இன்று வெளி வந்த 16.10.2008 தேதியிட்ட குமுதம் ரிப்போர்டரில் சன் டிவிக்கும் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும் நடந்த “காதலில் விழுந்தேன்” பட விளம்பரம் பற்றிய பிரச்சினையை பற்றி எழுதியிருக்கிறார்கள். முதலில் அதை பார்ப்போம்:
“ சன் டி.வி.யால் அலறும் கோடம்பாக்கம்' என்ற தலைப்பில் நாம் கடந்த 09.10.08 குமுதம் ரிப்போர்ட்டரில் வெளியிட்டிருந்த கவர் ஸ்டோரி நன்றாகவே வேலை செய்திருக்கிறது. `காதலில் விழுந்தேன்' என்ற சின்ன பட்ஜெட் படத்தை விலைக்கு வாங்கிய சன் குழுமத்தின் சன் பிக்சர்ஸ் நிறுவனம், அந்தப் பட விளம்பரத்தை சன் டி.வி.யில் திரும்பத் திரும்பப் போட்டு அதை பிரமாண்ட படம் என்பது போல சித்திரித்து விட்டது பற்றி திரைப்படத் தயாரிப்பாளர்கள் புலம்பிய புலம்பலை அதில் பதிவு செய்திருந்தோம்.
``பூனைக்கு மணி கட்டப்போவது யார்?'' என்ற எதிர்பார்ப்பில் இருந்த கோலிவுட் வட்டாரம், குமுதம் ரிப்போர்ட்டரில் அந்தச் செய்தியைப் படித்ததும் சுறுசுறுப்பானது. உச்சகட்டமாக அந்தச் செய்தியைப் படித்த முதல்வர் கலைஞர், திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளை அழைத்து `டோஸ்' விட்டாராம். ``தயாரிப்பாளர் சங்கம் நடுநிலையோடு நியாயமாக நடக்கும் என்று பார்த்தால் நீங்கள் சன் டி.வி.க்கு சாதகமாக, ஒருதலைப்பட்சமாகச் செயல்படுகிறீர்கள். தயாரிப்பாளர் சங்கத்தின் கட்டுப்பாடுகளை மீறி `காதலில் விழுந்தேன்' படத்துக்கு நிமிடத்துக்கு ஒரு விளம்பரம் `போட்டு அவர்கள் தாக்கி'க் கொண்டிருக்கிறார்களே'' என்று தன் ஆதங்கத்தைத் தெரிவித்தாராம் கலைஞர்.
நமது செய்தியில், ``சன் டி.வி.யின் அத்துமீறல் பற்றி இதுவரை யாரும் தங்களிடம் புகாராகத் தரவில்லை'' என்ற தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணனின் விளக்கத்தையும் வெளியிட்டிருந்தோம். இந்நிலையில், `புகார் தர ஆளில்லையா? ஏன் நான் இருக்கிறேன்' என்று நடிகர் - தயாரிப்பாளர் ஜே.கே. ரித்தீஸ், சன் டி.வி.யின் அத்துமீறலுக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கத்துக்கு தனது லெட்டர் பேடிலேயே புகார் எழுதிக் கொடுத்திருக்கிறார்.
அந்தப் புகாரைப் பெற்றுக் கொண்ட தயாரிப்பாளர் சங்கம், சன் டி.வி. விளம்பர விவகாரம் குறித்து விவாதிக்க கடந்த 6-ம்தேதி கவுன்சில் கூட்டத்தைக் கூட்டியது. அதில் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர், நடிகையர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அழையா விருந்தாளியாக சன் குழுமத்தின் துணைத் தலைவர் ஹன்ஸ்ராஜ் சக்ஸேனாவும் அந்தக் கூட்டத்துக்கு வந்துவிட, தயாரிப்பாளர் சங்கத்தில் சிறிய சலசலப்பு. அப்போது ``சன் டி.வி. பற்றிய விவாதத்தில் சன் குழுமம் தரப்பில் நான் கலந்து கொள்வதில் ஒன்றும் தவறில்லையே? இந்தக் கூட்டத்தில் என்னைக் கலந்து கொள்ளும்படி அனுப்பி வைத்ததே கலாநிதிமாறன்தான்'' என்று அவர் கையெழுத்திட்ட பரிந்துரைக் கடிதத்தைக் காட்டியிருக்கிறார் சக்ஸேனா.
அதன்பிறகு சங்கத் தலைவர் ராம நாராயணன் தலைமையில் கூட்டம் ஆரம்பமானது. அப்போது பேசிய ராம நாராயணன், ``சில ஆண்டுகளுக்கு முன் நான் தயாரித்த `ருத்ரநாகம்' என்ற படத்துக்கு அதிகப்படியான விளம்பரத்தை டி.வி.யில் கொடுத்துவிட்டேன். அதற்காக இங்கு மன்னிப்புக் கேட்பது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்'' என்றிருக்கிறார்.
அடுத்துப் பேசிய நடிகை குஷ்பு, ``ஒரு படத்துக்கு இவ்வளவு விளம்பரம் செய்ய வாய்ப்பிருக்கிறது என்றால், மற்ற படங்களுக்கும் அதன் தயாரிப்பாளர் விரும்பியபடி விளம்பரம் செய்ய நீங்கள் அனுமதிக்க வேண்டும். விளம்பர விஷயத்தில் இருக்கும் கட்டுப்பாடுகளைத் தளர்த்துங்கள்; அல்லது அந்தக் கட்டுப்பாடுகளை முறையாகப் பின்பற்றுங்கள்'' என்ற ரீதியில் பேசினார்.
காஜாமொய்தீன், `சரோஜா' படத் தயாரிப்பாளர் `அம்மா கிரியேஷன்' சிவா ஆகியோர் பேசும்போது, ``சன் டி.வி. தயாரித்த படத்துக்கு சன் டி.வி.யில் விளம்பரம் போடுவதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. படம் அவர்களுடையது, டி.வி.யும் அவர்களுடையது. இதில் தலையிட நமக்கென்ன உரிமை இருக்கிறது?'' என்று கேட்க, புகார் கொடுத்த ரித்தீஸோ, ``இவர்களது தயாரிப்பில் வெளியான படம் என்ற ஒரே காரணத்திற்காக அதுபற்றி சகட்டுமேனிக்கு விளம்பரப்படுத்தி மற்ற படங்களுக்கு பாரபட்சம் காட்டினால், ஓடிக்கொண்டிருக்கும் மற்ற நல்ல படங்கள் மக்கள் மத்தியில் இருட்டடிப்பு செய்யப்பட்டு, வர்த்தக ரீதியாக முடங்கிப் போய்விடும். சன் டி.வி. இன்னும் பல படங்களைத் தயாரிக்க உள்ள நிலையில், இனிமேல் சேனல்கள் தயாரிக்கும் படங்கள் மட்டுமே மக்கள் மத்தியில் எடுபடும். மற்ற படங்கள் வந்த சுவடே தெரியாமல் சுருண்டுவிடும். அதுமட்டுமின்றி, சேனல்கள் தங்கள் விரும்பம் போல் `டாப் 10' என்ற பெயரில் படங்களைத் தர வரிசைப்படுத்தி விமர்சிக்கிறார்கள். இவர்களின் விமர்சனமும் குறிப்பிட்ட அந்தப் படத்தின் மீது மக்கள் கொண்ட கருத்தும் கொஞ்சம் கூட பொருத்தமாக இருப்பதில்லை'' என்று தனது கருத்தைப் பலமாகவே பதிவு செய்தார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட சில இயக்குநர்கள் கடைசி வரை வாயைத் திறக்கவே இல்லை. ``நாங்கள் தயாரிக்கும் அடுத்தடுத்த படங்களில் நீங்கள்தான் இயக்குநர்கள்'' என்று அவர்களிடம் உத்தரவாதம் அளித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் கொக்கி போட்டுவிட்டதுதான் அதற்குக் காரணம் என்கிறார்கள் சிலர்.
கூட்ட நிகழ்வுகளால் சற்று ஆவேசமாகக் காணப்பட்ட சக்ஸேனா, ``யாரோ ஒரு நடிகர் புகார் தந்து விட்டார் என்பதற்காக இப்படி ஒரு கூட்டம் கூட்டி விவாதிக்கிறீர்களே? இதே படத்தை மதுரை, திண்டுக்கல் என சில இடங்களில் திரையிடவிடாமல் தியேட்டர் ஓனர்களுக்கு சிலர் மிரட்டல் விடுத்தபோது, இந்தத் தயாரிப்பாளர் சங்கம் என்ன செய்து கொண்டிருந்தது?'' என்று கேள்வி எழுப்பினார். `` `காதலில் விழுந்தேன்' படத்தை ரிலீஸ் செய்வதில் ஏற்பட்ட சிக்கல் குறித்து உங்கள் தரப்பில் இருந்து யாரும் எந்தப் புகாரும் தரவில்லையே?'' என்று ராம நாராயணன் கேட்டபோது ``ஏன்? அதுபற்றி பத்திரிகைகளில் வந்ததைப் பார்த்து நீங்கள் நடவடிக்கை எடுத்திருக்கலாமே?'' என்று எகிறியிருக்கிறார் சக்ஸேனா.
இந்த ரீதியில் நடந்த அந்தக் கூட்டத்தில் முழுமையான விவாதம் என்று எதுவும் நடைபெறவில்லை. மாறாக கூச்சலும் குழப்பமுமே மிஞ்சியது. இதனால் ``இப்பிரச்னை குறித்து தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழுவைக் கூட்டி, விவாதித்து முடிவெடுக்கப்படும்'' என்ற அறிவிப்போடு இந்தச் சர்ச்சைக்கு தாற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்தார் ராம நாராயணன்.
கூட்டம் முடிந்து வெளியே வந்த தயாரிப்பாளர்கள் சிலரிடம் பேச்சுக் கொடுத்தோம்.
``விளம்பரம் கொடுப்பது அவர்களின் சொந்த விருப்பமாக இருந்தாலும் மற்றவர்களின் வயிற்றில் அடிப்பதை எப்படி பொறுத்துக் கொள்ளமுடியும்? சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்களின் நிலைமையை உயர்த்திப் பிடிக்கும் வகையில் செய்தி வெளியிட்ட குமுதம் ரிப்போர்ட்டரினால்தான் இதுபோன்ற ஒரு விவாதமே தொடங்கியி ருக்கிறது. அந்த வகையில் குமுதம் ரிப்போர்ட்டருக்கு நாங்கள் நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்!
பொதுக்குழுவிலும் இப்பிரச்னை குறித்து தெளிவாக எங்கள் கருத்தை முன்வைப்போம். அதையொட்டி குமுதம் ரிப்போர்ட்டரில் வந்த செய்தியை நகல் எடுத்து அனைத்துத் தயாரிப்பாளர்களுக்கும் அனுப்பி வைக்கும் வேலை மும்முரமாக நடந்து வருகிறது'' என்று சிலாகித்தார்கள் அவர்கள்.
எப்படியோ நல்லது நடந்தால் சரிதான்”!
நன்றி: குமுதம் ரிப்போர்டர்.
இந்த அழகில் கருணாநிதி ``தயாரிப்பாளர் சங்கம் நடுநிலையோடு நியாயமாக நடக்கும் என்று பார்த்தால் நீங்கள் சன் டி.வி.க்கு சாதகமாக, ஒருதலைப்பட்சமாகச் செயல்படுகிறீர்கள். தயாரிப்பாளர் சங்கத்தின் கட்டுப்பாடுகளை மீறி `காதலில் விழுந்தேன்' படத்துக்கு நிமிடத்துக்கு ஒரு விளம்பரம் `போட்டு அவர்கள் தாக்கி'க் கொண்டிருக்கிறார்களே'' என்று தன் ஆதங்கத்தைத் தெரிவித்தாராம். ஆகா என்ன நியாய உணர்ச்சி! அதே போல மதுரையில் அப்படத்தை வெளியிட விடாது அராஜகம் செய்யும் பெருந்தகை பற்றி ஒரு வார்த்தையும் கிடையாது. அதே சமயம் சன் டிவியை பற்றி பேசும் கூட்டத்துக்கு அதற்கு அழைப்பில்லையாம், ஆகவே அழையா விருந்தாளியாம். இப்படி வேறு எழுதுகிறார்கள்.
கூட்டம் ஆரம்பிக்கும்போது நியாயஸ்தர் மாதிரி தலைவர் ராம நாராயணன் சில ஆண்டுகளுக்கு முன்னால் வந்த “ருத்ர நாகம்” என்ற தனது படத்துக்கு அந்த காலக் கட்டத்தில் அதிகமாக விளம்பரம் கொடுத்ததற்கு மன்னிப்பு வேறு கேட்டு எல்லோர் காதிலும் பெரிய பூ சுற்றியுள்ளார்.
ப்ரொக்ராம் ப்ரமோஷன் என்று ஒவ்வோரு டி.வி. சேனலிலும் போடுகிறார்களே, அதை பற்றி சொல்ல ஏதேனும் விஷயம் உண்டா? நான் கேட்கிறேன், வெறுமனே சன் டிவியில்தானே விமரிசனம் தருகிறார்கள்? நீங்களும் கொடுங்களேன் யார் வேண்டாம் என்றது? இதே குமுதம் ரிப்போர்டர் மற்ற பத்திரிகைகளில் வரும் விஷயத்துக்கு (உதாரணம் ஜூ.வி.யின் கழுகார் கட்டுரைகள்) விளம்பரம் தருமா? அதே சமயம் ஜூ.வி. படியுங்கள் என குமுதம் ரிப்போர்டரில் விளம்பரம் கட்டணம் கொடுத்து போடச் சொன்னால் வருமானம் தேவை என்றால் போட்டுவிட்டு போகிறார்கள், அவ்வளவுதானே விஷயம்.
இன்னொரு கேள்வி. விளம்பர விஷயத்தில் கட்டுப்பாடுகளை செய்ய தயாரிப்பாளர் சங்கத்துக்கு என்ன தார்மீக உரிமை உள்ளது? அதுவே முதல் தவறு. பணம் இருக்கிறவன் செய்கிறான். இல்லாதவன் ரித்தீஸ் மாதிரி புகார் தருவார்கள் போல.
கடைசியாக ஒரு கேள்வி. சன் டிவி குழுமத்துக்கும் தயாரிப்பாள்ர்கள் சங்கத்துக்கும் நடக்கும் பிரச்சினையை வெறுமனே வெளியிட்டதற்காக தனக்கு தானே ஷொட்டு கொடுத்து கொள்கிறதே குமுதம் ரிப்போர்டர், அது எதில் சேர்த்தி?
அன்புடன்,
டோண்டு ராகவன்
முப்பட்டைக்கண்ணாடியினூடே —2
-
( 2 ) ஓர் இளம் படைப்பாளி எண்பதுகளில் தமிழில் நுழையும்போது நவீனத்துவத்தால்
உருவாக்கப்பட்டு அன்று புழக்கத்திலிருந்த செறிவு, அடக்கம், சுருக்கம், மையம்
ஆகிய ...
13 hours ago
16 comments:
காலையில் மழை பெய்யும்போதே நினைத்தேன் - என்னடா விசேஷம் என்று.
டோண்டு நடு நிலையுடன் ஒரு பதிவு எழுதியிருக்கிறார்
ஆகா
Don do sir,
What are you trying to say???
Sathappan
உளியின் ஓசை படம் முதலிடத்தை பெறுவதாக கருணாநிதி டி.வி. டாப் டென்னில் வந்ததே. அப்போது எங்கே போயிருந்தார்கள் எல்லாரும்?!
What are you trying to say about:
'Kalainar'
'Santharpam'
'Nayam' and
'Unarchi'
??????
விளம்பரத்தினால் ஒரு படத்தை பார்க்கவைக்கும் curiosity-ஐ தான் ஏற்படுத்த முடியும். பல்வேறு கோணங்களில், தளங்களில் சிறந்ததாக இருக்கும் படம் தான் வெற்றியடையும். விளம்பரத்தை பார்த்து ஒரு படத்தை பார்க்கச் செல்பவர், படம் சரியில்லை என்றால் தனது எந்த நண்பருக்கும் பரிந்துரை செய்யமாட்டாரெ ! விளம்பரம் தோற்றுவிக்கும் ஆர்வத்தைவிட, ஒரு சாமானியரின் கருத்திற்கே அதிக தாக்கம் உண்டு. இது நாம் அனைவரும் அறிந்ததே. அரசியல் சச்சரவுகளால் இது போன்ற சாதாரண விஷயங்களும் பெரிதுபடுத்தப்படுகின்றன.
///அதுவே முதல் தவறு. பணம் இருக்கிறவன் செய்கிறான். இல்லாதவன் ரித்தீஸ் மாதிரி புகார் தருவார்கள் போல.///
எங்கள் தானைத்தலைவர் ஜே.கே.ஆரை பணம் இல்லாதவன் வாடகைக்காரில் செல்பவன் துண்டு பீடி அடிப்பவன் என்றெல்லாம் நீங்கள் வீமர்சனம் செய்வதை வன்மையாக கண்டிக்கிறேன்...
Kadhalil vizhunthen - This movie got more propoganda thru blogspots and magazines than any other movies. This is also because of its advertisements in the Sun TV.
What's your opinion about that move Mr. Dondu
தமிழகத்தின் மிக மூத்த / பெரிய அரசியல்வாதியான கருணாநிதிக்கு ஏன் அடிக்கடி புத்தி இவ்வளவு சிறிதாய் போகிறது என்று தெரியவில்லை. இதை அதிகார துஷ்பிரயோகம் என்று சொல்லாமல் வேறென்ன சொல்வது? படம் சன் குழுமத்திற்கு சொந்தமானது, நெட்வொர்க்கும் அவர்கள்டையது. இப்படி இருக்க, நிமிடத்திற்கு ஒரு விளம்பரம் போடுகிறார்கள் என்று எதற்கு கூப்பாடு?
வசதி இருக்கிறவன் விளம்பரம் தருகிறான். எது எப்படியோ, படம் நன்றாயிருந்தால் ஓடும். இல்லையேல் தியேட்டரை விட்டு ஓடும். இதற்கு போய் ஏன் இத்தனை ஆர்பாட்டம்.
சினிமாக்காரன் கையில் ஆட்சி, சினிமாக்காரன் கையில்
எதிர்க்கட்சி. சினிமாக்காரன் கையில் மீடியா, சினிமாவைத்தவிர
வேறு வேலை எதுவும் இல்லை என நினைக்கும் மக்கள்.
இதில் வேறென்ன விவாதம் வந்து விடப் போகிறது?
செய்வது தே.. தொழில். இதில் என்ன நியாய/அ நியாய பத்தினி
வேஷம்?
சபாஸு
சரியான சாட்டை அடி
தர்மம் வெல்லும்
correct Sir. Free markets means freedom to promote or adverste their own products. no one has any moral or legal right to stop anyone else here.
But the atrocities and violations by goondarhal is highly condemnable.
கலைஞரைப்பற்றி ஏதாவது நொள்ளை நொட்டை சொல்லாவிட்டால் உமக்கு தூக்கம் வராதே.
கோமணகிருஷ்ணன்
1. காவேரி கரையில் விபச்சாரிகளுடனும், மற்ற மைனர்களுடனும் தான் நடத்திய மைனர் விளையாட்டுக்களுக்கு தன் பெண்டாட்டியையே சமைத்து எடுத்துவரச் சொன்னார் அந்த ஈவேரா. அந்தப் பெண்ணின் மனது எந்த அளவு பாடுபட்டிருக்கும் என்பதை அவர் புரிந்துகொண்டாரா?
4. காசுக்காக ஒருவரை பாராட்டுவது, காசு கிடைக்காவிட்டால் அவரைப் பற்றி தவறாகப் பேசுவது என்று வாழ்க்கை நடத்தினார் ஈவேரா. இவருடைய ப்ளாக்மெயில் வித்தையைத்தான் சினிமா ரேட்டிங்குகளில் சன் டிவியும், கலைஞன் டிவியும், அழகிரியும் பயன்படுத்துகின்றன. இதுதான் ஈவேரா கொண்டுவந்த திராவிட கலாச்சாரமா?
6. கிருத்துவ மதம் மாற்றிகள் கொடுத்த தகவல்களை வைத்து தனக்கு பேச்சுக்களை தயாரித்துத்தர ஒரு குழுவை வைத்திருந்தார் ஈவேரா. ஆனால், தான் பேசியது எல்லாம் தனது சொந்த கருத்து என்று புருடா விட்டார். இதுதான் சுயமரியாதை உள்ள ஒரு ஆள் செய்யக்கூடியதா?
7. காம சுதந்திரம் வேண்டும் என்று பேசிய ஈவேரா, காதல் சுதந்திரத்தைப் பற்றிப் பேசிய புராணங்களை இகழ்ந்தது ஏன்?
8. சமூக சேவை செய்கிறேன், சமூக சேவை செய்கிறேன் என்று பெருமை அடித்துக்கொண்ட ஈவேரா ஏதேனும் ஒரு அனாதை விடுதிக்கோ, முதியோர் இல்லத்திற்கோ ஒரு பைசா நன்கொடை கொடுத்திருப்பதை ஆதாரத்துடன் சொல்ல முடியுமா?
9. தனது பேச்சு முடிவில் எல்லாம், "நீயாக சுயமாக யோசித்து முடிவு செய்" என்று பேசி தன்னை ஒரு ஜனநாயகவாதியாகக் காட்டிய ஈவேரா தனது சமூக வாழ்விலும், தனது சொந்த வாழ்விலும் தான் விரும்பியதுதான் நடக்கவேண்டும் என்று ஒரு அடக்குமுறையாளனாக வாழ்ந்தது ஏன்? பேச்சும் செயலும் எதிரிடையாக இருந்தால் அப்படிப்பட்ட நபருக்கு தமிழில் என்ன பெயர்?
10. ஆரிய இன வெறி பேசிய ஹிட்லருக்கு, திராவிட இனவெறி பேசிய ஈவேராவுக்கும் என்ன வித்தியாசம்?
11. கிருத்துவர்களிடமும், முஸ்லீம்களிடமும் காசு வாங்கிக்கொண்டு இந்து மதம் அழிய வேண்டும் என்று பேசி, எழுதி அவர்களின் கைக்கூலியாக ஈவேரா செயல்பட்டார் என்று பலர் சொல்லுகிறார்கள். அது உண்மையா? எங்காவது கிருத்துவ, இஸ்லாமிய மதங்கள் என்று தெளிவாக அவற்றின் பெயரைச் சொல்லி, அவை அழிய வேண்டும் என்று அவர் பேசியிருக்கிறாரா?
12. தன்னைப் போன்ற உயர்ந்த ஜாதிக்காரர்களின் ஜாதி வெறிக்கு ஆதரவாகவும், பணக்காரர்களுக்காகவும் வேலை செய்தார் ஈவேரா என்றும் பலர் சொல்லுகிறார்கள். இல்லை என்று நிறுவ தேவையான தகவல்கள் தர முடியுமா?
14. சமூக சேவை செய்ய வந்த தான் எளிமையானவன் என்று காட்டிக்கொண்டார் ஈவேரா. காந்தியின் வழியில் மது எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டதாகச் சொல்லிவந்தார். பணத்தில் தனக்கு ஆர்வம் கிடையாது என்று மற்றவர்களை நம்பவைக்க தனக்குச் சொந்தம் இல்லாத, ஆனால் குடும்பத்தில் உள்ள மற்றொருவருக்கு என்று பேசப்பட்டு வந்த மரங்களை வெட்டிவிட்டு, தனக்குச் சொந்தமான மரங்களை வெட்டிவிட்டதாகப் பொய் சொன்னது ஏன்?
15. மது விலக்கிற்காகப் போராடியபோதுகூட தனது மதிய சாப்பாட்டில் வெளிநாட்டு மதுவை அருந்திவந்த ஈவேரா எந்த அளவுக்கு உண்மையான காந்தியவாதியாக இருந்தார்?
16. விபச்சாரிகளோடும், போதை வஸ்துக்களோடும் தனது இளமை காலத்தைக் கழித்த ஈவேரா திடீரென்று சாமியாராகப் போகப்போவதாகச் சொல்லி காசிக்கு ஏன் ஓடினார்? எந்த கொலைபாதகப் பிரச்சினையில் இருந்து தப்பிக்க அவர் அப்படி செய்தார்?
17. எப்போது பார்த்தாலும் தனது மைனர் லீலைகளுக்காக தனது முன்னோர்கள் சொத்தை பயன்படுத்த வெட்கப் படாத ஈவேரா, காசி மடத்தில் இருந்தவர்கள் எல்லாம் ஒழுக்கம் அற்றவர்கள் என்பதால்தான் அங்கிருந்து வெளியேறிவிட்டதாகச் சொல்லிக்கொண்டார். ஈவேராவை காசியில் இருந்த துறவிகள் வெறுத்து ஒதுக்க உண்மையான காரணங்கள் என்ன?
18. ஈவேரா பிறக்காத, வேலை செய்யாத மாநிலங்களில் இருக்கும் தலித்துக்களின் நிலமை, அவர் பிறந்த வேலை செய்த தமிழ்நாட்டைவிட மேம்பட்டதாக இருக்கக் காரணம் என்ன?
19. ஜாதி ஒழிய வேண்டும் என்று பசப்பிய ஈவேரா, தன்னை ஒருவர் சந்திக்க வந்தால் அவருடைய ஜாதி என்ன என்று ஒவ்வொருமுறையும் கேட்டது ஏன்?
20. ஜாதி கிடையாது, ஆனால் ஜாதிப் புத்தி என்பது உண்டு என்று அவர் சொல்லி வந்தார். ஜாதி இல்லாவிட்டால், ஜாதிப் புத்தி மட்டும் எங்கிருந்து வரும்? இந்த வாதத்தின் அறிவுபூர்வமான தன்மையை தர்க்க நியதிகளின்படி விளக்கவும்.
21. ஈவேராவைப் பற்றிய நல்ல விஷயங்கள் எல்லாம் அவர் அடுத்தவர்களுக்கு சொல்லி, அந்த அடுத்தவர்கள் மற்றவர்களுக்கு சொல்லிவந்வந்த விஷயங்களாக இருக்கின்றன. ஆனால், ஈவேராவுடன் நேரடியாகப் பழகியவர்கள் எல்லாம் அவரைப் பற்றி மோசமாகவே கருத்துத் தெரிவித்தார்கள். இதில் யாரை நம்புவது?
22. வைக்கம் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றவுடன் திருவிதாங்கூர் அரசாங்கத்திற்கு ரகசியமாக கடிதம் எழுதி சிறை என்ற பெயரில் வசதிகளைப் பெற்றுக்கொண்டது ஏன்?
23. வைக்கம் போராட்டத்தை ஆரம்பித்து, வெற்றிகரமாக நடத்தி, வெற்றிகரமான முடிவிற்குக் கொண்டுவந்தவர்களாக அறியப்பட்டவர்கள் அங்கிருந்த வேறு தலைவர்கள். ஆனால், காங்கிரஸும் இந்த பிரச்சினையில் கலந்துகொண்டது என்று காட்ட காந்தி போகச் சொன்னதால் அங்கே சென்று, "எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்குப் போனார்" என்று சொல்லப்படுகிற ஈவேரா தனக்குத் தானே "வைக்கம் வீரர்" என்று பட்டம் கொடுத்துக்கொண்டது எந்தவகை நேர்மை?
24. அந்தக் காலத்து காங்கிரஸ்காரர்களும், கம்யூனிஸ்ட்டுகளும் தங்களுடைய சுகவாழ்வை விட்டுக்கொடுத்தும், சொத்துக்களை செலவழித்து தீண்டாமையை ஒழிக்கவும், ஏழைகள் முன்னேற காதி இயக்கத்திற்காக செலவழிக்கவும் செய்தனர். ஆனால், இவர்களைவிட தான் செய்ததுதான் சரியான சமூக சேவை என்று சொல்லிவந்த ஈவேராவின் சொத்துக்கள் அவர் "சமூக சேவை" செய்யவந்தபின் பலமடங்கு அதிகரித்தது. தனது சொத்தை பெருக்கிக்கொள்ள சமூகத்தை பயன்படுத்திக்கொள்ளுவதுதான் சமூக சேவையா?
அந்தக் கேள்விகளை நீக்குவதற்குப் பதிலாக திருத்தம் செய்து வெளியிட்டிருக்கலாம். உதாரணமாக, கீழ்க்கண்ட கேள்வியை திருத்தம் செய்து கேட்கிறேன்:
ஈவேரா ஒரு அமைப்பை ஆரம்பித்து அதை வெற்றிகரமாக நடத்திவந்தார். அவருடைய மிரட்டலுக்குப் பயந்து பணம் கொடுத்த பணக்காரர்கள் தவிர, அவர் உண்மையில் நல்லவர் என்று நம்பிய பல ஏழை தமிழர்களும் அந்த இயக்கத்திற்காக நன்கொடை அளித்தனர். ஆனால், அந்த அமைப்பிற்குக் கிடைத்த பணத்தை, அவருக்கு மிக நெருங்கிய இரண்டாம்நிலை தலைவர்கள் சிலர் வட்டிக்கு விட்டும், சொந்த செலவுகளுக்குப் பயன்படுத்தியும் கொண்டனர். ஆனால், அதை ஈவேரா தட்டிக் கேட்கவில்லை. பண விவகாரத்தில் கறாரானவரான ஈவேரா இவர்கள் அடித்த கும்மாளங்களை ஏன் கண்டுகொள்ளவில்லை? அவரை நம்பி பணம் கொடுத்த ஏழைகள் வாழ்வு எவ்விதமாவது உயர்ந்ததா?
டோண்டு சார், அந்த கட்டுரையை ரிப்போர்டரில் படித்தேன்.. வழக்கமாக இப்போது பத்திரிக்கைகளில் கழுகு , ஆந்தை, வம்பானந்தா என்ற பெயரில்.. ஏதோ இவர்கள் அந்த தலைவர்கள் வீட்டில் ஒளிந்திருந்து கேட்டது போல , இப்படி சொன்னார்கள் , அப்படி சொன்னார்கள் என்று எழுதிகிறார்கள்.. சில சமயங்களில் அது உண்மையாக இருக்கலாம் என்றாலும், பல சமயங்களில் அவை கற்பனை கதையாகவே உள்ளது..
இங்கே அப்படி உறுதியில்லாத பட்சத்தில் , நீங்கள் தலைப்பை ரிப்போர்டரின் சந்தர்ப்பவாத நிகழ்ச்சி என்றே வைத்திருக்கலாம்.. அல்லது கலைஞரின் சந்தர்ப்பவாதம் என ரிப்போட்டர் சொன்னது என வைத்திருக்கலாமே....
கேள்விக்கு என்றும் வறட்சியில்லை.
மீண்டும் கேள்வி பதில் களைகட்ட
வாழ்த்துக்கள்.
போற்றுவார் போற்றட்டும்
புழுதிவாரி தூற்றுவோர் துற்றட்டும்
டோண்டு சாரின் பணி சிறக்க
எல்லாம் வல்ல இறைவனை வேண்டி
இந்த வார கேள்வி பதிலுக்காக
தங்களுக்கு
1.பிடித்த நடிகர் ?(தமிழ்)
2.பிடித்த நடிகர் ?(இந்தி)
3.பிடித்த நடிகர் ?(ஆங்கிலம்)
4.பிடித்த நடிகை(தமிழ்)
5.பிடித்த நடிகை(இந்தி)
6.பிடித்த நடிகை?(ஆங்கிலம்)
7.பிடித்த எழுத்தாளர்?(தமிழ்)
8.பிடித்த எழுத்தாளர்?(இந்தி)
10.பிடித்த எழுத்தாளர்?(ஆங்கிலம்).
11.பிடித்த அரசியல்வாதி?(தமிழ்)
12.பிடித்த அரசியல்வாதி?(இந்தி)
13.பிடித்த அரசியல்வாதி?(ஆங்கிலம்)
14.பிடித்த ஊர்? (தமிழகம்)
15.பிடித்த ஊர்?(வட இந்தியா)
16.பிடித்த ஊர்?(உலகம்)
17.பிடித்த புத்தகம்?(தமிழ்)
18.பிடித்த புத்தகம்?(இந்தி)
19.பிடித்த புத்தகம்?(ஆங்கிலம்)
20.பிடித்த மொழி?
டோண்டு ஐயாவிடம்
கேள்வி கேட்போர் சங்கம்.
Post a Comment