என்னைப் பொருத்தவரை அது பம்பாய்தான். மும்பை அல்ல. வருடம் 1971, ஜனவரி. வேலைவாய்ப்பு அலுவலகத்தின் தயவால் மத்தியப் பொதுப்பணி துறையில் இளநிலை மின்பொறியாளராக நியமனம் செய்யப்பட்டேன். முதல் வேலை பம்பாயில். சம்பளம் ரூபாய் 540. அக்காலத்தில் அது பெரிய தொகை. மாதுங்கா கிங்க்ஸ் சர்க்கிளில் ஒரு அறையில் ஒரு கட்டில் வாடகைக்கு. மாதம் ரூபாய் 70. கன்ஸர்ன்ஸில் சாப்பாடு மாதம் ரூபாய் 72. அப்பாவுக்கு மாதம் அனுப்பியது ரூபாய் 100, மற்றச் செலவுகள் கிட்டத்தட்ட ரூபாய் 100, சேமித்தது ரூபாய் 200.
காப்பி 30 பைசா, ஒரு பிளேட் இட்டலி 40 பைசா என்ற ரேஞ்சில்தான் விலைகள். எங்கள் கேன்டீனில் மதிய உணவு 95 பைசா. பட்டினி எல்லாம் கிடக்கவில்லை. நன்றாக வாழ்க்கையை அனுபவித்தேன். பார்த்த சினிமாக்களுக்கு குறைவில்லை. ஞாயிறு காலைகளில் அரோரா சினிமாவில் தமிழ்ப்படம் போடுவார்கள். பிரிட்டிஷ் கௌன்சில், மேக்ஸ்ம்யுல்லர் பவன் மற்றும் அமெரிக்க நூலகங்களில் உறுப்பினர். ஆகவே படிக்கக் கிடைத்த புத்தகங்களுக்கும் பஞ்சமில்லை. எல்லா தமிழ்ப்பத்திரிகைகளும் தாராளமாகக் கிடைக்கும். நான் இருந்த அபார்ட்மென்டில் என்னையும் சேர்த்து 10 பேர். அதில் என் வயதுக்காரர்கள் மூவர், வீரராகவன், ஜயகுமார் மற்றும் சுந்தரம். நாங்கள் நால்வர் சேர்ந்து அடித்த கொட்டங்களுக்கு அளவேயில்லை.
பம்பாய் ஓர் அற்புத நகரம். இங்கு அவரவர் வேலையை அவரவர் பார்த்துக் கொள்வார்கள். நன்றாக முன்னுக்கு வரலாம் அல்லது கெட்டுச் சீரழியலாம். என் நல்ல வேளை எனக்கு நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள்.
மத்தியப் பொதுப்பணி துறையில் நான் ப்ளானிங்கில் இருந்தேன். வேலைக்கான மதிப்பீடுகள் தயாரிப்பது, எங்கள் சர்க்கிள் அலுவலகத்தின் கீழ் இயங்கும் டிவிஷன் மற்றும் சப்-டிவிஷன் அலுவலகங்களிலிருந்து வரும் மதிப்பீடுகளை பரிசீலிப்பது போன்ற வேலைகள்தான். டென்ஷன் இல்லாத காலை 10-லிருந்து மாலை 5 மணி வரையான வேலை.
பின்னணித் தகவல்கள் போதுமான அளவு கொடுத்தாகி விட்டது. பம்பாயில் இருந்தபோது பல பாடங்கள் கற்றேன். அவற்றில் மற்றவர்களுக்கு உபயோகமானவை என்று நான் கருதும் சிலவற்றை தேர்ந்தெடுத்து தருவேன். மற்றவை அடுத்த பதிவுகளில்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இன்று விஷ்ணுபுரம் விருது விழா, வருக!
-
இன்று (21 டிசம்பர் 2024) காலை 10 மணிக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா
கோவை ராஜஸ்தானி சங் அரங்கில் தொடங்குகிறது. நாளை (22 டிசம்பர் 2024) மாலையில்
விரு...
22 hours ago
22 comments:
சார் நான் ஒரு அணாவிற்கு வாங்கிய இட்டலியின் சுவை இன்று இல்லையே நான்கணா அதான் கால்ரூபாய் 25 பைசா சார் அன்று நம் அண்ணை சமைத்துப் போட்ட சமையலின் சுவை இன்று இல்லையே சார் ஐயர்வீட்டுப்பிள்ளைகள் ஊர் சுற்றாமல் மிச்சம் பிடித்த வீட்டுக்கணுப்புவீங்க. நாங்க எல்லா காசையும் செலவு செய்து விட்டு விட்டில் பணம் கேட்போம் இதுதான் வழக்கம்
என்னார்
"ஐயர்வீட்டுப்பிள்ளைகள் ஊர் சுற்றாமல் மிச்சம் பிடித்த வீட்டுக்கணுப்புவீங்க. நாங்க எல்லா காசையும் செலவு செய்து விட்டு விட்டில் பணம் கேட்போம் இதுதான் வழக்கம்"
இதே அர்த்தத்தில் அசோகமித்திரன் கூறியபோது அவரை நுங்கு எடுத்து விட்டார்கள். ஹி ஹி ஹி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
உண்மையைச் சொல்வதில் நானும் காந்திஜியும் வெட்கப்படுவதில்லை.
என்னார்
வாங்க டோண்டு ஐயா.. வாங்க..
இந்த வார நட்சத்திரமாக ஜொலிக்க வாழ்த்துக்கள் :-)
பம்பாய் நினைவுகள் முன்னுரை சூப்பர்.. தொடர்ந்து எழுதி கலக்குங்க..
ஆமாம், மாதுங்காவில் ரூ 70 மாத வாடகையா.. வயித்தரிச்சலை கிளப்பாதீங்க.. இப்ப வாஷியில் கூட ரூ 4000 க்கு குறைஞ்சு வீடு வாடகைக்கு கிடைப்பதில்லை :-)
ரூபாய் எழுபது ஒரு கட்டிலுக்கான வாடகை. என்னையும் சேர்த்து அப்போது பத்து பேர் அந்த அபார்ட்மென்டில் இருந்தோம். ஆக மொத்த வாடகை ரூபாய் 700. இப்போதைய விலைவாசியில் கணக்கிட்டால் ரூபாய் 7000-க்கு சமம். ஆகவே பெருமூச்செல்லாம் விட வேண்டாம். அது சரி, துரை வாடகை நூலகத்தை பார்க்க முடிந்ததா?
வளர்ந்தவரே, நீங்கள் என்னாரா? உங்கள் ப்ரொஃபைலில் வேறு பெயர் அல்லவா வருகிறது?
அன்புடன்,
டோண்டு ராகவன்
சார்..நான் மும்பைக்கு போனதில்லை.. உங்க பதிவு பார்த்துட்டு எல்லாம் தெரிஞ்ச பிறகுதான் போவதாக உத்தேசம்.
//வாஷியில் கூட ரூ 4000 க்கு குறைஞ்சு வீடு வாடகைக்கு கிடைப்பதில்லை :-)//
இங்கே மாச வாடகை இல்லை. எல்லாம் வாரத்துக்கு.
குறைஞ்சது வாரம் 6000 ரூபாய்.(-:
இவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகும் இந்திய ரூபாயில் கணக்கிடும் பழக்கம் போகவில்லையா, துளசி அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
எப்படிங்க டோண்டு நம்ம 'வேரை'
மறக்கமுடியும்?
"எப்படிங்க டோண்டு நம்ம 'வேரை'
மறக்கமுடியும்?"
இதை பற்றியும் ஒரு தனிப்பதிவு போடலாம் போலிருக்கிறதே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
மேலும் பம்பாய் பற்றி படிக்க ஆர்வமாக உள்ளேன்.
தேசிகன்
http://www.desikan.com/blogcms/
மாதுங்கா கிங்க்ஸ் சர்க்கிளும், அரோரா தியேட்டரும், சவுத் இண்டியன் கன்சர்ன்ஸும் பம்பாயில் வேலை பார்க்கப்போகும் எந்த பிரம்மச்சாரியையும் விடுவதில்லை போல. :-)
அசோகமித்திரன் சொன்னதை நுங்கு எடுத்தார்கள் - காரணம் - ஐயர் பையன்கள் மட்டும் சேமிப்பார்கள். மற்றவர்கள் அதை மாமிசத்துக்கு செலவு பண்ணுவார்கள் - என்று அவர் சொன்னது இந்தக் காலத்துக்கு சம்பந்தமில்லாத ஸ்டேட்மெண்ட்.
அது உங்களுக்கும் தெரியும் :-)
""ஐயர்வீட்டுப்பிள்ளைகள் ஊர் சுற்றாமல் மிச்சம் பிடித்த வீட்டுக்கணுப்புவீங்க. நாங்க எல்லா காசையும் செலவு செய்து விட்டு விட்டில் பணம் கேட்போம் இதுதான் வழக்கம்"
"ஐயர் பையன்கள் மட்டும் சேமிப்பார்கள். மற்றவர்கள் அதை மாமிசத்துக்கு செலவு பண்ணுவார்கள் -"
கிட்டத்தட்ட ஒரே அர்த்தம் வரவில்லை?
அன்புடன்,
டோண்டு ராகவன்
அய்யா சாமி,
அர்த்தம் ஒண்ணுதான்.
என்னார் ( மற்றும் அசோகமித்திரன்) காலமும், என் காலமும் ஒண்ணா..?? அதான் கேள்வி...!!
"என்னார் ( மற்றும் அசோகமித்திரன்) காலமும், என் காலமும் ஒண்ணா..??"
இது கால தேச வர்தமானத்தைத் தாண்டியது. ஒரு பார்ப்பனரல்லாதவர் பார்ப்பன சாதியை பற்றி உயர்வாகக் கூறி, மற்ற சாதியை சேர்ந்தவர்கள் அப்படியில்லை என்று கூறினால் அது பெருந்தன்மை. அதையே ஒரு பார்ப்பனர் கூறினால் அது தற்பெருமை என கருதப்படும். அதுதான் இங்கு விஷயமே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
சொன்ன விஷயத்தோட அர்த்தத்தை விட்டுட்டீங்க...! அப்படி சொல்றது பெருந்தன்மையா, ற்பெருமையாங்கிற சைடு திரும்பிட்டீங்க.
போடு..நல்லா அடிச்சு, வளைச்சு ஆடுங்க. இனி பேசறது வேஸ்ட்.
நல்லாருங்க ஸார்.:-)
நீங்கள் சொன்ன விஷயத்தை நான் புரிந்து கொள்ளவில்லையா? ஒரு வேளை ஐயர் வீட்டுப் பசங்களும் மாமிசம் சாப்பிடறாங்க என்று கூறுகிறீர்களா?
உண்மைதான் ஒத்துக் கொள்கிறேன். இதில் விஷேஷம் என்னன்னா வழக்கமா சாப்பிடறவனாவது சில நாட்கள் கிருத்திகை, என்றெல்லாம் கூறி சாப்பிடாமல் இருப்பான், ஆனால் மாமிசம் சாப்பிடும் ஐயருக்கு அந்த கட்டுப்பாடெல்லாம் கிடையாது. எல்லா நாளும் மஜாதான். அப்படி சாப்பிடும் ஒருவரை எனக்கு நன்றாக, முழுமையாகத் தெரியும், ஆனால் ஒரு தடவை கூட நேருக்கு நேர் சந்தித்ததில்லை, இது எப்படி இருக்கு?
அன்புடன்,
டோண்டு ராகவன்
எப்படி சார் இதனைப் பார்க்காமல் இருந்தேன்?! மும்பை ( சாரி.. பம்பாய்:}) பற்றி நீங்க எழுதி நான் படிக்காம இருக்கிறதா?
நானும் ஆதி மும்பை வாழ்க்கையில் கிங்க்சர்க்கிள் பக்கம்தான் ( CGS colony-ல் illegalஆக வாடகைக்கு விடப்பட்ட குவார்டர்ஸில், முதன்முதலில் பம்பாய்க்கு வரும் பையன்கள் போலவே இருந்தேன்). மாதுங்காவுக்கு நடந்து போவதும், தியேட்டரில் கன்னாபின்னாவென தமிழ்ப்படம் பார்ப்பதும் ... சுகமான வாழ்க்கை சாமி. போச்சு இப்பவெல்லாம்.
மாதுங்காவும் அதன் பொலிவை இழந்துவிட்டது. கண்கூடாக இதைக் காணலாம். கன்ஸெர்ன்ஸ் இலைச் சாப்பாட்டின் சுவையும் போச்சு. என்னமோ கொஞ்சம் பாலக்காட்டுக்காரர்கள் சாம்பார் பொடி, அப்பளம், முறுக்கு என பிளாஸ்டிக் பையில் அடைத்து விற்கிறார்கள். "நீ என்னவாக்கும் விலை சொல்றாய்?" எனக்கேட்டால் கொஞ்சம் விலை குறைக்கிறார்கள்.
சோம்பேறிப்பையன் சொல்வதுபோல இப்ப விலை கூடிப்போச்சு. புதுசாக மும்பை வருபவர்கள் நவி மும்பை பக்கம் போகிறார்கள். அது காஸ்மோ பொலிடன் வாழ்க்கையாகவே பரிமளிக்கிறது. மாதுங்காவின் மணம் மக்கி வருகிறது.
தாராவி மட்டும் அதே நாற்றத்துடன் இன்றும்....!
அன்புடன்
க.சுதாகர்.
பம்பாயைப் பற்றி 3 பதிவுகள் போட்டுள்ளேன். மூன்றாம் பதிவின் சுட்டி http://dondu.blogspot.com/2005/10/3_16.html
இரண்டாம் பதிவின் சுட்டி http://dondu.blogspot.com/2005/10/2.html
நீங்கள் எப்போது பம்பாயில் இருந்தீர்கள்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
நான் மும்பை வந்தது '91 இல். நீங்கள் இருந்த காலத்திலிருந்த மும்பை 89 வரை அப்படியேதான் இருந்திருக்கவேண்டும். இங்கள் குடியிருப்பில் வசித்த மூத்தவர்கள் பலர் 70களிலிருந்து இருந்தவர்கள். அவர்களிடம் இருந்து பலதும் கேட்டிருக்கிறேன்.
இன்னும் மும்பையில்தான் வசிக்கிறேன். மிகச் சிறிய சென்னை வாசத்திற்குப் பின் தற்போது கோரேகாவ் பகுதியில்...மும்பை வருவீர்களானால் தெரியப்படுத்தவும். எனது மின்மடல்
அன்புடன்
க.சுதாகர்
வாருங்கள் சுதாகர் அவர்களே.
1974-ல் பம்பாயை விட்டேன். பிறகு 1991-ல் தான் சில நாட்களுக்கு வருகை தந்தேன். பம்பாய் செண்ட்ரலிலிருந்து செம்பூர் செல்லும் வழியில் அரோரா சினிமா அருகில் ஃப்ளை ஓவரைப் பார்த்து பிரமித்தேன். ஓட்டுனரிடம் அது நான் பம்பாயில் கடைசியாக இருந்தபோது கட்டப்பட்டிருக்கவில்லை என்று ஹிந்தியில் கூற அவரும் ஹிந்தியில் நான் எப்போது கடைசியாக பம்பாயில் இருந்தேன் என்று கேட்டதற்கு 'சமீபத்தில் 1974-ல் பம்பாயை விட்டுச் சென்றேன்' என்று கூற, இது சமீபமா என்று கேட்டு ரொம்பவும் ஃபீலிங்க்ஸ் ஆனார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment