ஒரு அறிவிப்புமில்லாமல் இந்த மாதப் பத்திரிகை டிசம்பர் 2004 இதழுடன் நின்று விட்டது. நிறுத்துவதா அல்லது நடத்துவதா என்பது முதலாளியின் விருப்பம் போலத்தான் என்பதை ஒத்துக் கொள்ல வேண்டியதுதான். ஆனாலும்...
அதன் தொடர்களை வாசித்து வரும் வாசகர்களைப் பற்றி குமுதம் நிர்வாகம் கவலைபடவேயில்லை என்றுதான் தோன்றுகிறது. முக்கியமாக அதில் வரும் நளசரிதம் முடிய இன்னும் ஒரு இதழ்தான் பாக்கி. அதாவது ஜனவரி 2005 இதழ் குமுதம் இணையப் பக்கத்தில் வாசிக்க முடிந்தது. இப்போது டெலிஃபோனில் தொடர்பு கொண்டு கேட்டால் பத்திரிகை நின்றதைப் பற்றி சாவகாசமாகத் தெரிவிக்கிறார்கள். இது யாருக்கும் தெரியவில்லை. பத்திரிகைக் கடைக்காரர்களையும் சேர்த்துத்தான் கூறுகிறேன். இதை விட பொறுப்பில்லாமல் இவ்வாறு ஒரு நிர்வாகம் நடக்க முடியுமா என்றத் திகைப்புதான் உண்டாகிறது.
இன்னொரு விஷயம். அதற்கு சந்தா கட்டியவர்கள் மற்றும் விளம்பரதாரர்களின் பணமும் கோவிந்தாதானா? ஏன் இவ்வாறு ஒரு நிர்வாகம் நடக்க வேண்டும்? அதை பிறகு யார் நம்புவார்கள்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
𝐅𝐞𝐓𝐍𝐀: 𝐅𝐢𝐝𝐮𝐜𝐢𝐚𝐫𝐲 𝐃𝐮𝐭𝐢𝐞𝐬
-
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை போன்ற ஒரு முக்கிய இலாப நோக்கற்ற
அமைப்பின் இயக்குநராகவோ அல்லது பொறுப்பாளராகவோ செயல்படும்போது, சட்டப்பூர்வ,
அறநெறி சார்...
4 days ago

6 comments:
//அதற்கு சந்தா கட்டியவர்கள் மற்றும் விளம்பரதாரர்களின் பணமும் கோவிந்தாதானா? ஏன் இவ்வாறு ஒரு நிர்வாகம் நடக்க வேண்டும்? அதை பிறகு யார் நம்புவார்கள்?//
exactly!
-Mathy
testing comment section
-Mathy
ரொம்ப நன்றி மதி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
தப்பு தான். அட! விடுங்க டோண்டு.
குமுதம் ஜங்க்ஷனில் நான் எழுதிய கட்டுரைகளுக்கோ சிறுகதைகளுக்கோ கூட எந்த வித சன்மானமும் வந்ததில்லை. அதிலே எனக்குப் பெரிய ஆச்சரியமும் கூட.
ஆனால் குமுதமோ, விகடனோ, அமுதசுரபியோ, கலைமகளோ, வேறந்தப் பத்திரிககளுமோ ஏதாவது ஒரு சன்மானம் கொடுக்காமல் இருந்ததுமில்லை.
குமுதம் இயக்குனர் வரதராஜனிடம் இது பற்றி ஒரு தடவையாவது கேட்கவேண்டும்!
ஆச்சரியமாக இருக்கிறது எல்லே ராம் அவர்களே. இந்த அளவுக்குப் பிச்சைக்காரனாக கு.ஜ. இருக்கும் என்று நினைக்கவில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment