1/21/2005

இன்னுமொரு ஹைப்பெர்லிங்க்

போன சனிக்கிழமை திருவல்லிக்கேணிக்கு சென்றிருந்தேன்.

"என்றென்றும் அன்புடன்" பாலா அவர்கள் வீட்டிற்கும் சென்றேன். என்னை வரவேற்று பேசிய அவர் தான் சமீபத்தில் தன் சித்தியின் மரணம் விஷயமாக பெங்களூர் சென்றிருந்ததாகக் கூறினார்.

நான் முதலில் சரியாகக் கவனிக்கவில்லை. அடுத்த முறை இப்பேச்சு வந்ததும் நான் மேல் விவரம் கேட்க, தன் சித்தி அவர் மருமானுடன் சில மாதங்கள் முன் வண்டியில் செல்லும் போது கீழே விழுந்துத் தலையில் அடிப்பட்டுக் கொண்டதாகவும் அதன் காரணமாகப் பிறகு காம்ப்ளிகேஷன்ஸ் வந்து அவர் மரணம் நிகழ்ந்தது என்றுக் கூறினார்.

உடனே என் மண்டைக்குள் வழக்கமான பல்ப் எரிய, அவர் சித்தியின் பெயர் வைதேகியா என்றுக் கேட்டேன். ஆச்சரியத்துடன் பாலா ஆம் என்றுக் கூற, அவருடையக் கணவர் தியாகுவின் அண்ணா சந்தானம் என் ஷட்டகர் என்ற விஷயத்தைக் கூறினேன்.

பாலா உடனே தன் தாயிடம் சென்று இதைக் கூற அவர் பரபரப்பாக வெளியே வந்து என்னுடன் மேலே பேசினார். இது ஒரு சிறிய உலகம்தான்.

பாலாவுடனான என் பேச்சு இப்போது என் வாழ்வில் வந்த ஹைப்பெர்லிங்குகளைப் பற்றி ஆரம்பித்தது. அவரும் தன் பங்குக்கு தன் வாழ்வில் வந்த ஒரு ஹைப்பெர் லிங்கைப் பற்றிக் கூறினார். Over to Bala for its description!

அன்புடன்,
டோண்டு ராகவன்

8 comments:

enRenRum-anbudan.BALA said...

I do not remember the 'HYPERLINK', I mentioned to you, that day????? Pl. give me a HINT!

enRenRum-anbudan.BALA said...

Raghavan,
No need for any hint! I am able to recollect what I told you the other day!
enRenRum anbudan
BALA

dondu(#11168674346665545885) said...

Bala,

கண்டிப்பாக உங்கள் தம்பிதான் உங்கள் நினைவைப் புதிப்பித்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். என்ன சரியா? அன்று அவருடன் பேசிய போது அவரது நினைவுத்திறனைக் கவனித்தேன்.

உங்கள் சிறுவயது நினைவுகள் பகுதி - 6 பற்றிய என் பின்னூட்டத்தைப் பார்த்தீர்களா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

கதிரவன் என்பவர் ஹேலோஸ்கேனில் ஒரு பின்னூட்டம் கொடுத்துள்ளார். அதில் தேவையில்லாமல் ஜாதியைப் புகுத்தியிருக்கிறார். பாலாவும் நானும் ஒரே ஜாதி என்பதால்தான் ஹைப்பர் லிங்க் வந்தது என்று கூறுகிறார். அவருக்கான பதில் எங்கு நான் கொடுத்தது இதோ:

முதலில் என்னுடைய மற்ற ஹைப்பர்லிங்குகளைப் பாருங்கள். பிறகு கூறுங்கள். இதில் ஜாதி எங்கு வந்தது கதிரவரே? இன்னொன்று. பெரிய கமென்டுகளுக்காகவே ப்ளாக்கர் கமென்ட்கள் உள்ளன. அங்கு வாருங்கள். இம்மாதிரி துண்டு துண்டாகப் பதிவு செய்ய வேண்டியிராது.
அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

To set the record straight, this ia what Kadhiravan said in the beginning:
அய்யா டோண்டு,
உங்கள் அனுபவம் சுவாரசியமானது.
ஏற்கனவே வேறு வகையில் அறிமுகமானவரோடு தற்செயலாக வேறு ஒரு தொடர்பு பற்றி தெரிய வரும்போது அது - சில சமயம் இன்ப அதிர்ச்சியும்
இதை "இது ஒரு சிறிய உலகம்" என எழுதியுள்ளீர்களே.....
உங்களுக்கு உலகமே சாதி மட்டும்தானா?
வேறு சாதிக்கார நண்பர்கள் யாருடைய சித்தி மரணம் பற்றி கூறியிருந்தால் அப்போது
உங்களுக்கு 'HYPERLINK' ஏதும் தோன்றியிருக்குமா?
உலகம் என்னவோ பெரிசு தான்,
சாதி தானய்யா சிறியது!
அன்பன்,
கதிரவன்.

dondu(#11168674346665545885) said...

நான் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கும்போது அவர் கூறிய நிகழ்ச்சி எனக்கு ஏற்கனவே தெரிந்திருந்தால் அது உடனே நண்பர் உபயோகித்த ஒரு சொற்றொடரிலிருந்து எனக்கு ஒரு ஹைப்பெர்லிங்க் தோன்றும்.

பாலா ஒரு பெண்மணி வண்டியில் தன் மருமானுடன் சென்றுக் கொண்டிருந்தப் போது அவர் கீழே விழுந்தார் என்றுக் கூறியவுடனேயே என் மண்டையில் பல்ப் எரிந்தது. அது தாமதமின்றி வெளிப்பட்டது. அதற்குப் பாலா சாட்சி. பாலா என் உறவினர் அல்ல. அவருடைய சித்தி என் மச்சினியின் ஓரகத்தி என்பதில் அந்த சித்தியும் என் உறவல்ல.

இதே நிகழ்ச்சியை வேறு ஜாதிக்காரர் சொல்லியிருந்தாலும் நான் இதையேதான் கூறியிருப்பேன். என்னுடைய ஹைப்பெர்லிங்குகள் என் வலைப்பூ பதிவுகளில் பல முறை வந்துள்ளன.

"வேறு சாதிக்கார நண்பர்கள் யாருடைய சித்தி மரணம் பற்றி கூறியிருந்தால் அப்போது உங்களுக்கு 'ஹைப்பெர்லிங்க்' ஏதும் தோன்றியிருக்குமா?"

இதற்குப் பதில்: கண்டிப்பாகத் தோன்றியிருக்கும்.

இது ஒரு சிறிய உலகம், உலகமே ஒரு கிராமமாகிப் போனது" போன்ற சொற்றொடர்கள் ரொம்ப சர்வ சாதாரணமாக ஆன்ங்கிலத்திலும் தமிழிலும் பிரயோகிக்கப்படுகிறது. (It is a small world, the world has become a global village)

இதை நான் கூறும்போது மட்டும் நீங்கள் ஏன் அதை சாதியைப் பற்றிக் கூறுவதாக நினைத்துக் கொள்ள வேண்டும்?

Here the hyperlink is the criterion and it was independently witnessed by Bala too. My first recorded hyperlinks in these blogs date back to 1970 or so and I presume some are even older than you. From your email id I presume that you were born in 1972. Please correct me if I am wrong in my presumption.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

உங்கள் தகவலுக்கு: ஆடுதுறை ரகுவும் என் உறவினர் அல்ல. அவருடைய பெரியப்பாவும் என்னுடைய மாமாவும் ஷட்டகர்கள் (சகலைபாடிகள்) என்பதால் ரகு எனக்கு உறவாக முடியாது. என்னுடைய உறவு என்னுடைய மாமியுடன் முடிந்துவிடும். ரகுவின் உறவு என் மாமியின் சகோதரியுடன் முடிந்து விடும்.

ரகுவை விடுங்கள். ராமமூர்த்தியோ அல்லது கிருஷ்ணமூர்த்தியோ (ஆ கலே லக் ஜா) அல்லது பத்மா சந்திரசேகரனோ (ஐ.ஏ.& ஏ.எஸ்) என் ஜாதி கூட கிடையாது.

நிகழ்ச்சிகள் ஞாபகத்துக்கு வந்து நான் கேட்பதைப் பற்றி எழுதும் போது அது ஒரு நீண்ட ப்ராஸஸ்ஸாகத் தோன்றுமே தவிர, என்னைப் பொறுத்த வரை அது என்னையறியாமலேயே வெளிப்பட்டு அது என்னையே ஆச்சரியத்தில் ஆழ்த்தி விடும். இது ஒரு சிறிய உலகம் என்று நிஜமாகவே எனக்குப் பட்டதுதான் நான் கூறியது.

அந்த ஹைப்பெர்லிங்க் ஒரு நாடக வசனமாகக் கூட இருக்கலாம் அதுவும் வேறு மொழியிலும் இருக்கலாம். அப்போது ஒரே சாதி வருவது என்பது எதேச்சையாகத்தான் இருக்கும். நடந்ததை நடந்தபடித்தானே கூற முடியும்.

என்னுடைய ஹைப்பெர்லிங்குகள் எதற்கும் கட்டுப்படாதவை. எனக்கும் கூடத்தான். ஒரு குறிப்பிட்ட ஹைப்பெர்லிங்க் ஏன் ஏற்பட்டது என்பதை ஆராய்வது வேண்டாத வேலை என்றே நான் கருதுகிறேன். அது வந்தது என்பதுதான் முக்கியம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

My purpose of pointing out about your age is to emphasize the fact that these hyperlinks have come regularly in my life since long, even before your birth. And it is the first time that somebody is raising a point about caste in this context. Believe me, I have been relating these incidents all these years. And in many of these hyperlinks the concerned persons were not of my caste and this convincingly answers your question, whether the bulb would have burnt in my head if the inetrlocutor (Bala, in htis case) was not of my caste.
Regards,
N.Raghavan

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது