செந்தழல் ரவியின் பல்டிகள்
மோகன் கந்தாமி அவர்களது இப்பதிவில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ:
அதற்கு முன்னால் கோவி கண்ணன் அப்பதிவில் எழுதியதையும் முதலில் காட்டுகிறேன்.
//டோண்டுவுக்கும் போலி டோண்டுவுக்கும் தொடர்பு இருந்தது - என்று இவர் (செந்தழல் ரவி) சொல்வது போல் வேறு யாருமே சொன்னது கிடையாது.
டோண்டு சார் இதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார் என்று அறிய ஆவலாக இருக்கிறேன்//.
இப்போது பின்னூட்டம்:
@கோவி கண்ணன்
அவற்றை முதலில் கண்டுகொள்ளாமல் விட்டுவிடலாம் என்றுதான் நினைத்தேன். இருந்தாலும் சில மாதங்கள் கழித்து “நான் சொன்னதை டோண்டு ராகவன் மறுக்கவேயில்லை, ஆகவே அவர் அதை ஒப்புக் கொண்டுவிட்டார்” என்று இவரே ஜல்லியடிக்கலாம் என்பதால் சில விஷயங்களை சந்தேகத்துக்கிடமின்றி கூறிவிடுகிறேன். இவர் போலி டோண்டு மூர்த்தியுடன் உறவாடி அவன் ரகசியங்களை கறப்பதாக என்னிடம் கூறியது உண்மைதான். ஆனால் மேற்கொண்டு விவரங்கள் நான் கேட்கவில்லை. அவ்வப்போது இவராகவே பிராக்ரஸ் ரிப்போர்ட் ஃபோன் மூலமோ அல்லது வேறு வகையிலோ தருவார். மற்றப்படி ஏப்ரல் 2008-ல் இவர், உண்மைத் தமிழன், ஓசை செல்லா ஆகியோர் போலீசுக்கு போய் மூர்த்தி மேல் புகார் தந்தது, பத்திரிகைகளிலும் அது பற்றி செய்தி தந்தது ஆகிய விஷயங்கள் மனதுக்கு நிறைவையே தந்தன. பிறகு நானும் என் தரப்புக்கு போய் மூர்த்தி மேல் புகார் கொடுத்தது எல்லாம் ஏற்கனவே எழுதிவிட்டேன். அவை இப்போது இங்கு வேண்டாம். மொத்தத்தில் மூர்த்தி போலீசில் நின்று தலைகுனிந்து நின்றது, அவன் பல் பிடுங்கப்பட்டு குப்பைத் தொட்டியில் வீசப்பட்டது என்பதே போதும்.
செந்தழல் ரவி பற்றி என்னைக் கேள்வி கேட்டு கோவிகண்ணன் இட்ட பதிவுக்கு நான் இட்ட எதிர்ப்பதிவில் இவ்வாறு எழுதியிருந்தேன்.
“செந்தழல் ரவி என் மகளைப் பற்றி அசிங்கமாக எழுதவில்லை. அப்படியே அவர் எழுதினார் என நிரூபணமானாலும் அவரை மன்னிக்கிறேன். ஹாரி பாட்டர் கதைகளில் வரும் ஸ்னேப் போல அவர் செயல்பட்டார். அதற்கு மிகுந்த மனவுறுதி வேண்டும். அது அவரிடம் இருந்தது. அவ்வளவுதான் விஷயம்”.
இன்னொன்றும் கூறுகிறேன். ரவியை நான் அப்போது விட்டுக்கொடுக்காமல் இருந்தது ஜயராமனைக் காப்பாற்றவே என்று கோவி கண்ணன் ஓரிடத்தில் அபிப்பிராயப்பட்டிருக்கிறார். அது தவறு. ஏனெனில் ஜயராமன் அப்பாவி என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை. போலி டோண்டுதான் இங்கும் குற்றவாளி எனபதை நான் பல இடங்களில் கூறிவிட்டேன். எனது இலக்கு மூர்த்திதான். அச்சமயம் அவன் மேல் உள்ள குற்றச்சாட்டு திசைதிருப்பப்படக்கூடாது என்பதுதான் எனது நோக்கம். ஆகவே நான் அவ்வாறு எழுதியது எழுதியதுதான்.
ஆனால் கடந்த சில நாட்களாக அவர் போலி டோண்டுவுக்கு பலதகவல்கள் கொடுத்து வந்தது உண்மை டோண்டுவாகிய நான்தான் என அவதூறாக எழுதி வருகிறார். அது ஏன் எனத் தெரிய ஒன்றும் பெரிய அறிவு எல்லாம் தேவையில்லை. லக்கிலுக்கைக் காப்பாற்றும் முயற்சியே அது என்பது புரிகிறது. ரவி எனக்கனுப்பிய மின்னஞ்சல்களையெல்லாம் தேடிப் பார்த்து விட்டேன். அவர் சொன்னது போல அவர் மனைவிக்கு ஜெர்மன் படிப்பது சம்பந்தமாக எனக்கு எந்த மின்னஞ்சலும் கிடைக்கவில்லை. பிறகு நான் ஃபோனில் பேசி அவரது மனைவியின் விவரங்களைக் கேட்டதாகவும் அவை பிறகு மூர்த்திக்கு சென்றதாகவும் கூறுகிறார். அவர் வேறு இடத்தில் குறிப்பிட்டுள்ள தோரணையில் “போலி டோண்டுவுக்கு தகவல் கொடுக்குமளவுக்கு டோண்டுவுக்கு மோட்டிவேஷன் என்ன”? என்னும் கேள்விதான் நிற்கிறது. அவர் மனைவி பற்றி அவரிடம் நான் ஒருவிவரமும் கேட்கவில்லை, அவரைப் பற்றி பேச்சே எங்கும் டெலிஃபோனில் பேசியதாக நினைவில்லை.
அதேபோல தான் போலியின் தளத்தை brute force கொண்டு உடைக்க முயற்சித்ததாகவும், அது எனக்குத் தெரியுமென்றும் பிறகு மூர்த்தியிடம் அச்செய்தி போனதாகவும் வேறு கூறுகிறார். நான் ஏற்கனவே பல இடங்களில் சொன்னது போல முழுவிவரம் ஒன்றையும் நான் கேட்கவில்லை. போலிக்கு எதிராக வேலை செய்கிறார் என்பதே எனக்கு போடுமானதாக இருந்தது. ஆகவே இங்கும் ரவி பொய் சொல்கிறார். அதற்கும் மோட்டிவேஷன் லக்கிலுக்கைக் காப்பாற்றுவதற்கே என்று தோன்றுகிறது. அவரைப் பார்த்து பரிதாபப்படத்தான் முடியும்.
என்னைப் பொருத்தவரை நான் தெளிவாகவே உள்ளேன். இப்போது நடக்கும் விஷயங்களைப் பார்ப்பதில் ஒன்று தோன்றுகிறது. செந்தழல் ரவி வெறும் அப்ரூவராகச் செயல்பட்டுள்ளார் என வைத்துக் கொண்டாலும் மூர்த்தியை பிடிக்க அவரது உதவி இன்றியமையாததாக ஆகியிருக்கிறது. மூர்த்தி நீக்கப்பட்டுவிட்டான். அது போதும். இனிமேல் செந்தழல் ரவி வேறு பல்டிகள் அடித்தாலும் எனக்குக் கவலையில்லை. ஆனால் அவரும் உண்மைத் தமிழனும் போலியை பிடிப்பதில் ஆற்றிய பங்கு விலைமதிப்பற்றது. அதற்காக என் நன்றி எப்போதுமே அவர்களுக்குண்டு.
நடிகர் விஜயின் செலெக்டிவ் நினைவுகள்
நடிகர் விஜயின் இளமை நினைவுகள் பற்றிய ஒரு தொடர் வாராந்தரி ராணி வார இதழில் வந்து கொண்டிருக்கிறது. லேட்டஸ்ட் இதழில் (27.09.2009) விஜய் தனது திரைவளர்ச்சி பற்றி குறிப்பிடுகையில் அது திட்டமிட்டு நடந்ததாகவே கூறுகிறேன். தனது சிறுவயது பாத்திரங்களையும் குறிப்பிட்டு, “சட்டம் ஒரு விளையாட்டு” மற்றும் இது எங்க நீதி” ஆகிய படங்களுக்கு முக அவர்களின் வசனம் என பெருமை பட்டுக்கொள்கிறார். நியாயமே. ஆனால் அதே சமயம் தான் ஏற்ற சிறுவயது பாத்திரங்களில் சில விஜயகாந்தின் கேரக்டருக்கானதே அவை என கூறாமல் விட்டுவிட்டார். ஆனால் வேறொரு சந்தர்ப்பத்தில் ஒரு டிவி பேட்டியில் இதை பெருமையாகக் குறிப்பிட்டு க்ளிப்பிங்ஸ் வேறு காட்டினார்.
இப்போது இதை இங்கு கூறாமல் விடுவதன் நோக்கம் என்னவாக இருக்கும்? ஒரு வேளை அடுத்த இதழில் கூறுவாரோ? அல்லது ஏதேனும் திட்டமிட்ட அரசியல் நோக்கங்கள்?
காந்தியும் சாதியும்
இது பற்றி நண்பர் ஜயமோகன் எழுதியுள்ள்ளவை ஒத்துக் கொள்ளும்படியாகவே உள்ளன.
அவற்றிலிருந்து சில வரிகள்:
“சாதி என்ற அமைப்பு இந்திய சமூகத்தின் முக்கியமான ஒரு கூறு. அதன் வரலாற்றுப் பரிணாமம், சென்றகாலத்தில் அதன் சமூகப்பயன்பாடு, அதன் நிகழ்காலப்பணி எதைப்பற்றியும் எந்த ஆய்வும் இந்தியாவில் நடக்கவில்லை. இந்தியாவை நோக்கிய ஆங்கிலேயர் அதை இந்திய சமூகத்தைப் பீடித்திருக்கும் ஒரு நோய் என்று சொன்னார்கள். இந்திய படித்த வர்க்கம் அப்படியே ஏற்றுக்கொண்டு சொல்ல ஆரம்பித்தது. வெள்ளையனே சொல்லிவிட்டான் என்ற தாழ்வுமனப்பான்மையே காரணம்.
ஆனால் உண்மையில் இந்த நிராகரிப்பு என்பது நம் படித்தவற்கத்தின் நாக்குகளில் மட்டுமே இருந்தது. நெஞ்சில் நிகழவில்லை. இக்கணம் வரை அப்படித்தான். ஏன் என்றால் அவனுக்குள் சாதியைப்பற்றிய எந்த விவாதமும் நிகழவில்லை. அவ்வாறு விவாதம் நிகழ்ந்திருந்தால் சாதியின் சமூகப்பங்களிப்பு குறித்து அவன் சிந்தனை செய்திருப்பான். இப்போதும் சாதியைச் சுமக்க அவனுக்கு என்ன காரணங்கள், கட்டாயங்கள் உள்ளனவோ அந்தக் காரணங்கள் எல்லாமே விவாதத்துக்கு வந்திருக்கும். அவற்றை வேறு எவ்வகையில் தாண்டிச்செல்ல முடியும் என்று பார்த்திருப்பான். அந்த வழிமுறைகள் அவனுக்கு உதவியிருக்கும்.
காந்தியைப் பொறுத்தவரை அவர் அந்த தாழ்வுணர்ச்சி முற்றிலும் இல்லாதவர். இந்தியாவைப்பற்றிய மேலைநாட்டு நோக்கை அவர் எவ்வகையிலும் கடன் பெற்றவர் அல்ல. மேலைநாட்டின் தத்துவஞான மரபில் அன்று மிகுந்த படைப்பூக்கத்துடன் உருவாகிவந்த ஒரு தரப்புடன் அவருக்கு தீவிரமான உறவிருந்தது — தோரோ, ரஸ்கின், டல்ஸ்தோய் மரபில். ஆனால் அவர் சிந்தனைகளைக் கடன்கொண்டவரல்ல.
காந்தியின் தனித்தன்மை அவர் தன் சிந்தனைகளை நூல்களில் இருந்து பெறவில்லை என்பதே. அவர் தன் சொந்தச் சிந்தனைகளுக்கு தேவையான அளவுக்கு மட்டும் நூல்களை பயன்படுத்திக்கொண்டார். அவர் நடைமுறைவாதி. சமூகம் குறித்த தன் தரவுகளை தன் சொந்த அவதானிப்புகளில் இருந்தே அவர் பெற்றுக்கொண்டார். தன் பகுத்தறிவுக்கு ஒரு விஷயம் உண்மையிலேயே திருப்தி அளிக்காத வரை அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை”.
“காந்தி சாதியைப் பற்றி என்ன நினைத்திருந்தார் என்று பார்க்க வேண்டும். காந்தி அக்காலத்தில் ஒரு இந்து சாதியைப்பற்றி இயல்பாக என்ன நம்பிக்கை கொண்டிருந்தாரோ அந்த நம்பிக்கையையே தானும் கொண்டிருந்தார். அவர் காலத்தில் ஐரோப்பியரை வழிமொழிந்து சாதிக்கு எதிராகப் பேசியவர்கள் அந்தரங்கத்தில் கொண்டிருந்த நம்பிக்கைதான் அது. காந்தியின் உண்மையுணர்ச்சியே அவரை அதை நேர்மையாக பதிவுசெய்ய வைத்தது.
காந்தியின் ஆரம்பகால எண்ணங்கள் இவை. வருணப்பிரிவு என்பது சமூகத்தில் ஓர் ஒழுங்கை உருவாக்கும்பொருட்டு இயல்பாக பரிணாமம் அடைந்துவந்த ஒன்று. அது சமூகத்தின் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறது. தந்தையரின் தொழிலை மகன் செய்யும்போது இயல்பாகவே அவனுக்கு அதில் திறமை உருவாகி வருகிறது. இந்திய சமூகம் உள்மோதல்களினால் அழியாமல் ஆக்கபூர்வமாகச் செயல்பட அது பலநூற்றாண்டுகளாக உதவி வந்திருக்கிறது”.
“காந்தி சாதியைப்பற்றி பேசிய அந்நாட்களில் இந்திய சமூகத்தில் சாதி உருவாகி வந்த விதத்தைப் பற்றிய ஓர் அறிவியல்பூர்வமான ஆய்வே நடக்கவில்லை. இந்தியாவை மதவிழிப்பற்ற காட்டுமிராண்டி நாடாகச் சித்தரித்த கிறித்தவ மதப்பரப்புநர்கள் உருவாக்கிய சித்திரமே பிரபலமாக இருந்தது. அதன்படி, சாதி என்பது இந்திய சமூகத்தில் இருக்கும் நூற்றுக்கணக்கான கொடிய வழக்கங்களில் ஒன்று. அது இந்து மதத்தாலும் பிராமணர்களாலும் அவர்களின் ஆதிக்கத்துக்காக ஒரு சதிவேலையாக உருவாக்கப்பட்டது. ஆகவே வேருடன் கெல்லி எறியப்பட வேண்டியது…
இன்றுவரை தமிழ்நாட்டில் அறிவுஜீவிகள் என்பவர்களிடையே பிரபலமாக இருப்பது இந்த ஒற்றைவரிப் புரிதல் மட்டுமே. இந்த மேலோட்டமான புரிதலை மக்களிடையே கொண்டுசெல்ல முடியாது, ஏனென்றால் அடிப்படையான ஒரு பயன்பாடு இருப்பதனால்தான் அவர்கள் சாதியை ஆரத்தழுவிக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே சாதிநிராகரிப்பு என்பது மேடையில் செய்யப்படும் வெற்றுபாவனையாக நின்றுவிடுகிறது. நடைமுறை யதார்த்தத்துக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இருப்பதில்லை.
தமிழ்நாட்டு யதார்த்ததையே பார்ப்போம். இங்கே கொஞ்சமாவது சாதியை விட்டு வெளியே வந்தவர்கள் ‘உயர்மட்ட’ சாதியினரே. இன்றும் ‘கீழ்மட்ட’ சாதியினரிடம் சாதிப்பற்று என்பது ஆழமாக வேரோடி இருக்கிறது. சாதிமறுப்பை மேடையில் கக்குபவர்கள், சாதியை உருவாக்கிய உயர்சாதிச்சதியை எதிர்த்து பொங்குகிறவர்கள் அனைவருமே சாதிக்குள்தான் வசதியாக இருந்துகொண்டிருக்கிறார்கள்”.
எழுத்தாளர் நாடோடி அவர்கள் சமீபத்தில் 1957-ல் எழுதியதைப் பார்ப்போமா?
“நாடோடி தங்கியிருந்த ஹோட்டலில் உள்ள இன்னொரு எழுத்தாளர் அப்போதைய (2057-ஆம் ஆண்டில்) ஜாதிக் கட்டுப்பாடு பற்றி விளக்குகிறார். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் வர்ணாசிரமம் வந்து அதிலிருந்து ஜாதிகள் வந்ததை விளக்குகிறார். பிறகு அவற்றின் கட்டுக்கோப்பு குலைந்து போனதால் யார் வேண்டுமானாலும் எந்தக் குலத்தொழிலையும் செய்யலாம் என நிலை ஏற்பட, சம்பளம் அதிகம் வராத தொழில்களுக்கு ஆட்கள் கிடைக்காது, சம்பளம் அதிகம் கிடைக்கும் வேலைகளுக்கு ஒட்டுமொத்தமாக ஜனங்கள் போய் விழ அங்கு வேலையில்லாத் திண்டாட்டம் வந்தது. ஆகவே 500 ஆண்டுகளுக்கு முன்னால் அப்போது நிலவிய தொழில்களின் அடிப்படையில் மீண்டும் ஜாதிகளை வகுத்து ஒரு ஜாதிக்காரர் இன்னொரு ஜாதிக்காரரின் வேலையை செய்யக்கூடாது என்ற நிலை நிறுவப்பட்டது.
ஜாதிப் பிரிவுகள் இருந்தனவே தவிர இந்த ஜாதிதான் உயர்ந்தது இன்னொரு ஜாதி தாழ்ந்தது என்ற எண்ணங்களும் வராமல் பார்த்து கொள்ளப்பட்டன. தலைமுறை தலைமுறையாக ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் ஒரு தொழிலை மட்டும் செய்ததால் அத்தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. ஆகவேதான் ஒரு ஜாதியினர் இன்னொரு ஜாதியினரைத் தொடுவது கூட குற்றமாகக் கருதப்பட்டது. போலீஸ் ஜாதியைச் சார்ந்தவர்கள் திருடர்களை பிடிக்கும்போது மட்டும் தங்கள் தொழில் தர்மப்படி அவர்களைத் தொடலாம். பிறகு தீட்டு கழிய அவர்கள் குளிப்பதற்கு சோப்பு டவல் எல்லாம் வழங்கப்படும். திருடர்களும் போலீஸ் ஜாதியினர தங்களைத் தொட்டு விட்டதால் அவர்களும் குளிப்பார்கள்.
இதையெல்லாம் கேட்ட நாடோடிக்கு தலை சுற்றி தெரியாத்தனமாக தான் 1957-லிருந்து வருவதாகக் கூற, “பைத்தியம் டோய்” எனக் கூறி எல்லோரும் அவரை அடிக்க வருகின்றனர். திடீரென விழித்துக் கொள்ளும் நாடோடி தான் 1957-லேயே இருப்பதை உணர்ந்த் நிம்மதி அடைகிறார்”.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நவீன அறிவியலின் வழிமுறைகள்
-
நவீன அறிவியல் என்பது என்ன? அதன் தர்க்கம் என்ன? ‘இதைப்பற்றி இன்னார் ஓர்
ஆய்வேட்டில் சொல்கிறார்’ என்றால் அது அறிவியலுண்மையா? என் சொந்த அனுபவம்
என்றால் அது அற...
5 hours ago
68 comments:
சாதிகள் ஒழிப்பது சுலபமில்லை. ஆனால் சமத்துவம் புரிந்துணர்வு கொண்டு வருவது முடிந்த காரியமே. உங்களைபோன்ற பெரியவர்கள் அதற்கான வழியை கண்டுபிடிக்கலாம்.
அதை விட்டு பெரியாரைதிட்டுவதே வேலையாகத்திரிவது எதற்கும் பலன் தராது.
நாடார்கள் முன்னேறியது போல மற்ற அனைவரும் முன்னேற உருப்படியான யோசனை இருந்தால் பதியுங்கள்.
குடுகுடுப்பை.
பஞ்சாமிர்தத்துல பழங்கள் தான், இனிப்பு மட்டும் தான் இருக்கும்! அதென்ன,இந்த ஒரு நங்கநல்லூர்ப் பஞ்சாமிர்தம் மட்டும் கொஞ்சம் காரமாக ஆரம்பிக்கிறது?
மிளகாய் பழுத்துச் சிவந்ததும் பழம் தானேன்னு சேத்து போட்டாச்சா:-))
@குடுகுடுப்பை
இங்கு பெரியார் எங்கிருந்து வந்தார்? அவரைப் பற்றி யார் பேசியது?
நீங்கள் அவரைக் கொண்டுவந்ததாலேயே இப்போது கூறுகிறேன். சாதிக் கொடுமைக்கு பார்ப்பனர்களே காரணம் என ஜல்லியடித்தது அவர்தான். அவரிடம் இப்போது நீங்கள் ஏதும் கூறவியலாதுதான். ஆகவே ஒன்று செய்யுங்கள், அவரது ஜால்ராக்களுக்கு கூறுங்கள்.
@கிருஷ்ணமூர்த்தி
முதலில் போலியின் விஷயத்தைத் தனிப்பதிவாகவே போட நினைத்தேன். ஆனால் அதை இங்கு சேர்த்ததின் காரணமே அதற்கு மேலும் முக்கியத்துவம் தர வேண்டாம் என்பதாலேயே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
///முதலில் போலியின் விஷயத்தைத் தனிப்பதிவாகவே போட நினைத்தேன். ஆனால் அதை இங்கு சேர்த்ததின் காரணமே அதற்கு மேலும் முக்கியத்துவம் தர வேண்டாம் என்பதாலேயே.///
good decision. we are tired of this. :)
///லக்கிலுக்கைக் காப்பாற்றும் முயற்சியே அது என்பது புரிகிறது.///
லக்கி பகிரங்கமா மறுத்துட்டாரே அவருக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு?
பழைய நினைவுகளும், மடல்களும் என் கிட்டையும் கொஞ்சம் இருக்குது. தேடிப் பாக்கணும்.
விவகாரம் பூதாகரமானதும், லக்கி ஒரு பதிவிலோ/பின்னூட்டத்திலோ, சொன்னதும் நினைவில் வந்து தொலைக்கிறது.
எந்த புத்துல என்ன பாம்பு இருக்கும்னு சொல்ல முடியாது. ஹ்ம்!
@சர்வேசன்
செந்தழல் ரவி என் மேல் தேவையின்றி இட்ட அபாண்ட குற்றச்சாட்டுக்கு நான் பதிலளிக்க வேண்டிய கட்டாயம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
சாதிக் கொடுமைக்கு பார்ப்பனர்களே காரணம் என ஜல்லியடித்தது அவர்தான்.//
நெறையா பேரு ஜல்லியடிக்கிறது , ஜல்லியடித்ததுன்னு சொல்றதக் கேட்டு என்ன அதுன்னு முழிச்சிருக்கிறேன்.
இப்ப புரியுது....உண்மையச் சொல்றதுக்குப் பேர்தான் ஜல்லி அடிக்கிறதா?
சரிசரி...
:)
சாதிக்கொடுமைக்கு அல்ல சாதீய அடிப்படைக்கு காரணம் பார்ப்பனர்கள். அவர்கள்தானே அதற்குப் பொறுப்பேற்க வேண்டும். பார்ப்பனர்களுக்கு மட்டுமே புரிந்த மொழியான சமஸ்கிருதம் என்கிற தேவமொழியில் தானே வருணாசிரமம் வடிக்கப்பட்டிருக்கிறது?
:)
***
இந்த போலி டோண்டு பற்றி பேசிப்பேசி ஃபோர் அடிக்கிறது. ரெண்டு மூணு பேருக்கு நடுவுல நடக்கிற ஈகோ யுத்தத்தை ஒட்டுமொத்த பிரச்சினையாக சொல்லி வாசகர்களின் நேரத்தை வீணடிப்பதற்கு நீங்க எல்லோரும் ரொம்ப கஷ்டப்படுறீங்க.அதனால நாங்களும்.!
விட்டுடுங்க சார் ....நாங்க எல்லோரும் நெம்பப் பாவம்..
**
ஒரு சேஞ்ச்சுக்கு நான் மேல சொன்ன மேட்டரைப் பத்தி பேசுவமா?
சூடு குறையாமல் அப்படியே இருக்கு!
//சாதிக்கொடுமைக்கு அல்ல சாதீய அடிப்படைக்கு காரணம் பார்ப்பனர்கள். அவர்கள்தானே//
ஆக சாதிக்கொடுமைக்கு காரணம் அல்ல என்பதை ஒத்துக் கொள்கிறீர்கள். மற்றப்படி அடிப்படைக்கும் அவர்களே காரணம் என்பது மற்ற சாதிக்காரர்கள் மாங்காய் மடையன்களாக இருந்திருந்தால்தான் சாத்தியம்.
உங்களுக்கு வேண்டிய பதிலை ஜெயமோகன் வேண மட்டும் கூறிவிட்டார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வால்பையன் தொட்டுப்பார்த்துச் சொன்னது:
"சூடு குறையாமல் அப்படியே இருக்கு!"
சூடா இருக்கற எல்லோரையும் மதுரைக்கு வரச் சொல்லி ஜிகர் தண்டா பார்டி கொடுத்துக் குளிர்விச்சுரலாம்! அது ஒண்ணும் பெரிசில்லை!
சூட்டைக் கொறைச்சுக்கணும், குளிர்வித்துக் கொள்ளவேண்டுமென்கிற நினைப்பு முதலில் வர வேணுமே:-))
பூணூல் போடாத பார்ப்பனீயவாதிகள்
http://kattamanaku.blogspot.com/2009/09/blog-post_21.html
//சாதிக் கொடுமைக்கு பார்ப்பனர்களே காரணம் என ஜல்லியடித்தது அவர்தான்//
சாதிக்கொடுமையென்றால், குத்தி கொலை, தீவைப்பு என்பது மட்டுமல்ல. ‘ஒத்திப்போ’ என்றதும், ‘தொட்டால் தீட்டு, பார்த்தால் பாவம்’ என்று ஆச்சாரம் பார்த்தலும், வீட்டைக்கழுவிவிடுதல், தெருவில் நிற்கவைத்து குடினீரை மேலேயிருந்து கொட்டல், கல்லால் ஆழ்வாரை அடித்தல் - போன்றவைகளும் சாதிக்கொடுமையில் வரும். இதைச் செய்தவர் பார்ப்பனர் என்பது பார்ப்பனரே எழுதி வைத்த வரலாறு, பாரதி போன்ற பார்ப்பனரே திட்டியதுமாகும்.
இதையெல்லாம் மறைத்து நாடகமாடமுடியாது.
மதிபாலாவின் அம்மா, அக்கா, தங்கை, மனைவி, குழந்தை ஆகியொர் குறித்து படம் போட்டு பாகம் குறித்து அவன் எழுதியிருந்தாலும் இப்படி 'ஈகோ' யுத்தம் என்று பேசுவாரா என்று கேட்க வேண்டும்.
முதல் வரியில் ஜல்லியடிப்பது என்றால் உண்மை பேசுவதா என்று கேட்டு விட்டு (ஜோக் அடிக்கிறாராம்!) அடுத்த வரியில் 'சாதிக் கொடுமைக்கு பார்ப்பனர்கள் காரணம் அல்ல' என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறாரே என்று முழித்தேன். அடுத்த டோண்டுவின் பின்னூட்டத்திலேயே அவர் எப்படிப்பட்டவர் என்று பதில் கிடைத்தது.
blog ulakam irukkum varai intha dondu vs poli donduvum irukkum enave nambukiren..
பதிவுக்கு நன்றி. ஆனால் உங்களிடமே இந்த தகவல்களை பெற்றுவிட்டதைத்தான் அப்படி சொன்னேன். என்னுடைய தகவல்களை நீங்கள் மூர்த்தியிடம் சொன்னதாக எங்காவது உள்ளதா ?
நீங்கள் எதார்த்தமாக உங்களுக்கு நெருங்கிய யாரிடமாவது சொல்லிவைக்க, அது அப்படியே போயிருக்ககூட வாய்ப்பு உண்டு என்பதை புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். என்னைப்பொறுத்தவரை இந்த செய்தியை வலையுலகில் யாருக்கும் சொல்லவில்லை என்ற அளவில் உண்மை..
உங்களுக்கு மேலும் தகவல்கள் வேண்டுமானால் என்னை தொடர்புகொள்ளுங்கள்.
முன்பே உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் எழுதவும் நினைத்தேன், நேரமின்மை. மன்னிக்க. அப்படி என்னுடைய வார்த்தைகள் வேறு அர்த்தம் கொடுத்திருந்தால் அது என்னுடைய மொழி குறைபாட்டையே காட்டுகிறது (நன்றி பைத்தியக்காரன் அல்லது ஜ்யோராம்)
தான் போலியின் தளத்தை brute force கொண்டு உடைக்க முயற்சித்ததாகவும், அது எனக்குத் தெரியுமென்றும் பிறகு மூர்த்தியிடம் அச்செய்தி போனதாகவும் வேறு கூறுகிறார். நான் ஏற்கனவே பல இடங்களில் சொன்னது போல முழுவிவரம் ஒன்றையும் நான் கேட்கவில்லை///
Muthu Thamizini Knows. you can ask him.
அதே ஜெ.மொ கட்டுரையின் இறுதியில் சில வரிகள் வருகின்றன:
இனிமேல் கவனியுங்கள், காந்தியை அவதூறுசெய்து வெளியிடப்படும் எந்த ஒரு ஆய்வேட்டுக்கு அல்லது நூலுக்குப் பின்னாலும் ஓர் அயல்நாட்டு பல்கலைக் கழகம் இருக்கும். அல்லது ஏதேனும் ஒரு கிறித்தவ மதப்பரப்பு நிறுவனத்தின் நிதியுதவி இருக்கும்.
இது முற்றிலும் உண்மையே.
முத்து தமிழினியிடம் ஒருமுறை இந்த ப்ரூட் போர்ஸ் முறையில் முயன்றதை சொன்னேன். சொன்ன இடம் பெங்களூர் யுண்டாய் ஷோரூம் எதிரில். அவர் என்னை போனில் அழைத்திருந்தார் அப்போது. விசாரித்துக்கொள்ளவும்.
லக்கியை காப்பாற்றவே இப்படி செய்கிறேன் என்று சில இடங்களில் பார்த்தேன். அவரை யாரும் காப்பாற்ற தேவை இல்லை என்பதே எனது வாதம். ஆரம்பத்தில் போலியை அவன் பாணியிலேயே எதிர்த்தவர்.
நாங்கள் செய்த தவறெல்லாம் இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவந்து வலையுலகை நிம்மதி அடைய செய்யவைக்க முயன்றதே. எங்களுக்கு இதனால் எவ்வளவு மன உளைச்சல் என்பதை நீங்கள் அறிவீர்.
//லக்கியை காப்பாற்றவே இப்படி செய்கிறேன் என்று சில இடங்களில் பார்த்தேன். அவரை யாரும் காப்பாற்ற தேவை இல்லை என்பதே எனது வாதம். ஆரம்பத்தில் போலியை அவன் பாணியிலேயே எதிர்த்தவர்.//
சிறு சந்தேகம்!
சல்மா அயூப் எந்த பாணியை சேர்ந்தது!
அதற்கு வேறு எதாவது காப்பி ரைட்ஸ் இருக்கா!?
\\போலிப்பதிவின் பாஸ்வேர்டை ப்ரூட்போர்ஸ் மூலம் நான் கண்டுபிடிக்க முயன்றது முத்து தமிழினி உட்பட அனைவருக்கும் தெரியும்...விசாரித்துக்கொள்ளலாம்...\\\
this is my comment in the below post Feb 2008.
http://dondu.blogspot.com/2008/02/blog-post_27.html
Please find my second comment in this.
//பதிவுக்கு நன்றி. ஆனால் உங்களிடமே இந்த தகவல்களை பெற்றுவிட்டதைத்தான் அப்படி சொன்னேன். என்னுடைய தகவல்களை நீங்கள் மூர்த்தியிடம் சொன்னதாக எங்காவது உள்ளதா//?
அப்படியா, இதற்கு என்ன அர்த்தம்?
//18. போலி குழுவாக அல்லது அவ்வாறு சொல்லிக்கொண்டு இயங்கிய காலத்தில் ஏதேனும் புதிய தகவல்கள் அவனுக்கு கிடைத்தால் 'எங்களது பெங்களூர் / சென்னை கிளை திரட்டிய தகவல்கள்' என்று குறிப்பிடுவான். அது பற்றி உங்களுக்கு தெரியுமா? சென்னை கிளை என்றால் யார்?
எனக்கு தெரியாது. ஒரு வேளை டோண்டு சாரை கேளுங்களேன்?//
அதற்கு பிறகு நீங்கள் என்னைப் பற்றி சொன்னவை இன்னொசெண்ட் ரிமார்க் அல்ல.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//முத்து தமிழினியிடம் ஒருமுறை இந்த ப்ரூட் போர்ஸ் முறையில் முயன்றதை சொன்னேன்//.
ஆனால் என்னிடம் சொல்லவில்லை என்றுதான் நான் கூறுகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
மதிபாலாவின் அம்மா, அக்கா, தங்கை, மனைவி, குழந்தை ஆகியொர் குறித்து படம் போட்டு பாகம் குறித்து அவன் எழுதியிருந்தாலும் இப்படி 'ஈகோ' யுத்தம் என்று பேசுவாரா என்று கேட்க வேண்டும்.//
கேளுங்களேன்...யார் வேண்டாம் என்று சொன்னது. ? இதே கேள்வியைத்தான் இன்னொரு அனானி , நீங்களாகவும் இருக்கலாம் உண்மைத் தமிழன் பதிவில் கேட்டது.அதற்கு அப்போதே பதில் சொல்லியிருக்கேன்...தேடிப்படித்துக்கொள்ளும். முடியாவிட்டால் இன்னொரு பின்னூட்டம் போடும்..அசலாக....
...போலி டோண்டுவைப் பற்றீ யாரோ ஒரு போலி முகமூடி போட்டுக்கொண்டு விமர்சிக்கிறது.
என்ன கொடுமை சார் இது?
இதப்பத்தியெல்லாம் கேள்வியே கேட்க நாதியில்லையா?
முதலில் அடுத்தவரை விமர்சிக்கும் போது அதற்கான அடிப்படைத் தகுதியாவது ( அட்லீஸ்ட் உங்க பேர் , அடையாளம் ) இருக்கான்னு பாத்துக்கிடுங்க....அதுக்கப்புறம் அடுத்தவன பத்திப் பேசலாம்..!
***
முதல் வரியில் ஜல்லியடிப்பது என்றால் உண்மை பேசுவதா என்று கேட்டு விட்டு (ஜோக் அடிக்கிறாராம்!) //
அது ஜோக்கா ? ரைட்டு அதப்படிச்சி நானும் சிரிச்சிக்கிறேன்.
***
அடுத்த வரியில் 'சாதிக் கொடுமைக்கு பார்ப்பனர்கள் காரணம் அல்ல' என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறாரே என்று முழித்தேன். //
//சாதிக்கொடுமைக்கு அல்ல சாதீய அடிப்படைக்கு காரணம் பார்ப்பனர்கள். அவர்கள்தானே அதற்குப் பொறுப்பேற்க வேண்டும். //
முழுசா படிக்கணும்...பாதிய படிச்சிகிட்டு அத வச்சி பேசக்கூடாது...பொறுப்பேற்பது என்றால் உங்க பாஷையில் என்னவாம்.?.இன்னும் தெளிவாக வேண்டுமானால் இப்படி மாற்றிப்படித்துக்கொள்ளுங்கள்.
//சாதிக்கொடுமைக்கு மட்டும் அல்ல சாதீய அடிப்படைக்கே காரணம் பார்ப்பனர்கள். அவர்கள்தானே அதற்குப் பொறுப்பேற்க வேண்டும்//
ஹிஹிஹிஹி..இப்ப சரியா?
**
அடுத்த டோண்டுவின் பின்னூட்டத்திலேயே அவர் எப்படிப்பட்டவர் என்று பதில் கிடைத்தது./
கேள்வி கேட்ட எனக்கே கிடைக்காத பதில் உங்களுக்குக் கிடைத்ததில் எனக்கு அளவில்லா சந்தோஷம்.
அடுத்தமுறை முக்காட்டை எடுத்துவிட்டு வரவும் ப்ளீஷ். இல்லாவிட்டால் நோ பதில்.
ஆக சாதிக்கொடுமைக்கு காரணம் அல்ல என்பதை ஒத்துக் கொள்கிறீர்கள். மற்றப்படி அடிப்படைக்கும் அவர்களே காரணம் என்பது மற்ற சாதிக்காரர்கள் மாங்காய் மடையன்களாக இருந்திருந்தால்தான் சாத்தியம்.//
அன்பு அய்யா டோண்டு அவர்களுக்கு...பின்னே அனானி ஒருவர் இதைச் சுட்டியிருந்தார் ..அவருக்கு அளித்த விளக்கம் இதற்கும் பொருந்தும் என்றே நினைக்கிறேன். தேவைப்பட்டால் இன்னும் பேசுவோம்.
***
உங்களுக்கு வேண்டிய பதிலை ஜெயமோகன் வேண மட்டும் கூறிவிட்டார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்//
அப்ப சரி , அதெல்லாம் பேசி முடிச்சி சாதிக்கொடுமைக்கு ஒரு தீர்வு கண்ட பிறகுதான் இந்த மூர்த்தி விவாகரத்தில் ஒரு தீர்வு கண்டுவிடத் துடிக்கிறீர்கள் என்ற பாரீய உண்மையை வெளிப்படுத்தியதற்கு நன்றி.
தோழமையுடன்
மதிபாலா
@மதிபாலா (போலியாக அவர் பெயரில் வந்தவர் என நினைக்கிறேன்)
நீங்கள் கூறுவது சரிதான், ஆனால் நீங்களே இப்போது முக்காடு போட்டுத்தான் வந்துள்ளீர்கள். ஆகவே நீங்கள் போலி மதிபாலாவாக இருக்கலாம் என்பது ஊகம்.
அது இருக்கட்டும் அப்படிப் பார்த்தால் பதிவர் மதிபாலாவும் ப்ரொஃபைலை மறைத்துத்தானே வைத்துள்ளார்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
@மதிபாலா (போலியாக அவர் பெயரில் வந்தவர் என நினைக்கிறேன்)
நீங்கள் கூறுவது சரிதான், ஆனால் நீங்களே இப்போது முக்காடு போட்டுத்தான் வந்துள்ளீர்கள். ஆகவே நீங்கள் போலி மதிபாலாவாக இருக்கலாம் என்பது ஊகம்.
//
இல்லை...அவ்வப்போது எனது இன்னொரு அபிசியல் கூகுள் அக்கவுண்ட்டை திறந்து வைத்திருப்பதால் எனது பெயரை மட்டும் உபயோகப்படுத்தி பின்னூட்டம் போடுவது உண்டு. எனது புரபைலை நான் மறைத்து வைத்திருப்பது எனது சொந்த சவுகரியத்திற்காக. மற்றபடி எனது வலைப்பூ www.mathibala.com என்பது உங்களுக்கு தெரியும் என்றே நினைக்கிறேன்.
மேற்கண்ட பின்னூட்டம் நானே போட்டது என்பதை உறுதி செய்கிறேன்..
அதற்காக சமயங்களீல் என் பெயரை பயன்படுத்தி அனானிகள் போடும் ஆட்டங்களுக்கு நான் பொறுப்பேற்கவியலாது என்பதையும் இங்கே தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.
:)
என் பெயரை மட்டுமே பயன்படுத்தி நான் போட்ட பின்னூட்டம் தவறான அனுமானங்களைத் தந்ததற்காக எனது தாழ்மையான வருத்தங்கள் அய்யா.
கடைசியில் செந்தழல் ரவியை கைவிட்டு வீட்டுட்டீங்க போல இருக்கே டோண்டு ராகவன். சரி காரியம் முடிந்துவிட்டது இல்லையா? அப்புறம் எதுக்கு?
இந்த ரவுண்டில் கோவி.கண்ணன் உங்க இரண்டு பேரையும் போட்டு வாங்கு வாங்குன்னு வாங்கி வெற்றி பெறுகிறார்.
அடுத்த ரவுண்டு பார்ப்போம்.
@வேடிக்கை கந்தசாமி
//இந்த ரவுண்டில் கோவி.கண்ணன் உங்க இரண்டு பேரையும் போட்டு வாங்கு வாங்குன்னு வாங்கி வெற்றி பெறுகிறார்.//
கண்டிப்பாக இல்லை. போலி டோண்டு மூர்த்தியை தான் தாக்காததற்கு காரணமே அவன் தன் மேலும் போலிப்பதிவு போடுவான் என்னும் பயமே காரணம் என்பதை அவரது சொந்தப்பதிவிலேயே (தற்போதைக்கு மறைத்து வைத்துள்ளார், ஆனால் என்னிடம் காப்பி இருக்கிறது) ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துல்ளார். அவர் ஏற்கனவேயே பூட்ட கேஸ், அவரை தாக்கி எனக்கு ஒன்றும் புதிதாக ஆகவேண்டியதில்லை.
செந்தழல் ரவி தேவையில்லாமல் என்னைச் சீண்டினால் நான் வேடிக்கை பார்த்து நிற்க என்னை என்ன விந்தை மனிதன் என நினைத்தீரோ?
அன்புடன்,
டோண்டு ராகவன்
செந்தழல் ரவி தேவையில்லாமல் என்னைச் சீண்டினால் நான் வேடிக்கை பார்த்து நிற்க என்னை என்ன விந்தை மனிதன் என நினைத்தீரோ?///
நான் கிண்டலுக்காகத்தான் அப்படி சொன்னேன். புண்படுத்தியிருந்தால் மன்னிக்க. உங்களை சீண்டும் எண்ணமும் இல்லை, தேவையும் இல்லை. நன்றி.
போலி டோண்டு சமாச்சாரத்தில் பலரும் ஒதுங்கி நிற்க இதுதான் காரணம் என்று உங்களுக்கு இப்போதுதான் தெரியுமா?
எல்லாரும் நிறைய வேலை இருக்கு அய்யா.உங்களை மாதிரியா?
எல்லாரும் உங்களை மாதிரி அவனால் அசிங்கப்பட்டால் உங்க அசிங்கம் தெரியாது என்பதுதான் உங்க யுத்த தந்திரம் என்பது கோவியாருக்கு தெரிந்து விட்டதா?
/அதற்காக சமயங்களீல் என் பெயரை பயன்படுத்தி அனானிகள் போடும் ஆட்டங்களுக்கு நான் பொறுப்பேற்கவியலாது என்பதையும் இங்கே தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.
:)//
அதற்காகத்தான் கூறிவருகிறேன், பிளாக்கராக லாக் இன் செய்து வரவேண்டுமென.
இரு கூகள் அக்கௌண்ட் பிரச்சினை ஒன்றுமே இல்லை. எக்ஸ்ப்ளோரரில் ஒரு கணக்கு நெருப்பு நரியில் ஒரு கணக்கு என வைத்துக் கொள்ளலாமே.
அன்புடன்,
டோண்டு ராகவப்
// போலி டோண்டு மூர்த்தியை தான் தாக்காததற்கு காரணமே அவன் தன் மேலும் போலிப்பதிவு போடுவான் என்னும் பயமே காரணம் என்பதை அவரது சொந்தப்பதிவிலேயே (தற்போதைக்கு மறைத்து வைத்துள்ளார்,//
டோண்டு இராகவன் சார் அவர்களே,
நான் பயம் என்று எங்காவது சொல்லி இருக்கிறேனா ?
தேவையற்று மூக்கை நுழைக்க விரும்பவில்லை என்றே சொல்லி இருக்கிறேன். வேலியில் போகிற ஓணானை எடுத்து என்னுடைய வேட்டியில் விட்டுக்க வேண்டும் என்று எவரும் விரும்பினால் எனக்கு அது தேவையும் இல்லை.
பயமெல்லாம் அல்லக்கைகளுக்குத்தான் இருக்கும். எனக்குத் தேவையற்றது.
பை த வே,
ஒருபக்கம் பழகினேன் பழகினேன் என்றெல்லாம் கூறிக் கொண்டு,
போலிஸ், கம்பி, லாக்கப், டவுசர் கழட்டுதல், செருப்பால் அடிப்பேன் என்றெல்லாம் என்னை அவதூறு ஆறுமுகம் மிரட்டிச் சீண்டும் போது எனக்கு ஆதரவாக ஓடிவாருங்கள் என்று நான் யாரையும் அழைக்கவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
//தற்போதைக்கு மறைத்து வைத்துள்ளார், ஆனால் என்னிடம் காப்பி இருக்கிறது//
மகரநெடுங்குலைக்காதனுக்கு எதிரில் வைத்து பூசை போடவும்.
ஜயராமன் சாரைக் கேட்டதாகச் சொல்லவும். அவரைப் போலவே பின்னூட்டும் மற்றொருவராக,
உங்கப் பதிவுக்கு வரும் 'பாலா' வைக் காணும், அவரையும் கேட்டதாகச் சொல்லவும்.
இந்தவாரம் நல்லாப் போக வாழ்த்துகள் டோண்டு சார்.
@கோவி கண்ணன்
//மூர்த்தியின் போலி டோண்டு நிழல் நடவடிக்கைப் பற்றி எனக்கு தெரியாது, என் மீது தனிப்பட்ட மதிப்பு வைத்திருந்ததால் நான் கண்டிப்பேன், காரித்துப்புவேன் என்பதால் என்னிடம் சொல்லாமல் மறைத்திருக்கலாம். எனக்கு ஆதாரபூர்வமாக அப்போதே தெரிந்திருந்தால் நான் கண்டித்திருப்பேன்//.
பிறகுதான் தெரிந்ததல்லவா, ஒரு ஐயத்துக்கும் இடமின்றி. அப்போதும் கண்டித்ததாகத் தெரியவில்லையே.
//ஏனென்றால் இவர்களுடன் சேர்ந்து மூர்த்தி தான் போலி என்று நான் எழுத வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள். எனக்கு அது தேவை அற்ற வேலை என்று விட்டுவிட்டேன். அவனவன் பாதிகப்படும் போது தானே போலியை எதிர்த்தார்கள், அதில் நான் மட்டும் பாதிக்கப்படும் முன் போலி மூர்த்தியை எதிர்த்து அவனால் எனக்கும் போலி தளம் திறக்கப்பட்ட வேண்டும் என்று விரும்புகிறார் என்பதே அவதூறு ஆறுமுகத்தின் நோக்கமாக இருந்தது என்பதால் நான் ஒத்துழைக்கவில்லை.//
ஆக, பயம் இல்லை என்கிறீர்கள். பயம் கலந்த மரியாதை என வைத்துக் கொள்ளலாமா?
//வயது வித்யாசம் பார்காமல் பழகினாலும், இது போன்ற அவதூறு ஆசாமிகளிடம் பழகி என்னைத் நானே தரக்குறைவு செய்து கொண்டேன் என்றே கருதவேண்டி இருக்கிறது//.
ரவியுடன் பழகியது பற்றி மட்டும் வருத்தம் தெரிவிக்கிறீர்கள், ஆனால் போலி டோண்டு என்ற ஆசாமியுடன் வைத்திருக்கும் நட்புக்கு ஒரு வருத்தமும் இருந்ததாகத் தெரியவில்லை. இன்னும் நட்போடு இருக்கிறீர்கள் போலும்.
//ஜயராமன் சாரைக் கேட்டதாகச் சொல்லவும். அவரைப் போலவே பின்னூட்டும் மற்றொருவராக, உங்கப் பதிவுக்கு வரும் 'பாலா' வைக் காணும், அவரையும் கேட்டதாகச் சொல்லவும்//.
பல முறை ஒரு ஆதாரமும் இல்லாது ஜயராமனே பாலா எனப் பொருள்படும்படி எழுதிய உங்களால் கடைசி வரை மூர்த்திக்கு சந்தேகத்தின் பலனை அளித்து வந்தது அவருடன் வைத்திருந்த நட்பா, அல்லது வேலியில் போகும் ஓணானை மடியில் எதற்கு விட்டுவிட்டுக் கொள்ள வேண்டும் என்ற தயக்கமா? ரொம்பவும் அடக்கி வாசிக்கிறீர்கள் போல?
அன்புடன்,
டோண்டு ராகவன்
ரவி,
////லக்கியை காப்பாற்றவே இப்படி செய்கிறேன் என்று சில இடங்களில் பார்த்தேன். அவரை யாரும் காப்பாற்ற தேவை இல்லை என்பதே எனது வாதம். ஆரம்பத்தில் போலியை அவன் பாணியிலேயே எதிர்த்தவர்.////
இப்படி திரும்ப திரும்ப சொல்றதாலேயே நம்பிக்கை தளருது.
குறிப்பா, அந்த நாட்களில் கேட்ட விவரங்களும், இதுவும், முன்னுக்கு பின் முரணாவே இருக்கு.
செல்லா சொல்ற மாதிரி , தேக்கம் ஜாஸ்தியாகி, கப்பு தாங்க முடியல்ல.
//ஆக, பயம் இல்லை என்கிறீர்கள். பயம் கலந்த மரியாதை என வைத்துக் கொள்ளலாமா?//
டோண்டு சார், நீங்கள் எதை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள் சார். உங்கள் ஊகங்களுக்கு நீங்கள் கொடுக்காத உரிமையா ? அதுல நான் தலையிட முடியுமா ?
கோவி.கண்ணன் தான் கோகுல கண்ணன் என்று நீங்கள் நினைத்தாலும் எனக்கு ஆட்சேபம் இல்லை சார்.
//ரவியுடன் பழகியது பற்றி மட்டும் வருத்தம் தெரிவிக்கிறீர்கள், ஆனால் போலி டோண்டு என்ற ஆசாமியுடன் வைத்திருக்கும் நட்புக்கு ஒரு வருத்தமும் இருந்ததாகத் தெரியவில்லை. இன்னும் நட்போடு இருக்கிறீர்கள் போலும்.
//
யாரோடு பழகியதில் எனக்கு வருத்தம் ஏற்பட்டது என்று சொல்வது என் உரிமை, யார் மீது நான் வருத்தம் கொள்ள வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்து என்னை வற்புறுத்த முடியாது.
உங்கள் தலைவலிக்கு நீங்கள் வருத்தப்படுவிங்க, என் தலைவலிக்கு நான் வருத்தப்படுவேன். நீங்கள் ஏன் உங்கள் தலைவலிக்கு வருத்தப்படுறிங்கன்னு நான் கேட்கலையே ?
போலி டோண்டு கூடத்தான் நான் உங்களோடு நட்பாக இருப்பதில் வருத்தம் கொள்வான் அதற்காக டோண்டு சார் என்னைக் கட்டிப்பிடித்து வரவேற்றார், நானும் அவரும் நண்பர்கள் என்று பொதுவில் சொல்வதை நான் எங்காவது தவிர்த்திருக்கிறேனா ?
//பல முறை ஒரு ஆதாரமும் இல்லாது ஜயராமனே பாலா எனப் பொருள்படும்படி எழுதிய உங்களால் கடைசி வரை //
அதை பாலாவோ (அ) (அலைய்ஸ் ?) ஜயராமனோ தான் சொல்லனும், உங்களுக்கு பவர் ஆப் அட்டார்னி கொடுத்துச் சொல்லச் சொன்னார்களா ?
நான் எங்கேயாவது உங்களையோ, பிறரையோ 'மூர்த்தியை போலி டோண்டு என்று சொல்லாதீர்கள்' என்று சொல்லி இருக்கிறேனா ?
எனக்கு போலி டோண்டுவைக் காப்பாற்றும் தேவை இல்லை, உங்களுக்கு பாலாவை சாரி ஜயராமனைக் காப்பாற்றும் தேவை என்ன என்று எனக்குத் தெரியாது, அப்படி இல்லாமலும் நண்பர் என்பதற்காக நீங்கள் தற்காக்கலாம் அது உங்கள் உரிமை என்பதை ஒப்புக் கொள்கிறேன்
:)
//அல்லது வேலியில் போகும் ஓணானை மடியில் எதற்கு விட்டுவிட்டுக் கொள்ள வேண்டும் என்ற தயக்கமா? ரொம்பவும் அடக்கி வாசிக்கிறீர்கள் போல?//
சல்மாவை நான் ஓணானாக அல்லது ஓணான் அளவுக்கு நினைக்கவில்லை என்பதை இங்கே தாழ்மையுடன் குறிப்பிட்டுக் கொள்கிறேன். அதனால் துணிந்து சொல்கிறேன்.
(சல்மா என்று நான் குறிப்பிட்டதை நீங்கள் ஜயராமனாகக் கொண்டால் நான் பொறுப்பு அல்ல)
//பிறகுதான் தெரிந்ததல்லவா, ஒரு ஐயத்துக்கும் இடமின்றி. அப்போதும் கண்டித்ததாகத் தெரியவில்லையே.//
நான் 2007ல் ஒரு பதிவில் போலி என்பவன் எவனாக இருந்தாலும் கண்டிக்கப்படவேண்டியவன் என்று சொல்லிவிட்டேன். அதுக்கு ஏன் போலி டோண்டு கோபம் கொள்ளவில்லை என்பதை நீங்கள் தான் போலி டோண்டுவிடம் (ஆள் அனுப்பியாவது) கேட்கவேண்டும்
//சல்மாவை நான் ஓணானாக அல்லது ஓணான் அளவுக்கு நினைக்கவில்லை என்பதை இங்கே தாழ்மையுடன் குறிப்பிட்டுக் கொள்கிறேன்.//
சல்மாவை நீங்கள் ஓணானாக நினைத்தீர்கள் என்று எங்கு சொன்னேன்? சரியாகப் பாருங்கள், நான் சொன்னது மூர்த்தியை, அவனுக்கு bitter end வரை சந்தேகத்தின் பலனைக் கொடுத்தது பற்றித்தான் நான் குறிப்பிட்டேன். ரொம்பவும் ஜாக்கிரதையாக தவறாக் புரிந்து கொண்டு இங்கும் போலியை காப்பாற்றுகிறீர்கள். நல்ல நண்பராக மூர்த்திக்கு நீங்கள் கிடைத்தது அவன் செய்த பாக்கியம்.
பிறகு ஏன் உங்களுக்கு முன்னமேயே தெரிந்திருந்தால் கண்டித்திருந்திருப்பீர்கள் எனக் கூற வேண்டும்? அதானால்தான் விஷயம் தெரிந்த பிறகு ஏன் கண்டிக்கவில்லை என்றுதான் கேள்வி வரும். அது உங்கள் இஷ்டம் எனக் கூறிவிட்டீர்கள், வாழ்க நலமுடன்.
//அதுக்கு ஏன் போலி டோண்டு கோபம் கொள்ளவில்லை என்பதை நீங்கள் தான் போலி டோண்டுவிடம் (ஆள் அனுப்பியாவது) கேட்கவேண்டும்//
அவசியமே இல்லை. போலியும் கருப்புப் பதிவில் உங்களை மாத்து மாத்து என மாத்தியதற்கு நீங்கள் அழுவாச்சிப் பதிவும் போட்டுள்ளீர்கள், பார்க்க: http://govikannan.blogspot.com/2008/02/blog-post_23.html
என்ன, அந்தச் கருப்பு பதிவு இப்போது இல்லை. ஆனால் குழலியின் இந்தப் பதிவு இன்னும் இருக்கிறது, பார்க்க: http://kuzhali.blogspot.com/2008/02/blog-post_25.html
இவ்வளவு மாத்து வாங்கியும் குழலியின் மேலே சொன்ன உங்கள் எதிர்வினைப்பதிவில் மூர்த்திக்கு கடைசிவரை சப்பைக்கட்டு கட்டியுள்ளீர்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//இங்கும் போலியை காப்பாற்றுகிறீர்கள். நல்ல நண்பராக மூர்த்திக்கு நீங்கள் கிடைத்தது அவன் செய்த பாக்கியம். //
இதை தான் அவரும் சொல்கிறார்!
ஆனால் போலிக்கு பதிலாக வேறு பெயர் பயன்படுத்தி இருக்கிறார்!
@வால்பையன்
அந்த விஷயம் பல சிக்கல்களை உடையது, வெறும் சேற்றை இரைத்து விட்டு போயுள்ளனர். நேரில் பார்க்கும்போது உங்களுக்கும் எனக்கும் நேரம் இருந்தால் என்னால் விளக்க முடியும்.
அது சம்பந்தமாக எனது பதிவு அப்படியே உள்ளது. இதில் ஒளிவு மறைவு ஏதும் இல்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//அது உங்கள் இஷ்டம் எனக் கூறிவிட்டீர்கள், வாழ்க நலமுடன்.
//
மோடியை நீங்கள் ஏன் கண்டிக்கவில்லை என்று கூறினால் மோடியால் உங்களுக்கு பிரச்சனை இல்லை, எனவே கண்டிக்காமல் இருப்பது என் இஷ்டம் என்று சொல்லுவீர்களா ? சொல்ல மாட்டீர்களா ?
//சல்மாவை நீங்கள் ஓணானாக நினைத்தீர்கள் என்று எங்கு சொன்னேன்? சரியாகப் பாருங்கள், நான் சொன்னது மூர்த்தியை, அவனுக்கு bitter end வரை சந்தேகத்தின் பலனைக் கொடுத்தது பற்றித்தான் நான் குறிப்பிட்டேன். //
நீங்க தானே சார் மூர்த்தியும் சல்மாவும் ஒன்று என்று சொல்லுகிறீர்கள். நான் சொல்லவில்லையே.
//கருப்புப் பதிவில் உங்களை மாத்து மாத்து என மாத்தியதற்கு நீங்கள் அழுவாச்சிப் பதிவும் போட்டுள்ளீர்கள், பார்க்க: //
உங்களுக்கு விளம்பரம் கிடைப்பது போல் அதை எனக்கான விளம்பரமாகத்தான் எடுத்துக் கொண்டேன் என்பதை இங்கே குறிப்பிட்டுக் கொள்கிறேன். அதே போன்று உண்மை இல்லாத ஒன்றுக்கு, அது திரும்ப திரும்ப கூறப்படாதவரையில் நான் முக்கியதுவம் கொடுப்பதும் இல்லை
//dondu(#11168674346665545885) said...
@வால்பையன்
அந்த விஷயம் பல சிக்கல்களை உடையது, வெறும் சேற்றை இரைத்து விட்டு போயுள்ளனர். நேரில் பார்க்கும்போது உங்களுக்கும் எனக்கும் நேரம் இருந்தால் என்னால் விளக்க முடியும்.
//
அவரு என்னிக்கோ ஒரு நாள் சென்னை வரும் போது அவருக்கு இந்த தண்டனை தேவையா ? வால்ஸ் காதுக்கு வைக்க பஞ்சும், மீறி இரத்தம் வடிந்தால் கொஞ்சம் டிங்க்ஜரும் கொண்டு போங்க
//அது சம்பந்தமாக எனது பதிவு அப்படியே உள்ளது. இதில் ஒளிவு மறைவு ஏதும் இல்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்//
நீங்க பெரியமனுசன் சார், இல்லை என்றால் நீங்கள் தான் முரளி மனோகர் என்பதை மறைக்கும் உரிமை உங்களுக்கே உங்களுக்கு இருந்தும் அதை மறைக்காமல் பொதுவில் ஒப்புக் கொண்டீர்களே.
//அந்தச் கருப்பு பதிவு இப்போது இல்லை. //
அந்தப் பதிவு உங்கள் சேமிப்பிலும் இல்லையா ? இப்ப நான் அந்தத் தகவல்களை எப்படிப் படிப்பது ?
என்ன எழுதி இருந்தது என்பதை உங்கள் நினைவில் இருந்து இங்கு எழுத முடியுமா ?
//நீங்க தானே சார் மூர்த்தியும் சல்மாவும் ஒன்று என்று சொல்லுகிறீர்கள். நான் சொல்லவில்லையே.//
ஆகவேதான் நீங்கள் சல்மா என்றதும் இன்னொருவரை குறிப்பிடுகிறீர்கள் என நினைத்தேன். ஆனால் உங்களையறியாமல் சல்மாதான் மூர்த்தி என இம்ப்ளை செய்ததற்கு நன்றி.
//மோடியை நீங்கள் ஏன் கண்டிக்கவில்லை என்று கூறினால்..//
மோடி என்னும் மாமனிதரை இங்கு ஏன் இழுக்க வேண்டும்? அவரைப் போன்ற ஊழல் புகார் கூறவியலாத முதலமைச்சர் தமிழகத்துக்கு கிடைத்தால் நன்றாக இருக்கும்.
//நீங்கள் தான் முரளி மனோகர் என்பதை மறைக்கும் உரிமை உங்களுக்கே உங்களுக்கு இருந்தும்//
அது ஒரு சாதாரண புனைப்பெயர். அதையே எடுத்துக் கொண்டு எகிறி குதித்த போலி டோண்டு மூர்த்தியின் அல்லக்கை மகேந்திரனுக்கு கொடுத்த பதில்களை படித்துக் கொள்ளுங்கள். அவைதான் உங்களுக்குமான பதில்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
////நீங்க தானே சார் மூர்த்தியும் சல்மாவும் ஒன்று என்று சொல்லுகிறீர்கள். நான் சொல்லவில்லையே.//
ஆகவேதான் நீங்கள் சல்மா என்றதும் இன்னொருவரை குறிப்பிடுகிறீர்கள் என நினைத்தேன். ஆனால் உங்களையறியாமல் சல்மாதான் மூர்த்தி என இம்ப்ளை செய்ததற்கு நன்றி.
//
'நான் சொல்லவில்லை' என்று சொல்லி இருக்கிறேன் அப்பறம் எப்படி இம்ப்ளை செய்வதாக எடுத்துக் கொண்டீர்கள் ?
முடியல
//அது ஒரு சாதாரண புனைப்பெயர். அதையே எடுத்துக் கொண்டு எகிறி குதித்த போலி டோண்டு மூர்த்தியின் அல்லக்கை மகேந்திரனுக்கு கொடுத்த பதில்களை படித்துக் கொள்ளுங்கள். அவைதான் உங்களுக்குமான பதில்.
அன்புடன்,
டோண்டு ராகவன்//
மகேந்திரன் கேட்டால் மகேந்திரனுக்கு சொல்லுங்க அதை ஏன் எனக்கு சொல்றிங்க, நீங்கதான் முரளி மனோகர் என்பது உங்கள் புனைப்பெயர்களில் ஒன்று என்பதில் நான் தெளிவாகத்தானே இருக்கிறேன்.
எனவே எனக்கு நீங்கள் மகேந்திரனுக்கு அளித்த அந்த விளக்கம் தேவை இல்லை என்பது என் கருத்து. அவசியம் படித்தே ஆகவேண்டும் என்று விரும்பினால் சொல்லுங்கள் படிக்கிறேன்.
நட்புக்காக படிக்கிறேன்.
பை த வே நீங்கள் தான் முரளி மனோகர் என்பது பதிவுலகம் அறியும் முன்பே எனக்கு இன்னொருவர் மூலமாகத் தெரியும். அந்த இன்னொருவர் மூர்த்தி அல்ல, மகேந்திரனும் அல்ல என்பதை தெரிவித்துக் கொள்வதுடன், அந்த இன்னொருவர் யார் என்பதை தங்கள் ஊகத்துக்கே விட்டுவிடுகிறேன்.
//முரளி மனோகர் என்பது உங்கள் புனைப்பெயர்களில் ஒன்று என்பதில் நான் தெளிவாகத்தானே இருக்கிறேன்.//
அப்படி இருக்கும்போது நான் ஏன் அதை மறுக்க வேண்டும்?
//எனக்கு இன்னொருவர் மூலமாகத் தெரியும். அந்த இன்னொருவர் மூர்த்தி அல்ல, மகேந்திரனும் அல்ல என்பதை தெரிவித்துக் கொள்வதுடன்..//
தெரியும். எதேச்சையாக எனது பழைய பதிவுகளில் ஒன்றின் பின்னூட்டத்தில் ஓரிரு தினங்கள் முன்பு பார்த்தேன். ஒரிஜினலாக அது வந்த சமயம் பார்த்த போது அது என் கவனத்திலிருந்து தப்பியிருக்கிறது. ஆனால் இப்போது ரெட்ரொஸ்பெக்டிவாக பார்க்கும் போது பளிச்சென தெரிந்தது.
அதனால் என்ன, அது இப்போது முக்கியமில்லாததாகி விட்டது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//அதையே எடுத்துக் கொண்டு எகிறி குதித்த போலி டோண்டு மூர்த்தியின் அல்லக்கை மகேந்திரனுக்கு கொடுத்த பதில்களை படித்துக் கொள்ளுங்கள். அவைதான் உங்களுக்குமான பதில்.//
மன்னிக்கவும், நான் குறிப்பிட நினைத்தது மகேந்திரன் இல்லை. முத்துக்குமரன். அதாவது என்னால் இந்த விஷயத்தில் பதில் கொடுக்கப்பட்ட நபரை குறிக்கிறேன். மற்றப்படி அல்லக்கை என்பது இருவருக்குமே பொருந்தும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் நீர்த்து போய்விட்டது.
நல்ல பஞ்சாமிர்தத்தை மடிபாக்கத்தில் இருந்து எதிர்பார்க்கிறேன்.
//அப்படி இருக்கும்போது நான் ஏன் அதை மறுக்க வேண்டும்?
அதனால் என்ன, அது இப்போது முக்கியமில்லாததாகி விட்டது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//
நீங்கள் மறுக்கத் தேவை இல்லாத, முக்கியமில்லாத இன்னொரு பின்னூட்டம் குறித்தும் உங்களிடம் கேட்க நினைத்தேன் டோண்டு சார்,
இந்தப் பதிவில் கண்ணன் said... என்பதாக தொடங்கும் அதர் ஆப்சன் பின்னூட்டம்
அன்புடன்
டோண்டு ராகவன்
என்று முடிவது கூட நீங்களாகப் போட்டுக் கொண்டது தான் என்று உரையாடியில் நண்பர் ஒருவர் சொன்னார், அதற்கும் கீழே காண்டு said... என்ற பின்னூட்டம் கூட நீங்களே போட்டு இருக்கலாம் என்று நான் சொன்னேன்.
இதில் நண்பர் சொன்னது சரியா ? அல்லது நான் சொன்னது சரியா ?
இரண்டுமே சரியா ? அல்லது இரண்டுமே தவறா ?
- இதையும் ஒரு முக்கியமற்ற பின்னூட்டமாக நினைத்தாலும் பரவாயில்லை, பதிலை மட்டும் சொன்னால் மட்டும் போதும். (பதில் சொல்வதற்கு) மறுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்
@கோவி கண்ணன்
இல்லை அப்பின்னூட்டங்களை நான் போடவில்லை.
டோண்டு பதில்களில் வரும் கேள்விகள் விஷயத்தில் நான் ஒன்றை பலமுறை தெளிவுபடுத்தி விட்டேன். ஒரு பதிவுக்கான கேள்விகள் இல்லையென்றால் அப்பதிவு வராது.
அதே மாதிரி ஒரு முறை பதிவே வரவில்லை. சில சமயங்களில் நான்கு அல்லது ஐந்து கேள்விகளே வந்தன. ஒரு முறை நீங்கள் கூட அது குறித்து பின்னூட்டம் இட்டிருந்தீர்கள் என நினைக்கிறேன். தேடினால் கிடைக்கும், but not worth it.
அவ்வளவுதான் விஷயம். கண்ணன் என்பவர் ஒவ்வொரு பதிவுக்கும் கேள்வி கேட்கிறார். அவர் நானல்ல. அதே போல நக்கீரன் பாண்டியன் என்பவரும் வருகிறார்.
மற்றப்படி காண்டு என்பவர் சொன்னதை நான் கூற வேண்டுமானால் டோண்டுவாகவே வந்திருப்பேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பின் குறிப்பு: பதிவர் சந்திப்புகளில் உங்களை கட்டித் தழுவி வரவேற்றதை நீங்களும் குறிப்பிட்டுள்ளீர்கள். அது நான் சின்சியராக செய்தது. வேறு யாருக்கும் செய்ததில்லை. என்னமோ தோன்றியது, செய்தேன். நேரில் பார்க்கும்போது உங்கள் மேல் கோபப்பட இயலவில்லை. அடுத்த முறை பார்க்கும்போதும் அவ்வாறுதான் செய்வேன்.
// கண்ணன் என்பவர் ஒவ்வொரு பதிவுக்கும் கேள்வி கேட்கிறார். அவர் நானல்ல.//
கண்ணன் என்பவர் பின்னூட்டமிட்டு இருக்கிறார் சரி தான், ஆனால் அதில்
ஏன்
அன்புடன்
டோண்டு இராகவன்
என்று உங்கள் பெயரை எழுத வேண்டும்,
நீங்களும் அதற்கு ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. அதனால் தான் சந்தேகம் ஏற்பட்டது,
மீண்டும் ஒரு முறை பாருங்கள்
கண்ணன் என்பர் கீழே உங்கள் பெயரைப் பயன்படுத்தி இருக்கிறார்.
நான் தவறாக எண்ணவில்லை, உங்களுக்கு ஒப்புதல் இருந்ததா என்பதற்காகக் கேட்டேன்
// வேறு யாருக்கும் செய்ததில்லை. என்னமோ தோன்றியது, செய்தேன். //
மிக்க நன்றி. கண்டிப்பாக மகாபாரத போர்முடிவில் பீமனை அணைத்த திருதராட்சிசன் போல் நினைத்துக் கொண்டு செய்தி இருக்க மாட்டீர்கள் என்று நன்கு தெரியும். அப்படி நினைத்துக் கொண்டு செய்வதற்கான எந்தக் காரணமும் இல்லை.
(அந்தக் காட்சியில் நகர்த்தி வைக்கப்பட்ட பொம்மையை அணைத்து முடிந்ததும் பொம்மை உடைந்துவிடும், 'அன்பு பீமா உனக்கும் ஒன்றும் ஆகிவிடவில்லையே' என்று திருதராட்சிசன் பதறுவார் பாருங்கள், வெங்கட் வசனத்தில் இன்னொரு முறை மகாபாரத சின்னத் திரை நாடகம் பார்க்கனும்னு தோணுகிறது)
//நேரில் பார்க்கும்போது உங்கள் மேல் கோபப்பட இயலவில்லை. //
கோபம் ஏற்படுத்த வேண்டும் என்று நானும் எதுவும் செய்ததாகத் தெரியவில்லை. அப்படி எதும் இருந்தால் சொல்லிவிடுங்கள்.
//அடுத்த முறை பார்க்கும்போதும் அவ்வாறுதான் செய்வேன்.
//
மீண்டும் நன்றி !
ஓ, நீங்கள் இதைக் கூறினீர்களா?
கண்ணன் said...
//இதற்கு என்ன ஆதாரம் என நீங்கள் கேட்கலாம். அதாவது அதற்கு மிகச்சிறந்த உதாரணம் டோண்டு பதில்கள் பகுதியை பார்த்தால் தெரிந்துவிடும். அவர் கேள்வி பதில் வெளியிட்ட 10 நிமிடத்தில் அனானி பெயரில் 32 கேள்விகள் (தற்போது 12 கேள்விகளாம்) இருக்கும். அடுத்துப் பார்த்தால் அடுத்த அனானி அல்லது அதர் ஆப்சனில் 15 அல்லது 20 கேள்விகள் இருக்கும். இதுவரைக்கும் அந்த கேள்வி கேட்கும் அனானி ஒரு நாள் கூட கேள்வி கேட்க மிஸ்பண்ணியதேயில்லை. இதற்கு மேல் டோண்டு ஒரு சைக்கோ என நிரூபிக்க என்ன ஆதாரங்கள் வேண்டும்?//
“கேள்விகள் ஏதும் இப்போதைக்கு கைவசம் இல்லை. ஆகவே மேலும் கேள்விகள் வந்தால் மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்”
Quotation mark செய்துள்ளேன். இப்போது சரியாகப் பாருங்கள், நானே கேள்விகள் போடுகிறேன் என்று கூறியவருக்கு எனது பதிவின் கடைசி வரிகளை பெயர் உட்பட கோட் செய்திருக்கிறார்.
இப்படிக் கூறும் டோண்டு ஏன் தானே கேள்விகள் போட்டுக் கொல்ள வேண்டும் என்றுதான் அதற்குப் பொருள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//அது நான் சின்சியராக செய்தது. வேறு யாருக்கும் செய்ததில்லை. என்னமோ தோன்றியது, செய்தேன். நேரில் பார்க்கும்போது உங்கள் மேல் கோபப்பட இயலவில்லை. அடுத்த முறை பார்க்கும்போதும் அவ்வாறுதான் செய்வேன்.
//
மிக்க நன்றி,
அன்று நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் நான் கலந்து கொள்வது குறித்து முன்பே பதிவில் வெளி இட்டபடியால், போலி டோண்டுவால் உங்கள் பதிவில் பின்னூட்டுபவர்களுக்கு ஆபாச மிரட்டல் வருவது போல், செந்தழல் ரவி சென்னையில் இருக்கும் பதிவர்கள் சிலரை அன்புடன் (மிரட்டி?!) கோவியார் வரும் கூட்டத்திற்குச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டாராம் (இதைத்தான் சகவாச தோஷம் என்பார்கள்...அது கிடக்கட்டம்), அதை அவரே அவரது பதிவில் (பெருமை பொங்க!) குறிப்பிட்டுள்ளார். உங்களையும் அவ்வாறு கேட்டுக் கொண்டாரா தெரியாது. நீங்கள் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு முதன் முறையாக என்னை கட்டித் தழுவி வரவேற்றதை மறக்க முடியாது. அதற்கு மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உங்களையும் செந்தழல் ரவி கேட்டுக் கொண்டு இருந்தாலும் நீங்களும் அவருக்கு மறுப்புச் சொல்லி இருப்பீர்கள் என்றே நினைக்கிறேன்.
நான் பதிவில் சொல்லாத இன்னொரு விஷயம், அன்று நான் சென்னையில் இறங்கிய ஒரு மணி நேரத்தில் எனது மொபைல் எண்ணைத் தொடர்பு கொண்டு, 'டேய்...கருத்து கந்தசாமி....தே...யா பையலே...' என்று ஒரு குரல் திட்டியது, நான் உடனே போன் இணைப்பைத் துண்டித்துவிட்டேன். அது மூர்த்தியின் குரல் அல்ல என்பது எனக்குத் தெரியும், ஏனென்றால் மூர்த்தியின் குரல் எனக்கு நன்றாகத் தெரியும். வேறு யார் பேசி இருப்பார்கள் என்பது இன்னும் கூட ஊகமாகத்தான் இருக்கிறது.
@கோவி கண்ணன்
என் வீட்டம்மாவைத் தவிர வேறு யாரும் என்னை கண்ட்ரோல் செய்யவியலாது. :))
பை தி வே எனக்கு யாரும் தடை விதிக்கவும் இல்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//நேரில் பார்க்கும்போது உங்கள் மேல் கோபப்பட இயலவில்லை. அடுத்த முறை பார்க்கும்போதும் அவ்வாறுதான் செய்வேன்//
இது என்ன அர்த்தம் கொடுக்கிறது பாருங்களேன்!
(வாலை வச்சிகிட்டு சும்மா இருக்க மாட்டியா)
//என் வீட்டம்மாவைத் தவிர வேறு யாரும் என்னை கண்ட்ரோல் செய்யவியலாது. :))//
நங்கநல்லூரில் இருக்கும் வீடு தானே!
are you sure?
confident?
pakkaa!?
computer ji lock karo!
@வால்பையன்
அவசர போலீஸ் என்னும் படம் எம்.ஜி.ஆரால் பாதியில் விடப்பட்டு பாக்கியராஜாவால் பூர்த்தி செய்யப்பட்டது.
அதில் கடைசிக் காட்சியில் நம்பியார் தன் மனைவி சங்கீதாவிடம் தங்களது பிள்ளை பாக்கியராஜ் தங்களுக்கு சமாதி கட்டாமல் போக மாட்டான் என்பார்.
ஏனோ இப்போது அந்த டயலாக் நினைவுக்கு வருகிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//தங்களது பிள்ளை பாக்கியராஜ் தங்களுக்கு சமாதி கட்டாமல் போக மாட்டான் என்பார். //
கடைசியில் காப்பாற்றுவதே பாக்யராஜ் தான்!
நமக்கு எப்பவுமே முடிவு தான் முக்கியம்!
//கடைசியில் காப்பாற்றுவதே பாக்யராஜ் தான்!//
ஆனால் அது இன்னொரு பாக்கியராஜ்.
//நமக்கு எப்பவுமே முடிவு தான் முக்கியம்//
யாரோட முடிவு? :)))))))))
அன்புடன்,
டோண்டு ராகவன்
aiya samigala pothum....poli dondu pathivulagathai vitu poyachi. innum en kuppaye kelarikitu irukeenga...
ithellam padikum pothu onnu mattum puriyiuthu,ungaluku othu uthuna avnga nallavnga. namken vambunu pesama iruntha avanga en kandichi pathivu podalainu avangalyum kutravali aakiduveenga!!!!
udaranam .. kovi kannan,tbcd
naan entha pativum elauthurathu ille.only vaasagan mattumthan..
chinnapullathanma adichikitu puthusa padika varavaingalum poha vechidatheenga..neengala una image-a damage pannikatheenga..
intha vysayathule naan mathibala karuthoda muzhusa othu poren.
http://www.mathibala.com/2009/09/blog-post_22.html
aaha onnum maatum puriyuthu orutharaum office-la vela parkurathu ille..recession time-la irukura velaiya thakka vechikunga..
I think Dondu is retired person.ithule samantha paturukire matha pathivarkal appadi illainu neniakuren..
unga ponnane nerathe thevai illathe kuppaiku selavalikaatheenga..
naan intha kuppai-pathi comment poda konja nerathe waste panniten..
Thanks,
Lenin M
//naan intha kuppai-pathi comment poda konja nerathe waste panniten.//
அது மட்டுமா செஞ்சீங்க? ஒண்ணு தமிழ் எழுத்துக்களில் எழுதணும் இல்லேன்னாக்க சுத்தமா ஆங்கிலத்துலேயே எழுதணும். அதன்றி இம்மாதிரி தங்கிலிஷ்ல எழுதி உங்க டயத்தையும் வேஸ்ட் பண்ணிட்டு மத்தவங்க டயத்தையும் வேஸ்ட் பண்ணறது நியாயமா?
//I think Dondu is retired person//
அப்படீங்களா? ஒரு நாளைக்கு பத்து மணி நேரத்துக்கு குறைவில்லாது கணினி முன்னமர்ந்து மொழிபெயர்ப்பு செய்யற டோண்டு ராகவனைப் பற்றி நீங்க சொல்லறதை அவனோட விரோதி கூட ஒப்புக் கொள்ள மாட்டானே? அவனென்ன அலுவலக நேரத்தில் அலுவலக கணினியில் தமிழ்மணம் பார்ப்பவன் என நினைத்தீரோ?
//ungaluku othu uthuna avnga nallavnga. namken vambunu pesama iruntha avanga en kandichi pathivu podalainu avangalyum kutravali aakiduveenga!!!!//
அப்படிப்பட்டவங்க பேசாம மட்டும் போயிருந்தா அவங்களை யார் குற்றம் சொல்லப் போறாங்க? போலி செய்வது சரீன்னு அவனுக்கு ஜால்ரா போட்டவங்க அவங்களில் பெரும்பாலானோர்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
aaha onnum maatum puriyuthu orutharaum office-la vela parkurathu ille..recession time-la irukura velaiya thakka vechikunga..
ரிப்பிட்டூ......
/*அவனென்ன அலுவலக நேரத்தில் அலுவலக கணினியில் தமிழ்மணம் பார்ப்பவன் என நினைத்தீரோ? */
Same applies to you when you did the translation work from IDBL.
நான் மொழிபெயர்ப்பு விடாம செஞ்சதில் ஐ.டி.பி.எல்லும் பயன் பெற்றது. எட்டு ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு திடீரென ஃபிரெஞ்சு துபாஷி தேவைப்பட்டபோது என்னால் அந்த வேலையை செய்ய முடிந்தது. ஆக எனது பிராக்டீஸ் எனது மொழியறிவை துருபிடிக்காமல் வைத்திருக்க உதவியது.
எந்த நிலையிலும் ஐடிபிஎல் வேலைக்கு தாமதமே ஏற்பட்டதில்லை என்பதை நான் ஏற்கனவே விளக்கியுள்ளேன்.
அதே மாதிரி தமிழ்மணம் பார்க்கும் இக்காலத்ததவர் அதை கூற இயலுமா?
முடிந்தால் என்ன ஆட்சேபணை?
அன்புடன்,
டோண்டு ராகவன்
/*அதே மாதிரி தமிழ்மணம் பார்க்கும் இக்காலத்ததவர் அதை கூற இயலுமா?
முடிந்தால் என்ன ஆட்சேபணை?*/
So, if even if you do some personal work (or develop your hobby) during office hours which might be useful for your future official work then its ok to do it. Is this what you are trying to say?
ps: I'm still trying to figure out how to type in Tamil. Pardon for my English till then.
I really enjoyed reading your experiences on the blog.
@பின்னூட்டம்
நான் எனது ஐ.டி.பி.எல். நினைவுகளில் எழுதிய சில வரிகளை இங்கே தருகிறேன்.
“பொது நலனுக்கு பங்கம் வராது செயல்பட முடிந்தால் இம்மாதிரி தனி வேலையில் ஈடுபடுவது வேலை செய்யாமல் வம்பு பேசிக் கொண்டிருப்பதை விடச் சிறந்தது. அதே நேரத்தில் மாட்டிக் கொள்ளாமல் இருப்பது முக்கியம். முழு நேர வேலையும் சைட் பிசினெஸும் ஒன்றுக்கொன்று எவ்விதத் தொடர்பும் இல்லாது இருக்க வேண்டும். முக்கியமாக நீங்கள் எங்கு வேலை செய்கிறீர்கள் என்பது உங்கள் வாடிக்கையாளர்களுக்கு நிச்சயம் தெரியக் கூடாது. தேவையற்ற அச்சுறுத்தல்கள்தான் அதன் பலன். அதே மாதிரி வெளி வேலைகளைப் பற்றி உங்கள் கம்பெனியில் மூச்சு விடக் கூடாது. யாருடனும் சண்டைப் போடக் கூடாது. அதெல்லாம் வம்பு பேசுபவர்களின் உரிமை. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது உத்தமம். இதனால் கிடைக்கும் நல்லப் பெயர் ஒரு தனி போனஸ்.
அது சரி, நான் இவ்வாறு செய்தது யாருக்குமே தெரியாமல் போயிற்றா என்ற கேள்வி உங்கள் மனதில் கண்டிப்பாக எழும். பலருக்குத் தெரியும். அவர்களில் பலர் என்னைப் போலவே செயல்பட்டவர்கள். மனைவி பெயரில் இன்ஷூரன்ஸ் ஏஜென்சி எடுப்பது, யூ.டி.ஐ. பாண்டுகளுக்கான புரோக்கர் வேலை எல்லாம் செய்தனர். தனிப்பட்ட விரோதம் இருந்தால் ஒழிய யாரும் யாரையும் கண்டுகொள்வதில்லை. அதனால்தான் கூறினேன், எல்லோருடனும் சுமுகமாகப் பழக வேண்டுமென்று.
என்னுடைய மொழிபெயர்ப்புகளை தட்டச்சு செய்ய இரு டைப்பிஸ்டுகளின் சேவையை பெற்றுக் கொண்டேன். அவர்களுக்கு ஒரு பக்கத்துக்கு இவ்வளவு எனக் கணக்கு போட்டு கைமேல் காசு அளித்ததால் எனக்காக வேலை செய்ய அவர்கள் இருவரிடையேயும் நல்ல போட்டி. அவர்களிடம் ஒரே ஒரு கண்டிஷன்தான் போட்டேன். ஐ.டி.பி.எல் வேலைகளுக்குத்தான் முன்னுரிமை தர வேண்டும். அதில் எந்த சுணக்கமும் காட்டலாகாது. அவர்களும் அவ்வாறே செய்ததில் அவர்களுடைய மேலதிகாரிகளுக்கும் திருப்தியே. ஒரு டைப்பிஸ்டின் மேலதிகாரி என்னிடம் ஒரு முறை வெளிப்படையாகவே கூறினார், "நீங்கள் அவளுக்கு வேலை கொடுப்பதால் நான் கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் முடித்து விடுகிறாள், நன்றி" என்று”.
இப்போது ஒரு சிறு தமாஷ். எனக்கு இஞ்சினியராக 23 வருடங்கள், ஜெர்மன் மொழிப் பெயர்ப்பாளனாக 34 வருடங்கள் மற்றும் பிரெஞ்சு மொழி பெயர்ப்பாளனாக 31 வருடங்கள் அனுபவம் ஆக மொத்த அனுபவம் 88 வருடங்கள் ஆனால் என் வயது 63-தான் என்று ஒரு புது வாடிக்கையாளரிடம் கூறுவேன். அவர் வியப்புடன் இது எவ்வாறு சாத்தியம் என்று கேட்டால், "ஓவர்டைம்" என்பேன் சிரிக்காமல்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
:)
முடிஞ்சதா ?
நீங்கள் முடித்துக் கொண்டால் நானும் முடிந்தது என விடுவேன்.
ரொம்ப சீரியசான குற்றச்சாட்டை அதுவும் ஆதாரமில்லாத ஒன்றைக் கூறினால் நான் எப்படி வாளாவிருக்க முடியும்.
இப்போதும் கூறுவேன், நீங்கள் போலி டோண்டுவை பிடித்ததற்கு மிகவும் நன்றியுடையவனாகவே இருக்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment