
சீக்கிரம்...சீக்கிரம்...மிஸ்டர் டோண்டு...சீக்கிரமாக வாழ்த்துக்களைப் பிடியுங்கள்! இன்னிக்கு நம்ம வியாபாரம் அமோகமா நடக்கும். ஒரு லாரி ஜெலுசில் ஆர்டர் பண்ணியிருகேன். சாயங்காலத்துக்குள்ள எல்லாத்தையும் வித்துறலாம் போல இருக்கு!
சீக்கிரம்...சீக்கிரம்...புடிங்க வாழ்த்துக்களை....!!!!!!
2 லட்சத்துக்கு இன்னும் 13 தான் பாக்கி. அமுக நண்பர்களுக்கு நன்றி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//தனக்குதானே விசிட் செய்துகொண்டால் கவுன்டர் சூப்பராக உயரும்.//
நீ கமெண்டு போட்ட கூடத்தான் உயரும்.
மாலை 07.58 இந்திய நேரத்தில் ஹிட்கள் 2,00,002. நண்பர்களுக்கு நன்றி மீண்டும் ஒரு முறை கூறுகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
8.00 மணி தலைப்பு செய்திகள்
டோண்டு இரண்டு லட்சம் ஹிட்கள் பெற்று தமிழ் பதிவுலகில் சாதனை
அன்புள்ள டோண்டு சார்
வணக்கம் . வாழ்த்துக்கள்.
மிக நன்றாக இருக்கு சார் படிக்க ரசிக்க.
முடிந்த பொது இந்த நண்பரின் பதிவையும் ஒரு தபா பார்க்கவும்.
http://devakottai.blogspot.com/2008/02/blog-post_12.html
இறையருள் உங்களை பாதுகாக்கும்.
வாழ்க வளமுடன்.
மிகுந்த நன்றி .
அன்புடன்,
வணக்கம்.
ஸ்ரீனிவாசன்.
தேவக்கோட்டையாரின் தீவிர விசிறி நான். அவர் பதிவுகளை மிகவும் விரும்பி படிப்பவன் நான். நீங்கள் சுட்டிய இப்பதிவும் நன்றாக உள்ளது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வாழ்த்துக்கள் டோண்டு ஸார்!
Are you there yet?
//Are you there yet?//
கேள்வி புரியவில்லை.
உங்கள் பின்னூட்டம் வந்தபோது நான் ஆன்லைனில் இருந்தேனா என்றால் இருந்தேன். இன்னும் இருக்கிறேன்.
இரண்டு லட்சம் ஆகிவிட்டதா எனக்கேட்டால், நேற்றே ஆகிவிட்டது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் சார். கலக்கிடிங்க போங்க.
ஒரு கூட்டம் பேச்சு மூச்சு இல்லாமல் இருக்கு...
வலையுலக சச்சினின் , மற்றுமொரு சாதனை......
மேலும் பல சாதனைகள் படைக்க..
வாழ்த்துவதற்கு வயது என்னிடம் இல்லை. உங்களது கருத்துக்களை ஆதரிக்கவோ / எதிர்க்கவோ நான் முன்வரவில்லை. இருப்பினும் உங்களது சந்தோசத்தில் பங்குகொள்ள எனக்கு உரிமையுள்ளதாக நினைத்தே இந்தப் பின்னூட்டத்தை எழுதுகிறேன்.
அப்படியே.... நானும்
Post a Comment