நான் சமீபத்தில் 1951-ல் சிறுவனாக இருந்தபோது விஷமம் செய்யும்போதெல்லாம் என் அன்னை என்னை கடையில் கொடுத்துவிட்டு வேறொரு புது டோண்டுவை வாங்கப் போவதாகக் கூறுவார். நானும் அதற்கு பயந்து கொண்டு கொஞ்ச நாளைக்கு சமத்தாக இருப்பேன். அந்தக் கதை ஏன் இப்போது ஞாபகத்துக்கு வரவேண்டும்? அதை கூறத்தான் இப்பதிவு.
2001-ஜூலையில் டில்லியிலிருந்து நிரந்தரமாக சென்னைக்கு குடிபுகுந்தபோது எனக்கு கணினி பற்றிய அறிவு பூஜ்யமே. நான் கையால் எழுதித்தரும் மொழிபெயர்ப்புகளை ஏஜன்ஸியின் தட்டச்சுக்காரர்கள் தட்டச்சு செய்து கொடுக்க அவற்றை பிழைதிருத்துவதுடன் என் வேலை முடிந்து விடும். சென்னை வந்த பிறகும் அதே கதைதான் தொடர்ந்தது, ஒரே ஒரு சிறு மாற்றத்துடன். மின்னஞ்சல் முகவரி எடுத்து, டில்லியிலிருந்து வாடிக்கையாளர் கோப்புகளை மின்னஞ்சல்களுடன் இணைப்பாக அனுப்ப அதை இங்கு தரவிறக்கம் செய்வித்து, காகிதங்களில் அச்சிடச்செய்து, அவற்றின் மொழிபெயர்ப்பை கைகளால் எழுதி, மறுபடியும் தட்டச்சு செய்வித்து என்றெல்லாம் காலம் கடந்ததை பற்றி இப்பதிவில் போட்டுள்ளேன்.
எல்லா விஷயங்களும் ஒரு நாளைக்கு முடிவுக்கு வரத்தானே வேண்டும். எனக்காக தட்டச்சு செய்த அந்த இரு இளைஞர்களும் தத்தம் வேலைகளில் ரொம்பவுமே பிசியாகிப் போனதில் எனது மொழிபெயர்ப்பு வேலைகள் சற்றே பாதிக்கப்பட்டன. சரி என்னதான் ஆகிறது என்பதைப் பார்த்து விடலாமே என்று எனது கணினிகுரு முகுந்தனின் துணையோடு நானே கம்ப்யூட்டர் வாங்கி, வி.எஸ்.என்.எல்.-ன தொலைபேசி வழி இணைய இணைப்பைப் பெற்றேன். எலிக்குட்டியைப் பிடித்து க்ளிக் செய்யக்கூட தடுமாற்றமே. வாங்கி நிறுவிய அன்றே ஒரு மொழிபெயர்ப்பு வேலை ஆங்கிலத்திலிருந்து ஃபிரெஞ்சுக்கு. எக்ஸல் கோப்பில் செய்ய வேண்டிய வேலை. முகுந்தன் எனக்கு கோப்பை திறந்து அதை இப்படிச் சேமி என்ற ஏற்பாட்டில் ஒரு நகலெடுத்து, இரண்டு பக்கங்களையும் ஒன்றன் மேல் ஒன்றாய் அடுக்கி வேலை செய்ய டிப்ஸ்கள் தந்ததில் நானே ஃபிரெஞ்சில் தட்டச்சு செய்தேன். வேலை மெதுவாகத்தான் போயிற்று. இருப்பினும் ஸ்பெல்லிங் தவறுகள் என்னிடம் சாதாரணமாக குறைவாகவே வரும் என்பதால் பிழைதிருத்தும் வேலை எளிதாயிற்று.
பிறகு ஒரு ஆண்டு கழித்து மொழிபெயர்ப்பாளர்கள் தலைவாசல் ப்ரோஸ்.காம்-ல் சாதாரண உறுப்பினனாகச் சேர்ந்து அதன் செயல்பாடுகளில் பங்கேற்று எனது மொழிபெயர்ப்பு வாடிக்கையாளர்களை அதிகமாக்கிக் கொள்ள முடிந்தது. சில மாதங்களில் டிஷ்நெட்டின் அகலப்பட்டை இணைப்பையும் பெற்றேன்.
இப்போதைய நிலை அப்போதைய நிலையை விட பல மடங்கு உயர்ந்துள்ளது. ப்ரோஸ்.காம்-ல் ப்ளாட்டினம் உறுப்பினன் ஆகவும் முடிந்தது. எல்லாம் என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதனின் அருளே.
ஆக, ஒரு புது டோண்டு உருவானான் என்று வைத்து கொள்ளலாம். இன்றுதான் அவனுக்கு பிறந்த நாள். அதாவது ஃபிப்ரவரி 5, 2002-ல் தான் கணினி வாங்கினேன்.
தலைப்பு சரிதானே?
அன்புடன்,
டோண்டு ராகவன்
பின்குறிப்பு: என் வீட்டம்மா இதை படித்து விட்டு வயது ஆறு என்றல்லவா இருக்க வேண்டும் என்று கூறி, செல்லமாக குமட்டில் குத்தி விட்டு சென்றார். பிழை திருத்தி விட்டேன்.
(பிப்ரவரி 5, மாலை 8 மணி 15 நிமிடங்கள்)
கே.வி.சுப்ரமணிய ஐயர்
-
கந்தாடை வைத்தி சுப்ரமணிய அய்யர் தமிழ் கல்வெட்டாய்வாளர், வரலாற்றாய்வாளர்.
தமிழ்நாட்டின் குகைக் கல்வெட்டெழுத்துக்கள் தமிழ்ப் பிராமி எழுத்துருவில்
வடிக்கப்பட்...
3 hours ago
18 comments:
தன்னம்பிக்கை - No. Mokkai.
First Para is Good :))
காண்டு கசேந்திரனின் எதிர்வினையை எதிர்பார்க்கவும்
samiibathhtil 1927'l inthamaathiri oru suvaarasiyaamaana katturai padiththeen !!!!!!!!
Jokes Apart,I appreciate your earnestness in learning new things post 40,people says,post 40 our learning curve normally depreciates.
Sorry,for 'thaminglish'..
வாழ்த்துக்கள்...
(அப்படியே புது டாபிக் கொடுத்து உதவிய மகரநெடுங்குழைகாதனுக்கும் ;)
nir computer vanginal athai oor poora thambattam adikka venduma? appadiyenna ulagathila illaatha computer vangivittir? athai vangi vaithu nalla kaasu paarthir. thamizanukku enna seithir? thamizanaiyum pagutharivaalariyum thittuvathai thavira?
komanakrishnan
தலைப்பை மட்டும் பார்த்துட்டு உங்க பையனுக்கு ஐந்து வயதாகிவிட்டதோனு நினைத்துவிட்டேன் :-))
அதுதானே உங்கள் ஆசையும் கூட??
Happy Birthday, New Dondu!
May you multiply and fight for freedom.
We need millions of New Dondus.
Saarval,
Ennamo ponga, ungala madhiri post valachu valachu ezhudha yaralamudiyum. Endha post neenga potaalum, engaiyoh irukara unga pazhaiya post link kondu vareenga paarunga, anga thaan sootchamam irukunu ennaku thonuchu. Thou i always love to read your post as its interesting and debating.
Good work,
Aani
//thamizanukku enna seithir? thamizanaiyum pagutharivaalariyum thittuvathai thavira?//
கோமணம் இல்லாத கிருட்டிணன் ,
உன்னால் தமிழில் தட்டச்சுக்கூட செய்யமுடியாமல் ஆங்கிலத்தில் தட்டுகிறாய். அப்படி இருக்கும் நிலையில் தமிழ் சேவை பற்றி பேச்சு உனக்கு தேவையா. கொஞ்சம் ஓவரா தெரியல..
டோண்டுவின் பதிவுகளை படித்தாலே பகுத்தறிவு வளரும், இதை தவிற வேற என்ன வேண்டும்.
என் வீட்டம்மா இதை படித்து விட்டு வயது ஆறு என்றல்லவா இருக்க வேண்டும் என்று கூறி, செல்லமாக குமட்டில் குத்தி விட்டு சென்றார். பிழை திருத்தி விட்டேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நான் என்னமோ குட்டி டோண்டுக்கு பிறந்த நாள் என நினைத்தேன்.
அதுவும் 10 வயதில. மகிழ்ச்சியாக இருந்தது.
வயது என்ன சார் வயது.
எல்லாம் உங்கள் உள்ளங்கவர் கள்வன் உங்க அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதனின் அருள் இருந்தா அடுத்த ஆண்டு இன்னுமொரு குட்டி டோண்டு வராமலா போயிடும்?
புள்ளிராஜா
//அதுவும் 10 வயதில//
?????????
அன்புடன்,
டோண்டு ராகவன்
enda ippadi jalra poduringa? erkanave dondu sarukku thalaikanam aanavam ellam eriyullathu.ithil ningal veru etrivittal? konjam adakki vasinga vennaigala. oru computer vangiyullar. avvalavuthane? ithu enna sathanai?
komanakrishnan
///அடுத்த ஆண்டு இன்னுமொரு குட்டி டோண்டு வராமலா போயிடும்?
புள்ளிராஜா////
My Goodness !!!!! one more Dondu ???? No no no please no...!!!
<==
dondu(#11168674346665545885) said...
ஆக, ஒரு புது டோண்டு உருவானான் என்று வைத்து கொள்ளலாம். இன்றுதான் அவனுக்கு பிறந்த நாள். அதாவது ஃபிப்ரவரி 5, 2002-ல் தான் கணினி வாங்கினேன்.
==>
அப்ப பிரிண்டர் எப்ப வாங்கினீங்க?
//அப்ப பிரிண்டர் எப்ப வாங்கினீங்க?//
கம்ப்யூட்டர் வாங்கும்போதே பிரிண்டரும், ஸ்கானரும் வாங்கினேன். ஆனால் ஒரு பக்கம் கூட ப்ரிண்டிங்கோ ஸ்கானிங்கோ செய்யவில்லை. ஏனெனில் அவற்றுக்கு வேலையேயில்லை.
எனது எல்லா மொழிபெயர்ப்புகளுமே ஆன்லைனாக கணினிக்குள்ளேயே நடந்தது. நான் பதிவில் கூறியபடி இரு கோப்புகளை ஒன்றன்மேல் ஒன்றாக வைத்து மொழிபெயர்த்தேன்.
தேவையில்லை என நிச்சயமாகத் தெரிந்ததும் ஸ்கானட்ர் மற்றும் பிரிண்டரை விற்று விட்டேன். எனது மொழிபெயர்ப்பு காகிதமில்லாமல்தான் நடக்கிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//தேவையில்லை என நிச்சயமாகத் தெரிந்ததும் ஸ்கானட்ர் மற்றும் பிரிண்டரை விற்று விட்டேன். எனது மொழிபெயர்ப்பு காகிதமில்லாமல்தான் நடக்கிறது.//
This is truly amazing! Paperless-office என்று உலகம் முழுதும் பேசுகிறார்களே தவிர அது இன்னும் வெற்றி பெறவில்லை. அதுவும் ISO Certification எல்லாம் வந்தபிறகு பேப்பர் ரொம்ப அதிகமாகிவிட்டது. பிரண்டரை விற்றுவிடும் அளவிற்கு Paperlessஆக இயங்குவது உண்மையிலேயே பாராட்டவேண்டிய விஷயம்.
டோண்டு ராகவன் இளைஞன்தான் என்பதை ஒப்புக்கொள்கிறேன்! :-)
டோண்டு சார்,
இதுக்கு பதில்:
///இன்னமும் தினமும் 15 மணி நேரத்துக்கு மேல் கணினியில் அமர்ந்து மொழிபெயர்ப்பு செய்யும் அளவுக்கு தெம்பு உள்ள நான் மனத்தளவில் 25 வயது வாலிபனே. ஆளை விடுங்கள் சாமி.////
உடம்புல தெம்பு கண்டிப்பா இருக்குங்கரதாலதான், 'பொது'வையும் கொஞ்சம் கவனிக்கச் சொல்றேன்.
'சுய'த்தைக் கவனிப்பதை நிறுத்திக் கொள்ளலாமே.
'எனக்கு'ன்னு இன்னும் எவ்வளவு காலம்தான் வாழ்வது? :)
Post a Comment