உண்மையாகவே என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்வது என்னைப் போன்ற வெளி ஆட்களுக்கு சற்றுக் கடினமான காரியமே. இதே டாபிக்கை உண்மை தமிழன் ஆதண்டிக் செய்திகளுடன் 20-பக்கங்களுக்கு ஒரு சிறிய பதிவாக எழுதியிருக்கும் சக்தி படைத்திருப்பார் என உறுதியாக நம்புகிறேன். இருந்தாலும் இது சம்பந்தமாக எனது கருத்துக்களை கூறலாம் என எண்ணுகிறேன்.
முதற்கண் ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். என்னுடையது முழுக்க முழுக்க வெளிமனிதனின் பார்வை கோணத்திலேயே இருக்கும். சம்பந்தப்பட்ட மாற்றங்களின் பின்புலனாக அதில் சம்பந்தப்பட்டவர்களது ஆசைகள், அபிலாஷைகள் பற்றி நான் ஒன்றும் அறியேன். ஆனால் பல நல்ல சீரியல்கள் இம்மாதிரி சேனல் தாவல்களால் குட்டிச்சுவரானது மட்டும் நிச்சயம்.
உதாரணத்துக்கு நான் தில்லியில் வசித்த போது, தொண்ணூறுகளின் இறுதியில் மௌலியின் சீரியல் ஒன்று, சுந்தரவனம் என்னும் தலைப்பில் சன் டீவியில் வந்தது. அது முடிவடைய இன்னும் ஓரிரு எபிசோடுகளே பாக்கி இருக்கையில் அந்த சீரியலே சன் டிவியிலிருந்து தூக்கப்பட்டது. தயாரிப்பாளர் தூக்கினாரா, சன் டிவி நிர்வாகம் தூக்கியதா என்பதெல்லாம் நான் அறியேன். பார்வையாளர்களை தொங்கலில் விட்டுச் சென்றனர். அது அங்கிருந்து ராஜ் டிவிக்கு சென்றிருக்கிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக எங்கள் உள்ளூர் ஆப்பரேட்டர் ராஜ் டிவி தரவில்லை. ஆகவே அந்த சீரியல் எப்படி முடிந்தது என்பதை வாய் வார்த்தையாகத்தான் சென்னையில் இருப்பவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள முடிந்தது.
ராஜ் டிவியில் அதுவரை நடந்த கதையை மூன்று எபிசோடுகளில் சுருக்கமாக வெளியிட்டு, பிறகு கடைசி 2 அல்லது 3 எபிசோடுகளை வெளியிட்டு அந்த சீரியலை முடித்து வைத்தனர் என்பதை அறிந்தேன். அதே தயாரிப்பாளர் பிறகு கங்கா, யமுனா, சரஸ்வதி என்னும் அமர்க்களமான சீரியலை ஆரம்பித்தார். அது ஒரு ஹாலிவுட் படத்தின் காப்பி என்பதை ஸ்டார் மூவீஸ் சேனலில் ஒரு படத்தைப் பார்க்கையில் எதேச்சையாக அறிந்தேன். அந்த ஸ்டோரி லைனை பின்தொடர்ந்தவரை சீரியல் விறுவிறுவென போயிற்று. ஆனால் இந்திய மசாலாக்கள் சேர்த்தவுடன் தொய்வடைந்தது. இருந்தாலும் பார்க்கும்படியாகத்தான் இருந்தது. அதுவும் ஒரு உச்சக்கட்டத்துக்கு போகும் தருவாயில் காரணம் ஏதுமின்றி நிறுத்தப்பட்டது.
இப்போது சரித்திரம் திரும்பியது. அதன் தயாரிப்பாளர் இந்த சீரியலை விட்ட இடத்திலிருந்து தொடர சன் டீவிக்கே திரும்பினார். இங்கு அதன் பெயர் கங்கா, யமுனா, சரஸ்வதி சங்கமம் என வந்தது. முதல் சில எபிசோடுகளும் கச்சிதமாக வந்தன. பிறகு என்னவாயிற்று எனத் தெரியவில்லை. ராஜ் டிவி ஏதேனும் சட்ட மிரட்டல் விடுத்திருக்கும் என நான் ஊகிக்கிறேன். ஏனெனில் அந்த சீரியலுக்கும் ஒரிஜினல் கங்கா யமுனா சரஸ்வதி சீரியலுக்கும் சம்பந்தம் இல்லை திடீரென ஒரு நாள் ஓர் அறிவிப்பு வந்தது. பிறகுதான் ஆரம்பித்தன சொதப்பல்கள் மேல் சொதப்பல்கள். கடைசியில் சீரியலை முக்கி முனகி முடித்தபோது கதை என்னவென்று சீரியல் தயாரித்தவருக்கே தெரிந்திருக்குமா என்பதே ஐயத்துக்குரியதாக இருந்தது. ஒரு எபிசோட் முழுக்க முழுக்க அக்கதை பாத்திரங்கள் பங்கெடுத்த ஒரு கேம் ஷோவாகவே இருந்தது இன்னொரு கூத்து.
இதெல்லாம் தொடர்ச்சிகளின் முக்கியத்துவம் உள்ள கதைகள். ஆனால் குஷ்புவின் ஜாக்பாட் அப்படியெல்லாம் இல்லையே என நினைக்கலாம். ஆனால் அம்மாதிரியான ஷோக்களும் பாதிக்கப்படுவது வெளிப்படையாக பல முறை தெரிய வந்துள்ளது.
விசுவின் அரட்டை அரங்கம் சன் டிவியிலிருந்து ஜெயா டிவிக்கு போனதில் அத்துடன் கூடவே சென்ற விசுவும் அங்கே சோபிக்கவில்லை, இங்கே அரட்டை அரங்கத்தை ஏற்று நடத்தும் கரடி தாடி டி.ராஜேந்தரும் சோபிக்கவில்லை. ஒரு சீரியலின் முக்கிய அங்கம் அதன் தீம் இசை. அதுதான் இம்மாதிரியான மாறுதல்களில் முக்கிய பலி. குஷ்பூ ஜாக்பாட்டை எங்கே தொடருவார் எனத் தெரியவில்லை. ஆனால் தீம் சாங்குக்கு அவரிடம் காப்புரிமை இருந்தால் ஜெயா டிவி அதை தொடர்ந்து உபயோகிக்க இயலாது. புதிதாக யார் வந்தாலும் குஷ்புவை பார்த்து வழக்கப்பட்ட பார்வையாளர்களுக்கும் ஏற்பு வருவது கஷ்டமே.
குஷ்புவும் வேறு இடத்தில் போய் சோபிப்பாரா என்பதை இனிமேல்தான் பார்க்க வேண்டும். அந்த தீம் சாங் ஜெயா டிவியுடையதாக இருந்தால் அதை அவர் செல்லும் கலைஞர்/சன் டிவிகளில் உபயோகிக்க இயலாது.
திமுகவும் அதிமுகவும் இம்மாதிரி அரசியல் மாற்றுக் கருத்துக்களையெல்லாம் தனிப்பட்ட விரோதமாகப் பார்ப்பதில் நல்ல நிகழ்ச்சிகள் பலியாவதுதான் நடக்கிறது. இன்னும் நிலுவையில் இருக்கும், குஷ்பு தயாரித்த 12 எபிசோடுகளும் ஒளிபரப்பப்பட மாட்டாது என்பது ஒரு பெரிய பொருளாதார இழப்பு மட்டுமல்ல, உழைப்பு விரயமும் ஆகும்.
குஷ்பு செய்தது சரியா, ஜெயா டிவி செய்தது சரியா என்பதையெல்லாம் ஆராய்வது என் சக்திக்கு மீறியது. நான் சொலதெல்லாம் ஏற்கனவேயே முதலில் குறிப்பிட்டுள்ள வெளி ஆளின் பார்வைக் கோணமே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
கே.வி.சுப்ரமணிய ஐயர்
-
கந்தாடை வைத்தி சுப்ரமணிய அய்யர் தமிழ் கல்வெட்டாய்வாளர், வரலாற்றாய்வாளர்.
தமிழ்நாட்டின் குகைக் கல்வெட்டெழுத்துக்கள் தமிழ்ப் பிராமி எழுத்துருவில்
வடிக்கப்பட்...
13 hours ago
33 comments:
முதலில்,சோ, அம்மாவை எதிர்த்து ஏதாவது சொல்லாமல் இருக்கவேண்டுமே என்று வேண்டிக்கொள்ளும்.இல்லையென்றால் "எங்கே பிராமணன்" ஜூட்!
//குஷ்பு செய்தது சரியா, ஜெயா டிவி செய்தது சரியா என்பதையெல்லாம் ஆராய்வது என் சக்திக்கு மீறியது/
நம் சக்திக்கு மீறினது. எல்லாம் பிரம்மம்.
//திமுகவும் அதிமுகவும் இம்மாதிரி அரசியல் மாற்றுக் கருத்துக்களையெல்லாம் தனிப்பட்ட விரோதமாகப் பார்ப்பதில் நல்ல நிகழ்ச்சிகள் பலியாவதுதான் நடக்கிறது.//
ஏன் சார், அந்த இரு கட்சிகளுடைய மாற்று கருத்துக்களால், தமிழ்நாட்டுக்கு கிடைக்க/சேர வேண்டிய எத்தனையோ நன்மைகளே கிடைக்காமல் போயிருக்கையில், உங்களின் நல்ல சீரியல் பாதியில் காணாமல் போய்விட்டதே என்ற ஒப்பாரி, ரொம்பவுமே ஓவர் ஆக படுகிறது.
இவையெல்லாம் பெரிய இழப்பு என்று .... ஹா ஹா ஹா....
ஜெயா டீவியில் வருவது ஜாக்பாட் நிகழ்ச்சியா அல்லது ஜாக்கெட் நிகழ்ச்சியா என ஒரு சந்தேகம்... கொஞ்சம் கேட்டு சொல்லுங்களேன்....
பின்குறிப்பு: இந்நிகழ்ச்சிகளினால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதால் என்ன நடந்தால் நமக்கென்ன.....
//இந்நிகழ்ச்சிகளினால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதால் என்ன நடந்தால் நமக்கென்ன//
ஒரு சீரியலின் தயாரிப்பின் பின்னால் இருக்கும் உழைப்பை பற்றி ஏதேனும் ஐடியா இருந்தால் இம்மாதிரி கூற மாட்டீர்கள். இம்மாதிரி அதிரடி மாறுதல்களால் பாதிக்கப்படப் போவது பார்வையாளர்களை விட சம்பந்தப்பட்ட சீரியலில் பங்கேற்றவர்களே. அவர்களது உழைப்புகளின் இழப்பு ஒரு பெரிய சோகம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
திரும்பத் திரும்ப அறைத்த மாவையே அறைக்கும் சீரியல்களில் எவ்வளவு உழைப்பு இருந்தால்தான் என்ன? மக்களை சோம்பேறிகளாக்குகின்றன சீரியல்கள் என்பதே கசப்பான உண்மை.
சம்பந்தப்பட்ட சீரியலில் ஒரு 50 பேர் பாதிக்கப்படுவாங்களா? அதே நேரத்தில் அதை பார்ப்பவர்களுக்கு எவ்வளவு பாதிப்பு என்பது உங்களுக்கு தெரியாதா?
மானாடா, மயிலாடா, மார்பாடா என நடத்துபவர்களால் எத்தனை வீட்டில் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர் என்பது தெரியுமா?
சித்தி, மெட்டி போன்ற சீரியல்களால் மக்களுக்கு ஏதாவது பயன் உண்டா.... ஒரு வாரத்தில் முடிக்கவேண்டியதை மூன்று நான்கு வருடங்கள் இழுத்து இவர்கள் காசு சம்பாதிப்பதை தவிர....
மக்களை குறிப்பாக குடும்பப் பெண்களை சோம்பேறியாக்குவதில் இந்த அனைத்து தொலைக்காட்சிகளுக்கும் முக்கிய பங்கு உண்டு என்பதை மறக்க மறுக்க வேண்டாம்.
//மக்களை குறிப்பாக குடும்பப் பெண்களை சோம்பேறியாக்குவதில் இந்த அனைத்து தொலைக்காட்சிகளுக்கும் முக்கிய பங்கு உண்டு என்பதை மறக்க மறுக்க வேண்டாம்.//
அது வேறு, நான் சொல்ல வந்தது வேறு. நீங்கள் விரும்பினாலும் சரி விரும்பாவிட்டாலும் சரி பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் தயாரிப்பது என்பது ஒரு பெரிய தொழிலாகி போயிற்று. அவற்றையெல்லாம் தடை செய்யவியலாது.
நான் கவலைப்படுவது நன்றாகப் போகும் சீரியல்கள் இம்மாதிரி சொதப்பல்களால் கெட்டுப் போவது பற்றித்தான். அவற்றின் பின்னால் இருக்கும் உழைப்புகளின் இழப்பும் அவற்றில் அடங்கும்.
சீரியல்களை பார்ப்பவர்கள் கேபிள் கட்டணம் மாதம் குறிப்பிட்டத் தொகை காலணா அதிகம் தரப்போவதில்லை. பலவித ருசிகளை விரும்பும் பலருக்கு ஏற்ப சீரியல்கள் வருகின்றன. உங்களுக்கு வேண்டியதை மட்டுமே பார்ப்பது உங்கள் சாமர்த்தியம்.
எனக்கு தன்னம்பிக்கையை வலியுறுத்தும் சீரியல்கள் பிடிக்கும். அவற்றில் கூட சில எபிசோடுகள் தேவையின்றி அழுவாச்சியாகப் போனால் இருக்கவே இருக்கிறது ரிமோட் கண்ட்ரோல் பட்டன்.
ஆகவே இந்த பிரச்சினையில் நமக்கு ஒன்றும் பண இழப்போ உழைப்பு வீணாதலோ இல்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
கரடி ராஜேந்தர் என்ற வார்த்தைப் பிரயோகத்திற்கு கடும் கண்டங்கள்.
இதே போல ராஜேந்தரை இன்னும் பல இடங்களில் தாக்கி எழுதும் ஜெய்சங்கர் ஜெகந்நாதனை சோடா புட்டி கண்ணாடி என்றோ, கண் கெட்ட க*தி என்று சொன்னாலோ ஜாலியாக ஏற்றுக் கொள்வாரா?!
அதே கேள்வி தான் டோண்டுவுக்கும்!
அப்படி இல்லையெனில் ராஜேந்தரை மட்டும் எப்படி சொல்லப் போகலாம்?!
சீரியலில் எவ்வளவு பாதிப்பு என்பது உங்களுக்கு தெரியாதா!
அழுது காலத்தினை விரயம் செய்வது இதனை யார் செய்தால் என்ன!
இது ஒரு அக்மார்க் காமெடி பதிவு என்பது டோண்டு அவர்களுக்கும் தெரியும், ஆனாலும் காமெடி இல்லாத மாதிரி பதில் கொடுத்து மேலும் காமெடி ஆக்குகிறார்.
தமிழ் நாட்டில் எல்லாமே அரசியல் தான்.
என்னிக்கு மக்கள் திருடர்கள் முன்னேற்ற கழகத்துக்கும், அகில இந்திய அண்ணா திருடர்கள் முன்னேற்ற கழகத்திற்கும் மாத்தி மாத்தி வோட்டு போடுகிறார்களோ அன்னிக்கே எல்லாமே அரசியல் ஆகிவிட்டது.
யாருக்கு நஷ்ட்டமோ இல்லையோ குஷ்பூ தி.மு.க வில் அடிக்கப்போகும் ஜாக்பாட் ஒரு சட்ட மேலவை உறுப்பினர் பதவி என்பது மட்டும் உறுதி.
ஜோவின் கீழ்க்கண்ட பின்னூட்டத்தை அனுமதித்தும் கூட பிளாக்கரின் சொதப்பலால் பதிவின் பின்னூட்டமாக வர மறுக்கிறது. ஆகவே நானே எனது தரப்பில் அதை சேர்க்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Jo Amalan Rayen Fernando has left a new comment on your post "சன் டிவி, ஜெயா டிவி, கலைஞர் டிவி - என்னதான் நடக்கி...":
Tamil type prob.
Your blogpost gives me to understand that you have not seen jackpot; or cares to know why the serial became popular, and with whom.
It is popular with women only. It is touted as for Magalir.
Not unexpectedly, it became popular for Kushboo darshan.
It is surprising to know that she has more women fans than males today. Long ago, when she was the glamor girl of Tamil screen, male fans built her a temple, as you know. Now there are no male fans for her, including myself - what about you?
Jackpot, as Manjoor Raasa has correctly observed, is really a jacket show.
Women watch the serial to see her jackets also. The jackets are in different fashion on every show, awsome. Specially designed for her for that show. Now the window jacket has become a common fashion even in rural TN.
She turns her back to the telewatchers every few minutes and the show gives her ample reasons to do that: she has to turn her back under the pretext of seeing the digital screen.
Women talked about her jackets even in magazine and other chats. She was questioned about. She gave the credit to the tailor.
Please confirm it from the women folk you know.
Another plus point of this show is Kushboo's natural affinity with womenly delicate characteristics. She allows them to feel free to be women on this show - so much so that you may feel at times annoyed with their childishness. To be childish is to be allowed to women: and Kushboo completely allow them to be childish. If a man conducts the show, the women dont come forward openly.
You live in an out- and -out male world like your guru Cho, which sometimes leads you to misunderstandings: as you have done here in saying the show is famous for theme song. No,
It became famour for Kushboo and her jackets.
Publish this comment.
Reject this comment.
Moderate comments for this blog.
Posted by Jo Amalan Rayen Fernando to Dondus dos and donts at May 16, 2010 8:30 PM
Hi Dondu,
Congrats!
Your story titled 'சன் டிவி, ஜெயா டிவி, கலைஞர் டிவி - என்னதான் நடக்கிறது?' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 16th May 2010 04:14:04 PM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/251815
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team
நன்றி தமிழிஸ்
ஒரு சீரியலின் தயாரிப்பின் பின்னால் இருக்கும் உழைப்பை பற்றி ஏதேனும் ஐடியா இருந்தால் இம்மாதிரி கூற மாட்டீர்கள்.
////
கருமம் கருமம்
என்ன கொடுமையா இருக்கு சீரியல்
இவன் அவளை வச்சிருக்கான்
அவன் இவளை வச்சிருக்கான்
கொலைவெறி
பலிவாங்குதல்
அட போங்க சார்
சீரியல் பார்குறவங்க பைத்தியமா தான் இருக்கனும்
அதுல எடுக்குறவன் உழைக்கிறானாமே
கஞ்சா செடி போடுறவனும் உழைக்கிறான்
பின்லேடனும் உழைக்கிறான்
/
கஞ்சா செடி போடுறவனும் உழைக்கிறான்
பின்லேடனும் உழைக்கிறான் /
Suuuuuuuuuuuuuuuuuuuuuuuper
Dondu Don't watch Serials
Watch Paninathala ayida Mandu.
வழக்கமாக சீரியலில் நடிக்கும் நடிகர்களின் முகம் வேறொருவர் முகமாக திடிரென்று மாறும். சில சமயம் டிவி நிகழ்சி நடத்துபவர்களே மாறுகிறார்கள். இதில் தொலைகாட்சி நேயர்கள் யாரும் பாதிக்கப்படுவதில்லை என்றால் பேசுவதற்கு ஒன்றும் இல்லை.
வெ.ஆ.மூர்த்தி இல்லாமல் 'மீண்டும் மீண்டும் சிரிப்பு' சன்னில் எனக்கு பார்க்கப் பிடிக்கவில்லை, பார்ப்பதும் இல்லை.
//இதில் தொலைகாட்சி நேயர்கள் யாரும் பாதிக்கப்படுவதில்லை என்றால் பேசுவதற்கு ஒன்றும் இல்லை.//
நான் கொடுத்த உதாரணங்கள் - சுந்தரவனம், கங்கா யமுனா சரஸ்வதி ஆகிய இரு சீரியல்களிலும் அதுவும் நடந்தது. கிட்டத்தட்ட முடியும் நிலையில் இருக்கும் சீரியல்கள் (அதுவும் மக்களால் மிகவும் விரும்பிப் பார்க்கப்பட்டவை) இம்மாதிரி சுய அகங்காரங்களால் அம்போ என கைவிடப்படும்போது அது வரை மெனக்கெட்டு பார்த்தவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள் என்பதும் நிஜமே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Good question from mayavaramthan.
//இதே போல ராஜேந்தரை இன்னும் பல இடங்களில் தாக்கி எழுதும் ஜெய்சங்கர் ஜெகந்நாதனை சோடா புட்டி கண்ணாடி என்றோ, கண் கெட்ட க*தி என்று சொன்னாலோ ஜாலியாக ஏற்றுக் கொள்வாரா?!
//
பல இடங்களில் இல்லை மாயவரத்தான் . 2 இடத்தில் மட்டும் தான். நீங்கள் என்னை சோடா புட்டி என்றால் சந்தோஷம் தான். தெரியமா திட்டுங்க. ப்லொக் தானே
பிரியமுடன் பிரபு WELL-said...
" இவன் அவளை வச்சிருக்கான்
அவன் இவளை வச்சிருக்கான்
கொலைவெறி
பலிவாங்குதல்
அட போங்க சார்
சீரியல் பார்குறவங்க பைத்தியமா தான் இருக்கனும்
அதுல எடுக்குறவன் உழைக்கிறானாமே
கஞ்சா செடி போடுறவனும் உழைக்கிறான்
பின்லேடனும் உழைக்கிறான்"
Rightly pointed out.
இரண்டாக இருந்தால் என்ன இரண்டாயிரமாக இருந்தால் என்ன? நீங்கள் சொன்னது தவறு.
பிலாக் என்றல்ல. நேரில் பார்த்தாலும் திட்டுவேன். சோடா புட்டி கண்ணாடி என்றில்லை. கண் கெட்ட க*தி என்றும் திட்டுவேன். (நேரில் திட்ட வாய்ப்பு வந்தால் * போட்டு திட்ட மாட்டேன்)
நீங்களாக வருத்தம் தெரிவித்து அந்த கமெண்ட்டை நீக்கினால் தவிர திட்டு கண்டிப்பாக உண்டு.
T. ராஜேந்தரா நேரில் வந்து இங்கே எதிர்ப்பு தெரிவிக்கப் போகிறார் என்ற எண்ணத்தில் கண்டபடிக்கு எழுத வேண்டாம்.
அடுத்தவரின் உருவத்தை குறை கூறி எழுதுபவர்களுக்கு / பேசுபவர்களுக்கு தன்னை அடுத்தவர் எப்படி குறை கூறினாலும் கண்டிக்க உரிமை கிடையாது - அது எப்பேர்பட்ட ஜாட்டானாக இருந்தாலும் சரி!
@மாயவரத்தான்
கரடி ராஜேந்தர் எனக் கூறவில்லை, கரடி தாடி ராஜேந்தர் என்றுதான் கூறினேன். கரடி என்பது தாடியைத்தான் க்வாலிஃபை செய்கிறது.
மோவாய்க்கட்டையில் மட்டும் மிடிவளர்த்து இருப்பார்கள். அந்த தாடிக்கு ஆட்டு தாடி என்று பெயர். ஆகவே டேக் இட் ஈசி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//T. ராஜேந்தரா நேரில் வந்து இங்கே எதிர்ப்பு தெரிவிக்கப் போகிறார் என்ற எண்ணத்தில் கண்டபடிக்கு எழுத வேண்டாம்.
அடுத்தவரின் உருவத்தை குறை கூறி எழுதுபவர்களுக்கு / பேசுபவர்களுக்கு தன்னை அடுத்தவர் எப்படி குறை கூறினாலும் கண்டிக்க உரிமை கிடையாது - அது எப்பேர்பட்ட ஜாட்டானாக இருந்தாலும் சரி! //
மாயூவுக்கு (டி.ஆர்) ஊர் பாசம்.
\\ @மாயவரத்தான்
கரடி ராஜேந்தர் எனக் கூறவில்லை, கரடி தாடி ராஜேந்தர் என்றுதான் கூறினேன். கரடி என்பது தாடியைத்தான் க்வாலிஃபை செய்கிறது.
மோவாய்க்கட்டையில் மட்டும் மிடிவளர்த்து இருப்பார்கள். அந்த தாடிக்கு ஆட்டு தாடி என்று பெயர். ஆகவே டேக் இட் ஈசி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
May 17, 2010 12:21 PM
Blogger கோவி.கண்ணன் said...
//T. ராஜேந்தரா நேரில் வந்து இங்கே எதிர்ப்பு தெரிவிக்கப் போகிறார் என்ற எண்ணத்தில் கண்டபடிக்கு எழுத வேண்டாம்.
அடுத்தவரின் உருவத்தை குறை கூறி எழுதுபவர்களுக்கு / பேசுபவர்களுக்கு தன்னை அடுத்தவர் எப்படி குறை கூறினாலும் கண்டிக்க உரிமை கிடையாது - அது எப்பேர்பட்ட ஜாட்டானாக இருந்தாலும் சரி! //
மாயூவுக்கு (டி.ஆர்) ஊர் பாசம்.\\
கோவி! ஊர்பாசமாவே இருந்துட்டு போகட்டுமே. இப்படி டோண்டு சார் சொன்னது கண்டனத்துகுரியது தான். நான் மாயவரத்தானை வழிமொழிகிறேன்.
உலக அளவில் இதுவரை நடந்த ஊழல்களையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டு விடக் கூடிய, கின்னஸ் ரெக்கார்ட் ஏற்படுத்தக் கூடிய மெகா மெகா ஊழல், ஊழல்களின் சக்ரவர்த்தியுமான ஊழல் ஸ்பெக்ட்ரம் ஊழலே.
இந்த ஸ்பெக்ட்ரம் ஊழலை இந்தியா எதிர் கொண்டிருக்கும் விதம் இந்தியாவின் எதிர்காலம் குறித்த பெரும் கவலையை ஏற்படுத்துகிறது.
இதை வாசிக்கும் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
ஸ்பெக்ட்ரம் ஊழல்: ஸ்பெக்ட்ரம் என்றால் என்ன ?
ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்தது எப்படி?
தொடரும் ஊழல்கள் குறித்து நீங்கள் என்ன செய்யலாம் ?
கலைஞர் தொலைக்காட்சி பிறந்தேதே காழ்ப்புணர்வோடு தானே!
நீங்கள் சொன்ன நிகழ்ச்சிகளை கேட்டிருக்கேனே தவிர பார்க்க துணிந்ததில்லை. மொத்தத்தில் இது ஒருவித அடிக்சனை உருவாக்குவது உண்மை. துளியும் பிரயேஞனமில்லாத மக்களை சீரழிக்கிற இவையெல்லாம் வந்தால் என்ன நின்றால்தான் என்ன. கதைதானே ! முடிவு டைரக்டர் சொல்வதுதானே. இதற்கெல்லாம் கவலைப்படலாமா ?
//நீங்களாக வருத்தம் தெரிவித்து அந்த கமெண்ட்டை நீக்கினால் தவிர திட்டு கண்டிப்பாக உண்டு.
//
எங்க வீடு திருச்சில இருக்கு. சத்திரம் பஸ் ஸ்டெண்ட்ல வந்து சத்தமா திட்டினா எனக்கு கேக்கும்
Post a Comment