ராமகிருஷ்ணஹரி
please explain the following in dondu style
1. crr(banking system)
பதில்: Cash reserve ratio என்பதன் சுருக்கம். இது அதிகமானால் பணப்புழக்கம் குறையும், குறைந்தாலோ அதிகமாகும். ஒரு வித கட்டாயச் சேமிப்பு வங்கிகளுக்கு என்று குன்ஸாகக் கூறலாம். டி.பி.ஆர். ஜோசஃப் போன்றவர்கள் இன்னும் நன்றாக பதிலளிப்பார்கள். எதற்கும் இதையும் பார்த்து விடுங்களேன்.
2. repo rate
பதில்: பணப்புழக்கம் குறைவானால் வங்கிகள் ரிசர்வ் வங்கியிடமிருந்து கடன் வாங்கலாம். அதற்கு அவர்கள் தரும் வட்டி விகிதம்தான் ரெபோ ரேட் எனப்படுகிறது.அது குறைந்தால் வங்கிகள் அதிக அளவில் கடன் வாங்க இயலும். அதிகரித்தால் வாங்கும் கடன் அளவுகள் குறையும். இரண்டு விஷயங்களும் தேசத்தில் உள்ள வியாபாரங்களை நேரெதிர் முறையில் பாதிப்பவை.
3. inflation (in india)
பணவீக்கம். சமீபத்தில் 1957-வாக்கில் எழுத்தாளர் நாடோடி இது பற்றி எழுதியுள்ளார். அதிலிருந்து: “நாட்டில் எல்லோருக்கும் சம்பளம் குறைந்த பட்சம் ஆயிரம் (1955 விலைவாசி கணக்கில்) என்று அதிசயபுரியின் மந்திரி நிர்ணயிக்க, அது விளைவிக்கும் கூத்து பற்றி படிப்பவரை குலுங்க குலுங்க சிரிக்க வைத்தார் நாடோடி. படிப்பவர்தான் சிரித்தனர். அனுபவித்தவர்? பணம் மட்டும் இருந்தது. வியாபாரிகளும் பணத்தை பார்த்ததும் உல்லாசமாக செலவழிக்க ஆரம்பித்தனர். உற்பத்தி குறைந்தது. விலைகள் விஷம்போல ஏறின. சம்பளங்கள் மறுபடியும் உயர்த்தப்பட்டன. Too much money chasing too little goods என்ற நிலை உண்டாயிற்று. விளைவு? Inflation எனப்படும் பணவீக்கம்”.
4. recession (in usa)
வியாபாரம் நடந்தால்தானே வேலை செய்பவர்களுக்கு சம்பளம் தர இயலும்? ஆகவே வேலைவாய்ப்புகளில் முதலில் பாதிப்பு வரும். அவ்வாறு வேலையிழந்தவர்களால் பொருட்களை வாங்க முடியாது போல மேலும் பல தொழில்களுக்கு மார்க்கெட் போய், இந்த ரிசஷன் இன்னும் அதிகரிக்கும்.
5. gdp ( in world)
பதில்: ஒரு நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை அளக்க உதவுவது மொத்த உள்நாட்டு உற்பத்தி எனப்படும் GDP (Gross Domestic Product).
ஒரு ஆண்டில் நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட எல்லா பொருட்களின் மதிப்பையும், எல்லா சேவைகளின் மதிப்பையும் சேர்த்துக் கூட்டினால் கிடைப்பது மொத்த உள்நாட்டு உற்பத்தி.
இதில் நுகர்வோர் வாங்கும் பொருட்கள்/சேவைகள், வணிக நிறுவனங்கள் முதலீட்டுக்காக வாங்கும் பொருட்கள்/சேவைகள், அரசுகள் வாங்கும் பொருட்கள்/சேவைகள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பொருட்கள் சேவைகள் அடங்கும். நூறு கோடி மக்களும் அந்த ஆண்டில் என்ன குப்பை கொட்டினார்கள் என்று தெரிந்து விடும். இது பற்றி மேலே இன்னும் அழகாக நண்பர் மா. சிவகுமார் கூறியுள்ளார்.
அனானி (16.10.2008 இரவு 08.27-க்கு கேட்டவர்)
1. தம்பியின் தொப்பியே அவனுக்கு நெருப்பு அது என்ன?
பதில்: தீக்குச்சியின் மருந்து பகுதி.
2. அருந்த முடியாத பால், உலகம் சுற்றும் பால் அது என்ன?
பதில்: தபால் மற்றும் தனபால். இரண்டாமவர் தில்லியில் சாணக்யபுரியில் வசிக்கிறார். அவர் ஒரு இண்டர்நேஷனல் கூரியர் கம்பெனியில் பணி புரிகிறார். அந்த ஏரியாவில் உள்ள எல்லா தூதரகங்களுக்கும் அவர்தான் தபால் கொண்டு செல்வார். டெலிவரி செய்ய சம்பந்தப்பட்ட தூதரகத்துக்குள் செல்ல வேண்டும். ஜெனீவா ஒப்பந்தத்தின்படி ஒவ்வொரு தூதரகமும் சம்பந்தப்பட்ட நாட்டின் பிரதேசமாகத்தான் கருதப்படும். ஆக தனபால் இம்மாதிரி உலகில் உள்ள பல நாடுகளுக்கு சென்று வந்துள்ளார்.
3.அடத்தியான ஒரு மரத்துக்குப் பல கால்கள் அது என்ன?
பதில்: ஆலமரம். அப்படியே அதன் கீழேயே ஒரு பி.சி.ஓ. இருந்தாலும் பல கால்கள் வரும்.
4. கறுத்த நீண்ட பாயின் மேலே வாகனம் ஓடுது அது என்ன?
பதில்: பிரதான வீதி அல்லது கரிய நிறப்பாயில் உள்ள மோட்டார் செல்வது போன்ற படங்கள்.
5. வலை பின்னும் ஆனால் அதனிடம் நூலில்லை அது என்ன?
சிலந்தி அல்லது தில்லியில் எங்கள் பக்கத்து வீட்டு ஆண்டி. அவரிடம் நூல் இல்லாததால் எல்லோரிடமும் ஓசியில் நூல் வாங்குவார்.
6. வாலால் நீர் குடிக்கும் வெளிச்சத்திலேதான் இருக்கும் அது என்ன?
பதில்: விளக்கு அல்லது தீயணைப்பு இஞ்சின். வால் பையனோ அது தானில்லை என பதறிப்போய் ஏற்கனவே கூறிவிட்டார்.
7. ஒற்றைக்கால் மனிதனுக்கு பல கைகள் அவன் யார்?
பதில்: சாலை சந்திப்புகளில் கைகாட்டி மரம். அல்லது ஒரு கால் வெட்டப்பட்ட ராவணன்
8. வீட்டைச் சுற்றி கருவேலி அது என்ன?
பதில்: என்ன போங்க, இப்படியா அசிங்கமாகக் கேள்வி கேட்பது? ஓ, அது கண்ணா?
9. காற்று வீசும் அழகான மரம் அது என்ன?
பதில்: சாமரம் அல்லது மரத்தாலான சீலிங் ஃபேன்
10. உலகமெல்லாம் கால் நீட்டி, உறக்கமின்றி அலைகின்றான் அவன் யார்?
கடல் அல்லது ரோமிங்கில் இருக்கும் ஒருவனுக்கு வரும் செல்பேசி கால்கள்.
11. ஓயாமல் இரையும் இயந்திரமல்ல, உருண்டோடி வரும் பந்தும் அல்ல அது என்ன?
பதில்: கடலலை அல்லது சிலருக்கு ஜீரணக்கோளாறு என வைத்து கொல்ளலாமா?
12. சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?
பதில்: கண். இத்தருணத்தில் கவி காளமேகம் நினைவுக்கு வருகிறார். ஈயேறி மலை குலுங்கியதாகப் பாட இயலுமா என்பதற்கு, மலை என்ன ஜுஜூபி, அண்ட சராசங்களே ஈயேறி குலுங்கின என்று பாடினார். அதாகப்பட்டது, வெண்ணெய் திருடியதற்காக மத்தால் வாயில் அடிப்பட்ட குழந்தை கண்ணனின் அப்புண்ணின் மேல் ஈ வந்தமர, அத்தெய்வக்குழந்தை தலையையசைக்க, - மேலே கூறவும் வேண்டுமோ?
13. மரத்துக்கு மரம் தாவுவான் குரங்கல்ல, பட்டை போட்டிருப்பான் சாமி அல்ல, அவன் யார்?
பதில்: அணில் அல்லது விபூதி அணிந்த டார்ஜான்
14. அடிக்காத பிள்ளை அலறித் துடிக்கும், அது என்ன?
பதில்: சங்கு ஆனால் சங்குபிள்ளையை அடித்தால் அவர் அலறித் துடிப்பார்.
15. அக்கா விதைத்த முத்து, அள்ள முடியாத முத்து, அது என்ன?
பதில்: கோலம் அல்லது, அக்கா என்ன, அண்ணனே கூட முத்து ஒன்றை எடுத்து யாருக்கும் தெரியாத இடத்தில் ஆழ புதைத்தால், யாருமே அதை அள்ள இயலாதுதான்.
16. வீட்டிலிருப்பான் காவலாளி, வெளியில் சுற்றுவான் அவன் கூட்டாளி, அவர்கள் யார்?
பதில்: பூட்டு, சாவி அல்லது “ஜாவ்ரே ஜாவ் இந்த வீட்டுக்கு நீ ராஜா” என்று சமீபத்தில் 1966-ல் வெளிவந்த மூன்றெழுத்து படத்தில் வரும் ரவிச்சந்திரனைப் போல் கூர்காக்களை வைத்து காமெடி பண்ணவில்லைதானே?
17. எத்தனை தரம் சுற்றினாலும் தலை சுற்றாது, அது என்ன?
பதில்: மின்விசிறி, பம்பரம் அல்லது தில்லியில் நான் இருந்தபோது எதிர் வீட்டிலிருந்த குட்டிக் குழந்தை. அதை தூக்கி நான் எவ்வளவு சுற்றினாலும் அதற்கு தலை சுற்றாது. எனக்குத்தான் தலை சுற்றும்.
18. உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு, அது என்ன?
பதில்: பாய், வெற்றிலை அல்லது பிணத்துக்கும் நரம்புகள் உண்டு
19. உருவத்தில் சிறியவன் உழைப்பில் பெரியவன், அவன் யார்?
பதில்: எறும்பு
20. மழை காலத்தில் குடை பிடிப்பான், அவன் யார்?
பதில்: காளான் அல்லது மழையில் வெளியே செல்லும் எல்லோருமே.
21. அள்ளும் போது சலசலக்கும் கிள்ளும் போது கண் கலங்கும் அது என்ன?
பதில்: பெரியாருக்கு பிடிக்கும் அது என்ன?
22. வாயைப் பிளந்து வீதியோரங்களில் நிற்பான் அவன் யார்?
பதில்: தபால் பெட்டி
23. முக்கண்ணன் சந்தைக்குப் போகின்றான் அவன் யார்?
பதில்: தேங்காய் அல்லது கைலாயத்தில் உள்ள சந்தையில் சிவபெருமான்
24. மீன் பிடிக்கத் தெரியாதாம் ஆனால் வலை பின்னுவானாம் அவன் யார்?
பதில்: சிலந்தி அல்லது வலை பின்னும் தொழிற்சாலையில் வேலை செய்யும் ஒருவன்
25. தொடலாம் ஆனால் பிடிக்க முடியாது அது என்ன?
பதில்: தண்ணீர்னு சொல்லலாம்னா, தண்ணி லாரி வந்துடுத்து, தண்ணி பிடிக்கணும்னு பல தங்கமணிகள் அவரவர் வீடுகளில் உள்ள வாயில்லாப் பூச்சிகளிடம் கூறுகிறார்களே.
26. உணவை எடுப்பான் ஆனால் உண்ணமாட்டான் அவன் யார்?
பதில்: அகப்பை அல்லது செர்வர்
27. வெள்ளம் வெள்ளமாக கறுப்பன் கண்ணீர் விட்டானாம் அவன் யார்?
பதில்: மழை மேகம் அல்லது டி.பி. கஜேந்திரன்
28. ஒற்றை கிண்ணத்துக்குள் இரட்டைத் தைலங்கள்?
பதில்: முட்டை அல்லது தேங்காய் எண்ணெய் & நல்லெண்ணெய் (சுட்டிப்பையன் கிட்டு செய்ததற்கு அவனை தண்டிக்காதீர்கள்)
29. தொடாமல் அழுவான், தொட்டால் பேசுவான். அவன் யார்?
பதில்: தொலைபேசி
30. வீட்டுக்கு வந்த விருந்தாளியை வரவேற்க ஆளில்லை. அது என்ன?
பதில்: தென்னை மரம்
(30 கேள்விகளுக்குமான பின்குறிப்பு: அனானி, உங்கள் பெயர் என்ன இளவேனிலா)?
அனானி (16.10.2008 இரவு 08.38-க்கு கேட்டவர்)
1. அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.
பதில்: அதாவது ஒற்றுமையே பலம். அதை விளக்க நாங்கள் போட்ட நாடகம் பற்றி கூறுவேன்.
மரணப் படுக்கையில் தந்தை. அவருக்கு மூன்று பிள்ளைகள், ஒற்றுமையில்லாதவர்கள். தந்தை எல்லா பிள்ளைகளையும் அழைத்து, ஆளுக்கு ஒரு சுள்ளி கொடுப்பார். அதை உடைக்கும்படி கூறுவார். அவர்களும் சுலபமாக உடைப்பார்கள். பிறகு பல சுள்ளிகள் அடங்கிய காட்டு ஒன்றை கொடுப்பார். அதை உடக்க இயலாது. பின்னாலிருந்து ஒரு ஆழ்குரல் கேட்கும், "ஆகவே ஒற்றுமையில் உண்டு வாழ்வு, இல்லையேல் அனைவர்க்கும் தாழ்வு" என்று. ஒரே ஒரு நாள் மட்டும் சற்று வேறு சீன். நான் மரணப்படுக்கையிலிருக்கும் அப்பா வேடம் போட்டேன். ஒற்றை சுள்ளிகளை உடைத்தார்கள் பிள்ளைகள். கட்டு சுள்ளியை முதல் இரண்டு பிள்ளைகள் உடைக்க முடியாது மூன்றாம் பிள்ளையிடம் தர, அவன் தம் பிடித்து அதையும் உடைத்து தொலைத்தான். பிறகு என்ன எல்லோரும் (மரணப்படுக்கையில் இருக்கும் அப்பா உள்பட) எழுந்து ஓட்டம்தான்.
2. அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்.
பதில்: எப்படியாவது கலைஞரை ராஜினாமா செய்ய வைக்காமல் ஓய மாட்டார்கள் போல இருக்கு. ம்ம்ம், நடக்கட்டும்.
3. அடியைப் போல அண்ணன் தம்பி உதவாது.
பதில்: யார் அண்ணன், யார் தம்பி? யாருக்கு உதவ வேண்டும்?
4. அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.
பதில்: ஆக ரெண்டு பேருமே கொல்லாம விடமாட்டாங்கப்பு.
5. அழுதாலும் பிள்ளை அவள்தானே பெறவேண்டும்.
பதில்: நாங்கள் இஞ்சினியரிங் கல்லூரி பரீட்சையில் அரியர்ஸ் வைத்து புலம்பியபோது எங்களிடம் கூறப்பட்ட இச்சொற்களை மறக்கவியலாது.
6. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.
பதில்: இப்பெல்லாம் டி.வி.யில் சினிமா போட்டா பார்க்க ஆள் கிடைப்பதில்லை.
7. அற்பருக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பர்.
பதில்: சமீபத்தில் 1954-ல் திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியில் எங்களது நான்காம் வகுப்பு ஆசிரியர் பாஷ்யம் ஐயங்கார் இதை சொன்னபோது டோண்டு ராகவன் எழுந்து நின்று பவ்யமாகக் கையைக் கட்டிக் கொண்டு, “ஏன் சார் அர்த்த ராத்திரிலே, வெளீலே போறப்போ, மழை பெஞ்சா என்ன செய்யறது” என்று கேட்டு உதை வாங்கினான்.
8. அற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன.
பதில்: அப்பத்தானப்பூ அதிகமாக குளிரெடுக்கும். இதென்ன சிறுபிள்ளத்தனமா இருக்கு?
9. அறுக்க முடியாதவ இடுப்புல ஆயிறத்தெட்டு அருவா
பதில்: ஸ்கூட்டரே இல்லாமல் கணவன் ஹெல்மெட் வாங்கினான். எதுக்கு? ஓசி லிஃப்ட் கேட்க. அதற்கு அவன் மனைவி “இதென்ன கூத்து, ஸ்கூட்டர் இல்லாமல் ஹெல்மெட் எப்படி வாங்கப் போச்சு” என கெக்கலி கொட்ட, அவன் எரிச்சலுடன் பதில் கூறினான், “இதப்பாரு, நீ பிரா வாங்கறதை பத்தி ஏதேனும் சொன்னேனா” என்று.
10. ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்
அப்ப, இச்சகம் பேச இருபது நாளா?
11. ஆடத் தெரியாதவள் மேடை பிழையென்றாளாம்
பதில்: ஆடத் தெரிந்தவள் கூறினாலும் மேடைக்கு பொறுப்பேற்றுள்ளவர் இதை கூறக்கூடும்.
12. விடிய விடிய ராமாயணம் விடிந்த பிறகு சீதைக்கு ராமன் என்ன முறை?
பதில்: ஆ, காந்தி இறந்து விட்டாரா?
13. விரலுக்குத் தக்கதே வீக்கம்
பதில்: அச்சமயம் மோதிரத்துக்கு அளவு கொடுத்து அதிக தங்கம் பெறுவது மாப்பிள்ளையின் மார்க்கம்
14. விளையும் பயிர் முளையிலே தெரியும்
நீ பிடுங்கறது எல்லாமே தேவையில்லாத ஆணிதாண்டான்னு வைகைப்புயல் சொன்னது ஞாபகத்துக்கு வருது.
15. வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல்
ரொம்ப கஷ்டம்தேன்.
16. வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்
எங்கே இருக்கு வெண்ணெய்? அதான் தாழி ஒடஞ்சுப் போச்சே. ஆகவே ஆவின் நெய் வாங்கப் போறேன்.
17. வெளுத்ததெல்லாம் பாலல்ல
ஃபினாயிலுமல்ல
18. வேலிக்கு ஓணான் சாட்சி
பதில்: ஆவிக்கு பிசாசு சாட்சி
19. வைக்கோற் போர் நாய் போல
பதில்: தானும் லஞ்சம் வாங்காது மற்றவர்களையும் வாங்க விடாது படுத்தும் அதிகாரிகளை மற்ற அதிகாரிகள் இவ்வாறு ஒப்பிடுவர்.
20. காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு
தன் குஞ்சு மட்டுமல்ல, குயிலின் குஞ்சும்தான்
கிருஷ்ணன்
1. What is your stand on Sri Lankan issue ? Do you think political parties here in Tamil Nadu are enacting a drama to save LTTE ? Do you support The Hindu's stand ? What is your opinion on the article by Ms. Malini Parthasarathy?
பதில்: மாலினி பார்த்தசாரதி அவர்கள் கூறுவதிலிருந்து:
அ. The latest campaign in Tamil Nadu masterminded by a desperate LTTE must not be allowed to undermine the sound policy decision upheld by successive Indian governments since 1991 to stay out of Sri Lanka’s internal affairs.
உண்மை. வெறும் ஈழத்தமிழர்கள் மட்டும் அல்ல. மலையகத் தமிழர்களும் உள்ளனர். இப்போது புலிகள் ஆதரவு சரியல்ல.
ஆ. These parties have launched a campaign in the State ostensibly to express solidarity with the Sri Lankan Tamils trapped in the war zone in northern Sri Lanka but the timing of this campaign which appears to have materialised overnight, is a dead giveaway. The Sri Lankan army, just two kilometres away from the LTTE’s administrative capital, Kilinochchi, has successfully encircled the Tigers and their leader who are virtually trapped in their bunkers. For the first time in years, the Sri Lankan government appears to be on the brink of a major success in its battle with terrorism. There is now the very real prospect of the capture of the elusive LTTE chief, Velupillai Prabakaran, who is behind the assassination of a former Prime Minister of India, Rajiv Gandhi.
ஆம். பிரபாகரனை பிடிக்க வேண்டியது முக்கியம். ராஜீவின் கொலைக்கு தண்டனை பெற வேண்டியவர். இப்போது புலிகளுக்கு ஆதரவு தருவது இந்தியாவின் நலனுக்கு உகந்ததல்ல.
இ. The situation in Sri Lanka itself has undergone profound changes since the 1980s, when it was easier to conceptualise purely political solutions and rule out military responses to the violent dimensions of the conflict. At that point in time, it was indeed possible to sideline the militant groups of Sri Lankan Tamil politics by engaging the political interlocutors in the Tamil community such as the urbane leaders of the TULF, notably Appapillai Amirthalingam, who recognised the key to political empowerment lay in the democratic process. But with the ruthless elimination of every credible interlocutor in the Tamil community by the LTTE which insisted that it was the sole representative of the Sri Lankan Tamils, the space for a political solution has narrowed over the years, rendering null and void the several exercises seeking a devolution of power to the Tamil community.
அமிர்தலிங்கம் போன்றவர்களை கொலை செய்தவர்கள் புலிகள். தாங்கள் மட்டுமே தமிழர் பிரதிநிதிகளாகக் கருதப்பட வேண்டும் என்பதற்காகவே அவர்கள் பல படுகொலைகள் செய்தனர்.
ஈ. For the last decade or so, New Delhi has successfully resisted the various attempts made by the LTTE and its supporters in Tamil Nadu to force it to intervene in the Sri Lankan ethnic crisis. If New Delhi were to express its disapproval, even implicitly, of Sri Lanka’s sovereign right to recapture its own national territory from the LTTE, it would weaken the moral authority of India’s own actions in regard to its struggle against terrorism and the separatist agitation in Kashmir. This latest campaign in Tamil Nadu masterminded by a desperate LTTE must not be allowed to undermine the sound policy decision upheld by successive Indian governments since 1991 to stay out of Sri Lanka’s internal affairs.
தாங்களும் சிங்களவர்களும் சகோதரர்கள். இந்திய அமைதிப்படை திரும்ப செல்ல வேண்டும் என பிரேமதாசாவுடன் சேர்ந்து கூத்தடித்தார் பிரபாகரன். “அப்படியா, உங்கள் சகோதரர்களுடன் நீங்களே பேசிக்கொள்ளுங்கள்” என கூறி விட வேண்டியதுதான் இந்தியாவின் நலனுக்கு நல்லது.
ரமணா:
1. 3G /2 G சேவை ,செல்பேசியில் விளக்குக?
பதில்: முதல் தலைமுறை, இரண்டாம் தலை முறை என்றெல்லாம் கூறவே G --> generation. மற்றப்படி இது பற்றி பத்ரி அவர்கள் அருமையான பதிவு போட்டுள்ளார்.
2. டெண்டரில் என்ன குழப்பம்?
பதில்: அதிக விலைக்கு கேட்பவர்களுக்கு தருவதா அல்லது அரசு லைசன்ஸ் தொகையை நிர்ணயித்து தருவதா என்பதில் பிரச்சினை என நினைக்கிறேன்.
3. யாருக்கோ சலுகை என்கின்றனரே? உண்மையா?
பதில்: அது இல்லாமல் இருக்குமா? அதுவும் இவ்வளவு பணம் புழங்கும் இடத்தில்?
4. இதிலும் அரசியலா?
பதில்: ஆம்
5. அமைச்சர் ராஜா அவர்கள் சொல்வதை பார்த்தால் எல்லாம் சரி போல் தெரிகிறதா?
பதில்: அவர் கூறும்போது சரி போலத்தான் தோன்றுகிறது.
6. தயாநிதியின் தலையிடா?
பதில்: தலையிடும் நிலையில் அவர் இல்லை என நினைக்கிறேன்.
7. பாராளுமன்றம் களை கட்டும் போலுள்ளதே?
பதில்: அது பல விஷயங்களுக்காக களை கட்டும். புலிகள், ராஜ் தாக்கரே, கூடவே இதையும் சேர்த்து கொள்ளலாம்.
8. கனிமொழி அமைச்சராவாரா?
பதில்: எம்.பி. பதவியே நிலைத்து நிற்கிறதா எனப் பாருங்கள்.
9.அவரது ராஜினாமா பற்றி
பதில்: கலைஞரிடம்தானே தந்திருக்கிறார். கலைஞருக்கு அடுத்த முறை அண்ணா கனவில் வரும்போது என்ன கூறுவாரோ, யாரே அறிவார்?
10. கலைஞரின் வாரிசாக வளர்ந்து அண்ணாக்களை முந்துவார் போலுள்ளதே?
பதில்: நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஸ்டாலின் அழகிரி கெடுபிடியில் காம்ப்ரமைஸாக அவரைத் தேர்ந்தெடுக்கலாம்.
புரட்சித் தமிழன்:
1. பங்குவணிக சூதாட்டம் பற்றிய தங்கள் கருத்து?
பதில்: நமக்கு சற்றும் ஒத்து வராத இடம் இது. கிட்டவே போவதில்லை. கேள்விக்கு நல்ல பதிலாக நண்பர் வால்பையன் தர இயலும்.
2. 7000 க்கு போய்விடும் எனக் கணிக்கிறார்களே?
பதில்: எது சென்செக்ஸா? ஏன் இந்த கொலை வெறி?
3. சரிவு என்றதும் நிதி அமைச்சர் ஓடி வருகிறாரே ஏன்?
பதில்: இது உலகளாவிய செயல்முறைதான். எல்லா நாடுகளிலும் உண்டு.
4. அவர் பையன் நஷ்டமடையாமல் காப்பாற்ற என்ற வதந்தியில் உண்மை உண்டா?
பதில்: நான் அதை நம்பவில்லை
5. இதற்குப் (பெரும் சரிவு) பிறகும் பொருளாதாரச் சீர்திருத்தம் தேவையா?
பதில்: தேவையா என்று கேட்க இது நேரம் இல்லை. நான் பலமுறை சொன்னது போல ஏற்கனவே அது வந்து விட்டது. கடிகாரத்தை திரும்ப வைக்க முடியாது.
6. கச்சா எண்ணெய் விலை பாதியாக குறைந்த பிறகும் பெட்ரோல் விலயை குறைக்க மறுக்கும் அரசின் செயல் பற்றி?
பதில்: சாதாரணமாக விலை பெட்ரோல் விஷயத்தில் உயர்ந்தால் உயர்ந்ததுதான்.
7. பின் அம்பானிகளை எப்படி நாம் குற்றம் சொல்ல முடியும்?
பதில்: சொல்ல முடியாதுதான்
8. கட்டுப்பாடான பொருளாதாரமே நம்மை போன்ற பெரிய நாட்டுக்கு உகந்தது என்பதை இப்போதாவது ஒத்துக் கொள்வீர்களா?
மாட்டேன். அடிப்படை பொருளாதார விதிகளை மறந்து வரவுக்கு மேல் தாம்தூம் செலவு செய்தால் கெடுதல்தான் வரும். இது எல்லா பொருளாதாரங்களுக்கும் பொருந்தும். கடன் கொடுப்பதற்கான அடிப்படை விதிகளை மறந்து கண்டவர்களுக்கு வாரி வாரி கடன் வழங்கினர் அமெரிக்கர்கள். இப்போது அனுபவிக்கின்றனர். அதற்கு முன்னால் நாட்டினரின் ஆதாரத் தேவைகளை கவனிக்காது ரஷ்யர்கள் ராணுவத் தளவாடங்களுக்கு செலவழித்தனர். திவாலாயினர். ஆக பொருளாதார விதிகளுக்கு மனுஷர்கள் தெரியாது, தத்துவங்கள் புரியாது.
9. விஷம்போல் ஏறும் உணவுப் பொருளின் விலைஉயர்வில் மூழ்கும் நமது ஏழை இந்திய சகோதரர்களை பற்றிய எண்ணம் எல்லோருக்கும் வருமா?
பதில்: வராது. அவரவர் கவலை அவருக்கு.
10. தனியார்மயம், தாராளமயம், உலகமயம் முழுத் தோல்வியை நோக்கிச் செல்கிறதா?
பதில்: இல்லை. அவற்றிலேயே நோய்க்கான மருந்தும் உள்ளடங்கியுள்ளது. கசப்பு மருந்தாயினும் அதை உட்கொண்டே தீர வேண்டும்.
அனானி (17.10.2008 காலை 07.49-க்கு கேட்டவர்)
1. கலைஞர் ஐயா கூட பேசுவது ஏதாக இருந்தாலும் அவர் நம்புவது பிராமண அதிகாரிகளை, மருத்துவர்களை, தணிக்கையாளர்களை, பத்திரிக்கையாளர்களை,வக்கீலகளை போல் தெரிகிறதே? ஏன்?
பதில்: பிராமணர்கள் என்று தனியாக இல்லை. அவரைப் பொருத்தவரை அவருக்கு வேண்டிய வேலைகளை செய்ய ஆட்களை நியமிக்கும்போது இட ஒதுக்கீடு எல்லாம் பார்க்க மாட்டார். அவ்வளவே. என்ன, அவ்வாறு நியமிக்கப்படுவர்களில் பார்ப்பனர் இருந்தால் ஆட்சேபம் தெரிவிக்க மாட்டார், அவ்வளவே.
அனானி (17.10.2008 காலை 07.30-க்கு கேட்டவர்)
1. மைனர் என்றால் என்ன? உண்மையிலேயே தெரியாது எனக்கு. மைனர் விளையாட்டு என்பதை பற்றி உங்கள் பதிவில் இருந்து ஒரளவு விளங்க முடிந்தது. என்றாலும் மேலும் விளக்கம் தேவை. (நான் இந்தியன் அல்ல)
பதில்: ஒரு சொத்தின் வாரிசு மைனராக (அதாவது 18 வயதுக்கு கீழே) இருந்தால், அவர் சொத்தை நிர்வகிக்க ஒரு கார்டியனை நியமிப்பார்கள். சாதாரணமாக அவ்வாறு நியமிக்கப்பட்ட கார்டியன்கள் மைனருக்கு எல்லா கெட்டப் பழக்கங்களையும் சொல்லிக் கொடுத்து நிர்வாகத்தை தாங்களே பார்த்து கொள்வார்கள். அப்படிப்பட்ட மைனருக்கு தினமும் பார்ட்டிதான். அதுதான் மைனர் வாழ்க்கை. பிறகு இந்த வார்த்தை ஜாலியாக பொழுதை போக்கும் எல்லோருக்குமே பாவிக்கப்பட்டது.
2. விஜய் தொலைக்காட்சியில் மாலை 6.00 ஒளிபரப்பாகும் சமய நிகழ்ச்சிகள் குறித்து உங்கள் கருத்து? மற்றய தொலைக்காட்சிகளிலும் இப்படி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் காலம் வருமா?
பதில்: இல்லை இதுவரை பார்த்ததில்லை.
3. மோடி போன்ற ஒருவர் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வருவது அடுத்த 25/50 வருடங்களில் சாத்தியமா?
பதில்: கஷ்டம்தேன். நம்மவர்களுக்கு சினிமா மோகம் அதிகம். அதே போல அடுக்கு மொழியில் ஒருவர் என்ன உளறினாலும் கைதட்டி விசிலடிப்பார்கள். குஜராத்தியர் அப்படியல்ல. பொதுவாக அதிகம் சீரியசானவர்கள். வியாபாரத்தில் கவனம் செலுத்துபவர்கள். ஆகவே இங்கே மோடி போன்றவர் பதவிக்கு வர்ழுவது நடக்காது என்றே கூறலாம்.
4. பாவாணர் கருத்துக்களை 3 பிரிக்கலாம். 1. தமிழ் கருத்துக்கள் 2. வடமொழி கருத்துக்கள் 3. குமரி/முதன்மை தாய்மொழி கருத்துக்கள். இந்த முன்றில் கடைசி இரண்டும் காலத்தால் கழிக்கப்பட்டு விட்டன. அனால் பாவாணர் தமிழ் கருத்துக்கள் மிகவும் சிறந்தவை என்பது என் கருத்து, உங்கள் கருத்து என்ன?
பதில்: மன்னிக்கவும். இது பற்றி நம்ம அறிவு கிட்டத்தட்ட லேது என்றே கூறலாம்.
5. தமிழில் சிறந்த கலை திரைப்படங்கள் இனிமேல் வருமா?
பதில்: பாக்ஸ் ஆஃபீசுக்கு குந்தகம் இல்லாத கலைப்படங்கள் வந்தால்தான் உண்டு.
அனானி (18.10.2008, காலை 09.10-க்கு கேட்டவர்):
தலைவர்களின் நிறை/குறைகளை பட்டியலிடவும்
1. தேசப்பிதா காந்தி மகான்
பதில்: சத்தியத்தை வைத்து பரிசோதனை செய்தவர். பிற்காலத்தில் வரும் சந்ததியினர் இம்மாதிரி ஒரு மனிதர் நிஜமாகவே உயிருடன் வாழ்ந்தார் என்பதை நம்ப சிரமப்படுவார்கள் என்று கருத்து தெரிவித்தார் ஐன்ஷ்டைன் அவர்கள். இது நிறை. குறை? அதுவும் இதுவேதான்.
2. தலைவர் ஜின்னாஜி
பதில்: நம்முடன் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். தனது கொள்கைகளுக்கு உண்மையாக வாழ்ந்தவர். குறை? நாட்டை துண்டாட காரணமாக இருந்தவர். ஆனால் அதையே பாகிஸ்தானில் நிறையாகப் பார்ப்பார்கள்.
3. சட்ட மேதை அம்பேத்கார்ஜி
பதில்: அரசியல் நிர்ணயச் சட்டத்தின் பிதா என்று அழைக்கப்படுபவர். குறை என்று தேடினாலும் அகப்படவில்லை எனக்கு. அப்படி சொல்ல வேண்டுமானால் இன்னும் அதிக ஆண்டுகள் அவர் வாழ்ந்திருக்கலாம் என்ற மனக்குறையை வேண்டுமானால் சொல்லலாம்.
4. பெரியவர் நேதாஜி
பதில்: மிகுந்த தேசப்பற்றுள்ளவர். ஆனால் சேரக்கூடாதவர்களுடன் (ஜெர்மானியர், ஜப்பானியர்) சேர்ந்தவர். உலகப் போரில் அந்த நாடுகள் வெற்றி பெற்றிருந்தால் அவை முதலில் நேதாஜியைத்தான் போட்டு தள்ளியிருப்பார்கள்.
5. மூதறிஞர் ராஜாஜி
பதில்: பகவத் கீதை சொன்ன வழியில் நடந்து தன் கடமையைச் செய்தவர். குறை என்னவென்றால், அரசியலில் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளத் தெரியாதவர். இவரிடம் ஆக வேண்டிய காரியம் நிறைவேறியதும் கழற்றிவிடப்பட்டவர். அதற்காக அவர் வருந்தவில்லை என்பது வேறு விஷயம்.
6. பண்டிட் நேருஜி
பதில்: நேர்மையானவர். ஆனால் நம்பக்கூடாதவர்களை நம்பியதால் (1962) நாட்டுக்கே கெடுதி வந்தது.
7 .நேர்மையாளர் மொரார்ஜி
பதில்: ராஜாஜிக்கு சொன்ன பதில் கிட்டத்தட்ட இவருக்கும் பொருந்தும், அதாவது சில விஷயங்களில் சமரசம் செய்து கொள்ள முடியாதவர்..
8. தூய்மையாளர் சாஸ்திரிஜி
பதில்: அவர் நேர்மையில் சந்தேகம் இருக்க முடியாது. குறைகள் வெளிப்பட்டு நாட்டை பாதிக்கும் முன்னரே மறைந்தவர்.
9. பண்பாளர் நந்தாஜி
பதில்: எளிமையான மனிதர். என்ன, சாதுக்கள் வீக்னஸ் அவ்வளவுதான்.
10. அன்னை இந்திராஜி
பதில்: பங்களாதேஷ் யுத்தத்தில் இந்தியாவின் பெருமையை நிலைநிறுத்தியவர். ஆனால் தனது சுயநலனுக்காக ஜனநாயகத்தையே சூதாட்டத்தில் வைத்து ஆடியவர் (நெருக்கடிநிலை பிரகடனம்).
ராமகிருஷ்ணஹரி:
please explain the following with an example ( based on the latest trends in tamilnadu )
1. violence(ஹிம்சை)
பதில்: தமிழ் மெகா சீரியல்கள்
2. greed(பேராசை)
பதில்: எல்லாமே தன் குடும்பத்துக்காகத்தான் என்று செயல்படும் தலைவர்கள்
3. ambition(புகழ்பெறவேண்டும் என்ற ஆசை)
பதில்: யாருக்குத்தான் அது இல்லை?
4. competition (போட்டிமனப்பான்மை)
பதில்: இது இல்லையென்றால் மனித குலமே முன்னேறியிருக்காது.
5. brutality(பண்பற்ற மிருகத்தனம்)
பதில்: நாள் தவறாமல் பேப்பரை திறந்தால் இது பற்றித்தானே செய்திகள் வருகின்றன.
6. vanity(தற்பெருமை)
பதில்: தாம் செய்தால் சுயநம்பிக்கை, மற்றவர் செய்தால் தற்பெருமை என்றிருப்பதால் வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை
7. jealousy(பொறாமை)
அது போட்டி மனப்பான்மையை தோற்றுவித்து ஆரோக்கியமான போட்டியை உண்டாக்கினால் பரவாயில்லை.
9. ideologies (கொள்கைகள்)
பசி வந்திட பத்தும் பறந்து போகும் என்று சொல்வார்கள். அவற்றில் ஒன்றுதான் கொள்கைகள்.
10. beliefs(நம்பிக்கைகள்)
பதில்: நாளைக்கு உயிருடன் காலையைப் பார்ப்போமா என்ற நிச்சயம் இல்லாத சூழலில் எதிர்காலத்துக்காக நாம் சேமித்து திட்டம் போடுவதே நம்பிக்கையின் அடிப்படையில்தானே?
புரட்சித் தமிழன்:
உங்களுக்கு இந்த வாய்ப்பு அளிக்கப் பட்டால் என அதிரடி முடிவுகளை எடுப்பீர்கள்
1. இந்திய பிரதமராக
பதில்: இந்திய நலன்களுக்கு ஏற்ப செயல்படுமாறு நிதி அமைச்சர், உள்துறை அமைச்சர் ஆகியோர் செயல்பட நிலையை உருவாக்குவது. ஏற்கனவே நிதி அமைச்சர் ஒருவருக்கு நல்ல இன்ஸ்ட்ரக்ஷன்களை அளிப்பதை சமீபத்தில் 1991-ல் நரசிம்மராவ் செய்து விட்டார். இந்த விஷயத்தில் அவர் மாதிரி செயல்பட்டாலே நல்லது. உள்துறை அமைச்சருக்கு தீவிரவாதத்தை ஒரு சமரசமுமின்றி வேருடன் கிள்ளியெடுப்பதற்கான செயல்பாடுகளை உருவாக்கச் சொல்லுவேன். முடிந்தால் மோடியை உள்துறை அமைச்சராக நியமிப்பேன்.
2. இந்திய நிதி அமைச்சராக
பதில்: மேலே குறிப்பிட்ட பிரதமர் கூறுவதை செயல்படுத்துவேன்.
3. இந்திய உள்துறை அமைச்சராக
மேலே குறிப்பிட்ட பிரதமர் கூறுவதை செயல்படுத்துவேன். அதுவும் பிரதமராக மோடி இருந்து விட்டால் விசேஷம்.
4. இந்திய காங்கிரஸ் தலைவராக
பதில்: நேரு குடும்பத்தின் டாமினேஷனை அகற்ற முயற்சிப்பேன்.
5. செபி(sebi) தலைவராக
தமிழ்: பங்கு சந்தைகளின் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மையை கொண்டு வர முயற்சிப்பேன்.
6. RBI தலைவராக
ரிசர்வ் வங்கியின் தலைவருக்கு இருக்கும் அதிகாரங்களை பயமோ பாரபட்சமோ இன்றி பிரயோகம் செய்வேன்.
7. ரிலயன்ஸ் குழுமத்தின் தலைவராக
பதில்: முதற்கண் எந்த ரிலையன்ஸ் குழுவின் தலைவரானாலும் இன்னொரு குழுவினருடன் பேசி தேவையற்ற தகராறுகளை தவிர்ப்பேன்.
8. cpi(m) தலைவராக
சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே பிரச்சினை வந்தால் இந்தியாவின் பக்கமே பேசுவேன்.
9. திமுக/அதிமுக தலைவராக
சொந்த குடும்பம்/தோழியின் குடும்பம் ஆகியோரது டாமினேஷனைத் தவிர்ப்பேன்.
10. பாஜக தலைவராக
பதில்: கஷ்டமோ நஷ்டமோ தமிழகத்தில் கட்சியை சொந்தக் கால்களில் நிறுத்த முயற்சிப்பேன். திருநாவுக்கரசு போன்றோரை ஆதரிப்பேன்.
ஒரு சிறு அறிவிப்பு: பதிலளித்த கேள்விகள் இம்முறை மிக அதிகம் ஆகிவிட்டன. இன்னும் பதிலளிக்க மேலும் கிட்டத்தட்ட 50 கேள்விகள் உள்ளன. அவற்றில் இலங்கை விவகாரம் குறித்து மட்டும் இருபதுக்கும் மேலே கேள்விகள் வந்துள்ளன. இந்த எல்லா கேள்விகளையும் அடுத்த பதிவின் வரைவுக்கு கொண்டு செல்கிறேன்.
மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
போலி இளமை
-
இணையக்குப்பை அன்புக்கும் மதிப்புக்கும் உரிய ஜெ., வணக்கம்! உங்கள் பதில்
இணையக்குப்பை பல முறை மீண்டும் மீண்டும் வாசித்தேன். முதலில், எனது மின்னஞ்சலை
கருத்தி...
9 hours ago
19 comments:
போற்றுவோர் போற்றட்டும்
புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும்
டோண்டு ஐயாவின்
கடன் செய்து செய்து கிடப்பதே.
என்ற பாணியில்
இந்த வார கேள்வி பதில் "சூப்பர்"
நன்றிகள்
ராமகிருஷ்ணஹரி
//4. recession (in usa)
வியாபாரம் நடந்தால்தானே வேலை செய்பவர்களுக்கு சம்பளம் தர இயலும்? ஆகவே வேலைவாய்ப்புகளில் முதலில் பாதிப்பு வரும். அவ்வாறு வேலையிழந்தவர்களால் பொருட்களை வாங்க முடியாது போல மேலும் பல தொழில்களுக்கு மார்க்கெட் போய், இந்த ரிசஷன் இன்னும் அதிகரிக்கும்.
5. gdp ( in world)//
5. gdp ( in world)?
டோண்டு ஐயா அடுத்த கேள்வி பதிலில் இதை சேர்த்து விடவும்.(இந்த வாரம் விடுபட்டு விட்டது()
ராமகிருஷ்ணஹரி
ராமகிருஷ்ணஹரி அவர்களே, ஏன் அடுத்தவாரம் வரை காத்திருக்க வேண்டும். இப்பதிவிலேயே சேர்த்து விட்டேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அடுத்த வாரத்திற்கான இளவேனிலின் கேள்விகள்.
டோண்டுவின் புதியபாணி பதிலை எதிர்பார்த்து.( நிகழ்காலச் சூழ்நிலை சார்ந்து)
01. பலவீனர்களின் பாதையில் தடைக்கல்லாக இருந்த கருங்கல் பலசாலிகளின் பாதையில் படிக்கட்டாக அமைகிறது.
02. உழவன் என்பவன் எப்போதும் அடுத்த ஆண்டு பணக்காரனாக இருப்பான்.
03. தனது குளத்துக்கு தன்னை ராஜாவாகக் கருதிக்கொண்டிருக்கும் கிராமத்து மீன் சமுத்திரத்தில்
வேலைக்காரனாக இருக்க சம்மதிக்காது.
04. முழுப் பக்குவம் என்பது புகழ், பழி எதையும் இலட்சியம் செய்யாமல் சேவையில் ஒன்றிவிடுவதுதான்.
05. அடிமையாக இருப்பது தெரியாதவனுக்கு சுதந்திரத்தைச் சொல்லிப் பயனில்லை. அடிமைத்தனத்தின் சுமை யாருக்குப்
புரியுமோ அவர்களுக்குத்தான் சுதந்திரத்தின் சௌகரியமும் புரியும்.
06. கலை மூலம் சொல்லப்படும் கருத்துக்கள் உள்ளத்தைப் பண்படுத்த வேண்டுமேயல்லாது புண்படுத்தக் கூடாது.
07. மாடு காணாமல் போனவன் காதில் எப்போதும் மணியோசை கேட்டுக்கொண்டேயிருக்கும்.
08. மூடிய கைகளுடன் மனிதன் பூமிக்கு வருகிறான் திறந்த கைகளுடன் அதை விட்டுப் போகிறான்.
09. வளைகிற முள் நுழையாது.
10. வண்டி வந்தால் வழி தானாக உண்டாகும்.
11. வேலையில்லாதிருந்தால் அது ஆயிரம் நோய்களை கொண்டுவரும்.
12. நன்மைக்கு நன்மை செய் தீமைக்கும் நன்மையே செய்.
13. சாவின் அருகில் சென்றவனுக்குத்தான் உயிரின் மதிப்புத் தெரியும்.
14. பழத்தைச் சாப்பிட விரும்பின் பூவைப் பாதுகாக்க வேண்டும்.
15. ஒரு குற்றமுள்ள மனைவி வேண்டாமென்றால் அந்த இடத்தில் இரு குற்றமுள்ளவள் வருவாள்.
16. மற்றவர்கள் உனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கலாம் ஆனால் நல்ல குணத்தை களங்கப்படுத்த முடியாது.
17. தமிழருக்கு அன்றும் இன்றும் தொலைநோக்கு மருந்துக்கும் கிடையாது.
18. பெரும்பாலானவர்கள் வாழ அஞ்சுகிறார்கள் அதுபோல சாகவும் அஞ்சுகிறார்கள்.
19. வாழ்வது எப்படியென அறிவோமாயின் சாவும் அதுபோல ஒன்றுதானென அறிவோம்.
20. எதையும் உருவாக்கத் தெரியாதவன் உடைக்கச் சொல்ல அருகதையற்றவன்.
21. ஆய்வு என்பது மன விருப்பத்தை கருத்தாக்குவதல்ல.
22. கொட்டிய பிறகு தேள் என்று அறிந்து கொள்ளாதீர்கள்.
23. ஒவ்வொரு காரியத்திற்கும் உரிய காரணம் அதற்குள்ளேயே இருக்கிறது.
24. முட்டாள்களை அறியும் பொறுமை இல்லாதவர் அரசியலில் இருக்க முடியாது.
25. அரசியலில் ஈடுபடாதே ஈடுபட்டால் அதுதான் உனக்கு செத்த வீடு.
-இளவேனில்
(குறிப்பு-எங்கள் அலுவலகத்தில் டோண்டு அவ
ர்களின் கேள்வி பதிலை ரசிக்கும் நண்பர்கள் அதிகம். இனி கேள்வி பதில் வாரம் இரு முறை போட வேண்டிய சூழ்நிலை வரும்.
"டோண்டுவின் கேள்வி பதில் அல்லது டோண்டுவைக் கேளுங்கள்,கேட்டால் கிடக்கும் பதில்,வாருங்கள் பதில் பெறுங்கள்"'
என தனியாக பதிவு போடவேண்டிய சூழ்நிலை வரலாம்.)
வாழ்த்துக்கள் !
http://fleshcia.spaces.live.com/default.aspx
மேலே உள்ள உரலில் வரும் இளவேனிலா விடுகதை கேள்விகளை கேட்டது? ஒரு விடுகதையை நகலெடுத்து கூகள் தேடு பெட்டியில் போட உங்கள் பக்கம் வந்தது. ஆகவே பதில்களை கூற முடிந்தது.
It is really a small world.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//dondu(#11168674346665545885) said...
http://fleshcia.spaces.live.com/default.aspx
மேலே உள்ள உரலில் வரும் இளவேனிலா விடுகதை கேள்விகளை கேட்டது? ஒரு விடுகதையை நகலெடுத்து கூகள் தேடு பெட்டியில் போட உங்கள் பக்கம் வந்தது. ஆகவே பதில்களை கூற முடிந்தது.
It is really a small world.
அன்புடன்,
டோண்டு ராகவன்//
கேள்வி பதில் சுவையே
கேள்வி ஒன்று பதில் பல
உங்கள் பதில் சொல்லும் பாணி
தனி
தொடரட்டும் உங்கள் சேவை
ராமகிருஷ்னஹரி.
இலங்கை கேள்விகளுக்கு மட்டும் தனியாக ஒரு பதிவு போட முடியுமா?
டோண்டு சார் தித்திக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.
அங்காங்கே குண்டு வெச்சிட்டு கேட்டா, "இஸ்லாத்துக்கும் வன்முறைக்கும் சம்பந்தமே கிடையாது. இஸ்லாத்திலே வன்முறைக்கு இடமே கிடையாது"ன்னு கதை கட்டி விடுறானுங்களே. அப்படீன்னா பின் லேடன் முஸ்லீமே இல்லைன்னு அட்லீஸ்ட் நம்ம தமிழ் நாட்டில இருக்கிற முஸ்லீம், அட, வலைப்பதிவில் இருக்கிறவங்களாவது பகீரங்கமாக அறிவிப்பார்களா? நீங்க என்ன சொல்றீங்க?
சில விடுகதைகள் குழந்தை தனமாக இருந்தாலும்
பதில்கள் அதைவிட குறும்பு
சார் சொல்றேனேன்னு தப்பா நெனைச்சிகாதிங்க. உங்க கேள்வி பதில் ரொம்ப அறுவையா போயிக்கிட்டிருக்கு
நீண்டகால வாசகன்
//Anonymous said...
சார் சொல்றேனேன்னு தப்பா நெனைச்சிகாதிங்க. உங்க கேள்வி பதில் ரொம்ப அறுவையா போயிக்கிட்டிருக்கு
நீண்டகால வாசகன்
கிளம்பீட்டாங்கய்யா
கிளம்பீட்டாங்க
வாழ்ந்தாலும் பேசும்
தாழ்ந்தாலும் பேசும்
பொல்லாத உலகமடா!
//போற்றுவோர் போற்றட்டும்
புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும்
டோண்டு ஐயாவின்
கடன் செய்து செய்து கிடப்பதே.
என்ற பாணியில்
இந்த வார கேள்வி பதில் "சூப்பர்"
நன்றிகள்
ராமகிருஷ்ணஹரி//
//வீ. எம் said...
சாரே, முன்பெல்லாம் 3 - 4 பக்கங்கள் வரை வந்த உங்க டோண்டு கேள்வி பதில் பதிவு, இப்போது அரை பக்கமாக குறைந்துவிட்டதே, கேள்விகளுக்கு வறட்சியா? அல்லது உங்கள் பதில்கள் சலிப்படையவைக்கிறாதா பதிவர்களை?//
சார் இந்த வார பதில்கள் அருமை . விடுகதை முடிச்சுகளை அவிழ்த்தது நன்றாக இருந்தது
டோண்டு
லக்கிலுக் அவருடைய சமீபத்து பதிவு ஒன்றில் உங்கள் நட்பு நேர்மையானது என்று பாராட்டியிருக்காரே? நீங்களும் லக்கியும் உண்மையில் நண்பர்களா? லக்கியும் நீங்கள் மோதுவதை பார்த்து ரெண்டு பேரும் கீரியும் பாம்பும் என்று நினைத்தேன்.
விவேக், நாகை
Dear Mr. Dondu Raghavan,
I used to read your blog regularly & like your weekly Q & A posts.
I have written a post in my blog on the reason for the present Sub-prime Crisis in the US of A. Please visit & give your feedback/comments.
http://hereisarun.blogspot.com/2008/10/dummys-guide-to-us-sub-prime-crisis.html
Arun
//
போற்றுவோர் போற்றட்டும்
புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும்
டோண்டு ஐயாவின்
கடன் செய்து செய்து கிடப்பதே.
//
கலக்குங்க!
//வால்பையன் said...
சில விடுகதைகள் குழந்தை தனமாக இருந்தாலும்
பதில்கள் அதைவிட குறும்பு
parattai paththavassuttuye parttai
ithu eppadi irukku
vaalu konchsam neeeeeeeeeeeeLam thaan
happy deepavali to tailboy
//அதனால் தான் "பாம்பையும் பார்ப்பனனையும் கண்டால் பாம்பைக் கொல்லாதே; பார்ப்பனனைக்கொல்" எனப் பெரியார் கூறி இருந்தார். பிராமணரான ஜெயலலிதாவை ஆட்சிக்கதிரையில் நிரந்தரமாக இருத்தி அழகு பார்ப்பதே இந்தப்பார்ப்பனியத்தின் இலட்சியம். துக்ளக் ஆசிரியர் சோ,சுப்பிரமணியசாமி, ஜெயலலிதா மற்றும் பிராமணப் பத்திரிகைகளான தினமலர், ஹிந்து ஆகியவையே தமிழகத்தில் பிராமணியத்தின் எச்சமாக உள்ள 4 அம்சங்களாகும். ஆரம்பகாலத்தில் தமிழகத்தில் பத்திரிகைகள் என்றால் இந்தப் பிராமண ஆதிக்கப்பீரங்கிகள் மட்டுமேதான் என்ற நிலை இருந்தது. அதாவது தமது ஆதிக்கத்தில் வாசகர்களை வைத்துப்பூட்டி வைத்து பிராமண மேலாதிக்க நிலையை பேண இவர்கள் கடுமையாக முயன்றனர். எனினும் பெரியார், அண்ணா, கலைஞர் என அடுக்கடுக்காக தோன்றிய சீர்திருத்தவாதிகள் இந்த அடிமைத்தளையை உடைத்தெறியலாயினர்.
மிரண்டுபோன பார்ப்பனியம் தமிழகத்தின் பார்ப்பனர்களால் இயலாததை சாதிக்க கர்நாடகத்திலிருந்து இறக்குமதியான பார்ப்பனியமான ஜெயலலிதாவையும் அவரது சினிமாவையும் பயன்படுத்த முனைந்தனர். அதில் ஓரளவு வெற்றியும் கண்டனர். இன்றைய நிலையில் ஏற்கனவே இனி ஒருபோதுமே ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வராக வரமுடியாத அவலம் உள்ளது. இது பார்ப்பனியத்தால் ஜீரணிக்க முடியாத ஒன்றாகும்//
( வலையில் இப்படி பரப்பபடும் செய்திகளுக்கு உங்களை தவிர யார் சரியான பதில் கொடுக்கமுடியும்)
இதற்கு சரியான பதில் கொடுக்கவும்
-ராம்கிருஷ்ணஹரி
டோண்டு சார் பணிச்சுமை அதிகமா?
வெள்ளி கிழமை கேள்விப் பதிலுக்குப்பிறகு தங்கள் பதிவுகளை?
1.இலங்கை இனப் படுகொலையை பற்றி ?
2.கலைஞரின் இனம் காக்கும் புனிதப் போரில் ஆட்சி அதிகாரத்தியே தூக்கி எறியத் துணிந்த துணிவு?
3.பிரிவினை வாதம் தூண்டப் படுவதாக வந்த குற்ற்ச்சாட்டில் கைதுகள்,நியாயமா?
4.தமிழ்நாட்டு மக்களின் இன எழுச்சிகண்டு நடுவண் அரசின் கிடு கிடு நடவடிக்கைகள்,எப்படி?
5.இலங்கை அரசே முன்வந்து நாம் கொடுக்கும் நிவாரண உதவிகளை
தமிழ் மக்களுக்கு கொடுப்பது பற்றி?
6.இந்த சமயத்திலும் அரசியல் லாபம் பார்க்க துடிக்கும் ஜெயலலிதா அவர்கள் பற்றி?
7.இதிலும் பிராமண துவேஷம் காட்டுவோர் பற்றி?
8.சினிமா நடிகர்கள் எழுச்சி எப்படி?
9.வைகோ அரசியல் கதை ?
10.மீண்டும் இலங்கை தமிழர் நலன் காக்கும்,கலைஞர்அரசின், நிதி திரட்டும் திட்டம் ?
8.
Post a Comment