கேள்விகள் கேட்போருக்கு வழக்கமான ஒரு வேண்டுகோள். சில சமயம் எங்காவது இணையத்தில் படித்ததை ஆதாரமாக வைத்துக் கொண்டு கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதில் தவறில்லை. ஆனால் அப்படியே அவரவர் தத்தம் கேள்விகளின் பின்புலனையும் கூறினால் சௌகரியமாக இருக்கும். நானே கூகளிட்டு பார்ப்பதுண்டு என்பது நிஜமே. ஆயினும் அந்த சுட்டி ரெடியாக கிடைத்தால் அதை தேடும் நேரம் விரயமாகாமல் பதிலில் இன்னும் அதிக முனைப்பாக இருக்கலாம் அல்லவா?
அனானி (12 கேள்விகள் கேட்பவர்)
1. தென்னக நதிகள் இணையும் திட்டம் எந்த நிலையில்? நெல்லையில் தொடங்கும் என்றார்களே?
பதில்: நெல்லையில் தொடங்குமா? எப்படியாம்? ஒரு படத்தில் கஞ்சா கருப்பு எல்லா நதிகளையும் இணைக்கிறேன் எனச்சொல்லி விட்டு எல்லா நதிகளின் தண்ணீரையும் சில குடங்களில் தனித்தனியே அடைத்து வைத்து அவ்ற்றை ஒவ்வொன்றாக தாமிரபரணி நதியில் விடுவார். அடுத்த சீன் அவருக்கு தர்ம அடி என்று நினைக்கிறேன். யாராவது படத்தின் பெயரை சொல்லுங்கப்பு.
2. மனசாட்சிக்கும் தன் மனதுக்கும் விரோதமாக நடக்கும் மனிதர்கள்?
பதில்: அதாவது, மனமும் மனசாட்சியும் வேறுவேறு அப்படீங்கறீங்க?
3. கர்நாடக இசைக்கச்சேரிகளில் உங்களை கவர்ந்தவர் யார்? என்ன ராகம் பிடிக்கும்?
பதில்: கர்நாடக சங்கீதத்தை ரசிக்கவும் ஓரளவு சங்கீத ஞானம் வேண்டும். அது எனக்கு சுத்தமாக லேது. சில பாடல்கள் இனிமையாக இருக்கும், கேட்பேன்.
பிடித்த ராகம்? பூபாளம். ஏனெனில் எங்கம்மா எனக்கு திருப்பாவை பாடல்களை இசையாக சொல்லிக் கொடுக்க முயற்சித்தார். மார்கழித் திங்கள் என்னும் முதல் திருப்பாவையை அவர் பூபாளத்தில் பாடுவார். வையத்து வாழ்வீர்காள் என்னும் அடுத்தப் பாட்டு பிலஹரி என்றெல்லாம் போகும். ஆனால் என்ன ஆச்சரியம் நான் எந்தத் திருப்பாவை பாடலை பாட முயன்றாலும் அது தானாகவே பூபாளத்தில் முடிந்து படுத்தும். என் அம்மா “சனியனே உனக்கு இதெல்லாம் வேண்டாம்” எனக் கூறி விசிறிக் கட்டையால் அடித்து விரட்டி விட்டார்.
4. செக்ஸ் கல்வி பள்ளிகளில் என்ற திட்டம் எந்த நிலையில்? ஆதரிக்கிறீர்களா?
பதில்: அதை எவ்வாறு சொல்லிக் கொடுக்கப் போகிறார்கள் என்பதை பொருத்துத்தான் பதிலும் இருக்கவியலும்.
5. தமிழக அரசியல் வாதிகள்/ஆந்திர அரசியல் வாதிகள்/கேரள அரசியல் வாதிகள்/ஆந்திர அரசியல் வாதிகள் ஒப்பிடுக?
பதில்: ஊழலைப் பொருத்தவரை எல்லோருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் என்றாலும், தமிழக அரசியல்வாதிகள் தற்சமயம் அரசியல் விரோதத்தை தனிப்பட்ட விரோதமாகப் பார்க்கின்றனர். மற்ற மாநிலத்து அரசியல்வாதிகள் இந்தளவுக்கு மோசமில்லை என்றுதான் கூற வேண்டும். அதுவும் இந்த ஜெயலலிதாவும் கருணாநிதியும் செய்யும் கூத்துக்கள் பார்க்கச் சகிக்கவில்லை.
6. அரசின் செயல்களால் விலைவாசி எதுவும் குறைய வாய்ப்புண்டா?
பதில்: எனக்குத் தெரிந்து அப்படி ஏதும் இல்லைதான்.
7. தமிழ் நாட்டில் இன்று ஒரு வேலை கிடைக்க என்ன செய்ய வேண்டும்?
பதில்: வேலை தேட ஆரம்பிக்க வேண்டும்.
8. அஞ்சல்துறையில் நல்ல மாற்றம் தெரிகிறதே?
பதில்: எப்படிச் சொல்கிறீர்கள்?
9. சினிமா கவிஞர்கள் இப்போது அரசியலுக்குள் பிரவேசம் ?
பதில்: அவர்களும் சம்பாதிக்க வேண்டாமா?
10. அ.தி.மு.க.வின் பலமும் பலவீனமும்?
பதில்: ஜெயலலிதா
11. தா.பாண்டியன் தேர்தல் முடிவுக்கு பிறகு?
பதில்: ஐயோ பாவம்.
12. சினிமா, அரசியல் ஒற்றுமை/வேற்றுமை
பதில்: சினிமாக்காரர்கள் அரசியல்வாதிகளாக ஆன அளவுக்கு அரசியல்வாதிகள் சினிமாவுக்கு வந்ததாகத் தெரியவில்லை.
கந்தசாமி
1. வட இந்தியாவில் வெகுவிமரிசையாய் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி அதன் தொடர்ச்சியாய் விநாயகர் ஊர்வலம், பின் கடலில் சிலை கரைப்பு வைபோவங்கள் இப்போது தமிழ் நாட்டிலும் சில வருடங்களாய் அமைதியாய் நடை பெற்று வரும் சமயத்தில் இந்தத் தடவை ஒரு சில அதிகாரிகள் அனுமதி மறுத்து சண்டித்தனம் செய்வதாயும், முதல்வர், துணை முதல்வர் தலையிட்டு கைகொடுக்க வேண்டும் எனும் ராம. கோபாலன் கோரிக்கை நிறைவேறுமா?
பதில்: நல்லபடியாகத்தான் எல்லாம் முடிந்து விட்டதே. அடுத்த ஆண்டில் பார்ப்போம்.
2. கலைஞர் வீட்டுப் பெண்கள் சமீபகலாமாய் பூஜை புனஸ்காரம் என தூள் கிளப்புவதாய் வரும் செய்திகளை பார்த்த பிறகு என்ன சொல்லத் (அரசின் கொள்கை) தோணுகிறது?
பதில்: கடவுளை நம்புபவன் காட்டுமிராண்டி என்று சொன்னவரின் தாய் தந்தையரே கடவுள் பக்தி உடையவர்களாக இருந்து, சொன்னவர் அவரது “பகுத்தறிவின்படியே” காட்டுமிராண்டிகளின் புதல்வர் ஆனார். தலைக்கே அக்கதி என்றால் வால்கள் பற்றி என்ன சொல்வது?
3. சாதி நல்லிணக்கம் ஏற்படுத்தும் இந்த விழாவுக்கு துணை போகாமல் இடையூறு செய்வோரை அரசு கண்டிக்குமா?
பதில்: விநாயகர் ஊர்வலத்தைத்தானே சொல்கிறீர்கள்? நீங்கள் சொல்வது போல அரசு செய்ய அது என்ன இசுலாமியர்/கிறித்துவர் ஊர்வலமா?
4. கடலில் சிலை கரைப்பதால் சுற்றுச் சூழல் பாதிப்பு எனும் பெரியார் பக்தர்களின் குற்றச்சாட்டு எடுபடுகிறதா?
பதில்: மண் பிள்ளையாரால் பாதிப்பு இல்லை. பிளாஸ்டர் ஆஃப் பாரிசில் செய்வது கண்டிக்கத் தக்கது.
5. முன்பு பிள்ளையார் சிலை உடைப்பு நடத்திய பகுத்தறிவுச் சிங்கங்கள், இன்று பிரணவ மந்திரத்தின் அம்சமாய் விளங்கும் ஆதிமுல கணபதியின் சீர்மிகு விழா கண்டு என்ன சொல்வார்கள்/செய்வார்கள்?
பதில்: தமிழ் ஓவியாவுக்கு போக வேண்டிய கேள்வி இது. அவரும் கண்டிப்பாக 1921-ல் பெரியார் எங்காவது எழுதியதை தேடி கண்டுபிடித்து நகலிடுவார். பார்த்துக் கொள்ளுங்கள்.
கிருஷ்ணகுமார்
1. Difference between motivation and habit?
பதில்: Habit is already there. If something is done to favor the habit in a person, the concerned fellow is motivated to achieve more.
2. Name the Indian chief minister served for the longest tenure? reason for that?
பதில்: எனக்குத் தெரிந்து அது மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசுதான். அவரது தனிமனித ஒழுக்கம், உள்ளூர் காங்கிரசாரின் கையாலாகத்தனம் ஆகியவையே அவரது வெற்றிக்கு முக்கியக் காரணங்கள்.
3. Will Jaswant Singh form a new party?
பதில்: அவர் இன்னொரு மன்மோகன் சிங், நெடுஞ்செழியன். அடிமட்ட ஆதரவு அவருக்கு இல்லை என நினைக்கிறேன்.
4. Tell whether bluetooth option in cars is a dangerous idea?
பதில்: ஏம்பா காரை ஓட்டப் போறீங்களா இல்லை டெலிஃபோனில் பேசணுமா? ஏதேனும் ஒண்ணைப் பண்ணுங்கப்புகளா.
5. Tell ways to overcome shyness and have good conversational skills to the younger generation?
பதில்: சமீபத்தில் 1963-ல் வந்த ரத்ததிலகம் என்னும் படத்தில் “புத்தன் வந்த திசையிலே போர், புனித காந்தி மண்ணிலே” போர் எனத் துவங்கும் பாடலில் “பகைவனுக்கும் ஓர் உயிர்தான் வா, வா” என்னும் வரி வரும். அதே போல சங்கோஜம் என்பது எல்லோருக்குமே உண்டு. அதை வெல்வதுதான் முக்கியம். அதை வெல்வதற்கான முக்கிய உபாயமே அதை வெல்ல மனம் வைப்பதுதான். குருதிப் புனல் படத்தில் கமல் சொல்வது போல தைரியம் என்பது உள்ளே உருவாகும் பயம் வெளியில் தெரியாவண்ணம் பாதுகாத்துக் கொள்வதுதானே.
6. Methods to gauge a person's Intelligence quotient?
பதில்: எனக்கு இந்த ஐ.க்யூ. சோதனைகளில் அவ்வளவு நம்பிக்கை இல்லை. ஒரு குழந்தைக்கு சோதனை வைத்தார்கள். ஒரு நாணயத்தைக் காட்டி அது என்ன நாணயம் - ஒரு ரூபாயா, அரை ரூபாயா - எனக் கேட்க, குழந்தை அதை வாங்கி திருப்பிப் பார்த்து ஐம்பது பைசா என்றது. அதை ஒத்துக் கொள்ள இயலாதாம். நாணயத்தின் ஷேப்பைப் பார்த்து கூற வேண்டுமாம். ஆனால் நாணயத்தை அம்மாதிரி திருப்பிப் பார்த்தால் அதன் வால்யூ தெரிந்து கொள்ளலாம் என தெரிந்திருப்பதே ஒரு அறிவுள்ள செயல் என நான் நினைக்கிறேன். இன்னொரு குழந்தை மூன்று மொழிகள் பேசும். ஆனால் அதெல்லாம் அறிவில் கணக்கில் வராது என அந்த டெஸ்டுகள் எடுக்கும் அறிவுக் கொழுந்துகள் கூறுகிறார்கள்.
7. News T.V. Channels. will do away the News Papers from elite public in the coming days?
பதில்: அமெரிக்காவிலேயே பத்திரிகைகள் காணாமல் போகவில்லை. இங்கு நம்மூரில் போய் விடுமா என்ன?
8. Say something remarkable from your oldest memory?
பதில்: மாலை போட்டு என்னை மணையில் உட்கார வைத்திருக்கிறார்கள். நெல்லில் என் விரலை பிடித்து வாத்தியார் அ, ஆ எழுத வைக்கிறார். சமீபத்தில் 1950 விஜயதசமியன்று நடந்த இந்த நிகழ்ச்சியின் போது எனக்கு நாலரை வயது. அடுத்த ஞாபகம் சர்தார் வல்லபாய் படேல் இறந்த செய்தி.
9. The actors in comedy serials are becoming more vulgar in their acts. why?
பதில்: உதாரணம் கூறவும். எனக்கு அவ்வாறு தோன்றவில்லையே.
10. what is your comfortable grade with strangers?
பதில்: அவர்கள் எனக்கு அயலார் என்றாலும், நானும் அவர்களுக்கு அயலார்தானே.
அனானி (25.08.2009 இரவு 09.12-க்கு கேட்டவர்)
டோண்டுவின் புதுமொழிகள்?
1. எதுவும் தெரியாதவனுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.
பதில்: எல்லாம் தெரிந்தவனுக்கும் கூடத்தான் சந்தேகம் இல்லை.
2. பற்களுக்கிடையில் மனிதன் மறைந்துள்ளான்.
பதில்: சொற்களினூடே தன்னைப் பற்றிய உண்மையை அவன் மறைக்கிறார்ன்.
3. ஆலயத்திற்கு அருகில் இருப்பவன்தான் தொழுகைக்குக் கடைசியாக வருவான்.
பதில்: புதிய முசல்மான் ஒரு நாளைக்கு பத்து முறை தொழுவான் என்பதும் உருதுவில பழமொழிதான்.
4. உன்னிடம் வம்பளப்பவன் உன்னைப்ப்ற்றியும் வம்பு அளப்பான்
பதில்: சாவு எல்லோருக்கும் ஒரு நாள் வந்தே தீரும்.
5. ஓர் ஆண்டின் களையெடுப்பு ஏழாண்டுகளின் விதை.
பதில்: அப்படியானால் ஏழாண்டுகள் விதைத்த பிறகு ஓராண்டு களைபிடுங்க வேண்டுமா? அறுவடை எப்போ செய்யணும்? இல்லே அதுக்காக தனியே ஆட்டோவில் ஆக்கள் வருவாகளா.
6. அவர்கள் அவனைப் பிடிக்கும் நாள் வரை ஒவ்வொருவரும் நேர்மையானவரே
பதில்: தங்கை தன்னைப் பற்றி அப்பாவிடம் கோள்மூட்டப் போகிறாள் என்பது அறிந்தவுடன் தானே சொல்பவனே மனசாட்சியுடையவன், நேர்மையானவன்.
7. விரும்பியதைப் பெறமுடிவில்லையானால் பெற்றதையே விரும்புவோமாக.
பதில்: துப்பாக்கி சுடும் போட்டியில் பலகையில் சுட்ட பிறகு ஓட்டையை சுற்றி காம்பஸால் வட்டம் வரைந்து கொள் என்பது போல இருப்பதாக எனக்கு தோன்றுகிறதே.
8. ஆயிரம் எதிரிகளைவிட ஒரு போலி நண்பனால்தான் அதிகத் தீமை.
பதில்: அம்மாதிரி நண்பர்கள் இருக்கும்போது எதிரி என்று யாரும் தேவையா என்ன?
9. ஆயிரம் நூல்களைக் கற்பதைவிட அறிஞர்கள் கூறும் பழமொழிகளே அதிக அறிவைத் தரும்.
பதில்: பாலைவிட பாலேட்டில்தானே சத்து அதிகம்?
10. உன் அன்பை மனைவியிடம் காட்டு; இரகசியத்தை அன்னையிடம் கூறு
பதில்: சின்ன வீடு பற்றி நண்பனுக்கும் கூறாதே, அவன் தள்ளிக் கொண்டு போனாலும் போவான்.
ரமணா
1. சேமிப்புக் குணம், சிக்கனம், மனநிறைவு ஆகியவை பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: நான் இட்ட 1. சேமிப்பது சரியா, தவறா? 2. நினைக்கத் தெரிந்த மனமே ஆகிய பதிவுகளைப் பாருங்களேன் சிக்கனம் பற்றி எனது எண்ணங்களை அறிய.
2. அலுவலகத்தில் பிறரின் தவறுகளுக்காய் கண்டிப்பு காட்டும் போது எதிர் விளைவுகள் ஏற்படாமல் தடுப்பது எப்படி?
பதில்: கண்டிப்பு காட்ட வேண்டிய மேலதிகாரியாக நீங்கள் இருந்தால் எதிர்வினைக்கெல்லாம் பயப்படக்கூடாது. ஆனால் ஒன்று, நீங்கள் நடவடிக்கை எடுத்தால் மேனெஜ்மெண்ட் உங்களை சப்போர்ட் செய்ய வேண்டும். பல சமயங்களில் உங்களை அவர்கள் திரிசங்கு சொர்க்கத்தில் விட்டு விடுவார்கள். அது நடந்தால்தான் கஷ்டம். அது எனக்குத்தான் தேரியும். ஐ.டி.பி.எல். நாசமாகப் போனதற்கே இம்மாதிரி தொழிலாள்ர்களது ஒழுங்கீன நடவடிக்கைகளை யூனியன் ஆர்ப்பாட்டத்துக்கு பயந்து பூசிமொழுகியதும் ஒரு முக்கியக் காரணம்.
3. நண்பர்கள் சந்திப்பின் போது பொருளாதாரத்தில் நலிந்தவர்களின் வறுமை சுட்டிக் காட்டப்பட்டு கேலி பேசும் போக்கு சரியா?
பதில்: அவ்வாறு நடந்தால் நண்பர்கள் யாரும் மிஞ்ச மாட்டார்கள். ஆனால் அதே சமயம் உனக்கென்னப்பா நீயெல்லாம் பணக்காரன் என மூக்கால் அழும் நண்பர்களும் தவிர்க்கப்பட வேண்டியவர்களே.
4. இந்தப் பணியை முடித்து தருகிறேன் என வாக்கு அளித்துவிட்டு பின்னாளில் நம் முகம் பார்த்து பேச அஞ்சும் மனிதர்கள் பற்றி என்ன சொல்வது?
பதில்: அந்தப் பணி இலவசமானதா அல்லது காசு கொடுத்தீர்களா என்ற கேள்விக்கு நீங்கள் அளிக்கும் பதிலை முதலில் பார்க்க வேண்டியிருக்கிறது. பிறகுதான் உங்கள் கேள்விக்கு பதில் சொல்ல முடியும். பலர் முகதாட்சண்யத்துக்காக காலணாகூட கிடைக்காத வேலையை ஒத்துக் கொண்டு நீங்கள் சொல்வது போல நடந்து கொள்வார்கள். எல்லோருமே என்னைப் போல ஓசி வேலைகளை தாட்சண்யமே இல்லாமல் மறுத்துவிட்ட்டால் தொல்லையே இல்லையே.
5. சமீபகாலமாய் ஆன்மிக நெறியைப் போற்றுகிறவர்கள், ஆன்மிகத்தைப் பின்பற்றுகிறவர்கள் எண்ணிக்கையில் கூடுவதை பார்க்கும் போது என்ன எண்ணம் தோன்றுகிறது.
பதில்: அப்படியெல்லாம் கூடுவது போலவோ அல்லது குறைவது போலவோ எல்லாம் தெரியவில்லையே?
கோபால்
1. கேரளாவில் துஷ்ட தெய்வங்களின் துணை கொண்டு செய்யப்படும் பில்லி சூனியம் உண்மையா?
பதில்: கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் நிச்சயமாகத் தெரியாது.
2. அங்கு பெரிய கோவில்களின் பிரசன்னம் பார்த்து நடந்தவை நடப்பவைகளை துல்லியமாய் சொல்வதாய் பல பத்திரிக்கைகளில் படித்திருக்கிறேன்.இது எப்படி சாத்தியமாகிறது?
பதில்: இம்மாதிரி அசாதாரண நிகழ்வுகள் பற்றி எனக்கு நேரடி அறிவு இல்லை.
3. கேரள மாந்திரீகர்கள் சிலர் பெரிய கோவிலில் உள்ள தெயவத்தின் அனுக்கிரகத்தையே கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளது என்று சொல்லப்படுவதில் உண்மை உண்டா?
பதில்: பல மெகாசீரியல்களில் பார்த்துள்ளேன். ஆனால் உண்மையை யாரறிவார்? ஆனால் ஒரு விஷயம் பார்த்துள்ளேன். அரக்கர்கள் தாங்கள் செய்யும் தவத்துக்கான பல வரங்களைப் பெறுவது, அதனால் எல்லோரும் அவதிப்படுவது என்றெல்லாம் ஏன் நடக்க வேண்டும்? முதலில் வரம் ஏன் தரவேண்டும்? என்றெல்லாம் நான் சிறிய வயதில் யோசித்திருக்கிறேன். பிறகுதான் ராமானந்த் சாகரின் ராமாயணம் சீரியலில் அதற்கு பதில் கிடைத்தது. சிவனை கடசி முறையாக வணங்கும் ராவணன் கூறுவான், “நீங்கள் எனக்களித்த வரங்களை உங்களால் தந்திராமல் இருக்கவியலாது. ஏனெனில் நான் செயுத தவத்தின் வலிமை அப்படிப்பட்டது. அதை வைத்து நான் கர்வத்தால் எனது அழிவை நானே தேடிக் கொண்டது வேறுவிஷயம்”
4. தெருக்களில் குறளி வித்தை காட்டுபவன் செயல்களும் இந்த மந்திர வகை சார்ந்ததா?
பதில்: பொய்த்தோற்றம் காட்டி அதை செய்வதுபோல நம்மை நம்பவைக்கிறார்கள். மனித இனம் உருவாகியதிலிருந்து இப்போதுள்ள நிலை வரையிலுள்ள காலத்தை பார்த்தால் நாம் பகுத்தறிவோடு இருந்து செயல்பட்ட ரொம்பவுமே சமீபத்திலிருந்துதான். இந்த சமீபம் டோண்டு ராகவன் சொல்லும் சமீபம் மாதிரித்தான்.
5. சில மாஜிக் காட்சிகளில் ஆளை ரத்தம் சிந்தாமல் இரண்டாய் வெட்டி பின் ஒட்டுகிறார்களே இது எப்படி சாத்யமாகிறது? இதுவும் மந்திரமா? தந்திரமா?
பதில்: பொய்த் தோற்றம்
ஸ்வாமிநாதன்
1. மகாகவி பாரதிக்கும் இன்றைய கவிஞர்களுக்கும் உள்ள வேற்றுமை என்ன?
பதில்: மகாகவி பாரதியார் உயிருடன் இருந்த காலகட்டத்தில் அவரை அறிந்தவர்கள் மிகவும் குறைவே. அவர் இறப்பிற்கு வந்தவர்கள் எண்ணிக்கை மிககுறைவே. அதேபோல இப்போதுள்ள ஏதேனும் அடையாளம் காணமுடியாதவர்கள் பிற்காலத்தில் வரலாம் அல்லவா? ஆக, இம்மாதிரி ஒப்பிடல்கள் செய்யத்தான் வேண்டுமா?
2. மன அமைதி தரும் தியானம் செய்யும் பழக்கம் உண்டா?
பதில்: முயற்சித்தது இல்லை.
3. மன நிம்மதியுடன் வாழ வழிகள் உண்டா?
பதில்: வாழ நினைத்க்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் ஆழக்கடலும் சோலையாகும் ஆசையிருந்தால் நீந்தி வா
4. மனிதன் பந்தத்திற்கு ஆளாகுவது ஏன்?
பதில்: அதைத்தான் மாயை என்னும் பெயரில் அழைக்கிறார்கள். அது மனிதகுலம் தழைக்கத் தேவையான ஒன்றாகும். பின்னால் நடக்கப் போகும் விபரீதங்களை அறிந்தால் ஒருவன் ஒரு செயலையும் செய்ய இயலாது. ஆகவேதான் அறியாமையால் கடவுள் அவன் மனதை மூடுகிறான் என்று பெரியவர்கள் கூறுவர்.
5. ஒரு சிலர் அகங்காரத்துடன் இருப்பது ஏன்?
பதில்: எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம், தலைகுப்புற விழலாம் என்னும் எண்ணமே இல்லாது இருப்பவர்கள் அகங்காரத்தால்தான் அழிகிறார்கள்.
6. நாகாக்க என்ற வள்ளுவரின் கருத்துக்கு விளக்கம் சொல்லவும்?
பதில்: வாய்க்கொழுப்பால் பல வாய்ப்புகளை இழந்தவர்கள் என்னைவிட இதற்கு நன்றாக விளக்கமளிப்பார்களே.
7. இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள இடைவெளி கூடுகிறதா இல்லை குறைகிறதா?
பதில்: கூடுவதோ குறைவதோ நம் கையில் இருப்பதாக எண்ணுவது மாயையே. எல்லாம் அவன் செயல்.
8. இந்தியா எல்லாத் துறைகளிலும் முன்னேற வழி?
பதில்: ஒருமித்த செயல்பாடுகள். தேசபக்தி. கடின உழைப்பு. இவற்றை தவிர்க்க ஏதும் குறுக்கு வழிகள் இல்லை என்பதில் தெளிவாக இருத்தல்.
9. மனசாட்சி பற்றி கூறவும்?
பதில்: மேலே ஒரு கேள்விக்கு சொன்னதை சற்றே மாற்றிச் சொல்வோமா? தங்கை என்னைப் பற்றி கோள்மூட்டப் போகிறாள் என்பது அறிந்தவுடன் தானே சொல்வதே மனசாட்சியாகும்.
10. ஆன்மீகத்திற்கும் இன்றைய நவீன விஞ்ஞானத்திற்கும் என்ன தொடர்பு?
பதில்: உபநிஷத்துகள் சொன்ன பலவிஷயங்கள் விஞ்ஞானத்தால் உண்மை என கண்டறியப்பட்டுள்ளன.
11. ஆத்ம சுத்தியுடன் எழுதும் எழுத்தாளர் யாரேனும் உளரோ?
பதில்: ஆத்ம சுத்தியுடன் எழுதுகிறார்களோ இல்லையோ கைசுத்தியுடன் எழுதுகிறார்களா என்பதை முதலில் பார்ப்போமே.
12. பக்திக்கும் தன்னம்பிக்கைக்கும் உள்ள தொடர்பு?
பதில்: ஒன்றுக்கொன்று உதவி செய்யும். நாம் செய்வதை செய்வோம், மீதியை ஆண்டவன் பார்த்துப்பான் என்று இருந்தால் நலம். அதற்காக எல்லாவற்றையும் அவனே பாத்துப்பான் என்று இருத்தல் சரியில்லை.
13. கல்விக்கும் நல்ல ஒழுக்கத்திற்கும் உள்ள தொடர்பு?
பதில்: கல்வி நல்லொழுக்கத்தை அடையாளம் காண உதவுகிறது. ஆனால் அதை எடுத்து கொள்ள அடிப்படையிலேயே நல்லொழுக்கம் இருக்க வேண்டுமே. புரியவில்லை? ஒரு லார்ஜ் அடித்து பாருங்கள்.
14. பிறவிகளிலிருந்து விடுபட பக்திதான் சரியான வழியா?
பதில்: அப்படித்தான் சொல்கிறார்கள். ஆனால் நான் நினைக்கிறேன் அம்மாதிரி விடுதலையும் சில நாட்களிலேயே போரடிக்கும் என.
15. உலகப்பற்று இல்லாமல் வாழ்வதற்கு என்ன வழி?
பதில்: தாமரை இலை தண்ணீர் போல வாழ வேண்டும். பலனை எதிர்ப்பார்க்காது செயலாற்ற வேண்டும். என்னால் அது ஏலாது.
16. சுவாமி விவேகானந்தர் அருளிய செய்திகளில் முதன்மையானது எது?
பதில்: உன்னையே அறிந்து கொள். உன்னையே நம்பு.
மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
Subscribe to:
Post Comments (Atom)
28 comments:
Film name is Thamirabharani
அதாவது பெரியார் தன்னுடைய குடும்பத்தவரை வலுக்கட்டாயமாக கடவுள் மறுப்பு செய்திருக்கவேண்டும் என்று சொல்கிறீர்களா ? என்ன அபத்தம் ?
@செந்தழல் ரவி
கண்டிப்பாக இல்லை. ஆனால் அதே சமயம் பழங்கதைகளையே பேசி பார்ப்பனராக பிறந்ததை மட்டும் வைத்து அவர்களை தாக்கும் பகுத்தறிவாளர்களுக்கு புரியும் வகையில் எதிர்வாதம் செய்யு செயலே இது.
பெண் உரிமை பற்றி அவ்வளவு வாய் கிழியப் பேசிய பெரியார் அவரது முதல் மனைவி நாகம்மை விஷயத்தில் அவர் குருட்டுத்தனமாக பதிபக்தியுடன் இருந்து தன்னை சிறுமைபடுத்ஜ்திக் கொண்டதை எல்லாம் ஆஷாடபூதித்தனமாக ஏற்று சௌகரியமாக இருந்ததை பெரியாரே எழுதியுள்ளது பற்றி நான் இட்டப் பதிவைப் பாருங்கள். பார்க்க: http://dondu.blogspot.com/2007/03/blog-post_27.html
அவரே ஒத்துக் கொண்டு எழுதியதற்காக வேண்டுமானால் பாராட்டலாம், பாராட்டவும் செய்தேன். ஆனால் அதற்காக அவர் முதலில் செய்ததை பகுத்தறிவுக் கண்ணோஒடு பார்ப்பது என்பது வேறு விஷயம். யார் செய்தாலும் தவறு தவறுதான்.
தன் வீட்டுப் பெண்கள் கோவிலுக்கு செல்வதை தமக்கு பாதுகாப்பு உணர்ச்சி தரும் விஷயமாகத்தான் பகுத்தறிவாளர்கள் பார்க்கிறார்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//மனசாட்சிக்கும் தன் மனதுக்கும் விரோதமாக நடக்கும் மனிதர்கள்?//
வேறுபாட்டை டோண்டு சொல்லிட்டார்!
நீங்கள் கேட்கும் மனிதர்கள் கண்ணாடி பார்க்கும் அனைவரும்!
//எங்கம்மா எனக்கு திருப்பாவை பாடல்களை இசையாக சொல்லிக் கொடுக்க முயற்சித்தார்.//
அவுங்களுக்கு சங்கீதம் மறந்திருக்குமே!
//என் அம்மா “சனியனே உனக்கு இதெல்லாம் வேண்டாம்” எனக் கூறி விசிறிக் கட்டையால் அடித்து விரட்டி விட்டார்.//
ஒரு சங்கீத வித்வான் பூமிக்கு கிடைக்காமல் போய் விட்டார்!
//செக்ஸ் கல்வி பள்ளிகளில் என்ற திட்டம் எந்த நிலையில்? ஆதரிக்கிறீர்களா?
பதில்: அதை எவ்வாறு சொல்லிக் கொடுக்கப் போகிறார்கள் என்பதை பொருத்துத்தான் பதிலும் இருக்கவியலும்.//
பசங்க பிராக்டிகல் கிளாஸ் கேட்பாங்கன்னு பயப்படுறிங்களா சார்!?
//அஞ்சல்துறையில் நல்ல மாற்றம் தெரிகிறதே?
பதில்: எப்படிச் சொல்கிறீர்கள்?//
நமிதாவுக்கு ஸ்டாம்பு வரப்போகுதாம்!
//அவரது “பகுத்தறிவின்படியே” காட்டுமிராண்டிகளின் புதல்வர் ஆனார். தலைக்கே அக்கதி என்றால் வால்கள் பற்றி என்ன சொல்வது?//
உலகில் இருக்கும் 99 சதவிகத உயிரினங்களுக்கு வால் இருக்கு!
வாலை குறைவாக எஅடை போட வேண்டாம்!
வாலின் அருமை அது இல்லாத போது தான் தெரியும்!
//மண் பிள்ளையாரால் பாதிப்பு இல்லை. பிளாஸ்டர் ஆஃப் பாரிசில் செய்வது கண்டிக்கத் தக்கது.//
இந்த நேர்மை பிடிச்சிருக்கு!
ஆனா எல்லாம் மண் பிள்ளையார்னு யார் செக் பண்றா!?
//இன்று பிரணவ மந்திரத்தின் அம்சமாய் விளங்கும் ஆதிமுல கணபதியின் சீர்மிகு விழா கண்டு என்ன சொல்வார்கள்/செய்வார்கள்?//
முத்தி போச்சுன்னு சொல்வாங்க!
வேற என்ன சொல்வாங்கன்னு எதிர் பார்க்குறிங்க!?
//அமெரிக்காவிலேயே பத்திரிகைகள் காணாமல் போகவில்லை. இங்கு நம்மூரில் போய் விடுமா என்ன?//
அமெரிக்காவுக்கு சொறிஞ்சு விடாம உங்களால இருக்கவே முடியாதா!?
//புதிய முசல்மான் ஒரு நாளைக்கு பத்து முறை தொழுவான் என்பதும் உருதுவில பழமொழிதான்.//
அதற்காக சொர்க்கத்தில் ஓவர் டைம் கிடைக்குமா!?
//ஓர் ஆண்டின் களையெடுப்பு ஏழாண்டுகளின் விதை.//
ஒரு தடவை ஓட்டு போட்டா அஞ்சு வருசம் மாட்டினோன் என்றும் சொல்லலாம்!
//சின்ன வீடு பற்றி நண்பனுக்கும் கூறாதே, அவன் தள்ளிக் கொண்டு போனாலும் போவான்.//
இன்னைகெல்லாம் அவனவன் பெரிய வீட்டை காப்பாற்றவே பெரும்பாடு படுகிறானாம்!
//சமீபகாலமாய் ஆன்மிக நெறியைப் போற்றுகிறவர்கள், ஆன்மிகத்தைப் பின்பற்றுகிறவர்கள் எண்ணிக்கையில் கூடுவதை பார்க்கும் போது என்ன எண்ணம் தோன்றுகிறது. //
நாத்தீகன் தனி மனித சுதந்திரத்தில் தலையிடுவதில்லை!
ஆத்திகன் தன் வம்சாவழி சுதந்திரம் அவன் கையில் என்று நினைப்பவன்!
நாத்திகனுக்கு செக்கு மாடுகளை பற்றி கவலை இருப்பதாக நான் நினைக்கவில்லை!, ஆத்திகர்களுக்கு அனைவரையும் செக்கு மாடுகளாக ஆக்குவதில் முனைப்பு அதிகம்!
//கேரளாவில் துஷ்ட தெய்வங்களின் துணை கொண்டு செய்யப்படும் பில்லி சூனியம் உண்மையா?//
கேரளா மட்டும் குட்டி சாத்தானுக்கு பிடிச்ச இடமாக்கும்!
//அங்கு பெரிய கோவில்களின் பிரசன்னம் பார்த்து நடந்தவை நடப்பவைகளை துல்லியமாய் சொல்வதாய் பல பத்திரிக்கைகளில் படித்திருக்கிறேன்.இது எப்படி சாத்தியமாகிறது?//
நான் சொல்வது அப்படியே நடப்பதாக கூட என்னால் உலகம் முழுவதும் உள்ள பத்திரிக்கையில் விளம்பரம் கொடுக்க முடியும்! பகுத்தறிய மக்களுக்கு அறிவு ”கொஞ்சம் மட்டும்” இருந்தால் போதும்!
//கேரள மாந்திரீகர்கள் சிலர் பெரிய கோவிலில் உள்ள தெயவத்தின் அனுக்கிரகத்தையே கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளது என்று சொல்லப்படுவதில் உண்மை உண்டா?//
தெய்வத்தின் அனுகிரகத்தை கட்டுபடுத்துவார்களா!?
பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்கு!
முதல்ல அவுங்க டவுசரை கயிறு இல்லாம கட்ட முடியுமான்னு கேளுங்க, அப்புறம் மத்ததை கட்டு படுத்தலாம்!
//தெருக்களில் குறளி வித்தை காட்டுபவன் செயல்களும் இந்த மந்திர வகை சார்ந்ததா?//
அப்படினா மேஜிக்மேன் சர்க்கார் தான் உலகிலேயே பெரிய சாத்தான் போல!
//சில மாஜிக் காட்சிகளில் ஆளை ரத்தம் சிந்தாமல் இரண்டாய் வெட்டி பின் ஒட்டுகிறார்களே இது எப்படி சாத்யமாகிறது? இதுவும் மந்திரமா? தந்திரமா?//
யூ டியுப் வீடியோக்களில் நிறைய கிடைக்கிறது, அதை அவர்கள் செய்யும் முறை! ஒன்று நமக்கு சரியாக புரியவில்லை என்பதற்காக அப்படியே நம்புவது சரியல்ல!
புரியும் வரை நோண்டிகிட்டே இருக்கனும்!
//மகாகவி பாரதிக்கும் இன்றைய கவிஞர்களுக்கும் உள்ள வேற்றுமை என்ன?//
அவரு தலப்பா கட்டியிருந்தாரு,
இவுங்க கட்டல!
அவருக்கு ஜட்டி போடும் பழக்கம் உண்டான்னு எனக்கு தெரியல!
//மன அமைதி தரும் தியானம் செய்யும் பழக்கம் உண்டா?//
ஏற்கனவே அவர் மனம் அமைதியா தான் இருக்கு!
தனியா எதுக்கு தியானம் பண்ணனும், இருக்குற அமைதிய கெடுக்கவா!?
//மனிதன் பந்தத்திற்கு ஆளாகுவது ஏன்?//
சுயநலம் தான்!
இன்னைக்கு நான் எங்க அப்பாவுக்கு சோறு போடுவேன்!
நாளைக்கு என்பிள்ளை எனக்கு சோறு போடுவான்!
//அறியாமையால் கடவுள் அவன் மனதை மூடுகிறான் என்று பெரியவர்கள் கூறுவர். //
கடவுளுக்கே அறியாமையா!?
//இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள இடைவெளி கூடுகிறதா இல்லை குறைகிறதா?//
இடைவெளி இருப்பதாக நம்புபவர்கள்!, சொல்ல வேண்டிய பதில் எங்கே?
//உலகப்பற்று இல்லாமல் வாழ்வதற்கு என்ன வழி?//
செத்துப்போவது!
வாலின் பெருமை பற்றி எங்க வால்ஸ் வாலை நிமித்திச் சொன்னது:
/வாலின் அருமை அது இல்லாத போது தான் தெரியும்!/
அதுக்காக வாலே மொத்தம்ம்னு ஆயிடக் கூடாது!
Post a Comment