இதற்கு முந்தையப் பதிவில் ஒரு தமாஷ் அனுபவம் ஏற்பட்டது. பதிவுப் பெட்டியில் நான் எழுத வேண்டியதை எழுதி "அச்சடி" என்ற பட்டனைச் சொடுக்கினால், "இப்பக்கம் அச்சடிக்க முடியாது" என்ற அறிவிப்பு வந்தது.
சரி என்று "பின்னால்" அம்பைச் சொடுக்கி மறுபடி பதிவை எழுதி அச்சடிக்கச் சொன்னால் அதே அறிவிப்பு.
இவ்வாறு எட்டு முறை முயன்ற பின் என் ப்ளாக்குக்குச் சென்றால், இப்பதிவு எட்டு முறை ஆகியிருந்தது தெரிய வந்தது.
அதில் ஏழை அழிக்க நேரம் ஆகி விட்டது.
சாதாரணமாக "உங்கள் பதிவு 100% அச்சடிக்கப்பட்டது" என்றுதானே வர வேண்டும்? பிறகு ஏன் வேறு செய்தி வர வேண்டும்?
ஒண்ணும் நேக்குப் புரியல்லேப் போங்கொ!
அன்புடன்,
டோண்டு ராகவன்
பிரதி கர்ப்பம்
-
Pa Raghavan
எப்போதாவது எழுதுபவர்களுக்கும் இதற்கும் தொடர்பில்லை. எப்போதாவது மட்டும்
எழுதாமல் இருப்போருக்கு மட்டுமே இந்த வலியின் தீவிரம் புரியும். ஒரு பெரி...
2 days ago
5 comments:
ராகவன், சில சமயங்களில் ப்ளாக்கர் சொதப்பும்போது இது போல் ஆவதுண்டு. எளிதாக அறிய ஒரு சின்ன வழி, ப்ளாக்கரின் சக்கரம் சுழன்றுக்கொண்டே இருக்கிறதா, உங்கள் உலாவியில் "ஸ்டாப்" பிடித்து நிறுத்தி உங்களின் பிந்தைய பதிவுகளை காட்டும் "Create post"-க்கு சென்றால், நீங்கள் தடுத்து நிறுத்திய பதிவு இருக்கும்.
அதுதான் கொடுமை. "இப்பக்கம் அச்சிடப்பட முடியாது" என்று வந்தப் பிறகு எனக்கு ஒன்றுமே தோன்றவில்லை. அதனால்தான் இம்மாதிரி நடந்து விட்டது. பிறகு விஷயம் தெரிந்தப் பிறகு ஒவ்வொன்றாக அழிக்க வேண்டியதாயிற்று.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Computer-um kadavul-um onnu..
Ethukkaka seyyuthu, en seyyuthu, eppadi sariyaachunnu ethuvume namma oona arivukku puriyathu!
அந்த சமயத்தில் ஒரு ஹைய்பர் லின்க் கிடைக்காமல் போயிற்றே !
:((
என்ன ஆச்சரியம்! அடுத்தப் பதிவைப் பதித்து விட்டு இங்கு மறுமொழிகளைப் பார்த்தால் நீங்கள் வேறு ஹைப்பர் லிங்குகளைப் பற்றி எழுதியிருக்கிறீர்கள்!
அனொஉடன்,
டோண்டு ராகவன்
Post a Comment