மோகன்:
1. வலைப்பதிவு உலகின் பிரபல பதிவர்கள் (பிராமணர்களை, பிராமணீயத்தை இகழ்ந்து எழுதுபவர்கள்), பிராமணப் பெண்களைத் திருமணம் செய்து வருவது பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: அதனால் என்ன? சம்பந்தப்பட்ட பிராம்மண பெண்களும் விரும்பித்தான் மணம் புரிகின்றனர். “கில்லி” பிரகாஷ்ராஜ் மாதிரி வலுக்கட்டாயமாகவா பெண்ணின் விருப்பத்துக்கு மாறாக முயற்சி செய்கின்றனர்? எனக்கு தெரிந்த பதிவர் (கவுண்டர் வகுப்பை சேர்ந்தவர்) தலித் பெண்ணை மணக்க அவர் அன்னையால் புறக்கணிக்கப்பட்டவர். அதே அன்னை இப்பதிவர் பார்ப்பன பெண்ணை மணந்திருந்தால் ஆட்சேபம் தெரிவித்திருக்க மாட்டார் என்பதை அவரே என்னிடம் ஒத்து கொண்டார். பிராமணர்களை இகழ்பவர்களில் முக்கால்வாசி பேருக்கு ஒருவித தாழ்வுமனப்பான்மைதான் காரணம். மேலும் தாங்கள் செய்யும் வன்கொடுமைகளை மறைக்க அவர்கள் திட்டுவதற்கு ஒரு குழுவினர் தேவை.
நாமக்கல் சிபி:
1. ஆன்மீகம் Vs அரசியல் : எந்த அளவுக்கு பிணைந்து இருக்கிறது? அல்லது முரண்பட்டு செல்கிறது? (இந்தியாவில்)
பதில்: ஆன்மீகம் என்று நீங்கள் எதைக் கூறுகிறீர்கள்? மதமா? அப்படியானால் உலகில் அனேக நாடுகளில் அதுதானே நடக்கிறது? பல நாடுகளில் அது அதிகார பூர்வமாகவே நிகழ்கிறது. மதத்தையும் ஆட்சியையும் பிரிப்பது ஒப்பீட்டளவில் சமீபத்திய போக்குத்தான். 1900-ஆம் ஆண்டு ஃபிரான்ஸில் அவை இரண்டும் தனித்தனியே பிரிக்கப்பட்டபோது, உலகமே தலைகீழாகி விடும் என மத ஆதரவாளர்களால் அஞ்சப்பட்டது. இப்போதும் மதமும் ஆட்சியும் சேர்த்தே பார்க்கப்டும் நாடுகள் அனேகம். உதாரணங்கள் அரபு நாடுகள், இந்தோனீஷியா, மலேசியா, பாகிஸ்தான், ஸ்ரீலங்கா ஆகியவை. இப்போது இந்தியாவுக்கு வருவோம். இது மதசார்பற்ற நாடு என பிரகடனப்படுத்தப்பட்டது. இருப்பினும் பெரும்பான்மையர் இந்துக்களே. ஆகவே அம்மதம் கூறிய பல விஷயங்கள் இன்னமும் ஆட்சியாளர்களால் பின்பற்றப்படுகின்றன. அரசு விழாக்களையே எடுத்து கொள்ளுங்கள் இன்னமும் நல்ல நேரம் பார்த்துத்தானே ஆரம்பிக்கிறார்கள்?
ஆர். தேவராஜன்:
1. நற்றமிழ்' என்றால் என்ன?
பதில்: கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து:
“இயன்றவரை நல்ல தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தி, நடைமுறை வழக்கங்களையும் உள்வாங்கி, வெளிப்படுத்தி எளிமையாக எழுதப்படும் பேசப்படும் தமிழ்மொழியை நற்றமிழ் அல்லது நல்லதமிழ் எனலாம். நல்லதமிழும் தனித்தமிழ் போன்று இயன்றவரை தமிழ் வேர்ச்சொற்களில் இருந்து ஆக்கப்படும் சொற்களே தமிழ்மொழிக்கு வளம் சேர்க்கும் என்ற கருத்துடையது. ஆனால், சில குறிப்பிடத்தக்க விதிவிலக்குகளை கொண்டது. அனைத்துலக அறிவியல் சொற்கள் (எ.கா உயிரினங்களை வகைப்படுத்தலுக்கு பயன்படும் சொற்கள்), அனைத்துலக கணித இலக்கங்கள், ஆங்கில மாதங்கள் போன்ற பரவலான பயன்பாட்டில் இருக்கும் வழக்கங்களை ஏற்றுக்கொள்கின்றது. தனித்தமிழ் இலக்கை நோக்கியும், களங்கப்பட்ட தமிழைத் தவிர்த்தும் எடுக்கப்படும் ஒர் இடைப்பட்ட நிலையே நல்லதமிழ் எனலாம்”.
களங்கப்பட்ட தம்ழுக்கு உதாரணம் தொலைகாட்சிகளில் தங்கிலீஷ் பேசும் நிகழ்ச்சி தொகுப்பாளினிகள். நற்றமிழுக்கு உதாரணம் மானுடம் தழுவிய ஆழ்வார்கள், நாயன்மார்கள். காலம் சென்ற தமிழ்க்குடிமகன் ஆங்கிலத்தில் புலமை பெற்றிருந்தாலும் வேறு மொழி சொற்கள் கலக்காது தூய தமிழில் பேச வல்லவர்.
வஜ்ரா:
1. 5 ஆண்டுகள் முன் தமிழகம் கேரளத்திற்கு மின்சாரம் விற்றார்களாமே? தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட மற்றும் அறிவிக்கப்படாத மின் வெட்டுகள் மின்வாரியம் செய்ய என்ன தான் காரணம்? மின் வாரியம் தன் பணியைச் சரியாகச் செய்யாததால் மின்துறை ஊழியர்கள் அமைச்சர் முதல் பியூன் வரை அனைவருக்கும் ஒரு மாத சம்பளம் கட் செய்தால் என்ன?
அதென்ன 5 ஆண்டுகளுக்கு முன்னால் என்னும் கணக்கு? தமிழகம் எப்போதுமே தொட்டுக்கோ தொடச்சிக்கோ என்னும் நிலையில்தான் மின்சாரம் பொருத்தவரை இருந்து வந்துள்ளது. அதே நேரம் மின்சாரம் கட்சி மகாநாடுகளுக்காக தாறுமாறாக திருடப்பட்டு வருகிறது. அரசியல் பலம் வாய்ந்தவர்கள் தமது வீடுகளுக்காக திருடும் மின்சாரம் அளவற்றது. ஆனால் நீங்கள் சொல்வதுபோல ஒட்டுமொத்தமாக தண்டனை எல்லாம் தர இயலாது. குஜராத்திலும் இதே நிலைதான் மோதி ஆட்சிக்கு வரும்வரை இருந்தது. இப்போது பலவகை மிந்திருட்டுக்களை தயவு தாட்சண்யம் இன்றி ஒடுக்கியுள்ளார். அதற்கு மிகவும் தேவைப்பட்டது அரசியல் தைரியம்.
மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
போலி இளமை
-
இணையக்குப்பை அன்புக்கும் மதிப்புக்கும் உரிய ஜெ., வணக்கம்! உங்கள் பதில்
இணையக்குப்பை பல முறை மீண்டும் மீண்டும் வாசித்தேன். முதலில், எனது மின்னஞ்சலை
கருத்தி...
10 hours ago
22 comments:
இப்பொழுதெல்லாம் முன்ன மாதிரி புதிர் பதிவுகள் போடுவதில்லையே ? வேலையில் பயங்கர பிஸியாகிவிட்டீர்களா ?
பார்ப்பனீயம் என்ற வார்த்தையை நீங்கள் எப்படி புரிந்துகொண்டிருக்கிறீர்கள்? பகுத்தறிவுவா(ந்)திகள் என்று சொல்லிகொண்டிருப்பவர்கள் எப்படி புரிந்துகொண்டிருக்கிறார்கள்?
பதிவுலக சர்ச்சை கேள்வி ஒண்ணு.
வால்பையன் லக்கிலுக்கு என்ன பிரச்சினை? இருவரும் நண்பர்களாக தானே இருந்தார்கள்? ஒரு வலைபதிவர் சந்திப்பில் கூட வால்பையன் உங்கள் மூலமாக லக்கிலுக்கிடம் பேசியதாக சொன்னார்களே?
//பிராமணர்களை இகழ்பவர்களில் முக்கால்வாசி பேருக்கு ஒருவித தாழ்வுமனப்பான்மைதான் காரணம். மேலும் தாங்கள் செய்யும் வன்கொடுமைகளை மறைக்க அவர்கள் திட்டுவதற்கு ஒரு குழுவினர் தேவை.//
ஜோக் ஆஃப் த இயர்.
//அதனால் என்ன? சம்பந்தப்பட்ட பிராம்மண பெண்களும் விரும்பித்தான் மணம் புரிகின்றனர்.//
பிராமணப் பெண்களுக்கு இருக்கும் பரந்த மனசு,விசாலமான பார்வை பெரும்பாலான பிராமண ஆண்களுக்கு இருப்பதில்லையே ஏன்.?
அன்புடன்
அரவிந்தன்
jho;T kdg;ghd;ikia nfhz;L te;jtu;fs; ahu;? g;uhkzu;fs; kl;Lk; fhuzky;y. ,ju Kw;gLg;gLj;jgl;l tFg;gdpdUk; gpw;gLjg;gl;l tFg;gpdUk;. %y fhuzk; g;uhkzu;fs;.
mtu;fis nra;J ,ju Kw;gLg;gLj;jgl;l tFg;gpdu; ,tu;fis nra;J gpw;gLjg;gl;l tFg;gpdu;.
ehd; murhq;fj;jhy; Kw;gLg;gLj;jgl;l tFg;gpduhf mwptpf;fgl;lts;.
,ij Vd; nrhy;Nwd;dh jho;T kdg;ghd;ikahy; ehd; ,ij nrhy;yiy mNj khjpup Nftykhd cau;T kdg;gd;ikahYk; ,y;y.
I dont have fluency in typing tamil. want to write more about the so called inferiority complex.
Anbudan
Kabheesh(Nick name)
please fill follow in between avargalai and ivargalai sorry about this
Anbudan
Kabeesh
//பிராமணர்களை இகழ்பவர்களில் முக்கால்வாசி பேருக்கு ஒருவித தாழ்வுமனப்பான்மைதான் காரணம். மேலும் தாங்கள் செய்யும் வன்கொடுமைகளை மறைக்க அவர்கள் திட்டுவதற்கு ஒரு குழுவினர் தேவை.//
ஜோக் ஆஃப் த இயர்.//
No... Joke of the Century
கபீஷ் டாம்-ல் எழுதியது:
“தாழ்வு மனப்பான்மையை கொண்டு வந்தவர்கள் யார்? ப்ராமணர்கள் மட்டும் காரணமல்ல. இதர முற்படுப்படுத்தபட்ட வகுப்பனினரும் பிற்படுதப்பட்ட வகுப்பினரும். மூல காரணம் ப்ராமணர்கள்.
அவர்களை செய்து இதர முற்படுப்படுத்தபட்ட வகுப்பினர் இவர்களை செய்து பிற்படுதப்பட்ட வகுப்பினர்.
நான் அரசாங்கத்தால் முற்படுப்படுத்தபட்ட வகுப்பினராக அறிவிக்கபட்டவள்.
இதை ஏன் சொல்றேன்னா தாழ்வு மனப்பான்மையால் நான் இதை சொல்லலை அதே மாதிரி கேவலமான உயர்வு மனப்பன்மையாலும் இல்ல.”
//
//பிராமணர்களை இகழ்பவர்களில் முக்கால்வாசி பேருக்கு ஒருவித தாழ்வுமனப்பான்மைதான் காரணம். மேலும் தாங்கள் செய்யும் வன்கொடுமைகளை மறைக்க அவர்கள் திட்டுவதற்கு ஒரு குழுவினர் தேவை.//
ஜோக் ஆஃப் த இயர்.
//
Thats not even close to a joke. If you really think that to be a joke, then trust me, you are the biggest joker of the year.
சாரே, முன்பெல்லாம் 3 - 4 பக்கங்கள் வரை வந்த உங்க டோண்டு கேள்வி பதில் பதிவு, இப்போது அரை பக்கமாக குறைந்துவிட்டதே, கேள்விகளுக்கு வறட்சியா? அல்லது உங்கள் பதில்கள் சலிப்படையவைக்கிறாதா பதிவர்களை?
Hi Mr. Dondu Sir,
Please add 'follow' before seithu in two places. I guess you are critizing my tamil. I just followed your guidence for writing tamil. Thanks for that. Any how sorry for not writting properly ie sorry for not writting in good tamil and if possible could you please delete the comment which is in english as it looks odd.
Anbudan
Kabheesh
//I guess you are critizing my tamil.//
No, not at all. Your comment in Tamil was illegible as it was in TAM font and not in Unicode. I just converted your message in TAM font to Unicode.
If you have ekalappai or NHM writer, please use the correct toggle key strokes for typing in Unicode. It is Alt+2.
Regards,
Dondu N. Raghavan
டோண்டு ராகவன் அவர்களே
பிராமனர்களை என்ன சொல்லி இகழ்கிறார்கள்?
என்ன வங்கொடுமைகள் செய்தார்கள்? பிராமனர்களை திட்டினால் எப்படி அது மறைக்கப்படும்? அப்படி என்ன சொல்லி திட்டினார்கள்?
////பிராமணர்களை இகழ்பவர்களில் முக்கால்வாசி பேருக்கு ஒருவித தாழ்வுமனப்பான்மைதான் காரணம். ///
அண்ணே.. எப்படிண்ணே இப்படி ஒரு முடிவுக்கு வந்தீங்க?
கொஞ்சம் வெளக்கமாச் சொல்லுங்கண்ணே.
////பிராமணப் பெண்களுக்கு இருக்கும் பரந்த மனசு,விசாலமான பார்வை பெரும்பாலான பிராமண ஆண்களுக்கு இருப்பதில்லையே ஏன்.?///
அதானே..?
//
பிராமணப் பெண்களுக்கு இருக்கும் பரந்த மனசு,விசாலமான பார்வை பெரும்பாலான பிராமண ஆண்களுக்கு இருப்பதில்லையே ஏன்.?
//
பிராமணப்பெண்களிடம் அவ்வளவும் இருக்கு என்று கண்டுபிடித்துச் சொல்லும் பொறுமை உங்களிடம் இருப்பது கண்டு வியக்கிறோம். ஒரு பறையன் வீட்டுப்பெண்ணிடம் கூட அத்தனையும் இருக்கும். நீங்கள் அவளைக் கலியாணம் கட்டிக்க வேண்டியது தானே? ஏன் பிராமின் பெண் பின்னாடி சுத்துறீங்க?
//சரோஜினி நாயுடு. said...
//
பிராமணப் பெண்களுக்கு இருக்கும் பரந்த மனசு,விசாலமான பார்வை பெரும்பாலான பிராமண ஆண்களுக்கு இருப்பதில்லையே ஏன்.?
//
பிராமணப்பெண்களிடம் அவ்வளவும் இருக்கு என்று கண்டுபிடித்துச் சொல்லும் பொறுமை உங்களிடம் இருப்பது கண்டு வியக்கிறோம். ஒரு பறையன் வீட்டுப்பெண்ணிடம் கூட அத்தனையும் இருக்கும். நீங்கள் அவளைக் கலியாணம் கட்டிக்க வேண்டியது தானே? ஏன் பிராமின் பெண் பின்னாடி சுத்துறீங்க?
டோண்டு சார் சரியாச் சொன்னீங்க
பல பிரபல அரசியல் தலைகளுக்கே வெளிச்சம்( !!!!!!!!!!!!!!!!)
1.மா...........
2.கி................
3.த.............
4.
கலைஞர் ஐயா கூட பேசுவது ஏதாக இருந்தாலும்
அவர் நம்புவது
பிராமண அதிகாரிகளை,மருத்துவர்களை,தணிக்கையாளர்களை,பத்திரிக்கையாளர்களை,வக்கீலகளை
போல் தெரிகிறதே? ஏன்?
//மேலும் தாங்கள் செய்யும் வன்கொடுமைகளை மறைக்க அவர்கள் திட்டுவதற்கு ஒரு குழுவினர் தேவை.
//
ஜெயசூர்யா ஸ்டைலில் பாயிண்ட் பவுண்டரிக்கு மேல் சிக்ஸர் அடித்திருக்கிறீர்கள் ;-)
please explain the following in dondu style
1.crr( banking system)
2.repo rate
3.inflation (in india)
4. recession ( in usa)
5.gdp ( in world)
ramakrishanahari
please explain the following in dondu style( present condition)
1அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.
2அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்.
3அடியைப் போல அண்ணன் தம்பி உதவாது.
4அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.
5அழுதாலும் பிள்ளை அவள்தானே பெறவேண்டும்.
6அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.
7அற்பருக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பர்.
8அற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன.
9அறுக்க முடியாதவ இடுப்புல ஆயிறத்தெட்டு அறிவாள்.
10ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்.
11ஆடத் தெரியாதவள் மேடை பிழையென்றாளாம்.
12விடிய விடிய ராமாயணம் விடிந்த பிறகு சீதைக்கு ராமன் என்ன முறை.
13விரலுக்குத் தக்கதே வீக்கம்.
14விளையும் பயிரை முளையிலே தெரியும்.
15வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல்.
16வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்.
17வெளுத்ததெல்லாம் பாலல்ல.
18வேலிக்கு ஓணான் சாட்சி.
19வைக்கோற் போர் நாய் போல
20.காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு
@ராமகிருஷ்ணஹரி மற்றும் அனானிக்கு,
உங்கள் கேள்விகள் 24-ஆம் தேதி பதிவுக்கான வரைவுக்கு சென்று விட்டன.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment