ஆங்கிலத் தட்டச்சு பயிலும்போது ஒரு வாக்கியம் சாதாரணமாக வரும். அது: The quick brown fox jumps on the lazy sleeping dog.
அதுபோல நான் தமிழில் தட்டச்சு செய்ய ஒவ்வொரு முறையும் தரவிறக்கம் செய்யும்ப்போது அடிக்கும் வாக்கியம்: "அன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம், நான் எழுதுவதென்னவென்றால் உயிர்க் காதலில் ஓர் கவிதை". ஆனால் இப்பதிவு அதைப் பற்றியல்ல.
சமீபத்தில் 1965-ல் வந்த "குழந்தையும் தெய்வமும்" படத்தில் வந்த இந்தப் பாட்டு சந்தோஷ மனநிலையில் பாடப்பட்டது. அதே பாட்டு சற்றே மாறிய வரிகளுடன் சோகமான மனநிலையில் "அன்புள்ள மன்னவனே ஆசையில் ஓர் கடிதம் அதைக் கைகளில் எழுதவில்லை கண்ணீரில் எழுதி வந்தேன்" மெதுவான வேகத்தில் வரும். அக்காலக் கட்டங்களில் இம்மாதிரி இரட்டைப் பாட்டுக்கள் மிக பிரசித்தம்.
உதாரணத்துக்கு "அன்று வந்தது அதே நிலா", "பார்த்த ஞாபகம் இல்லையோ" "உன்னைக்கண்டு நான் ஆட/வாட, என்னைக்கண்டு நீ ஆட/வாட" என்றெல்லாம் இரு டெம்போக்களிலும் பாடல்கள் வரும். எனது இப்பதிவு அம்மாதிரி பாடல்களைப் பற்றித்தான்.
இந்த பாடல் ஜோடிகளில் என் மனதைக் கொள்ளை கொள்வது சோகமாக மினிமம் வாத்தியங்களுடன் வரும் அடிகளே. "உலகம் பிறந்தது எனக்காக" என எம்ஜிஆர் பாசம் படத்தில் முதலில் தன்னம்பிக்கையுடன் பாடுகிறார், கடைசி காட்சியில் அவரும் சரோஜாதேவியும் இறந்த பின்னர் கடைசி காட்சியில் அதே வரிகள் வெறும் குரலில் வந்தபோது என் கண்களில் கண்ணீர் என்னையறியாமலேயே பெருகும்.
சோகப் பாடல்கள் மனதில் நிலைத்து நிற்கும் காரணமே முக்கியமாக அவை ஒரு நம்பிக்கையற்ற சூழ்நிலையை உருவகப்படுத்துவதேயாகும். பாத்திரங்களின் கஷ்டங்களை நாமும் உணர்கிறோம். அவர்களுக்கு நம்மால் உதவ முடியவில்லையே என மனம் குமைகிறோம். அதே சமயம் சில இடங்களில் அம்மாதிரி மெதுவான வேகத்தில் வரும் வெர்ஷன் நம்பிக்கையையும் வரவழைக்கிறது. உதாரணத்துக்கு சமீபத்தில் 1964-ல் வந்த ஆண்டவன் கட்டளை என்னும் படத்தில் வரும் "அமைதியான நதியினிலே ஓடும், ஓடம் அழகில்லாத வெள்ளம் வந்தால் வாடும்" என்னும் பாடலையே எடுத்து கொள்வோம். அதன் மெதுவான வெர்ஷனில் "தென்னை இளம் கீற்றினிலே" என்ற வரியுடன் ஆரம்பிக்கும். சிவாஜி அதை பாட, அதுவரை தான் யார் என்பதை மறந்த நிலையில் இருந்த தேவிகாவுக்கு மெல்ல நினைவு திரும்புகிறது. பிறகு அவரும் திக்கும் குரலோடு இப்பாடலில் சேர்கிறார். மிகவும் அழகான படமாக்கம். கதையின் முக்கியமான நம்பிக்கை தரும் திருப்பத்தைத் தருகிறது இப்பாடல்.
இந்த இரண்டு வெர்ஷன்களையுமே பார்ப்போமா?
முதலில் சந்தோஷ சூழ்நிலையில் பாடும் பாடல்:
டி.எம்.எஸ்: அமைதியான நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
அமைதியான நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும் மழையினிலும் கலங்க வைக்கும் இடியினிலும்
காற்றினிலும் மழையினிலும் கலங்க வைக்கும் இடியினிலும்
கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும்
ஹோய் ஹோய்..
அமைதியான நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
தென்னை இளம்கீற்றினிலே ஏ ஏ..ஏ ஏ...
தென்னை இளம்கீற்றினிலே
தாலாட்டும் தென்றலது
தென்னை இளம்கீற்றினிலே
தாலாட்டும் தென்றலது
தென்னை தனை சாய்த்து விடும்
புயலாக வரும் பொழுது
தென்னை தனை சாய்த்து விடும்
புயலாக வரும் பொழுது
அமைதியான நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத
வெள்ளம் வந்தால் ஆடும்
ஆற்றங்கரை மேட்டினிலே
ஆடி நிற்கும் நாணலது
ஆற்றங்கரை மேட்டினிலே
ஆடி நிற்கும் நாணலது
காற்றடித்தால் சாய்வதில்லை
கனிந்த மனம் வீழ்வதில்லை
காற்றடித்தால் சாய்வதில்லை
கனிந்த மனம் வீழ்வதில்லை
டி.எம்.எஸ்: அமைதியான நதியினிலே ஓடும்
சுசீலா: ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ
டி.எம்.எஸ்: ஓடம் அளவில்லாத
வெள்ளம் வந்தால் ஆடும்
அமைதியான நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத
வெள்ளம் வந்தால் ஆடும்
சுசீலா: நாணலிலே காலெடுத்து
நடந்து வந்த பெண்மை இது
நாணலிலே காலெடுத்து நடந்து வ்
அந்த பெண்மை இது
நாணமென்னும் தென்றலிலே தொட்டில்
கட்டும் மென்மை இது
நாணமென்னும் தென்றலிலே தொட்டில்
கட்டும் மென்மை இது
அமைதியான நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத
வெள்ளம் வந்தால் ஆடும்
அந்தியில் மயங்கி சிடும்
காலையில் செழித்து விடும்
அந்தியில் மயங்கி சிடும்
காலையில் செழித்து விடும்
அன்பு மொழி கேட்டு விட்டால்
துன்ப நிலை மாறி விடும்
அன்பு மொழி கேட்டு விட்டால்
துன்ப நிலை மாறி விடும்
இருவரும்: அமைதியான நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத
வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும் மழையினிலும்
கலங்க வைக்கும் இடியினிலும்
கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும்
ஹோய் ஹோய்
அமைதியான நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத
வெள்ளம் வந்தால் ஆடும்
சுசீலா: ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ
இப்பாடல் காட்சியை பார்க்க இங்கே சுட்டவும்.
ஆடியோவில் கேட்க நண்பர் ஞானவெட்டியான் அவர்களது இப்பதிவை சுட்டவும்.
இப்போது சோகமான வெர்ஷன்:
அதன் வரிகள் காணக்கிடைக்கவில்லை. என்றென்றும் அன்புடன் பாலா, ரோசா வசந்த் ஆகிய நண்பர்களை கேட்டால் தெரியும். அதே சமயம் இந்த வெர்ஷனை ஆடியோவில் கேட்க மீண்டும் உதவுகிறார் நண்பர் ஞானவெட்டியான் அவர்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இங்கே சுட்டவும். இதன் யூ ட்யூப் வெர்ஷனும் கிடைக்கவில்லை. பரவாயில்லை. அதுவும் நல்லதுக்குத்தான் என வைத்து கொள்ளலாம். கவியரசு கண்ணதாசனின் உள்ளம் கொள்ளை கொள்ளும் வரிகளை தடையின்றி உள்வாங்கலாமே. டி.எம்.எஸ். மற்றும் சுசீலாவின் குரல்களையும்தான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இன்று விஷ்ணுபுரம் பரிசளிப்பு விழா! வருக!
-
விஷ்ணுபுரம் விருது இன்று கோவையின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாக
ஆகியுள்ளது. தமிழின் தலைசிறந்த இலக்கிய விருதாகவும் இது கருதப்படுகிறது. இந்த
விழாவில் கலந்து...
15 hours ago
17 comments:
ஒரு காலத்தில் கடுப்பு காந்தத் தட்டுகளிள் ஒலிப்பெருக்கியில் கேட்டதோடு சரி...!! (மீண்டும் நியாபகப்படுத்திவிட்டீர்கள்... உடனே cooltoad.com க்கு போகவேண்டியது தான்)
நான் இன்றும் விரும்பிக்கேட்கும் ஒரு பழய பாடல் "பார்த்த நியாபகம் இல்லையோ (சோகம்)"
doondu saar, enga A.R.Raguman mathiri varuma unga dabba pazaiya padalgal? kettaa kottaavithaan
varuthu. ungalai thavira yaar ketkirargal? enga isai puyalin modern isaiyai kettal thulli ezunthu
aadalaam pola irukkum. satru 22am nootrandukku varavum.
//சோகப் பாடல்கள் மனதில் நிலைத்து நிற்கும் காரணமே முக்கியமாக அவை ஒரு நம்பிக்கையற்ற சூழ்நிலையை உருவகப்படுத்துவதேயாகும். பாத்திரங்களின் கஷ்டங்களை நாமும் உணர்கிறோம். அவர்களுக்கு நம்மால் உதவ முடியவில்லையே என மனம் குமைகிறோம்.//
இதை வேறு மாதிரியும் யோசிக்கலாம். பின்நவீனம் இதை ஒரு தற்காலிக மனசிதைவு என்று சொல்கிறது. இது உங்களுக்கு மட்டுமல்ல பெரும்பாலோர்க்கு நடக்கிறது. நாம் அனைவரும் உண்மையை தொலைத்து நகலை உண்மையென்று நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
சினிமாவில் ஹிரோ என்றால் நல்லவன், நிஜத்தில் நமக்கு நம்மை தவிர அனைவரும் கேட்டவர்கள். சினிமாவில் பார்த்து செய்ய துடித்த காட்சியை எத்தனை பேர் நிஜத்தில் செய்திருக்கிறார்கள். மற்றபடி உங்களுடைய சமீபத்தில்!? உள்ளது போல் சோக காட்சிகள் சினிமாவில் அவ்வளவாக இப்பொழுது இல்லை.
உங்களுடைய மலரும் நினைவுகளுக்கு நன்றி!
வால்பையன்
Very good post
//இதை வேறு மாதிரியும் யோசிக்கலாம். பின்நவீனம் இதை ஒரு தற்காலிக மனசிதைவு என்று சொல்கிறது. இது உங்களுக்கு மட்டுமல்ல பெரும்பாலோர்க்கு நடக்கிறது. நாம் அனைவரும் உண்மையை தொலைத்து நகலை உண்மையென்று நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.//
இதுவரைக்கும் நல்லாத்தான் இருக்கு, அதுக்கு அப்பறம் ஒன்னு சொன்னிங்களே ஆஹா
//சினிமாவில் ஹிரோ என்றால் நல்லவன், நிஜத்தில் நமக்கு நம்மை தவிர அனைவரும் கேட்டவர்கள்.//
நிஜத்திலும் ஹீரோ நல்லவன் தான்.
நிஜத்தில் நம்மை தவிர மத்த எல்லாரும் கெட்டவர்களா? என்ன கொடுமை சரவணன் சார் இது. அப்பா உங்க அப்பா அம்மாவும் கெட்டவர்களா? இல்லை என்று தான் நினைக்கிறேன்.
பின் நவினத்துவம் என்று பேசிக்கொண்டு பின்னாடி போகாமல் இருந்தால் சரி.
//டோண்டுவால் சற்றே சென்சார் செய்யப்பட்டது//
அடச்சே முக்கியமானத வேட்டிபுட்டிங்களே ஐயா.
தனி பின்னுடமா போட்டா அனுமதிப்பிங்களா.
Nice post dondu saar,
It reminded my favourite PBS songs.
ARR songs are fine, but at times couldnt hear the words, only music is loud & clear than the words of the song.
//doondu saar, enga A.R.Raguman mathiri varuma unga dabba pazaiya padalgal? //
It all depends on individual liking. Enna anony-ku ARR pudichuruku, silaruku pazhaiya padal pudichuruku avlothaan
//The quick brown fox jumps on the lazy sleeping dog.//
தகவலுக்கு, இது பாங்க்ராம் (pangram) எனப்படும் ஒரு வகை வாக்கியம். இந்த வாக்கியத்தில் ஆங்கிலத்தில் 26 எழுத்துக்களும் ஒரு முறையேனும் இடம்பெற்றிருக்கும்.
மற்றொரு உதா., "Jackdaws love my big sphinx of quartz"
//doondu saar, enga A.R.Raguman mathiri varuma unga dabba pazaiya padalgal?//
பழைய பாடல்கள் டப்பாவா? ஏ.ஆர்.ஆர் தான் இந்தி மார்கெட் பிடிக்க தமிழ் இசையில் இந்துஸ்தானியை திணித்தவர் தானே. மேலும், அவர் பாடல்களின் ஹிட்டிற்கு பெரும்பங்கு வைரமுத்துவுக்கும் உண்டு. அலைபாயுதே-விற்கு பிறகு ஏ.ஆர்.ஆர்-ன் ஹிட்டை காண்பியுங்கள் (அதாவது ம்யூசிகல் ஹிட் படங்களை). பழைய பாடல்களில், அதுவும் மெல்லிசை மன்னரின் பாடல்கள் உண்மையிலேயே கேட்க சுகமாக இருக்கும். சில பாடல்களில் வரிகள் அருமையாக இருந்தால் அதற்கு தகுந்த மாதிரி எம்.எஸ்.வி இசையின் ஒலியை குறைத்திருப்பார். இது அவருக்கே உண்டான பெருந்தன்மை...இதெல்லாம் உங்களுக்கு எங்கே தெரியபோகிறது?
//The quick brown fox jumps on the lazy sleeping dog. //
இந்த வரி The quick brown fox jumps over the lazy dog என்று இருக்க வேண்டும். அப்போதுதான் 24 எழுத்துக்களும் வரும்.
அது நிற்க. இது அழகான பதிவு. இப்போது சமீபத்தில் 2007ல் வந்த (அப்பாடா நானும் சமீபத்தில் என்று எழுதிவிட்டேன்!!!) சிவாஜி படத்தில் சஹானா சாரல் தூவுதோ என்ற பாடலிலும் ஒரு சோக வெர்ஷன் எடுக்கப் பட்டு படத்தின் நீளம் கருதி நீக்கப் பட்டதாக நினைக்கிறேன்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நேற்று இல்லாத மாற்றம் (புதிய முகம்) பாடல் கடைசி காட்சியில் வேறு வரிகளுடன் சோக பாடலாக வரும்.....
-----
கண்னே கலைமானே கூட இரு வெர்ஷன் உண்டு தானே... இல்லையா
ஏன் கலைஞர் பராசக்தி படத்தில் எழுதிய கா கா பாடலை குறிப்பிடவில்லை? இனிமை மற்றும் புரட்சி சிந்தனை விதைக்கும் பாட்டாயிற்றே!!!
மேலும் பள்ளபட்டி தூரான் என்பவர் எழுதி தேனிசை செல்லப்பா அவர்கள் இன்னிசை அமைத்து பாடிய கழக பிரச்சாரப் பாடல்கள் ( அண்ணா அண்ணா, கழகம் வெற்றி கழகம், உதயசூரியனை பாருங்கள், புரட்சி மலரும் போன்றவை பிரபலமானவை) ஏன் உங்கள் பார்வைக்கு அதெல்லாம் படவில்லை? சினிமா பாடல்களை மட்டும் பிடித்து தொங்கிக்கொண்டிருக்க வேண்டுமா?
கோமணகிருஷ்ணன்
//ஏன் கலைஞர் பராசக்தி படத்தில் எழுதிய கா கா பாடலை குறிப்பிடவில்லை?//
அத சொல்லத்தான் நீ இருக்கியே, உனக்கு சான்சு கொடுக்க வேண்டாமா, அதான்...
//ஏன் உங்கள் பார்வைக்கு அதெல்லாம் படவில்லை? சினிமா பாடல்களை மட்டும் பிடித்து தொங்கிக்கொண்டிருக்க வேண்டுமா?//
தம்பி இன்னா பதிவுக்கு புதுசா?
"எல்லோரும் எல்லாமே பெற வேண்டும்,
இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
வல்லான் பொருள் குவிக்கும் தனியுடைமை நீங்கி
வர வேண்டும் திருநாட்டில் பொதுவுடைமை"
இப்படி பட்ட புரட்சி பாடல்களை பற்றி பதிவிட்டுள்ளார். அப்படியே பொதுவுடைமைக்கு ஆப்பு வைத்துவிட்டார்.
இங்க போயி பாரு. அடுத்த ஆப்பு ரெடி.
"வல்லான் பொருள் குவிக்கும் தனியுடைமை"
dondu.blogspot.com/2005/10/blog-post_17.html
அன்புள்ள மான் விழியே எனத் தொடங்குதே ஏதாவது அந்தக்காலத்து மான் விழிச் சாமாச்சாரம் கிடைக்கும் என ஆர்வத்தோடு பார்த்தால்.. ம் .. எதோ அந்தக் காலத்து நல்ல பாட்டுத்தான். இருந்தாலும் ஏமாற்றம். அதுவும் லவ்வேர்ஸ் டேயில இப்படியா ஏமாத்தனும்?
புள்ளிராஜா
காதலர் தினம் பற்றி நான் முன்னால் போட்ட பதிவுக்கு பார்க்க: http://dondu.blogspot.com/2007/02/blog-post_14.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
dude komanam, please put a pair of glasses and read dondu sir's post carefully. It is about old
melody and mind soothing songs. And you are trying to compare those classics with your dmk party songs
that too written and composed by some cheap dmk guys ( I am sure those guys will be like Vetrikondan
who is DMK's abusive speaker) who are never heard of. And the songs who mentioned are party campaign
songs. I am sure they will neither be melodious nor mind soothing. They will fit you like street
fellows who can dance on the streets with tharai and thappattai, when a dmk leader comes for vote
gathering during election. May be the "Ka Ka" song is ok, to some extent.
"ஒரு நாள் யாரோ, என்ன பாடல் சொல்லி தந்தாரோ"
"நெஞ்சம் மறப்பதில்லை"
"காதோடு தான் நான் பாடுவேன்"
போன்ற பாடல்கள் எல்லாம் மறக்க முடியுமா? ஏ.ஆர். ரெஹ்மானின் பாடல்களில் சில பாடல்கள் மெலடியுடன் உள்ளன என்பதை மறுக்க முடியாது. ஆனால் பெரும்பாலானவை வெறும் இரைச்சலாக தான் கேட்கிறது. அதை விட கொடுமை இந்த சாதனா சர்கமும் உதித் நாராயணும் செய்கிற கூத்து தான்.
உதாரணமாக, "சுவாசமே" என்ற மெலடி பாடலில் ஒரு வரி "நாயில் நதியாக" என்று சாதனா சர்கம் பாடுவார். ரொம்ப நாளாக எனக்கு குழப்பம், எப்படி நாயில் நதி வரும் என்று. பிறகு தான் தெரிந்தது அது "நைல்" நதியாம்! அதே போல, உதித் நாராயணின் "காத்லின், சங்கீத்மே"(காதலின் சங்கீதமேயாம்!) "பருவாயில்லை" என்பன. ஒரு காலத்தில் பாடகர் யேசுதாஸுக்கு கூட இந்த பிரச்னை இருந்தது ("தெருக்கோவிலே ஓடி வா")! நான் பாடகர்களை குறை சொல்லவில்லை. ஆனால், இசை அமைப்பாளர்கள் இவர்களின் உச்சரிப்பை திருத்துவது கடமை இல்லையா? அல்லது அழகாக தமிழ் உச்சரிப்பு உள்ள பாடகர்களே அவருக்கு தென்படவில்லையா? இதனால் நல்ல மெலடி உள்ள பாடல்களும் கெட்டு விடுகின்றன.
மழலை இனிது. வேற்று மொழியாரும் பாட, தப்பாகப்பாடினாலும் அதையும் ரசிக்க, மேலும் அவர்களை உற்சாகப்படுத்த தமிழனால் மட்டுமே இயலும். இதுவும் ஒரு அழகே.
Post a Comment