தமிழகத்தில் நடக்கும் அரசியல் நாடகங்களுக்கேற்ப இலங்கை பற்றிய கேள்விகள் அதிகமாக வந்ததால் நண்பர் அருண் அவர்களது ஆலோசனைக்கேற்ப அவற்றுக்கு இப்பதிவில் பதில் அளிக்க முயற்சி செய்கிறேன்.
நரசிம்மா:
1. விடுதலைபுலிகள் அழிவது தமிழருக்கு நல்லதா?
ஆம். ஏனெனில் அவர்கள் கணினி மொழியில் கூறுவதென்றால் கரப்ட் ஆன கோப்புகளாகி விட்டனர். பல வைரஸ்கள் அவர்களிடம் குடி கொண்டு விட்டன. கர்ணபிரபுவே நாணும் வண்ணம் மற்றவருக்கு அவற்றை தானமாக அளிக்கின்றனர். கொல்லப்பட்ட தமிழர்களில் புலிகளால் கொல்லப்பட்டவர்களே அதிகம். நேரடியாக கொல்வதோடு மட்டுமின்றி அப்பாவி மக்களையும் கேடயமாக்கி தாம் தப்பிக்க முயலுகின்றனர், இப்போது செய்வது போல.
அனானி (18.10.2008 இரவு 08.58-க்கு கேட்டவர்):
1. அமெரிக்காவில் தடை செய்யபட்ட புலிகள் இயக்கதை ஆதரிப்பவர்களை அந்த நாட்டின் அரசாங்கம் தண்டிக்க முடியாதா?
முடியும். தடை எத்தன்மையானது என்று தெரியவில்லை. அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் புலிகளாலோ அல்லது மற்றவராலோ அச்சுறுத்தப்பட்டால் கண்டிப்பாக அமெரிக்க அரசிடம் புகார் செய்யலாம். நடவடிக்கை நிச்சயம். ஆனால் தற்சமயம் அமெரிக்கர்கள் கவனம் இசுலாமிய தீவிரவாதிகள் மேல் உள்ளதால் புலிகள் அபாயம் அலட்சியப்படுத்தப்படும் தோற்றம் இருக்கிறது.
மலையகத்தமிழன்
1) தன்னையே கொல்ல திட்டமிட்ட பிரபாகரனையும் மன்னித்து, ஈழத்தில் அவனால் கஷ்டப்படும் தமிழ் மக்கள் மீது கூட இலங்கை ராணுவம் கொலைகளை செய்துவிடக்கூடாது என்று இவ்வளவு முயற்சி எடுக்கும் கலைஞர் பாராட்டுக்குரியவர்தானே?
அதிமுக ஆட்சி சமயத்தில் மத்திய உளவுத்துறையிடமிருந்து வந்த இது பற்றிய எச்சரிக்கையை
தமிழக அரசு எடுத்ததாகவும், புலிகள் திமுகவில் முன்னிறுத்த முயன்றதாகக் கருதப்பட்ட வைகோ அதனாலேயே கட்சியிலிருந்து ஓரம் கட்டப்பட்டதாக செய்திகள் படித்துள்ளேன். தன்னை கொல்லத் திட்டமிட்ட பிரபாகரனை கலைஞர் மன்னித்தாரா என்பது பற்றி கூற என்னிடம் கருத்து இல்லை. ஆனால் ராஜீவை கொலை செய்வித்த பிரபாகரனையும் அவர் மன்னித்து விட்டாரா என்ற கேள்வியை உங்கள் கேள்வி அடுத்ததாக எழுப்புமே. ஏன் கலைஞர் மேல் இந்த கொலை வெறி உங்களுக்கு?
2) கிழக்கிலங்கையில் இலங்கை ராணுவம் வெற்றிகொண்டபோது இவ்வளவு கூப்பாடு போடாத வெளிநாட்டு வாழ் ஈழத்து தமிழர்களும், இந்தியாவில் இவ்வளவு பிரச்னைகளை தூண்டிவிடும் ஈழத்து தமிழர்களும், வடக்கில் ராணுவம் பிரபாகரனையே நெருங்குவதாலேயே இவ்வளவு கூப்பாடு போடுகிறார்கள். ஆகையால், அடிப்படையில் யாழ்ப்பாணத்து மேலாதிக்கத்துக்காகத்தான் கூப்பாடு போடுகிறார்கள் என்று கூறலாமா?
பதில்: கண்டிப்பாக சொல்லலாம்.
3) சிங்கள பிரேமதாசா கொடுத்த பணத்துக்காக மற்ற இயக்கங்களில் இருந்த தமிழர்களை கொன்றொழித்த பிரபாகரன் துரோகியாகாமல் மற்ற இயக்கங்களில் இருந்தவர்கள் துரோகியானது எப்படி?
பதில்: பிரேமதாசா இதற்காக பணம் கொடுத்தார் என எங்கும் படித்ததில்லை. இருப்பினும் தன் சுயமுனைப்புடனேயே கொலைகளை செய்வித்து வரும் பிரபாகரனது பங்கை உங்கள் கேள்வி குறைத்து மதிப்பிடுகிறது என நினைக்கிறேன்.
4) நேற்றுவரை இந்தியத் தமிழர்களை கடுமையாக திட்டி வந்த ஒரு சில ஈழத்தவர்கள் (எல்லோரும் அல்ல) இன்று இந்தியாவின் ஆதரவு வேண்டி வாய் மூடி நிற்பதன் மர்மம் என்ன? வன்னியில் உண்மையிலேயே நிலைமை மோசம் என்பதாலா?
பதில்: 1987-ல் வந்த வாய்ப்பை தவறவிட்டு அச்சமயம் சிங்களவர்களும் புலிகளும் சகோதரர்கள், இந்திய அமைதிப்படை வெளியே செல்ல வேண்டும் என பிரேமதாசாவுடன் சேர்ந்து ஜல்லியடித்தவர்கள் இப்போது இந்திய ஆதரவை நாடுவது விந்தையே. அத்ற்கு நீங்கள் கூறுவது போல வன்னியில் நிலைமை மோசம் என்றுதான் கருத வேண்டியுள்ளது.
5) நேற்றுவரை புலிகளை கடுமையாக விமர்சனம் செய்துவந்த தா பாண்டியன் இன்று ஆதரவாக பேசுவதன் மர்மம் என்ன?
பதில்: அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.
6) இன்னும் 4 மாதத்தில் காலியாகப்போகும் பாராளுமன்றத்திலிருந்து ராஜினாமா பற்றி பேசும் கலைஞர், தமிழகத்து சட்டமன்றத்திலிருந்து எல்.எல்.ஏக்களை ராஜினாமா செய்ய சொல்வாரா?
பதில்: கெடுத்தீர்களே காரியத்தை. அப்புறம் அவர் குடும்பத்தாரிடம் அவர் பெறப்போகும் தாக்குதல்களை நீங்களா ஏற்கப் போகிறீர்கள்? நான் ஏற்கனவே கூறியது போல பதவியிழப்பு கலைஞருக்கு ஆகவே ஆகாது.
ஆனந்த குமார்:
1. விடுதலை புலிகள் இந்திய அமைதி படையை எதிர்த்து சண்டை போட சிங்கள ராணுவத்திடம் ஆயுதங்கள் பெற்றாற்களா? உண்மையாகவே நடந்த ஒன்றா?
பதில்: அவ்வாறு ஆயுதம் பெற்றது பற்றி தெரியாது. ஆனால் இருவருக்குமே இந்திய அமைதிப்படை ஆகாது என்பதில் சந்தேகம் இல்லை.
2. விடுதலைபுலிகள் நாங்களும் சிங்களவர்களும் சகோதரர்கள் மண்ணின் மைந்தர்கள் இந்தியர்கள் எங்கள் பிரச்சனையில் தலையிட வேண்டாம் என்று சொன்னார்களா? உண்மையில் நடந்த ஒன்றா?
பதில்: ஆமாம். அவ்வாறுதான் நடந்தது.
3. ஏன் விடுதலைபுலிகளை விமர்சிக்கும் நபர்களை தனி நபர் தாக்குதல்கள் அதிகமாக இருக்கிறது? பத்ரியின் சமீபத்திய பதிவில் கூட அவரை கேவலமாக தாக்கி பின்னோட்டங்கள் வருகின்றதே !! காரணம் என்ன? உண்மை சுடுமா?
பதில்: புலிகள் ஆதரவாளர்கள் சில சமயம் அவர்தம் செயல்முறைகளையும் கடைபிடிப்பதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?
4. திமுக + பாமக எம்பிகள் ராஜினாமா செய்தால் மத்தியில் காங்கிரஸ் அரசு கவிழும். அப்படி நேர்ந்தால் தமிழக அரசும் கவிழுமா?
பதில்: காங்கிரஸ், திமுக மற்றும் பாமக கட்சிகள் நாயர் புலிவாலை பிடித்த நிலையில் உள்ளனர். மத்திய அரசு கவிழாது என்றுதான் நினக்கிறேன். ஏனெனில் இன்னும் இருப்பது ஆறு மாதங்களுக்கும் குறைவாகவே. ஆனால் தமிழக அரசோ இன்னும் சுமார் மூன்று ஆண்டுகள் பதவியில் இருந்தாக வேண்டும். காங்கிரஸ், திமுக கூட்டணி வாய்ப்பே இல்லையென்றால் நீங்கள் சொல்வது நடக்கக் கூடும். பாமகாவை பொருத்தவரை அதன் நிலை ஐயோ பாவமே.
5. புலம்பெயர்ந்த கவிஞர் ஒருவர் சென்னையில் வசித்த வரை புலிகள் வேறு தமிழ் மக்கள் வேறு அனைத்து தமிழ் மக்களும் புலிகள் அல்ல என்று சொல்லி வந்தார். இன்று தன் புலம் பெயர்ந்த நாட்டுக்கு சென்ற பின்னர் புலிகளை விமர்சிப்பர்களை வசை பாடுகிறார். இதை போல இரட்டை நாக்கோடு பேசுவதின் காரணம் என்ன?
பதில்: யார் அவர் என்பதை அறியேன். அவருக்கு என்ன நிர்ப்பந்தமோ என்பதையும் ஆகவே அறியேன்.
6. புலிகள் நம்ப கூடியவர்களா?
பதில்: இல்லை
7. புலிகள் சபாரத்தினம், அமிர்தலிங்கம் போன்ற எண்ணற்ற தமிழ் தலைவர்களை கொன்றது ஏன்?
பதில்: ஈகோ.
8. புலிகளை எதிர்பவர்கள் எப்படி தமிழ் துரோகி ஆகிறார்கள்? அனைத்து மாற்று கருத்து கொண்ட தமிழர்களை கொன்ற பிரபாகரன் எப்படி தேசிய தலைவர் ஆனார்?
பதில்: எதிரிகளைக் கொன்றதன் பின்னால் மீதி இருப்பவர்கள் ஒன்று நண்பர்களாக இருக்க வேண்டும் அல்லது நமக்கேன் வம்பு என ஒதுங்கியிருக்க வேண்டும். தலைவனாக பிறகு என்ன தடை?
9. இட ஒதுக்கீடு தான் இந்த பிரச்சனைக்கு காரணமாமே உண்மையா?
பதில்: இதென்ன புதுக்கதை? இக்கேள்வி இங்கு எப்படி வந்தது?
10. மலையக தமிழர்கள் யாழ்பாண தமிழர்களால் அடிமையாக நடத்தப்படுகிறார்களா?
பதில்: இலங்கை தமிழர் சிக்கல் ஒரு இடியாப்பச் சிக்கல். மட்டக்களப்பு தமிழருக்கும் யாழ்ப்பாணத் தமிழருக்கும் ஆகாது. இசுலாமியருக்கும் புலிகளுக்கும் ஆகாது. இன்னும் யாருக்கும் யாருக்கும் ஆகாது என்பது தெளிவாக இல்லை.
11. ஏன் புலம் பெயர்ந்த தமிழர்களில் 90% யாழ்பாண வாசிகளாகவே இருக்கிறார்கள்?? கிழக்கு தமிழர்களோ அல்லது மலையக தமிழர்களோ ஏன் யாழ்பாண தமிழர்களை போல அகதி அந்தஸ்து கேட்பதில்லை?
பதில்: மேலே உள்ள கேள்வியிலேயே இதற்கு பதில் உள்ளதோ?
12. கொழும்பில் பல லட்சம் தமிழர்கள் இருக்கிறார்களாமே, தமிழ் ஈழம் கிடைத்தால் அவர்கள் கதி என்ன?
பதில்: யாருக்கு தீமையோ தெரியாது. ஆனால் இப்போதைய சூழ்நிலையில் தமிழ் ஈழம் கிடைப்பது புலிகளின் நலனுக்கு மட்டுமே உரியது என நினைக்கிறேன்.
இரணியன்
1. வைகோ கைது நாடகமா? கூட்டணியை உடைக்கும் முயற்ச்சியா?
பதில்: எது எப்படியாயினும் வைகோ பேசியது இந்திய இறையாண்மைக்கு விரோதமானது. அவர் கைது செய்யப்பட்டது ஆச்சரியமே இல்லை. ஆனால் இதனால் கூட்டணி உடையாது என்று வைகோவே கூறியதாகவே அறிகிறேன்.
2. அமீர், சீமான் போன்றவர்களை இது வரை கைது செய்யாமல் இருப்பது சரியா?
பதில்: அவர்களையும் கைது செய்தாயிற்று.
3. புலிகளை ஆதரித்து இணையத்தில் வரும் பதிவுகள், இந்திய அரசால் தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்து இந்தியாவில் இருந்து பதிவு செய்பவர்களை தண்டிக்க முடியுமா? புகார் கொடுப்பது எப்படி?
பதில்: முடியும், ஆனால் தேவையில்லை என்றுதான் நினைக்கிறேன். அவர்களும் தம் கருத்தை கூறுகின்றனர். பெர்சனலாக இதில் நான் குறை ஏதும் காணவில்லை.
4. புலிகளின் தலைவர் மட்டும் ஏன் தன் பிள்ளைகளை தற்கொலை படையாக மாற்றவில்லை?
பதில்: ஊரான் வீட்டு நெய்யே, என் பெண்டாட்டி கையே.
5. புலிகள் தலைவர் பிரபாகரன் தன் மனைவியை கடத்தி வந்து கட்டாய திருமணம் செய்தாரா?
பதில்: அவர் திருமணம் நடந்து பல ஆண்டுகள் கடந்து, அவருக்கு வளர்ந்த பிள்ளைகளும் இருக்கும்போது இக்கேள்வியே தேவையற்றது.
பாண்டியன் நக்கீரன்:
1. இலங்கை இனப் படுகொலையை பற்றி?
பதில்: தனிப்பட்டவர்களது துயரத்தைப் பார்க்கும் போது மனம் வருத்தமடைகிறது.
2. கலைஞரின் இனம் காக்கும் புனிதப் போரில் ஆட்சி அதிகாரத்தையே தூக்கி எறியத் துணிந்த துணிவு?
பதில்: தியாகம் என்றால் இதுதான் தியாகம். இரண்டரை ஆண்டுகள் மீதியுள்ள மாநில முதல்வர் பதவியையோ, அதைத் தெருகின்ற அரசையோ, அதற்கு ஆதரவு அளிக்கின்ற எம்.எல்.ஏக்களையோ விட்டுவிடவில்லை. ஆறு மாத காலம் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளக்கூடிய மந்திரிப் பதவிகளை விட்டு விடவில்லை. இன்னும் மிஞ்சிப் போனால் ஆறு மாதங்களே இருக்கப் போகும் எம்.பி. பதவிகளை மட்டும் துறந்தார். இன்று அதுவும் இல்லை என ஆகிவிட்டது. ஆமாம், நீங்கள் என்ன தியாகத்தைப் பற்றிப் பேசுகிறீர்கள்?
3. பிரிவினை வாதம் தூண்டப் படுவதாக வந்த குற்ற்ச்சாட்டில் கைதுகள் நியாயமா?
பதில்: நியாயமே
4. தமிழ்நாட்டு மக்களின் இன எழுச்சிகண்டு நடுவண் அரசின் கிடுகிடு நடவடிக்கைகள், எப்படி?
பதில்: அவரவர் அரசியல் நிர்ப்பந்தம் அவரவருக்கு.
5. இலங்கை அரசே முன்வந்து நாம் கொடுக்கும் நிவாரண உதவிகளை தமிழ் மக்களுக்கு கொடுப்பது பற்றி?
பதில்: இலங்கை அரசின் மீது ராஜீயரீதியான நிர்ப்பந்தங்கள் வைக்கப்பட வேண்டும். அதுவும் இந்திய நலனுக்கு உட்பட்டே இருக்க வேண்டும்.
6. இந்த சமயத்திலும் அரசியல் லாபம் பார்க்க துடிக்கும் ஜெயலலிதா அவர்கள் பற்றி?
பதில்: அவரும் அரசியல்வாதி என்பதை மறக்கலாகாது. அதே சமயம் புலிகள் அபாயத்தை தடுக்க நடவடிக்கைகளை துணிந்து எடுக்க அவரை விட்டால் வேறு ஆள் இல்லை என்பதும் உண்மையே.
7. இதிலும் பிராமண துவேஷம் காட்டுவோர் பற்றி?
பதில்: அப்படி காட்டாமல் இருந்தால்தான் ஆச்சரியம்.
8. சினிமா நடிகர்கள் எழுச்சி எப்படி?
பதில்: என்ன எழுச்சி? அவர்கள் மேல் நிர்ப்பந்தம் பிரயோகிக்கப்படுவதாகத்தான் எனக்கு படுகிறது.
9. வைகோ அரசியல் கதை?
பதில்: இருதலைக் கொள்ளி எறும்புக்கு உதாரணம் அவர்.
10. மீண்டும் இலங்கை தமிழர் நலன் காக்கும்,கலைஞர் அரசின், நிதி திரட்டும் திட்டம்?
பதில்: பொறுத்திருந்து பார்ப்போம், நிதி திரட்டல் எவ்வாறு நிறைவேற்றப்படுகிறது என்று.
இலங்கை சம்பந்தமான கேள்வி பதில்கள் அடங்கிய இந்த சிறப்புப் பதிவு நிறைவு பெற்றது.
வரும் வெள்ளியன்று மற்ற கேள்வி பதில்களுடன் சந்திப்போம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஐந்து முகங்கள் – கடிதம்
-
அன்புள்ள ஆசிரியருக்கு , வணக்கம். உலகப் பேரிலக்கியங்களில் ஒன்றான வெண்முரசு
– பிரயாகையுடனான எனது முதல் பயணம் இன்றுடன் இனிதே நிறைவுற்றது. வெண்முரசு
தாங்கள்...
9 hours ago
26 comments:
Even if the UPA govt falls now, the usual things will go on, as Manmohan would be the caretaker PM and based on EC, I think the possible election date could in Feb, which is what they are expecting to be done now!
//நிதி திரட்டும் திட்டம்?//
நிதி திரட்டி நேரடியாக விடுதலை புலிகளிடம் வழங்காமல், அவர்களுக்கு ஆதரவான சமூக சேவை (போலி )அமைப்பிடம் அவர்கள் ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் வாங்குவதற்காக வழங்கப்படும் !
//அருப்புக்கோட்டை பாஸ்கர் said...
//நிதி திரட்டும் திட்டம்?//
நிதி திரட்டி நேரடியாக விடுதலை புலிகளிடம் வழங்காமல், அவர்களுக்கு ஆதரவான சமூக சேவை (போலி )அமைப்பிடம் அவர்கள் ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் வாங்குவதற்காக வழங்கப்படும் !//
mgr ரசிகரே தமிழ் உணர்வினை சந்தேகம் கொள்ள வேண்டாம்.
தமிழினத் தலைவர் கலைஞர் அவ்ர்கள் தனது 50 ஆண்டு காலப் பொது வாழ்வில் பெற்ற அனைத்து அனுபவங்களையும் வைத்து ,இன்று நிலவும் அரசியல் அசாதாரண சூழ்நிலையினை கருத்தில் கொண்டு ,ஆதிக்க சக்திகளும் மதச் சார்பு சக்திகளும் இதில் குளிர் காய விடல் கூடாது ,என்ற திண்ணிய எண்ணத்துடன்,மிகவும் மனக் கலக்கத்துடன் தான் ராஜினமா எனும் முடிவை ஒத்தி வைத்துள்ளார்கள்.இதை தந்தை பெரியாரின் அன்புக்கு பாத்திரமான இனமானச் சிங்கம் தங்க நிகர் தலைவன் கொள்கை கோமகன் ,தமிழ் இனம் காக்கும் சமதர்மப் போராளி வீரமணி அவர்களே இதை சரியான ராஜ தந்திர நடவடிக்கை எனப் பாராட்டியுள்ளார்.
காக்காய் வாய்திறந்து கா கா எனக் கத்தும் ஆட்சி எனும் வடை கீழே விழும் , திருடலாம் எனும் நரி போல் காத்துகிடக்கும் தமிழின விரோதிகளை ஒரு போதும் தமிழ் இனம் இனி ஒரு முறை ஏமாந்து ஏற்காது.
வாழ்க கலைஞ்ர்
வாழ்க தமிழினம்
வாழ்க தமிழ்
வெல்க அவர் ராஜ தந்திரம்
ஒங்குக அவர் புகழ்
-கழகத் தொண்டன்
//9. இட ஒதுக்கீடு தான் இந்த பிரச்சனைக்கு காரணமாமே உண்மையா?
பதில்: இதென்ன புதுக்கதை? இக்கேள்வி இங்கு எப்படி வந்தது?//
டோண்டு சார், இலங்கையில் வட பகுதியில் வசிக்கும் மக்கள் பொருளாதார ரீதியாக வளமாகவும் மற்ற பகுதியில் இருந்தவர்கள் நிலை அவர்களை விட குறைவாக இருந்ததால் மற்ற பகுதி மக்களும் முன்னேற இட ஒதுக்கீடு திட்டம் கொண்டு வரபட்டது.
From wikipedia
In 1973 the policy of standardization was implemented by the Sri Lankan government to what they believed was to rectify disparities created in university enrollment in Sri Lanka under British colonial rule. It was in essence an affirmative action scheme to assist geographically disadvantaged students to gain tertiary education. The resultant benefits enjoyed by Sinhalese students also meant a significant fall in the number of Tamil students within the Sri Lankan university student populace.[10]
http://en.wikipedia.org/wiki/Origins_of_the_Sri_Lankan_civil_war
இதில் பாதிக்கபட்டது யாழ்பாண மக்கள் பலன் அடைந்தது மற்ற பகுதி மக்கள்.ஏன் கிழக்கில் இருக்கும் தமிழர்கள் கூட இந்த திட்டத்தால் பயன் அடைந்தார்கள்.
இலங்கை பிரச்சனைக்கு இதுவும் ஒரு காரணமே.
இன்றைய நிலையில் யாழ்பாணத்தில் வசிப்போர் தான் இதே இட ஒதுக்கீட்டால் அதிக பயன் அடைகின்றனர். காரணம் போரின் காரணமாக மிகவும் பாதிக்கபட்ட பகுதி என்று அறிவிக்கபட்டு இன்று யாழ்பாண பகுதி மக்கள் இட ஒதுக்கீடு பெருகின்றனர்.
( இந்த செய்தியில் தவறு ஏதும் இருந்தால் மன்னிக்கவும், நானும் இணையத்தில் படித்து + திருச்சி இலங்கை தமிழ் நண்பர்களிடம் கேட்டு தெரிந்து கொள்பவன் தான். சரியான தகவல் இருந்தால் அதை தெரியபடுத்தவும்)
ஏன் புலம் பெயர்ந்த தமிழர்களில் 90% யாழ்பாண வாசிகளாகவே இருக்கிறார்கள்?? கிழக்கு தமிழர்களோ அல்லது மலையக தமிழர்களோ ஏன் யாழ்பாண தமிழர்களை போல அகதி அந்தஸ்து கேட்பதில்லை?
அடிக்கடி இப்படியான கேள்விகளுக்கு எதிர்பார்க்கப்படும் பதில்களைக் கொடுத்து உங்கள் அறிவுஞானத்தினைக் காட்டுங்கள். சட்டியிலே இருக்கவேண்டும்.
//அடிக்கடி இப்படியான கேள்விகளுக்கு எதிர்பார்க்கப்படும் பதில்களைக் கொடுத்து உங்கள் அறிவுஞானத்தினைக் காட்டுங்கள். சட்டியிலே இருக்கவேண்டும்.//
பிரித்தானியாவிலும் கனடாவிலும் எந்த பிரதேச தமிழ் மக்கள் வாழ்கிறார்கள்? மடையா புலி ஏஜேண்ட் ராவுவுக்கு வந்து வசூல் செய்யும் டோலர் கொடுத்து கணக்கை தீர்த்து விடு
நிதி திரட்டி நேரடியாக விடுதலை புலிகளிடம் வழங்காமல், அவர்களுக்கு ஆதரவான சமூக சேவை (போலி )அமைப்பிடம் அவர்கள் ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் வாங்குவதற்காக வழங்கப்படும் !//
mgr ரசிகரே தமிழ் உணர்வினை சந்தேகம் கொள்ள வேண்டாம்.
தமிழினத் தலைவர் கலைஞர் அவ்ர்கள் தனது 50 ஆண்டு காலப் பொது வாழ்வில் பெற்ற அனைத்து அனுபவங்களையும் வைத்து ,இன்று நிலவும் அரசியல் அசாதாரண சூழ்நிலையினை கருத்தில் கொண்டு ,ஆதிக்க சக்திகளும் மதச் சார்பு சக்திகளும் இதில் குளிர் காய விடல் கூடாது ,என்ற திண்ணிய எண்ணத்துடன்,மிகவும் மனக் கலக்கத்துடன் தான் ராஜினமா எனும் முடிவை ஒத்தி வைத்துள்ளார்கள்.இதை தந்தை பெரியாரின் அன்புக்கு பாத்திரமான இனமானச் சிங்கம் தங்க நிகர் தலைவன் கொள்கை கோமகன் ,தமிழ் இனம் காக்கும் சமதர்மப் போராளி வீரமணி அவர்களே இதை சரியான ராஜ தந்திர நடவடிக்கை எனப் பாராட்டியுள்ளார்.
காக்காய் வாய்திறந்து கா கா எனக் கத்தும் ஆட்சி எனும் வடை கீழே விழும் , திருடலாம் எனும் நரி போல் காத்துகிடக்கும் தமிழின விரோதிகளை ஒரு போதும் தமிழ் இனம் இனி ஒரு முறை ஏமாந்து ஏற்காது.
வாழ்க கலைஞ்ர்
வாழ்க தமிழினம்
வாழ்க தமிழ்
வெல்க அவர் ராஜ தந்திரம்
ஒங்குக அவர் புகழ்
ஆஹா! ஓஹோ! பேஷ்! பேஷ்!
//டோண்டு சார், இலங்கையில் வட பகுதியில் வசிக்கும் மக்கள் பொருளாதார ரீதியாக வளமாகவும் மற்ற பகுதியில் இருந்தவர்கள் நிலை அவர்களை விட குறைவாக இருந்ததால் மற்ற பகுதி மக்களும் முன்னேற இட ஒதுக்கீடு திட்டம் கொண்டு வரபட்டது.//
இங்குள்ள பிராமணர் நிலைமையும் அங்குள்ள யாழ்பாணத்தமிழர் குறிப்பாக வேளாளர், நிலைமையும் ஒன்றுதான். இருவரும் கல்வி அறிவில் சிறந்து விளங்கினர். இவ்வினத்தவர் பலர் ஆங்கிலேயனுக்கு கொடி பிடித்து பட்டம் பதவி வாங்கினர். ஆனால் சுதந்திரத்திற்கு பின்பு வந்த அரசுகள் சமுகநீதியை (?) நிலைநாட்ட முற்பட்டன. இதனால் ஆண்டு அனுபவித்துக் கொண்டிருந்த் இவ்விரு இனத்தவரும் பாதிக்கப்பட்டனர்.
இங்குள்ள திராவிட அமைப்புகள் அங்கு சிங்கள அமைப்புகள் செய்த இடஒதுக்கீடு பெரும்பானமையினர் நலம் போன்றவை பாசிசம் என்கின்றன. ஆனால் அதையே தமிழ்நாட்டில் பிராமணர்களுக்கு எதிராக செயல்படுத்த முனைகின்றன. ஆக இது இனச்சண்டை இதில் யாரும் புனிதர் இல்லை. அனைவரும் பாசிஸ்டுகளே ஈழதமிழன் சிங்களன் திராவிடன் பிராமணன், ஆல் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே. ஊறீய அள்வில்தான் வித்தியாசம்!!!
//நிதி திரட்டி நேரடியாக விடுதலை புலிகளிடம் வழங்காமல், அவர்களுக்கு ஆதரவான சமூக சேவை (போலி )அமைப்பிடம் அவர்கள் ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் வாங்குவதற்காக வழங்கப்படும் !//
அருப்புக்கோட்டை பாஸ்கர் நீங்களும் டோண்டு அவர்கள் மாதிரி புலியை பற்றி நன்றாகவே உண்மைகளை அறிந்துள்ளீர்கள்.
//வாழ்க கலைஞ்ர்
வாழ்க தமிழினம்
வாழ்க தமிழ்
வெல்க அவர் ராஜ தந்திரம்
ஒங்குக அவர் புகழ்
ஆஹா! ஓஹோ! பேஷ்! பேஷ்!//
.).)).)))
வேதனையால் விழிநீர் பெருக்கி வாடிக்கொண்டிருக்கும் இலங்கை வாழ் தமிழ் சகோதரர் சகோதரிகளின் இன்னல் களைய ,துயர் துடைக்க நடுவணரசின் துணையோடு தமிழினத் தலைவர் கலைஞரின் அன்பு வேண்டுகோளை ஏற்று தமிழ்க அரசு திரட்டும் புனிதப் பணியாம் நலநிதித் திரட்டிற்கு இதுவரை ரூபாய் 33,06,750
குவிந்துள்ளது.
தலைவர் அவர்களின் புண்ணியக் கரங்களால் தந்து ,சொந்த பணத்தில் 10 லட்ச்ம் கொடுத்து , தொடங்கிய அரும் பணியை நாடே பார்த்து பாரட்டுகிறது.
இச்சமயத்தில் விமர்சனங்களை தவிர்த்து
தமிழர் நலம் காக்க அவரது சீரிய தலைமையில் ஒன்றுபடுவோம் நண்பர்களே.
-கழகத் தொண்டன்
\\புனிதப் பணியாம் நலநிதித் திரட்டிற்கு இதுவரை ரூபாய் 33,06,750
குவிந்துள்ளது//
இத வச்சு என்ன பண்றது? ஏ கே 47 க்கு ரவை கூட வாங்க முடியாதே?
\\சொந்த பணத்தில் 10 லட்ச்ம் கொடுத்து//
வெறும் 10 லட்சம் குடுக்குற தலைவரு ஏன் தன்னோட சொத்தையெல்லாம் (உழைச்சு சம்பாதிச்ச) குடுக்கலை? தமிழர் துயர் துடைக்க இது கூட செய்யக் கூடாதா? ஒரு வேளை இத்தனை வருஷத்துல உண்மையாவே உழைச்சு சம்பாதிச்சது 10 லட்ச ரூபாய்கள்தான்னு அதைக் குடுக்குறாரா தமிழினத்தின் தன்னிகரற்ற தலைவரு?
//புனிதப் பணியாம் நலநிதித் திரட்டிற்கு இதுவரை ரூபாய் 33,06,750
குவிந்துள்ளது//
இத வச்சு என்ன பண்றது? ஏ கே 47 க்கு ரவை கூட வாங்க முடியாதே? //
சிறுதுளி பெருவெள்ளமாய் பெருக்கெடுத்து தமிழர் நலம் காக்கும் வேள்வியில் ,இச்சமயத்தில் தேவையற்ற விமர்சனங்களை தவிர்க்கவும்
அன்பரே.
லட்சங்கள் பெருகி பலகோடி ரூபாயாய் சேர்ந்து,துன்பப்படும் இலங்கை தமிழர் துயர் துடைக்கப்படப்போவது உறுதி.
திரைபடத் துறையினரும்,அரசு உழியர்களும்,பொதுத்துறை உழியர்களும்,வணிகப் பெருமக்களும்,அரசியல் கட்சிகளும்,சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமிழக அரசிடம் நிதி அளிக்க உறுதி பூண்டுள்ளனர் என்ற தகவ்ல் வரத்தொடங்கிஉள்ளது நண்பரே.( நடிகர்கள் ஒரு சிலர் ஒரு கோடி வரை தர இருப்பதாக செய்திகள்) .
தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அவனுக்கொரு குணமுண்டு
அதுதான் தரணிபோற்றும் தாராள மனது
வாழ்க தமிழர் ஒற்றுமை
வெல்க தமிழர் இனம்.
1. சில மாநிலங்களில் பிற மாநிலத்தவரை தாக்கி உயிர் பலிகூட ஆவதாக செய்திகள் .இது பற்றி?
2.மத்திய அரசின் திடீர் இடது சாரிப் பாசம் பற்றி?
3.பாஜக வின் ஆட்சி வாய்ப்பு பற்றி?
4.ரஜினியின் அரசியல் பிரவேச கண்ணாமூச்சு ஆட்டம் பற்றி?
5.விஜய் ராஜேந்த்ரரின் திடீர் திமுக பாசம் பற்றி?
6.பாரதிராஜா வின் தமிழ் இன உணர்வு பற்றி?
7.நடிகர்களின் 1 ந்தேதி உண்ணாவிரதமுயற்சி பற்றி?
8.சு.சாமி அலுவலகம் தக்கப் பட்டது பற்றி?
9.தயாநிதி கலைஞர் சமிபத்திய சந்திப்பு ( அழ்கிரியை மீறி)பற்றி?
10.பங்கு வணிகத்தில் வெளிநாட்டாரின் சித்து விளையாட்டு பற்றி?
11.லக்கிலுக் பதிவாளருக்கும் ஒரு சில பதிவாளருக்கும் உள்ள கருத்து மோதல் பற்றி?
12.மீண்டும் போலிகளின் நடமாட்டம் பற்றி?
13.வார்த்தை பிரயோகங்கள் அத்துமீறல் பற்றி?
14.சன் டீவி நிர்வாகம் திரைப் படங்களை வாங்குவது( அதீத விளப்பரம்) பற்றி?
15.கலைஞரின் சமாதான முடிவு(இலங்கை) பற்றி?
16.வீட்டு விலைகள் 40-50 % குறையலாம் என்பது பற்றி?
17.பங்கு வர்த்தகம் கவிழ்ந்தது பற்றி?
18.நிதிஅமைச்சரின் சமாதானம்( இந்தியப் பொருளாதர சம்ன்நிலை)பற்றி?
18.பெட்ரோல் விலை குறைப்பு இழுத்தடிப்பு பற்றி?
19.ஓபமாவின் இந்திய எதிர்ப்பு நிலை
பற்றி?
20.தமிழ்மணத்தில் நிலவும் இன்றய சூழ்நிலை பற்றி?
please comment in dondu style
1.sudden arrest of directors ameer &seeman after the speech of jeyalalitha?
2. viduthalaipuli's threat rumour to jeyalalitha?
3.is it true that all brahmin journalists are against srilanka tamils?
4.disputed remarks by actor ajit/arjun about srilankan tamils?
5.rajinikanth is going to condut a separate fast in support of tamils?
request to all good supporters.
please stop your quarrels and unite under the leadership of our great tamil leader karunanithi.
it is the right time to donate liberally to chief minister's releif fund.
now in srilanka the tamils, our brothers are suffering .
please unite
please help
please forget the past.
please awake arise and unite to help the needy people.
both central and state government ruling parties are trying their best to do good to tamils of sri lanka.
now tamil nadu is standing as one man under the the great laeadership of our beloved.chief minister.
please request other polical leaders also to support our C.M in this case.
"onru paddaal uNdu vaazvu
nammil orrumai neenkiil
anaivarukkum thaazvu''
long live kalaigar
long live tamils
//நேரடியாக கொல்வதோடு மட்டுமின்றி அப்பாவி மக்களையும் கேடயமாக்கி தாம் தப்பிக்க முயலுகின்றனர்//
ஆமாம். டோண்டு அவர்கள்தான் நேரில் சென்று பார்த்து வந்த்துள்ளார். மற்றவர்களெல்லாம் முட்டாள்கள்.
கோமணகிருஷ்ணன்
//ஆனால் அதையே தமிழ்நாட்டில் பிராமணர்களுக்கு எதிராக செயல்படுத்த முனைகின்றன//
பார்ப்பான்தானே இலங்கை தமிழர் நலனுக்கெதிராக பேசுகிறான்? மற்ற யாராவது பேசுகிறார்களா?
கோமணகிருஷ்ணன்
//வெறும் 10 லட்சம் குடுக்குற தலைவரு ஏன் தன்னோட சொத்தையெல்லாம் (உழைச்சு சம்பாதிச்ச) குடுக்கலை? தமிழர் துயர் துடைக்க இது கூட செய்யக் கூடாதா? ஒரு வேளை இத்தனை வருஷத்துல உண்மையாவே உழைச்சு சம்பாதிச்சது 10 லட்ச ரூபாய்கள்தான்னு அதைக் குடுக்குறாரா தமிழினத்தின் தன்னிகரற்ற தலைவரு?//
தமிழினத்தலைவர் மட்டுமல்ல, மானமிகு அய்யா வீரமணி போன்றவர்களும் வெறும் பணத்தை மட்டுமல்ல உயிரையும் கொடுக்க தயாராக உள்ளனர். இந்த வெண்ணைகளுக்கு கிண்டலடிக்கத்தானே தெரியும்?
கோமணகிருஷ்ணன்
Respected dondu sir,
for the past 1 hour i am very much moved by the short storey telecasted by jeya t.v about the life history of "pasumpon thevar thirumaganar aruLmiku muthturamalinga thevar ".
as per the sotory thevar perumaganar
lost his breath in the year 1962.
But in the storey they have not disclosed many things.
could you please enlighten the younger people about the noble life of thirumaganar by your kind writing.
clarify the following doubts.
1.healthy man's sudden illness
2. murder case against him-details and truths( finally he is proved to be honest)
3.with huge mass support why he could not become the c.m of t.nadu
4.kamaraj was introduced by thevar to politics.is it true?
5.if so what is the reason for misunderstanding.between two?
6.who is immanuvel( explain ).- it is narrated -that inconnection with his murder case some 18 people killed by police while controlling the cast clashes)
is it true?
7.where is nethagi?is he alive still?
8.thevar communithy vote strength is more than 1 crore(told by polical parties)is it true?
9.if so then why thevars party forward blog is not in good strength?
10. admk is complertely dominated ( more than 80 %followers ofjeyalaltha)by thevar community? is it true ?
( hint:if time permits please write the life history of all leadres of our tamilnadu enabling the young people to know the sacrifices of all )
( important events and their sacrifices)
1.kamaraj
2.kaakangi
3.rajaji
4.devarji
5.rv gi
6.v.o.c
after writing ask others to follow as " thodar pathivu" which will give out many unknown informations about our noble @dedicated leaders to all, which is needed at present
//வெறும் 10 லட்சம் குடுக்குற தலைவரு ஏன் தன்னோட சொத்தையெல்லாம் (உழைச்சு சம்பாதிச்ச) குடுக்கலை? தமிழர் துயர் துடைக்க இது கூட செய்யக் கூடாதா? ஒரு வேளை இத்தனை வருஷத்துல உண்மையாவே உழைச்சு சம்பாதிச்சது 10 லட்ச ரூபாய்கள்தான்னு அதைக் குடுக்குறாரா தமிழினத்தின் தன்னிகரற்ற தலைவரு?//
தமிழினத்தலைவர் மட்டுமல்ல, மானமிகு அய்யா வீரமணி போன்றவர்களும் வெறும் பணத்தை மட்டுமல்ல உயிரையும் கொடுக்க தயாராக உள்ளனர். இந்த வெண்ணைகளுக்கு கிண்டலடிக்கத்தானே தெரியும்?
கோமணகிருஷ்ணன்//
கேக்குறவன் கேனையனா இருந்தா உயிர் மட்டும் இல்ல கோமணா, *யிரையும் தாராளமா குடுப்பாங்க. இருந்தாத்தானே குடுக்குறதுக்குங்குறது வேற விசயம். அப்படியே இவ்ளோ நாளா *யிர் குடுக்காத தமிழ் இன/மான தலைவர்கள் எல்லாரும் எந்த லோகத்துல இருந்தாங்கன்னும் கொஞ்சம் சொல்லு கோமணா. கோமணகிரிஷ்ணனோட கோவணத்த ஒரு நாள் இவங்க உருவும்போது கோமணாவுக்கு புத்தி வந்தா சரி. அப்பவும் வரலேன்னா அப்புறம் தமிழன்னு சொல்லிக்குறதுல அர்த்தம் இல்ல கோமணா.
விடுதலைப்புலிகளை எதிர்ப்பவர்களில் பெரும்பாலானவர்கள் பார்ப்பனர்களாக இருப்பது ஏன்? உதா. சோ, ஜெயலலிதா,"இந்து" ராம், சுப்ரமனியசாமி, டோண்டு மாமா.
விடுதலைப்புலிகள் தங்களை எதிர்த்த பார்ப்பனரல்லாத ஏராளமானவர்களை கொன்று குவித்துள்ளார்கள். உதாரணம், அமிர்தலிங்கம், துரையப்பா, சிறிசபா, கேதீஸ்வரன், நீலன் திருச்செல்வம், கதிர்காமர் இன்னும் கணக்கிலடங்காத ஏராளமானவர்கள்.
விடுதலைப்புலிகள் தங்களை எதிர்ப்பவர்களில் பார்ப்பனர்களை மட்டும் கொல்லாமல் விட்டுவைப்பது ஏன்? உதாரணம் சோ, ஜெயலலிதா,"இந்து" ராம், சுப்ரமனியசாமி
//விடுதலைப்புலிகளை எதிர்ப்பவர்களில் பெரும்பாலானவர்கள் பார்ப்பனர்களாக இருப்பது ஏன்? உதா. சோ, ஜெயலலிதா,"இந்து" ராம், சுப்ரமனியசாமி, டோண்டு மாமா.//
காரணம் ரொம்ப சிம்பிள். புலிகள் அசைவ விலங்கு. இவர்கள் தான் அசைவமேன்றாலே பிடிக்காதது போல நடிப்பவர்களாயிர்ரே. இந்த பதர்கள் விரும்புவார்கள் என்பதற்காக விடுதலை பசு என்றா பெயரை மாற்றி வைத்துக்கொள்ள முடியும்.
//விடுதலைப்புலிகள் தங்களை எதிர்ப்பவர்களில் பார்ப்பனர்களை மட்டும் கொல்லாமல் விட்டுவைப்பது ஏன்? உதாரணம் சோ, ஜெயலலிதா,"இந்து" ராம், சுப்ரமனியசாமி//
ஒருவேளை விடுதலை புலிகள் பார்ப்பன அடிவருடிகளாக இருக்கக்கூடுமோ?
சாதி பெயரைச் சொன்னால் நடவடிக்கை எடுக்கப்படலாம். ஆனால் பாப்பனியம் பாப்பனியம் என்று பேசும் பேச்சு ஏன் அப்படி எடுக்கப்படுவதில்லை?
உண்மையில் ஒருவரின் கருத்துக்கும் அவரின் சாதிக்கும் சம்பந்தம் இருக்கிறதா? உயர் சாதியென ஒதுக்கிவைக்கப்படுவர்கள் தாம் வி.பு எதிர்ப்பாளர்களா?
Post a Comment