4/10/2006

தமிழ் ரீலுக்கு நன்றி



நான் பாட்டுக்கு ஒரு மொழிபெயர்ப்பு வேலையில் (ஆங்கிலத்திலிருந்து பிரெஞ்சுக்கு) ஆழ்ந்திருக்க திடீரென யாஹூ தூதுவனிலிருந்து ஒரு மெஸ்ஸேஜ் வந்தது, "மாட்டிக் கொண்டீரா" என்று. ஒரு நிமிடத்திற்கு ஒன்றும் புரியவில்லை. நீங்கள் யார் என்பதைக் கூறவும் என்று கேட்க, "நீங்கள் போலி டோண்டுதானே, உங்கள் லீலையை நிறுத்திக் கொள்ளவும்" என்று செய்தி வந்தது. நான் உண்மையான டோண்டுவே என்று கூற உடனே அவர் மன்னிப்பு கேட்டார். அவர் மேல் தவறில்லை. போலி டோண்டு எல்லோரையும் அவ்வாறு குழப்பி வைத்திருக்கிறான். பிறகு அவர் குமுதம் ரிப்போர்டர் செய்தியை தன் மன்றத்தில் யூனிகோடில் போட்டதாகக் கூற, அங்கு போய் பார்த்தென். படத்துடன் வந்திருந்தது. அவர் அனுமதியுடன் அதை இங்கு ஏற்றுகிறேன். அவரது சுட்டி இதோ. அவருக்கு அங்கேயே பதிலளிக்க நினைத்தேன் முடியவில்லை. அதை இங்கே நகலெடுத்து ஒட்ட அனுமதி கேட்டுப் பெற்றேன். படத்தைப் போட விடாது ப்ளாக்கர் சொதப்புகிறது.

இப்போது தமிழ்ரீல் கொடுத்துள்ள குமுதம் ரிப்போர்டர் ரிப்போர்ட் இதோ:

காலையில் போய் கம்ப்யூட்டரைத் திறக்கிறீர்கள். இ.மெயிலை ஆர்வத்துடன் திறந்தால்..."தே.... மவனே... உன்னைக் கொன்னுடுவேண்டா..." என்று ஆரம்பித்து உங்கள் அப்பா, அம்மா, சகோதரி, பிள்ளைகள், நண்பர்கள் என்று எல்லோரையும் வக்கிரமாகத் திட்டி ஒரு அனாமதேய மெயில் வந்திருந்தால், உங்களுக்கு எப்படியிருக்கும்?

தமிழ் இணைய உலகில் 'பிளாக்' (blogspot) என்று சொல்லப்படும் தனிப்பக்கங்கள் வைத்து எழுதிக்கொண்டிருப்பவர்கள் இம்மாதிரி ஒரு அவஸ்தையில் மாட்டிக் கொண்டு தவிக்கிறார்கள். உலகளாவிய இணைய உலகில், யார் இந்த வேலையைச் செய்பவன் என்று தெரியாமல் பலர் மனம் நொந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.

தமிழில் 'பிளாக்' எழுதுபவர்கள் சுமார் 1000 பேர் இருக்கிறார்கள். அதில் சுமார் 300 பேர் தீவிரமாக இயங்குகிறார்கள். தமிழில் எழுதப்படும் இந்த பிளாக்குகள் அனைத்தையும் திரட்டி 'தமிழ் மணம்' என்ற இணையதளம் வழங்குகிறது. இதற்கு போனால் யார் யார், என்னென்ன விவரங்களை புதிதாக தங்கள் பிளாக்கில் அப்டேட் செய்திருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள முடியும்.

இப்படி தமிழ் இணைய உலகில் தீவிரமாக இயங்குபவர்களில் 'டோண்டு' ராகவன் என்ற மொழிபெயர்ப்பாளரும் ஒருவர். இவர்தான் அந்த 'பயங்கரவாதியால்' கடுமையான பாதிப்புக்குள்ளானவர். இவரிடம் பேசினோம்.

"நான் 'டோண்டு' என்ற பெயரில் 'பிளாக்' எழுதி வருகிறேன். நான் எழுதிய ஒரு கருத்துக்கு நூறு பேர் வரை 'கமெண்டுகள்' எழுதுவார்கள். இது சாதாரணமாக நடக்கும் நிகழ்ச்சி. ஒருமுறை, நான் என்ன சாதி என்பதைக் குறிப்பிட்டு, அதை பகிரங்கமாக ஒப்புக்கொள்வதில் தவறில்லை; எதற்காக என் சாதியை நான் மறைக்க வேண்டும்? என்று குறிப்பிட்டேன். இதைத்தான் அந்த 'பயங்கரவாதி' பிடித்துக் கொண்டுவிட்டான். அதைத் தொடர்ந்து என் பிளாக்குக்கு வந்து கெட்ட வார்த்தைகளால் அச்சில் ஏற்றமுடியாத என்னை அர்ச்சித்தவன், என் 'பிளாக்' மாதிரியே வேறொரு 'பிளாக்'கை என் பெயரிலே 'டிசைன்' செய்ய ஆரம்பித்து, நான் எழுதும் எல்லாவற்றையும் திருடி அங்கே போட்டு, அதில் இடையிடையே சில வார்த்தைகளை மாற்றிப் (கெட்ட வார்த்தைகளை, குறிப்பாக பாலுறுப்புகள் தொடர்பான வார்த்தை) போட்டுவிடுவான். அதைப் பார்ப்பவர்கள், டோண்டு ராகவனுக்கு அறுபது வயதாகிறது. இவ்வளவு வக்கிரமான ஆளாக இருக்கிறாரே என்று நினைக்க ஆரம்பித்தார்கள். அது மட்டுமல்ல, என் பெயரில் இவன் மற்றவர்கள் எழுதும் தமிழ் பிளாக்குகளுக்கும் போய் கமெண்ட் எழுதவும் ஆரம்பித்தான். கமெண்டுகளா அவை? அய்யோ... படிக்கவே கண் கூசும் கடைந்தெடுத்த வக்கிர வார்த்தைகள் அவை... படிக்கும் ஆண்களுக்கே குமட்டும் என்றால் பெண்கள் என்ன ஆவார்கள்?

இந்த 'உவ்வே' சமாச்சாரத்தைக் கண்டுபிடித்த நான் பிறகு எல்லோருக்கும் அதைத் தெரிவித்தேன். நான் எழுதும் ஒரிஜினல் கமெண்டுகளைத் தொகுத்து ஒரு இடத்தில் போட்டேன். இதையும் அவன் மோப்பம் பிடித்து, அந்த கமெண்டுகளுக்கும் போலியாக தனி இடம் ஆரம்பித்து போலி கமெண்டுகளை என் போலவே தொகுக்க ஆரம்பித்துவிட்டான்.

இதோடு விட்டானா என்றால் இல்லை... என் பிளாக்கைப் படித்துவிட்டு யாராவது ஒரு சின்ன கமெண்டை எழுதிவிட்டால் போதும். அடுத்த நிமிடம் அதை எழுதியவரை ஆபாசமாக அர்ச்சனை செய்து... கொலை மிரட்டல் விட்டு அச்சுறுத்திவிடுகிறான்!" என்று மூச்சுவிடாமல் சொல்லி சற்று நிறுத்தினார் டோண்டு ராகவன்.

இதுபோன்ற வக்கிர செய்கைகள் நடந்த ஓர் ஆண்டாக தொடர்ந்து நடந்திருக்கிறது. ஆனால், சமீபத்தில் ஒரு அறுபது வயதுப் பெண்மணி, தன் அமெரிக்க மகளுடன் பேசுவதற்காக இணைய தளத்தைப் பயன்படுத்த ஆரம்பித்தவர், அப்பாவித்தனமாக டோண்டுவின் பிளாக்கில் ஒரு கருத்தை எழுதிவிட்டார். அவ்வளவுதான். அவருக்கு வந்து சேர்ந்த மோசமான வார்த்தைகளை அவர் வாழ்நாளில் கேட்டதில்லை. இப்போது அவர் மனரீதியாகப் பாதிக்கப்பட்டு கணிப்பொறியை பார்த்தாலே கை கால் நடுங்கும் அளவுக்குப் போய்விட்டார்.

இந்த சம்பவத்துக்குப் பிறகு, இதை இத்துடன் விடக்கூடாது என்று பாதிக்கப்பட்டவர்கள் முடிவெடுத்திருக்கிறார்களாம்.

இணைய உலகில் இயங்கும் பலரிடம் சாதி குறித்த பிடிமானம் அபரிமிதமாக உள்ளது. ஏனெனில், 'அங்கே முகம் காட்ட வேண்டாம். தங்கள் அடையாளங்களை மறைத்துக் கொள்ளலாம்' என்பது ஒரு வசதி. எந்தக் கருத்தையும் தன் பிளாக்கில் சுதந்திரமாக எழுதிவிடலாம். சில பிளாக்குகள் இதைப் பயன்படுத்தி இனவாதம், மதவாதம் பேசிவிடுவதும் உண்டு. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தால், அவற்றை இந்த பிளாக்குகளுக்கு இடம் தரும் இணைய தளங்கள் நீக்கிவிடும்.

ஆனால் இந்த பயங்கரவாதி எப்படியோ ஒருவரின் சாதி, அவரது பின்னணி, அவர் வேலை பார்க்கும் இடம், அவரது கல்லூரித் தொடர்புகள் எல்லாவற்றையும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கண்டுபிடித்துவிடுகிறான். பிறகு அவற்றை பப்ளிக்காக தன் 'போலி டோண்டு' பிளாக்கில் வெளியிட்டும் விடுகிறான். அமெரிக்காவில் வசிக்கும் திருமலைராஜன் என்பவரது முழுமுகவரி, அவர் எங்கோ, எப்போதோ எடுத்துக் கொண்ட ஒரு படம் ஆகியவற்றை வெளியிட்டு பெரிய சலசலப்பையே தமிழ் இணைய தள எழுத்தாளர்களிடம் ஏற்படுத்திவிட்டான் அவன்.

இதனால் தன் அறுபதாம் கல்யாணம் விமரிசையாக நடந்தும் ஒரு 'பிளாக்' எழுத்தாளர், தன் நண்பர்கள் வலியுறுத்தியும் அந்தப் படங்களை வெளியிடவே தயங்கிக் கொண்டிருக்கிறார். சென்னையிலிருக்கும் ஒரு மூத்த பெண் பத்திரிகையாளருக்கும் இந்தக் கிறுக்குப் பிடித்த பயங்கரவாதியிடமிருந்து ஆபாச மிரட்டல்கள் வர, அவரும் இப்போதெல்லாம் கம்ப்யூட்டரைப் பார்த்தாலே கை நடுங்க ஆரம்பித்துள்ளார்.

'தமிழ் மணம்' என்ற பிளாக்குகளைத் திரட்டும் தளம் நடத்துபவர் பெயர் காசி ஆறுமுகம். இவருக்கும் அந்த பயங்கரவாதிக்கும் இதனால் மோதல் வர, அவன் சகட்டு மேனிக்கு அவரைப் பற்றி எழுத ஆரம்பிக்க, அவற்றை ஏதேச்சையாகப் படித்துவிட்ட அவரது குடும்பத்தினர், "உங்களுக்கு இந்த இணையதள பிஸினஸே வேண்டாம்!" என்று பெரும் பிரச்னை செய்திருக்கிறார்கள்.

தமிழில் பிளாக் எழுதுபவர்களில் பிரபலமானவர்களான பத்ரிநாராயணன், பிரகாஷ் ஆகியோரிடம் இதுபற்றிக் கேட்டோம். 'தாங்களும் இவனால் பாதிக்கப்பட்டவர்களே' என்ற அவர்கள், தங்கள் கவலையை நம்முடன் பகிர்ந்து கொண்டார்கள்.

"இணையத்தின் பயன்பாடு இப்போது உலகம் முழுக்க அதிகரித்துக்கொண்டே போகிறது. பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் இதைப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்கள் புதிதாக உள்ளே நுழைந்தவுடன் அவர்களை மீண்டும் இணையதளம் பக்கம் திரும்ப வராமல் செய்கிறான் இவன். எங்களுக்கும் இவனிடமிருந்து மிரட்டல் கடிதங்கள் வந்திருக்கின்றன. ஆனால் அதை நாங்கள் பொருட்படுத்தவில்லை. ஆனால் பெண்கள் இவனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாவதைத்தான் சும்மா விட்டுவிட முடியவில்லை. சாதாரணமாக, வெளியுலகில் ஒரு தெருவில் ஒரு பைத்தியக்காரன், அவ்வழியாகப் போகும் பெண்களைத் தரக்குறைவாகப் பேசிக் கொண்டிருக்கிறான், அதைத் தட்டிக் கேட்க யாரும் இல்லை என்றால் என்ன செய்வார்கள்... பெண்கள் அந்தத் தெரு வழியாக வருவதையே நிறுத்திவிடுவார்கள். அதுதான் இப்போது நடக்கிறது. தமிழ் இணையத்தில் ஆர்வத்துடன் பங்கெடுக்க வந்த பல பெண்கள் இப்போது இவனது மிரட்டலால் காணாமலே போய்விட்டார்கள்.

இதே அமெரிக்காவாக இருந்தால், இவனை கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகளில் பிடித்துப்போட்டு நொங்கு எடுத்துவிடுவார்கள். சைபர் கிரைம் தொடர்பாக சட்டங்கள் அவ்வளவு தெளிவானவையாக உள்ளன. ஆனால் இங்கே அப்படிக் கிடையாது. தமிழகத்தில் எங்கு சைபர் கிரைம் நடந்தாலும், அதை எங்கே புகார் கொடுப்பது என்பது பற்றிய தெளிவான விவரங்கள் இல்லை. இதை முறைப்படுத்தாவிட்டால், எதிர்காலத்தில் இன்னும் பயன்பாடுகள் அதிகரிக்கும்போது விபரீதங்கள் ஏற்படும்" என்று தெரிவித்தார்கள் இவர்கள்.

இப்படியரு குடைச்சலைக் கொடுத்துவரும் அவன் யாரென்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு திறமையுடன் தொழில்நுட்ப ஓட்டைகளைப் பயன்படுத்திச் செயல்படுகிறானாம். அத்துடன் அவன் எழுதும் தமிழ்நடை, உண்மையிலேயே நன்றாக இருக்கிறது என்பதால் அவன் மெத்தப் படித்த அறிவாளி என்று ஒப்புக்கொள்ளும் இவர்கள், எங்கோ அவனுக்கு மனரீதியாக பாதிப்பு ஏற்பட்டு அவனொரு சைக்கோவாக ஆனதால்தான் இப்படி நடந்துகொள்கிறான் என்கிறார்கள். தற்போதைக்கு அவன் யாரென்று ஒருவிதமாக புரிந்திருக்கும் இவர்கள், அவனைப்பற்றி காவல்துறைக்கும் தெரிவித்திருக்கிறார்களாம். ஆனால், அவனைப் பிடிக்க சர்வதேச காவல் துறையின் உதவி தேவைப்படும் என்பதால் தமிழக போலீஸ் கூடுதல் சிரத்தையுடன் செயல்பட்டால்தான் பிடிக்க முடியும் என்கிறார்கள்.

இணையதளத்தில் தகவல்களைத் தேடித்தரும் மென்பொருட்கள் உள்ளன. இவன் பலரையும் பற்றி கன்னா பின்னாவென்று ஆபாசமாக எழுதிவருவதால், இவனால் பாதிக்கப்பட்ட யாரைப்பற்றியாவது தகவல்களைத் தேடினால், இவன் அவர்களைப்பற்றி எழுதிய அசிங்கமான விஷயங்களே வந்து விழுகின்றனவாம். இதுவே இணையதள எழுத்தாளர்களின் அச்சத்தைப் பன்மடங்கு பெரிதாக்கியிருக்கிறது!

தொழில்நுட்பம் வளர வளர எவ்வளவு பிரச்னைகளைத்தான் சந்திக்க வேண்டியிருக்கிறது!

நன்றி குமுதம் ரிப்போர்டர் 13.04.2006 தேதியிட்ட இதழ்

அன்புடன்,
டோண்டு ராகவன்

18 comments:

லக்கிலுக் said...

அந்தச் செய்தியைப் போட்டிருப்பவர் தமிழ் ரீல் அல்ல.... திருச்சி என்பவர்... என்னுடைய நண்பர் அவர்... பெங்களூரில் வசிக்கிறார்... தமிழ் ரீலுக்கு தேவையில்லாமல் நன்றி சொல்லி இருக்கிறீர்கள்.... தமிழ் ரீல் என்பவர் வேறு ஒருவர்....

dondu(#11168674346665545885) said...

அவர் திருச்சி007 என்ற பெயரிலும் தமிழ்ரீல் என்ற பெயரிலும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டதாலேயே நான் அவ்வாறு போட்டேன்.

அவர் பெயரை யாஹோ தூதுவனிலும் நண்பர்கள் குழுவில் சேர்த்துள்ளேன். அவருக்கு இப்பதிவைக் குறித்து மெஸ்ஸேஜ் அனுப்பியுள்ளேன். பார்ப்போம். தேவையெனில் தலைப்பை மாற்றி திருச்சி ஜேம்ஸ்பாண்டுக்கு நன்றி என்று போட்டு விட்டால் போகிறது.

பைதி வே அவருடன் நான் சாட் செய்ததன் ஒரு பகுதி:

Arun Kumar (10.04.2006 17:21:40): i am Trichy007 in this forum

Arun Kumar (10.04.2006 17:21:56): and i already gave some information to u in ur block from the ID tamilreel
Arun Kumar (10.04.2006 17:22:30): my blogger id is tamilreel

அன்புடன்,
டோண்டு ராகவன்

லக்கிலுக் said...

நானும் இப்போது கொஞ்சம் குழம்பிப் போயிருக்கிறேன்... எனக்கு தெரிந்து தமிழ் ரீல் என்ற பெயரில் கருத்துக் களங்களில் கருத்து எழுதுபவர் அயல்‌நாட்டில் வசிக்கிறார்.... எனினும் நண்பர் திருச்சியாரிடம் இது குறித்து கேட்கிறேன்...

போலி டோண்டு பிரச்சினை போலவே கருத்துக் களங்களிலும் மிக மோசமான வார்த்தைகளை பிரயோகித்து ஒருவர் எழுதி வருகிறார்.... உதாரணத்திற்கு இந்தத் தளத்திற்கு போய் பாருங்கள்....

www.sysindia.com - Discussion forum (General)

dondu(#11168674346665545885) said...

Luckylook அவர்களே. நீங்கள் சொன்ன தளத்தில் போய்ப் பார்த்தேன். போலி டோண்டுவேதான் அது.

என்னுடன் மொபைலில் தொடர்பு கொள்ளவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

போலி டோண்டு எங்கு சென்றாலும் அவன் அடையாளம் கண்டுகொள்ளப்படுவான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

Thanks Scamersbeware,

I have published your comments. Let us see what happens now.
Thank you very much for the links provided by you.

Regards,
Dondu N.Raghavan

P B said...

poli dondu vaal pathikapattavan nanum than :(. Hope he gets causght soon.

dondu(#11168674346665545885) said...

I too hope so Muthukumar Puranam.

Regards,
Dondu N.Raghavan

லக்கிலுக் said...

வணக்கம் டொண்டு....

உண்மையில் உங்களைப் போலவே போலி டொண்டுவால் நான் பாதிக்கப்பட்டவன்.... அவன் எழுதிய அசிங்க கருத்துகளை நான் எழுதியதாக ஆரம்பத்தில் கருத்துக்கள நண்பர்கள் என் மீது சந்தேகப்பட்டார்கள்.... பிறகு உண்மை தெரிந்துக் கொண்டார்கள்... அவனுடைய ஐபி முகவரி கூட கண்டு பிடித்தாயிற்று.... அவன் குடும்பத்தின் நிலை கருதியே அதை பெரிது படுத்தாமல் கள நண்பர்கள் விட்டு வைத்திருக்கிறார்கள்... தட்ஸ் தமிழ் மெசேஜ் போர்டை "காமலோகம்" என்ற பெயரில் கருத்துகளை (?) எழுதி அந்த போர்டையே மூட வைத்தவன் தான் இந்த காவாலி.... இன்று என்னுடைய பிளாக்கில் அவனைப் பற்றி சும்மா எழுதி இருக்கிறேன்... அவன் தொடர்ந்து என் வழியில் குறுக்கிட்டால் அவன் பாணியிலேயே அவனை சந்திக்க முடிவு செய்திருக்கிறேன்....

dondu(#11168674346665545885) said...

Take care lucklook. Wishing you all the best in your endeavour.

Regards,
Dondu N.Raghavan

லக்கிலுக் said...

Now, that dog entered into www.karuththu.com....

We will give him a fit reply.... and his IP will be traced...

dondu(#11168674346665545885) said...

நான் முன்பு கூறியதையே கூறுவேன். ஜாக்கிரதை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

லக்கிலுக் said...

அந்த சொறிநாய் கருத்து.கொம் வந்து நல்லா வாங்கிக் கட்டிக்கொண்டு போனது... Blogல் அவனுக்கு சரியான எதிர்ப்பு வழங்க முடியவில்லை என்பதால் தான் ரொம்ப ஆடினான்...

dondu(#11168674346665545885) said...

My dear Lucklook, I saw the forum in question. Poli has quoted me out of context, adding deliberate changes in crucial places with malice beforethought.

Regards,
Dondu N.Raghavan

லக்கிலுக் said...

Don't Worry !

Karuththu.com Webmaster will remove all that garbages.... and he will help to find him.... (Defenitely his IP address might registered in forums weblog)

dondu(#11168674346665545885) said...

My objection to Poli in this connection has the following points.
1. He has taken on my name and used passages from m own blog posts, for which I hold the copyright.
2. He has added some twists here and there to show them in a bad light.
3. Even in places, where there are no alterations, I take objection because, it is my privilege to decide the destination of my letters.
4. What is worse, he has used my material under my name leading others to think that I am the one mouthing htem in your forum. This is a clear case of identity theft.

Regards,
Dondu N.Raghavan

Prabhu said...

Dondu,
Totally understand your points on poli's intrusion into your privacy.

I hope we can track him/her somehow and make him pay for it.

dondu(#11168674346665545885) said...

"He is really a Psycho. He became like this because his lover dumped him, and ran away with another guy."
வேறு என்னதான் அந்தப் பெண் செய்திருக்க முடியும்? நீங்கள் அவனைப் பற்றிக் கூறுவது நான் அறிந்தவையுடன் ஒத்துப் போகின்றன.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது