சமீபத்தில் 1963-ஜூன் 27-ஆம் தேதி எனக்கு இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இஞ்ஜினியரிங் அட்மிஷன் கிடைத்த சந்தோஷத்தை அது சற்றே பாதித்தது. ஆனால் இப்பதிவு அது பற்றியல்ல.
பிராக்சருகான பிளாஸ்டர் கட்டைப் போட எனக்கு மயக்க மருந்து தரவேண்டியிருந்தது. அப்போது பிற்பகல் மணி இரண்டரை. டாக்டர் என்னிடம் நான் எப்போது பகல் உண்வு உண்டேன் எனக்கேட்க. நான் காலை ஒன்பதரை என பதில் சொன்னேன். அவர் முகத்தில் திகைப்பு. அருகில் இருந்த நர்ஸ் அவங்க பிராமின்ஸ் அப்படித்தான் காலையில் சீக்கிரமே உணவு எடுத்துக் கொள்வார்கள் எனக் கூறினார்.
அது சாதாரணமாக உண்மைதான். விதிவிலக்குகள் இல்லாமல் இல்லை. ஆனால் நான் பள்ளியில் படிக்கும்போது என் அபிராமண நண்பர்களுக்கு பகல் உணவாக முழு சாப்பாடு வரும். என் போன்ற சிலர் மட்டும் வெறுமனே ஓரடுக்கு டிபன் பாக்ஸில் டிபன் அல்லது தயிர் சாதம் கொண்டு போவோம். அப்போதெல்லாம் இந்த வேறுபாடு குறித்து நான் அக்கறை கொண்ட்தில்லை. ஆனால் இப்போது இது பற்றி யோசிக்கும் போது இந்த் வேறுபட்டிற்கான (எனக்குத் தோன்றும்) சமூகக் காரணத்தை ஆராய விரும்புவேன்.
19-ஆம் நூற்றாண்டின் இறுதிவரை எல்லோருமே அவ்வாறுதான் காலையில் நாஸ்தா, பிறகு மதிய உணவு என்றுதான் இருந்துள்ளனர். ஆனால் சென்ற நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து ஒரு மாறுதல் ஆரம்பித்தது. பிராமணர்கள் வெள்ளைக்காரன் அரசில் உத்தியோகம் பார்க்க ஆரம்பித்ததில், காலை பத்து மணிக்கே ஆஃபீஸ் என்றாக. அவர்களில் சிலர் மெதுவாக காலை நாஸ்தாவையும் பகல் உணவையும் காலை 9 மணிக்கான சாப்பாடாக மாற்றிக் கொள்ள ஆரம்பித்தனர். அதுவே அவர்களில் அதிகமாக பரவியது.
ஆனால் ஏனோ தெரியவில்லை, பிந்தைய கால கட்டங்களில் அபிராமணர்களும் உத்தியோகஸ்தர்களானாலும் அவர்கள் மட்டும் பழைய வழக்கப்படியே இருந்துள்ளனர். அது ஒன்றுதான் புதிராக உள்ளது.
ஆகவே இப்பதிவு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு சாகித்ய அக்காதமி
-
ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சியும் 1908 என்னும்
நூலுக்கு 2024 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அக்காதமி விருது வழங்கப்பட்டுள்ளது. ஓர்
ஆய்வ...
3 hours ago
9 comments:
இப்போ கூட பேங்கில் வேலை செய்பவர்கள் 9மணிக்கே லஞ்ச் சாப்பிடுகிரார்கள் என் மகன் அப்படித்தான். சாப்பிடரான். இதுல என்ன இருக்கு?
ஆரம்பித்து விட்டீர்களா உங்கள் சேட்டைகளை? மாமி உதவி செய்கிறார்களோ?
இந்த உணவுப் பழக்கத்தால் வீட்டுப் பெண்களுக்கு சற்று வேலை குறையும்
என்று நினைக்கிறேன். ஆனால் திருவல்லிக் கேணி மெஸ்களில் காலைச்சாப்பாட்டிறகு மற்றவரகளும் வருவதைப்பார்த்திருக்கிறேன் அதன்
சௌகரியம் கருதி. காலையில் ஹெவி
யாக முழுச்சாப்பாடு சாப்பிட்டால்
அலுவலகஃபணி செயவது கஷ்டமாக
இருக்கும் தானே. எல்லாம்
அவரவர் தனிப்பட்ட சௌகரியத்திறகாக என்று நினைக்கிறேன். நன்றி சார்
நான் கூறியது முழுக்க முழுக்க எனது பார்வைக்கு பட்டதுதான். சதவிகித கணக்கு என்றோ அல்லது உள்ளுணர்வு என்றோ வைத்துக் கொள்ளலாமே.
அதே சமயம் இது சம்பந்தமாக ம்ற்றவ பதிவர்தம் கருத்தையும் அறிய எண்ணியதாலேயே இப்பதிவு.
கணினி/பதிவு பக்கம் வராவிட்டால் டோண்டு அமைதியின்மையுடன் இருப்பான் என்பதாலேயே என் வீட்டம்மா அவ்வளவாக எதிர்ப்பு காட்டுவதில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இதுனோட காரணம் என்னவாவாக இருகும் என்றால், பிராமணர்களின் மனைவிகள் கணவன் தான் செய்த சாதத்தை சூடாக சாப்பிட வேன்டும் என வர்புருத்தியிருப்பர் . அதன் விளைவு காலையிலேயெ முழு சாப்பாடு தயார் . பிராமணர்கள் ஆபீஸ் வேலை பெருமளவில் செய்த ஆரம்பித்தவுடன், மனைவிகளின் சூழ்ச்சியால் சாப்பாடு காலை 8 மணிக்கு சென்று விட்டது.
விஜயராகவன்
முழுச்சாப்பாடு சாப்பிட்டால்
அலுவலகஃபணி செயவது கஷ்டமாக
இருக்கும் தானே.
It is good to have morning food (break fast is a misnomer - one can break one's fast even by driking a glass of water or tea !) as a full meal; lunch as three fourth of the belly; and dinner half a stomach.
The first meal is to come for the whole day; and the next meal is only as a gap filler. The last meal of the day is just enough not to disturb your sleep. Sound sleep is not possible after eating heavily.
Dont eat the last meal like a begger. Because beggars eat healthily and heavily. Eat like a anoerixic actress.
For those who have slow or sluggish metabloism, physical activity is vital. Full meal in the morning with the whole day of work is good to stablise the fat. Diabetics have such metabolism.
The English has a fine proverb, keeping such health factors in view:
"Eat breakfast like a king, lunch like a prince, and dinner like a pauper. "
I eat heavy in the morning; light in the noon; and only soluble food at night.
Caste here? Never mind if it there. But mind whether such caste habits are scientifically valid. The Brahminical dietary habits in debate here r scientifically valid. Keep it up.
But for a septuagenarian like Dondu Ragavan, only the advice of a doctor or dietician specialising in geriatiric care, should be listened to. If not, all his retirmement savings will go to enrich a hospital. The families of doctors and nurses will eat full morning meals !
//But for a septuagenarian like Dondu Ragavan, only the advice of a doctor or dietician specialising in geriatiric care, should be listened to//
It is really surprising to learn that Dondu Raghavan is a septuagenarian !! The way he writes, the topics he enters into, the fights (though verbal) he puts on, at times, sans any protective covers or sheaths, suggest that he is around 40 to 50. It cannot be even to 50 to 60 as I thought people become fatigued with what goes on around them. And the topics that interest most of us around our 30s and 40s fail to enthuse when reach our middle age.
Coming to the topic, one must have heard the proverb, BRAHMANAH BHOJANA PRIYAHA.. that means, brahmins like food (probably more than any other community) . And after a sumptuous meal, a Brahmin proclaims and Blesses the host" ANNA DHATA SUKI BHAVA."
But those are the days of past, possibly of the 18th or early 19th century. Brahmins particularly professionals like Doctors, Lawyers, chartered Accountants having departed from their pattern of what they take in have also changed the ways and ethics they have to stand by.
It is food that decides what type of guna one possessions, satwika or tamasa, and the more and more, we eat tamasa foods, become more fatty not only around hips but inside their heads also.
Forgive me for these comments, coming from a born Brahmin.
I am past 70. And in my hey days, though I never had any non veg dishes, I never drank, I never followed a pattern which was the declared way of pattern of food intake for Brahmins, by the Srutis .
subbu rathinam
http://Sury-healthiswealth.blogspot.com
//or a septuagenarian like Dondu Ragavan//
My chronological age is 65, but in my mind I am just 25 years old.
Regards,
Dondu N. Raghavan
ராகவன் சார் இது டிபன் பாக்ஸ் பற்றிய பதிவாக தெரியலையே.. :)
Post a Comment