துஷ்யந்தன், சகுந்தலை விஷயத்தில் உண்மையாகவே என்ன நடந்திருக்கும் என கற்பனை செய்து எழுதிய நாடோடி, துச்சாசனன் அவிழ்த்துப் போட்ட புடவைகளால் வந்த பிரச்சினையை சுவையுடன் அலசிய நாடோடி, தமிழ்நாட்டில் நடக்கும் விஷயங்களை பகிடி செய்ய அதிசயபுரி என்ற பிரத்தியேக நாட்டை சிருஷ்டி செய்து, தனது மனோரதத்தில் ஏறி கால பரிமாணங்களை தாண்டி தமிழகத்துக்கு சென்று தான் கண்டதை எழுதும் நாடோடி பற்றி நான் ஏற்கனவே பதிவுகள் போட்டபோது கைவசம் அவர் புத்தகங்கள் ஏதும் இல்லை. ஆனால் இம்முறை ஒரு புத்தகம் கிடைத்தது, அதன் தலைப்பு “ஆயிரம் வருஷத்துக்கு அப்பால்”.
அதிலிருந்து புத்தகத் தலைப்பிலேயே வந்த கட்டுரை பற்றி பதிவு போட்டாகி விட்டது. இப்போது அடுத்த பதிவுக்கு செல்வோம்.
இப்பதிவை ஆரம்பிக்கும் முன்னால் இதில் வரும் இக்கட்டுரையை நாடோடி அவர்கள் இற்றைப்படுத்திய விஷயம் பற்றி எழுத வேண்டியிருக்கிறது. சமீபத்தில் 1955-ல் இக்கட்டுரை முதலில் வெளியாகியிருந்தது (தீபாவளி மலரிலா அல்லது சாதாரண விகடன் இதழிலா என்பது இப்போது நினைவிலில்லை). அதில் நாடோடி அவர்கள் தனது மனோரதத்தை 1955-லிருந்து 2055-க்கு செலுத்துவதா அல்லது 1855-க்கு செலுத்துவதா என குழம்பி, முன்னும் பின்னும் போய் 1855-க்கே போனதாக கதையை ஆரம்பிக்கிறார்.
ஆனால் எனது கையில் இப்போது இருக்கும் புத்தகத்திலோ அவையே 1957, 1857 மற்றும் 2057-ஆக மாற்றப்பட்டுள்ளது. ஏதோ நாடோடியாலான இற்றைப்படுத்தல் என வைத்து கொள்ளலாமா? ஆனால் இப்பதிவில் நான் ஒரிஜினலாகக் கூறப்பட்ட 1955-யே எடுத்து கொள்கிறேன்.
ஆக, முதலில் சொன்னது போல சில முறைகள் முன்னே பின்னே சென்ற பிறகு 1855-க்கே செல்கிறார். அதே தமிழகம்தான் ஆனால் நூறு ஆண்டுகளுக்கு முன்னால். அவர் இப்போது ஒரு திருமண வீட்டுக்குள் இருக்கிறார். பெண்களெல்லாம் அழகாக உடை உடுத்தி பவ்யமாக தத்தம் கணவருடன் நிற்கின்றனர். 12 வயதுக்கு மேல் மணப்பெண்ணின் வயதைக் கூற முடியாது. சுற்றியிருக்கும் பெண்களின் வயதும் 18, 19 என்றுதான் இருக்கும். எல்லோருக்கும் குழந்தைகள் வேறு. படித்த பெண்கள் முகத்தில் சாதாரணமாக காணப்படும் முக்குக் கண்ணாடிகள் இல்லை, அதிகம் படித்ததால் ஏற்படும் சோர்வும் இல்லை. ஒருவருமே அவ்வளவாகப் படிக்காதது போலத்தான் இருந்தது. பெண்கள் கையில் பணமும் இல்லை. தத்தம் கணவரிடம்தான் பணம் பெற்று செலவழித்தனர்.
இக்காட்சிகளை பார்த்த் விட்டு வெளியே வந்தால் நாடோடிக்கு தூக்கிவாரிப் போட்டது. வாசலில் நூற்றுக்கணக்கான மோட்டார் கார்கள் நின்றிருந்தன. 1855-ல் ஏது மோட்டார் கார் எனக் குழம்புகிறார் நாடோடி அவர்கள். அங்குள்ள ஒரு காரை ஒருவர் ஸ்டார்ட் செய்ய முயற்சித்து கொண்டிருக்க, அவரிடம் நாடோடி காரில் பெட்ரோல் இருக்கிறதா என்று பார்க்குமாறு கூறுகிறார். அவரோ இவரை துச்சமாகப் பார்த்து விட்டு காருக்கு பெட்ரோல் ஏன் தேவை, அது அணு சக்தியால் ஓடும் என்பது கூடத் தெரியாதா என எகத்தாளமாகக் கேட்கிறார். பிறகு மேலே பேசியதில் தான் 1955-ஆம் ஆண்டிலிருந்து வருவதாகவும், இப்போது 1855-க்கு வந்த பிறகு இங்குள்ள கார்கள் ஏது என குழம்பியதாகவும் நாடோடி கூற, மற்றவர் பெரிதாக சிரித்து விட்டு நாடோடி வந்திருப்பது 2055-க்குத்தான் என விளக்குகிறார்.
அப்படியானால் பெண்கள் மட்டும் 1855-ஆம் ஆண்டு பெண்களைப் போல் ஏன் இப்படி கட்டுப்பெட்டித்தனமாக இருக்கிறார்கள் எனக்கேட்க, மற்றவர் இவரிடம் 2055-க்கான பெண்கள் எவ்வாறு இருப்பார்கள் என நாடோடி நினைத்ததாக அவரிடமே கேட்கிறார். அவரும் 1955-ல் ஸ்திரீ சுதந்திரம், ஸ்திரீ முன்னேற்றம் என்ற பெயரில் ஆண்களுடன் எல்லா துறைகளிலும் போட்டி போட்ட பெண்கள் நிலையை எடுத்துரைக்கிறார். 2055-ல் பெண்கள் இன்னும் அதிக சுதந்திரம் அடைந்திருப்பார்கள் என தான் நினைத்ததாகக் கூறுகிறார்.
புது நண்பர் பெண்களின் 2055-ஆம் ஆண்டுக்கான நிலையை விளக்குகிறார்.
பெண்களுக்கு 14 வயதுக்குள்ளாக திருமணம் செய்து வைத்துவிட வேண்டியது. அவ்வாறு செய்யாவிட்டால் பெண்ணின் 14-வயது பூர்த்தியடையும் கடைசி நாளன்று அரசே பையனை ஏற்பாடு செய்து திருமணத்தை நடத்தி வைக்கும். பெண்ணின் பெற்றோருக்கு சிறை தண்டனை கிடைக்கும். திருமணத்துக்கு பிறகு பெண்களுக்கு கல்வி கிடையாது. தனிப்பணம் வைத்துக் கொள்ளக்கூடாது. லேடி டாக்டர் மற்றும் நர்ஸ் தவிர வேறு உத்தியோகங்களை செய்ய அனுமதி இல்லை.
பெண்களை ஏன் இவ்வாறு அடக்கி வைத்திருக்கிறீர்கள் என நாடோடி அவரைக் கேட்க அவர் அதை தெரிந்து கொள்ள 2005-ஆம் ஆண்டில் பெண்கள் நடத்திய புரட்சி பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் எனக்கூறுகிறார். பிறகு இருவருமாக நாடோடியின் மனோரதத்தில் ஏறி 2005-க்கு செல்கின்றனர்.
அதே தமிழ் நாடுதான். ஆனால் ஆண்டு மட்டும் 2005. தெரு வழியாக இறங்கியதும்தான் தமதம், ஆயிரக்கணக்கான பெண்கள் அடங்கிய ஊர்வலம் தெருவழியாக அவர்கள் எதிரே வந்தது. அவர்கள் பல வாசக அட்டைகளை பிடித்த் சென்றனர். அவற்றில் பின்வரும் கோஷங்கள் எழுதப்பட்டிருந்தன.
பதினான்கு வயதுக்குள் கல்யாணம் பண்ணி வை.
எங்களுக்கு சொத்துரிமையும் வேண்டாம், உத்தியோகமும் வேண்டாம்.
கல்யாணத்திற்குப் பிறகு படிக்க மாட்டோம். ஒன்று பெற்றோர்கள் வரன் தேடட்டும்; அல்லது சர்க்கார் தேடிக் கொடுக்கட்டும்.
இம்மாதிரியான கோஷங்களை ஆயிரக்கணக்கான பெண்கள் தாங்கிக் கொண்டு வந்து சென்னை கடற்கரையில் கூடியது ஆண்களாகிய அவ்விருவருக்கும் பயமாக இருந்தது.
அங்கு நடந்த கூட்டத்தில் பெண்கள் பல மயிர்க்கூச்செரியும் பேச்சுக்களை பேசினர். இந்தப் போராட்டம் நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் நடப்பதாக முதலில் கூறப்பட்டது. கூட்டத்தின் தலைவி பேசியதன் சாராம்சம் இதோ.
கடந்த ஐம்பது ஆண்டுகளாக பென்ணுரிமை தருகிறேன் என ஆண்கள் எங்களை மோசம் செய்து வருகின்றனர். கல்யாணம் செய்து வைக்கும் வயதை உயர்த்தும் சாக்கில் எங்களுக்கு கல்யாணம் செய்து வைப்பதையே எங்கள் பெற்றோர்கள் மறந்து விட்டார்கள். மேலும் நாங்கள் உத்தியோகங்களுக்கு செல்வதால் அதனால் வரும் பணத்துக்கு ஆசைப்பட்டு கல்யாண வயதை அவர்கள் மேலும் தள்ளிப் போடுகின்றனர். அப்படி இப்படி என எங்களுக்கு 30 வயதில் வரன் தேடினால் 40-45 வயதானவனுக்கு இரண்டாம் தரமாகப் போய் தொலைய வேண்டியிருக்கிறது. மூத்தாளின் நான்கைந்து குழந்தைகளை வேறு பராமரித்துத் தொலைக்க வேண்டியுள்ளது. சொத்துரிமை தருவதால் எங்களை பெற்றோருக்கும் சரி எங்கள் புக்ககத்தினருக்கும் சரி எங்களைப் பிடிக்காமல் போய் விட்டது. ஆகவே, அரசே எங்கள் கோரிக்கைகளை மரியாதையாக ஏற்றுக் கொள்ளவும்.
அதற்கு மேல் 2055-ஆம் ஆண்டைச் சேர்ந்தவர் நாடோடியை அங்கு இருக்க விடவில்லை. 2005-ல் அக்குறிப்பிட்ட தேதியில் கண்ணில் பட்ட ஆட்களையெல்லாம் அப்பெண்கள் உதைத்ததாக சரித்திரம் இருந்ததாகக் கூற இருவரும் அவ்விடத்தை விட்டு துள்ளி குதித்து ஓடிவிட்டனர். பிறகு நாடோடி அந்த நண்பரை 2055-ல் விட்டு விட்டு தான் மட்டும் 1955-க்கு திரும்பினார்.
இப்போது டோண்டு ராகவன் தரப்பில் சில வார்த்தைகள். இக்கட்டுரையின் முழு நோக்கமுமே 1955 நிலை குறித்த நையாண்டி மற்றும் பகிடி ஆகும். அதை நான் படித்த போது எனக்கு வயது ஒன்பது. ஆனால் மனதில் நன்றாக படிந்து விட்டது. இப்போது எதேச்சையாக நாடோடியின் இப்புத்தகம் கிடைத்ததால் பழைய நண்பனை பார்க்கும் உணர்வு.
ஆனால் ஒன்று 2005 இப்போது நமக்கு பழைய காலம். ஆனால் அவ்வாறெல்லாம் நடக்கவில்லையே எனக் கேட்பதற்கு நாடோடி என்ன நாஸ்ட்ரடாமஸா என்ன? கட்டுரையை வெறுமனே படித்து அனுபவிக்கணும். கேள்வியெல்லாம் கேட்கக்கூட்டாது எனச் சொல்வது முரளி மனோகர். இப்படித்தான் ஜார்ஜ் ஆர்வெல் என்பவர் எழுதிய நாவல் 1984. அதில் அந்த ஆண்டில் நடக்கப் போவதை அவர் கற்பனை செய்ட்து எழுதியிருந்தார். நாவல் எழுதியது 1948-ல். 1949 ஆக இருந்திருந்தால் நாவலின் தலைப்பு 1994 ஆகியிருக்கும் அவ்வளவே. ஆனால் ஒன்று அந்த நாவல் எல்லோரையும் புரட்டிப் போட்டது. இப்போது கூட Orwellian உலகம் பற்றியெல்லாம் பேசுகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அதுவும் 1984 ஜனவரி 1-ஆம் தேதி பல பேப்பர்களில் ஆர்வல் சொன்ன 1984 ஆரம்பித்து விட்டது என்ற பொருளில் எல்லாம் எழுதினார்கள்.
பெண்கள் சுதந்திரத்தால் பல பிரச்சினைகள் பெண்களுக்கே வந்தது, வருவது எல்லாமே உண்மைதான். முக்கியமாக அவர்களது திருமணம் மிகவும் தள்ளிப் போடப்பட்டது. பெண்ணின் சம்பளத்தை வைத்து பல பெற்றோர்கள் அது போய்விடப் போகிறதே என மனம் பதைத்து அவள் திருமணத்தை தள்ளிப்ப் போட்டதை நானே பல வீடுகளில் பார்த்தேன். சமீபத்தில் 1973-ல் வந்த “அரங்கேற்றம்” படத்தில் மூத்த பெண்ணும் அவளுக்கு அடுத்து இரு பெண்களும் திருமணத்துக்கு தயாராக இருக்கும் நிலையில் தாயார் இன்னொரு முறை கர்ப்பம் அடைகிறாள். அது ஒன்றும் மிதமிஞ்சிய கற்பனை எல்லாம் இல்லை.
ஆனால், அதற்காகவெல்லாம் பெண்களுக்கு சுதந்திரமே வேண்டாம் என பழைய காலத்துக்கு செல்ல மட்டும் நினைத்து விடலாமா? அவ்வாறு சொல்வது, இந்திய சுதந்திர தினத்தன்று அதை துக்க நாள் என அறிவித்த பெரியார் அவர்கள் வெள்ளைக்காரன் திரும்ப வந்தால் நன்றாக இருக்கும் என்று பேசியது போலத்தான் இருக்கும்.
இங்கு முக்கியமாக ஒன்றை நாம் மறக்கலாகாது. ஒருபோதும் கடந்த காலத்துக்கு செல்லவியலாது. அந்த நாளும் வந்திடாதோ என எம்.எஸ். அவர்கள் பாடிய ரிகார்டை வேண்டுமானால் கேட்டு மகிழலாம். ஆனால் நிஜமாகவே அந்த நாளை வரவழைக்க நினைத்தால் ஐயா, அம்மா, அப்பப்பாதான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
நாடோடியின் நகைச்சுவை ஒரு தனிரகம்! பழையதில் எவ்வளவு நல்லதும் இருக்கிறது என்பதை நினைத்துப் பார்க்கிறேன் டைப்பில் இப்படி எழுதுவது கூட சுவாரசியமாகத் தான் இருக்கிறது.
ஹாஹாஹா
காமெடிக்காக மட்டுமே ரசிக்கலாம்!
நூறு வருடங்களுக்கு பிறகு பெண்கள்
திருமணமே வேண்டாம் என்பார்கள், தேவையென்றால் குளோனிங் முறையில் குழந்தை பெற்று கொள்ள வேண்டியது தான்!
http://vidhoosh.blogspot.com/2009/05/blog-post.html (அக்கரைப் பச்சை - சிறுகதை)
http://vidhoosh.blogspot.com/2009/05/blog-post_5835.html (நண்பர் நந்தாவின் கேள்வியால் எழுந்த எண்ணங்கள்)
இந்த இரண்டு பதிவும், இதே உணர்வோடு எழுதப்பட்டதுதான். :( நாடோடி தீர்க்கதரிசி...
சுதந்திரம்னா என்னங்க?
--வித்யா
விதூஷ்,
/சுதந்திரம்னா என்னங்க?
--வித்யா/
இந்தக் கேள்வியை கேக்கவாவது தர்ஷனி அப்பாவுக்கு ஒரு சான்ஸ் கொடுங்க!
@வால்ஸ்,
/நூறு வருடங்களுக்கு பிறகு பெண்கள்
திருமணமே வேண்டாம் என்பார்கள்/
இப்போதே அப்படித் தானிருக்கிறது!
மெய்யாலுமே!
கந்தசாமி போட்டியில் கலந்து கொள்ளுங்கள் .. பாரிஸுக்கு டிக்கெட் வெல்லுங்கள் www.safarikanthaswamy.com
/கந்தசாமி போட்டியில் கலந்து கொள்ளுங்கள் .. பாரிஸுக்கு டிக்கெட் வெல்லுங்கள்/
அனானி!
அவனவன் கந்தசாமி பத்தின விமரிசனங்களைப் படிச்சுட்டே நொந்தசாமிகளா ஆயிட்டிருக்கும்போது, நீங்க வேற பாரிசுக்குப் போ, தி.நகருக்குப் போன்னு சீரியஸா ஜோக், ஓசி விளம்பரம் அடிக்கறீங்களே, நியாயமா?
There is also a different story in the below link it’s a book review but interesting like Dondu Sir Story! Just see for example India’s trade link with other nations and the pirates’ role in it.
http://www.newyorker.com/arts/critics/books/2009/09/07/090907crbo_books_crain?currentPage=all
In May, 1694, a group of English sailors in a Spanish port grew tired of waiting for overdue wages. They cut their ship’s anchor, and the ringleader, Henry Every, slipped into the captain’s cabin. “I’ll let you into a Secret,” Every said. “I am Captain of this Ship now.” After sending ashore the captain and others unwilling to turn pirate, Every warned the world by letter that “my Men are hungry, Stout, and resolute,” and then sailed for the Indian Ocean. There his crew took two rich prizes—a ship belonging to a wealthy Muslim merchant and another belonging to Aurangzeb, the Grand Moghul of India. The loot amounted to a thousand pounds per pirate, “the equivalent of twenty years’ wages aboard a merchant ship,” Colin Woodard explains in his book “The Republic of Pirates.” The Indians, furious, held England’s East India Company responsible, and imprisoned its officers for almost a year. The success inspired imitators, including William Kidd, whose seizure, in 1698, of a cargo belonging to the Moghul’s secretary of state exasperated the Indians even further; they threatened to flay an English administrator alive. Though England turned a blind eye to the pirates’ activities for a while, it couldn’t afford to imperil trade with India, and so, at the end of the seventeenth century, it sent men-of-war to suppress the Indian Ocean pirates. Still, the dynamics of geography and trade that attracted men like Every to the Horn of Africa remain, and the opening of the Suez Canal has probably made the pickings even richer. Somali pirates prowl the same waters today.
The concluding part:
Are pirates socialists or capitalists? Lately, it’s become hard to tell the categories apart. Toward the end of his book, Leeson suggests that pirate self-governance proves that companies can regulate themselves better than governments can, as if he sees the pirate ship as a prototype of the modern corporation, sailing through treacherously liberal waters. Such arguments haven’t aged well over the past year, but even in piracy’s golden age people were aware that an unregulated marketplace invites predators. During the South Sea Bubble of 1720, speculators claiming to be able to make wealth out of debt fleeced British investors and ruined many banks. Pirates who spent that year killing and plundering, Nathaniel Mist grumpily wrote, could salve their guilty consciences, if they had any: “Whatever Robberies they had committed, they might be pretty sure they were not the greatest Villains then living in the World.”
For more see below link http://www.peterleeson.com/
கிருஷ்ணமூர்த்தி: இந்தக் கேள்வியை கேக்கவாவது தர்ஷனி அப்பாவுக்கு ஒரு சான்ஸ் கொடுங்க!
//// ஹா ஹா... இரசித்தேன், ஆனா இந்த கேள்விய கேக்க, வீட்டுக்கு வரணும்ல, ஆபீஸ விட்டு. :))
///தேவையென்றால் குளோனிங் முறையில் குழந்தை பெற்று கொள்ள வேண்டியது தான்!///
தேவை யாருக்குன்னு சொல்லவே இல்லையே??? :))
எதுக்கு, க்ளோனிங்.. தத்து எடுக்கலாமே.
--வித்யா
//எதுக்கு, க்ளோனிங்.. தத்து எடுக்கலாமே.//
அதுவும் குளோனிங் குழைந்தை தான்!
யாருமே கல்யாணம் பண்ணாது போது வேறு வழி என்ன?
ம்ம்ம்... எப்படியோ... doom's day வந்துடப்போகுது...
:))
வித்யா
i wants to create tamil blog...please help me...how to create tamil blog..
@Gokulakrishnan
Go to http://www.blogger.com/ page. Click the link, create a blog and follow the step-by-instructions.
Regards,
Dondu N. Raghavan
http://www.dinamalar.com/weeklys/vmalarnewsdetail.asp?news_id=853&dt=09-07-09
மகளுக்கு திருமணம் செய்ய மறுக்கும் தந்தை
எனக்கு வயது 48. நான் நாடோடி அவர்களின் நூல்கள் நிறைய படித்திருக்கிறேன். “சங்க காலம்”,
நண்பர் பரந்த அனுபவத்தின் பரமோபதேசங்கள், என்னை கேளுங்கோன்னா, போன்ற பல நூல்கள்.
அவரது , சரசு, அரட்டைகல்லி பாலூ,
போன்ற கேரக்டர்கள் மறக்க முடியாது.
உயரிய நகைச்சுவை. விகடன் அல்லது
அல்லயன்ஸ் மனது வைத்தால் கிடைக்கும்.
Post a Comment