2/06/2005

Some more puzzles for Sunday

இன்னும் சில கேள்விகள். (அடங்குடா டோண்டு)
1. ஒருவன் ஹோடலுக்கு வந்து சர்வரிடம் தண்ணீர் கொண்டு வரச் சொன்னான். சர்வரோ அவன் கழுத்தில் சரேலென்று ஒரு கத்தியை வைத்தான். வந்தவன் பயத்தில் கீழே விழுந்தான். பிறகு மெதுவாக எழுந்து சர்வருக்கு நன்றி கூறி விட்டு இரண்டு இட்லி ஒரு தோசை ஆர்டர் செய்தான். ஏன்?

2. ஆண்டனியும் க்ளியோபாட்ராவும் எகிப்து அரண்மனை அறையில் இறந்துக் கிடக்கின்றனர். அவர்கள் பக்கத்தில் ஒரு கிண்ணம் தலைகிழாகக் கிடக்கிறது. ஆனால் அதில் வெறும் தண்ணீர்தான் இருந்தது. ஆண்டனியும் கிளியோபாட்ராவும் விஷமருந்தி இறக்கவில்லை ஒருவரும் அவர்களை கத்தியாலோ அல்லது வேறு முறையாலோ கொலை செய்யவில்லை. அவர்கள் தற்கொலையும் செய்துக் கொள்ளவில்லை. இது வெறும் விபத்துதான். என்ன நடந்தது?

3. ஷெர்லாக் ஹோம்ஸ் இறந்தப் பிறகு சொர்க்கம் சென்றார். கடவுள் அவரை வரவேற்று அவருக்கு ஒரு பரீட்சை வைத்தார். ஆதாமையும் ஏவாளையும் கண்டு பிடிக்க வேண்டும். ஷெர்லாக் ஹோம்ஸ் கண்டு பிடித்தார். எவ்வாறு?

4. மறுபடியும் இரட்டையர்! ராமும் ஷ்யாமும் ஒரே பிரசவத்தில் ஒரே தாய்க்குப் பிறந்த இரட்டையர். ராமின் பிறந்த தினம் ஷ்யாமின் பிறந்த தினத்துக்கு இரண்டு நாள் முன்னால் வருகிறது. எவ்வாறு?

ஆங்கிலத்தில் நான் கேட்டக் கேள்விக்கு பாலா ஒருவர்தான் இது வரை முயற்சி செய்தார். ஆகவே அவருக்கு இன்னொரு க்ளூ கொடுத்தேன். மற்றவர்களும் முயற்சி செய்யலாம் (விடை தெரிந்தவுடன் நிஜமாகவே உனக்கு உதைதாண்டா டோண்டு!)

அன்புடன்,
டோண்டு ராகவன்

6 comments:

பினாத்தல் சுரேஷ் said...

இன்னைக்கு விடறதில்லை டோண்டு மாமா!

1. அவன் விக்கினான் - கத்தி காட்டியதும் பயத்தில் விக்கல் அடங்கியது - அதற்கு நன்றி கூறினான்.

2.ஆன்டனியும் க்ளியோபாட்ராவும் மீன்கள். தண்ணீர் வற்றி மரித்தனர்.

3.Elementary, my dear Watson! ஆதாம் ஏவாளுக்கு தொப்புள் இருக்காது.

4.ராதிரி பன்னிரண்டு மணி போல, டேட் லைனைத் தான்டி, கப்பலில் போகும்போது பிறந்தார்கள்.

dondu(#11168674346665545885) said...

மருமான் சுரேஷ், முதல் மூன்றுக் கேள்விகளுக்கும் விடை 100% சரி. நான்காவது கேள்வியில் வரும் இரண்டு நாள் வித்தியாசம் எப்படி வந்தது?
அன்புடன் டோண்டு ரகவன்

dondu(#11168674346665545885) said...

And how about the puzzle formulated in English?
See: http://dondu.blogspot.com/2005_01_30_dondu_archive.html
Regards,
Dondu Raghavan

துளசி கோபால் said...

அன்புள்ள ராகவன்,

1 வது க்கு பதில் அந்த ஆளு விக்கிக்கிட்டே தண்ணி கேட்டிருப்பார். கத்தி கழுத்திலே வச்சதும்
பயத்துலே விக்கல் நின்னு போச்சு!

2. தெரியலை

3. தொப்புள் இல்லாம இருந்த ரெண்டு பெரு ஆதாமும் ஏவாளும். (மனுஷருக்குப் பிறக்கலையே!)

4. ஒரு குழந்தை ஃபிப்ரவரி 28 ராத்திரி 11.59 பிறந்திருக்கும். அடுத்தது கொஞ்சநேரம் கழிச்சு மார்ச்
00 மணிக்கு அப்புறம். சரியா?

என்றும் அன்புடன்,
துளசி.

dondu(#11168674346665545885) said...

"ஒரு குழந்தை ஃபிப்ரவரி 28 ராத்திரி 11.59 பிறந்திருக்கும். அடுத்தது கொஞ்சநேரம் கழிச்சு மார்ச்
00 மணிக்கு அப்புறம். சரியா?"
Correct and the difference of 2 days comes only in leap years.
Regards,
Dondu Raghavan

ilavanji said...

ஆஹா...நமக்கு முன்னாடியே இத்தன அறிவாளிங்க சொல்லிட்டாங்களா..? ஹிஹி..

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது