2/11/2007

வலைப்பதிவர்கள் மீட்டிங் 11.02.2007

பிப்ரவரி 11, 2007 ஞாயிறன்று சென்னை வலைப்பதிவர்கள் மீட்டிங்கை கூட்டலாம் என்று நான் எண்ணுகிறேன். அதன் அறிவிப்புதான் இந்தப் பதிவு.

மாலை 6 மணியளவில் வழமையான உட்லேண்ட்ஸ் டிரைவ் இன்னில் மீட்டிங். வர விருப்பம் உடையவர்கள் இங்கு பின்னூட்டம் இட்டு விட்டு எனது செல்பேசியிலும் தகவல் அளித்தால் நன்றி. எனது செல்பேசி எண் 9884012948. வழக்கம்போல செலவு டட்ச் முறையில் பகிர்ந்து கொள்ளப்படும்.

வழமையான உட்லேண்ட்ஸ் வேண்டாம் என்றால் தி.நகர் வெங்கடநாராயணா ரோடில் உள்ள நடேச முதலியார் பார்க்கிலும் சந்திக்கலாம். பக்கத்திலேயே இட்லி சாம்பார் புகழ் ரத்னா கஃபே உள்ளது. கண்ணதாசன் மெஸ் வேறு.

மூன்றாவது இடம் தி.நகர் சோமசுந்திரம் பார்க். அறுசுவை நடராஜன் அவர்கள் ஹோட்டல் அருகிலேயே உள்ளது.

எது அப்படியானாலும் டட்ச் முறை மாறாது.

பின்னூட்டமிடுபவர்கள் நடேச முதலியார் பார்க்கா, உட்லேண்ட்ஸா அல்லது சோமசுந்திரம் பார்க்கா என்று விருப்பத்தைத் தெரிவித்தால் பெரும்பான்மை முறையில் தெரிவு செய்து கொள்ளலாம். நிறைய நேரம் உள்ளது.

பேச வேண்டிய விஷயங்கள் அங்கு கூடுபவர் விருப்பத்திற்கேற்ப தீர்மானிக்கப்படும். ஆனால் வழக்கமாக பேசும் ஒரு விஷயம் மட்டும் இம்முறை பேசப்படாது. அது என்ன என்பது எல்லோருக்குமே தெரியும். தெரியாதவர்கள் தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

இந்த அறிவிப்பை சென்னையில் வசிக்கும், பிப்ரவரி 11-ஆம் தேதி அங்கு இருக்கப் போகும் எல்லா தமிழ் வலைப்பூ நண்பர்களுக்கும் பொதுவான அழைப்பாகக் கருதுமாறு கேட்டு கொள்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

11.02.2007 அன்று சேர்க்கப்பட்டது
கடைசியில் தி.நகர் நடேச முதலியார் பூங்காவில் (நடேசன் பூங்கா) மீட்டிங்கை வைத்து கொள்வதாக தீர்மானிக்கப் பட்டுள்ளது.

1. நேரம்: மாலை 5.30, ஞாயிறு 11.02.2007
2. இடம்: வெங்கடநாராயணா சாலை, தி.நகர். திருமலை திருப்பதி தேவஸ்தானம் அருகில், க்ரெஸண்ட் பூங்கா எதிரில். இந்த சாலை பனகல் பூங்காவையும் நந்தனம் சிக்னலையும் இணைக்கிறது.

62 comments:

Anonymous said...

nice to hear again a meeting is Taking place in chennai.

i will try to attend your meeting when i visit India .

Anonymous said...

i think now you are able to surpass the issues with new blogger.

i am looking forward for your life experiences posts.

dondu(#11168674346665545885) said...

"உங்களுக்கு அந்த விஷயம் தெரியும்லா சொல்லுங்களே அட்லீஸ்ட் எனக்கு மட்டும்"
எனக்குத் தெரியாமலா. மீட்டிங்குக்கு வாங்க, எதைப் பத்தி டிஸ்கஸ் பன்ணாம இருக்கோமோ அதுதான் அந்த விஷயம். :)))

அன்புடன்,
டோண்டு ராகவன்

Honda said...

உங்கள் வலைபதிவர் சந்திப்பு வெற்றி அடைய வாழ்த்துக்கள்.

Anonymous said...

yes

dondu(#11168674346665545885) said...

நன்றி ஹனுமான் அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Bajji(#07096154083685964097) said...

மன்னிக்கவும் டோண்டு சார். டெஸ்ட் என்று எழுதி ப்ரெவ்யூ பட்டனுக்கு பதில் பப்ளிஷ் பட்டன் அழுத்திட்டேன். அதை ஏத்துக்காதீங்க.

உங்கள் வலைப்பதிவர் சந்திப்பு நல்லபடியாக நடக்க வாழ்த்துக்கள். நான் கல்கத்தாவில் இருக்கேன். அடுத்த மாசம்தான் வருவேன்.

கிருஷ்ணன்

dondu(#11168674346665545885) said...

நான் கூப்பிட்ட மீட்டிங் டட்ச் முறையில் நடக்கும். இன்னொன்று பற்றித் தெரியாது. அவ்வாறே நடக்கலாம் என ஆலோசனை மட்டும் கொடுத்துள்ளேன். பார்க்கலாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

நாளை அல்ல இன்றே நடக்கிறது ஹனுமான் அவர்களே. நானும் செல்கிறேன். முடிந்தால் அவசியம் வாருங்கள். இதுவும் சுவாரசியமாகவே இருக்கும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

Mr Dondu what time (IST) you will publish the post about today's meething?

dondu(#11168674346665545885) said...

I intend doing it before 2200 hrs IST, God willing.

Regards,
Dondu N.Raghavan

மா சிவகுமார் said...

டோண்டு சார்,

சாதிப் பெயரைக் குறிப்பிட்டு பூங்காவின் பெயரை எழுதியதால் இந்த சந்திப்பில் கலந்து கொள்ளும் வாய்ப்பைத் தவற விடுகிறேன்.

அன்புடன்,

மா சிவகுமார்

Jay said...

உட்லேண்ட்ஸ் டிரைவ் இன்னில் சந்திக்கலாம், மற்ற இடங்கள் பற்றி தெரியல, கூட்டமாக இருக்கும் என்று நினைக்கிறேன்!

நண்பருடன் வருகிறேன்

dondu(#11168674346665545885) said...

பின்னூட்டத்திற்கு நன்றி மா.சிவகுமார் அவர்களே,

மரியாதைக்குரிய நடேச முதலியார் அவர்கள் பல தர்ம காரியங்கள் செய்துள்ளார். அவரை கௌரவமாக முதலியார்வாள் என்றே அழைத்திருக்கிறார்கள். குடுகுடுவென்று போய் அவரது பெயரில் உள்ள பார்க்கை நடேசன் பார்க் என்று குறிப்பிடுவதை நான் அவர் நினைவுக்கு செய்யும் அவமானமாகப் பார்க்கிறேன்.

விட்டால் வேதநாயகம் பிள்ளை தமிழில் எழுதி வெளிவந்த முதல் நாவல் பிரதாப முதலியார் சரிதத்தை வேதநாயகத்தின் பிரதாபன் சரித்திரம் என்ற பெயரில் அச்சடித்து வெளியிடுவீர்களா? உ.வே. சாமிநாத அய்யர் சிலையில் (மாநிலக் கல்லூரி வளாகத்தில் உள்ளது) உள்ள பெயரை உ.வே. சாமிநாதன் என்று மாற்றுவீர்களா.

அதைத்தான் நான் கேட்டேன் எனது பதிவில், யார் சாதிப் பெயரை யார் எடுப்பது என்று.

உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்வீர்கள் என நம்புகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//டோண்டு சார்,

சாதிப் பெயரைக் குறிப்பிட்டு பூங்காவின் பெயரை எழுதியதால் இந்த சந்திப்பில் கலந்து கொள்ளும் வாய்ப்பைத் தவற விடுகிறேன்.

அன்புடன்,

மா சிவகுமார் //

இதே போல காந்தியை விளிக்கும் போது மோகன் தாஸ் என்று சொல்லவேண்டும்.
பாலா பிள்ளை என்று சொல்ல கூடாது. எதையும் அரைகுறையாக யோசிப்பதே செய்வதே நமது வழக்கம் .

dondu(#11168674346665545885) said...

"இதே போல காந்தியை விளிக்கும் போது மோகன் தாஸ் என்று சொல்லவேண்டும்.
பாலா பிள்ளை என்று சொல்ல கூடாது."
நேரு என்பதும் காச்மீர பண்டிட்டின் பெயர்தான். நான் கூறுவது என்னவென்றால், இந்த விஷயத்தில் பல பரிமாணங்கள் உள்ளன.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

வெறும் டீ என்றால் பதிவர் மீட்டிங் வர மாட்டேன்.போண்டா வேணும்

dondu(#11168674346665545885) said...

போண்டா என்ன, மசால் தோசையே கிடைக்கும். டட்ச் ட்ரீட்தானே (அதாவது மொத்தச் செலவையும் வருபவர் அனைவரும் சமமாகப் பங்கிட்டு கொள்வது. அதனாலேயே எல்லோரையும் வயிற்றில் இடம் வைத்துக் கொண்டு வருமாறு அன்புடன் நினைவுபடுத்துகிறேன்.

அது சரி நான் குறிப்பிட்ட 3 இடங்களில் உங்கள் ஓட்டு எதற்கு என்று நிச்சயம் செய்யுங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மா சிவகுமார் said...

//அதைத்தான் நான் கேட்டேன் எனது பதிவில், யார் சாதிப் பெயரை யார் எடுப்பது என்று.//

நாம் ஏற்கனவே பேசியபடி உங்கள் நோக்கங்கள் சரியானதாக இருந்தாலும், அதன் அடிப்படையிலான நிலைப்பாடுகள் பலருக்கு தவறான புரிதல்களையும் வழிகாட்டலையும் கொடுத்து விடுகிறது.

பொது இடத்துக்கு பெயர் கொடுத்ததன் நோக்கம் அவரது நினைவைப் பெருமைப்படுத்தத்தானே ஒழிய அவரது சாதியை பிரபலப்படுத்த இல்லை. அவரது அருமை பெருமைகளை விளக்கி நல்ல ஒரு பதிவு போட்டிருந்தால் பல நூறு பதிவர்கள் பயன் பெறுவார்கள். இன்றைக்கு சாதிப் பெயரைச் சேர்த்தாலும் சேர்க்கா விட்டாலும் அவரது சாதனைகள் எத்தனை பேருக்கு தெரியும்?

அன்புடன்,

மா சிவகுமார்

Anonymous said...

மெரீனா பீச்சில் கண்ணகி சிலைக்கு கீழே சந்திப்பு நடத்தலாமே

Anonymous said...

//பொது இடத்துக்கு பெயர் கொடுத்ததன் நோக்கம் அவரது நினைவைப் பெருமைப்படுத்தத்தானே ஒழிய அவரது சாதியை பிரபலப்படுத்த இல்லை. அவரது அருமை பெருமைகளை விளக்கி நல்ல ஒரு பதிவு போட்டிருந்தால் பல நூறு பதிவர்கள் பயன் பெறுவார்கள். இன்றைக்கு சாதிப் பெயரைச் சேர்த்தாலும் சேர்க்கா விட்டாலும் அவரது சாதனைகள் எத்தனை பேருக்கு தெரியும்?

அன்புடன்,

மா சிவகுமார்

இதை நான் வரவேற்க்கிறேன்

dondu(#11168674346665545885) said...

"பொது இடத்துக்கு பெயர் கொடுத்ததன் நோக்கம் அவரது நினைவைப் பெருமைப்படுத்தத்தானே ஒழிய அவரது சாதியை பிரபலப்படுத்த இல்லை".

அப்படியில்லை. அவரது பெயருட்ன் அவரது சாதிப்பெயரை சேர்த்துக் கொண்டு தன் வாழ்நாளை கழித்திருக்கிறார். இப்போது திடுதிப்பென்று நீக்கியது சரியில்லை. அதுவும் அரைவேக்காட்டுத்தனமான முடிவுதான் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

டிபிஆர்.ஜோசப் said...

எனது புது பிளாக்கர் வலைப்பூ என்னை பதிவு போட விடாது படுத்துவதால் ஜோசஃப் சாரை நான் கேட்டு கொண்டு, அவரும் அன்புடன் இப்பதிவை தனது என்னுலகம் வலைப்பூவில் போட அன்புடன் ஒப்புதல் தந்துள்ளார்.//

ஒங்க ப்ராப்ளம் தீர்ந்தது என்பதால்தான் நான் வெளியிடாமல் இருந்துவிட்டேன். அத்துடன் வெள்ளியும் சனியும் என்னால் அலுவலகம் செல்ல இயலவில்லை.

இருப்பினும் அனைவரையும் வருக, வருகவென வரவேற்கிறேன்.

அன்புடன்,
ஜோசஃப்

லக்கிலுக் said...

நானும் வருகிறேன்.

டட்ச் ட்ரீட் முறையில் எனக்கொரு சந்தேகம் இருக்கிறது. உதாரணத்திற்கு நீங்கள் ஒரு செட் மசாலா போண்டா, ஒரு பாஸந்தி, ஒரு மசால் தோசை சாப்பிடுகிறீர்கள்.

நான் வெறும் மெதுவடை மட்டுமே சாப்பிடுகிறேன். வரும் பில்லை சரிபாதியாக பகிர்ந்துக் கொண்டால் அது நியாயமாகுமா?

அவரவர் சாப்பிட்டதற்கு ஏற்ப அவரவர் தொகையை தருவதே முறை.

முடிந்தால் டட்ச் ட்ரீட் பற்றி தனி பதிவு ஒன்று இடவும்.

Anonymous said...

பதிவர் குழுமத்தில் 'சாதி இரண்டொழிய வேறில்லை!'

அது டோண்டு ஆதரவாளர்காள்!! மற்றும் எதிர்ப்பவர்கள்!!

Anonymous said...

//அது டோண்டு ஆதரவாளர்காள்!! மற்றும் எதிர்ப்பவர்கள்!! //

சாதி வெறியர்கள் மற்றும் சாதியை எதிர்ப்பவர்கள்னும் சொல்லலாம்.

dondu(#11168674346665545885) said...

"நான் வெறும் மெதுவடை மட்டுமே சாப்பிடுகிறேன். வரும் பில்லை சரிபாதியாக பகிர்ந்துக் கொண்டால் அது நியாயமாகுமா? அவரவர் சாப்பிட்டதற்கு ஏற்ப அவரவர் தொகையை தருவதே முறை.
முடிந்தால் டட்ச் ட்ரீட் பற்றி தனி பதிவு ஒன்று இடவும்".

யார் என்ன சாப்பிட்டாலும் பில் மொத்தமாகப் பகிர்ந்து கொள்ளப்படும். ஆகவே யார் வருவதாக இருந்தாலும் வயிற்றில் இடம் வைத்து கொண்டு வாருங்கள் என்று ஒவ்வொரு முறையும் கூறுவேன். இதில் ஒளிவு மறைவே இல்லை.

நான் கூப்பிட்ட வலைப்பதிவர் சந்திப்புகள் பற்றி இட்ட பழைய பதிவுகளில் போய் பார்த்து கொள்ளவும். பெங்களூரிலும் அப்படித்தான் நடந்தது. உண்மை கூற வேண்டுமானால் அந்த மீட்டிங்கிற்கு நானே முழு பில்லையும் ஏற்க முயன்றேன். செந்தழல் ரவி என்னைத் தடுத்து டட்சிலேயே போட்டுக் கொள்ளல்லாம் எனக் கூறினார்.

மூன்றாம் தேதியன்று நடந்த மீட்டிங்கில் டட்ச் ட்ரீட் என்று கூறியதை செந்தழல் ரவி ஏற்கவில்லை. இருப்பினும் நான் கிளம்பும்போது 200 ரூபாய் வரவனையான் அவர்களிடம் கொடுத்து விட்டுத்தான் நகர்ந்தேன். அவர் கூட டோண்டு மாமா 200 ரூபாய் கொடுத்தார் என்று இன்னொருவரிடம் கூறிக் கொண்டிருந்தார்.

இப்பதிவிலும் வழக்கமான டட்ச் ட்ரீட் என்றுதான் எழுதியுள்ளேன். ஆகவே இதற்காக தனிப்பதிவு எல்லாம் போட வேண்டியதில்லை.

மறுபடியும் கூறுவேன், அவசியம் மீட்டிங்கிற்கு வாருங்கள். மேலே குறிப்பிட்டபடி இன்ஃபார்மலான டட்ச் ட்ரீட்தான். ஆகவே நீங்களும் ஒரு பிடி பிடியுங்கள். எது எப்படியானாலும் உட்லேண்ட்ஸில் பில் எல்லாம் அவ்வளவு ஆகாது.

இப்போது இன்னொரு விஷயமும் கூறுவேன். தயவு செய்து உங்கள் சாய்சை கூறவும். மூன்று இடத்தில் எது என்று. இப்போதைக்கு டீஃபால்ட்டாக உட்லேண்ட்ஸ். வேறு கருத்து இல்லையென்றால் அதுவே நிற்கும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

நீஙகள் சொல்லும் இடங்களுக்கு கோடம்பக்கம் ரயிலவே ஸ்டேஷன் ல இருந்து வருவது எப்படி என்று தயவு செய்து கூறுஙகள். map irunthal nanri
எனக்கு தெரிந்த்தது எல்லாம் வடக்கு உஸ்மான் ரோடும் , ரஙகநாதன் தெருவும் தான்!

(நான் சென்னைக்கு புதுசு)!

dondu(#11168674346665545885) said...

கோடம்பாக்கம் ஸ்டேஷனில் இறங்கி ஸ்டேஷனின் கிழக்கு பக்க தெருவை அடைந்து ஆட்டோ வைத்து கொள்ளவும்.

நடேச முதலியார் பூங்கா வெங்கட நாராயணா தெருவில் உள்ளது (பகல் பார்க் பாஷ்யம் தெருவிலிருந்து பிரிகிறது). சோமசுந்தரம் பார்க் வடக்கு உஸ்மான் ரோடில் இருந்து வலது பக்கம் பிரியும் ரோடில் இருக்கிறது. (பனகல் பார்க்குக்கு அப்பால்).

உட்லேண்ட்ஸ் டிரைவ் இன் ராதாகிருஷ்ணன் சாலையில் அமெரிக்க நூலகத்துக்கு எதிரில் உள்ளது (ஜெமினி மேம்பாலம் அருகில்). சென்னைக்கு புதிதாக இருக்கும் பட்சத்தில் உஸ்மான் ரோட் வந்ததும் ஆட்டோ எடுப்பது உத்தமம்).

இன்னும் இடம் முடிவாகவில்லை. இப்போதைக்கு உட்லேன்Dச்தான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

மாம்பலம் னு கேட்க வந்து கோடம்பக்கம்னு கேட்டுட்டேன்.

அதுல பர்ருங்க்க கோடம்பக்கம ரயில்வே ஸ்டேஷன் க்கு இந்த பக்கமும் தி நகராம்.

மாம்பலத்துக்கு இந்த பக்கமும் தி நகர்ராம்.

அதான் கன்பியூஸன்.

நன்றி

Anonymous said...

http://idlyvadai.blogspot.com/2007/02/blog-post_7357.html
வெற்றி வேற்றி வந்து உன்னை சேரும்.
அதை வாங்கி தந்த பெருமை எல்லாம் அவரை சேரும்

dondu(#11168674346665545885) said...

ஜெய் ஹனுமான்

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

இன்னா சார் இந்த வார மீட்டிங்கு ஏகபட்ட சனம் வரும் போலக்கீது. உங்களுக்கு ஏகப்பட்ட விளம்பரம் போடறாங்க. ;))

ஜயராமன் said...

ராகவன் சார்,

நான் சமீப காலமாக பதிவதில்லை. அதனால் பதிவுலக இலக்கணத்தில் இருக்கிறேனா என்று தெரியாது. ஆனால், உங்களையும், ஜோசப் சார், சிவஞானமய்யா அனைவரையும் பார்த்து பேச நல்லதொரு சந்தரப்பம். அவசியம் வருவேன்.

நன்றி

dondu(#11168674346665545885) said...

வணக்கம் ஜயராமன் அவர்களே,

நீங்கள் பிளாக்கர் இல்லையென்றால் வேறு யார்ர் அந்தப் பெயருக்கு தகுதியானவர்? உங்களை அடிப்பதாக பயமுறுத்தி நீங்கள் வெறுப்படைந்து விலகியதற்கு நீங்கள் என்னை சப்போர்ட் செய்ததும் ஒரு காரணம் என்பதை அறியும்போது எனக்கு குற்ற் உணர்ச்சி வருகிறது.

உங்களை அவ்வாறு துரத்தியவர்கள் உங்களை இன்னும் திட்டிக் கொண்டிருப்பதிலிருந்தே நீங்கள் அவர்களை இன்ன்னும் பாதிக்கிறீர்கள் எனத் தெரிகிறதே.

அப்புறம் என்ன அம்மாதிரி மூன்றாம்தர அரசியல்வாதி போல் நடந்து உங்கள் மனதை நோகடித்தவர்களே கொட்டம் போடும்போது நீங்கள் இன்னும் பதிவாளரே. இப்போது கூட நீங்கள் இன்னும் தற்காலிக ஓய்வில்தான் இருக்கிறீர்கள் என நம்புகிறேன்.

உட்லேண்ட்ஸ்தானே? அது டீஃபால்ட்டாக உள்ளது. மீதி இரண்டு சாய்ஸ்களில் ஏதாவது நீங்கள் எடுத்தால் அதை தெரியப்படுத்துங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஜயராமன் said...

ராகவன் சார்,

தங்கள் கருத்துக்களுக்கும் ஆதரவுக்கும் நன்றி.

நான் யாரை ஆதரிக்கிறேன், யாரை எதிர்க்கிறேன் என்று எனக்கே சந்தேகமாய் இருக்கிறது.

அப்பப்பொழுது பிறரின் பதிவுகளை பார்த்து அறிந்துகொள்கிறேன். :-))

Anonymous said...

//நீங்கள் பிளாக்கர் இல்லையென்றால் வேறு யார்ர் அந்தப் பெயருக்கு தகுதியானவர்? உங்களை அடிப்பதாக பயமுறுத்தி நீங்கள் வெறுப்படைந்து விலகியதற்கு நீங்கள் என்னை சப்போர்ட் செய்ததும் ஒரு காரணம் என்பதை அறியும்போது எனக்கு குற்ற் உணர்ச்சி வருகிறது.

shocking ,will you write the things happened for jayaraman. all the readers should know about those goons!!

TBR. JOSPEH said...

இன்றைய சூழலில் இந்த கூட்டம் தேவைதானா என்றே தோன்றுகிறது.

பதிவர்கள் வட்டம் படைப்பாளிகள் வட்டமாக இல்லாமல் பங்காளிகள் வட்டமாக மாறுகிறதோ என தோன்றுகிறது.

இதற்கு நீங்களும் ஒருவகையில் காரணியாக இருந்துவிட்டீர்களோ என்றும் நினைக்கின்றேன். வழிகாட்ட வேண்டிய நாமே தடமிறங்கி செல்லலாகாது என்பது என்று நினைக்கின்றேன்.

ஆகவே இனி இத்தகைய கூட்டங்களில் கலந்துக்கொள்வதில்லை என்ற முடிவுக்கு தள்ளப்பட்டுள்ளேன் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

மன்னியுங்கள். இது தற்காலிகமான முடிவுதான்.. பிறகு பார்க்கலாம்.

அன்புடன்,
ஜோசஃப்

லக்கிலுக் said...

ஜோசப் சார்!

உங்களுடைய உணர்வில் தான் நானும் இருக்கிறேன். டோண்டு சார் அவர்களின் பதிவில் நான் வலைப்பதிய ஆரம்பித்த புதிதில் பின்னூட்டம் இட்டதற்காக பெற்ற நூற்றுக்கணக்கான ஆபாச பின்னூட்டங்களால் வெறுத்துப் போய் போலி என்று சொல்லப்பட்ட ஒருவரை எதிர்த்து அவர் ஆண்மகனா? என்றெல்லாம் பதிவுபோட்டு மோதினேன்.

டோண்டு சாரும் "போலி" ஆட்டம் தான் ஆடிவருகிறார் என்று தெரியும்போது போலி என்று முத்திரை குத்தப்பட்டவருடன் மோதியது தவறோ என்று எண்ணத் தோன்றுகிறது.

டோண்டு அவர்கள் கூட்டும் இந்தக் கூட்டத்தில் கலந்துக் கொண்டால் என் மீதும் "போலி" முத்திரை குத்தப்படுமோ என்று அஞ்சுகிறேன்.

இந்த கூட்டத்துக்கு வருகிறேன் என்று தெரிவித்திருந்தேன். தவறான சூழ்நிலையில் கூட்டப்படும் கூட்டத்தில் கலந்துகொள்ள விருப்பமில்லை என்பதை வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்
லக்கிலுக்

dondu(#11168674346665545885) said...

நீங்கள் வர இயலாதது குறித்து வருந்துகிறேன். பதிவை அதற்கேற்றபடி எடிட் செய்துள்ளேன்.

இப்போது நான் இந்த மீட்டிங்கை எப்படியும் நடத்த உத்தேசித்துள்ளேன். மற்ற பதிவர்கள் கருத்து கூறலாம்.

இடம் உட்லேண்ட்ஸ் டிரைவ் இன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Madhu Ramanujam said...

இந்த வாரமும் நான் சென்னை வருவாதாக உள்ளேன். ஆனால் இன்னும் முடிவாகவில்லை. சென்னி வரும் பட்சத்தில் நான் நிச்சயம் இந்த சந்திப்பிற்கு வருகிறேன்.

Jay said...

டோண்டு அய்யா,

நான் கட்டாயமாக சந்திப்புக்கு வருகிறேன்.
சரவணன் என்னுடன் வருகிறார்.
உட்லேண்ட்ஸ் டிரைவ் இன்'ல் பார்ப்போம்.

dondu(#11168674346665545885) said...

நன்றி ஜயகமல் அவர்களே. சரவணன் அவர்களையும் வரவேற்கிறேன். ஜயராமனும் வருவதாக உறுதியளித்துள்ளார். இப்போதே நால்வர் ஆகி விட்டது. பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//நன்றி ஜயகமல் அவர்களே. சரவணன் அவர்களையும் வரவேற்கிறேன். ஜயராமனும் வருவதாக உறுதியளித்துள்ளார். இப்போதே நால்வர் ஆகி விட்டது. பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று.

அன்புடன்,
டோண்டு ராகவன்//

கிருஸ்ணா, மரபூர் இவங்க எல்லாரும் வருவாங்களா?

dondu(#11168674346665545885) said...

மரபூர் அவர்கள் வருவதாக பின்னூட்டம் போட்டுள்ளார். ஆனால் அது தவறுதலாக் 03.02.2007 மீட்டிங் பற்றிய பதிவில் விழுந்து விட்டது. அவர் கேட்டு கொண்டதற்கு இங்கு பதிக்கிறேன்.

//ஜெய. சந்திரசேகரன் said...
have it in Natesan Park only. There are circular benches there//

அவர் சொல்வதும் நியாயமாகவே படுகிறது. நடேச முதலியார் பார்க்கிலேயே வைத்து கொள்வோம். வரும் ஞாயிறு மாலை 6 மணிக்கு. வழக்கமான டட்ச் ட்ரீட் முறை. வயிற்றை காலியாக வைத்து கொண்டு வாருங்கள். ரத்னா கஃபேயா கண்ணதாசன் மெஸ்ஸா என்பதை பிறகு பார்த்து கொள்வோம்.

என்ன பேச வேண்டும் என்பதை அங்கு தீர்மானிப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Technology Buff, Entrepreneur said...

I have gone through the whole list of comments before writing this reply.

Heres my take on the various comments:
I beleive in meeting interesting people, and I beleive bloggers meets are always interesting.

There are opinions and there are counter-opinions. But I do not beleive in stamping anybody because of one or two (or three or four) of thier actions.

Further, having hardly participated actively in this circle, I do not have enough background to pass judgement on anybody.

My decision is to attend (subject to personal availability - veetla kaekonamungo!)

My personal preference is woodlands drive-in.

dondu(#11168674346665545885) said...

நன்றி மதன் அவர்களே. உட்லேண்ட்ஸில் மீட்டிங்கிற்கு இடம் கொடுக்க ரொம்ப பந்தா செய்கிறார்கள். நான் நடேச முதலியார் பார்க்கை பற்றி நன்கு அறிந்தவன். அங்கு சாவகாசமாக மீட்டிங்கை முடித்து கொண்டு ரத்னா கஃபே அல்லது கண்ணதாசன் மெஸ்ஸுக்கு செல்லலாம். தயவு செய்து மறுபரிசீலனை செய்யவும் என கேட்டு கொள்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

bala said...

//முடிந்தால் டட்ச் ட்ரீட் பற்றி தனி பதிவு ஒன்று இடவும்.//

டோண்டு அய்யா,
குழந்தை லக்கியிடம் டச் முறையில் பணம் வசூல் செய்வது கொஞ்சம் ஓவர்.பேசாம, அவருக்காக ஒரு ஃபீடிங் பாட்டிலில் 90 ml லாக்டோஜென் கலந்து கையோட எடுத்து செல்லவும்.

பாலா

Anonymous said...

well done madan
உங்களின் நேர்மைக்கும் ஆண்மைக்கு நான் தலைவணங்குகிறேன்.

வலைபதிவு சந்திப்பு அற்புதமாக நடக்க என் வாழ்த்துக்கள்.

சண்முகம்

Anonymous said...

சார் இதில் தமாழ் என்ன தெரீயிமோ?
தலைமை கழகத்தில் இருந்து இந்த சந்திப்பை எப்படியாவது கலைக்க வேண்டும் என்று சொல்லிவிட்ட படியால் ஒரு பூத் ஏஜண்ட் ரொம்ப நடிக்குது.
அதை பார்தா எனக்கு போக்கிரி படத்தில் வடுவேலு பன்னும் காமேடி எல்லாம் நினைவுக்கு வருது.அது சொன்ன டயலாக் ரீசன் எல்லாம் சுத்த பேஜாரு .பாவம் அதுக்கு தானே வடிவேன்னுன்னு புரியாம நடிக்குது.

பாவம் அதுக்கு ஆண்டவன் நல்ல புத்தியை கொடுக்கட்டும்.

சண்முகம்

Anonymous said...

//பேசாம, அவருக்காக ஒரு ஃபீடிங் பாட்டிலில் 90 ml லாக்டோஜென் கலந்து கையோட எடுத்து செல்லவும்.//

இன்னாப்பா பாலா,

அவர்தான் வல்லேன்னு ஜகா வாங்கிக்கினாரேபா.

Anonymous said...

//அதை பார்தா எனக்கு போக்கிரி படத்தில் வடுவேலு பன்னும் காமேடி எல்லாம் நினைவுக்கு வருது.அது சொன்ன டயலாக் ரீசன் எல்லாம் சுத்த பேஜாரு .பாவம் அதுக்கு தானே வடிவேன்னுன்னு புரியாம நடிக்குது.

பாவம் அதுக்கு ஆண்டவன் நல்ல புத்தியை கொடுக்கட்டும். //

இது தான் போலிக்கு தனக்கு பிடிக்காதவனை எல்லாம் போட்டு தள்ளுன்னு சொல்லுற ஏஜண்ட். இதுல இது உடற சீன் இருக்கே அப்பா கண்ணை கட்டுதே..

Anonymous said...

//இன்னாப்பா பாலா,

அவர்தான் வல்லேன்னு ஜகா வாங்கிக்கினாரேபா.//

அதை பத்தி அதுவே இரவுகழுகார்ல தன்னை பத்தியே கன்றாவி ஏதாச்சும் எழுதிக்கும். உடுங்க சாரே அதை எல்லாம் மதிச்சு பேசிகிட்டு..நம்ம நேரம்தான் வீணாபோய்டும்.

Anonymous said...

//அதை பத்தி அதுவே இரவுகழுகார்ல தன்னை பத்தியே கன்றாவி ஏதாச்சும் எழுதிக்கும். உடுங்க சாரே அதை எல்லாம் மதிச்சு பேசிகிட்டு..நம்ம நேரம்தான் வீணாபோய்டும்.//
;))))

Anonymous said...

//இது தான் போலிக்கு தனக்கு பிடிக்காதவனை எல்லாம் போட்டு தள்ளுன்னு சொல்லுற ஏஜண்ட். இதுல இது உடற சீன் இருக்கே அப்பா கண்ணை கட்டுதே..

இதுக்கு போலின்னு முத்திரை குத்திடுவாங்களாம். ஃபேக்கில் இரவு கழுகார் எழுதற ஒரு அடிபொடிதானே. ஏன் சார் இதுங்க இதுக்கு எல்லாம் மரிவாதை கொடுத்து பதில் எழதுறீங்க?

Anonymous said...

மீட்டிங் நடக்குமா? நடந்தாலும் எத்தனை பேர் வருவார்கள்?

dondu(#11168674346665545885) said...

மீட்டிங் நடக்கும். நடேச முதலியார் பார்க்கில் வைத்து கொள்ளலாம் என முக்கால்வாசி நிச்சயம் செய்தாகி விட்டது. ஞாயிறன்று மாலை 6 மணியளவில் தி.நகர் நடேச முதலியார் பார்க்கில். மற்ற விஷயங்கள் பதிவிலேயே கூறப்பட்டுள்ளன.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

இப்போது கடைசியாக நடேச முதலியார் பூங்கா என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. 11.02.2007 ஞாயிறு அன்று மாலை 5.30லிருந்து ஆரம்பீக்கிறோம். 6 மணி என போட்டிருந்ததை 5.30 மணி என்று போட்ட காரணம் இருட்டி விட்டால் வருபவர்கள் இவ்வளவு பெரிய பார்க்கில் எங்கிருக்கிறோம் என தெரிந்து கொள்ள முடியாது என்பதால் இந்த சிறு மாற்றம்.

மீட்டிங் முடிந்ததும் கண்ணதாசன் மெஸ்ஸா அல்லது ரத்னா கஃபேயா என்பதை அப்போது முடிவு செய்யலாம். பேச வேண்டிய விஷயங்களும் நிலைமைக்கு ஏற்றவாறு இருக்கும். அதற்காக இணையத்தில் கம்யூனிச பின் நவீனத்துவ தொழிலாளர் பொலிட்ப்யூரோ என்றெல்லாம் பேச மாட்டார்கள் என நம்புகிறேன் (டோண்டு கொட்டாவியெல்லாம் விடாதே).

இப்போது டட்ச் ட்ரீட் பற்றி. சாப்பிட்டவுடன் வரும் பில் ஹோட்டலுக்கு வந்து சாப்பிடுபவர்களால் சமமாகப் பகிர்ந்து கொள்ளப்படும். ஆகவே மீட்டிங் முடிந்ததும் அப்படியே கழன்று கொள்பவர்கள் இதில் வர மாட்டார்கள்.

யார் யார் என்ன என்ன சாப்பிட்டார்கள் என்பதெல்லாம் பார்க்கப்படமாட்டாது. ஆகவே வயிற்றில் இடம் வைத்து கொண்டு வாருங்கள்.

நாளை மாலை பார்க்கலாம். எனது செல்பேசி எண் மறுபடி கூறுகிறேன், 9884012948.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஓகை said...

டோண்டு அவர்களே, நான் வருகிறேன்.

dondu(#11168674346665545885) said...

நன்றி ஓகை அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

உங்கள் வலைபதிவர் சந்திப்பு வெற்றி அடைய வாழ்த்துக்கள்

Anonymous said...

மரியாதைக்குரிய பன்மொழி வித்தகர் டோண்டு அவர்களே

சும்மா அபிமன்யு மாதிரி அடிச்சு ஆடுறீங்க, பாராட்டுக்கள், அப்படித்தான் துணிவா இருக்கணும். சபாஷ். வெரிகுட்டுனான் வெள்ளக்காரன்.

இந்த மாட்டருல சமீபத்துல (!!!) கல்யாண அகதிகள் என்ற பாலச்சந்தர் படம் ஒன்று வந்ததே , அதுல உங்களுக்குச் சாதகமான சரிதாவின் கலப்பு மண மாட்டர் இருக்கே, மறந்துட்டீங்களா அல்லது அந்த படமே பார்க்கலையா ?

மனசுக்குள் உட்கார்ந்து மணியடித்தான் என்ற அருமையான பாடல் கூட இருக்குமே அதேதான். கிறிஸ்துவ வெறி பிடித்த ஒரு மதமாற்ற சாத்தான் கூட்டதுல சரிதா மாட்டிக்கிட்டு மீண்டும் விடுதிக்கே ஓடி வர்றத அழுத்தி சொல்லுங்க சார், டோண்டு சார்.

கலப்பு மணம் என்றால் என்னன்னு தெரியாமலேயே நீங்க அத்தினி பேரும் சும்மா வெட்டியா பேசிக்கிட்டு இருக்கீங்க.

கலப்பு மணம் என்பது குறைந்த பட்சம் மதம் மாறியாவது நடந்திருக்க வேண்டும் அல்லது மிகவும் தன்னை விட பொருளாதாராச் சூழலில் மிக மிகக் கீழே உள்ள பெண்ணைக் கட்டியிருக்க வேண்டும். அதை விட்டு விட்டு சும்மா முதலியார் பிள்ளையைக் கலியாணம் பண்ணுறது, கவுண்டர் வன்னியரைக் கலியாணம் பண்ணுறது, கள்ளர் மறவரைக் கலியாணம் பண்ணுறது எல்லாம் ஆட்டைக்குச் சேராது. முஸ்லிம் இந்து கலியாணம், கிறிஸ்துவ இந்து கலியாணம், வெள்ளைக்காரன், காரி, க்ருப்பி, கருப்பன் கலியாணம் இது எல்லாம்தான் கலப்பு மணத்துல சேரும். அப்படி பண்ணியவன் யாரும் இங்கே இருந்தா அவனுக்கு மட்டும்தான் உங்க கிட்ட கேள்வி கேட்க யோக்கியதை உண்டு, மத்தவன் எவன் கேட்டாலும் சும்மா ஊருக்கு உபதேசம் போட்டுகிட்டு நடிக்கிற சோமாறிங்கதான், போடா ஜாட்டாண்டு போய் கிட்டே இருங்க


அடுத்த தபா நீங்க பெங்களூரு வரப்ப அண்டர் கிரவுண்டுல மீட் வச்சிக்குவோம். அண்டர் கிரவுண்டுன்னோன்ன பயந்துறாதீங்க. அது ஒரு பீர் பப்பு சார்.

அப்புறம் சொல்றேன்னு கோவிச்சுக்கிடாதீங்க உங்க வயசுக்கு நீங்க சேர்ந்துகிட்டு லூட்டி அடிக்கிற கும்பல் எதுவும் மரியாதையா தெரியலை அவ்வளவுதான் சொல்லுவேன். பேசாம, ஜோசப்பு, சிவஞானம்னு ஓகைன்னு மரியாதை தெரிஞ்ச ஆட்களிடம் மட்டும் சவகாசம் வச்சுகிடறது உங்க வயசுக்கும் அறிவுக்கும் திறமைக்கும் மரியாதை. பல மொழி தெரிஞ்ச பெரிய மனுசன் நீங்க, உங்களுக்குப் போய் கூடா நட்பின் தீமைகளை நான் சொல்லியா தெரியணும்.

அப்பாலிக்கா பாக்கலாம்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது