கேள்விகள் கேட்போருக்கு வழக்கமான ஒரு வேண்டுகோள். சில சமயம் எங்காவது இணையத்தில் படித்ததை ஆதாரமாக வைத்து கொண்டு கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதில் தவறில்லை. ஆனால் அப்படியே தமது கேள்விகளின் பின்புலனையும் கூறினால் சௌகரியமாக இருக்கும். நானே கூகளிட்டு பார்ப்பதுண்டு என்பது நிஜமே. ஆயினும் அந்த சுட்டி ரெடியாக கிடைத்தால் அதை தேடும் நேரம் விரயமாகாமல் பதிலில் இன்னும் அதிக முனைப்பாக இருக்கலாம் அல்லவா?
அவானி (12 கேள்விகள் கேட்பவர்)
1. ஆண்வர்க்கததை அதிகம் அல்லல்படுத்துவது மதுப் பழக்கமா? மாதுப் பழக்கமா?
பதில்: மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை என்றால் எல்லாமே அவற்றுள் அடங்குமே.
2. ஆண்களுக்கு பெரிய பிரச்சனையாய் மாறிவரும் தொந்தியைக் குறைக்க உபாயங்கள்?
உடற்பயிற்சி, முக்கியமாக இரண்டாவது டோஸாக சாப்பாடு/டிபன் அளித்தால் தலையை ஒரு புறத்திலிருந்து மறு புறத்துக்கு மாற்றி மாற்றி கொண்டு செல்வது, பியர் குடிக்காமல் இருப்பது.
3. தமிழ்நாட்டில் பல கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஒரே குடும்பத்தில் இருப்பது பற்றி?
பதில்: எதிர்காலத்தை காபந்து செய்யும் புத்திசாலிகள்.
4. செல்போன் தவிர்க்க முடியாத ஒன்றாய் மாறிவருவது பற்றி?
பதில்: என்னைப் போன்று சுயதொழில் செய்பவர்களுக்கு துணையாக இருந்து வியாபாரத்தை பெருக்கும் செல்போன்களுக்கு எதிராக எனக்கு என்ன ஆட்சேபணை இருக்கவியலும்?
5. தமிழ்த் திரை உலகில் புதிய இசையமைப்பாளர்களுள் உங்களைக் கவர்ந்தவர்? ஏன்?
பதில்: எம்.எஸ். விஸ்வநாதன். 45 ஆண்டுகள் கழித்து கேட்டாலும் காதலிக்க நேரமில்லை படத்தின் பாட்டுகள் இன்னும் புதிய பாடல்களைப் போலவே ஒலிக்கின்றனவே? சரியான ஜித்தன் அவர்.
6. அரசியல் தலைவர் ஒருவர் அடிக்கடி”இருப்பது ஒரு உயிர். அது போவது ஒரு முறை” என்பது பற்றி?
பதில்: உயிரும் தரப்போவதில்லை. அதற்கு எதுகையாக வருவதை கூட தரப்போவதில்லை.
7. தி.மு.க.வினர் பார்வையில் ராகுலின் தமிழக அரசியல் நடவடிக்கைகள்?
பதில்: கவலையூட்டும் வண்ணம் தனது காய்களை அவர் நகர்த்தினால் திமுகவினர் கதை கந்தல்தான்.
8. கலைஞரின் பார்வை பாஜக பக்கம், ஜெ-சோனியா-வி.காந்த் கூட்டணிக்கு வழி செய்யுமா?
பதில்: கலைஞரின் பார்வை பாஜக பக்கம் என எதை வைத்து சொல்கிறீர்கள்? ஜெயும் சோனியாவும் ஒன்று சேருவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை.
9. தமிழ் திலையுலகின் போக்கு எத்திசையில் பயணிக்கிறது?
பதில்: தொழில் நுட்பத்தில் அபார முன்னேற்றம், ஆனால் கதையில் மட்டும் கோட்டை விடுகிறர்கள். சிவாஜி படத்தை இப்போதுதான் டி.வி.யில் பார்த்தேன். ஏன் ஊற்றிக் கொண்டது என்பது வெளி ஆளான எனக்கே புரிகிறதே.
10. அருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கத்தின் ஆன்மீகப் பணி பற்றி?
பதில்: எனக்கு அவற்றுடன் பரிச்சயம் இல்லை.
11. தூத்துக்குடி ஸ்பிக் மறுவாழ்விற்கு அரசின் உதவி வெற்றிபெறுமா?
பதில்: இரண்டு ஆண்டுகளாக மூடிக்கிடந்திருக்கிறது போல. நீங்கள் சொல்வது நடந்தால் நல்லதுதானே. இங்கு பார்க்கவும்.
12. மதுரை அமெரிக்கன் கல்லுரி போல்,பல கிருத்துவ கல்லுரிகளில் (சபைகள்) பதவிப் போட்டி சொத்துச் சண்டை என உலா வரும் செய்திகள் ஏசுபிரானின் அன்புக் கொள்கைக்கு மீறீய செயலல்லவா?
பதில்: இப்படி பச்சப்புள்ளயா இருக்கீங்களே. ஏசுநாதரை சிலுவையில் அறைந்து 2000 ஆண்டுகள் ஆகப்போகின்றதே.
அனானி (21.08.2009 இரவு 10.36-க்கு கேட்டவர்)
டோண்டுவின் புதுமொழிகள்?
1.அசைந்து தின்கும் யானை; அசையாமல் தின்கும் வீடு
பதில்: மொத்தத்தில் எல்லாமே தின்கும்.
2. அசல் வீட்டுக்காரனுக்கு ஏண்டுக்கிட்டு அப்பக்காரனை அடிக்கலாமா...?
பதில்: மேனாட்டு பழக்கங்களை சிலாகித்து சக தாய் நாட்டினரை மட்டம் தட்டலாமா?
3. அங்கும் இருப்பான், இங்கும் இருப்பான், ஆக்கிய சோத்துக்குப் பங்கும் இருப்பான்- வெங்கப்பெயல்.
பதில்: நோகாமல் நோம்பும் நூற்பான்
4. அக்கு தொக்கு இல்லாதவனுக்கு தூக்கம் ஏது?
பதில்: அப்படியே தூங்கினாலும் எழுப்பிவிடு.
5. அக்கரையில் படர்ந்த பாகற்கொடிக்கு, இக்கரையில் பந்தலிடுவானேன்?
பதில்: கமல் பெரியவரா ரஜனி பெரியவரா என்று ஏன் பேச்சு? உன் வீட்டு அடுப்பு எரிகிறதான்னு பார்.
நக்கீரன் பாண்டியன்
1. இன்றும் ஒரு சிலர் தீய பழக்கங்கள் என்னும் பாழும் கிணற்றில் விழுந்தது தெரிந்தும் வெளியே வர மனமில்லாமல்/இயலாமல் தங்கள் வாழ்வினை தொலைப்பதற்கு என்ன காரணம்?
அ). பிரம்மன் விதித்த விதியா; ஆ). படிப்பிருந்தும் புரியா நிலையா?; இ). உங்கள் பதிவுகலக நண்பர் சுப்பையா வாத்யார் சொலவது போல அவரது ஜாதக் கட்டத்தில் உள்ள கிரகங்களின் ஈர்ப்பு விசையா?; ஈ).போன ஜென்மா கர்மாவா?; உ).மனித குலத்தின் இருப்பினை (மக்கள் தொகை பெருக்க கட்டுப்பாடு) சம நிலை செய்ய இயற்கையின் சித்து விளையாட்டா?; ஊ).கிருத்துவர்கள் சொலவது போல் இது சாத்தானின் சதியா?
பதில்: மேலே சொல்லப்பட்ட எல்லா காரணிகளுமே தனியாகவோ, சேர்ந்தோ செயல்படுகின்றன. ஆனால் கடைசி ரிசல்ட் ஒன்றுதான், அதாவது அழிவு.
அனானி (23.08.2009 இரவு 08.30-க்கு கேட்டவர்)
1. தேர்தல் முடிவுக்குப் பிறகு அசைக்க முடியாத சக்தியாக தே.மு.தி.க மாறியுள்ளதா?
பதில்: சக்தியாக உருவாகியுள்ளது. மற்றப்படி அசைக்க முடியாதது என எதுவுமே இல்லை.
2. இரட்டை இலை ஓட்டு வங்கி முரசுக்கு தாவிவிட்டதா?
பதில்: அப்படி என ஒட்டு மொத்தமாகச் சொல்லிவிட முடியாது.
3. ஜெயலலிதா இனி என்ன செய்யப் போகிறார்?
பதில்: அவருக்கே அது தெரியாது என்றுதான் தோன்றுகிறது. எனக்கு மட்டும் எப்படித் தெரியும் என சோ அவர்கள் சொன்னதை நானும் ஆமோதிகிறேன்.
4. தொண்டர்களின் குமுறல் கேடகாத தலைமையின் பிடிவாதத்தால்தான் அதிமுகவின் நிலை தலைகீழ் சரியா?
பதில்: அதில் என்ன சந்தேகம். ஆனால் தொண்டர்கள் என யாரை கூறுகிறார்கள்? கட்சியே எல்லாம் என செயலாற்றும் தொண்டர்கள் யாருமே இப்போது எந்தக் கட்சிக்குமே இல்லை என்பதுதான் நிஜம்.
5. கலைஞரின் அரசியல் ராஜதந்திரத்தின் முன்னால் வி.காந்த் சினிமா வீர வேஷங்கள் எடுபடுமா?
பதில்: வெறுமனே மனோகரா, பராசக்தி அலம்பல் அடுக்கு மொழிகளை மட்டுமே வைத்திருந்த கருணாநிதியே வெற்றி பெற்ற பிறகு விஜயகாந்த் ஏன் வெற்றி பெறக்கூடாது?
6. இனி காங்கிரசும் அடக்கி வாசிக்குமா?
பதில்: சொந்த பலத்தை நம்பும் துணிவு இல்லாதவரை அது வேறு என்ன செய்யவியலும்?
7. திருமங்கல பார்முலாவின் வெற்றி தொடர்வது அரசியல் ஆரோக்கியத்திற்கு சரியில்லையே?
பதில்: சரியில்லைதான் என்ன செய்யலாம் சொல்லுங்களேன்.
8. அழகிரியின் தேர்தல் மாயா ஜாலங்கள் தந்தைக்கே உபதேசம் செய்யும் செயல் போலுள்ளதே?
பதில்: அதெல்லாம் ஒரு காலத்தில் கருணாநிதி அவர்கள் நிற்கும் தொகுதிகளில்தான் செய்து கொடிருந்தார்கள். இப்போது அதை அழகிரி மேலே கொண்டு செல்கிறார் அவ்வளவே.
9. ஸ்டாலின் பிடி கட்சியில் தளர்கிறதா இல்லை இறுகுகிறதா?
பதில்: அவர் பிடி இறுகுகிறதோ அல்லது தளர்கிறதோ என்பதை பார்ப்பதற்கு முன்னால் அவர் கழுத்தில் விழுந்த அழகிரி போட்ட முடிச்சு என்னவாகும் என்பதை பார்ப்பது நலமாக இருக்கும்.
10. ஒரு குடும்ப ஆட்சி 2011ல் மாறும் என பலரின் நம்பிக்கை பொய்த்துவிடும் போலுள்ளதே, இதற்கு மாற்று வழி?
பதில்: மக்கள் விழிப்புணர்வு எய்துவதுதான். முடியுமா?
11. நவீன காதல் கிறுக்கன் ராகவேந்திரா பற்றி?
பதில்: அது என்ன நடிகை என்றால் இளப்பமா? இவ்வளவும் செய்து விட்டு தான் பைத்தியம் என தப்பித்துக் கொள்ள நினைப்பவர்களுக்கு ஒரே தண்டனை நிஜமாகவே ஆண்டுக்கணக்கில் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் அடைப்பதுதான்.
12. நடிகை என்றாலே கஜமுஜா ஏன்?
பதில்: கஜமுஜா பாட்டுக்கு எல்லோருக்கும் எதிராக நடந்து கொண்டுதானிருக்கும். ஆனால் நடிகைக்கு எதிராக நடப்பதைத்தான் எல்லோரும் ஆர்வத்துடன் பார்ப்பதால்தான் நீங்கள் சொல்வது போல நடக்கிறது.
13. இதுவும் புஸ்வாணமாய் ஆய்விடுமா?
பதில்: எது?
14. சமீபத்தில் ஒபாமாவை பேட்டி எடுத்த 11 வயது வாண்டு பற்றி?
பதில்: சுட்டிப்பயலாக இருக்கிறான். இங்கு நேர்காணலின் வீடியோவைப் பாருங்கள்.
15. வருங்காலத்தில் தலைவர்கள் சிலைகள் தரும் கவலைகள் கூடும்போலுள்ளதே?
பதில்: பேசாமல் எல்லா சிலைகளையும் மியூசியத்தில் வைத்து விடலாம். இஷ்டப்பட்டவர்கள் போய் பார்த்து கொள்ளட்டும். செய்வார்களா?
16. உலகெங்கும் வாழும் பணக்காரச் செல்லப் பிராணிகள் எவை எவை?
பதில்: இந்த லிஸ்டில் முக்கியமாக இருப்பவை நாய், பூனை, கிளி முதலியன.
17. உலகத் தமிழர் பிரகடனம் நிகழ்ச்சி அரசின் நடவடிக்கை பாயுமா திருமாவளவன் மீது?
பதில்: ஏதோ திருமாவளவனை தன்னுடன் வைத்துக் கொண்டதால் கலைஞருக்கு ஸ்ரீலங்கா விவகாரத்தில் உள்ள கெட்டப் பெயர் ஒரு அளாவோடு இருக்கிறது. அவர் மீது இப்போது ஆக்ஷன் எடுக்க கலைஞருக்கு பைத்தியமா என்ன?
18. வடிவேலுவின் காமெடி விவேக் காமெடியை பின் தள்ளிவிட்டதா?
பதில்: எனக்கு வடிவேலுவைத்தான் பிடித்திருக்கிறது. அவர் காமெடியை காமெடியாக செய்கிறார். குழப்பம் இல்லை. ஆனால் விவேக் கருத்து கந்தசாமியாக வந்து எரிச்சல் மூட்டுகிறார்.
19. இந்தியாவில் உள்ள இடதுசாரிகள் சாமானியர்களின் பிரதிநிதியாய் வலம் வரும் ஒபாமாவை வெறுப்பது ஏன்?
பதில்: ரிபப்ளிக்கன் கட்சி அபிமானியான டோண்டு ராகவனுக்குத்தான் ஒபாமாவை பிடிக்காது என நினைத்தேன். இடதுசாரிகளுக்கும் பிடிக்காதாமா? இது என்ன புதுக்கதை?
20. பொதுவுடமை கட்சிகளின் தமிழக ஓட்டு பலம் தெரிந்துவிட்டதே இனி அவர்கள்?
பதில்: அவர்களது ஓட்டுபலம் புதிதாக என்ன தெரிந்து விட்டது? ஆகவே இத்தனை நாள் செய்யும் பஜனையையே செய்து விட்டு போகிறார்கள்.
கிருஷ்ணகுமார்
1. Tell whether oats is good for health and in what way? your experience?
பதில்: உலகபிரசித்தி பெற்ற சாமுவேல் ஜான்சன் என்ன சொன்னாரென்றால், Oats: A grain, which in England is generally given to horses, but in Scotland appears to support the people. இதற்கு மேல் ஓட்ஸ் பற்றி ஏதும் அறியேன். ஓட்ஸ் கஞ்சி எனக்கு பிடிக்கும் என்றும் இத்தருணத்தில் கூறிவைக்கிறேன்.
2. WHICH IS the best -HP OR DELL or h c l LAPTOP? why? which is your brand?
பதில்: கணினி வன்பொருள் விஷயம் எனக்கு தகராறு. மென்பொருள் மட்டும் என்ன வாழுகிறதாம் எனக் கேட்டுவிடாதீர்கள். எனது மொழிபெயர்ப்பு தேவைக்கேற்ற மென்பொருள்களில் எனக்கு பிரச்சினை அவ்வளவாக இல்லை.
3. In the world most of the celebrities are big Hypocrites, why?
பதில்: அது ஒரு பிரமை மட்டுமே. ஒரு துறையில் பிரசித்தி பெற்றவர்களை நாம்தான் பல விஷயங்கள் பற்றிக் கேட்டு அவர்களை கருத்து கந்தசாமிகளாக்குகிறோம். அவர்களும் எவ்வளவு நேரந்தான் எல்லாம் தெரிந்தவர்கள் போல நடிப்பதாம்? சாயம் வெளுத்தால் உடனே அவர்கள் ஆஷாடபூதிகளாமா? தவறு நம்மிடம்தான் இருக்கிறது.
4. Is Economics a Science Subject or?
பதில்: பொருளாதாரம் கலையா அறிவியலா என்று ஒரு பெரிய விவாதமே நடக்கிறது. இந்தப் பக்கத்துக்கு வேண்டுமானால் போய் பாருங்களேன்.
5. It is advertised that home based net jobs pay more? is it true?
பதில்: அம்மாதிரி வாக்குறுதிகள் தரும் விளம்பரங்களால் அதிகம் சம்பாதிப்பவர்கள் அவ்விளம்பரங்களைத் தருபவர்களே. ஜாக்கிரதையாக நாம்தான் இருக்க வேண்டும்.
5. As told by many is masturbation bad for health?
பதில்: இல்லை, தவறான செய்தி. நான் சௌக்கியமாகத்தானே இருக்கிறேன்.
6. The worst incident during english rule india?
பதில்: ஜாலியன்வாலாபாக் படுகொலைகள்.
7. Tell the best and useful computer course suitable for all?
பதில்: அது அவரவர் தேவையை பொருத்தது. நீங்கள் நினைப்பதுபோல ஒற்றை பதிலாகத் தரவியலாது.
8. merits and demerits about self finance institutions?
பதில்: சுயநிதிக் கல்லூரிகள் பற்றித்தானே கேட்கிறீர்கள்? அவை காலத்தின் கட்டாயம். அவற்றை நடத்தும்போது ஏற்படக்கூடிய முறைகேடுகள் நடக்காமல் பார்த்து கொண்டால் அவை இருப்பது நல்லதே.
9. Tell any Surge in an Automobile at present?
பதில்: கார்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு பலமடங்காய் அதிகரிக்கிறது. இப்போதே சாலைகள் அவற்றை சமாளிக்க முடியவில்லை. எதிர்காலத்தை நினைத்தால் பயமாக உள்ளது.
10. Your heaven?
பதில்: ஓய்வு என்ற வார்த்தைக்கே இடம் இல்லாது கடைசி நாள் வரை இடையறாத மொழிபெயர்ப்பு வேலைகள் கிடைக்க வேண்டும். அதுதான் எனக்கு சொர்க்கம்.
சேதுராமன்
1. Will Jinnah issue divide the B.J.P. now?
பதில்: பாஜகவுக்கு death wish வந்துவிட்டது எனத் தோன்றுகிறது. சுதாரித்துக் கொள்ள வேண்டிய நேரம் இது.
2. With the Vasundhara and Jaswanth epidemic, will the BJP survive, or will be a 'gone case'?
பதில்: அதை பூட்ட கேஸ் எனச்சொல்ல மனம் வரவில்லை.
3. Instead of his usual shouting from the rooftop that DMK's achievements alone are the cause for the victory, why did MK pull the Centre also into the picture?
பதில்: காங்கிரஸ் தான் மிகவும் அவமானப்படுத்தப்பட்டதாக குமுறிக் கொண்டிருக்கிறது. திடீரென 2011 தேர்தலுக்கு முன்னால் அக்கட்சி மாநிலத்தில் தனது ஆதரவை விலக்கிக் கொண்டால் திமுக ஆட்சிக்கு சங்குதான். அமாதிரி செய்து ஜனாதிபதி ஆட்சி வந்தால் திருமங்கலத்தில் செய்த பஜனையை திமுகாவால் செய்யவியலாது. ஆகவேதான் கருணாநிதியும் காங்கிரசை தன்னுடன் தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்கிறார்.
4. With so many raids in Tamilnadu by the CBI (original and the duplicate) and arrests, can you please tell how many of the arrested are from the Brahmin community?
பதில்: தெரியவில்லையே.
5. Is there any connection between Anita Radhakrishnan joining the DMK, and withdrawal of cases against him, within three days?
பதில்: கைப்பூணுக்கு கண்ணாடியும் தேவையா?
6. Did you read Kumudham this week, will there be a split in the ADMK now?
பதில்: பிளவு என்று வராது. ஒரேயடியாக அழிவது வேண்டுமானால் நடக்கலாம்.
அனானி (25.08.2009 காலை 06.00 மணிக்கு கேட்டவர்)
1. எல்லாத் தந்தையர்களும் அனாதி காலம் தொட்டு தனது வாரிசுகள் , தான் வாழ்வில் அனுபவித்த துன்பங்களின் நிழல் கூட பட்டுவிடக் கூடாது என முடிவு செய்து தன் சக்திக்குமீறி கடனை உடனை வாங்கி , ஆங்கில வழிக் கல்வியும்,பின்னர் சிறப்பான பொறியியல் கல்வியும் அளித்து அதன் பலனாய் கைநிறைய சம்பளம் வாங்கவது காரணமாய் அமைவது. நிதர்சனம். ஆனால் இந்தப் பிள்ளைகள் (பொதுவாய்_ பார்ப்பனர் சமூகத்தை தவிர_வால்பையன் சண்டைக்கு வரப் போகிறார்_டோண்டுவிடமே விளக்கம் உண்டு) தன் நலம் கருதாது, தியாகம் செய்து தன் வாழ்வின் நிலை உயர்த்திய தாய் தந்தையரை வயதான காலத்தில் சிறிதும் கவனிக்காமல் இருப்பதை என்ன நோய் என சொல்லலாம்?
பதில்: இதை எதிர்க்க வால்பையன் ஏன் வேண்டும்? டோண்டு ராகவனே ஒத்துக் கொள்ளமாட்டானே. இம்மாதிரியெல்லாம் பொதுப்படையாகக் கூறுவதை தர்க்க சாத்திரப்படி fallacy of hasty generalization என்பார்கள். மற்றப்படி தாய் தந்தையரை அழவிடுபவனுக்கு நல்லச்சாவே வராது.
2. குடும்பத்தில் ஆண்கள் (அண்ணன்கள்) தங்கைகளின் திருமணத்திற்கு குடும்பத்து சொத்தினை விற்றும், கடன்கள் வாங்கியும் நல்ல முறையில் திருமணம் செய்து கொடுத்த பிறகும், அரசின் பெண்கள் சொத்து உரிமை சட்டப்படி மீதம் உள்ள குடும்ப பூர்வீக வீட்டில் தனக்கு பங்கு கேட்டு படிக்கட்டுகளில் ஏறுவோருக்கு (பெண்கள்) என்ன நோய்?
பதில்: திருமணத்துக்கு செலவு செய்வதை சொத்துக்களை பிரிக்கும் விஷயத்தில் கொண்டுவர இயலாது என்றுதான் சட்டம் கூறுகின்றது என்பது எனது புரிதல். வக்கீல் பதிவர்களே இதற்கு விடையளிக்க அதிகப் பொருத்தமானவர்கள்.
3. வீடு வாடகைக்கு வரும் போது நல்லவர்கள் போல் நடித்து பின்னர் ஒரு சில ஆண்டுக்குப் பிறகு வீடு எனக்குத்தான் சொந்தம் என சொல்லும் மனிதர்களுக்கு என்ன நோய்?
பதில்: வீட்டு வாடகைச் சட்டத்தை 1948-லிருந்து அப்படியே மாற்றாமல் வைத்திருக்கும் அரசுக்குத்தான் நோய். மற்றவர்களுக்கு அல்ல.
அனானி (25.08.2009 காலை 06.55-க்கு கேட்டவர்)
1. பொய்புரட்டு பேசி தன்னை நம்பும் சாமனியர்களை ஏமாற்றி கோடி கோடியாய் தந்து குடும்பத்து அனைத்து அங்கத்தினர்களுக்கும் பெரும் சொத்து சேர்த்து வைத்துள்ளதாய் வெளிப்படையாய் தெரியவரும் தமிழக அரசியல் பெரும் புள்ளிக்கு நரகத்தில் என்ன தண்டனை (நரகம் இருப்பதாய் நம்பும் முகமாக)?
பதில்: அடுத்த ஜன்மத்தில் அவர்களை ஏழைகளாகப் பிறக்கச் செய்து பூர்வ ஜன்ம ஞாபகத்தையும் அளித்தால்? கற்பனை செய்யவே சுகமாக இல்லை?
2. தனது தோழியின் சொல்கேட்டு ரத்தம் சிந்தி வளர்த்த கட்சியை ஒரு சுயநலக் குடுபத்திடம் அடகு வைத்ததாய் அரசியல் பார்வையாளர்களால் சொல்லப்படுபவருக்கு என்ன தண்டனை (அன்னியன் படத்தில் சொன்ன கருத்துகளின் அடிப்படையில்)?
பதில்: அத்தோழியின் கையாலேயே தண்டனை பெறுவதே சரியான தண்டனை.
3. கறுப்பு பணத்தை கணக்காய் வாங்கி கல்லுரி கட்டி, கறாராய் பணம் வாங்கியும்,அரசின் இடங்களையும் தன்னிஷ்டத்துக்கு வழக்குகள் வந்தாலும் கலங்காது மாய்மாலம் தொடந்து செய்யயும் இந்த போலி நடிகவள்ளலுக்கு என்ன தண்டனை (ரமணா பாணியில்)
பதில்: அக்கல்லூரியிலேயே அவரை படிக்கச் செய்து, பரீட்சை எழுத வைப்பது.
4. தண்ணீர்விட்டோ வளர்த்தோம் சர்வேசா கண்ணிர் விட்டல்லவா வளர்த்தோம் எனும் கொள்கைப்படி கட்சி உள்ளதாய் சொல்லும் நபர்களின் பெரும் பகுதியினர் சுயநலக் குமபல்களாய் மாறி, மக்களை வதம் செய்வோருக்கு படைபலமாய் உள்ளதை நாடறியும். இவர்களுக்கு என்ன தண்டனை (அந்தமான் தீவுச் சிறை பானியில்)
பதில்: வதம் செய்வோராலேயே இவர்களும் வதம் செய்யப்படல்.
மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
நவீன அறிவியலின் வழிமுறைகள்
-
நவீன அறிவியல் என்பது என்ன? அதன் தர்க்கம் என்ன? ‘இதைப்பற்றி இன்னார் ஓர்
ஆய்வேட்டில் சொல்கிறார்’ என்றால் அது அறிவியலுண்மையா? என் சொந்த அனுபவம்
என்றால் அது அற...
9 hours ago
13 comments:
கேள்விகள்:
எம்.கண்ணன்
1. சுஜாதா ஒரு முறை 'கற்றதும் பெற்றதும்'ல் எழுதியிருந்த ' நெக்ரபொண்டே ஸ்விட்ச்' -http://en.wikipedia.org/wiki/Negroponte_switch - மீண்டும் ஒரு சுற்று வந்துவிட்டது போலிருக்கே ? டிவி தற்போது டிஷ் மூலமும், பிராட்பேண்ட் கம்பி மூலமும் ? (முதலில் டிவி - ஆண்டெனா (வயர்லெஸ்) - பின் கேபிள் வழி தற்போது மீண்டும் டிஷ்) (டெலிபோன் - முதலில் கம்பி, பின்னர் வயர்லெஸ், தற்போது பிராட்பேண்ட் - டிஎஸெல் - கம்பி மூலம் அல்லது கேபிள் மூலம்)
2. விகடனில் ஸ்னேகாவின் பிகினி டிரஸ் பார்த்து ஜொள்ளுவிட்டீர் தானே ? (அது கட் அன் பேஸ்ட் என்றபோதும்)
3. ராக்கி சாவந்த் போல (ராகி கா ஸ்வயம்வர் - ஸ்டார் பிளஸ்) ரம்பாவின் சுயம்வரம் கலைஞர் டிவியில் வந்தால் அப்ளிகேஷன் போடுவீரா ? ரம்பாவின் டெஸ்டில் பாஸ் செய்வீரா ?
4. பெண்கள் பத்திரிக்கைகள் பற்றி ஆர்.வெங்கடேஷ் ஒரு பதிவு இட்டிருக்கிறார். http://venkateshr.wordpress.com) உங்கள் வீட்டில் மங்கையர் மலரா ? அவள் விகடனா ? குமுதம் சிநேகிதியா ?
5. தமிழ் படிக்கும் வழக்கமே குறைந்துவரும் நிலையில் - அதுவும் தற்கால பெண்கள் மேற்சொன்ன புத்தகம் எல்லாம் வாங்கி படிப்பார்களா ?
7. ஆபாசம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு ஏன் இந்த நிறங்கள் ? யார் கொடுத்தனர் ? சிகப்பு விளக்கு, நீலப் படம், மஞ்சள் பத்திரிக்கைகள், பச்சை மொழி..... தமிழில் மட்டும்தானா இல்லை ஆங்கிலத்திலிருந்து எல்லா மொழிகளிலும் (பிரெஞ்சு, ஜெர்மன், இந்தி..) இப்படிதான் சொல்கிறார்களா ?
8. விஜய் டிவியின் நீயா நானாவுக்குப் போட்டியாக கலைஞர் டிவியிலும் 'கருத்து யுத்தம்' என ஒரு விவாத அரங்கம் (புதன் இரவு 10மணி) நடைபெறுகிறதே ? விஜய்டிவி கோபிநாத் அளவு இல்லாவிட்டாலும், கலைஞர் டிவி ஷண்முகசுந்தரமும் நன்றாகவே நடத்துகிறார். ஓரினச் சேர்க்கை பற்றிய விவாதத்தில் பலரும் (பெண்கள் உட்பட) வெளுத்துக் கட்டினரே ? பார்த்தீர்களா ? (ஒரு கட்டத்தில் அடிதடியே வந்துவிட்டது - சிவன் விஷ்ணு என ஒருவர் பேசப் போக) - சிறப்பு விருந்தினர்களில் சாருவும் ஒருவர்.
9. தமிழ் சினிமா நடிகர்களில் சிலர் ஓரினச் சேக்கை விருப்பம் உள்ளவர்கள் எனவும் சமீப காலங்களில் சில பெண் ஓரினச் சேக்கையாளர்கள் பற்றிய செய்திகளும் வந்தது. நம்பக்கூடியதா இந்த செய்தி ?
10. ஞாநியின் கேணி என்ற ஞாயிறு மாலை (ஞாநியின் வீட்டில்) நிகழ்ச்சியை ஆனந்த விகடன் ஏன் “பாஸ்கர் சக்தி (ஞாநியுடன்) நடத்தும்” என ஞாநியை இருட்டடிப்புச் செய்கிறது ?? ஓ பக்கங்கள் குறித்தான மோதல் இன்னும் முடியவில்லையோ ? (அதுவும் விகடன் பொறுப்பாசிரியர் ரவிபிரகாஷே கலந்து கொண்ட போது)
http://ungalrasigan.blogspot.com/2009/08/blog-post_09.html
@எம். கன்ணன்
பதில்கள் 17-ஆம் தேதிக்கான பதிவில் வரும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பனிமலர் என்பவரின் இப்பதிவில் நான் இட்ட இப்பின்னூட்டம் அவரது மட்டுறுத்தலுக்காக காத்திருக்கிறது. பார்க்க: http://panimalar.blogspot.com/2009/08/bruno-2.html
//அப்துல்லா நானாக அப்படி நினைத்துகொள்ளவில்லை, அவரது கேள்விகளும் ஆதாரம் கேட்கும் விதமும் இந்த அனானியாக வந்தவரின் வரிகளும் ஒன்றே, அவைகளை கண் கூடாக நீங்களே பாருங்கள். இதில் எனது பார்வை என்று ஒன்றும் இல்லை.........வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.//
மன்னிக்கவும் ப்ரூனோ அனானியாக வந்து பின்னூட்டம் போட்டார் என்பதற்கு நீங்கள் ஆதாரம் தரவில்லை. மேலே உள்ள வரிகளில் மறைமுகமான ஆதாரம் இருக்கிறது என நான் கருதுகிறேன்.
அவற்றை இவ்வாறு சொல்ல வேண்டும் என நீங்களே அனானியாக போட்டுள்ளீர்கள் என நான் சந்தேகிக்கிறேன்.
மேலும் ப்ரூனோ என்பவரை பலரும் பார்த்துள்ளார்கள். நானும் பார்த்துள்ளேன். அவரது அடையாளம் சரிபார்க்கப்பட்டுள்ளது.
ஆனால் நிங்கள் யார் என்பதே தெரியாது. வேண்டுமானால் அனானி பதிவர் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். பதிவர் எண்ணில் வருவதால் அதன் கீழ் வருபவர் எல்லோருமே பனிமல்அர் என்னும் பெயரில் செயல்படும் பதிவரே என வேண்டுமானால் அடையாளம் காட்டலாம்.
மற்றப்படி நீங்களே அனானிதான். ப்ரொஃபைல் போட்டோவில் காட்டப்படும் “பாட்டி” நீங்களாக இருக்க முடியாது.
இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதை காட்ட நான் அதன் நகலை எனது டோண்டு பதில்கள் 03.09.2009 பதிவிலும் பின்னூட்டமாக இடுவேன். பார்க்க: http://dondu.blogspot.com/2009/09/03092009.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
//ஆண்வர்க்கததை அதிகம் அல்லல்படுத்துவது மதுப் பழக்கமா? மாதுப் பழக்கமா?//
அடுத்தவன் சந்தோசத்தை பார்த்து வயிறெரியும் பழக்கம்!
//ஆண்களுக்கு பெரிய பிரச்சனையாய் மாறிவரும் தொந்தியைக் குறைக்க உபாயங்கள்?//
//பியர் குடிக்காமல் இருப்பது.//
பீர் குடிப்பதால் தொப்பை வரும் என்பது சரியல்ல! அதன் பின் நாம் சாப்பிடும் சாப்பாடே தொப்பைக்கு காரணம்!
//தமிழ்நாட்டில் பல கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஒரே குடும்பத்தில் இருப்பது பற்றி?//
வருமானம் தான் முக்கியம் சொந்தபந்தமெல்லாம் ரெண்டாவது தான்!
//செல்போன் தவிர்க்க முடியாத ஒன்றாய் மாறிவருவது பற்றி?//
இன்னும் சில வருடங்களில் அதற்கு எதாவது மாற்று வந்தால் செல்போனை மறந்து விடுவோம்!
மாற்றம் இல்லாதது, மாற்றம் மட்டுமே!
//As told by many is masturbation bad for health?
பதில்: இல்லை, தவறான செய்தி. நான் சௌக்கியமாகத்தானே இருக்கிறேன். //
தைரியமான, சிறந்த உதாரணமாக இதை கூறுவேன்!
//The worst incident during english rule india?
பதில்: ஜாலியன்வாலாபாக் படுகொலைகள்.//
சிலர் சுதந்திரம் கொடுத்ததையும் சேர்த்து கொள்கிறார்கள்!
//சிலர் சுதந்திரம் கொடுத்ததையும் சேர்த்து கொள்கிறார்கள்!//
அவர்களில் முக்கியமானவர்தான் நம்ம பகுத்தறிவுப் பகலவன். திராவிட நாட்டிலாவது வெள்ளைக்காரன் இருந்தால் தேவலை என திருவாய் மலர்ந்தருளினவர் அவர்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//
3. ராக்கி சாவந்த் போல (ராகி கா ஸ்வயம்வர் - ஸ்டார் பிளஸ்) ரம்பாவின் சுயம்வரம் கலைஞர் டிவியில் வந்தால் அப்ளிகேஷன் போடுவீரா ? ரம்பாவின் டெஸ்டில் பாஸ் செய்வீரா ?
//
நம்மாட்களுக்கு அப்ளிகேஷன் என்றாலே ரிசர்வேஷன் கட்டாயம் வேண்டும்.
உண்டா ?
கேள்வி பதில் அருமை.
கேள்விகள் எதும் இல்லை என்னிடம்.
Questions for Kelvi Pathil
1) What is your opinion on this ?
http://churumuri.wordpress.com/2009/09/07/will-cross-country-marriages-help-unite-india/
Chetan Bhagat, the author of the best-selling ‘One night @ the call center‘, is touting his latest book ‘2 States: the story of my marriage‘. The Delhi-born Bhagat, who is Punjabi but married to a Tamil-Brahmin from Thanjavur, is asked in an interview in The Sunday Times of India what one can do for one’s country.
His answer: “Marry outside your State.”
“Punjabis will have their meals sitting on the bed with plates piled on sheets of the previous day’s newspapers. But at my in-laws’ house, meal times were confined to the dining table and food was had in complete silence. It was a real culture shock.”
Really?
Is marrying outside your State going to make India a better country? Would you like to (if you haven’t already, that is)? Will marrying outside your State it help us understand each other better, sink differences, bring us closer? Can marriage become a national mission?
--------------------
2) Why Stalin has gone to England ? for what treatment ? what is the health problem he has which cannot be treated in India but only in London ?
Post a Comment