9/17/2009

டோண்டு பதில்கள் - 17.09.2009

கேள்விகள் கேட்போருக்கு வழக்கமான ஒரு வேண்டுகோள். சில சமயம் எங்காவது இணையத்தில் படித்ததை ஆதாரமாக வைத்து கொண்டு கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதில் தவறில்லை. ஆனால் அப்படியே தமது கேள்விகளின் பின்புலனையும் கூறினால் சௌகரியமாக இருக்கும். நானே கூகளிட்டு பார்ப்பதுண்டு என்பது நிஜமே. ஆயினும் அந்த சுட்டி ரெடியாக கிடைத்தால் அதை தேடும் நேரம் விரயமாகாமல் பதிலில் இன்னும் அதிக முனைப்பாக இருக்கலாம் அல்லவா?

ரமணா
1. அண்ணா புற்று நோயால் சிரமப்படும் நாளில் பெருந்தலைவர் காமராஜை தோற்கடிக்கவேன்டும் என காரணம் கூறி அதிக ஒளி வீசும் கேமிரா முன்னால் நீண்ட் நேரம் நிற்க வைத்ததால்தான் அவருக்கு மரணம் நேர்ந்தது;அதற்கு இன்றைய அரசியல் பெரும்புள்ளி சதி செய்தார் என்று சொல்லபட்டதே உண்மையென்ன?
பதில்: அம்மாதிரி ஒரு வதந்தியும் அக்காலகட்டத்தில் நான் கேள்விப்படவில்லையே? மேலும், இது உண்மையாக இருக்கவும் வாய்ப்பில்லை. ஏனெனில் 1962-ல் அண்ணா தோற்க வேண்டுமென காமராஜ் வேண்டுமானால் வன்மத்துடன் காரியம் செய்தார். அதனால் அண்ணா அவர்கள் ராஜ்ய சபாவுக்கு சென்று தன்னை வளப்படுத்திக் கொண்டதற்கு காமராஜ் தன்னைத் தானே பின்னால் நொந்து கொண்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லைதான்.

ஆனால் 1967-ல் அண்ணா அவ்வாறு ஒன்றும் செய்யவில்லை. காமராஜரை எதிர்த்து அதிகம் பிரபலமாகாத ஒரு மாணவர் தலைவரை நிற்க வைத்தார். காமராஜ் தோற்றதற்கு நிஜமாகவே வருத்தப்பட்டார். அந்த மாணவர் தலைவர் செருக்குடன் அலைந்த காலத்தில் மண்டையில் தட்டி ஓரமாக உட்கார வைத்தார் அவர்.

2. 1967 ல் எம்ஜிஆர் ராதாவால் சுடப்படார் என்பது செய்தி. பின் வழக்கு நடந்தது. ஒரு சில தகவல்கள் அரசியல் செல்வாக்கு இதில் தலை நுழைத்து சாதகமாய் காரியங்கள் நடந்தன என்று சொல்லபட்டதே.இதில் எது உண்மை?
பதில்: யாருக்கு சாதகமாய்? எதற்கும் சுதாங்கன் எழுதிய புத்தகத்தைப் பாருங்கள். மற்றப்படி கேஸ் நடந்து முடிந்து எம்.ஆர். ராதா தண்டனையும் பெற்று வெளியில் வந்தாயிற்று. அவரும் இல்லை, எம்ஜிஆரும் இப்போது இல்லை. எல்லாம் பழங்கதை ஆகிவிட்டது.

அந்த வழக்கில் சாட்சியளித்த தடவியல் நிபுணர் ஒரு சுவாரசியமான விஷயம் சொன்னார். அவ்வளவு கிட்டத்திலிருந்து எம்.ஜி.ஆரை சுட்டபோதும் அவர் இறக்க்வில்லை. காரணம் என்னவென்றால் தோட்டா பழையதாக ஆனதால் அதன் வீர்யம் குறைந்திருந்தது என்பதே. எது எப்படியானாலும் எம்.ஜி.ஆர். செய்த தருமமே அவரைக் காப்பாறியது என்றுதான் நான் கூறுவேன்.

3. இதற்கு பிரதி உபகாரமாய் 1972ல் திமுகவை இரண்டாய் உடைப்பதற்கு சதி செய்தார் எனும் திமுக தலைவரின் குற்றச்சாட்டு சொல்லபட்டதே அது உண்மையா?
பதில்: யார், எம்ஜிஆரா? எம்ஜிஆரை வெளியில் அனுப்பி முட்டாள்தனம் செய்தவர் கருணாநிதி. கட்சியின் பிளவுக்கும் அவரே பொறுப்பு.

4. ரஜினி காதலிக்கும் பெண் பெயர் லதா எனகேள்வி பட்டதும் அது தனது கதாநாயகி லதா எனத் தவறாய் புரிந்து,வசூல் சக்ரவர்த்தி கொடுத்த சித்திரவதையின் காரணமாய் ரஜினி மனநலம் பாதிக்க பட்டார் என்று சொல்லபட்டதே, அது உண்மையா?
பதில்: அதுவும் கேள்விப்பட்டதில்லை. ஆனால் எம்ஜிஆர் நாயகி லதாவுடன் ரஜினி ஜோடியாக நடித்துள்ள படம் சங்கர், சலீம், சைமன். ஆனால் அப்போதுதான் எம்ஜிஆர் படவுலகிலேயே இல்லையே.

5. நாகேஷ் வேடிக்கையாய் சின்னவரை கிழவன் என கேலி பேசயதால் கோபப் பட்டு அவரது நகைச்சுவை நடிகர் வாழ்வுக்கு மங்களம் பாடினார் சின்னவர் என்று சொல்லபட்டதே, உண்மையா?
பதில்: இந்தச் செய்தியை கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் எம்ஜிஆர் இல்லாவிட்டால் என்ன சிவாஜிதான் ஃபீல்டில் இருந்தாரே. மொத்தத்தில் நாகேஷ் எம்ஜிஆர் பிரிந்ததில் சோவுக்கு வாழ்வு.


ராம்
1. ஜீவாத்மா பரமாத்மா பற்றி உங்களுக்கு என்றைக்காவது புரிந்திருக்கிறதா?
பதில்: ஜீவாத்மா என்பது ஆதாம் ஏவாள் என கிறித்துவர்கள் கூறுவதற்கு ஒப்பானது என ஒரு முறை காஞ்சி பெரியவர் எழுதி படித்ததாக ஞாபகம்.


எம். கண்ணன்
1. சுஜாதா ஒரு முறை 'கற்றதும் பெற்றதும்'ல் எழுதியிருந்த ' நெக்ரபொண்டே ஸ்விட்ச்' -http://en.wikipedia.org/wiki/Negroponte_switch - மீண்டும் ஒரு சுற்று வந்துவிட்டது போலிருக்கே ? டிவி தற்போது டிஷ் மூலமும், பிராட்பேண்ட் கம்பி மூலமும் ? (முதலில் டிவி - ஆண்டெனா (வயர்லெஸ்) - பின் கேபிள் வழி தற்போது மீண்டும் டிஷ்) (டெலிபோன் - முதலில் கம்பி, பின்னர் வயர்லெஸ், தற்போது பிராட்பேண்ட் - டிஎஸெல் - கம்பி மூலம் அல்லது கேபிள் மூலம்)
பதில்: சில தொழில்நுட்பங்கள் சில இடைஞ்சல்களால் தற்காலிகமாக தடைபெறுகின்றன. பிற்காலத்தில் வேறு துறைகளில் வரும் முன்னேற்றங்களால் அத்தடைகள் நீங்க பழைய தொழில்நுட்பம் புதிய சக்தியுடன் முன்னுக்கு வருவது விஞ்ஞான உலகில் பலமுறை நடந்துள்ளதே. அதில்தான் நீங்கள் சொன்ன விஷயமும் வருகிறது.

2. விகடனில் ஸ்னேகாவின் பிகினி டிரஸ் பார்த்து ஜொள்ளுவிட்டீர் தானே? (அது கட் அன் பேஸ்ட் என்றபோதும்)
பதில்: பிகினி ட்ரெஸ் இருந்தால்தான் ஜொள்ளு விடுவோமா? அது இல்லவே இல்லாவிட்டாலும்தான்.

3. ராக்கி சாவந்த் போல (ராகி கா ஸ்வயம்வர் - ஸ்டார் பிளஸ்) ரம்பாவின் சுயம்வரம் கலைஞர் டிவியில் வந்தால் அப்ளிகேஷன் போடுவீரா? ரம்பாவின் டெஸ்டில் பாஸ் செய்வீரா?
பதில்: ஆக, என் வீட்டம்மாவிடம் போட்டுக் கொடுத்து எனக்கு சமாதி கட்டாமல் ஓய மாட்டீர்கள் என நினைக்கிறேன்.

4. பெண்கள் பத்திரிக்கைகள் பற்றி ஆர்.வெங்கடேஷ் ஒரு பதிவு இட்டிருக்கிறார். உங்கள் வீட்டில் மங்கையர் மலரா? அவள் விகடனா? குமுதம் சிநேகிதியா?
பதில்: எங்கள் வீட்டில் மூன்றையுமே வாங்குகிறோமே. குமுதம் சினேகிதியில் ரங்கநதி என்னும் தலைப்பில் இந்திரா சௌந்திரராஜன் எழுதும் தொடர்கதையை படித்து விட்டுத்தான் மீதி பக்கங்களைப் பார்ப்பேன். அது போல அவள் விகடனில் தொடர்கதை இல்லை என்பது குறையாக உள்ளது. மங்கையர் மலர்? அதிலிருந்துதான் ஒரு கதையை எடுத்துப் போட்டுள்ளேனே?

5. தமிழ் படிக்கும் வழக்கமே குறைந்துவரும் நிலையில் - அதுவும் தற்கால பெண்கள் மேற்சொன்ன புத்தகம் எல்லாம் வாங்கி படிப்பார்களா?
பதில்: எழுதும் விதமாக எழுதினால் ஏன் படிக்க மாட்டார்கள்?

7. ஆபாசம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு ஏன் இந்த நிறங்கள் ? யார் கொடுத்தனர்? சிகப்பு விளக்கு, நீலப் படம், மஞ்சள் பத்திரிகைகள், பச்சை மொழி..... தமிழில் மட்டும்தானா இல்லை ஆங்கிலத்திலிருந்து எல்லா மொழிகளிலும் (பிரெஞ்சு, ஜெர்மன், இந்தி..) இப்படித்தான் சொல்கிறார்களா?
பதில்: முக்கியமாக ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டவையே சிகப்பு விளக்கு, நீலப் படம், மஞ்சள் பத்திரிக்கைகள் ஆகிய சொற்கள்.

8. விஜய் டிவியின் நீயா நானாவுக்குப் போட்டியாக கலைஞர் டிவியிலும் 'கருத்து யுத்தம்' என ஒரு விவாத அரங்கம் (புதன் இரவு 10மணி) நடைபெறுகிறதே? விஜய்டிவி கோபிநாத் அளவு இல்லாவிட்டாலும், கலைஞர் டிவி ஷண்முகசுந்தரமும் நன்றாகவே நடத்துகிறார். ஓரினச் சேர்க்கை பற்றிய விவாதத்தில் பலரும் (பெண்கள் உட்பட) வெளுத்துக் கட்டினரே ? பார்த்தீர்களா? (ஒரு கட்டத்தில் அடிதடியே வந்துவிட்டது - சிவன் விஷ்ணு என ஒருவர் பேசப் போக) - சிறப்பு விருந்தினர்களில் சாருவும் ஒருவர்.
பதில்: விஜய் டிவி, கலைஞர் டிவி ஆகியவற்றை நான் பார்ப்பதில்லை என்றாலும். நிங்கள் கூறுவது சுவாரசியமாகவே உள்ளது. சிவன் விஷ்ணு உதாரணம் சரியில்லை. அவர்கள் சேர்க்கை நடந்தபோது விஷ்ணு மோகினி அவதாரத்தில் இருந்தார். இதில் ஒரு தத்துவமே உள்ளது. கருவில் உள்ள முட்டை உயிரணு ஜோடி ஆணாகவோ பண்ணாகவோ பிறக்க சாதாரணமாக சமவாய்ப்புகள் உள்ளன. வெறும் குரோமோசோம் விளையாட்டுதான். ஆகவே ஒரு செமக்கட்டை ஃபிகர் ஆணாகக் கூட பிறந்திருக்கும் வாய்ப்பு இருந்திருக்கிறது. அப்போது அந்த ஆண் மற்ற செமக்கட்டை ஃபிகர்களைப் பார்த்து ஜொள்ளு விட்டிருக்கும்.

9. தமிழ் சினிமா நடிகர்களில் சிலர் ஓரினச் சேக்கை விருப்பம் உள்ளவர்கள் எனவும் சமீப காலங்களில் சில பெண் ஓரினச் சேக்கையாளர்கள் பற்றிய செய்திகளும் வந்தது. நம்பக்கூடியதா இந்த செய்தி?
பதில்: பொது புத்தி என்ன கூறினாலும் ஓரினச்சேர்க்கைக்கு கணிசமான அளவில் ஆதரவு இருக்கிறது. ஆகவே இதில் நம்பிக்கையின்மைக்கு இடமில்லை.

10. ஞாநியின் கேணி என்ற ஞாயிறு மாலை (ஞாநியின் வீட்டில்) நிகழ்ச்சியை ஆனந்த விகடன் ஏன் “பாஸ்கர் சக்தி (ஞாநியுடன்) நடத்தும்” என ஞாநியை இருட்டடிப்புச் செய்கிறது? ஓ பக்கங்கள் குறித்தான மோதல் இன்னும் முடியவில்லையோ? (அதுவும் விகடன் பொறுப்பாசிரியர் ரவிபிரகாஷே கலந்து கொண்டபோது)
பதில்: கேள்விப்பட்டுள்ளேன், ஆனால் இதுவரை போனதில்லை.


அனானி (07.09.2009 பிற்பகல் 12.05-க்கு கேட்டவர்)
1) What is your opinion on this?
பதில்: ஜாதி விட்டு ஜாதியில் திருமணம் செய்வது, வெளிமாநிலத்தவரை மணப்பது ஆகிய விஷயங்கள் கேட்க வேண்டுமானால் நன்றாக் ஐருக்கலாம். ஆனால் நடைமுறையில் பல கஷ்டங்கள் உள்ளன. முக்கியத் தடையே சாப்பாட்டு முறைகளில் உள்ள வேறுபாடுகள்தான். ஆகவே இம்மாதிரி திருமணங்கள் காதல் திருமணமாகத்தான் நடக்கும் வாய்ப்பு அதிகம். அரேஞ்ச்டு திருமணங்களில் அது மிகக்குறைவு.

2) Why Stalin has gone to England? for what treatment? what is the health problem he has which cannot be treated in India but only in London?
பதில்: அப்படியா? ஸ்டாலினா லண்டனுக்கு வைத்தியத்துக்காக சென்றார்? ரஷ்யாவில் இல்லாத மருத்துவர்களா? ஆனால் அப்படியெல்லாம் ஸ்டாலின் லண்டனுக்கு சென்றதாக நான் எங்குமே படிக்கவில்லையே? ஏதாவது ரஷ்யாவிலிருந்து புது ஆவணங்கள் கிடைத்தனவா? எது எப்படியிருந்தாலும் அவர் இறந்து 56 ஆண்டுகளுக்கும் மேலாயின. இப்போது எதற்கு பழைய கதை? அப்படியே இருந்தாலும் அவர் ஏன் இந்தியாவுக்கெல்லாம் வந்திருக்க வேண்டும்?


சேதுராமன்
1. ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் மாதிரி ப்ளேன் டிரைவர்கள் வேலை நிறுத்தம் செய்யலாமா?
பதில்: தொழிற்சங்கம் அமைக்கும் உருமை பெற்ற எல்லா தொழில்களிலும் வேலை நிறுத்தம் ஒரு பிறப்புரிமை. பைலட்கள் செய்யலாம், செய்தார்கள். சமீபத்தில் 1996 ஜூன் 16-ஆம் தேதி நான் தில்லியிலிருந்து சென்னைக்கு ஃப்ளைட் பிடித்தபோது பைலட் வேலை நிறுத்தத்தால் பயணம் 6 மணி நேரம் லேட்.

2. ஆந்திராவில் முதல்வர் பதவிக்கு ஜகன் ரெட்டி தகுதியானவரா? ஆந்திரா அன்பழகன் ரோசையாவுக்கு ஒரு சான்ஸ் கொடுக்க வேண்டாமா?
பதில்: அன்பழகன்கள் எல்லா ஊர்களிலுமே இளிச்சவாயர்கள்தானே. இதில் என்ன ஆச்சரியம் இருக்கவியலும்?

3. வாரப் பத்திரிகைகளுக்கு, கதைகள் அவசியமா - ஸ்ரேயா முதல் ஸ்ருதி வரை 'திறந்த வெளி' போஸ் கொடுத்து விற்பனையைப் பெருக்கும்போது?
பதில்: ஒரு கையால் எத்தனை நேரம்தான் கை தட்டவியலும்? களைப்பாகி விடுமே. ஓய்வு வேண்டாமா. ரிலேக்ஸ் செய்யவே கதைகள்.

4. தி.மு.க. எப்போதுமே ஜனநாயகப் பண்புகளை மதிக்கும் என்ற மு.க. வின் பேச்சு பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?
பதில்: முதல்வர் இதையேல்லாம் பத்திரிகைகளில் எழுதினால் சிறந்த நகைச்சுவை எழுத்தாளர் எனப் பெயர் பெறுவார்.


அனானி (12.09.2009 இரவு 08.18-க்கு கேட்டவர்)
1. மூர்த்தியை மேலும் மேலும் வளர்த்து விட்டு ஆதாயம் தேடினீர்கள் என்ற குற்றசாட்டு உண்மையா?
பதில்: நானாவது என்னைக் காத்துக் கொள்ள போராடி வெற்றி பெற்றேன். ஆனால் அவனோ என்னைத்தான் நன்றாக வளர்த்தான். போராடினான் அதற்காக மிகப்பெரிய அளவில். அதே பெரிய அளவிலேயே உதையும் வாங்கினான். உப்பைத் தின்னவன் தண்ணி குடிச்சுத்தான் தீர வேண்டும்.

போலி விவகாரத்தில் பலர் பலவிதமாகக் கூறிவிட்டார்கள். அவனால் எல்லோரையும்விட மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டவன் நான். நான் அவனை எதிர்த்து போராடியபோது ஒத்துழைக்காவிட்டாலும் பரவாயில்லை, அதைரியப்படுத்தியவர்களே அதிகம். போலியின் செயல்பாடு என்னவென்றால் அவன் ஒருவரை மோசமாக அட்டாக் செய்வான். அவ்வாறு தாக்கப்பட்டவர் பேசாமல் நகர்ந்து விடுவார். இவன் கொக்கரித்துவிட்டு அடுத்த ஆளைத் தேடுவான். அவ்வாறு எனக்குத் தெரிந்து போனவர்கள் கிட்டத்தட்ட 10 பேர். பெரும்பான்மையினர் பார்ப்பனர்.

அவனுடைய துரதிர்ஷ்டம் டோண்டு ராகவன் என்னும் சண்டைக்கார பாப்பானை தேர்ந்தெடுத்தான். நான் விலகுவதாக இல்லை. உனக்காச்சு எனக்காச்சு என போராடினேன். இத்தனைக்கும் என்னைப் போல போலியாக உருவெடுத்து மற்றவர்களை நான் திட்டுவது போல தோற்றத்தை வரவழைத்தது அதுவரைக்கும் யாருமே செய்யாதது. கையாலாகாது வேடிக்கை பார்த்தவர்கள் எனக்கு மட்டும் புத்தி சொன்னார்கள். ஒன்று சண்டை போடுபவர்கள் இருவரையும் தடு, அதற்கு வக்கில்லாமல் ஒருவனை மட்டும் தடுக்காதே எனக் கூறிவிட்டு நான் எனது சண்டையைத் தொடர்ந்தேன்.

என் பெண்ணின் போட்டோவை போட்டபோது சதயம் போன்ற சில பதிவர்கள் ஆஷாடப்பூதித்தனமாக வருத்தம் தெரிவித்து விட்டு டோண்டுவுக்கு நன்றாக வேண்டுமென கெக்கலி கொட்டினர். இது பற்றி நான் இப்பதிவில் எழுதிய சில வரிகள் இதோ.

“அதற்கு முன்னால் சதயம் அவர்கள் அவர் பதிவில் போட்டதை இங்கே எடுத்து எழுதுகிறேன்.

//தனிப்பட்ட முறையில் பெரியவர் டோண்டுவிற்காக வருந்தினாலும் இத்தகைய ஆப்புகளை வாங்குவதற்காக அவர் மெனக்கெட்டு உழைத்தார் அல்லது அவரின் நலம்விரும்பிகளை உழைக்க வைத்தார் என்றே நிணைக்கிறேன்.அந்தச் சகோதரியைப் பற்றிய சில பின்னூட்டங்கள் நிச்சயமாய் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.//
ஏன் சார் ஆஷாடபூதித்தனமாக வருத்தமெல்லாம் தெரிவிக்கிறீர்? அதற்கு உங்களுக்கு அனானியில் பின்னூட்டம் இட்டவரே மேல். வெளிப்படையாகவே எழுதுகிறார்.

//ஜாக்கிரதை சதயம். நீங்கள் கூறியது போல ஒரு டோண்டு சந்திக்கும் பிரச்சினைகள் போதாதா. நீங்கள் வேறு சனியனை ஏன் விலைக்கு வாங்குகிறீர்கள்? டோண்டு நாசமாய் போகட்டும். அவனால்தானே மட்டுறுத்தல் வந்து தமிழ்மணத்தின் சுதந்திரமே பறிபோனது. நன்றாக வேண்டும் அவனுக்கு.//
அதானே, அந்த மட்டுறுத்தலால்தானே உங்கள் பதிவுகள் இற்றைப்படாமல் இருக்கின்றன. போய் ஸ்வீட் சாப்பிடுங்கள் சார்.

//இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் டோண்டு அவர்கள் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருப்பார் என நான் எண்ணவில்லை.//
இல்லையே, நன்றாகத் தூங்கிக் கொண்டுதான் இருந்தேன்.

//மற்றபடி தொழில்நுட்ப யுத்தத்தில் உங்கள் கை ஓங்கியிருப்பது உண்மைதான்....உங்களின் திறமையையும், உழைப்பையும், துல்லியத்தையும் பார்த்து என் போன்ற அரைட்ரவுசர்கள் அசந்து போயிருக்கிறோம். உங்களின் பின்னூட்டத்தை நீக்கவே படாதபாடு பட்டேன்...ஹி..ஹி...என்னுடைய தொழில்நுட்ப அறிவு அத்தகையது.//
போய் போலி டோண்டு ரசிகர் மன்றம் வைப்பதே நலம், அல்லது சிம்ரன் ஆப்பக்கடையிலிருக்கும் ரசிகர் மன்றத்தின் தலைமைப் பொறுப்பை எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் உங்களிடம் ஒரே ஒரு கேள்வி, கருத்துச் சுதந்திரம் பறிபோகிறதென்று ஒரு ஹை மாரல் ரீசனுக்காக மட்டுறுத்தலையே செயல்படுத்தாது இருப்பவர் போலியின் தரப்பிலிருந்து வரும் கருத்து சுதந்திர கொலைக்கு இப்படி ஏன் ஜிஞ்சா அடிக்கிறீர்கள்? உங்களுக்கும் ஆப்பு வைப்பான் என்ற பயம்தானே காரணம்”?


போலியுடன் நான் போடும் சண்டை எனக்காக மட்டும் இல்லை, பதிவர் சுதந்திரத்துக்காக என்ற அடிப்படை அறிவு கூட இல்லாது குருட்டுத்தனமாக பலர் இருந்தனர்.

2. மூர்த்தி உங்களின் குடும்ப பெண்களை புகைப்படம் போட்டு மோசமாக எழுதியும் நீங்கள் ஏன் காவல்துறையில் புகார் கொடுக்கவில்லை?
பதில்: யார் சொன்னது கொடுக்கவில்லை என்று? 2006-லேயே சிபிசிஐடியில் புகார் தந்தேன். அங்கு டிஜிபி ஆக ஒரு பெண்மணி இருந்தார். பலமுறை அந்த அலுவலகம் சென்றேன். என்னிடமிருந்து விவரங்கள் வாங்கிக் கொண்டு காசி, திருமலை ஆகியோரும் புகார் தந்தனர். ஆனால் 2006-ல் சைபர் கிரைம் துறையிடம் இப்போது இருப்பது போன்று வசதிகள் இல்லை. அவை வர சில காலம் பிடித்தது.

மூர்த்தியின் கெட்ட காலம் 2008-ல் செந்தழல் ரவியின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் அவரது பெயரை ஆர்க்குட்டில் கெடுத்து வைத்தான். அவர் சிறிது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி ஒரு மந்திரியின் பி.ஏ. மூலம் நேராக சிடி போலீஸ் கமிஷனரிடம் சென்றார்.

இது சம்பந்தமாக ஜூலை 2008-ல் நான் போலி டோண்டுவுடன் நேரடி சந்திப்பு என்னும் பதிவில் எழுதிய வரிகள் இதோ:
செந்தழல் ரவி, உண்மைத் தமிழன், ஓசை செல்லா ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் மூர்த்தியின் மேல் புகார் அளித்து அது பத்திரிகைகளிலும் வந்தது தெரிந்ததே. அதற்கு ஒரு வாரம் கழித்து நானும் சென்றேன். எனது புகார் சைபர் கிரைமில் ஒரு உதவி ஆய்வாளர் வசம் ஒப்படைக்கப்பட்டது. அவரிடம் என் பெயரில் மூர்த்தி தயாரித்த ஆர்க்குட் ஆபாச பக்கங்களை காண்பித்தேன். மொத்தம் 23 ப்ரொஃபைல்கள். எல்லாவற்றையும் பொறுமையாக அவர் ஸ்க்ரீன் ஷாட்டுகள் எடுத்தார். நேரம் ஆக ஆக மூர்த்தியின் மேல் அவரது கோபம் அதிகரிக்க ஆரம்பித்தது. போலி டோண்டு பற்றி நான் இட்ட பதிவுகள் எல்லாவற்றையும் பார்த்தார் அவர்.

முதல் காரியமாக ஆர்க்குட் பக்கங்களை அவர் கூகளுக்கு எழுதி அழிக்கச் செய்தார். டுண்டூ பதிவர் எண்ணில் போடப்பட்டிருந்த மூன்று வலைப்பூக்கள் அழிக்கப்பட்டன. வெளியில் சொல்லாமல் கமுக்கமாக விசாரணை நடத்தப்பட்டது. கூகள் நிறுவனம் ஒத்துழைத்தது. மலேஷியாவுக்கும் செய்திகள் பறந்தன. எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக நேற்று ஒரு விஷயம் நடந்தது.

நேற்று சைபர் க்ரைமில் வைத்து போலி டோண்டு மூர்த்தியை நேருக்கு நேர் சந்தித்தேன். கேசை விசாரித்து வரும் அதிகாரிகளே மூர்த்தியின் செயல்பாடுகளைப் பார்த்து நொந்து போயினர். புகார் அளித்தவன் என்ற ஹோதாவில் என்னையும் அங்கு அழைத்ததால் நான் அங்கு சென்றிருந்தேன்.

கிட்டத்தட்ட இரண்டு மணி நேர விசாரணை. மூர்த்தி இட்டிருந்த பதிவுகளின் அச்சடிக்கப்பட்ட காகிதங்களுடன் பதிவர் உண்மைத் தமிழனும் ஆஜரானார். என் தரப்புக்கு நானும் சைபர் கிரைம் அதிகாரியிடம் மூர்த்தியால் உருவாக்கப்பட்ட உரல்களை எடுத்து தந்தேன்.

மூர்த்தியுடன் அவரது வக்கீல் மற்றும் மைத்துனர் வந்திருந்தனர். தன் சகோதரியின் கணவன் இவ்வளவு கீழ்த்தரமாக செயல்பட்டதைப் பார்த்து அந்த இளைஞருக்கு பேச்சே வரவில்லை. அவமானத்தால் குனிந்த தலை நிமிரவே இல்லை.

மூர்த்திக்கு மலேஷியாவில் பார்த்த வேலை பறிபோயிற்று. பாஸ்போர்ட் முடக்கப்பட்டது. (அப்படியில்லை என செந்தழல் ரவி கூறுகிறார். இந்த வரியை சேர்த்த நேரம் 14.38 மணி, 25.07.2008)

இப்படியாக மூன்றாண்டுகளாக நடத்திய யுத்தம் முடிவுக்கு வந்தது. இந்த மூன்றாண்டுகளாக என்னென்னவெல்லாம் நடந்து விட்டன! மூர்த்திக்கு சப்பைக்கட்டு கட்டியவர்கள் எத்தனை பேர்?


இப்போதும் போலியின் அல்லக்கைகள் சப்பைக்கட்டு கட்டுகிறார்களே? நடந்ததிலிருந்து பாடம் கற்காதவர்கள் பின்னால் வருந்துதலைத் தவிர்க்கவியலாது.

இன்னொருவர் இப்போது நடந்ததைக் கூறுகிறேன் பேர்வழி எனக் கிளம்பி என்னமோ மூர்த்தி மகாத்மா ரேஞ்சுக்கு இருந்ததுபோலவும் நான் அவனை சீண்டிச் சீண்டி போலியாக்கியதாகவும் அழுவாச்சி பதிவுகள் போட்டு வருகிறார். அவற்றை எல்லாம் ஒரு சிரிப்புடன் பார்த்து வருகிறேன்


வஜ்ரா
1. அண்ணாதுரை பிறந்தநாளன்று கோவை குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட சில குற்றவாளிகளை விடுதலை செய்துள்ளார் கருணாநிதி. இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: முற்றிலும் பொறுப்பற்றச் செயல்.


கேள்விகள் ஏதும் இப்போதைக்கு கைவசம் இல்லை. ஆகவே மேலும் கேள்விகள் வந்தால் மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

34 comments:

நாரத முனி said...

டோண்டு என்றால் அசடு என்று அர்த்தம் என்பதை நான் இப்போ நான்றாக தெரிஞ்சு கொண்டேன்.. அவர் கேட்டது மு க ஸ்டாலின் பத்தி...

நாரத முனி said...

// அன்பழகன்கள் எல்லா ஊர்களிலுமே இளிச்சவாயர்கள்தானே. இதில் என்ன ஆச்சரியம் இருக்கவியலும்?//

ஹி ஹி ஹி,... நல்ல பதில்

dondu(#11168674346665545885) said...

//அவர் கேட்டது மு க ஸ்டாலின் பத்தி...//
அதுகூட தெரியாமலா இருப்பேன். இது ச்சும்மா வெறுப்பேத்தறத்துக்காக கொடுத்த பதில்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

M Arunachalam said...

அடுத்த வார கேள்வி:

அன்பழகன் or நெடுஞ்செழியன் - இவர்களில் யார் சிறந்த இளிச்சவாயர்?

நாரத முனி said...

// ச்சும்மா வெறுப்பேத்தறத்துக்காக கொடுத்த பதில்.//

தெரியுது நானும் சும்மா உங்கள கலாய்க்க குடுத்த கமென்ட் :-) தானிக்கி தீனி சரியா போயிந்தி :-)

Anonymous said...

கேள்விகள்:

எம்.கண்ணன்

1. கமல்ஹாசனின் ஒவ்வொரு படத்தின் ரீலீசும் ஏன் ஏதாவது வழக்கு அல்லது பிரச்னைகளில் சிக்குகிறது ? இதில் இண்டஸ்ட்ரீகாரர்களின் உள்குத்து இருக்குமோ ?

2. ஜெயாடிவியின் காலைமலர் நிகழ்ச்சிகளை மாற்றி "குட் மார்னிங் தமிழா" என வேறு விதமான நிகழ்ச்சிகளோடு வருகிறதே ? பார்க்கிறீரா ?

3. முக ஸ்டாலினின் உடல்நிலை பற்றிக் கேட்டால் - ரஷ்ய ஸ்டாலினைப் பற்றி பதிலெழுதி வெறுப்பேற்றுகிறேன் என சொல்கிறீர்களே ? யாரிடமாவது கேட்டாவது சொல்லும்மையா - மு க ஸ்டாலினுக்கு என்ன உடம்பு என ? (இல்லை லண்டனிலிருந்து ஸ்விஸ் சென்று பண விவகாரங்களை பைசல் பண்ண பயணமா ?)

4. தினமும் கள்ளக்காதல், கற்பழிப்பு என தமிழ்நாட்டில் மட்டும் தான் இப்படி செக்ஸ் குற்றங்கள் அதிகரித்துள்ளனவா ? எங்கு போகிறது தமிழ்ச் சமூகம் ?

5. கொலு வைப்பதுண்டா ? எந்த சுண்டல்கள் பிடிக்கும் ? கொலுவுக்கு வரும் பெண்டிரை சைட் அடிப்பதுண்டா ?

6. கமல்ஹாசன் திருமணமே வேண்டாம் என சொன்னதற்கு குமுதம் ஸ்நேகிதி, கல்கி தராசு தவிர பெரிய கண்டனங்கள் எழவில்லையே ? உங்கள் கருத்து என்ன ? கமல் தற்போது கவுதமியுடன் வாழும் முறை பற்றி உங்கள் கருத்து என்ன ? நாளை கவுதமியுடன் வெளியூர் செல்லும் போது ஓட்டல் அறை புக் செய்ய - கவுதமி யார் எனக் கேட்டால் என்ன பதில் சொல்லுவார் ?

7. விகடன், குமுதம், குங்குமம், ஏனைய மகளிர், பக்தி, ஜோதிடம் பத்திரிக்கைகள் எல்லாம் தாண்டி மாலனின் 'புதிய தலைமுறை' விற்குமா ? எதை நம்பி அச்சுப் பத்திரிக்கை துவங்கியுள்ளார் ? இணையத்திலேயே துவங்கியிருக்கலாமே ?

8. வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இன்னோரு சிவராஜ் பாடீல் என எதிர்கட்சிகள் சொல்ல ஆரம்பித்துவிட்டனரே ? ஆஸ்திரேலியா, சீனா, பாகிஸ்தான் என சொதப்பல்கள் ?

9. கொடநாடு போன்ற மலைகாட்டு பங்களாவில் 108 நாட்கள் இருக்கவேண்டும் என உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் அங்கு சென்று என்ன செய்வீர்கள் ? (மொழிபெயர்ப்பு, பதிவுகள் தவிர)

10. நங்கநல்லூரில் சமீபத்தில் நடந்த 4 நல்ல விஷயங்கள் பகிரவும்.

திராவிடன் said...

கிழியுமா டோண்டுவின் முகமூடி

கடந்த பலவருடங்களாக நிகழ்ந்து வரும் போலிடோண்டு விவகாரம் சாக்கடை சகதியாய் நாறிக்கொண்டிருக்கும் சமயத்திலே, அன்று முதல் இன்று வரை தான் மட்டுமே ஒரு பரமயோக்கியன் மற்றவர்கள் எல்லாம் அல்லக்கைகள், கோழைகள் என புலம்பித்தீர்த்து வரும் திருவாளர் டோண்டு அவர்களின் செய்கையை நாம் ஆராய்ந்தால், அவரைப் போன்ற ஒரு சைக்கோவையோ படுகோழையையோ நாம் காணமுடியாது. உதாரணம் போலிடோண்டு விவகாரம் நடந்துகொண்டிருந்த போது முரளிமனோகர் என்ற பெயரில் தனது போலித்தனத்தை காட்டிய திருவாளர் டோண்டு அந்த குட்டு வெளிப்பட்டு நாறி நாத்தமெடுத்த போதும், அவரை நல்லவர் என்றும் போலிப்பெயரில் பின்னூட்டம் இட மாட்டார், என்ன ஆனாலும் தன் சொந்த ஐடியில் தான் பின்னூட்டமிடுவார் என நம்பிக்கொண்டிருந்த பலரின் கனவுகளில் மண்ணைத்தூவி தன்னை ஒரு போலியாக நிறுபித்தார்.

சரி அந்த செய்கை முடிந்தாவது தன்னைத் திருத்திக்கொள்கிறாரா? அதாவது தற்சமயம் திருந்தியிருக்கிறாரா என பார்த்தோமேயேனால் அவரது சேட்டைகள் அதிகரித்து தான் உள்ளது. அதாவது அவருடைய அனைத்துப் பதிவுகளையும் கவனியுங்கள்,. அவர் யாரையாவது தாக்கி பதிவு போட்டவுடன் அவர் செய்யும் முதல் அயோக்கியத்தனம் முக்காடு வேலை. அதே பதிவில் அனானி பெயரில் அவருக்கு சாதகமாகவும் அந்தப் பதிவு தாக்கும் நபரை இழிவாகவும், மிகக்கொச்சையான சொற்களைக்கொண்டும் அனானி பெயரில் பின்னூடமிடுவது. அதாவது டோண்டு மூர்த்தியைத் தாக்கி பதிவு போட்டால் அதேபதிவில் அனானி பெயரில் அவரே வந்து மூர்த்தியை தாக்குவது. தந்தை பெரியாரைப் பற்றி தவறான பதிவு போட்டு அதற்கு யாராவது மறுப்பு சொன்னால் அவர்களை மட்டுமின்றி பெரியாரையும் மிகக்கடுமையாகத் தாக்கி படுகேவலமாக அனானி பெயரில் எழுதுவது, .அதே போல முசுலிம்களைப் பற்றி பதிவு போட்டால் அனானி பெயரில் படுகேவலமாக பின்னூட்டமிடுவது என ஒரு ஈன வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் டோண்டு அடுத்தவர்களை அல்லக்கைகள் என்றும் போலிகள் என்றும் சொல்வது காமடியான ஒரு விசயம்.

இதற்கு என்ன ஆதாரம் என நீங்கள் கேட்கலாம். அதாவது அதற்கு மிகச்சிறந்த உதாரணம் டோண்டு பதில்கள் பகுதியை பார்த்தால் தெரிந்துவிடும். அவர் கேள்வி பதில் வெளியிட்ட 10 நிமிடத்தில் அனானி பெயரில் 32 கேள்விகள் (தற்போது 12 கேள்விகளாம்) இருக்கும். அடுத்துப் பார்த்தால் அடுத்த அனானி அல்லது அதர் ஆப்சனில் 15 அல்லது 20 கேள்விகள் இருக்கும். இதுவரைக்கும் அந்த கேள்வி கேட்கும் அனானி ஒரு நாள் கூட
கேள்வி கேட்க மிஸ்பண்ணியதேயில்லை. இதற்கு மேல் டோண்டு ஒரு சைக்கோ என நிறுபிக்க என்ன ஆதரங்கள் வேண்டும்?

திராவிடன் said...

அனானி கேள்வி கேட்டால் 1 அல்லது 2 கேள்விகள் அதுவும் என்றாவது ஒரு நாளைக்குத்தான் கேட்பார்கள்? தொடந்து அனானி 32 கேள்விகள் கேட்க அவன் என்ன முட்டாளா? அல்லது அவனுக்கு பைத்தியமா? அல்லது டோண்டு தான் மிகச்சிறப்பாக சுவாரசியமாக பதில் சொல்கிறாரா?அல்லது டோண்டு தான் மிகச்சிறந்த அறிவுஜீவியா? ஏன் இந்த கேவலப் பொழப்பு. டோண்டு பதில்கள் தற்போது 60 வருகின்றன. அதிலே 55 கேள்விகள் கேட்கும் அனானி சாட்சாத் நம்ம திருவாளர் டோண்டு தான். அனைத்தும் குப்பை கேள்விகள் மொக்கை பதில்கள். ஏதோ தன்னை (குமுதம்) அரசு என்றோ மதன் என்றோ நினைத்துக்கொண்டு தானே கேள்வி கேட்டு தானே பதில் சொல்லும் இதற்குப் பெயர் சைக்கோத் தனம் தானே!

பதிவின் பதிவரைத் திட்டி பின்னூட்டமிடத் தான் அனானி பெயரை பயன்படுத்துவார்கள். அல்லது வலைப்பூ இல்லாதவர்கள் அனானி பெயரை சில நேரங்களில் மட்டும் பயன்படுத்துவார்கள். ஆனால் யாரும் தொடந்து அனானி பெயரில் பக்கம் பக்கமாக கேள்விகள் எழுதி, கருத்துக்கள் எழுதி அதை தொடந்து வெளியிட மாட்டார்கள். ஆக இதிலிருந்தே டோண்டு பதிவுகளில் அனானி பெயரை முழுக்க முழுக்க பயன்படுத்துவது அய்யா திருவாளர் டோண்டு தான் என்பதை அறியலாம். தானே சாக்கடைக்குள் உக்கார்ந்து கொண்டு மற்றவர்களை சாக்கடை சாக்கடை என சொல்லி தொடந்து குப்பை/மொக்கை/அருவை பதிவுகளைப் போட்டு கொல்லாமல் அவர் தன்னுடைய அனானி சைக்கோத் தனத்தை இத்தோடு விட்டுவிடுவார் என இதன் மூலம் நாம் கேட்டுக்கொள்கிறோம்.

அவர் இந்தக் கட்டுரைக்கு அவர் மறுப்புத் தெரிவித்தால் அவர் தான் அனானி பெயரில் பின்னூட்டம் இடுகிறார் என்ற மறுக்க முடியாத தெளிவான ஆதாரத்தை வெளியிட தயார். ஆனால் அவர் மறுப்புத்தெரிவித்து சவால் விடுவதை பகிரங்க பதிவாக இடவேண்டும்.அதே போல நமது ஆதாரவிசயங்களையும் முழுமையாக வெளியிட வேண்டும். அதற்குப் பிறகாவது அனானி பெயரில் கேள்விகள் மற்றும் பின்னூட்டம் இடுவதையும், மற்றவர்கள் அயோக்கியர்கள், தான் மட்டும் தான் யோக்கியன் என்று சொல்லிக்கொள்வதையும் நிறுத்தி விடுவாரா? என நான் திருவாளர் டோண்டு அவர்களுக்கு பகிரங்க சவால் விடுகிறேன்.

என் சவாலுக்கு அவர் ஒப்புக்கொண்டால் அதை பகிரங்கமாக வெளியிட்டு அழைப்பு கொடுக்கவேண்டும்.

பிகு: இந்த கட்டுரை ஒரு பிரதி அய்யா திருவாளர் டோண்டு அவர்களுக்கும் பின்னூட்ட பகுதியில் இட்டுள்ளேன். ஆனால் நிச்சயமாக இதை அவர் வெளியிட மாட்டார் என எனக்குத் தெரியும். அதனால் தான் இதன் ஒரு நகலை உங்கள் பகுதியில் பதிக்கிறேன். தயவு செய்து இதை ஒரு பதிவாக வெளியிட்டால் நலம். நன்றி

dondu(#11168674346665545885) said...

ஐயா திராவிடரே,

முதலில் நீங்கள் வெளிப்படையாக வரவும். பிறகு மற்றவர்களுக்கு சவால் எல்லாம் விடலாம்.

டோண்டு ராகவன்

பாலமுருகன் said...

உங்கள் கேள்வி பதிலைப் பார்க்கும்போதே தெரிகின்றதே உங்கள் தரம் என்னவென்று!

வால்பையன் said...

என் கடையில் கூட்டம் அதிகமென்பதால் வருவதற்கு தாமதம் ஆகிவிட்டது மன்னிக்கவும்!

வால்பையன் said...

//எம்.ஜி.ஆர். செய்த தருமமே அவரைக் காப்பாறியது என்றுதான் நான் கூறுவேன்.//

அப்படியானால் தர்மம் தலையை மட்டுமல்ல!
தொண்டை வரை காக்கும் சரியா!?

வால்பையன் said...

//விகடனில் ஸ்னேகாவின் பிகினி டிரஸ் பார்த்து ஜொள்ளுவிட்டீர் தானே?//

அதை விட ”டாப்”பாக நெட்டில் கிடைக்குமே!

வால்பையன் said...

//சிவன் விஷ்ணு உதாரணம் சரியில்லை. அவர்கள் சேர்க்கை நடந்தபோது விஷ்ணு மோகினி அவதாரத்தில் இருந்தார்.//

விஷ்ணு மீண்டும் மோகினி அவதாரம் எடுப்பாரா?

வால்பையன் said...

//ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் மாதிரி ப்ளேன் டிரைவர்கள் வேலை நிறுத்தம் செய்யலாமா?//


சென்னையிலிருந்து அந்தமான் செல்லும் நான்கவுரி என்ற கப்பல் மாசத்துக்கு நான்கு நாள் கேப்டன் ஸ்ட்ரைக்கில் நிற்கும்!

வால்பையன் said...

//அன்பழகன்கள் எல்லா ஊர்களிலுமே இளிச்சவாயர்கள்தானே. இதில் என்ன ஆச்சரியம் இருக்கவியலும்?//


ஹாஹாஹா!

சத்தமாக சிரித்து விட்டேன்!

Anonymous said...

\\இதற்கு என்ன ஆதாரம் என நீங்கள் கேட்கலாம். அதாவது அதற்கு மிகச்சிறந்த உதாரணம் டோண்டு பதில்கள் பகுதியை பார்த்தால் தெரிந்துவிடும். அவர் கேள்வி பதில் வெளியிட்ட 10 நிமிடத்தில் அனானி பெயரில் 32 கேள்விகள் (தற்போது 12 கேள்விகளாம்) இருக்கும். அடுத்துப் பார்த்தால் அடுத்த அனானி அல்லது அதர் ஆப்சனில் 15 அல்லது 20 கேள்விகள் இருக்கும். இதுவரைக்கும் அந்த கேள்வி கேட்கும் அனானி ஒரு நாள் கூட
கேள்வி கேட்க மிஸ்பண்ணியதேயில்லை. இதற்கு மேல் டோண்டு ஒரு சைக்கோ என நிறுபிக்க என்ன ஆதரங்கள் வேண்டும்?//

கூமுட்டை திராவிடன் அவர்களுக்கு, இவ்வளவு செய்பவர் இந்த சின்ன விஷயத்திலா கோட்டை விட்டிருப்பார்? மூளையை பக்கத்திலிருக்கும் கசாப்புக் கடையில் வைத்து விட்டு டோண்டு சாரிடம் கேள்விகள் கேட்க வேண்டாம்.
சொந்தப் பேர்ல கேள்வி கேட்டா உன்னோட திராவிட குஞ்சுகளோட தொல்லை, ஆபாச அர்ச்சனை தாங்காமல் ஏதோ ஒரு புண்ணியவான் கேள்வி கேட்கிறார். அதைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யவும். இன்று ஐயா ஈ வே ரா வின் பிறந்த நாள். அவர் வழியில் ஆட்சி நடாத்துபவர்கள் நடத்தும் டாஸ்மாக் ல் ஒரு குவார்ட்டர் அடித்து விட்டு மட்டையாகவும்.
ஆல்வேஸ் அன்புடன் அனானி.

வால்பையன் said...

//ஸ்ரேயா முதல் ஸ்ருதி வரை 'திறந்த வெளி' போஸ் கொடுத்து விற்பனையைப் பெருக்கும்போது?
பதில்: ஒரு கையால் எத்தனை நேரம்தான் கை தட்டவியலும்? களைப்பாகி விடுமே. ஓய்வு வேண்டாமா. ரிலேக்ஸ் செய்யவே கதைகள்.//


ஹாஹாஹா

இன்னைக்கு தலைவரு செம மூடுல இருப்பார் போல!

வால்பையன் said...

//தி.மு.க. எப்போதுமே ஜனநாயகப் பண்புகளை மதிக்கும் என்ற மு.க. வின் பேச்சு பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?//

ஜனநாயகம் என்றால் மு.க வின் குடும்பம் என்று ஊருக்கே தெரிந்த பிறகு அபிப்பிராயம் சொல்ல என்ன இருக்கு

வால்பையன் said...

//அண்ணாதுரை பிறந்தநாளன்று கோவை குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட சில குற்றவாளிகளை விடுதலை செய்துள்ளார் கருணாநிதி. இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? /

அவர்கள் அடுத்த ஆறு மாதத்தில் தண்டனை காலம் முடிந்து விடுதலை ஆக வேண்டியவர்கள்!

கண்ணன் said...

//இதற்கு என்ன ஆதாரம் என நீங்கள் கேட்கலாம். அதாவது அதற்கு மிகச்சிறந்த உதாரணம் டோண்டு பதில்கள் பகுதியை பார்த்தால் தெரிந்துவிடும். அவர் கேள்வி பதில் வெளியிட்ட 10 நிமிடத்தில் அனானி பெயரில் 32 கேள்விகள் (தற்போது 12 கேள்விகளாம்) இருக்கும். அடுத்துப் பார்த்தால் அடுத்த அனானி அல்லது அதர் ஆப்சனில் 15 அல்லது 20 கேள்விகள் இருக்கும். இதுவரைக்கும் அந்த கேள்வி கேட்கும் அனானி ஒரு நாள் கூட
கேள்வி கேட்க மிஸ்பண்ணியதேயில்லை. இதற்கு மேல் டோண்டு ஒரு சைக்கோ என நிறுபிக்க என்ன ஆதரங்கள் வேண்டும்?//

கேள்விகள் ஏதும் இப்போதைக்கு கைவசம் இல்லை. ஆகவே மேலும் கேள்விகள் வந்தால் மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

காண்டு said...

//அவர் யாரையாவது தாக்கி பதிவு போட்டவுடன் அவர் செய்யும் முதல் அயோக்கியத்தனம் முக்காடு வேலை. அதே பதிவில் அனானி பெயரில் அவருக்கு சாதகமாகவும் அந்தப் பதிவு தாக்கும் நபரை இழிவாகவும், மிகக்கொச்சையான சொற்களைக்கொண்டும் அனானி பெயரில் பின்னூடமிடுவது.//

உன்ன மாறி ஆளுங்க உங்க வலைப்பதிவுல பண்ணிக்கற தில்லாலங்கடி வேலைய, டோண்டு பண்ணுரார்னு சொன்னா, எல்லாரும் நம்பிடுவாங்களா? அதுவும் உன்னமாரி மொள்ளமாரிங்க கிரிமினல்னு நிரூபிக்கப்பட்ட போலி டோண்டுவுக்கு சப்போர்ட் பண்ணும்போதே தெரியுதே, எப்பேர்பட்ட கிரிமினல் பேர்வழி நீங்கல்லாம்னு?

//தானே கேள்வி கேட்டு தானே பதில் சொல்லும் இதற்குப் பெயர் சைக்கோத் தனம் தானே!//

ஆக மொத்தம், கருணாநிதி ஒரு சைக்கோ பேர்வழின்னு திராவிடனே இப்போ சொல்லிட்டான்.

//குப்பை/மொக்கை/அருவை பதிவுகளைப் போட்டு கொல்லாமல்//

ஏண்டா லூசு, "குப்பை/மொக்கை/அருவை" பதிவு அப்படீன்னு சொல்ரதுக்காவது உன்ன மாறி மொள்ள மாறிங்க வந்து படிக்கறீங்க இல்ல, அப்பறம் எதுக்கு இந்த உதார் எல்லாம்?

//மற்றவர்கள் அயோக்கியர்கள், தான் மட்டும் தான் யோக்கியன் என்று சொல்லிக்கொள்வதையும் நிறுத்தி விடுவாரா?//

So, நீங்க யோக்கியனுங்களா இல்லையான்றது இப்ப பிரச்சினை இல்லை; நீங்க அயோக்கியனுங்கன்றதுல உங்களுக்கே சந்தேகமோ, ஆட்சேபனையோ இல்லை போலிருக்கிறது. Very Good.
Thanks for the self-confession.

M Arunachalam said...

நிகழ்வு 1: ஹெலிகாப்டர் விபத்தில், ஆந்திர மாநில முதல்வர் Y.S.ராஜசேகர ரெட்டி திடீர் மறைவு.

நிகழ்வு 2: மேற்படி நிகழ்வு நடந்து சில நாட்களிலேயே, 'அசத்யம்' நிறுவனர் B.ராமலிங்க ராஜு, தான் வாழ்க்கையை "நிம்மதியாகவும், ஹாய்யாகவும்" கழித்துவரும் ஹைதராபாத் சிறையில் இருந்து, 'நெஞ்சு வலி' மற்றும் 'மாரடைப்பு' காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சில நாட்களிலேயே அவருக்கு angioplasty சிகிச்சை பெற்றார்.

இந்த இரு நிகழ்வுகளுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா - Butterfly Effect - போல?

உண்மைவிளம்பி said...

Hot News! Hot News!! Hot News!!!

டோண்டு அய்யா வழியிலேயே, இப்போ இன்னொரு வலைப்பதிவரும் போலீஸ் துணையுடன் போய், புனை பெயரில் அசிங்க மெயில்கள் மற்றும் அவதூறு மெயில்கள் அனுப்பி மிரட்டி வந்த மற்றொரு வலைப்பதிவரை கையும், களவுமாக பிடித்து, "போலீஸ் முறையில்" விசாரித்ததில், அவன் இதுவரை தான் செய்து வந்த cyber crime அசிங்கங்களை ஒத்துக்கொண்டு, போலீஸ் முன்னிலையிலேயே அந்த வலைப்பதிவருக்கு மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்திருக்கிறான் என்று பட்சி சொல்கிறது.

குற்றவாளி வலைப்பதிவர் மற்றும் பாதிக்கப்பட்ட வலைப்பதிவர் இரண்டு பேருமே ஒரு பிரபல நடிகரின் விசிறிகள்; அவர் பெயரிலேயே வலைபதிவும் நடத்துகிறார்கள். ஆனால், குற்றவாளி பதிவர், "தீவிரவாத ரசிகர்" கூட. அதனால், போலீஸ் "அந்த" கோணத்திலும் அவனை விசாரிக்க ஆரம்பித்திருப்பதாக தகவல். அவன் பதிவுக்கு வரும் பின்னூட்டங்களிலும் மற்றும் அதனை இடுபவர்களின் I.P. முகவரிகளிலும் போலிசின் பார்வை பாய தொடங்கிவிட்டதாகவும் பட்சி பரபரக்கிறது.

வஜ்ரா said...

//
நிகழ்வு 1: ஹெலிகாப்டர் விபத்தில், ஆந்திர மாநில முதல்வர் Y.S.ராஜசேகர ரெட்டி திடீர் மறைவு.
//

இந்துக்கோவில் சொத்துகளை சர்ச்சுக்கும், ஜெரூசலம் செல்ல கிருத்தவர்களுக்கு சலுகைகளாகவும் வாரி வழங்கிய வள்ளலின் திடீர் மறைவு கிருத்தவத்திற்கே பெருத்த இழப்பாக ஆந்திர எவாஞ்சலிச கிருத்தவர்கள் கருதுகிறார்கள்.

Anonymous said...

//அன்பழகன் or நெடுஞ்செழியன் - இவர்களில் யார் சிறந்த இளிச்சவாயர்?//

Similarities:

1. Both were professors.
2. Both are happy being in #2.
3. Both dont want to be #1.
4. Both are good for nothing.
5. Both are good "Jaldraas"
6. Both are hopeless
7. Both never help/favour followers.
8. Both belongs to same community (may be related).

Differences:
One is gone, other is not yet.

Late PTR Palanivel Rajan is also from same community, but he is much better leader than these two.

Unknown said...

தளவாய் தொண்டை முதலியர் பற்றிய ஒரு சில தகவல்கள்.தகவல் ‍‍‍தினமனி
> தாய்த் தமிழையும், அதன் செழுமைகளையும் மெல்ல மறந்துவரும் சூழ்நிலையில்,
> தமிழ் இலக்கியதிற்கு வளமை சேர்த்த பல நல்லறிஞர்களுள் வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய
> c குறிப்பிடத்தக்கவர். அவரைக் குறித்து இன்றைய சந்ததியினர் அறிந்து
> கொள்வதென்பது அவரை மட்டும் அறிந்துகொள்வது மட்டுமன்று; நம் தமிழ்த்
> தாய்மொழியின் சிறப்பை அறிந்து கொள்வதும் ஆகும்.

> காஞ்சி அருகில் மெய்ப்பேடு என்னும் சிற்றூரில் வாழ்ந்த தொண்டை மண்டல வேளாளர்
> மரபைச் சார்ந்த அரியநாதர் என்பவர் விஜயநகரப் பேரரசில் கிருஷ்ணதேவராயர்
> ஆட்சிக்காலத்தில் படைப்பிரிவில் பணியாற்றி வந்தார். பீஜப்பூர் சுல்தான்
> விஜயநகரப் பேரரசின் மீது படையெடுத்து வந்தான். போர்க்களத்தில் சல்மத்கான்
> என்பவன் கிருஷ்ணதேவராயரை குறிவைத்து தாக்க அவரை நெருங்கியபோது, அரியநாதர் அந்த
> வீரனுடன் யுத்தம் செய்து அவனை அவனது படையோடு துரத்தி அடித்து, தம் மன்னர்தான்
> வெற்றிவாகை சூட பேருதவியாக விளங்கினார்.

> அரியநாதரின் இத்தீரச் செயலை மன்னர் பாராட்டி, அவருக்கு *"படைமுதலி"* என்னும்
> பட்டத்தைத் தந்து, அவரைப் படைத் தளபதியாக்கி அமைச்சருக்கு உரிய தகுதியையும்
> வழங்கினார். அன்றைய நாள் முதலாக அரியநாதர் "தளவாய் அரியநாத முதலியார்" என்னும்
> சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டதோடு, அவரது வழிவந்த மரபின் மக்களும் தம்
> இயற்பெயரோடு "முதலியார்" என்னும் அப் பட்டப்பெயரையும் இணைத்துக்கொள்ள, அந்த
> "விருதுப்பெயர்" காலப்போக்கில் இனப்பெயராக வழங்கப்பட்டு வருகிறது.

Unknown said...

அத்தகு அரியநாத முதலியார் வழிவந்த சுப்பிரமணிய முதலியார் திருநெல்வேலிச்
> சீமையை ஆண்டுவந்த மேடைதளவாய் திருமலையப்ப முதலியாரின் சகோதரி மகள் உலகண்ணியை
> திருமணம் செய்துகொண்டார். திருமலையப்ப முதலியார் ஆர்க்காடு நவாபு மன்னர்களின்
> பிரதிநிதியாக விளங்கியவர். அவர் ஒரு முறை தென்காசிக்கு அருகிலிருக்கும்
> வெள்ளக்கால் என்னும் சிற்றூருக்கு வந்து அங்கு ஓர் அழகான மாளிகை கட்டி
> குடியேறினார்.

> சோழவந்தான் சுப்பிரமணிய முதலியார் - உலகண்ணி தம்பதியரின் குடும்பம் செழித்து
> தழைத்தது. அவர்களது புதல்வர் பழனியப்ப முதலியாருக்கு 1857ம் ஆண்டு ஆகஸ்டு
> திங்கள் 14ம் நாள் பிறந்த தலைமகனுக்கு தாத்தாவின் பெயரான சுப்பிரமணியம் என்ற
> பெயர் இடப்பட்டு அவர் அவ்வாறே அழைக்கப்பட்டார். தனது தாத்தாவின் பெயரைப்பெற்று
> விளங்கிய பெயரன்தான் வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியார்.

> பிள்ளைப் பருவத்தை வெள்ளக்காலில் கழித்தபிறகு சிறந்ததொரு கல்வி கற்றுத்தேற
> தனது அத்தையின் கணவர் திருநெல்வேலி மேடை தளவாய் குமாரசாமி முதலியாரின்
> அரண்மனைக்கு வந்து சேர்ந்தார். தெற்குப் புதுத்தெருவில் அமைந்திருந்த கணபதி
> வாத்தியாரின் திண்ணைப் பள்ளியில் தொடக்க கல்வி தொடங்கியது. பின்னர் வெ.ப.சு
> திருநெல்வேலி அரசடிப் பாலத்தில் இருந்த மிஷன் பள்ளியில் தமிழோடு ஆங்கிலமும்
> கசடறக் கற்றுத் தேர்ந்தார்.

Unknown said...

> அரண்மனையில் முத்துசாமிப்பிள்ளை என்னும் அந்தகர் (பார்வையற்றவர்) பணிபுரிந்து
> வந்தார். அவரிடமிருந்து

> - பாரதம்
> - இராமாயணம்
> - திருவிளையாடற்புராணம்

> முதலிய இதிகாசங்களையும் மற்றும் பல புராணங்களையும் வெ.ப.சு வாய்வழியாக
> கற்றறிந்தார். மேலும் அந்த அரண்மனையிலேயே,

> - பாரத அம்மானை
> - வைகுண்ட அம்மானை
> - பவளக்கொடி மாலை
> - அல்லி அரசாணி மாலை

> ஆகியவற்றை இளம்பருவத்திலேயே தினந்தோறும் கேட்டறிந்து வளர்ந்ததால் வெ.ப.சு
> இலக்கிய விருப்பத்திற்கு அவை பேருதவி புரிந்தன. அவர் தம் பதினான்கு
> வயதிற்குள்ளாகவே,

> - திருக்குற்றாலத் தலபுராணம்
> - வரகுணாதித்தன் மடல்
> - விறலிவிடு தூது
> - கூளப்ப நாயக்கன் காதல்

> ஆகிய சிற்றிலக்கியங்களை கற்றுத் தேர்ந்தார்.

> - வேம்பத்தூர் பிச்சு ஐயர்,
> - கல்போது புன்னைவனக் கவிராயர்,
> - அருணாசலக் கவிராயர்,
> - சுப்பிரமணியக் கவிராயர்
> - சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார்

> ஆகிய பெரும்புலவர்கள் கூடும் சங்கங்களிலும் வெ.ப.சு பங்கேற்று
> அவர்களிடமிருந்து இலக்கிய அறிவை வளப்படுத்திக்கொண்டார்.
> இப்படியாக இருபது வயதிற்குள்ளாக சிற்றிலக்கியங்களை கற்றுத் தெளிந்தார். பிறகு
> அவர்,

> - நன்னூல்
> - இலக்கணக்கொத்து
> - இலக்கண விளக்கச் சூறாவளி
> - தொல்காப்பிய முதற் சூத்திர விருத்தி
> - பிரயோக விவேகம்

> ஆகிய இலக்கண நூல்களைக் கசடறக் கற்றுத்தேர்ந்தார். பின்னர் திருநெல்வேலி
> சந்திப்பில் அமைந்த இந்துக் கலாசாலைப் பள்ளியில் மெட்ரிகுலேசன் வகுப்பில்
> சேர்ந்தார்.

> டி.என்.சிவஞானம் பிள்ளை இவரின் உற்ற தோழராக இருந்தார். தம் தோழரின்
> வற்புறுத்தலினால் சென்னை கிறித்துவக் கல்லூரியில் மேற்படிப்புக்காக சென்றார்.
> அங்கு படிக்கும் மாணவர்கள் தமிழ்ப்பாடத்தில் ஏற்படும் ஐயங்களைப் போக்க வெ.ப.சு
> விடம் வந்து தெளிந்து செல்வார்களாம். அத்தகைய சூழலில் அவர்களுக்காகவே
> கம்பராமாயணத்தை வெ.ப.சு ஊன்றிப்படித்தாராம்.
> அக்கல்லூரியில்தான்,

> - டாக்டர் மில்லர், கூப்பர்,
> - அலெக்ஸாண்டர்,
> - பேட்டர்சன்,
> - மெக்டனால்டு

Unknown said...

ஆகிய வெளிநாட்டு பேராசிரியர்கள் மற்றும்,

> - சுப்பராமையர்,
> - ரெங்கையச்செட்டி,
> - சின்னச்சாமி பிள்ளை,
> - ரெங்கசாமிராசா

> ஆகிய ஆசிரியப் பெருந்தகையாளர்களிடம் மிகச்சிறந்த கல்வியையும் மேலான
> ஒழுக்கத்தையும் கற்றுக்கொண்டு அத்தகைய வாழ்நெறிகளைத் தவறாமல் கடைபிடித்து
> வந்திருக்கிறார். ஆங்கிலம், தமிழ் இருமொழிப் புலமையையும் கிறித்துவக்
> கல்லூரியிலேயே கற்றுத் தெளிந்திருக்கிறார் வெ.ப.சு

> சென்னை சைதாப்பேட்டையில் தொடங்கப்பட்ட அரசு வேளாண்மைக் கல்லூரியில் சேர்ந்து
> 1884ம் ஆண்டில் ஜி.எம்.ஏ.சி என்னும் வேளாண்மை பட்டம் பெற்றார். 1895ம் ஆண்டு
> கால்நடை மருத்துவத் துறையில் "முதுநிலை கால்நடை மருத்துவ உதவியாளராக" பதவி
> உயர்வு பெற்று, ஆறாண்டுகள் கழிந்த பின்னர் 1911ம் ஆண்டில் துணைக்
> கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றிருக்கிறார்.

> கால்நடை அறிவியல் துறை வாயிலாக வெ.ப.சு தமிழ்மொழிக்கு ஆற்றியிருக்கும்
> தொண்டுக்கு தாய் தமிழ்மேல் பற்றுகொண்ட யாவரும் வெ.ப.சு வுக்கு நன்றி சொல்லக்
> கடமைப்பட்டவர்கள். *இந்திய கால்நடைக்காரர் புத்தகம் மற்றும் இந்தியாவில்
> கால்நடைகளுக்குக் காணுகின்ற அதிக பிராணாபாயமான வியாதிகளைப் பற்றிய நூல் என்னும்
> இரு நூல்களும் வெ.ப.சு சீரிய தமிழ் மொழியாக்கத்தில் அரசு உதவியுடன்
> வெளியிடப்பட்டது.* மேல்நாட்டு கால்நடை மருத்துவம் பற்றி தமிழ்மொழியில்
> வெளிவந்த முதல் நூல்கள் இவை. மேலும் அறிவியல் நூல்களை இனிய தமிழில்
> ஆக்கிக்காட்டியவர்களில் வெ.ப.சுவும் ஒருவர்.

> 1916ம் ஆண்டு வெ.ப.சு திருநெல்வேலி தாலுகா போர்டு உறுப்பினராகி, 1919ல் பதவி
> உயர்வு பெற்று, அதன் துணைத் தலைவரானார். அதற்கு அடுத்த ஆண்டில் தலைவராகவும்
> உயர்ந்தார். அவரின் நிர்வாகத் திறமையைக் கண்ட அன்றைய அரசாங்கம், அவரை 1922ம்
> ஆண்டு தென்காசி பெஞ்ச் கோர்ட்டின் தலைவராக நியமித்தது. இவரது அரும்பணிகளைக்
> கண்டு வியந்து, ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் அவருக்கு 1926ம் ஆண்டு "இராவ் சாகிப்"
> பட்டம் வழங்கிச் சிறப்பித்தார்.

> *சென்னை மாகாண தமிழ்ச்சங்கம் உருவாக்கிய "கலைச்சொற்கள்" அகராதி நூல்
> தயாரிப்புக் குழுவிலும் உறுப்பினராக இருந்து திறம்பட செயல்பட்டார். அதுபோல
> வேளாண்மைத் துறைக்கான கலைச் சொல்லாக்கம் இவரின் பெரு முயற்சியாலே
> உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.*

> - உ.வே.சாமிநாதய்யர்
> - மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை
> - "பத்மாவதி சரித்திரம்" நாவலை எழுதிய மாதவையா
> - மு.ரா. அருணாசலக் கவிராயர்
> - இரசிகமணி டி.கே.சி
> - ஹிருதாலய மருதப்ப தேவர்
> - கவிராஜர் நெல்லையப்ப பிள்ளை

Unknown said...

> போன்றோருடன் வெ.ப.சு நட்பு கொண்டிருந்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தில்
> பேராசிரியராக 25 ஆண்டுகள் அரும்பணியாற்றி தமிழ்த்துறையை மேன்மை அடையச்செய்தார்.

> *வெ.ப.சு வாழ்நாள் முழுவதும் சேர்த்த நூல்கள் யாவும் தொகுக்கப்பட்டு
> "வெ.ப.சுப்பிரமணிய முதலியார் நூல் நிலையம்" என்னும் பெயர்பெற்று திருநெல்வேலி
> ம.தி.தா இந்துக்கல்லூரி ஆட்சிமன்றக் குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டு இன்றும்
> செயல்பட்டு வருகிறது.*
> உலகத்தின் பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்ட *"சுவர்க்க நீக்கம்"*(Paradise Lost) என்ற மில்டன் எழுதிய உன்னத காவியத்தை தமிழில் அழகுற செய்யுளில்
> படைத்தவர் வெ.ப.சு. இவர் படைத்திருக்கும்,

> - இலக்கிய நூல்கள்
> - அகலிகை வெண்பா
> - கம்பராமாயண சாரம் (7 காண்டங்கள்)
> - கல்வி விளக்கம்
> - கோம்பி விருத்தம்
> - சருவசன செபம்
> - தனிக்கவித் திரட்டு
> - நெல்லைச்சிலேடை வெண்பா
> - இராமாயண உள்ளுறை பொருளும்
> - தென்னிந்திய சாதி வரலாறும்

> ஆகியவை.
> கல்வியிலும், ஒழுக்கத்திலும் மேன்மைகொண்டு விளங்கிய ஆயிரம் பிறைகண்ட
> செந்தமிழ் தொண்டர் வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியார் 12.10.1946ல் இவ்வுலகை
> விட்டு நீங்கினாலும் அவர் திருப்பெயர் தமிழ் உள்ளவரை நிலைத்திருக்கும்.

> வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

> நன்றி: தமிழ்மணி (தினமணி)

Anonymous said...

அன்பழகன்(திமுக),நெடுஞ்செழியன்(அதிமுக) இருவரும் சைவ முதலியார் வகுப்பை சேர்ந்தவர்கள். நெல்லை தளவாய் முதலியார் வீட்டு பெண்கள் இவர்களின் மருமகள்கள்.திமுகவில் கடைசிவரை கட்டுக்கோப்பாய் இருந்த பழனிவேல் ராஜன் இவர்களைவிட திறமை சாலி.ஆனலும் முதலியார் சமூகம் மேல் கலைஞருக்கு உள்ள வெறுப்பு( திருவாரூரானுக்கே இதன் ரகசியம் தெரியும்) முதலியார் சமூகத்தை முன்னேறவிடமால் செய்துவிட்டது.முதலியார்களால் ஆரம்பிக்கப்பட்ட நீதிகட்சி பின்னாளில் திக,திமுகவானலும் முதலியார்கள் பின்னுக்கு தள்ளப்பட்டார்கள்.புதிய நீதிக்கட்சி ஆரம்பித்துள்ள புதிய தலைவர் புதிய போராட்டம் என்ன் செய்யப் போகிறது.காலம் பதில் சொல்லட்டும்

Anonymous said...

http://blogs.static.mentalfloss.com/blogs/archives/34971.html

Anonymous said...

சுதந்திர மென்பொருட்களின் (Free/Libre Open Source Software) எதிர்காலம் பற்றி தங்களின் மேலான கருத்து என்ன? Example : Firefox

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது