உண்மைத்தமிழன் எழுதிய சாருநிவேதிதா-இ-மெயில் ஹேக்கிங்-குமுதம் ரிப்போர்ட்டர்-சைபர் கிரைம் தொடர்-சில உண்மைகள்..! என்னும் பதிவைப் பார்த்தேன். அதே போல சிறில் அலெக்ஸும் போலி பதிவர்களுக்கு ஒரு எச்சரிக்கை + வேண்டுகோள் என்னும் தலைப்பில் ஆகஸ்ட் 29-ஆம் தேதி போட்டுள்ளார். ஒரு பதிவு போட்டுள்ளார். அவ்வளவு வீராவேசமாக எல்லாம் பேசி உதார் விடும் சாருநிவேதிதா அவ்வளவுதானா என்பதை நினைத்து ஆயாசம் ஏற்படுகிறது. ஆனால் அவர் இப்பதிவின் சப்ஜெக்டில் இதற்கு மேல் இல்லை.
சிறில் அலெக்ஸின் பதிவை முதலில் பார்ப்போம்.
“இணையம் கட்டற்ற சுதந்திரத்தை அளிக்கிறது என்றபோதும், இணைய புழக்கங்களை கண்காணிக்கும் சட்டங்கள் போதுமானதாக இல்லாதபோதும் சில எல்லைகளைத் தாண்டியபோது போலியின் நடவடிக்கைகளை காவல் துறை தாமாகவே கண்காணிக்க ஆரம்பித்தது. கூடவே சில புகார்களும் பதியப்பட போலிஸ் ’போலி’ விவகாரத்தில் தீவிரம் காட்டியது. வெளிநாட்டில் இருந்த அவர் இந்தியா திரும்புகையில் காவல்துறை அவரை மடக்கி அவரது பாஸ்போர்ட்டை கைப்பற்றியது. விடுமுறைக்கு வந்த அவர் வெளிநாட்டுக்கு திரும்ப முடியாமல், வேலை பறிக்கப்பட்டு மிக வருந்தத் தக்க நிலையில் தற்போது உள்ளதாகக் கேள்விப்படுகிறேன்.
பதிவர்களே, அந்த போலி பதிவரால் பாதிக்கப்பட்டவர்கள் வேண்டிக் கேட்டுக் கொண்ட பின்னும்கூட காவல்துறை அவர்மீது இரக்கம் காட்டவில்லை. அந்தப் போலி பதிவர் விளையாட்டாகவே இவை அனைத்தையும் செய்திருக்கிறார் எனக் கூறியுள்ளார். ஒரு இளமை வேகத்தில் சிலரால் ஊக்குவிக்கப்பட்டு அவர் இதை செய்திருக்கலாம் அல்லது உண்மையிலேயே அவர் கெட்ட எண்ணத்திலும் போலியாக செயல்பட்டிருக்கலாம் ஆனால் அதன் விளைவு என்னவென்றால் அவரின் வாழ்வாதாரம் முடக்கப்பட்டு கவலைக்குரிய நிலையில் அவர் உள்ளார்.
போலியாக இருக்கும்போது அவரை ஊக்கப்படுத்தியவர்கள் யாரும் அவருக்கு இப்போது எந்த உதவியும் செய்வதாகத் தெரியவில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்பது வருந்தத்தக்க தகவல். இவையெல்லாம் நான் கேள்விப்பட்ட தகவல்களேயன்றி நேரடித் தகவல்கள் இல்லையென்றபோதும் இந்தக் கதை சொல்லும் பாடம் மிகவும் முக்கியமானது. குறிப்பாக தற்போது புதிய போலி பதிவுகள் உருவாகியிருப்பதாக அறியும்போது கவலை தருகிறது.’போலி’க்கு நிகழ்ந்த சோகத்தை பதிவுலகில் யாருமே பதியவில்லை என்றறிந்தபோது இதை எப்படியும் சொல்லியாகவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது எனவே இந்தப் பதிவு”.
சிறில் அலெக்ஸின் இப்பதிவு அவர் விரும்பியோ விரும்பாமலோ போலிக்கு அனுதாபம் காட்டுவதாக அமைந்துள்ளது. ஏதோ அவன் இளமை வேகத்தில் அப்படி செய்திருக்கலாம் என பட்டும் படாமலும் கூறியுள்ளார். அதே சமயம் எதையும் நேரடியாகத் தெரிந்து எழுதவில்லை என்பதையும் தெளிவுபடுத்தி விட்டார். இருப்பினும் அவனுக்கு போய் அனுதாபம் காட்டுகிறார் என்பதை ஜீரணிக்க இயலவில்லை.
நடந்தது நடந்து விட்டது, இனிமேலும் புதிதாகப் போலி பதிவர்கள் வருவதை தடுக்கும் எண்ணம் கூட அவருக்கு இருந்திருக்கலாம் என்பதையும் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அவரது இந்த வழவழா கொழகொழா பதிவைப் பார்த்ததுமே நானும் ஒரு பதிவு போடலாம் என யோசித்து வைத்திருந்தேன். அது உண்மைத் தமிழனின் பதிவைப் பார்த்ததும் உறுதி பட்டது. அதைக் குறிப்பிட்டு அவரது அப்பதிவில் பின்னூட்டமும் இட்டேன். பை தி பை சிறில் அலெக்ஸ் போலியால் பாதிக்கப்பட்ட யாரும் அவன் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என போலீசில் எல்லாம் கேட்டுக் கொள்ளவில்லை.
ஏற்கனவேயே போலி டோண்டுவுடன் நேரடி சந்திப்பு என்னும் தலைப்பில் நான் சென்ற ஆண்டு ஜூலை மாதம் இட்டப் பதிவு வேறு இருக்கிறது.
ஜூன் 29, 2009 அன்று நடந்த பதிவர் சந்திப்பில் நான் இவ்வாறு எழுதியிருந்தேன்.
“குமுதம் ரிப்போர்டரில் சைபர் கிரைம் தொடர் பற்றி எழுதி வரும் லக்கிலுக்கிடம் நான் ஒரு கேள்வியை வைத்தேன். அதை எனக்கு ஒரு அனானி வாசகர் பின்னூட்டமாக இட்டிருந்தார், நான் அதை ஏற்கவில்லை. இப்போது எல்லார் முன்னிலையிலும் அக்கேள்வியை நான் வைத்தேன், அதாவது சைபர் கிரைம் ப்ற்றிய அத்தொடரில் அவர் போலி டோண்டு விவகாரத்தை தொடுவாரா என்பதே அக்கேள்வி. பாலபாரதி இப்போதுதான் லக்கிலுக் சீரியலையே எழுத ஆரம்பித்திருப்பதாகவும், இன்னும் பல காலத்துக்கு அது வரும் என்றும், அது முடிந்தபின் போலி டோண்டு விவகாரம் அதில் கவர் ஆகவில்லையெனில் அப்போது அவரை கேட்கலாம், இப்போது கேட்பது சஸ்பென்சை உடைத்து விடும் என்றார். நானும் அதை ஏற்று கொண்டேன்”.
அதைப் படித்ததுமே டென்ஷனான உண்மைத் தமிழன் அப்பதிவுக்கு இவ்வாறு பின்னூட்டமிட்டார்.
“எப்படி ஸார் இப்படி கூச்சப்படாம அவர்கிட்டயே கேட்டிருக்கீங்க..?
போலி டோண்டுவுக்கு அல்லக்கையா தானே இருந்த கதையையும், சக பதிவர்களைப் பற்றியத் தகவல்களை போலியாருக்கு திரட்டிக் கொடுத்த கதையையும், தானே அனானியா பலரையும் திட்டித் தீர்த்த கதையையும் அவரே எழுதுவாராக்கும்..!?
இதையும் ஒரு கேள்வின்னு சொல்லி நீங்களும் கேட்டிருக்கீங்க..?!!!
அவர் எழுதற கொடுமையைவிட நீங்க கேட்ட கொடுமைதாங்க ரொம்பப் பெரிசு..!
நல்லாயிருங்க..! [June 29, 2009 4:38 PM]”
எதற்கும் இருக்கட்டும் என உண்மைத் தமிழனுக்கே போன் போட்டு அவர்தான் அப்பின்னூட்டத்தைப் போட்டாரா என முதலில் உறுதி செய்து கொண்டேன். அவர் மேலும் சில விஷயங்கள் சொல்லி ஆதங்கப்பட்டார். சில வார்த்தைப் பிரயோகங்களைக் கேட்டு எனக்கு சிரிப்பு தாங்கவில்லை.
போலி டோண்டு விவகாரத்தில் அவனுக்கென அல்லக்கைகளாக செயல்பட்டவர்களில் விரும்பியே செய்தவர்கள் (டோண்டு என்னும் பாப்பானை திட்டறாண்டா, நாமும் சேர்ந்து கொள்வோம்), பிளாக்மெயில் செய்யப்பட்டு அவ்வாறு மாற்றப்பட்டவர்கள் ஆகியோர் உண்டு. பல பதிவர்கள் நமக்கேன் வம்பு என விலகி இருக்க அவர்களுக்காக நான் ஏற்கனவேயே பலமுறை கிட்டத்தட்ட இவ்வாறு குறிப்பிட்டுள்ளேன் “இன்று எனக்கு நடப்பது வேறு யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம்” என்று. அதே போலவும் சில பதிவர்கள் விஷயத்தில் நடந்தது.
அவ்வாறு தாக்கப்பட்டவர்களில் ஒருவரின் மூன்று வலைப்பூக்களுக்குமே போலி பதிவு வர, அவர் ஓசைப்படாமல் அவனுடன் சமரசமாகப் போய் அந்த ஆபாச தளங்களை விலக்கிக் கொண்டதும் தெரியும். மிகவும் மரியாதைக்குரியவர் அவர், என் நண்பர் கூட. அவர் பெயரை இங்கு நான் கூறமாட்டேன். ஆனால் இதை படிக்கும் அவருக்கு நான் எழுதும் வரிகள் விளங்கும்.
எனக்கு யாரும் பின்னூட்டம் இடக்கூடாது என போலி டோண்டு மூர்த்தி கெடுபிடி செய்தபோது பலர் ஏனப்பா வம்பு என ஒதுங்கினர். ஆனால் எனது நண்பரும் அமெரிக்காவாழ் பதிவருமான ஒருவர் நாட்டாமை, அறவாழி அந்தணன், வெங்கடேஷ் சர்மா, ராஜ் சந்திரா ஆகிய பெயர்களில் வந்து பின்னூட்டங்கள் இட்டு போலியின் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொண்டது எனக்கு மன நிறைவை அளித்தது. இன்னொரு பதிவர் முனிவேலு, பஜ்ஜி, கிருஷ்ணன் ஆகிய பெயர்களில் வந்தார். நான் எடுத்த ஒரே ஒரு பெயர் முரளி மனோகர். பிளாக்கரின் சொதப்பலால் அது வெளியே தெரிந்த சமயம் பலரும், முக்கியமாக போலியில் அல்லக்கைகள், ஆடிய ஆட்டம் எல்லோரும் அறிந்ததே. அப்பெயரில் நான் ஏதேனும் ஆபாசமாக எழுதியிருப்பேனோ என்றெல்லாம் லென்ஸ் வைத்து பார்த்து ஏமாந்தது வேறு ஒரு கதை. அதை இங்கே ஏன் சொல்கிறேனென்றால் சாதாரண புனைப்பெயர்களுக்கு பிடுங்கிகள் மாதிரி எழுதி என்னைச் சாடியவர்கள், இதோ போலி டோண்டு இவந்தான் என போலீஸ் பிடித்த பிறகும் கூட கள்ள மௌனம் சாதித்தனர். அது போதாது என்று குதிரை கீழே தள்ளியதுடன் நிற்காது குழியும் பறித்ததாம் என்ற ரேஞ்சில் போலி ஒரிஜினலாக நல்லவனாக இருந்ததாகவும் அவனை இந்த டோண்டுதான் உசுப்பி விட்டதாகவும் சொல்லிக் கொண்டு ஒரு கோஷ்டி திரிந்தது.
அதெல்லாம் யார் எனத் தெரிய வேண்டுமானால் விடாது கருப்புவை முதலில் தமிழ்மணத்திலிருந்து தூக்கிய போது அவனை மீண்டும் சேர்த்துக் கொள்ளச் சொல்லி பெட்டிஷன் போட்டவர்களில் பெரும்பான்மையாவர்களே அவர்கள். அவர்களில் நான் யார் யாரைக் குறிப்பிடுகிறேன் என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கு புரியும்.
எல்லாம் நேரம்டா சாமி. உண்மைத் தமிழனின் சொற்களில் கூற வேண்டுமானால், நல்லாயிருங்க.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நவீன அறிவியலின் வழிமுறைகள்
-
நவீன அறிவியல் என்பது என்ன? அதன் தர்க்கம் என்ன? ‘இதைப்பற்றி இன்னார் ஓர்
ஆய்வேட்டில் சொல்கிறார்’ என்றால் அது அறிவியலுண்மையா? என் சொந்த அனுபவம்
என்றால் அது அற...
9 hours ago
25 comments:
வலைபதிவர் சந்திப்பில் உங்கள் பேச்சை மூர்த்திக்கு ஒலிபரப்பியது யார்? நேரடியாக சொல்லவும்.பாதிக்கபட்ட நீங்களும் ஏன் தகவல்களை மறைக்கீற்கள் பயமா?
டோண்டு பதிவில் பிண்ணோட்டம் பிரசுரிக்கபடவில்லை:
டோண்டு சார்,
பாதிக்கபட்ட நீங்கள் உண்மையை மறைக்காமல் சொல்வது மிக்க உதவியாக சக பதிவர்களுக்கு அமையும்
லக்கிலுக் போலி டோண்டுக்கு அல்லைகையாக இருந்தாரா இல்லையா?
பதிவர்களின் தனிபட்ட தகவல்களை போலிக்கு கொடுதாரா?
//அது குறித்து எனக்கு ஊகம் இருக்கிறது. கிட்டத்தட்ட அது 100% சரியான ஊகம் என்றுதான் நினைக்கிறேன். ஆனால் இப்போது கூற விரும்பவில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
@அது குறித்து எனக்கு ஊகம் இருக்கிறது. கிட்டத்தட்ட அது 100% சரியான ஊகம் என்றுதான் நினைக்கிறேன். ஆனால் இப்போது கூற விரும்பவில்லை@
அப்போ எப்போதான் சொல்வீங்க?
இவ்வாறு தகவல்களை மறைப்பது குற்றவாளியை மேலும் ஊக்குவிப்பது தான்
இங்கு நிராகரிக்கபடும் பின்னோட்டங்கள் உண்மை தமிழன் பதிவிலும் பதிக்கபடுகிறது
இது என்ன மீழ் பதிவா!?
தூங்கிகிட்டு இருக்குற டைனோசரை எழுப்பி விட்ருவிங்க போலயே!
ஒரு விதத்தில் நீங்களும் தான் காரணம் . பிராமணரைப்பற்றி புகழ்ந்து எழுதினால் எதிர் கருத்து வரத்தான் செய்யும். நீங்களும் அனானியாக பின்னூட்டம் இடத்தான் செய்கிறீர்கள்.
இருவர் பக்கமும் தவறு இருக்கத்தான் செய்கிறது
உண்மைத்தமிழன் திரு சரவணனுடைய விரிவான பதிவையும், அங்கே நீங்கள் பின்னூட்டத்தில் தனிப்பதிவாகப் போடும் எண்ணம் இருப்பதாகச் சொல்லியிருந்ததைப் படித்தேன்.
சைபர் கிரைம் பெருகுவதற்கு முன்னால் தடுப்புச் சுவர் எழுப்பும் பொறுப்பு எல்லோருக்குமே இருக்கிறது. நடைமுறையில், தனக்கு வரும்போது தான் இங்கே நிறையப்பேருக்கு உறைக்கிறது.
காலம் கடந்துவிடும், விஷயம் கைமீறிப்போய் விடும் என்பதை இன்னமும் புரிந்து கொள்ளாத தமிழ்ப் பதிவுலகம், கொஞ்சம் விசித்திரமானது தான்!
டோண்டு சார்,
உங்கள் பதிவில் சில பேருடைய பெயர்களைத் தெரிவிக்காமல் அவர்கள் அதைச் செய்தார்கள், இதைச் செய்தார்கள் என்று எழுதினால், அதன் பொருள், நோக்கம் என்ன?
இந்தப் பதிவின் அவசியம் தான் என்ன?
கொஞ்சம் புரியும்படி சொல்லலாமே?
பதிவுலகத்தில் எல்லாம் சுமுகமாகத்தானே போகிறது இப்போது?
//பிராமணரைப்பற்றி புகழ்ந்து எழுதினால் எதிர் கருத்து வரத்தான் செய்யும். நீங்களும் அனானியாக பின்னூட்டம் இடத்தான் செய்கிறீர்கள்.
இருவர் பக்கமும் தவறு இருக்கத்தான் செய்கிறது//
எதை எதற்கு கம்பேர் செய்வது எனபதற்கு ஒரு விவஸ்தை இல்லையா? நீங்கள் கூறுவது போலத்தான் போலியின் பெரும்பாலான ஆதரவாளர்கள் கூறினர்.
டோண்டு ராகவ்ன்
நீங்கள் உண்மையிலேயே அக்கறையுடன் உங்களுக்கு நிகழ்ந்தது வேறு யாருக்கு வேண்டுமாணாலும் நேரலாம், அப்படி நேரக்கூடாது என எண்ணி இதை எழுதியிருந்தால் இப்போது கூற விரும்பவில்லை என்று சொல்வதை விட்டுவிட்டு அனைத்தையும் சொல்ல வேண்டும். இப்போது சொல்ல விரும்பவில்லை என்றால் எப்போது சொல்வீர்கள்? இன்னொரு போலி உருவானபின்னரா?
இல்லை இந்தப்பதிவு என் பதிவுகளின் எண்ணிக்கையில் ஒன்றை உயர்த்தத்தான் என்றால் ஒகே ,இப்டியே யூகமாவே எழுதிகிட்டு இருங்க.
வணக்கம் டோண்டு,
நலமாயிருப்பீர்கள் என நம்புகிறேன். என்னுடைய பதிவின் நோக்கம் போலி டோண்டு குறித்து நான் அண்மையில் கேள்விப்பட்ட சில தகவல்களை புதிதாக பதிவுலகுக்கு வரும் மக்களுக்கு எடுத்துரைப்பது மட்டுமே. நான் நேரடியாக போலி டோண்டு விவகாரத்தில் ஈடுபட்டவன் அல்ல. ஆனால் இத்தனை நடந்தபின்னும், அதில் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களோ ஈடுபட்டவர்களோ எந்த தகவல்களையும் பதிவு செய்யவில்லை என்பதை விசாரித்து தெரிந்தபின்புதான்பதிவை போட்டேன்.
எனக்கு கிடைத்த தகவல்கள் நேரடியானவை அல்ல என்பதால் நான் வழ வழக்க வேண்டியிருந்தது உண்மை. இப்போது உங்கள் பதிவும் உ.தமிழன் பதிவும் வந்து விஷயம் இப்படி சலசலப்பதுவும் ஒருவகையில் நல்லதே. கலகத்தின் முடிவில் தெளிவு பிறக்குமாமே?
எதற்கெடுத்தாலும் போலிஸ்னு போனா அப்புறம் கருத்து சுதந்திரம் என்னாகிறது?
சிரில் அலெக்ஸின் பதிவில் போலிஸ்காரர்கள் கூகிளிடமும் யாஹூவிடமும் விவரம் வாங்குகிறார்கள் என்று எழுதியிருந்தார்! அவர்கள் யார் அடுத்தவர்களின் ப்ரைவசியில் தலையிடுவது?
சீனாவை விட மோசமா இருக்கும்போல இருக்கே தமிழகம்?
டோண்டு சார்.
நிறைய நாட்களாக கேட்க வேண்டும் என்றும் தகுந்த சந்தர்பம் வரட்டும் என்றும் பார்த்திருந்தேன். நீங்கள் பேசும் விஷயத்தை ஒரு பதிவுலக வாசகி என்ற முறையில் மட்டும் அப்போது நான் பார்த்திருக்கிறேன்.
ஆனால், ஏன் சார் அனானி கேள்விகளுக்கும் / பின்னூட்டங்களுக்கும் இடமளிக்கிறீர்கள்? comment moderation முழுதும் போடவில்லை என்றாலும், அனானி மட்டும் disable செய்யலாமே. முகம் காட்டி பேச பயப்படுபவர்கள் கருத்துக்கு ஏன் மதிப்புக் கொடுக்க வேண்டும், மொட்டை கடுதாசு போல...??
-வித்யா
மேற்படி கேள்வி, தெரிந்து கொள்ளும் நோக்கத்தோடே கேட்டுள்ளேன். உங்களை தாக்க வேண்டும் என்றோ / வம்பு பேசவோ இல்லை.
--வித்யா
@விதூஷ்
நானும் முதலில் பதிவர்களுக்கு மட்டுமே பின்னூட்டம் இட அனுமதி அளித்தேன். அதர் மற்றும் அனானி ஆப்ஷன்களை செயல்படுத்தவில்லை.
ஆனால் போலி டோண்டு அடாவடி செய்து எனக்கு பின்னூட்டம் இட்டவர்களை தள்ளி நிற்க வைத்ததால், அனானி ஆப்ஷனை தருமாறு பலர் என்னைக் கேட்டுக் கொண்டனர். அனானி ஆப்ஷன் கூட ஏற்கலாம், ஆனால் அதர் ஆப்ஷன் ரொம்ப அபாயகரமானது என்பது பற்றி நான் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளது இப்போது இங்கு வேண்டாம்.
ஆனால் என்னிடம் அந்த ஆப்ஷன்களை கையாளும் திறமை இருக்கிறது என்பதை உறுதியாக உணர்ந்ததாலேயே அவற்றை அனுமதித்தேன், அனுமதிக்கிறேன். என்னிடம்தான் மட்டுறுத்தல் வேறு இருக்கிறதே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இத நீங்க உ.த அண்ணன் பதிவுல பின்னூட்டமாவே போட்டிருக்கலாம். பதிவா போடற அளவுக்கு நீங்க ஒன்னுமே புதுசா எழுதலை. ஓவர் மழுப்பல். ஜோசப் பால்ராஜின் இறுதிவரிகள் தான் எனக்கும் தோன்றுகிறது.
சிறில் சொன்னது புதிய பதிவர்களை எச்சரிக்கைபடுத்த என்றுதான் நான் நினைக்கிறேன்..
அதனால் ஒன்றும் பாதகமில்லை. நமக்கு முன்னுரையை அவர் தொடங்கி வைத்திருக்கிறார் என்று எடுத்துக் கொள்வோம்..!
[[[ரவிஷா said...
எதற்கெடுத்தாலும் போலிஸ்னு போனா அப்புறம் கருத்து சுதந்திரம் என்னாகிறது? சிரில் அலெக்ஸின் பதிவில் போலிஸ்காரர்கள் கூகிளிடமும் யாஹூவிடமும் விவரம் வாங்குகிறார்கள் என்று எழுதியிருந்தார்! அவர்கள் யார் அடுத்தவர்களின் ப்ரைவசியில் தலையிடுவது? சீனாவை விட மோசமா இருக்கும்போல இருக்கே தமிழகம்?]]]
ரவிஷா.. பிரச்சினையின் ஆழம் தெரியாமல் பேசுகிறீர்கள்..
உங்களிடம் காண்பிப்பதற்கு ஆதாரங்கள் எங்களிடம் இல்லை. அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன.
வேண்டுமானால் கூகிளாண்டவரிடம் குச்சிக்காரி என்று டைப் செய்து பாருங்கள்.. தகவல்கள் கிடைக்கலாம்..! ஆனால் பயங்கரமாக இருக்கும்..
//
பிராமணரைப்பற்றி புகழ்ந்து எழுதினால் எதிர் கருத்து வரத்தான் செய்யும். நீங்களும் அனானியாக பின்னூட்டம் இடத்தான் செய்கிறீர்கள்.
இருவர் பக்கமும் தவறு இருக்கத்தான் செய்கிறது
//
நீங்கள்லாம் திருந்தவே மாட்டீய்ங்களா ?
ரோட்டுல போற பொறுக்கி ஒம்பொண்டாட்டியப் பாத்து கண்ணடிச்சா, அந்த பொறுக்கிய அடிப்பியா இல்ல ஒம்பொண்டாட்டியத் திட்டுவியா, பொட்டைப்பயலாட்டம் ?
ஆரம்பிச்சிட்டாருய்யா டோண்டு சாரு.. ம்ம் அடிச்சி ஆடுங்க.. இதுக்கு மேல.. மூர்த்தியை பத்தி வாரம் ஒரு பதிவு, மீள்பதிவுன்னு பதிவுலகமே அல்லோல படப்போவுது.. இந்த வாட்டி இவர் விளம்பரத்துக்கு எவன் எவன் பொண்டாட்டி புள்ளைங்க பலியாக போறாங்களோ.. நல்லா இருங்கடே..
//
Anonymous said...
வலைபதிவர் சந்திப்பில் உங்கள் பேச்சை மூர்த்திக்கு ஒலிபரப்பியது யார்? நேரடியாக சொல்லவும்.பாதிக்கபட்ட நீங்களும் ஏன் தகவல்களை மறைக்கீற்கள் பயமா?
//
யோவ் அனானி நீயென்னா லூசா இல்ல டோண்டு சார் பதிவுக்கு புதுசா? இப்பவே சொல்லிட்டா.. எல்லாருக்கும் விவரம் தெரிஞ்சிடும்.. டோண்டு சாரு சொல்லுவாரு ஆனா சொல்ல மாட்டாரு..
//தூங்கிகிட்டு இருக்குற டைனோசரை எழுப்பி விட்ருவிங்க போலயே!//
வால் அதுக்கு தான் இந்த முயற்சியை ஆரம்பிச்சி இருக்காங்க... ஏறகனவே ஒரு ஆள் உண்மைதமிழன் பதிவுல டென்ஷனாக ஆரம்பிச்சிட்டான்.. முதல் கட்ட ஆப்ரேஷன் வெற்றி.. இதுக்கு மேல ஆரம்பிச்சிடுவோமுல்ல...
@சந்தோஷ்
என்னடா இன்னும் வரல்லியேன்னு பார்த்தேன். முதலில் தமிழ்மணம் மட்டுறுத்தலை கட்டாயமாக்கியபோதே அதை எதிர்த்தவர்தானே நீங்கள்? கடைசியில் இதுபற்றி மற்றவர்களுக்கு கொம்புசீவி விட்ட நீங்களே அதை போட்டுக் கொண்டது தனி காமெடி.
போலியை கண்டித்து அவன் பதிவில் நீங்கள் பின்னூட்டம் போட்டதாகத் தெரியவில்லையே. உபதேசம் எல்லாம் எனக்கு மட்டும்தான். அதையெல்லாம் கேட்டுக் கொண்டு நான் சும்மா இருந்திருந்தால் இன்னும் மூர்த்தி கோலோச்சிக் கொண்டிருப்பான் இப்போது அவன் இல்லையல்லவா. ஆகவே ரிசல்டை பாருங்கள்.
அது சரி, மூர்த்திதான் எல்லாம் செய்தான் எனக் கடைசியில் நிரூபிக்கப்பட்டாலும், அது சம்பந்தமான எனது பதிவில் உங்கள் பின்னூட்டம் எதுவும் காணோமே? ஏன் இந்த இடிபோன்ற மௌனம்?
இப்போது உங்கள் அபிமான பதிவரை பற்றி எழுதும் போது மட்டும் ஏன் இந்த ஆர்ப்பாட்டம்? ஓரமாக உட்கார்ந்து வேடிக்கை பாருங்கள் முன்னால் செய்தது போல.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இங்கே வந்திருக்கும் அதே பின்னூட்டங்கள் எனக்கும் வந்திருக்கிறது!
நான் ஐபி சோதனையிட்டதில் அது சென்னை ஐபி அட்ரஸ் காட்டுது!
நீங்களும் பார்த்து சொன்னா நேர வித்தியாசத்தை வைத்து யார் இந்த புண்ணியவான்னு கண்டுபிடிக்கலாம்!
@வால்பையன்
மடிப்பாக்கம் என்னும் பெயரின் கீழ் வந்த 3 பின்னூட்டங்களை நிராகரிக்க எண்ணி தவறுதலாக அனுமதித்தேன். பிறகு உடனே அவற்றை அடையாளம் இன்றி நீக்கினேன். நீங்கள் அவற்றைத்தான் குறிப்பிட்டீர்கள் என்றால் அவை மாலை 06.47-க்கு வந்தன.
அவை யாரிடமிருந்து வந்தன என்பதைப் பற்றி எனக்கு துளிக்கூட ஐயமே இல்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment