நான் எந்த வேளையில்
ஒரு சராசரி ஆணின் கவனத்தைக் கவரும் மார்பகங்கள் பற்றி பதிவு போட்டேனோ தெரியவில்லை, கடந்த நான்கு நாட்களாக பெண்களுக்கான கவர்ச்சியான மார்க்கச்சுகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைக்கு ஆஸ்திரியாவிலிருந்து வந்திருந்த இரு தொழில்நுட்ப வீராங்கனைகளுக்காக ஜெர்மன் துபாஷியாக செல்ல நேர்ந்தது.
சும்மா சொல்லப்படாது சென்னைக்கு அருகில் விஸ்தாரமான இடத்தில் இருக்கும் இத்தொழிற்சாலையில் இருக்கும் கிட்டத்தட்ட 100 லைன்களில் ஒன்று மட்டும் பேண்டீசுக்கானது. மீதி எல்லாமே மார்க்கச்சுகளுக்காகவே. எங்கு பார்த்தாலும் 75, 80, 85, 90 என கப்சைஸ் செண்டிமீட்டர்களில் பேச்சு. ஒவ்வொரு கச்சிலும் 100க்கும் மேற்பட்ட தையல்கள், அவற்றை இடும்போது அவதானிக்க வேண்டிய விஷயங்கள் ஆகியவற்றைப் பற்றி அந்த இரு பெண்மணிகளும் அங்கு வேலை செய்யும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கும் மேற்பார்வையாளர்களுக்கும் பொறுமையாக சொல்லித் தந்து கொண்டிருந்தனர்.
ஒரு லைனில் நைலான் போன்ற பொருட்களை வைத்து கச்சுகள் தயாரித்தனர். அதை எப்படி ஒரு பெண்ணால் போட்டுக் கொள்ளமுடியும் என எனக்கு சந்தேகம். அதை நினைக்கும்போதே எனக்கு வியர்க்க ஆரம்பித்து விட்டது. ஆஸ்திரிய நிபுணியிடம் கேட்ட போது அவர் இந்தக் கச்சுகள் ஐரோப்பிய பெண்மனிகளுக்குரியன, இந்தியர்களுக்கல்ல என்று கூறிவிட்டார். அதுவும் ஏற்றுக் கொள்ளத் தக்கதே, ஏனெனில் அங்குள்ள குளிருக்கு அந்த மெட்டீரியல் ஓக்கேதானே.
(அத்துடன் பேசாமல் இருந்திருக்கலாம் அவர். சும்மா இல்லாமல் இந்தியப்பெண்களுக்கு அந்தளவுக்கு (38”) மார்பகங்கள் கிடையாது என்று வேறு கூறிவைத்தார். சீறி எழுந்த டோண்டு ராகவன் அவருக்கு பல உதாரணங்கள் மூலம் (தேவிகா, ஷீலா, நீட்டூ சிங் ஆகியோர்) உண்மை நிலையை உரைத்தது இப்பதிவுக்கு வேண்டாமே).
இத்தொழிற்சாலையில் 90%-க்கு மேல் பெண்களே வேலையில் உள்ளனர். அதிலும் முக்கியமாக தையல் மிஷின்கள் மற்றும் மேற்பார்வையாளர்களாக. அவர்களது கற்கும் திறன் ஆஸ்திரிய பெண்மணிகளின் பாராட்டை பெற்றது மகிழ்ச்சியாக இருந்தது.
ஒவ்வொரு நிலையிலும் மார்க்கச்சுகளுக்கான வெவேறு தையல் வேலைகள் நடைபெறுகின்றன. ஒவ்வொன்றுக்கும் உரித்தான செய்முறைகள் அழகாக அட்டையில் எழுதப்பட்டு ஆப்பரேட்டர்களின் பார்வைக்கு வைக்கப்படுகின்றன. தையல்களின் அகலம், எந்தத் துணியை எதன் மேல் எந்த வரிசை முறையில் வைப்பது ஆகிய எல்லாவற்றுக்குமே விளக்கமான செய்முறைகள் உண்டு. அவற்றில் பல அறிவுரைகள் காமன் சென்ஸுக்கு உட்பட்டவையே (உதாரணம் நேராக உட்கார வேண்டும், கால்களை பெடல்களில் ஒரே சீராக வைத்து அழுத்த வேண்டும் ஆகியவை எங்குமே பொருந்தும்). தேவையற்ற கை அசைவுகளைத் தவிர்க்கவும் சொல்லிக் கொடுக்கப்பட்டது.
இங்கு செய்யப்படும் மார்க்கச்சுகள் அனைத்துமே ஏற்றுமதிக்காகவே செய்யப்படுபவை. கணிசமான அன்னியச் செலாவணியும் ஈட்டப்படுகிறது. எனது கார் அக்கம்பெனிக்கு செல்லும் வழிகளில் உள்ள பல தொழிற்சாலைகளில் வேலைக்கு காலி இருக்கும் போர்டுகள் காணப்படுகின்றன. நல்ல வேலைக்காரர்களுக்கு அவ்வளவு டிமாண்ட் என்பதும் மனதுக்கு இதமாக உள்ளது. தொண்ணூறுகளுக்கு முன்னால் சோஷலிச கோளாறுகளால் பல தொழிற்சாலைகளில் “வேலை காலி இல்லை” என்றுதான் போர்டுகள் இருக்கும். இப்போது அவற்றைக் காண முடிவதில்லை.
எது எப்படியோ நான்கு நாட்களாக கண்ணுக்கு ரம்யம் தரும் வேலை, அதுக்கு கூலி வேறு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
15 comments:
//கடந்த நான்கு நாட்களாக பெண்களுக்கான கவர்ச்சியான மார்க்கச்சுகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைக்கு ஆஸ்திரியாவிலிருந்து வந்திருந்த இரு தொழில்நுட்ப வீராங்கனைகளுக்காக ஜெர்மன் துபாஷியாக செல்ல நேர்ந்தது. //
வயசான காலத்துல இதெல்லாம் தேவையா! என்னைக் கூட கூட்டிகிட்டு போயிருக்கலாம்ல!
எந்த நிறுவனம்- Triumph or Agent Provocateur
@ராம்ஜி
மன்னிக்கவும் வாடிக்கையாளரது பெயரை சொல்வதற்கில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ok cool, no issues pls
german கத்துக்கிட்ட முழுப் பயனையும் அடஞ்சிட்டீங்க போலருக்கே.
// //எது எப்படியோ நான்கு நாட்களாக கண்ணுக்கு ரம்யம் தரும் வேலை, அதுக்கு கூலி வேறு.// //
இதுல என்ன ரம்யம்? ஒன்னும் புரியலை! துணி தொடர்பான எல்லா தொழிலகங்களும் ரம்யமாக இருக்கும் வாய்ப்பு உண்டு - துணிகள் பல வண்ணத்தில் இருப்பதால்.
மற்றபடி, //தொண்ணூறுகளுக்கு முன்னால் சோஷலிச கோளாறுகளால் பல தொழிற்சாலைகளில் “வேலை காலி இல்லை” என்றுதான் போர்டுகள் இருக்கும். இப்போது அவற்றைக் காண முடிவதில்லை// என்கிற கருத்து தவறானது.
உலகமயமாக்கலும், தாராளமயமும் சுபிட்சத்தைக் கொண்டுவந்தது போல பேசுவது - உங்களது "காமாலைப் பார்வையின்" கோளாறு.
//.. உங்களது "காமாலைப் பார்வையின்" கோளாறு.//
நீங்கள் பார்ப்பது போல தான் மற்றவர்களும் பார்க்க வேண்டும் என்று பேசுவது உங்களது "காமாலைப் பார்வையின்" கோளாறு.
உங்களைப் பார்ப்பான் என்று கூறும் அனைவர் முகத்திலும் கரியை பூசி, நான் பிராமணன் என நிரூபித்துவிட்டீர்கள்!
மலையை நோக்கி செல்லும் வயதில் *லையை நோக்கி சென்ற உம் கொற்றம் வாழ்க!
இந்த மாதிரி பதிவுகளுக்கு அர்த்தம் என்னான்னா, மாட்டை அவுத்து விட்டுட்டாங்க வீட்டிலே, அது ஊர் மேயுது…!
//சீறி எழுந்த டோண்டு ராகவன் அவருக்கு பல உதாரணங்கள் மூலம் (தேவிகா, ஷீலா, நீட்டூ சிங் ஆகியோர்) உண்மை நிலையை உரைத்தது இப்பதிவுக்கு வேண்டாமே//
aalaya Kalasam aadhavanaaley minnudhal poley minnudhu ingey
Azhahe Vaa Aruhe vaa
Alaiye vaa Thalaiva Vaa
// சும்மா இல்லாமல் இந்தியப்பெண்களுக்கு அந்தளவுக்கு (38”) மார்பகங்கள் கிடையாது என்று வேறு கூறிவைத்தார். சீறி எழுந்த டோண்டு ராகவன் அவருக்கு பல உதாரணங்கள் மூலம் (தேவிகா, ஷீலா, நீட்டூ சிங் ஆகியோர்) உண்மை நிலையை உரைத்தது இப்பதிவுக்கு வேண்டாமே).//
அட் லீஸ்ட் ஒரு மார்க்டெடிங் மானேஜர் போஸ்டாவது உங்களது ஆழ்ந்த அறிவைக்கண்டு புகழ்ந்து மெய் மறந்து
ஆஃபர் பண்ணினாங்களா ?
அது இருக்கட்டும், இந்த விசயத்தில் பாப்பாத்திகள் கொஞ்சம் மட்டம் தான் அப்படின்னு கூட சொல்லிட்டீங்களா !
அவனவன் பாம்பை பத்திரமா பாத்துக்கோங்கப்பா :)
இந்த புகை படத்தில், கச்சு transparent ஆகவா இருக்கிறது ? - இல்லை காட்சி பிழையா? -
ப்ளாக் - சென்சர் ஷிப் எல்லாம் கிடையாதா ?
இந்த பதிவிற்கு 18+ போடாடதை வன்மையாக கண்டிக்கிறேன் என்று யாரும் பின்னூட்டம் போடாடதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்...
யான் பெற்ற இன்பம் பெறுக வையகம்னு ஞாபகத்துல இருந்திருந்தா, அட்லீஸ்ட் வால்பையனையாவது கூட்டிட்டு போயிருக்கலாம்...
kaaman sense , kaamaalai paarvai - siladaiyaa :)
Post a Comment