1/25/2005

ஒரு வழிப் பாதையின் சூரியப் பக்கம், part-2

வில்லியம் இ வில்ஸன் மேலும் கூறுகிறார்:

<<நான் சிறுவனாக இருந்தப் போது டிஃப்தீரியா வந்து செத்துப் பிழைத்தேன். ஆனால் என் அக்காவுக்கு நடந்ததைப் பார்த்தால் எனக்கு வந்தது ஒன்றுமே இல்லை என்றுதான் கூற வேண்டும்.

அவள் மெதுவாகக் குருடாகிக் கொண்டிருந்தாள்!

முதலில் எங்கள் யாருக்கும் அவள் பிரச்சினை புரியவில்லை. அவள் மார்க்குகள் குறைய ஆரம்பித்தன. என் தாய் தந்தையர் அவளை மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். பிறகுதான் அவள் முழுக்கவும் பார்வை இழக்கப் போகிறாள் என்ற உண்மை அவர்களுக்குத் தெரிந்தது.

அப்போது எனக்கு 12 - 13 வயது இருக்கும். அவளுக்குப் 15 வயது.

மருத்துவரைப் பார்த்தப் பிறகு அவள் தனியே தன்னறையில் இருந்துக் கொண்டு, கண்ணை மூடிக்கொண்டு, கையை முன்னால் பரப்பிக் கொண்டு மெதுவாக நடந்துக் கொண்டிருந்தாள்.

ஒரு 12 வயதுப் பையன் தன்னுடைய அக்காவின் மேல் வைத்திருக்கும் ஒரு மையமானப் பிரியம் எனக்கும் உண்டு. அவள் ஏன் அவ்வாறு செய்கிறாள் என்று எனக்குப் புரியவில்லை. ஒரு எரிச்சல் கலந்தப் பொறுமையுடன் அவளிடம் "என்ன செய்யறே?" என்றுக் கேட்டேன். அவள் அதற்கு "குருடியாக இருக்கப் பயிற்சி செய்றேன்" என்றுக் கூறினாள்.

இப்போது தான் இவ்வரிகளை எழுதும்போது ஏதாவது அவளிடம் ஆறுதலாகக் கூறினேன் என்று சொல்ல எனக்கு ஆசையாக இருக்கிறது. ஆனால் என்ன செய்வது. ஏதோ கேலியாக அவளிடம் பேசிவிட்டு அவ்விடத்திலிருந்து ஓடிப் போனதுதான் நான் செய்தது.

அவள் முழுக் குருடியானாள். அவள் அதற்கு மனத்தளவில் தயாருமானாள். அவள் கண்கள் அழகானவை. பார்வை இல்லை என்பது புதிதாகப் பார்ப்பவர்களுக்கு முதலில் புரியாது. வீட்டின் எல்லா மூலைகளும் அவளுக்கு அத்துப்படி. உடல் வலிமை அதிகம் இல்லாதவள். ஆகவே அவளால் தன்னை வழிநடத்திச் செல்ல ஒரு பார்க்கும் நாயைக் கையாள முடியாமல் போனது.

என் தந்தை எங்கு நாங்கள் வெளியே சென்றாலும் அவளுக்கு தெருக்க்காட்சிகளைப் பொறுமையாக விளக்குவார். எனக்குத்தான் மிகவும் போர் அடிக்கும்.

அவர் சளைக்காமல் பொறுமையாக அவளுக்கு எங்கள் ஊரில் (ப்ளூமிங்க்டன், இந்தியானா மாநிலம்) எல்லா தெருக்கள், கட்டிடங்கள், கடைகள் முதலியவற்றை விளக்குவார். இதன் பலன் பின்னால் தெரிந்தது.

1944-ல் எங்கள் அன்னை மறைந்தார். அடுத்த 4 தனிமையான வருடங்களை ஒரு வழியாகக் கழித்து எங்கள் தந்தையும் தன் அருமை மனைவியைப் பின் தொடர்ந்தார்.

இந்த 4 வருடங்களில் என் தந்தைக்கு மறதி அதிகம் வர ஆரம்பித்தது. தெருவில் போய்க் கொண்டே இருப்பார். திடீரென்று வீட்டுக்குத் திரும்பும் வழி மறந்து விடும். ஊரில் எல்லோருக்கும் அவரைத் தெரியும். இருந்தாலும் யாரையும் போய் உதவி கேட்க அவர் தன்மானம் இடம் கொடுக்காது.

ஆகவே அருகில் உள்ள ஏதாவத் டெலிஃபோன் பூத்துக்கு வந்து வீட்டுக்கு ஃபோன் செய்து என் அக்காவைக் கூப்பிடுவார்.
"வீட்டிற்கு வரும் வழி மறுபடியும் மறந்து விட்டேன் பெண்ணே. நான் இப்போது கோல்ட்ஷ்டைன் மளிகைக் கடை வாசலில் இருக்கிறேன்" என்பார்.
அக்கா உடனே கூறுவாள்: "கவலைப் படாதீங்கப்பா. அந்த மளிகைகடையை அடுத்தக் கடை ஜானின் தையற்கடை. அதை அடுத்து ஒரு சந்து. அதில் நேரே சென்றால் அது ஒரு பெரியத் தெருவில் முடியும். வலப் பக்கம் திரும்பி வந்தால் நான்காவது கட்டிடம்தான் நம் வீடு."

இவ்வாறாக என் தந்தை முன்பு பொறுமையுடன் செய்தது அவருக்குச் சாதகமாகவே முடிந்தது.>>

இப்புத்தகத்திலிருந்து பிறகு மேலே பேசுவேன். ஆனால் ஒன்று. கண்ணை மூடிக் கொண்டு யோசிக்கும்போது இப்புத்தகத்தைப் படித்த 1968-ஆம் வருடத்திற்கே போய் விடுவேன். என்னை அந்த அளவுக்கு இப்புத்தகம் கவர்ந்து விட்டது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4 comments:

அல்வாசிட்டி.விஜய் said...

அய்யா! நல்ல நல்ல புத்தகங்களைப் பற்றி எழுதுகிறீர்கள். உண்மையில் என்னைப் போன்று ஆரம்ப வாசிப்பில் இருக்கும் வாசகர்களுக்கு தமிழல்லாத பிற மொழி புத்தகங்களைப் பற்றி ஒருவர் எழுதும் போது அதையும் நூலகத்திலோ புத்தக் கடையிலோ வாங்கி படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படுகிறது. நல்ல ரெப்பரண்ஸ் வலைப் பதிவுகள் உங்களுடையது. நீங்கள் குறிப்பிடும் புத்தகங்கள் என் லிஸ்டில் ஏறுகிறதே தவிர நான் தான் படிக்கிற வழியை காணோம். இருக்கட்டும் சீக்கிரமே அதற்கும் ஒரு வழி பண்ணிக் கொள்கிறேன். நன்றி அய்யா.

dondu(#4800161) said...

விஜய் அவர்களே. வாசிப்பில் இவ்வளவு ஆர்வம் உங்களுக்கிருப்பது குறித்து மகிழ்ச்சி. இப்புத்தகத்தைப் பெற இந்த உரலுக்குச் செல்லுங்கள்.

http://www.antiqbook.com/boox/pel/1836.shtml

அன்புடன்,
டோண்டு ரகவன்

அல்வாசிட்டி.விஜய் said...

Thank you very much. Let me search the title in library.

dondu(#4800161) said...

Vijay,
I searched for you in the Library of Congress' home page. Here are the results:
1. "LC Control Number: 58012216
Type of Material: Text (Book, Microform, Electronic, etc.)
Brief Description: Wilson, William E. (William Edward), 1906-1988.
On the sunny side of a one way street.
[1st ed.]
New York, Norton [1958]
223 p. 22 cm.

2. CALL NUMBER: PS3545.I6428 Z52
Copy 1
Request in: Jefferson or Adams Bldg General or Area Studies Reading Rms
Status: Not Charged

3. CALL NUMBER: PS3545.I6428 Z52 FT MEADE
Copy 2
-- Request in: Main or Science/Business Reading Rms - STORED OFFSITE

Status: Not Charged

Hope this helps. I presume you live in the USA. I borrowed this book from the USIS library in Chennai in 1968.
Regards,
Dondu Raghavan

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது