என்றென்றும் அன்புடன் பாலா அவர்கள் இட்ட இப்பதிவில் மருத்துவக் கல்லூரி மாணவி கவுசல்யா அவர்களுக்காக இவ்வருடமும் செய்யப் போகும் உதவி பற்றி எழுதியுள்ளார். போன ஆண்டு நானும் அவருடன் டெக்கான் க்ரானிகல் பத்திரிகை அலுவலகம் சென்றிருந்தேன். அவருக்காக கலெக்ட் செய்த தொகையின் காசோலையை பாலா அந்த மாணவியிடம் அளித்தார். அதை பற்றிப் பதிவும் இட்டேன்.
முதலாம் ஆண்டின் தேர்வுகளை நல்ல முறையில் எழுதியிருப்பதாக பாலா அவர்களிடம் அந்த மாணவி கூறியுள்ளார். ப்ளஸ் 2 தேர்வில் 98 சதம் பெற்ற பெண் இங்கு எழுதி முடித்த பரீட்சையில் 75 முதல் 80 சதம் பெறும் வாய்ப்பு இருப்பதாகக் கூறியுள்ளார். மதிப்பெண் து பற்றி அவர் சற்று கவலையும் அடைந்துள்ளார். அவருக்கு முக்கியத் தடை ஆங்கிலம் சரளமாகப் பேச வராததே. அதற்காக அவர் ஆங்கிலத்தில் தனியாகத் தேர்ச்சி பெற விரும்புகிறார். மிண்ட் அருகில் வசிக்கும் அவருக்கு வீட்டிற்கருகே யாராவது ஆங்கிலப் பயிற்சி அளித்தால் நன்றாக இருக்கும்.
இந்த இடுகை அது சம்பந்தமாக சக பதிவாளர்கள் மற்றும் ரீடர்ஸிடம் உதவி கேட்டு போடப்படுகிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அன்றாடத்தில் இருந்து பறந்தெழுதல்…
-
நாம் இந்த ஒரு தலைமுறைக்காலமாகத்தான் அடிப்படைப் பொருளியல் விடுதலையை
அடைந்துள்ளோம். நம் முந்தைய தலைமுறைக்கு அன்றாடமே வாழ்க்கை. உழைப்பே அதன்
நடைமுறை. நிரந்தரம...
5 hours ago
4 comments:
Raghavan Sir,
Thanks for the post. If someone can help to find for Kausalya, an English teacher who resides in and around Stanley medical college (Mint..), I will be grateful.
இந்த இடுகைகூக் கூட நெகடிவ் குத்துகள் போடுபவரை பற்றி என்ன கூறுவது?
அன்புடன்,
டோண்டு ராகவன்
மிகவும் நல்ல யோசனை விசாலாக்ஷி அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நேற்றைக்கு இன்றைய நிலைமை மிகவும் பரவாயில்லை. நன்றி விசாலாக்ஷி அவர்களுக்கும் அவரைப் போல + குத்து குத்தியவர்களுக்கும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment