9/22/2011

டோண்டு பதில்கள் - 22.09.2011

pt
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி:1. உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனித்துப் போட்டி: கருணாநிதி

பதில்: திமுக இப்போதிருக்கும் மோசமான நிலையில் அதனுடன் கூட்டு வைக்க தைரியம் தேவைப்படும். அது எக்கட்சியிடம் உள்ளது?

அது தெரிந்து கருணாநிதி இவ்வாறு கூறுவதை ஒரு டேமேஜை குறைக்கும் செயலாகவே (மீசையில் மண் ஒட்டவில்லை) பார்க்கிறேன்.

கேள்வி:2. தயாநிதி, கலாநிதியிடம் சி.பி.ஐ. விசாரணை
பதில்: முதலில் தயாநிதிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் ஏதும் இல்லை என்னும் ரேஞ்சில் சொன்ன சிபிஐ இப்போது இவ்வாறு நடப்பது ஐயங்களை உருவாக்குகிறது. ஏதோ பெரிய ஆப்பு யாருக்கோ உறுதி எனத் தோன்றுகிறது.

கேள்வி:3. அரசு ஊழியர் மாதச் சம்பளத்துக்கு ரூ.25,751 கோடி: நிதியமைச்சர்
பதில்: புள்ளி விவரங்கள், புள்ளி விவரங்கள். அதைக் கட்டுப்படுத்த ஏதும் முயற்சி கூட இல்லையே.

கேள்வி:4. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3 உயரும்?
பதில்: லிட்ட்ருக்கு 4 ரூபாய் உயரவில்லையே என சந்தோஷப்பட்டுக் கொல்ள வேண்டியதுதான்.

கேள்வி:5. சிறந்த நிர்வாகத்துக்கு குஜராத் உதாரணம்
பதில்: இதில் என்ன சந்தேகம்?

கேள்வி:6. நாட்டின் பாதுகாப்பில் நிச்சயமற்றநிலை: பிரதமர் கவலை
பதில்: பொறுப்பற்ற பிரதமர் இருக்கும் நிலையை எண்ணி, எண்ணி அதே பொறுப்பற்ற பிரதமர் வருந்துகிறாரா, பேஷ்.

கேள்வி:7. பிரதமர் வேட்பாளராக மோடி: அமெரிக்க அறிக்கைக்கு அத்வானி ஆதரவு
பதில்: பாஜகாவில் உள்ள பொறாமையாளர்களது வயிறெரியுமே.

கேள்வி:8. கனிமொழி, சரத்குமார் ஜாமீன் கோரி மீண்டும் மனு தாக்கல்: சி.பி.ஐ. எதிர்ப்பு
பதில்: இன்னும் கொஞ்சம் நாட்கள்தான் களி தின்னட்டுமே.

கேள்வி:9. வெளிச்சந்தைக்கு சவால் விடும் அரசின் இலவசப் பொருள்கள்
பதில்: அப்படி கொடுக்கப்பட்ட இலவச பொருட்களும் வெளிச்சந்தைக்கு வந்த பிறகு சவாலாவது ஒன்றாவது.

கேள்வி:10. கூடங்குளம் குறித்து அச்சம் வேண்டாம்: ஜெயலலிதா
பதில்: பொறுப்பற்ற பேச்சு. அஞ்சுவ தஞ்சாமை பேதமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்.


ரமணா
கேள்வி:11. முன்னாள் முதல்வரின் இலவச திட்டம் இன்னாள் முதல்வரின் விலை இல்லாத் திட்டம் என்ன வேறுபாடு?
பதில்: லேபலில்தான் வேறுபாடு. இரண்டுமே சோம்பேறிகளை உருவாக்கும் திட்டமே.

கேள்வி:12. பெரியவர் கருணாநிதியை தேர்தலில் கைவிட்ட இலவச‌ டீவி யின் கதையை பார்த்த பிறகும் தமிழக் அரசின் விலை இல்லாத்திட்டம் ஜெயிக்க வைக்குமா அதிமுகாவை?
பதில்: திமுக பதவியில் இருக்கும் வரைக்கும் அதிமுகாவை பதவிக்கு கொண்டுவர வைக்க வேண்டும் என்ற ரேஞ்சுக்கு கருணாநிதி முயன்று வென்றார். இப்போது ஜெயலலிதாவின் முறை.

கேள்வி:13. ஒரு வேளை உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றால் என்ன வாகும் இந்த விலை இல்லாத்திட்டம்?
பதில்: அவ்வ்வ்வ்வ்.

கேள்வி:14. இதில் செலவளிக்கப் படும் 10,000 கோடியை அடிப்படை கட்டுமானத்திற்கு செல்வளித்தால் தமிழகம் இன்னுமொரு குஜராத் மாறுமே?
பதில்: அந்த அறிவு இருந்தால்தானே.

கேள்வி:15 .உங்கள் மோடி பிரதமரானால்?
பதில்: நாட்டுக்கு நல்லது.

கேள்வி:16. ஜான் பாண்டியன் விசயத்தில் சிபிஐ விசாரணை கோரி திருமாவளவன் ஆர்ப்பாட்டம் சரியா?
பதில்: இன்னுமா மக்கள் சிபிஐ பற்றி நம்பிக்கை கொண்டுள்ளனர்?

கேள்வி:17. மதிமுகவின் மாநாடு பற்றி?
பதில்: அக்கட்சியும் தனது இருத்தலை அவ்வப்போது அவ்வாறு காட்டிக் கொள்வது அவசியம்தானே.

கேள்வி:18. பெட்ரோல் விலை உயர்வு லிட்டர் ரூ. 100 ஆகிவிடும் போலுள்ளதே?
பதில்: அது உருவாக்கும் விலை உயர்வு விஷச்சக்கரம் கவலையை வரவழைக்கிறது.

கேள்வி:19. சொத்து குவிப்பு வழக்கில் பாதகமான தீர்ப்பு வந்தால்?
பதில்: பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வர்?

கேள்வி:20. அஜித்தின் மங்காத்தா பார்த்தீர்களா எப்படி உங்கள் பார்வையில்?
பதில்: பார்க்கவில்லை, ஆகவே கருத்தேதுமில்லை.

மேலும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் பார்ப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4 comments:

pt said...

டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
1.கூடங்குளம்: பிரதமரே இறுதி முடிவு எடுப்பார்: அமைச்சர் நாராயணசாமி
2.கூடங்குளம் உண்ணாவிரதம் வாபஸ்: முதல்வரின் உறுதிமொழி ஏற்பு
3.தேர்தலை முறையாக நடத்த நீதிமன்றத்தை நாடுவோம்: ஸ்டாலின்
4.நான் பிரதமர் வேட்பாளர் அல்ல: அத்வானி சூசகம்
5.தனித்தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதை அரசு முடிவு செய்யும்: ஆணையர் அய்யர்

ரமணா said...

1.பதுங்கும் பங்குச்சந்தை சீறிப்பாயும் கமாடிடி சந்தை ?
2.அன்னாவை அழைக்கும் பாகிஸ்தான் பற்றி?
3.தமிழக முதல்வரின் தற்கால செயல்பாடுகள் பற்றி?
4.அமெரிக்கா,ஐரோப்பா இவைகளின் எதிர்காலப் பொருளாதாரம்?
5.கூடங்குளம் அணுமின்நிலையம் தேவையா?

BalHanuman said...

'டெல்லி குண்டுவெடிப்புச் சம்பவத்தால் எனது இமேஜ் பாதிக்கப்பட்டுள்ளது’ என்று புலம்புகிறாரே ப.சிதம்பரம்?

BalHanuman said...

நில மோசடித் தடுப்புப் பிரிவையே ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கு தாக்கல் செய்துள்ளதே தி.மு.க.?

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது