இன்று பிற்பகல் சுரேஷ் என்னும் வாசகரிடமிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. தானும் சந்திப்புக்கு வரலாமா என அவர் கேட்க, தாராளமாக வாருங்கள் என நான் கூறினேன்.
எனது கார் காந்திசிலைக்கு பின்னால் உள்ள பார்க்கிங்கிற்கு வந்தபோது மணி சரியாக ஆறு. படி ஏறி சிலைக்கு பின்னால் உள்ள வற்றிய குளத்துக்கு வந்தால் பாலபாரதியும் ஜிங்காரோ ஜமீனும் ஏற்கனவே வந்து அமர்ந்திருந்தனர். பாலபாரதி சில ஜெயமோகன் புத்தகங்களை வைத்திருந்தார். அவருடன் கருத்து வேறுபாடு பல இருந்தாலும் அவரது எழுத்துக்கு தான் ரசிகன் என பாலபாரதி கூறினார். அடுத்த சில நிமிடங்களுக்குள் யாஹூ குப்பன், கென், லக்கிலுக், செந்தில் எனப்படும் சென்ஸிபிள் சென், ஜோன்சன், அதிஷா, ஜ்யோவ்ராம் ஆகியோர் வந்தனர். சிறிது இடைவெளிக்கு பின்னால் வந்தவர்கள் தாமிரா, பாலசந்தர், முரளி கண்ணன், நர்சிம், அருட்பெருங்கோ, கார்க்கி, ப்ரூனோ ஆகியோர். எதிர்பாராத வரவு ரோசா வசந்த். மிகவும் ஆச்சரியமூட்டிய வரவு ஓ பக்கப் புகழ் ஞாநி. இன்னும் சற்று நேரம் கழித்து வந்தது சுகுணா திவாகர் மற்றும் விநோத் (அக்னி பார்வை).
சாரு நிவேதிதா அவரது பக்கத்தில் தன்னை ஒரு வலைப்பதிவர் சேட்டில் வந்து அவரை இப்பதிவர் மீட்டிங்கிற்கு அழைத்ததாகவும், ஆனால் இது ஒரு எழுத்தாளரை அழைக்கும் முறை இல்லையென கூறியதாகவும் புலம்பியுள்ளார். மேலும் ரஜனிகாந்தை கூப்பிட்டால் தானும் வருவதாக எழுதியுள்ளார். அவரை அவ்வாறு அழைத்து டென்ஷன் பண்ணின அந்த சம்பந்தப்பட்ட வலைப்பதிவரும் இந்த மீட்டிங்கிற்கு வந்து தான் செய்ததைக் கூறியபோது ஒரே சிரிப்பு மழைதான். அவர் யார் என்று நான் கூறுவதை விட அவரே விருப்பப்பட்டால் பின்னூட்டமிட்டு தன்னை அடையாளம் காட்டட்டும்.
பலர் ஒரு கருத்து சொன்னால் அதை எதிர்க்கும் விதமாக கருத்து சொல்வார் ஞாநி என்று கூறப்படுவதைப் பற்றி நர்சிம் அவரைக் கேட்டார். இப்போதைக்கு தான் பார்வையாளராகவே வந்ததாகவும் ஆகவே இக்கேள்விக்கு அடுத்த முறை பதிலளிப்பதாக ஞாநி கூறினார். மற்றப்படி அச்சு ஊடகத்தில் நிலவும் சுழல்கள், உள்குத்துக்கள் ஆகியவை பதிவர் உலகத்திலும் நிலவுவதாக அவர் குறிப்பிட்டார். ஞாநியின் தந்தை ஒரு பத்திரிகையாளர். என் தந்தைக்கு அவர் தெரிந்தவர் என்று என் தந்தையுடன் ஹிந்துவில் வேலை செய்த ஒரு நிருபர் என்னிடம் கூறியிருக்கிறார். ஞாநியிடம் அது பற்றி நான் பேசவில்லை. சிறிது நேரத்திலேயே அவருக்கு ஒரு ஃபோன் வர அவர் விடை பெற்று சென்றார்.
இடையில் ஆழியூரான், சுந்தரராஜன் (மக்கள் சட்டம்), சுரேஷ் (எனக்கு மதியம் ஃபோன் செய்தவர்), சின்னதுரை, ஜிம்ஷா, பாலா, கடலையூர் செல்வம், ஆகியோர் வந்தனர். சுரேஷ் வந்ததும் எனது காரைப் பற்றி விசாரித்தார். அவரிடம் அது பார்க்கிங்கில் இருப்பதாகக் கூறினேன். எனது பதிவுகள் பலவற்றை அவர் படித்துள்ளார் என அறிகிறேன்.
முக்கியமாக எதிர்பார்க்கப்பட்ட பொட்டிக்கடை போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொண்டதால் அவரும் வரவனையானும் லேட்டாக வந்தனர். பொட்டீக்கடை அவரது மூக்குக் கண்ணாடியை தவறவிட்டுவிட்டு, பிறகு அதை டிரேஸ் செய்து வர வேண்டியிருந்தது. இது வரை பார்த்த வலைப்பதிவர் சந்திப்பில் 20-க்கும் மேலே பதிவர்கள், வாசகர்கள் ஆகியோர் வந்திருந்தனர். லேட்டாக ஆனால் லேட்டஸ்டாக வந்தவர் வடகரை வேலன்.
பல விஷயங்கள் பேசப்பட்டாலும் மீட்டிங் ஆரம்பத்தில் தீவிரமாக விவாதிக்கப்பட்டது பொது இடங்களில் புகை பிடிக்கத் தடை பற்றித்தான். பலரும் அதை எதிர்க்க, மருத்துவர் ப்ரூனோ மட்டும் அபிமன்யு மாதிரி தனியே அதை ஆதரித்தார். அந்த டிஸ்கஷன் நடந்து கொண்டிருக்கும்போதே, இத்தடையால் டென்ஷன் ஆன சிலர் புகை பிடிக்க சற்றே ஒதுக்குப்புறம் சென்றனர். அவர்கள் போலீசிடம் மாட்டிக் கொள்ளக் கூடும் என ரோசா வசந்த் அச்சம் தெரிவித்தார். இன்னொரு விஷயம் சினிமா பற்றியது. பாலசந்தருக்கும் இளையராஜாவுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு பற்றி முரளி கண்ணன் எடுத்துரைத்தார். எழுபதுகளில் நல்ல படங்கள் வந்து கொண்டிருந்த சூழ்நிலையில் மீண்டும் முரட்டுக்காளை போன்ற படங்கள் எடுத்து மசாலாவுக்கு திரும்பிய தயாரிப்பாளர்கள் - முக்கியமாக ஏ.வி.எம். - பற்றியும் பேச்சு வந்தது.
நடுவில் வரவனையான் என்னிடம் வந்து பொட்டீக்கடை ஏதேனும் சாப்பிட வாங்கி வர எண்ணியிருப்பதாகவும் என்ன வாங்கலாம் என என்னிடம் ஆலோசனை கேட்க நான் அந்த இடத்தில் ஈசியாக கிடைப்பது ஐஸ்க்ரீம்தான் என கூற, அவரும் பொட்டீக்கடையும் எல்லோருக்கும் சாக்கோபார் ஐஸ்கிரீம் வாங்கி வந்தனர். பொட்டீக்கடையிடம் பேசும்போது அவரது ஃபோட்டோவில் அவர் டஃப்ஃபாக (சத்யா படத்தில் கமலஹாசன்) காட்சியளிக்க, நேரில் ரொம்பவுமே சாஃப்ட் ஆக இருப்பதாக கூறினேன்.
பிறகு ஒவ்வொருவராக விடை பெற்று சென்றனர். நானும் எட்டு மணியளவில் டிரைவருக்கு ஃபோன் செய்து எனது காரை தருவித்து வீடு திரும்பினேன். வழியில் பட்டர்ஃப்ளை அருணிடமிருந்து மீட்டிங் பற்றி ஃபோன் வந்தது. அவருக்கு நடந்ததை சுருக்கமாக கூறினேன்.
மொத்தத்தில் மனநிறைவைத் தந்த சந்திப்பு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பின்குறிப்பு: படங்களுக்கு சென்ஸிபிள் சென் அவர்களது இப்பதிவுக்கு செல்லவும்.
படங்களுக்கு மிக்க நன்றி.
போலி இளமை
-
இணையக்குப்பை அன்புக்கும் மதிப்புக்கும் உரிய ஜெ., வணக்கம்! உங்கள் பதில்
இணையக்குப்பை பல முறை மீண்டும் மீண்டும் வாசித்தேன். முதலில், எனது மின்னஞ்சலை
கருத்தி...
10 hours ago
23 comments:
டோண்டு சார்,
என் பேர ஜோன்சன் - னு மாத்திடுங்க.
வந்திருந்த அந்த ஊர் சுற்றி நானேதான்.
//சரி, நேரம் இன்னும் இருக்கிறது. அந்தக் குறிப்பிட்ட பதிவர்கள் கூட்டத்திற்கு ரஜினிகாந்தையும் அழைத்திருக்கிறீர்களா? அப்படியானால் நானும் வருகிறேன். சரியா?//
ஓ. அழைத்தால் மட்டும் போதுமா. ரஜினி வர வேண்டும் என்று இல்லையா
--
என்ன கொடுமை சார் இது
ஏம்ப்பா, இதெல்லாம் கொஞ்சம் முன்னாலயே சொல்லக்கூடாதா! சே! ஒரு வாரமா வீட்டிலேயே கிடக்கிறேன், வீடு கூட நம்ம நொச்சிக்குப்பம்தான், அங்ஙன ஒரு எட்டு நானும் வந்து அம்ம பிள்ளைகள எல்லாம் ஒரு தபா பாத்திருப்பேனே! மிஸ் பண்ணிட்டேனே!! பரவாயில்ல! அல்லாத்துக்கும் வாழ்த்துகள்.. அடுத்த தபா பாத்துக்கலாம்..
http://senthamizh.wordpress.com
தகவலுக்கு நன்றி. ஒருவரை ஒருவர் நேரில் பார்த்துக்கொள்வது என்ற அளவில்தான் பதிவர் சந்திப்பு இருப்பதாகத் தெரிகிறது.
சந்திப்புக்கு முன்னரே ஒரு நிகழ்சி நிரலைத் தயார் செய்துகொள்ளுங்களேன்? உரையும் விவாதமும் என சந்திப்பு மேலும் ஆர்வமூட்டுவதாயும் பொருளுடையதாயும் இருக்கும்.
இது போன்ற பதிவர் சந்திப்பு படிக்கும் அன்பர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
//சந்திப்புக்கு முன்னரே ஒரு நிகழ்சி நிரலைத் தயார் செய்துகொள்ளுங்களேன்? உரையும் விவாதமும் என சந்திப்பு மேலும் ஆர்வமூட்டுவதாயும் பொருளுடையதாயும் இருக்கும்.//
வருவதே கடைசி நிமிடம் வரை நிச்சயமில்லாமல் இருக்கும்போது நீங்கள் சொல்வதெல்லாம் நடக்காது. வலைப்பதிவர் சந்திப்பு என்பது அது அங்கமாக இருக்கும் வாழ்க்கையைப் போலத்தான். வாழ்க்கையில் நிகழ்ச்சிகளை முன்னமே வரையறுக்க இயலாது அல்லவா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
good posting and it was nice meeting
narsim
டோண்டு சார்.. சந்திப்பு மகிழ்வைத் தந்தது.. பதிவு நிறைவைத் தருது..
நிழற்படங்கள் இங்கே இருக்கு..
http://www.sensiblesen.com/
மேலும் சில படங்கள் Picasa வில் இருக்கு.. அதன் உங்களுக்கு link அனுப்பியுள்ளேன்..
தவிர்க்க இயலாத காரணங்களால் என்னால் சந்திப்பிற்கு வரமுடியவில்லை. இத்தனை நண்பர்களை சந்திப்பதை தவற விட்டது மனம் நிறைய வருத்தங்களை நிறைத்துள்ளது :(
டோண்டு சார்,
உங்களை சந்தித்ததில் மிக்க மகழ்ச்சி.
சந்திப்பின் புகைப்படங்கள் யாரிடம் உள்ளது கொஞ்சம் அனுப்புங்கப்பா...
thiruvinod4u@gmail.com
அருமையான சந்திப்பு, இனியியும் தொடர்ந்து சிந்திப்போம்.
சென்னை பதிவர் சந்திப்பு நிழற்படங்கள்..
http://tinyurl.com/3fbst3
- பாலச்சந்தர் முருகானந்தம்,
http://balachandar.net சொந்த வலைப்பதிவு
http://ulagam.net
உலகம்.net - இலவச தமிழ் வலைப்பதிவுச் சேவை
//சாரு நிவேதிதா அவரது பக்கத்தில் தன்னை ஒரு வலைப்பதிவர் சேட்டில் வந்து அவரை இப்பதிவர் மீட்டிங்கிற்கு அழைத்ததாகவும், ஆனால் இது ஒரு எழுத்தாளரை அழைக்கும் முறை இல்லையென கூறியதாகவும் புலம்பியுள்ளார். மேலும் ரஜனிகாந்தை கூப்பிட்டால் தானும் வருவதாக எழுதியுள்ளார். அவரை அவ்வாறு அழைத்து டென்ஷன் பண்ணின அந்த சம்பந்தப்பட்ட வலைப்பதிவரும் இந்த மீட்டிங்கிற்கு வந்து தான் செய்ததைக் கூறியபோது ஒரே சிரிப்பு மழைதான். அவர் யார் என்று நான் கூறுவதை விட அவரே விருப்பப்பட்டால் பின்னூட்டமிட்டு தன்னை அடையாளம் காட்டட்டும். //
சாரு நிவேதிதா ஒரு பிஸியான எழுத்தாளர் / சிந்தனையாளர். அந்தப் பதிவர் ஏதோ ஆர்வக்கோளாறில் அவரை கூப்பிட்டிருக்க கூடும் :-) சாருவுக்கு இதுமாதிரி சந்திப்புகளுக்கு நேரம் இருக்குமா என்று அந்தப் பதிவருக்கு தெரிந்திருக்காது!!
கேள்வி:
வலைப்பதிவு உலகின் பிரபல பதிவர்கள் (பிராமணர்களை, பிராமணீயத்தை இகழ்ந்து எழுதுபவர்கள்), பிராமணப் பெண்களைத் திருமணம் செய்து வருவது பற்றி உங்கள் கருத்து என்ன ?
மோகன்
//கேள்வி:
வலைப்பதிவு உலகின் பிரபல பதிவர்கள் (பிராமணர்களை, பிராமணீயத்தை இகழ்ந்து எழுதுபவர்கள்), பிராமணப் பெண்களைத் திருமணம் செய்து வருவது பற்றி உங்கள் கருத்து என்ன ?
மோகன்//
!?
இதென்ன பதிவுக்குத் தொடர்பில்லாத கேள்வியாக இருக்கிறதே!
//சாருவுக்கு இதுமாதிரி சந்திப்புகளுக்கு நேரம் இருக்குமா என்று அந்தப் பதிவருக்கு தெரிந்திருக்காது!!
//
வழிமொழிகிறேன்!
//நாமக்கல் சிபி said...
!?
இதென்ன பதிவுக்குத் தொடர்பில்லாத கேள்வியாக இருக்கிறதே
//
வாரா வாரம் டோண்டு சார் கேள்வி பதில் போடுவாரு. அதுக்கான கேள்விகளை நாம் அவரோட எதோ ஒரு பதிவுல பின்னூட்டமா போடலாம். அது பதிவுக்கு சம்பந்தமா இருக்கணும்னு அவசியமில்லை. புரிஞ்சதோன்னோ???? :))))
//வலைப்பதிவு உலகின் பிரபல பதிவர்கள் (பிராமணர்களை, பிராமணீயத்தை இகழ்ந்து எழுதுபவர்கள்), பிராமணப் பெண்களைத் திருமணம் செய்து வருவது பற்றி உங்கள் கருத்து என்ன?//
இக்கேள்வி அடுத்த டோண்டு கேள்வி பதில் பதிவின் வரைவுக்கு கொண்டு செல்லப்பட்டது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//எனது காரை தருவித்து வீடு திரும்பினேன்//
வெகு சிலரே பயன்படுத்தும் தமிழ்ச்சொல் "தருவித்து" நீங்கள் பயன்படுத்தி எழுதியிருப்பது மகிழ்ச்சியளிகிறது..
அன்புடன்
அரவிந்தன்
//வாரா வாரம் டோண்டு சார் கேள்வி பதில் போடுவாரு. அதுக்கான கேள்விகளை நாம் அவரோட எதோ ஒரு பதிவுல பின்னூட்டமா போடலாம். அது பதிவுக்கு சம்பந்தமா இருக்கணும்னு அவசியமில்லை. புரிஞ்சதோன்னோ???? :))))
//
நன்னா புரிஞ்சுது!
:))
கேள்வி:
ஆன்மீகம் Vs அரசியல் : எந்த அளவுக்கு பிணைந்து இருக்கிறது? அல்லது முரண்பட்டு செல்கிறது? (இந்தியாவில்)
எனக்கும் அலைபேசியில் அழைத்திருக்கலாம்.
ஞாநியிடம் பேசும் வாய்ப்பு கிடைத்திருக்கும்
பார்ப்பன பதிவர்கள் தங்களை பார்ப்பனர்கள் என்று அடையாளம் காட்டி பதிவெழுத வேண்டும் என்கிறீர்களா? இதனால் ஜெயராமன் போன்றவர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட அச்சுறுத்தலும், அடாவடியும் ஏற்படாதா?
- பாமரன்
நான் பார்ப்பனன் என்றாலும் அதை வெளியே சொல்ல தயங்கும் நிலை தமிழ்வலையுலகில் நிலவுகிறது :-((((
//பார்ப்பன பதிவர்கள் தங்களை பார்ப்பனர்கள் என்று அடையாளம் காட்டி பதிவெழுத வேண்டும் என்கிறீர்களா?//
ஆம்.
//இதனால் ஜெயராமன் போன்றவர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட அச்சுறுத்தலும், அடாவடியும் ஏற்படாதா?//
ஏன், நான் கூறினேனே என்ன தலையையா எடுத்து விட்டார்கள்? எனது வெளிப்படையான எண்ணங்கள் என்னும் பதிவே பயப்படும் சக பார்ப்பனருக்காகவே எழுதப்பட்டது என்பதை இன்னொரு முறை கூறுவேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//பார்ப்பன பதிவர்கள் தங்களை பார்ப்பனர்கள் என்று அடையாளம் காட்டி பதிவெழுத வேண்டும் என்கிறீர்களா? இதனால் ஜெயராமன் போன்றவர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட அச்சுறுத்தலும், அடாவடியும் ஏற்படாதா?
- பாமரன்
நான் பார்ப்பனன் என்றாலும் அதை வெளியே சொல்ல தயங்கும் நிலை தமிழ்வலையுலகில் நிலவுகிறது :-((((
//
காரணம் வெரி சிம்பிள். பார்ப்பனர்கள் திருப்பி அடிக்க மாட்டார்கள். மற்ற சாதிக்காரர்களை விமர்சித்தால் எலும்புகள் எண்ணப்படும். அது இந்த வீரமணி, லக்கிலுக், கோமணகிருஷ்ணன் போன்ற பகுத்தறிவு கோஷ்டிகளுக்கு தெரியாதா என்ன?!!!
ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு காரணம். பெரியார், வீரமணி போன்றோருக்கு பிழைப்பு. கருணானிதி போன்றோருக்கு ஓட்டு. லக்கிலுக், கோமணம் போன்றோருக்கு தாழ்வு மனப்பான்மை (அதனால் இணையத்தில் என்னவேண்டுமானாலும் திட்டிக்கொள்ளலாமே!!!). தமிழ்னாடு டாக் போன்ற ஃபாரங்களில் போய்ப்பாருங்கள்!!! லக்கிலுக் போன்ற பகுத்தறிவு கோஷ்டிகள் பார்ப்பனர் மீது விஷத்தை கக்குவதை!! படிக்க தமாஷாக இருக்கும்!!
Ram
Post a Comment