ரமணா:
கேள்வி-1. அரசியல் உலகில் சனிப்பெயர்ச்சி பெரிய பாதிப்பை யாருக்கு கொடுக்கும்?
பதில்: நிஜமாகவே பெயர்க்கப்படப் போகிறவர்களுக்கு?
கேள்வி-2. கடைசியில் 2ஜி விவகாரம்?
பதில்: அதை பிசுபிசுக்க வைக்க எல்லா முயற்சிகளும் நடக்கின்றன.
கேள்வி-3. அதிமுக தனி ஆவர்த்தனம் ஜெயிக்குமா?
பதில்: உள்ளாட்சி தேர்தலில் இம்மாதிரி தனித்தனியாக போட்டி போடுவதுதான் நலம்.
4. மீண்டும் ஒரு பொருளாதார மந்தம் உலகம் முழுவதும்?
பதில்: கேப்பிடலிசத்தில் இம்மாதிரி மந்தமும் செழிப்பும் மாறி மாறி வருவது சகஜம்.
கேள்வி-5. உள்ளாட்சித் தேர்தலில் கருப்பு எம்ஜிஆர் விஜயகாந்த் பிரகாசித்தால்?
பதில்: 1991-ல் காங்கிரஸ் செய்த கூத்தை இவர் ரிபீட் செய்யாமல் இருப்பது இவர் மேல் நம்பிக்கை ஏற்படுத்துகிறது. இத்தேர்தலில் பிரகாசிக்க வேண்டியது அவரைப் பொருத்தவரை காலத்தின் கட்டாயம்.
BalHanuman
6. சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தோற்றதற்கு அதன் தொண்டர்களே காரணம் என்கிறாரே கருணாநிதி?
பதில்: பிச்சைக்காரனிடமே பிச்சை எடுப்பவர்கள் பேசுவது போல இருக்கிறது. எல்லா நல்லவவற்றையும் இவரும் இவரது குடும்பம், சின்ன வீடுகள் ஆகியோர் மட்டும் அனுபவிப்பார்களாம். தேர்தலுக்கு மட்டும் தொண்டன் பாடுபட வேண்டுமாம். தூ, வெட்கமாக இல்லை!!!
pt
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி-7. என்னை மயக்கவும் முடியாது.... யாருக்கும் விலை போகவும் மாட்டேன் :பாளையில் விஜயகாந்த் ஆவேசம்
பதில்: இப்போ அதை சொல்லறார். ஆனால் எப்போ எதைச் சொல்லுவாறோ என்ற சந்தேகமும் எழுகிறதே.
கேள்வி-8. மகாத்மா பட்டத்தை ஏற்க ஹசாரே மறுப்பு
பதில்: நல்ல முடிவு. அவர் அடக்கி வாசிக்கிறார். அடக்கி வாசிக்க வேண்டிய விஷயங்கள் அவரிடம் பல உள்ளன.
கேள்வி-9. ஆக்கப்பூர்வ பாதையில் செல்ல கருணாநிதி யோசனை
பதில்: அப்படியெல்லாம் நல்ல யோசனைகள் கூட அவர் செய்வாரா என்ன?
கேள்வி-10.ஊழல் அமைச்சர்களை காக்கும் மத்திய அரசு : அத்வானி
பதில்: இல்லாவிடில் மத்திய அரசே காலியாகி விடுமே.
கேள்வி-11."ஐ.ஐ.டி., மாணவர்களின் தரம் குறைகிறது' : "இன்போசிஸ்' நாராயண மூர்த்தி வருத்தம்
பதில்: ஐஐடிகள் சுய பரிசோதனை செய்து கொள்ளும் காலம் வந்து விட்டது.
மேலும் கேள்விகள் வந்தல் அடுத்த வாரம் சந்திப்போம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
கே.வி.சுப்ரமணிய ஐயர்
-
கந்தாடை வைத்தி சுப்ரமணிய அய்யர் தமிழ் கல்வெட்டாய்வாளர், வரலாற்றாய்வாளர்.
தமிழ்நாட்டின் குகைக் கல்வெட்டெழுத்துக்கள் தமிழ்ப் பிராமி எழுத்துருவில்
வடிக்கப்பட்...
11 hours ago
12 comments:
அனைத்து பதில்களும் சூப்பர்....
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
//"ஐ.ஐ.டி., மாணவர்களின் தரம் குறைகிறது' : "இன்போசிஸ்' நாராயண மூர்த்தி வருத்தம்//
பார்ப்பனீயத்தின் வெளிப்பாடு?
@ரம்மி
Super comedy...
சுஜாதா ஒரு முறை குறிப்பிட்டது போல் ‘தமிழ் நாட்டில் சில விஷயங்களை சிலர்தான் சொல்லலாம்‘.
கருணாநிதி இப்படி மாற்றி மாற்றி பேசி மக்களை முட்டாள்களாகக் காரணம் என்ன ?
முதலில் தி.மு.க. தோல்விக்கு தேர்தல் கமிஷனின் பாரபட்சம் தான் காரணம் என்றார்.
பின்னர் கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக இடம் கொடுத்தது தான் காரணம் என்றார்..
பின்னர் தான்தான் காரணம் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்...
இப்போது கட்சியினர்தான் காரணம் என்கிறார்....
////"ஐ.ஐ.டி., மாணவர்களின் தரம் குறைகிறது' : "இன்போசிஸ்' நாராயண மூர்த்தி வருத்தம்//
பார்ப்பனீயத்தின் வெளிப்பாடு?//
ஐ.ஐ.டி யிலும் சமச்சீர் கல்வி கொண்டுவந்து தரத்தை அரசுக் கல்லூரிகளின் அளவுக்கு இறக்கிவிட்டால் அது இசை வேளாளீயத்தின் வெளிப்பாடோ?
வ உ சி தீவிரவாதி என்று பள்ளிகளில் சமச்சீர் பாடம் நடத்துவது போல..... மேரி க்யூரி பியரி க்யூரியை மணந்து கொண்டதால் நோபல் பரிசு பெற்றார் என்று ஐ.ஐ.டி யிலும் சமச்சீர் பாடம் நடத்தலாம். வெளங்கீரும்!
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
1.உலக அரங்கில் இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்து கொண்டிருந்த தேயிலை, இப்போது அவமானத்தைத் தேடித் தருகிறது என்றால் வருத்தப்படாமல் இருக்க முடியவில்லை
2.கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்னை தொடர்பாக, நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான குழுவினர் பிரதமர் மன்மோகன் சிங்கை தில்லியில் சந்தித்துப் பேசுகின்றனர்.
3.தயாநிதி வீட்டில் "எக்சேஞ்ச்': ஆவணங்களைக் கேட்கிறது சிபிஐ
4.தூக்கு தண்டனை விவகாரம்: மூவரையும் விடுவிக்க வேண்டும்: கருணாநிதி
5.ஐந்து மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடித்தார் ரஜினிகாந்த்
இன்போசிஸ் பற்றி சேட்டன் பகத் கமெண்டு உட்டாரே கவனித்தீர்களா?
ஏக்க இறைவனின் திருப்பெயரால்..
கார் ஓட்டும் முஸ்லிமாக்களை நபி வழியில் கண்ணியப்படுத்த புரட்சிகர யோசனை ஒன்றை பகிர்ந்துள்ளேன்
உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்
இந்த சிறிய தொகையை (2,645 கோடி) மத்திய கணக்குத் தணிக்கைக் குழு 1.76 லட்சம் கோடி என்று உயர்த்தி தில்லுமுல்லு செய்துள்ளது’ என்கிறதே முரசொலி ?
2,645 கோடி இவர்களுக்குச் சிறிய தொகையா ?
நில அபகரிப்பு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கே.என். நேருவை, திருச்சி மேற்கு இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக எதேச்சாதிகாரமாக, மக்களின் பொதுக் கருத்தை மதிக்காமல் கருணாநிதி நிறுத்தியிருக்கிறாரே?
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
6. மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றம் : ஸ்டாலின்
7.உள்ளாட்சி தேர்தலில் கரை ஏற கட்சிகள் வியூகம் : ஓட்டு சதவீதத்தை அதிகரிக்கவும் முயற்சி
8.ஆளுங்கட்சிக்கு அவப்பெயரை உருவாக்கும் "தகிடு தத்தம்' திட்டம் தடுக்கப்படுமா?
9.இலவச திட்டத்தால் அதிகரிக்கும் மின் தேவை: சமாளிக்குமா தமிழக அரசு?
10.நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு ரூ.5,904 கோடி சரிவு
4.சமீபத்தில் தமது வீடுகள், அலுவலகங்கள் முதலியவற்றில் சிபிஐ சோதனை நடைபெற்ற 'மாறன் சகோதரர்களுக்கு தனது ஆதரவு எப்போதும் உண்டு' என்கிறாரே கருணாநிதி ?
http://expressbuzz.com/cities/chennai/blogging-in-tamil-just-doesn%E2%80%99t-pay-say-bloggers/321940.html
தமிழ் வலைப்பூக்களால் வசூல் வருவதில்லையாமே?
Post a Comment