வழக்கத்துக்கு மாறாக ஒரு புது படத்தை இரண்டாம் நாளே பார்த்தேன். நான் சூர்யாவின் அன்பே ஆருயிரையே குறிப்பிடுகிறேன். எங்களூர் (நங்கநல்லுர்) வேலன் தியேட்டரில் டிக்கட் சுலபமாக கிடைத்தது. வழக்கத்துக்கு மாறான கூட்டமும் இருந்தது.
படத்தின் கருத்து நல்லதுதான் ஆனால் அது தவறான ஆளிடம் சிக்கியதுதான் சோகம். மணிரத்தினம், சுஜாதா, கமல் காம்பினேஷனில் இப்படம் நன்றாக சோபித்திருக்கும். இங்கு குரங்கு கையில் பூமாலையாக ஆயிற்று. படம் முழுக்க ஒரே கூச்சல், பாடல் வரிகள் புரியவே இல்லை. தியேட்டரில் இருந்த விசிலடிச்சான் குஞ்சுகள் நிலைமையை இன்னும் மோசமாக்கினர் என்றுதான் கூற வேண்டும்.
மன வேறுபாட்டால் காதலர் பிரிகின்றனர். இன்டர்வல். பிறகு நீல உடையில் கடல் மேல் நடந்த வண்ணம் மறுபடி சந்திக்கின்றனர். அவர்கள் நாயக மற்றும் நாயகியின் நினைவுகளாம். நினைவுகளின் அரசன் நம்பியார் வேறு அங்கு வந்து அவர்களுக்கு விளக்குகிறார். அதாவது நினைவுகள்தான் காதலர்களை ஒன்று சேர்க்குமாம். காதலியின் நினவு காதலனிடம் போராட வேண்டுமாம் and vice versa. காதலன் காதலியையோ, காதலி காதலனையோ நினைவு கூர்ந்தால்தான் ஒருவர் மற்றவரின் நினைவை பார்க்க இயலுமாம்.
காதலியின் நினைவுக்கு வெற்றி சீக்கிரம் கிட்டி விடுகிறது. காதலனின் நினைவோ காதலியைச் சுற்றி அலைகிறது. அவள் பார்வைக்கு அது தென்படுவதில்லை. அவ்வப்போது நினைவுகள் கூடிப் பேசி ஆலோசனை செய்கின்றன. எப்படி கதை முடிகிறது? வெள்ளித் திரையில் காண்க.
சொதப்பல் 1. Living together (cohabitation in French) அதாவது கல்யாணமாகாமல் ஓர் ஆணும் சேர்ந்து ஒரு பெண்ணும் ஒரே வீட்டில் வசிப்பது என்ற கோட்பாடு தமிழகத்தில் இன்னும் வேறூன்றவில்லை. பேசாமல் அவர்களைக் கணவன் மனைவியாகவே சித்தரித்திருக்கலாம். ஏதோ அமெரிக்கக் கதையை சுட்டது போலத் தோன்றுகிறது. சிறிது உழைத்து இந்தியாவுக்கு ஏற்றதாகக் கதையை மாற்றாமல் ரொம்பவும் படுத்தி விட்டார் சூர்யா.
சொதப்பல் 2. சண்டைக் காட்சிகள் நம்பும்படியாக இல்லை. ரொம்பவும்தான் கிராஃபிக்ஸை நம்பியிருக்கிறார்கள்.
பிளஸ் பாயிண்டுகள். இரண்டே காட்சிகளில் வந்தாலும் மயில்சாமி நினைவில் நிற்கிறார். சூர்யா காதலியின் நினைவுடன் பேசிக் கொண்டே செல்லும் போது விஷயம் புரியாத மற்றவர் குழம்புவது தமாஷ். என்ன யோசித்தும் வேறு ஒன்றும் தோன்ற மாட்டேன் என்கிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
‘உங்க கருத்தோட முரண்படுறேன், ஆனா…”
-
அன்புள்ள ஜெ அண்மையில் ஒரு கடிதத்தில் உறுதியான கருத்துக்கள்
கொண்டிருக்கக்கூடாது என்று சொல்லியிருந்தீர்கள். இளம்வாசகர்கள் உடனடியாக
உறுதியான கருத்துக்கள் கொண்...
15 hours ago
11 comments:
INtha padathoda vimarsanam first unga blog la than vanthuruku..web la..enaku therinja vara. Kalakitinga dondu sir!
டோண்டு சார்
இதே கான்சப்டில் 'eternal sunshine of the spotless mind" பார்த்திருக்கிறீர்களா? charlie kaufman-இன் கதை. கொஞ்சம் வித்தியாசம். காதலி கருத்துவேறுபாட்டால் நாயகன் நினைவுகளை அழித்திருப்பாள். கதாநாயகனும் போட்டிக்கு நாயகியின் நினைவுகளை அழிக்க நினைத்து பின்பு ஒன்று சேரும் கதை. நடுவில் சிலர் செய்யும் குழப்பங்கள் வேறு. நல்ல படம் அது.
அ. ஆ. விற்கு வலையில் முதல் விமர்சனம் பதித்தற்கு வாழ்த்துக்கள்! :)
ஆஹா, டோண்டு ஐயா முதல் விமரிசனம் எழுதிட்டார்ன்னு என்னமோ சத்தம் கேக்குது.
இருங்க இருங்க , படம் எனக்கு வரட்டும், நானும் ஒரு விமரிசனம் போடறேன்( முடிஞ்சால்):-)))))))))))
முத்துக்குமார், ராமனாதன் மற்றும் துளசிக்கு நன்றி.
'eternal sunshine of the spotless mind" கதை படித்ததில்லை. ஆனால் இந்த கான்சப்டை வைத்து சுஜாதா அவர்களும் ஒரு கதை எழுதியிருக்கிறார். நாயகியின் நினைவுகளை அவள் மாமா அழிக்க, நாயகனும் ஒரு விஞ்ஞானியின் உதவியுடன் அவளைப் பற்றித் தன் நினைவுகளை அழித்துக் கொள்ள, கடைசியில் பார்த்தால் இருவரும் மறுபடியும் பழைய ஞாபகம் இன்றி சந்தித்து, அன்பு கொள்கின்றனர்.
கதை பெயர் மறந்து விட்டது. தேசிகனைக் கேட்டால் தெரியும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஒரே ஒரு காட்சியில் மனோதத்துவ நிபுணராக வந்து கலக்கும் ஊர்வசியை எப்படி மறந்தேன்? படம் முழுக்க இரைச்சல், உள்ளேயும் வெளியேயும் (விசிலடிச்சான் குஞ்சுகள்).
அன்புடன்,
டோண்டு ராகவன்
சினிமாவிற்கு தாங்கள் விமர்சணம் எழுதுவதா? மற்ற விஷயங்கள் இருக்க
என்னார்
"சினிமாவிற்கு தாங்கள் விமர்சணம் எழுதுவதா? மற்ற விஷயங்கள் இருக்க"
சினிமா எனக்கு மிகவும் பிடிக்கும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
விமர்சனம் நல்லா இருந்தது, பாம்பேயில் இந்த படம் வந்தாலும் பார்க்கும் எண்ணம் இல்லை, தீபாவளிக்கு சன் டிவியில் வந்துடும்னு நினைக்கிறேன், அப்போ பார்த்துக் கொள்ளலாம், ஆமா ராகவன் ஐயா, பாம்பேயில் துரை லெண்டிங் லைப்ரரி
இன்னும் இருக்கிறதா (சரோஜாதேவி புத்தகங்களுடன்) ??
சோம்பேறி பையன் அவர்களே. 1974-ல் பம்பாயை விட்டேன். அதன் பிறகு மூன்று முறை சென்றிருக்கிறேன். மூன்று முறைகளையும் சேர்த்து நான் அங்கு த்கங்கிய நாட்கள் நான்குதான். லெண்டிங் லைப்ரரி பக்கம் போய்ப் பார்க்க நேரம் இல்லை. இடம் கூறுகிறேன். முடிந்தால் பாருங்கள்.
மாதுங்கா ரயில் நிலைய படிக்கட்டிலிருந்து இறங்கி வந்து முதல் லெஃடில் கன்ஸர்ன்ஸ் வரும். அதில் திரும்பாமல் நேரே வந்தால் அம்பேத்கர் சாலை வரும். அதில்தான் அரோரா சினிமா இருக்கிறது. ஆக, தெருவின் இடப்பக்கமாக நடந்து வந்து அம்பேத்கர் தெருவில் இடப்பக்கமாகத் திரும்பினால் ப்ளாட்பாரத்தில் பல பழைய புத்தகங்கள் கடைகள் உண்டு. அவற்றில் ஒன்று துரையின் கடை. மைசூர் கபே என்ற ஹோட்டல் இருந்தது. இப்போது இருக்கிறதா என்று தெரியவில்லை. அதன் வாசலில் அவர் கடை. அவர் பெயரைச் சொல்லிக் கேட்டால் தெரியும் என நினைக்கிறேன். 50%க்கு மேல் வாய்ப்பு உண்டு. சரோஜாதேவிப் புத்தகங்களும் கிடைக்கும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
http://in.rediff.com/movies/2005/sep/09salaam.htm
Salaam Namaste - Preity-Saif starrer - released last week is also having the concept of living together.
நன்றி அலெக்ஸ் பாண்டியன் அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment