ப. சிதம்பரம் லோக்சபாவுக்கு ஏமாற்றுவேலைகள் செய்ததன் மூலம்தான் வந்துள்ளார் என ஜெயலலிதா சாட, அவர் செய்வது கோர்ட்டை அவமதிக்கும் செயல் என சிதம்பரம் எதிர் சாடல் செய்துள்ளார். விஷயம் என்னவென்றால், 2009-லிருந்து இது கோர்ட்டால் விசாரிக்கப்படும் கேஸ் என்பதுதான் அவரது வாதம்.
எனக்கு கோர்ட்டை அவமதிக்கும் எண்ணம் இல்லை. ஒரே ஒரு கேள்வி மட்டும் உள்ளது. இந்த கேஸ் என்று மட்டுமில்லை, பல கேஸ்களிலும் நடப்பதுதான். இப்படித்தான் ஒரு தேர்தல் வழக்கில் ஒரு மெம்பரின் தேர்தல் செல்லாது என தீர்ப்பு வரும் சமயத்தில் சம்பந்தப்பட்ட மன்றத்தின் ஆயுளே முடிந்து விட்டது. பிறகு இந்தத் தீர்ப்பை வைத்துக் கொண்டு என்ன செய்வதாம்? அப்படியாக இம்மாதிரி காலவரையறுக்கப்படும் வழக்குகளை தாமதமாக பைசல் செய்வதன் காரணம் என்ன?
குடியரசுத் தலைவரின் அலுவலகம் கூட அதே மாதிரித்தான் பல மரண தண்டனை வழக்குகளில் கருணை மனுவை பைசல் செய்வதில் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு தாமதம் செய்து வருகிறது. அஃப்சல் குரு, கசாப், நளினி, முருகன் ஆகியோரை இன்னும் சகித்துக் கொண்டு தண்டச்சோறு போட வேண்டியிருக்கிறது.
பல ஆண்டுகளுக்கு முன்னால் விஷ ஊசி வழக்கு ரொம்பவும் பிரசித்தி பெற்றது. அதில் தூக்கு தண்டனை பெர்ற வைத்தீஸ்வரன் பல ஆண்டுகள் வாய்தா எல்லாம் வாங்கி இழுக்கடித்து, பிறகு கருணை மனு மீதான தீர்ப்பும் பல ஆண்டுகள் இழுத்தடிக்க, பல ஆண்டுகள் தன்னைத் தவிப்பில் வீட்டதற்காகவே கருணை வழங்க வேண்டும் என அக்கொலைக்காரன் மனு போட, அதையும் ஏற்று அவன் மரண தண்டனையையும் குறைத்து ஆயுள் தண்டனையாக்கி, பிறகு வெளியிலும் விட்டு விட்டார்கள். இப்போது அவன் எங்கிருக்கிறானோ, இன்னும் யாரையெல்லாம் கொலை செய்யப் போகிறானோ என்று எண்ண வேண்டியுள்ளது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
‘உங்க கருத்தோட முரண்படுறேன், ஆனா…”
-
அன்புள்ள ஜெ அண்மையில் ஒரு கடிதத்தில் உறுதியான கருத்துக்கள்
கொண்டிருக்கக்கூடாது என்று சொல்லியிருந்தீர்கள். இளம்வாசகர்கள் உடனடியாக
உறுதியான கருத்துக்கள் கொண்...
1 day ago
9 comments:
//பிறகு இந்தத் தீர்ப்பை வைத்துக் கொண்டு என்ன செய்வதாம்? அப்படியாக இம்மாதிரி காலவரையறுக்கப்படும் வழக்குகளை தாமதமாக பைசல் செய்வதன் காரணம் என்ன? //
இது போன்ற வழக்குகள் குறிப்பாக நாட்டின் உள் துறை அமைச்சராக இருப்பவர் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பி ஆக இருக்க வேண்டும் என்ற நோக்கில் பொது நல வழக்கு தொடர்ந்து வழக்கை விரைவாக முடிக்கக் கேட்டுக் கொள்ளலாம், செய்வதும் செய்யாததும் நீதி மன்றத்தின் கையில்.
//இன்னும் யாரையெல்லாம் கொலை செய்யப் போகிறானோ என்று எண்ண வேண்டியுள்ளது.//
இதைப் படித்துவிட்டு நங்க நல்லூர் பக்கம் அவன் வராமல் இருக்கனும் என்று மகர நெடுங்குலை காதனை வேண்டுங்கள்.
:)
மும்பை மக்களை சிட்டுக்குருவி போல சுட்டுக்கொன்ற கொலைகாரனையே இன்னும் விசாரிக்கறாங்களாம்...இது ஒன்றே போதும் இந்தியாவின் நீதி,சட்டம் புரிவத்ற்கு.
கோர்ட்டுகளை கட்டப்பஞ்சாயத்தாக சித்தரிக்கும் ஒரு பின்னூட்டம் மறுக்கப்பட்டது.
கோர்ட்டுகளை அவமதிக்கும் பின்னூட்டங்கள் அனுமதிக்கப் படமாட்டாது.
கத்தி மேல் நடக்கும் வேலைதான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அது எனது பின்னூட்டம்தான். தாமதமாகக் கிடைக்கும் நீதியும் மறுக்கப்பட்ட நீதியே என்பது சரியான கருத்தியலாக இருக்கமுடியும் எனக் கருதுகிறேன். கோர்ட்டுகளை அவமதிக்கவேண்டும் என்பது என் விருப்பமல்ல. அவைகள் அவ்வாறு நடந்துகொள்ளும்போது அதைச் சொல்வது வருத்தத்துடன் கூடிய அவசியமாகிறது.
வணக்கம் டோண்டு சார். இந்திய நீதிமன்றங்களில் காலதாமதமாக தீர்ப்பு வருவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. இத்தனை வழக்குகளுக்கு ஒரு நீதிபதி என்று நிர்ணயம் செய்யப்பட்டு நீதிபதிகள் நியமிக்கப்பட்டால் உடனுக்குடன் வழக்குகள் பைசல் செய்யப்பட வாய்ப்பு உண்டு. ஆனால் இதை அரசியல்வாதிகள் சுய நலம் காரணமாக விரும்புவதில்லை. இரண்டாவதாக வெள்ளைக்காரன் காலத்திய நடமுறைப்படி வி.ஐ.பி களின் வழக்குகளை வரிசைகிரமத்தில் விசாரணைக்கு எடுக்காமல் முன்னுரிமை கொடுப்பதால் இதர வழக்குகள் காலதாமதத்தை சந்திக்க வேண்டியுள்ளது.
Huge case backlog before Supreme Court's constitution bench
"When I came to the Supreme Court in 1980 there used to be only 8,000 special leave petitions annually, but today their number is 40,000," Saran told IANS. He said not all bail matters should come up before the apex court. "I strongly believe that except in murder cases, there should not be any denial of per-trial bail," said Saran.
http://www.deccanherald.com/content/168943/huge-case-backlog-supreme-courts.html
Please read
498A India Ltd: A look into the economics of IPC 498A
இலங்கையின் கொலைக்களம் - சானல் 4 வெளியிட்டது: அதிர்ந்தது உலகம்
Sri Lanka's Killing Fields:-
Jon Snow presents a forensic investigation into the final weeks of the quarter-century-long civil war between the government of Sri Lanka and the secessionist rebels, the Tamil Tigers.
With disturbing and distressing descriptions and film of executions, atrocities and the shelling of civilians the programme features devastating new video evidence of war crimes - some of the most horrific footage Channel 4 has ever broadcast.
Captured on mobile phones, both by Tamils under attack and government soldiers as war trophies, the disturbing footage shows: the extra-judicial executions of prisoners; the aftermath of targeted shelling of civilian camps; and dead female Tamil fighters who appear to have been raped or sexually assaulted, abused and murdered.
The film is made and broadcast as UN Secretary-General Ban Ki-moon faces growing criticism for refusing to launch an investigation into 'credible allegations' that Sri Lankan forces committed war crimes during the closing weeks of the bloody conflict with the Tamil Tigers.
In April 2011, Ban Ki-moon published a report by a UN-appointed panel of experts, which concluded that as many as 40,000 people were killed in the final weeks of the war between the Tamil Tigers and government forces.
It called for the creation of an international mechanism to investigate alleged violations of international humanitarian law and international human rights law committed by government forces and the Tamil Tigers during that time.
This film provides powerful evidence that will lend new urgency to the panel's call for an international inquiry to be mounted, including harrowing interviews with eye-witnesses, new photographic stills, official Sri Lankan army video footage, and satellite imagery.
Also examined in the film are some of the horrific atrocities carried out by the Tamil Tigers, who used civilians as human shields.
Channel 4 News has consistently reported on the bloody denouement of Sri Lanka's civil war. Sri Lanka's Killing Fields presents a further damning account of the actions of Sri Lankan forces, in a war that the government still insists was conducted with a policy of Zero Civilian Casualties.
The film raises serious questions about the consequences if the UN fails to act, not only with respect to Sri Lanka but also to future violations of international law.
http://www.channel4.com/programmes/sri-lankas-killing-fields/4od#3200170
An SMS I received some time back:
"MICROSOFT has declared that its next Operating System will be called 'KASAB'.
They claim it will never HANG !!"
Post a Comment