pt
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி-1. மனிதாபிமானமற்ற முறையில் கனிமொழி சிறையில் அடைப்பு: கருணாநிதி
பதில்: பேட்டி காணும் பத்திரிகையாளர்களுக்கெல்லாம் மூளையே இல்லை என அசட்டுத்தனமாக கருதும் ஒருவரது பிரலாபம்.
கேள்வி-2. மெழுகுவத்தி தயாரிப்பது எப்படி: ஓய்வு நேரத்தில் கனிமொழி பயிற்சி
பதில்: சோம்பி இராமல் வேலை செய்வது நல்லதுதானே..
கேள்வி-3. சென்னையில் துணை நகரம் அமைக்கும் திட்டத்திற்கு புத்துயிர்
பதில்: அது காலத்தின் கட்டாயம். பொருளாதார முன்னேற்றங்கள் அதிகமாகும்போது இதெல்லாம் தேவைப்படும்.
கேள்வி-4. லோக்பால் விவகாரத்தில் தி.மு.க.,வின் சுருதி மாறுகிறது
பதில்: வரவேற்கத்தக்க மாறுதல்.
கேள்வி-5. முதியோர் உதவித்தொகை கேட்டு மனுக்கள் குவிகின்றன : 1000 ரூபாயாக உயர்ந்ததால் ஆர்வமோ ஆர்வம்
பதில்: அவ்வாறு உதவித் தொகை பெறுபவரிடம் கூட மாமூல் கேட்கும் அல்பங்களை நினைத்தால் மனம் ஆறவில்லையே,
கேள்வி-6. ஏழைகளுக்கு ஆடு, மாடு கொடுக்கும் திட்டம்: ஜெ., ஆலோசனை
பதில்: அவற்றை பராமரிக்கும் செலவை யார் தருவார்கள் என சிலர் கேட்டாலும் கேட்கலாம்.
கேள்வி-7. "சமூக பிரதிநிதிகள் நெருக்கடிக்கு பணிய வேண்டாம்': காங்கிரஸ்
பதில்: ஊழல் செய்யாமல் இருந்தால் பின்னால் ஏன் நெருக்கடி வரப்போகிறது?
கேள்வி-8. இந்தக்காலத்தில் கடவுளுக்கு அடுத்தபடியாக பொதுவாக எல்லோராலும் மதிக்கப்படுவது பணம். பணம் இல்லாவிட்டால் பிணம் என்ற பழமொழி கூட உண்டு. காசையே கூட கடவுள் என்று சொல்பவர்கள் கூட உண்டு.
பதில்: பணம் பத்தும் செய்யும், பணமென்றால் பிணமும் வாயைத் திறக்கும் போன்ற பழமொழிகள் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருப்பவை. ஆகவே அது என்ன இந்தக் காலத்தில் என்ற பேச்சு?
கேள்வி-9. சோதனையும், தோல்வியும் தி.மு.க.,வுக்கு பழக்கப்பட்டது தான் : தமிழச்சி தங்கபாண்டியன்
பதில்: அக்கட்சியின் முக்கிய பிரச்சினையே அதன் தலைமைதான். சீர் செய்ய முடியாத அளவுக்கு மாசுபட்டு விட்ட அதை துறந்தால்தான் கட்சி சரியாகும் வாய்ப்பு உண்டு.
கேள்வி-10. அமைச்சர் பதவியில் இருந்து தயாநிதியை நீக்க 75 வழக்கறிஞர்கள் மனு
பதில்: அடேடே வழக்கறிஞர்கள் சில சமயங்களில் நல்ல காரியங்கள் கூட செய்வார்கள் போலிருக்கிறதே.
கேள்வி=11. நிலக்கரி விலை உயர்வு, சூரிய மின்சக்தி கவர்ச்சியாகிறது!
பதில்: நிலக்கரியின் இருப்பு வேகமாக குறைந்து வரும் இக்காலத்தில் இப்போதே மாற்று ஏற்பாடுகளை கவனிப்பதும் நல்லதுதானே.
கேள்வி-12. ஹசாரே, ராம்தேவுக்கு பதிலடி கொடுக்க ராகுல்: காங்கிரசில் வலுக்கிறது கோரிக்கை
பதில்: எப்படி பதிலடி தருவாராம்? இன்னும் அதிக ஊழலுக்கு வழிவகுத்தா?
கேள்வி-13. எந்திரிச்சதும் குடி... ஏழை குடும்பங்களுக்கு "வெடி!'
பதில்: அவரவருக்கு அவரது நியாயங்கள். இரு தலைமுறைகளாக குடி வாசனையே அறியாதவர்களுக்கு குடியை அறிமுகப்படுத்திய மகானுபாவர் கருணாநிதியைத்தான் சொல்லணும். சோவியத் யூனியன் அழிந்ததற்கு அதன் தொழிலாளிகளின் குடிப்பழக்கமும் ஒரு காரணமே.
14. வேண்டவே வேண்டாம்... ஆறு வழிச்சாலை!
பதில்: ஊர் மக்கள் கூறுவதும் நியாயமாகத்தானே உள்ளது? பாதிக்கப்படும் கட்டுமானங்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்வதையும் பிராஜக்டின் நோக்கமாகக் கொள்வது அவசியம்.
15. தனியாரிடம் கூடுதலாக 1,200 மெகாவாட் மின்சாரம் வாங்க முடிவு: மின்வாரியம் டெண்டர் அறிவிப்பு
பதில்: எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்னும் நிலையில் தமிழக அரசு உள்ளது. மோதி ஆட்சிக்கு வந்தபோது குஜராத்தும் இந்த நிலையில்தான் இருந்தது. ஆனால் இப்போது? அவரது ஆலோசனை நமக்கு இப்போது அவசியம். அரசுக்கு அதை செய்ய மனம் வருமா?
ரமணா
கேள்வி-16. பாண்டிச்சேரி முதல்வரின் சந்திப்பு சோனியாவுடன், அதிமுக தலைவி என்ன சொல்வார்?
பதில்: என்னதான் அரசியலில் இதெல்லாம் ஜகஜம் எனக் கூறினாலும் ரங்கசாமி செய்தது ஓவர்தான் என்பது என் அபிப்பிராயம்.
கேள்வி-17. சுப்பிரமணியசாமி வீசும் ஊழல் வெடிகுண்டுப் புகார் அடுத்து யாரை தாக்கும்?
பதில்: அவருக்கே அது தெரியாது என இருக்கும் பட்சத்தில் நான் என்ன கூறுவது?
கேள்வி-18. தாத்தா சூரியப்பேரனை கைவிட்டுவார் போலுள்ளதே?
பதில்: மகள் பாசம்.
கேள்வி-19. செட்டி நாட்டுச் சீமானுக்கு சிக்கலாமே?
பதில்: தவறான லின்க் கொடுத்துள்ளீர்கள் போலிருக்கிறதே. அதனால் என்ன பரவாயில்லை. திருமாவின் முகமூடி கிழிந்ததல்லவா? செட்டிநாட்டுச் சீமான் செய்த முன்வினை இப்போது வந்துள்ளது.
கேள்வி-20. ஊடக வாய்களுக்கு மெல்வதற்கு அவல் தொடர்ந்து கிடைத்துக் கொண்டேயிருக்கிறதே?
பதில்: அது எக்காலத்திலும் நடப்பதுதானே. அயோத்தி ராமன் காலத்தில் கூட பல வீடுகளில் தசரதர் கைகேயிக்கு தோப்புக்கரணம் போட்டதையெல்லாம் சொல்லிச் சிரித்திருந்திருப்பார்களாக இருக்கும்.
கேள்வி-21. டீசல் லிட்டருக்கு ரூபாய் 3 விலையேற்றம் காரணம் காட்டி லாரி வாடகையை 20 % ஏற்றுவது பற்றி?
பதில்: இதில் என்ன தவறு? புரிந்து கொல்ளக்கூடிய செயல்தானே.
கேள்வி-22. தமிழக முதல்வர் மேற்கு வங்க முதல்வரை பின்பற்றி வரிச் சலுகை தருவாரா?
பதில்: ஒவ்வொரு மாநிலத்தின் நிலைக்கேற்பத்தான் அந்தந்த அரசு செயல்பட வேண்டும். அப்படியே பின்பற்ற வேண்டும் என்றால் மோதி இருக்க மற்றவரை பின்பற்றுவது கனியிருப்பக் காய் கவர்ந்தற்று.
கேள்வி-23. மின்வெட்டு தொடர்கிறதே?
பதில்: இவ்வளவு ஆண்டுகளாக கெட்டிருந்த நிலையை சரியாக்க நேரம் தேவைப்படும் என்றாலும் அதை முடிந்த அளவுக்கு துரிதப்படுத்தும் அரசு என்பதே எதிர்பார்ப்பு.
கேள்வி-24. தேமுதிக எம்.எல்.ஏ பார்த்திபனின் சமீபத்திய நடவடிக்கைகள் பற்றி?
பதில்: எதிர்க்கட்சி எம்.எல்.ஏ. ஆனதற்கே இந்த ஆட்டமா? முளையிலேயே கிள்ளீ எறிய வேண்டிய விஷயம் இது. இவரை மாதிரி கூட்டாளிகள் இருந்தால் விஜயகாந்துக்கு தனியாக விரோதிகளே தேவை இல்லை.
கேள்வி-25. முதல்வர் ஜெயலலிதாவின் 27.6.11 ஆங்கில டீவிக்கு (TIMES NOW) அளித்த பேட்டி பற்றி?
பதில்: நான் அதை பார்க்கவில்லை. ஆகவே கருத்து ஏதுமில்லை.
மேலும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் சந்திப்போம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
மெய்யியலின் பகுத்தறிவு
-
நான் தீவிர இலக்கியத்துக்குள் நுழைந்தபோதே ஆன்மிகம் –
இந்தியத்தத்துவத்துக்குள்ளும் நுழைந்துவிட்டேன். என் பெரியப்பாவின் மகன்
முகுந்தன் அண்ணா நீர்ப்பாசனத்துறை ...
16 hours ago
18 comments:
In the sixties, the lifting of prohibition was announced by the DMK chief. Rajaji, despite his ripe age then, I heard, went to MK's house and requested him to drop the idea. But, the prohibition policy was still given up and the damage was done irevocably. In my opinion, this was a monumental blunder.
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
1.ஆந்திர மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற காளஹஸ்தி கோயிலில் திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்வி தரிசனம் செய்தார்.
2.லோக்பால் மசோதா தொடர்பாக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவை நாளை சந்திக்க உள்ளதாக பிரபல சமூக சேவகர் அண்ணா ஹசாரே தெரிவித்தார்.
3.இலங்கை அதிபர் ராஜபக்ஷ போர்க் குற்றவாளி என உலக நாடுகள் அறிவித்த நிலையில், இனியும் இந்தியா மெüனம் காக்கக் கூடாது என்றார் திராவிடர் கழக மாநிலப் பேச்சாளர் அதிரடி அன்பழகன்.
4.உண்மையான ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவை: ராமதாஸ்
5. உமாபாரதி கட்சி பாஜகவுடன் இணைந்தது
டோண்டு சார்
பதில்# 13 பற்றி:
கம்யூனிச நாடுகளில் மக்களுக்கு ஊத்திகொடுத்து புரட்சி செய்யாமல் பார்த்துகொள்வது ஒரு டெக்னிக். வடகொரியாவில் அதைதான் செய்து கொண்டிருக்கிறார்கள்.
1.சூரியப் பேரனின் மத்திய மந்திரி பதவி இன்னும் எத்தனை நாள் வரை?
2.மருத்துவர் ஐயா உள்ளாட்சித் தேர்தலில் அணிமாறுவார் போலுள்ளதே?
3.கேபடன் அடுத்து என்ன செய்வார்?
4.உறவுக்கு கை கொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம் எழுப்பப்படும் கோஷம் என்ன சொல்கிறது?
5.மொபைலில் அதிகம் பேசினால் மூளை புற்றுநோய் வரும் என சொல்லப் படும் செய்தியால் அதிகம் பாதிக்கப்படப் போவது யார் யார்?
6.கனிமொழிக்கு ஜாமீன் வழங்கப்பட வேண்டும்: ஜஸ்வந்த் சிங்
7. உள்ளாட்சித் தேர்தல்களில் திமுக கூட்டணி மறுபரிசீலனை: பாமக பொதுக்குழுவில் ராமதாஸ்
8.புதுவை அமைச்சரவை: முக்கியத் துறைகளை தன்வசமே வைத்துக் கொண்டார் ரங்கசாமி
9.கோயில் யானைகள் பராமரிப்பு குறித்து ஆலோசனை
10.சாதிக் பாட்சா கொலை செய்யப்பட்டுள்ளார்?: சிபிஐ சந்தேகம்
6.இது எப்படியிருக்கு?
காளகஸ்திக்கு போன குடும்பம்
http://idlyvadai.blogspot.com/2011/06/blog-post_30.html
7.மீண்டும் சமூக காத்த வீராங்கணையின் முற்சியால் பெறியியல் கல்லுரி தகுதி மதிப்பெண் விவாகரம்?
8.அம்மையாரின் அடுத்த டெல்லி பயணம் யாருக்கு வேட்டு?
9.அன்னை ஹசாரேயின் முயற்சி?
10.தமிழகத்தில் நில மோசடி வழக்குகள் களை கட்டுகிறதே?
//Chandramouli said...
In the sixties, the lifting of prohibition was announced by the DMK chief. Rajaji, despite his ripe age then, I heard, went to MK's house and requested him to drop the idea. But, the prohibition policy was still given up and the damage was done irevocably. In my opinion, this was a monumental blunder.//
IN TAMILNADU THE PROHIBITION WAS LIFTED BY SRI KARUNANIDTHI, THE THEN CHIEF MINISTER OF TAMILNADU IN THE YEAR 1971 .TO CONVINCE THE PEOPLE M.G.R WAS NOMINATED AS CHAIRMAN OF THE PROHIBITION PIRASSHARA KUZHU. EVEN COLLEGE STUDENTS OF THAT PERIOD TASTED THE ARRACK/TODDY/LIQUORS FIRST IN THEIR LIFE..AFTER SOME YEARS THE PROHIBITION WAS AGAIN INTRODUCED IN TAMIL NADU .
AFTER SOME YERAS PARTIAL PROHIBITION WAS INTRODUCED AND TASMAK TYPE SHOPS WERE OPENED.CALCULATING THE HEAVY INCOME RECEIVED FORM THESE SHOPS IT MAY NOT BE POSSIBLE TO INTRODUCE GUJARAT TYPE PROHIBITION IN TAMILNADU IN FUTURE ALSO.IT IS TOLD THAT THE INCOME FROM TASMAK IS USED TO DISTRIBUTE FREE THNIGS TO PEOPLE TO WOO VOTERS.
NOW MOST OF THE DRUNKERS ARE STARTING THEIR "POTHAI" PLEASURE FROM EARLY MORNING ONWARDS.
SOME ARE SAYING THAT THEY ARE PAYING MORE TAX TO TAMILNADU GOVERNMENT BY THIS WAY AND THEY EXPECT VERY SPECIAL TREATMENT FORM GOVERNMENT.
DOES DONDU SIR AGREE ?
தமிழர் நலனே தன்னலமென வாழும் தானைத் தலைவனின் அன்பு மகளாம் அருமைத்திருமதி கனிமொழியாரின் ஜாமீன் மணு நிராகரிப்புக்கு தனது கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்தும் நல்லிதயம் கொன்ட பாஜ கட்சியினர் செயல் கண்டு தமிழன்னை உள்ளமெல்லாம் பூரிக்கின்றாள்.கூடா நட்பு கேட்டில் விழ்ந்து விட்ட தன்மையில் மாறாத் துயரத்தில் உழலும் உண்மையான திமுகழகத்தின் தொண்டர்களின் மனதில் ஒரு மாற்றுத் திட்டம் உருவாவது காலத்தின் கட்டாயம்.கழகத்தின் வெற்றியும் இந்த தமிழ் மக்களின் நலன் ஒன்றே
தாரக மந்திரமாய் சுழலும் நல்லவர்களின் எண்ணச் செயல் பாடுகள் சிறக்கட்டுமே.
எங்கே நாம் மீண்டும் அரியணை யேறிவிடுமோ என் பதைபதைக்கும் ஒரு சில கெடுமதியாளர்கள் வரலாற்றில் காலத்தின் கட்டாயம் காரணமாய் நடந்து விட்ட ஒரு சில செயல்களை 40 ஆண்டுகளுக்கு பிறகு திரித்துக் கூறி கழகத்துக்கு களங்கம் கற்பிக்க முயலும் செயலை தமிழ் சமுதாயம் ஏற்றுக் கொள்ளாது.கழகத்தின் தலைவர் கலைஞர் அவர்களால் அடிக்கடி சொல்லும் ஒரு செய்தியை இங்கு நினைவுகோர்வது அனைவருக்கும் நன்மை பயக்கும்.கழகம் ஒருபோதும் பார்ப்பனர்களை எதிர்க்கவில்லை பார்ப்பனியத்தைதான் எதிர்க்கிறது.
ஒன்றே குலம் ஒருவனே தேவன் எனும் அண்ணாவின் பொன் வாக்கையும் மறக்கவில்லை.மாற்றான் தோட்டத்தின் மல்லிகைக்கும் மணம் உண்டு.பகுத்தறிவுக் கொள்கையின் பால் கொண்ட மாறக் காதலினால் ஒரு சில சமயம் கொஞ்சம் கடுமையான விமர்சனத்தை தலைவர் சொல்வதற்கு ஆட்படுத்தபடுகிறார்.மீண்டும் புதிய லட்சிய உறவுகள் மலரட்டும்.தமிழர் வாழ்வு மீட்டெடுக்கபடட்டும்.உறவுக்கு கைகொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுக்கவும் தயங்காது தயங்காது இந்த ஒடுக்கபட்ட ,தாழத்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களின் ஒரே விடி வெள்ளியாம் திராவிட முன்னேற்றக் கழகம் என் சொல்வதில் இறுமாப்பு கொள்கிறது தமிழினம்.
/pt said...
//Chandramouli said...
In the sixties, the lifting of prohibition was announced by the DMK chief. Rajaji, despite his ripe age then, I heard, went to MK's house and requested him to drop the idea. But, the prohibition policy was still given up and the damage was done irevocably. In my opinion, this was a monumental blunder.//
IN TAMILNADU THE PROHIBITION WAS LIFTED BY SRI KARUNANIDTHI, THE THEN CHIEF MINISTER OF TAMILNADU IN THE YEAR 1971 .TO CONVINCE THE PEOPLE M.G.R WAS NOMINATED AS CHAIRMAN OF THE PROHIBITION PIRASSHARA KUZHU. EVEN COLLEGE STUDENTS OF THAT PERIOD TASTED THE ARRACK/TODDY/LIQUORS FIRST IN THEIR LIFE..AFTER SOME YEARS THE PROHIBITION WAS AGAIN INTRODUCED IN TAMIL NADU .
AFTER SOME YERAS PARTIAL PROHIBITION WAS INTRODUCED AND TASMAK TYPE SHOPS WERE OPENED.CALCULATING THE HEAVY INCOME RECEIVED FORM THESE SHOPS IT MAY NOT BE POSSIBLE TO INTRODUCE GUJARAT TYPE PROHIBITION IN TAMILNADU IN FUTURE ALSO.IT IS TOLD THAT THE INCOME FROM TASMAK IS USED TO DISTRIBUTE FREE THNIGS TO PEOPLE TO WOO VOTERS.
NOW MOST OF THE DRUNKERS ARE STARTING THEIR "POTHAI" PLEASURE FROM EARLY MORNING ONWARDS.
SOME ARE SAYING THAT THEY ARE PAYING MORE TAX TO TAMILNADU GOVERNMENT BY THIS WAY AND THEY EXPECT VERY SPECIAL TREATMENT FORM GOVERNMENT.
DOES DONDU SIR AGREE ?/
அறிவுசால் பெருந்தகை டோண்டு ஐயா அவர்கள், ஆதிக்க சக்திகளின் ஊதுகுழலாய் செயல் படுவோருக்கு இந்த மாறிய அரசியல் சூழலில் அருமையான அதிரடி பதில் தருவார் என தமிழ் சமுதாயம் பெரும் நம்பிக்கை கொள்வதை வரலாறு பார்க்கப் போகும் செயலுக்கு எழிலரசுவின் உளப்பூர்வ நன்றி
pt:
Yes, you are right. Generations after the lifting of prohibition have been hooked,and the youngsters of all classes have started drinking early in their lives. In recent movies, the drinkig scenes have become so common that the life styles of younger generation are portrayed as though it is normal to drink. People who were born before the 1960s were, in a way, a lucky lot that they considered that drinking was a sin and they escaped from the clutches of drinking.
டோண்டு சாரின் கேள்வி பதில் பகுதிக்கு:
1) நெத்தியடியாக கேள்வி கேட்பதில் வீரமணியை மிஞ்ச யாராலும் முடியாது. சமீபத்தில் அவர் ஒரு கேள்வி கேட்டார் விடுதலை பத்திரிக்கையில். "திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் பாதாள அறைகளில் கோடி கோடியாக தங்கமும் ரத்தினங்களும் மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டுமாம்! பணவீக்கத்தை சரி செய்ய அரசு பயன்படுத்திக் கொள்ளுமா?" இவ்வளவு வக்கணையாகக் கேள்வி கேட்கும் இவர் பெரியார் டிரஸ்ட் பெயரால் அனுபவிக்கும் ஆயிரம் கோடி ரூபாய் சொத்திலிருந்து இது வரை ஒரு பைசா கொடுத்து இருக்கிறாரா அரசுக்குப் பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த? நிறைய சாதாரண அமெரிக்க குடிமக்கள் அரசின் வெளி நாடு கடன் சுமை குறைக்க தாமாகவே நன்கொடை அளிக்கின்றனராமே?
2) ரஜினியைத் திட்டி ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார்கள் விடுதலையில். அதில் ஒரு வரி "சங்கராச்சாரியார் போல நாத்திகனுக்கு வைத்தியம் பார்க்காதே (தெய்வத்தின் குரல் 3ஆம் பகுதி பக்கம் 734) என்று சொல்லக் கூடியவர்களல்லர் பகுத்தறிவு வாதிகள்." வீரமணி வகையறாக்கள் பக்க reference எல்லாம் கொடுத்து அவர்கள் வாதம் உண்மை என நம்ப ஒரு casual ரீடர் நம்பும் போல் செப்படி வித்தை செய்வதில் கில்லாடிகள். என்னதான் அப்படி சொல்லி இருக்கிறார் சங்கராச்சாரியார் என்று தெய்வத்தின் குரல் 3ஆம் பகுதி பக்கம் 734 ஐ பார்த்தேன். ஆயுர்வேத சாஸ்த்ரங்களை எழுதிய ரிஷிகள் "நாத்திகனுக்கு வைத்யம் செய்யாதே" என்று எழுதி வைத்துள்ளதாக சங்கராச்சாரியார் கூறுகிறார். ஆனால் எப்படி அவரை வீரமணி வகையறாக்கள் misquote செய்கிறார் பாருங்கள்?
3) இன்னும் ஒரு விடுதலை கட்டுரையில் வழக்கம் போல ஜெயலலிதாவையும் சோவையும் வீரமணி கிண்டல் "சரிதான். அதோடு, அ.தி.மு.க. பக்தர்கள் அம்மாவுக்காக மண்சோறு தின்கிறார்களே. அது பற்றி ஒன்றும் அம்மா சொல்லமாட்டாரா? துக்ளக் அய்யர்வாளும் அதனைக் கண்டு கொள்ளத்தான் மாட்டாரா?" செல்வி குடும்பம் காளஹச்திக்குச் சென்று கருணாநிதி, ஸ்டாலின், கனிமொழி பெயரில் ராகு கேது பூஜை செய்த கூத்தைப் பற்றி இவர் ஒன்றும் கூற மாட்டாராம். ஆனால் சோ "மண்சோறு" தின்றவர்களை விமர்சனம் செய்ய வேண்டுமாம்! என்ன ஒரு பித்தலாட்டம்?
4) Dirk Nowitzki என்ற ஜெர்மானிய கூடைப் பந்து வீரர் அவர் சார்ந்த அணிக்கு அமெரிக்க கூடைப் பந்து championship டைட்டில் வாங்கிக் கொடுத்திருக்காரே! Dirk ஒரு gentleman என்று கூடைப் பந்து ரசிகர்களிடம் நல்ல பெயர் வாங்கி விட்டார்! உங்களுக்கு ஆர்வம் உண்டா கூடைப் பந்து விளையாட்டில்?
--
தி மு க காரன் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வான் என்று மூதறிஞர் அவர்களுக்கு தெரியாதா,தன்னுடைய ஈகோவின் காரணமாக தெரிந்தே தமிழனை படுகுழியில் தள்ளிவிட்டு,கருணாநிதி வீட்டிற்கு கொட்டும் மழையில் சென்று மது வேண்டாம் என்று கெஞ்சினார் என்பது மாய்மாலம்.
@Vijayan
நீங்கள் கூறுவதை ஏற்றுக் கொள்வதற்கில்லை.
1967-ல் காங்கிரஸ் பதவி இழப்பது காலத்தின் கட்டாயமே. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக பதவியில் இருந்தது கட்சியில் சுயநல கும்பல்களை வளர்க்கவே உதவியது.
1967-ல் பதவிக்கு வந்த அண்ணாவும் மதுவிலக்குக் கொள்கையில் ராஜாஜி மற்றும் காமராஜ் அளவுக்கே உறுதியாக இருந்தவர்.
ஆகவே கருணாநிதி 1971-ல் செய்யப்போவது அப்போது யாருக்குமே, ஏன் கருணாநிதிக்கே கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
///இது எப்படியிருக்கு?
காளகஸ்திக்கு போன குடும்பம் ///
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி(2)
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
சொந்தம் ஒரு கை விலங்கு நீ போட்டது
அதில் பந்தம் ஒரு கால் விலங்கு நான் போட்டது
சொந்தம் ஒரு கை விலங்கு நீ போட்டது
அதில் பந்தம் ஒரு கால் விலங்கு நான் போட்டது
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல
நான் அவதாரம் இல்லையம்மா தத்துவம் சொல்ல
பரிகாரம் தேடி இனி எவ்விடம் செல்ல
எனக்கு அதிகாரம் இல்லையம்மா வானகம் செல்ல
ஒரு நாளும் நான் இது போல் அழுதவனல்ல
அந்த திருனாளை கடன் கொடுத்தவன் யாரிடம் சொல்ல
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி(2)
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
எப்படி பதிலடி தருவாராம்? இன்னும் அதிக ஊழலுக்கு வழிவகுத்தா?//
நெத்தியடி பதில்.
பரந்து விரிந்து கிடக்கும் இந்தப் பூமிப்பந்தில் வாழும் கோடான கோடி உலக மக்கள் அனைவருக்கும் வாழும் நாகரிகம் கற்று தந்த இனம் தான் தமிழினம்.அகில உலகத்தார் போற்றி பாராட்டிய கன்னித்தமிழ் காவலர்,பகுத்தறிவுப் பகலவனின் உண்மையான சுடரொளியாம் தலைவர் கலைஞர் மிகுந்த மன உழைச்சலுசடன் தான் 1971 ம் ஆண்டு மதுவிலக்கு கொள்கையில் ஒரு சிறு மாற்றத்தை கொண்டுவந்தார் என்பது வரலாறு சொல்லும் உண்மை.பாடுபட்டு உழைக்கும் மக்கள்,அன்றாடம் காச்சிகள் 1970 களில் திருட்டுத்தனமாய் காச்சப்படும் கள்ளச் சாரயத்தை குடித்து மாண்டு போனர்.கள்ளச் சாரய வியாபாரம் செய்வோரின் சதி நாடறிந்த உண்மை.தமிழினம் அழிந்து போகமால் காக்க வேண்டியது தலைவரின் கடமையன்றோ?.மூதறிஞர் ராஜாஜியிடம் இது பற்றி தலைவர் விளக்கமாய் சொன்னார்.வேறு வழியில்லாமல் மதுவிலக்கு கொஞ்சம் தளர்த்தப்பட்டது.இருந்த போது மதுவின் தீமைகளை,கொடுமைகளை பிரச்சாரம் செய்யும் மாபெரும் சமுதாயப் பணியினை கழகம் ஒரு குழு அமைத்து செய்து கொண்டு தான் வருகிறது.காவல்துறையிலும் இதற்கான ஒரு தனி பிரிவு இயங்கிறது.இருந்த போதிலும் 2016ல் மீண்டும் ஆட்சி அமைக்கும் போது மக்கள் கோரினால் தலைவர் மதுவிலக்கு கொள்கையில் மாற்றங்களை கொண்டு வருபவார் என தமிழினம் நம்புகிறது.மக்கள் நலன் ஒன்றே தன் உயிர் மூச்சாய் வாழும் அவர் மேல் அபாண்டமாய் குற்ற்ஞ்சாட்டும் தமிழின விரோதிகளை,ஆதிக்க சக்திகளை,பிற்போக்கு மனமுடையாரை,முப்பிரிநூல் மாகன்களை காலம் பார்த்து கொள்ளட்டுமே.
/ezhil arasu said...
அறிவுசால் பெருந்தகை டோண்டு ஐயா அவர்கள், ஆதிக்க சக்திகளின் ஊதுகுழலாய் செயல் படுவோருக்கு இந்த மாறிய அரசியல் சூழலில் அருமையான அதிரடி பதில் தருவார் என தமிழ் சமுதாயம் பெரும் நம்பிக்கை கொள்வதை வரலாறு பார்க்கப் போகும் செயலுக்கு எழிலரசுவின் உளப்பூர்வ நன்றி/
EZHILARSU SIR,
ARE YOU A SUPPORTER OF DMK OR ?
ARE YOU APPRECIATING MR.KARUNANITHI OR ?
ARE YOU ATTACKING BRAHMIN COMMUNITY OR?
உங்களுடைய அருமையான கேள்வி பதில் தொடருக்கான கேள்வி ஒன்று:
ஒரு தலித்தை சங்கராச்சாரியார் ஆக்குங்கள் என்று அம்பேத்கர் சொன்னதாக இந்தக் கட்டுரை சொல்கிறதே. அது சாத்தியமா ?
http://www.tamilhindu.com/2011/07/why_ambedkar_converted_to_buddhism-09/
Post a Comment