கேள்விகள் கேட்போருக்கு வழக்கமான ஒரு வேண்டுகோள். சில சமயம் எங்காவது இணையத்தில் படித்ததை ஆதாரமாக வைத்து கொண்டு கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதில் தவறில்லை. ஆனால் அப்படியே தமது கேள்விகளின் பின்புலனையும் கூறினால் சௌகரியமாக இருக்கும். நானே கூகளிட்டு பார்ப்பதுண்டு என்பது நிஜமே. ஆயினும் அந்த சுட்டி ரெடியாக கிடைத்தால் அதை தேடும் நேரம் விரயமாகாமல் பதிலில் இன்னும் அதிக முனைப்பாக இருக்கலாம் அல்லவா?
எம். அருணாச்சலம்
1. அன்பழகன் or நெடுஞ்செழியன் - இவர்களில் யார் சிறந்த இளிச்சவாயர்?
பதில்: அன்பழகன் கருணாநிதியிடம் மட்டுமே இளிச்சவாயராக இருந்தார். ஆனால் நெடுஞ்செழியனோ கருணாநிதி, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய மூவரிடமும் இளிச்சவாயராக இருந்தார். அதில் இந்த அழகுக்கு கருணாநிதியை விட்டுப் பிரிந்து போய் பிறகு அவரிடமே திரும்பி வந்த கதை வேறு இருக்கிறது. ஆகவே நெடுஞ்செழியனே வெற்றி பெற்று உலக மகா இளிச்சவாயர் பட்டத்தைத் தட்டி செல்கிறார். அன்பழகன் ஸ்டாலினுக்கும் இளித்தால், தோல்வியின் அளவை சற்றே குறைக்கலாம். அவ்வளவே, அவ்வ்வ்வ்வ்.
2. நிகழ்வு 1: ஹெலிகாப்டர் விபத்தில், ஆந்திர மாநில முதல்வர் Y.S.ராஜசேகர ரெட்டி திடீர் மறைவு. நிகழ்வு 2: மேற்படி நிகழ்வு நடந்து சில நாட்களிலேயே, 'அசத்யம்' நிறுவனர் B.ராமலிங்க ராஜு, தான் வாழ்க்கையை "நிம்மதியாகவும், ஹாய்யாகவும்" கழித்துவரும் ஹைதராபாத் சிறையில் இருந்து, 'நெஞ்சு வலி' மற்றும் 'மாரடைப்பு' காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சில நாட்களிலேயே அவருக்கு angioplasty சிகிச்சை பெற்றார். இந்த இரு நிகழ்வுகளுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா - Butterfly Effect - போல?
பதில்: எதுக்குத்தான் பட்டாம்பூச்சி விளைவைச் சொல்வது என்ற தராதரமே இல்லையா? கமல் கோபித்து கொள்ளப் போகிறார்.
எம். கண்ணன்
1. கமல்ஹாசனின் ஒவ்வொரு படத்தின் ரீலீசும் ஏன் ஏதாவது வழக்கு அல்லது பிரச்னைகளில் சிக்குகிறது ? இதில் இண்டஸ்ட்ரீகாரர்களின் உள்குத்து இருக்குமோ?
பதில்: இம்மாதிரி பிரச்சினைகளை ஒவ்வொரு படத்துக்கும் கொண்டுவருவது அவருக்கு செண்டிமெண்டலாக ஒத்துக் கொள்கிறதோ என்னவோ.
2. ஜெயா டிவியின் காலைமலர் நிகழ்ச்சிகளை மாற்றி "குட் மார்னிங் தமிழா" என வேறு விதமான நிகழ்ச்சிகளோடு வருகிறதே? பார்க்கிறீரா?
பதில்: ஜெயா டிவி பார்ப்பதேயில்லை.
3. மு.க. ஸ்டாலினின் உடல்நிலை பற்றிக் கேட்டால் - ரஷ்ய ஸ்டாலினைப் பற்றி பதிலெழுதி வெறுப்பேற்றுகிறேன் என சொல்கிறீர்களே? யாரிடமாவது கேட்டாவது சொல்லும்மையா - மு.க ஸ்டாலினுக்கு என்ன உடம்பு என? (இல்லை லண்டனிலிருந்து ஸ்விஸ் சென்று பண விவகாரங்களை பைசல் பண்ண பயணமா)
பதில்: அதெல்லாம் பெரிய இடத்து விஷயம். ரஷ்ய ஸ்டாலின் பற்றி எழுதினால் கேட்பார் இல்லை. இந்த ஸ்டாலின் பற்றி ஏதேனும் எழுதப்போக ஆட்டோ வேறு வரவேண்டுமா?
4. தினமும் கள்ளக்காதல், கற்பழிப்பு என தமிழ்நாட்டில் மட்டும்தான் இப்படி செக்ஸ் குற்றங்கள் அதிகரித்துள்ளனவா? எங்கு போகிறது தமிழ்ச் சமூகம்?
பதில்: மனித சரித்திரத்தில் கள்ளக்காதல், கற்பழிப்பு ஆகியவை இல்லாத தருணங்களே கிடையாது. அப்படியிருக்க தமிழ் சமூகம் மட்டும் என்ன ஸ்பெஷல்?
5. கொலு வைப்பதுண்டா? எந்த சுண்டல்கள் பிடிக்கும்? கொலுவுக்கு வரும் பெண்டிரை சைட் அடிப்பதுண்டா?
பதில்: தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டலுக்கு ஈடாகுமா? சைட் அடிக்கும் காலம் எல்லாம் போய் விட்டது. ஃபிகர்களின் வணக்கம் மாமா, வணக்கம் தாத்தா ஆகிய முகமன்களைக் கேட்ட பிறகும் அவை எல்லாம் தோன்றுமா என்ன? மற்றப்படி ஒரு முறை கொலுவுக்கு ஆள் வந்ததை கவனிக்காமல் நடுஹாலில் டப்பாங்குத்து டான்ஸ் போட்டது பற்றி இப்பதிவில் எழுதியுள்ளேன்.
6. கமல்ஹாசன் திருமணமே வேண்டாம் என சொன்னதற்கு குமுதம் ஸ்நேகிதி, கல்கி தராசு தவிர பெரிய கண்டனங்கள் எழவில்லையே? உங்கள் கருத்து என்ன? கமல் தற்போது கவுதமியுடன் வாழும் முறை பற்றி உங்கள் கருத்து என்ன? நாளை கவுதமியுடன் வெளியூர் செல்லும் போது ஓட்டல் அறை புக் செய்ய - கவுதமி யார் எனக் கேட்டால் என்ன பதில் சொல்லுவார்?
பதில்: ஏன் கண்டனங்கள் எழ வேண்டும்? கவுதமியுடன் அவர் வாழ்வது அவர் சொந்த விஷயம். அவரது நடிப்பை நாம் சினிமா டிக்கெட் காசு கொடுத்து வாங்கியோ அல்லது திருட்டு விசிடியிலோ பார்த்து விட்டுப் போகிறோம். அவரைப் பொருத்தவரை நாம் போகிற போக்கில் போகிறவர்கள். நாம் யார் அவர் பற்றி கருத்து சொல்ல?
7. விகடன், குமுதம், குங்குமம், ஏனைய மகளிர், பக்தி, ஜோதிடம் பத்திரிக்கைகள் எல்லாம் தாண்டி மாலனின் 'புதிய தலைமுறை' விற்குமா? எதை நம்பி அச்சுப் பத்திரிக்கை துவங்கியுள்ளார்? இணையத்திலேயே துவங்கியிருக்கலாமே?
பதில்: அவர் நம்புகிறார். அதுதானே முக்கியம்? நான் இன்னும் இதழைப் பார்க்கவில்லை.
8. வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இன்னோரு சிவராஜ் பாடீல் என எதிர்கட்சிகள் சொல்ல ஆரம்பித்துவிட்டனரே? ஆஸ்திரேலியா, சீனா, பாகிஸ்தான் என சொதப்பல்கள்?
பதில்: வெளியுறவுக்கென மந்திரி இருந்தாலும் அதிகாரம் எல்லாம் பிரதமர் - இல்லையில்லை - சோனியா காந்தியின் வசம் மட்டுமே. இதில் சிவராஜ் பாடீலாக இருந்தால் என்ன, வேறு யாரேனும் இருந்தால் என்ன?
9. கொடநாடு போன்ற மலைகாட்டு பங்களாவில் 108 நாட்கள் இருக்கவேண்டும் என உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் அங்கு சென்று என்ன செய்வீர்கள்? (மொழிபெயர்ப்பு, பதிவுகள் தவிர)
பதில்: யார் கண்டார்கள்? ஏதேனும் ரகசிய கோப்புகள் பிரெஞ்சு/ஜெர்மனில் உள்ளன. அவற்றை அங்கு சென்றுதான் மொழிபெயர்க்க வேண்டும், அதற்கான எனது விலையைக் கொடுத்தால் என்றால் மாட்டேன் என்றா சொல்லுவேன்? 108 நாட்களுக்கு 8 லட்சத்துக்கு மேல் பணம் பார்க்கலாமே. சாப்பாடு, தங்கும் செலவு என்று ஒன்றும் கிடையாது. போகவர இலவச ஏசி கார் சவாரி. என்ன, ஒரு மடிக்கணினி மற்றும் வைர்லஸ் இண்டெர்னெட் இணைப்பு எடுத்துக் கொண்டு போக வேண்டும் அவ்வளவே. ஏனெனில் மீதி வாடிக்கையாளர்களை ஒதுக்க இயலாது அல்லவா?
10. நங்கநல்லூரில் சமீபத்தில் நடந்த 4 நல்ல விஷயங்கள் பகிரவும்.
பதில்: 1. சமீபத்தில் 1969-ல் நான் நங்கநல்லூருக்கு குடி புகுந்தேன் 2. சமீபத்தில் 1972-ல் நங்கநல்லூருக்கு சினிமா தியேட்டர் வந்தது. 3. சமீபத்தில் 2001-ல் நான் மீண்டும் நங்கநல்லூருக்கு வந்தேன். 4. சமீபத்தில் 2004-ல் நங்கநல்லூருக்கு பஸ் டெர்மினஸ் என் வீட்டுக்கு எதிரேயே வந்தது.
கேள்விகள் இருந்தால் (இப்போதைக்கு இல்லை), மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார்
-
இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார் எழுத்தாளர், கல்வியாளர், ஆசிரியர்.
தமிழிசைச் சங்கத்தின் திருமுறை இசைப் பண்களின் ஆராய்ச்சிக் குழுவில் அறுபது
ஆண்டுகள் தலைவரா...
14 hours ago
27 comments:
/கேள்விகள் இருந்தால் (இப்போதைக்கு இல்லை), மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?/
yaar kannu pattu pochcho?
now thiravidan will accept, the questions asked ("டோண்டு பதில்கள் - )are not generated by dondu .
krishnakumar
//1. அன்பழகன் or நெடுஞ்செழியன் - இவர்களில் யார் சிறந்த இளிச்சவாயர்?
பதில்: அன்பழகன் கருணாநிதியிடம் மட்டுமே இளிச்சவாயராக இருந்தார். ஆனால் நெடுஞ்செழியனோ கருணாநிதி, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய மூவரிடமும் இளிச்சவாயராக இருந்தார். அதில் இந்த அழகுக்கு கருணாநிதியை விட்டுப் பிரிந்து போய் பிறகு அவரிடமே திரும்பி வந்த கதை வேறு இருக்கிறது. ஆகவே நெடுஞ்செழியனே வெற்றி பெற்று உலக மகா இளிச்சவாயர் பட்டத்தைத் தட்டி செல்கிறார். அன்பழகன் ஸ்டாலினுக்கும் இளித்தால், தோல்வியின் அளவை சற்றே குறைக்கலாம். அவ்வளவே, அவ்வ்வ்வ்வ்.//
1.அன்பழகன், அண்ணாவின் மறைவுக்குப் பின் நடந்த முதல்வர் பதவி பிடிக்கும் சண்டையில் தினத்தந்தி ஆதித்தனாரின் பணபலத்துடன், எம்ஜிஆரை ஆசைவார்த்தை கூறி ஏமாற்றியும் முதல்வர்-திமுக தலைவர் பதவிக்கு வர முயற்சி செய்யும் கலைஞரின் தகுடுதத்தங்களை கண்ட பிறகு வெகுண்டு, பொதுக்கூட்டங்களில் கலைஞரை தலைவராய் நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன்.அப்படி நடந்தால் நான் வேட்டிகட்டிய ஆண்பிள்ளை என் எனது மனவிகூட ஏத்துக்கொள்ளமாட்டாள் என் கொக்கறித்தவ்ர் திடிரென பதவிக்காக கருணாநிதியின் காலில் விழுநதவர் இன்று வரை எழவில்லையே? இடையில் நடந்தது என்ன?
(இதை கொச்சையாக அப்போது பத்திரிக்கைகள் ஒரு சில, கலைஞரின் கவுட்டைக்குள் பாய்ந்த பேராசிரியர் என எழுதியதை இந்த நாடறியும்)
2.சுகதாரத்துறை அமைச்சராய் இருந்தபோது ,தன் சொந்த மகளின்
தோழியை ( இளவயது மங்கை)இரண்டாம் தாரமாய் ஆக்கிகொண்டார் என சொல்லப்பட்டதே?
அது உண்மையா?
1. வட்ட வடிவு கிராமபோன் காலாவதி ஆன பின் சிடி தட்டாக வந்தது. பழமை என்றும் அழிவதில்லையா?
1. தினகரன் நாளிதழ் புதுதில்லி பதிப்பு தொடங்கியுள்ளதே. தில்லியில் வெளிவரும் முதல் தமிழ் நாளிதழ் தினகரனா?
//
கோவி.கண்ணன் said...
// கண்ணன் என்பவர் ஒவ்வொரு பதிவுக்கும் கேள்வி கேட்கிறார். அவர் நானல்ல.//
........
அதனால் தான் சந்தேகம் ஏற்பட்டது,
//
எம். கண்ணன்.
இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் - எம்.கண்ணன் என்ற பெயரில் பல வாரங்களும் கேள்வி கேட்பது நானே. நானே தான் ஐயா. மண்டபத்துல யாரோ எழுதியும் கொடுக்கல. டோண்டு சார் தானே, எனது கேள்விகளைப் போட்டுக் கொள்வதுமில்லை.
டோண்டு சாரிடம் கேள்வி கேட்பதால் எனக்கு எந்த ஆதாயமோ பரிசோ கொடுப்பதில்லை :-) அவரை நேரில் கூட நான் பார்த்ததில்லை.
ஆதலினால் பதிவர்களே - எம்.கண்ணன் கேள்விகளை கேட்பது எம்.கண்ணனே என இங்கு பதிவு செய்து வைக்கிறேன். புரிதலுக்கு நன்றி.
(அப்புறம் எந்த "*#@$#...." கேள்வி கேக்கறே - என்று வரிந்து கட்டுபவர்களுக்கு - பதில்
1. நீங்கள் எந்தக் காரணங்களுக்காக தமிழ் வலைப் பதிவுகளை படிக்கிறீர்களோ / மேய்கிறீர்களோ (டோண்டு சார் பதிவுகளையும் படிக்கிறீர்களோ அதே காரணம் தான்)
2. டோண்டு சாரின் சின்சியரிடி மற்றும் உழைப்பு, கேள்விகள் வந்தால் வாரம் தவறாது பதில் போடும் ஒழுங்கு ஆகியவை பிடித்துள்ளது
3. நான் கேட்கும் கேள்விகளுக்கு எதிர்பார்க்கும் சுவாரசியமான பதில்கள்
4. கேள்வி பதில்களுக்கு வால்பையன் போன்றோர் போடும் சுவாரசியமான பின்னூட்டங்கள் / பதில்-பதில்கள்
5. எனக்குக் கேட்கத்தான் தெரியும் !
எம். கண்ணன்
இதோ அடுத்த செட் கேள்விகள்:
1. நேஷனல் செக்யூரிடி அட்வைசர் எம்.கே நாராயணன் போன்றோர் (70+ வயதுடையவர்கள்) யாருடைய வழிகாட்டுதல்படி செயல்படுகிறார்கள் ? பரந்து விரிந்த நமது தேசத்தின் பல்வேறு பிரச்னைகளை, அன்னிய நாட்டின் தாக்குதல்கள், உள்நாட்டு / வெளிநாட்டு தீவிரவாதங்கள் போன்ற பலவற்றிற்கும் இப்படித்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமருக்கும், சோனியாவுக்கும், ப.சிதம்பரத்திற்கும் பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சர்களுக்கும், அட்வைஸ் கொடுக்குமளவிற்கு அவருக்கு (அந்த பதவியில் இருப்பவருக்கு) எப்படி எல்லா விஷயங்களிலும் நாட்டு நலன் பற்றியே சிந்திக்கத் தோன்றும் ?
2. உன்னைப் போல் ஒருவன் - கமல் போட்டிருக்கும் வெள்ளைச் சட்டைக்குள் பூணுல் தெரிகிறதா ? பெயர் பட்டியலில் இரா.முருகன் பேர் இருட்டடிப்பு ஏன் ? (நான் சில வாரங்கள் முன்பு கேட்டிருந்த 'தமிழ் படங்களில் படத்தில் பணியாற்றியவர்கள் பெயர் போடும்' கேள்வியை மீண்டும் பார்க்கவும் ?
3. விஜய்யின் அழகிய தமிழ் மகன் படத்தை சிலாகித்து எழுதியிருந்தீர்கள். அந்தப் படம் தற்கால இளைஞர்களின் (பெரும்பாலான) நடைமுறையை காட்டும் படம் - குடி, சிகரெட், போதைப் பொருள், பெண்ணை ரிசார்ட்டுக்குத் தள்ளிக் கொண்டு போவது, ஆள் மாறாட்டம், மோசடி என - இளைஞர்களின் சீரழிவைத்தான் காட்டுகிறது. அதுவும் படம் அவ்வளவாக ஓடவில்லை.
4. கண்ணதாசனின் வனவாசம் புத்தகத்தில் கருணாநிதியைப் பற்றி எழுதியிருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன ?
5. சாதாரண வைரல் ஜுரத்துக்கு கொடுக்கப்படும் ஆண்டிபயாடிக்ஸ் மருந்துகளின் விலை (சில வருடங்களுக்கு முந்தைய விலையை விட) மிக அதிகமாகிவிட்டதே ? இது மாதிரி மருந்து கம்பெனிகள் அதிக விலை வைத்து விற்பதில் எத்தனை பங்கு மத்திய சுகாதார அமைச்சருக்கு ?
6. மருந்து கம்பெனிகளின் தொழிற்சாலைகள் பெரும்பாலும் சில்வாச, ஹிமாச்சல், பாண்டிச்சேரி என யூனியன் பிரதேசமாக உள்ளதே ? எத்தனை வருடங்களுக்கு அவர்களும் வரிச்சலுகைகள் கொடுத்துக் கொண்டிருப்பார்கள் ?
7. சி பி எஸ் இ பாடத்திட்டத்தில் 10ஆம் வகுப்புக்குத் தேர்வு இல்லை எனவும் இனிமேல் மதிப்பெண்கள் கிடையாது - கிரேடுகள் எனவும் சொல்கின்றனரே ? உங்கள் கருத்து என்ன? நமது இந்திய கல்வித்திட்டத்தில் எத்தனையோ குளறுபடிகள் இருந்தாலும் இத்தனை வருடங்களாக இருந்த மனப்பாடம் முறை தானே நமது நாட்டு மாணவர்களுக்கு இளைஞர்களுக்கு இவ்வளவு உயரம் செல்ல உதவியிருக்கிறது. மற்ற நாட்டவரைக் காட்டிலும் (சீனா, அமெரிக்க, ஐயோப்பிய) நமது மாணவர்கள்/இளைஞர்கள் தானே கணக்கிலும், அறிவியலிலும் புலியாக இருந்து வந்துள்ளார்கள் ? அதனால் தானே பெரிய பெரிய தொழில் நுட்ப நிறுவனங்கள் அவர்களுக்கு இது நாள் வரை சிவப்புக் கம்பளம் வரவேற்பு கொடுத்துள்ளது ? நாமும் அமெரிக்க முறைக்கு மாறிவிட்டால் பெரும்பான்மை அமெரிக்க மாணவர்களைப் போல மந்தமான கூட்டங்களைத் தான் உற்பத்தி செய்யப் போகிறோமா ?
8. விஜய் டிவியில் (கடந்த 3 நாட்களாக) இரவு பத்து மணிக்கு ரஜினி சென்ற பாபா குகைக்கு ஜூ.வி (உ)ஆசிரியர் செல்லும் வழிப்பயணத்தை 'நடந்தது என்ன' நிகழ்ச்சியில் காட்டி வருகிறார்கள். இன்று கடைசி எபிசோட். அநேகமாக குகையைக் காட்டிவிடுவார்கள் என நினைக்கிறேன். நீங்கள் டெல்லியில் வசித்தபோது ஹரித்வார், ரிஷிகேஷ் எல்லாம் சென்றதுண்டா ? பத்ரிநாத் ? கேதார்நாத் ? மழை, குளிர், மலைச்சரிவு என இயற்கையின் பிடியில் எப்படி அங்கேயே வசிக்கும் மக்களால் வாழமுடிகிறது ?
9. தினமும் வாக்கிங் எனப்படும் நடைப்பயிற்சி தவிர, எளிதாக செய்யக்கூடிய யோகா அல்லது பயிற்சி ஏதேனும் ?
10. ஜூ.வி.ஆசிரியர் வெங்கடேஷ் எனப்படும் விகேஷ் - வருமானத்திற்கு அதிகமான சொத்து என கண்டுபிடித்து அனுப்பினார்களாமே ? நீதித்துறை (பி.டி.தினகரன்), பத்திரிக்கைத்துறை என எல்லா தூண்களிலும் கரையான் அரிக்க ஆரம்பித்துவிட்டதே ?
1.எஸ்ரா,பாரா,இரா அடுத்து நராவிற்கு வாய்ப்பு வருமா ?
Question for next week
What is your view/comments on
http://www.guardian.co.uk/books/2009/sep/21/umberto-eco-handwriting
Umberto Eco’s view in Guardian about good handwriting
முடிந்து போன போலி மேட்டரை மீண்டும் கிளற வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கும் சில புதிய பதிவர்கள் கூட, பிரச்சினையின் நன்மை தீமை பற்றி ஆராயாமல் பாதிக்கப்ப்பட்டவன் தங்களை சார்ந்தவன் என்பதால் அவன் பக்கமாகவே பேசுவதை கவனித்தீரா?
மற்ற நேரங்களில் இவர்களதான் சாதியை ஒழிக்க அவதாரம் எடுத்தவர்கள் போல் பேசுவார்கள். இவர்களின் இரட்டை வேடத்தை பற்றி என்ன நினைக்கிறீர்கள்.
போலி டோண்டுவுக்கு அன்று வக்காலத்து வாங்கிய கிராக்கிகள், இன்று தங்களின் அன்றைய நிலைப்பாட்டுக்கு சப்பைக்கட்டு காரணங்களை கூறுவதற்கும், அவனுக்கு பயந்து உங்களுக்கு மட்டும் அட்வைஸ் செய்தவர்கள் இன்று தத்தமது "மற தமிழ் வீரத்தை" நிலை நிறுத்த படாத பாடு படுவதற்கும், ஏதாவது வேறுபாட்டை காணுகிறீர்களா?
இத்தகைய செயல்பாட்டிற்கு, "mob mentality" போன்று எதாவது மனோரீதியான காரணங்கள் இருக்குமா?
ஒரு கிரிமினலை பிடிக்க போராடி, அவனை தைரியமாக போலீசில் பிடித்தும் கொடுத்த உங்களை போன்ற பதிவர்களை, "குறுகிய ஜாதி கண்ணோட்டம்" கொண்டு பாராட்டாமல், மேலும் அவனது செயல்களுக்கு உங்களையே காரணமாகவும் ஆக்க முயற்சிக்கும், சில வலை பதிவு அநாமதேயங்கள், உண்மையிலேயே கீழ்ப்பாக்கத்திற்கு அனுப்ப பட வேண்டியவர்கள்தானே?
"போலி டோண்டு" வை பற்றியே நீங்கள் திருப்பி, திருப்பி பதிவு போடுவதாக அங்கலாய்த்துக்கொள்ளும் சில பேர், நீங்கள் போலி டோண்டு பிரச்னையில் மாட்டி தவிக்கும்போது அவனிடம் இந்த சலிப்பை காட்டாததற்கு காரணம் என்னவாக இருக்க முடியும்? பயமா அல்லது மாட்டினவன் ஒரு பாப்பான்; அவன் படும் பாட்டை நன்றாக ரசிப்போம் என்ற "சாடிஸ்டிக்" எண்ணமா? ஒரு வேளை, நீங்கள் மறுபடியும், மறுபடியும் போலி டோண்டுவை பற்றி எழுதுவது, அவர்களின் குற்ற உணர்ச்சியை தூண்டி அவர்களுக்கு "தர்ம சங்கடம்' கொடுப்பதால்தான், இப்போது உங்களிடம் "தைரியமாக" அவனை பற்றி பதிவிடாதீர்கள் என்று கூறுகிறார்களோ?
//
நமது இந்திய கல்வித்திட்டத்தில் எத்தனையோ குளறுபடிகள் இருந்தாலும் இத்தனை வருடங்களாக இருந்த மனப்பாடம் முறை தானே நமது நாட்டு மாணவர்களுக்கு இளைஞர்களுக்கு இவ்வளவு உயரம் செல்ல உதவியிருக்கிறது. மற்ற நாட்டவரைக் காட்டிலும் (சீனா, அமெரிக்க, ஐயோப்பிய) நமது மாணவர்கள்/இளைஞர்கள் தானே கணக்கிலும், அறிவியலிலும் புலியாக இருந்து வந்துள்ளார்கள் ?
//
யாருய்யா இது.
மாங்காத்தனமா கேள்வி கேட்டுட்டு...
இந்தியர்கள் மிளிர்கிறார்கள் அதற்குக் காரணம் இந்த மனப்பாடம் செய்து எழுதும் கேவலமான படிப்பு முறை என்பது உண்மையல்ல. இப்படிப்பட்ட கேவலமான படிப்பு முறையிருந்தும் இந்தியர்கள் மிளிர்கிறார்கள் என்பது தான் உண்மை.
//
5. சாதாரண வைரல் ஜுரத்துக்கு கொடுக்கப்படும் ஆண்டிபயாடிக்ஸ் மருந்துகளின் விலை (சில வருடங்களுக்கு முந்தைய விலையை விட) மிக அதிகமாகிவிட்டதே ? இது மாதிரி மருந்து கம்பெனிகள் அதிக விலை வைத்து விற்பதில் எத்தனை பங்கு மத்திய சுகாதார அமைச்சருக்கு ?
//
வைரஸ் ஜுரத்திற்கு ஆண்டிபயாடிக் கொடுக்கத் தேவையில்லை. ஆண்டிபயாடிக்குகளால் வைரஸ்ஸின் மயிரைக்கூட புடுங்கமுடியாது.
ஆன்மீகத்தின் எல்லை எது ?(அனுபவத்தில், சாதாரண மனிதனுக்கு)
குடும்பத்திற்காக ஆண்மகன் எதைஎதை விட்டு கொடுக்கலாம்?
//அன்பழகன் or நெடுஞ்செழியன் - இவர்களில் யார் சிறந்த இளிச்சவாயர்?//
தலைவரின் அல்லக்கைகளுக்கு இப்போதெல்லாம் வேறு பெயராம்!
//ஜெயா டிவி பார்ப்பதேயில்லை.//
எங்கே பிராமணன் ஸ்டார் டீவியிலா ஒளிப்பரப்பினார்கள்!?
//தினமும் கள்ளக்காதல், கற்பழிப்பு என தமிழ்நாட்டில் மட்டும்தான் இப்படி செக்ஸ் குற்றங்கள் அதிகரித்துள்ளனவா? எங்கு போகிறது தமிழ்ச் சமூகம்?//
இன்றெல்லாம் நல்லது செய்தால் பேப்பரில் இடம் கிடையாது நண்பரே!
உங்க பேரும் பேப்பர்ல வரணுமா!?
//கேள்வி பதில்களுக்கு வால்பையன் போன்றோர் போடும் சுவாரசியமான பின்னூட்டங்கள் / பதில்-பதில்கள்//
மிக்க நன்றி நண்பரே!
உரல் - http://nilavupattu.blogspot.com/2009/09/blog-post_24.html
//
எனது ஆட்சியில் ”பொதுப் பணித்துறை“ அமைச்சராக நீ இருந்தபொழுது, “பொதுப்பணியை“ கவனிக்காமல், “கலைப்பணி“ யில் ஈடுபட்டு, “காகிதப்பூ“ கதாநாயகியை கர்ப்பிணியாக்கி நான் சொன்னதால், இரண்டாவதாக மணம் புரிந்ததையும் நான் அறிவேன்.
//
இது உண்மையா?
//வஜ்ரா said...
//
நமது இந்திய கல்வித்திட்டத்தில் எத்தனையோ குளறுபடிகள் இருந்தாலும் இத்தனை வருடங்களாக இருந்த மனப்பாடம் முறை தானே நமது நாட்டு மாணவர்களுக்கு இளைஞர்களுக்கு இவ்வளவு உயரம் செல்ல உதவியிருக்கிறது. மற்ற நாட்டவரைக் காட்டிலும் (சீனா, அமெரிக்க, ஐயோப்பிய) நமது மாணவர்கள்/இளைஞர்கள் தானே கணக்கிலும், அறிவியலிலும் புலியாக இருந்து வந்துள்ளார்கள் ?
//
யாருய்யா இது.
மாங்காத்தனமா கேள்வி கேட்டுட்டு...
உண்மை.//
இதை வன்மையாய் கண்டிக்கப்படவேண்டியது.
வழக்கமாய் கேள்வி கேட்கும் கண்ணனை இப்படி சொல்லலாமா?
(5. எனக்குக் கேட்கத்தான் தெரியும் !)
டோண்டுவின் கேள்வி பதிலை முடக்க செய்யப்படும் சதி.
கண்ணன் ஒரு பதிவர் அவரை அடக்கத்துடன் விமர்சிப்பதே சபைக்கு அழகு.
//எங்கே பிராமணன் ஸ்டார் டீவியிலா ஒளிப்பரப்பினார்கள்!?//
பார்த்ததே இல்லை என்று கூறவில்லையே. எங்கே பிராமணன், அண்ணீ முதலிய சீரியல்கள் விதி விலக்குகள். அப்ப்தெல்லாம் பார்த்தேன். காலைமலரில் எனது நேர்காணலை பார்த்தேன், அவ்வளவே.
இப்போது அவை எல்லாம் இல்லாததால் பார்ப்பதில்லை.
//தலைவரின் அல்லக்கைகளுக்கு இப்போதெல்லாம் வேறு பெயராம்!//
அவர்களுக்குள் போட்டியும் அதிகமாம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//தமிழ்நாட்டில் மட்டும்தான் இப்படி செக்ஸ் குற்றங்கள் அதிகரித்துள்ளனவா?
எங்கு போகிறது தமிழ்ச் சமூகம்?
உங்கள் பதில் !!!
தமிழ் சமூகம் மட்டும் என்ன ஸ்பெஷல்? //
திருமணம் என்கிற சமுக அமைப்பு சிதைக்கப்பட்டு குடும்பம் இல்லாமல் போகிறது.
ஒரு தந்தையற்ற சமூகம் உருவாகிறது.
நீங்கள் ஏன் இன்னும் உன்னைப்போல் ஒருவன் பட விமர்சனம் எழுதவில்லை ?
அந்தப்படத்திற்கு விமர்சனம் எழுதினால் தான் தமிழ்வலைப்பதிவராக நீடிக்க முடியும். அப்படி இல்லையென்றால் உங்களை தமிழ்வலைப்பதிவிலிருந்து தள்ளிவைத்துவிடுவார்கள். தவித்த வாய்க்கு தண்ணி கூட கொடுக்க மாட்டார்கள்.
//விகடன், குமுதம், குங்குமம், ஏனைய மகளிர், பக்தி, ஜோதிடம் பத்திரிக்கைகள் எல்லாம் தாண்டி மாலனின் 'புதிய தலைமுறை' விற்குமா? எதை நம்பி அச்சுப் பத்திரிக்கை துவங்கியுள்ளார்? இணையத்திலேயே துவங்கியிருக்கலாமே?//
இந்த பத்திரிகை 2 நாளில் ஒரு லட்சம் காப்பி வித்து தீர்ந்துவிட்டதாமே நிஜமா?
மோடி சரஸ்வதி பூஜைக்கு துப்பாக்கி வைத்து பூஜித்தார். இது தவறாக தோன்றவில்லையா?
(அதுவும் அந்த துப்பாக்கிகள் NSA-வுக்கு சொந்தம்.)
ஓடிப்போன சங்கராச்சாரியார் or ஓடிப்போகாமல் இங்கேயே ஆபாசபடம் பார்த்த்து அக்கிரகார அம்மணிகளை செட்டப் செய்த சின்ன (வீடு) சங்கராச்சாரியார் - இவர்களில் யார் சிறந்த மாமாப் பயல்?
//ஜெயா டிவி பார்ப்பதேயில்லை//.
சோ வின் "எங்கே பிராமணன்" பகுதி இரண்டு வந்தால்தான் பார்க்க உத்தேசமா?
சுதாகர், இதில் என்ன தவறு கண்டீர்கள் ?
அரசாங்கத்தின் ஆயுதம் அது தான். சாதாரண மக்களுக்கு இல்லாத ஒரே உரிமை அரசாங்கத்திடம் இருக்கும் உரிமை ஆயுதங்களைப் பயன் படுத்துவது. அதை ஆயுதப்பூஜையன்று வைத்து வழிபாடு நடத்துவது என்பது, நாம் நம்மிடம் இருக்கும் கத்தி, தாத்தாகாலத்து வாள் வைத்து பூஜிப்பது போல் தான். எந்தத் தவறும் இல்லை.
அந்த என்.டி.டி.வி வீடியோவில் ஒரேயடியாக மோடியை குற்றவாளிக்கூண்டில் ஏற்றுவது போல் பிரச்சாரம் செய்கிறார்கள்.
பழைய கத்தி, கேடயம் போன்றவற்றைத்தான் பூஜிக்கவேண்டுமாம், ஏ.கே. ரகத் துப்பாக்கிகளெல்லாம் பூஜிக்கக்கூடாதாம். வெளக்கெண்ணைகள், அன்று கத்தியைவைத்துப் பூஜித்தார்கள் இன்று என்ன ஆயுதமோ அதை வைத்து பூஜிக்கிறார்கள். இதில் என்னமோ தவறு இருப்பதாக கற்பனை செய்துகொண்டு உளறுவதே முழுமுதல் வேலையாகத் திரிகிறார்கள்.
Post a Comment