என் கார் நடேசன் பூங்காவை (பதிவின் கடைசியில் விளக்கம்) அடையும் சமயத்தில் மணி சரியாக 5.25. மரபூர் சந்திரசேகர் அவரிடமிருந்து செல்பேசியில் கால் வந்தது. தான் ஏற்கனவே உள்ளே வந்து விட்டதாகக் கூறினார். இருவராக சேர்ந்து ஒரு வட்ட பெஞ்சை தேடினோம். பிறகு மற்றவர்களுக்காகக் காத்திருந்தோம். ஓகை அவர்கள் 6 மணிக்கு வந்து விடுவார் என சந்திரசேகர் தெரிவித்தார். சிறிது நேரம் கழித்து ஜயராமன் அவர்களுக்கு போன் செய்ய, அவர் தான் வந்து கொண்டிருப்பதாகக் கூறினார்.
சந்திரசேகரன் அவர்கள் தங்கள் குழு பழவேற்காடு அருகில் பெருமாள் கோவில் நடத்திய சுத்திகரிப்பு நிகழ்ச்சியை சுவையாக விவரித்தார். உள்ளே புதர் மண்டி கிடந்ததாகவும், தங்கள் குழு அவற்றை எல்லாம் வெட்டி எடுத்ததாகவும் கூறியது சுவாரசியமாக இருந்தது. ராமாயண காட்சிகள் தத்ரூபமாக செதுக்கப்பட்டிருந்தது கண் கொள்ளா காட்சி என்றும் கூறினார். பிறகு பதிவர் உலகில் தான் எப்படி பிரச்சினையை கையாள்கிறார் என்பதையும் தெரிவித்தார். தெரிவு செய்த சில குறிப்பிட்ட பதிவுகளுக்கே போவதாக கூறினார். துவேஷத்தை வளர்க்கும் பதிவுகள் தனக்கு பிடிக்கவில்லை என்றும் கூறினார். பிடிக்கிறதோ இல்லையோ எதையும் படித்துவிடும் எனக்குள் அவரது இந்த செயல்பாடு சற்று சிந்தனையை தூண்டியது.
முந்தைய தடவை பார்த்ததை விட இளமையான தோற்றத்துடன் ஜயராமன் வந்து சேர்ந்தார். அவரை பார்க்கும் ஆவலில் இருந்த நான் அவருடன் விட்ட இடத்திலிருந்து விஷயங்களை பேசத் தொடங்கினேன். சந்திரசேகருக்கு சில இடங்களை விளக்கினோம். பிறகு நான் அவரிடம் எடுத்த ஓய்வு போதும், வலைப்பதிய மறுபடியும் வர வேண்டும் என கேட்டுக் கொண்டேன். சந்திரசேகரனும் என்னுடன் இந்த விஷயத்தில் சேர்ந்து கொண்டார். என்னுடைய வழமையான தாரக மந்திரத்தை இங்கும் பிரயோகித்தேன். அதாவது, எந்த முடிவையும் நாமே எடுக்க வேண்டும், மற்றவ்ர்கள் நமது செயலை தீர்மானிக்க விடக்கூடாது என்பதுதான் அது. குறைந்த பட்சம் எனது மீட்டிங் பற்றிய பதிவுக்கு அவரது அழ்கான நடையில் பின்னூட்டம் இடவேண்டும் எனவும் நான் கேட்டுக் கொண்டேன். சென்னையில் ஜயராமன், பங்களூரில் ம்யூஸ் ஆகியோரது மீட்டிங் பர்ரிய பின்னூட்டங்கள் எனது மெயின் பதிவை விட மிக அழகாகவே அமைந்து விடுகின்றன. அந்த முறையில் இப்போதும் அவர் பின்னூட்டம் இடுவது தேவை என்பதையும் வலியுறுத்தினேன்.
பிறகு ஜயகமலும், அவரது இணைபிரியா நண்பர் சரவணனும் வந்து சேர்ந்தனர். ராம லட்சுமணர்கள் போல இந்த இருவரும் ஒன்றாக வந்தது மகிழ்ச்சிக்குரியதே. இன்று காலைதான் ஜெய் எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதில் ஒரு சுவாரசியமான கட்டுரை ஆங்கிலத்தில். அதை நகலெடுத்து பிளாக்கர் புது பதிவு பக்கத்தில் ஒட்டி, முன்வடிவாக சேமித்திருந்தேன். அதை பின்னர் பதிவாக எழுதி வெளியிட அவரது அனுமதியும் பெற்றேன். போன மீட்டிங்கிற்கு இருவரும் தாமதமாக வந்திருந்தனர், ஏனெனில் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்தார்களாம். ஆனால் இந்தத் தடவை அவர்கள் கிரிக்கெட் ஆடவில்லை. ஆனால் இந்தியா ஸ்ரீலங்கா குழுக்கள் ஆடிக் கொண்டிருந்தன. அதை டிவியில் பார்த்துவிட்டு லேட்டாக வந்திருக்கின்றனர். குழந்தை மனதுடையவர்கள். இந்தியா 4 ரன்களில் தோல்வி.
கடைசியாக ஓகை வந்து சேர்ந்தார். அவர் நான் பதிவு போடும் ஸ்டைலில் மாறுதல் செய்வது பற்றி சில அரிய ஆலோசனைகள் அளித்தார். நானும் ஏற்கனவே செய்து வைத்திருந்த முடிவின்படி இந்த மீட்டிங் பதிவுக்கு அடுத்ததாக வேறு ஸ்டைலில் பதிவிடப்போகும் என் எண்ணத்தை கூறினேன். ஓகை அவர்கள் ஜயராமனுடன் ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்தார். அது பற்றி நான் கூறுவதை விட அவர்கள் கூறுவதே பொருத்தமாக இருக்கும். பின்னூட்டங்களில் அவற்றை எதிர்பார்க்கிறேன்.
சேது சமுத்திரத்த்ஜில் ராமர் பாலம் விஷயம் பற்றியும் பேசப்பட்டது. அவ்வளவு கஷ்டப்பட்டு கட்டினாலும் பொருளாதார ரீதியாக ஏதேனும் பலன் இருக்குமா எனத் தெரியவில்லை. இது ஒரு அரசியல் முடிவாகத்தான் பட்டது.
அதற்குள் மணி 7 போல ஆகிவிட்டது. மரபூரார் அர்ஜண்டாக வீட்டுக்கு செல்ல வேண்டும் எனக் கூறிவிட்டு கிளம்பி விட்டார். பிறகு நாங்கள் பார்க்கிலிருந்து கிளம்பி ரத்னா கஃபே சென்றோம். ஓகை போண்டா மட்டும் ஆர்டர் செய்தார். ரத்னா கஃபேக்கு போய்விட்டு ஒரு பிளேட் இட்டலி ஒரு பக்கெட் சாம்பார் சாப்பிடாத நாவும் நாவோ என்று நான் கூற, மீதி 4 பேரும் ஆளுக்கு அவ்வாறே ஆர்டர் செய்தோம். பிறகு டோண்டுவும் போண்டாவும் பிரியலாமோ என்ற லாஜிக்கின்படி போண்டாவும் ஆர்டர் செய்தோம். பிறகு ஒரு மசால் தோசை என்று நான் கேட்க, மற்றவர்கள் எல்லாம் வேகமாக தலையைஆட்டி வேண்டாம் என மறுத்து விட்டனர். சரி ஆளுக்கு ஒரு கப் காப்பியாவது சாப்பிடலாம் என ஐடியா கொடுத்தேன். ஓகை அவர்கள் ஒரு ரோஸ் மில்க், நான், ஜயகமல், சரவணன் ஆகியோர் காப்பி எடுத்து கொண்டோம். ஜயராமன் காப்பி வேண்டாம் என கூறி விட்டார்.
ஜயராமன் எடுத்து கொண்ட காமெராவில் போட்டோ எடுத்து கொண்டோம். ரத்னா கஃபே சர்வர் ஒருவர் எங்கள் ஐவரையும் வைத்து எடுத்தார். அவர் எனக்கு பிறகு அனுப்புவதாக கூறினார். இந்த இடத்தில் ஒரு விஷயம். போட்டோவை போடுவதா வேண்டாமா என்று ஓகை, ஜயராமன், ஜயகமல் மற்றும் சரவணன் கருத்து கூறட்டும். நான் போடுவதில் விருப்பமாக உள்ளேன். இருப்பினும் இது மீதி எல்லோரும் ஒத்துக் கொண்டால்தால் நடக்கும். ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தாலும் போடுவதில்லை என தீர்மானித்துள்ளேன். ஆகவே இந்த நால்வரும் தங்கள் அபிப்பிராயத்தை பின்னூட்டம் மூலமோ, மின்னஞ்சல் அல்லது டெலிஃபோன் மூலமோ எனக்கு தெரிவிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.
ஒரே ஒரு ஃபோட்டோதான் எடுக்கப்பட்டது. அதை போடுகிறேன். ஏனெனில் எல்லோரும் ஏக மனதாக ஒத்து கொண்டுள்ளனர். அது இப்போது தரப்பட்டுள்ளது.
இடமிருந்து வலம்: ஜயகமல், சரவணன், டோண்டு, ஓகை, ஜயராமன்
மரபூரார் அவசர வேலை என்று முதலிலேயே சென்று விட்டார்.
பதிவின் கடைசியில் ஒரு விளக்கம் கூறுவதாகக் குறிப்பிட்டிருந்தேன். On second thoughts, let it wait till my next post tomorrow.
அன்புடன்,
டோண்டு ராகவன்
முத்துலிங்கம்
-
கவிஞர், திரைப்பாடலாசிரியர், இதழாளர். திரைப்படங்களில் பாடலாசிரியராகப்
பணியாற்றினார். இதழ்களில் துணை ஆசிரியராகப் பணிபுரிந்தார். அனைத்திந்திய அண்ணா
திராவிட மு...
1 day ago
26 comments:
//நடேசன் பூங்காவை //
இந்த மாற்றத்தை வரவேற்கிறேன்!
ஆ தூ..............................
மெயில் அனுப்பியவன் said...
//நடேசன் பூங்காவை //
இந்த மாற்றத்தை வரவேற்கிறேன்!
நீ மூடு
போட்டோவைப் போடுங்க சார். யாராவது வரன் தேட விரும்பினால் கொடுத்திறன் சார். இல்லாட்டி தமிழ்மணத்திற்கு திருஸ்டி படமாக
போடலாமா சார்?
Monkey Boy
ரத்னா கஃபே - இட்லி சாம்பாரை அறிமுகம் செய்ததுக்கு எனது நன்றி. உணவு மிகவும் சுவையாக இருந்தது, போன்டா சூப்பர்.
இதைவிட சுவையாக இருந்தது உங்களை, திரு மரபூர் சந்திரசேகரன் , திரு ஓகை நடராஜன், திரு ஜெயராமன் அவர்களை சந்தித்து .
-
போட்டோ 'வை பதிவில் போடலாம்..
மெயில் அனுப்பியவருக்கும் உண்மையாக மெயில் அனுப்பியவருக்கும் நன்றி. அனானிகள் கும்மி நன்றாகவே உள்ளது.
இப்போ இன்னும் யாராவது வந்து இருவரையுமே நோக்கி கணைகள் விட்டால் ரணகளம்தான் போங்கள்.
இதை ரசிக்கும்படி செய்யுங்கள் என்பது வாடகைக் காரையெல்லாம் தன் கார் என்று கூறிக் கொள்ளும் டோண்டு ராகவனின் வேண்டுகோள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பதிவில் கூற மறந்தது.
ஃபோட்டோ எடுக்கும் சமயத்தில் அதில் வர விருப்பம் இல்லாதவர்கள் போட்டோ எடுக்கலாம் என்று ஆலோசனை கூறினேன். இது ஒரு முதல் கட்ட ஆசிட் சோதனை. எங்களில் யாருக்கும் காமராவை இயக்கும் எண்ணம் இல்லை என்பது, போட்டோ எடுத்து கொள்வது என்ற நிலைப்பாட்டை கொள்கையளவில் ஆதரித்தார்கள் என்பது வெள்ளிடை மலை.
இப்போது இரண்டாம் கட்ட ஆசிட் சோதனை. அது இப்பதிவில் வர வேண்டுமா என்பதில் 100% ஆதரவு இருந்தால்தான் அது வெளியிடப்படும். ஜயகமல் ஆதரவு கொடுத்து விட்டார். இன்னும் ஓட்டு அளிக்க வேண்டியது ஓகை, ஜயராமன் மற்றும் சரவணன் (ராம லட்சுமணர்களில் ஒருவர்). பின்னூட்டமாகவோ போனில் மூலமோ தெரிவிக்கலாம்.
போட்டோ எடுக்க ஒரு ஹோட்டல் ஊழியரை அணுக அவரும் பிலிம் டைரக்டர் ரேஞ்சில் எங்களை அரேஞ்ச் செய்து ரகளை செய்ய, சுற்றிலும் பலர் வேடிக்கை பார்க்க போட்டோ எடுக்கப்பட்டது.
வோட்டு எப்படியிருந்தாலும் ஜயராமன் அவர்கள் எனக்கு போட்டோ அனுப்புமாறு கேட்டு கொள்கிறேன்.
வரன் தேடுபவர்களுக்கு அனுப்பவோ திருஷ்டி பரிகாரமாக போடவோ ஆலோசனை தந்தவருக்கும் நன்றி. ஆனால் இந்த ஓட்டெடுப்பு நான் குறிப்பிட்டவர்களுக்கு மட்டுமே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Only paapaans came? what about the dravidian traitors?
//Only paapaans came? what about the dravidian traitors?//
திராவிட தோழர்களும் வரலாம்.
திராவிட சிசு என அழைக்கப்பட்ட திருஞான சம்பந்தரின் விசிறியான டோண்டு ராகவன் இதை மனப்பூர்வமாகவே கூறுகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஒரு மாதிரி யுத்த காண்டம் வார இறுதி நாட்களால் ஓய்ந்தது என்று பார்த்தால் நீங்கள் பழையபடி அவலோடு வாறியள்:(
கொழுவி பழையபடி யுத்தகளத்துக்கு போகவேண்டியதுதான்..:)
வாருங்கள் தீவு அவர்களே. எனது அடுத்த பதிவை பார்த்து விட்டு பேசலாமே.
Ich bitte Sie darum, an Kozuvi meine freundliche Grüße zu richten.
அன்புடன்,
டோண்டு ராகவன்
உங்க சந்திப்பு சுவாரயிசிமாக இருக்கிறது
இவர்கள் நேற்று நிஜமாகவே சந்திப்பு நடத்தினார்கள் என்று உறுதி செய்கிறேன்
//இவர்கள் நேற்று நிஜமாகவே சந்திப்பு நடத்தினார்கள் என்று உறுதி செய்கிறேன்//
நன்றி பூங்காவனம் அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//நடேசன் பூங்கா said...
இவர்கள் நேற்று நிஜமாகவே சந்திப்பு நடத்தினார்கள் என்று உறுதி செய்கிறேன்
//
ஆமாம்! பூங்கா சொல்வது உண்மை!
டோண்டு சார்,
நேற்றைய மீட்டிங்குக்கு என் பர்ஸனல் நன்றி. ஆபீஸில் தேவையற்ற ஒரு பிரஷர். அவசரமாக பதிகிறேன். பின்னால் தேவையானால் மேலும் பேசுவோம்.
நேற்று ஓகை என்னிடம் சொன்னார். ‘ஏற்கனவே நிரம்பி தளும்பும் கப்பில் டீ ஊற்ற முடியாது!’ என்று. (அவர் சொன்னது ஆங்கிலத்தில்.)
அதை சரி என்றுதான் சொல்லவேண்டும். நீங்கள் ஒரு நிறைகுடமாக இருக்கிறீர்கள். உங்கள் இன்றைய பதிவை பார்த்ததும் தோன்றியது. இதில் நான் வேறு என்ன எழுதி, சொல்ல முடியும்.
நீங்கள் நேற்று பேசும்போது, நாம் இருவரும் பதிவுகளில் செய்த பல விவாதங்களில் ஒன்றை சொன்னீர்கள். வயதுக்கு ஏற்றாற்போல் நடந்துகொள்வது சரி மட்டுமல்ல, அதுதான் இயல்பு என்று நான் வேறொரு சமயத்தில் சொல்லியிருந்தேன். அதுவும் இப்போது முத்தாய்ப்பாய் ஞாபகம் வருகிறது.
இது சரியா தப்பா என்று நான் ஆராய முடியவில்லை. அந்த ஒரிஜனல் ராகவன் அவதாரத்தில் செய்த பல செயல்களுக்கு எப்படி விளக்கம் இல்லையோ, அதுபோலத்தான் இந்த டோண்டு ராகவனும் போல!
பட்டாத்தான் தெரியும் பாப்பானுக்கு என்று எங்களூரில் சொல்வார்கள். கோவிகண்ணனுக்கு இன்னொரு பழமொழியும் கிடைத்துவிட்டது.
நீங்கள் நேற்றைய 11 ஆம் தேதி மீட்டிங் ஐடியாவை முதலில் ஜோசப் சாருடன் முடிவெடுத்த போது 3ஆம் தேதி மீட்டிங் முடிவாகவில்லை. நடுவே, இன்னொரு மீட்டிங் செந்தழல் ரவியால் நடந்தபோது அதில் கலந்துகொள்ள முடியாத நிலை. மேலும், நான் இன்னும் ஒரு ப்ளாக்கரா என்றும் எனக்கு சுய பரிசோதனை நிலை.
நான் உங்களையும், ஜோசப் சாரையும் பார்க்கும் ஆர்வத்துடனும் இருந்தேன். அதனால், 11 தேதி மீட்டிங்கை நான் ஆவலுடன் எதிர்பார்த்தேன். நான் வருகிறேன் என்று பின்னோட்டம் போட்டதுமோ என்னவோ ஜோசப் சார் கழண்டுகொண்டார். :-) எனக்குத்தான் அதிர்ஷ்டமில்லை.
ஆனால், உங்கள் ஐவரையும் பார்த்து பேசியது சந்தோஷம்.
இப்படிப்பட்ட மீட்டிங்குகளில் என்ன பிரயோசனம் என்று நிறைய பேர் பதிவுகளில் நக்கல் பார்த்தேன். தமிழ் பதிவு எழுதி என்ன “சாதிப்பதாக” இருக்கோமோ, அதே பிரயோசனம்தான் இதிலும் என்று தோன்றுகிறது. - இன்னும் சொல்லப்போனால், இன்னும் அதிக பயனாகவும் சொல்லலாம்.
“முன்னைவிட இப்போ இளமையாக இருக்கிறேன்” என்று எழுதியிருப்பதன் உள்குத்து என்னவோ? :-)
(என்னவோ, தமிழ்மண பழக்கத்தில் இப்போதெல்லாம் எந்த வரிகளை பார்த்தாலும் பயமாக இருக்கிறது.)
இல்லை, ஒருவேளை கொஞ்ச காலமாக தமிழ்மண குப்பைகளை நுகராமல் இருக்கிறேனோ அதனாலோ என்னவோ. இல்லை, லக்கி அய்யா சொல்வதுபோல், காளிமுத்து லேகியம் விளம்பரமாகும் ஒரே பத்திரிக்கை படிப்பதாலேயோ!!! எதுவாய் இருந்தாலும், மனதில் இளமை துள்ளும் உங்களுடன் ஒரு சாயங்கால வேளை கழித்தது உத்சாகமாய் இருக்கிறது.
ஓகையின் நட்பு நேற்றைய சந்திப்பில் ஞான் பெற்ற பெரிய வரம். அவர் போட்டிருந்த அமர்க்களமான சட்டையில் பொறாமைப்பட்ட எனக்கு அவர் பேச்சு உடனே மயக்கியது. அது ஒரு மரியாதையை தந்தது. அவர் பதிவுகளில் நான் அதிகம் புழங்கியதில்லை. அதற்கு மன்னிப்பு கேட்டேன்.
பதிவுலக கஷ்டநஷ்டங்களை அவர் செய்த திறனாய்வை நான் வாயை பிளந்து கேட்டுக்கொண்டிருந்தேன். நான் செய்த அசட்டுத்தனங்களை அவர் சொல்லி என்னை குட்டினார். (உங்களையும்தான்:-)
தமிழ்மணத்தில் இப்போது கருத்து தீவிரவாதம் நடக்கிறது. அடங்காத அம்பிகளை ஆபாசத்தால் குளிப்பாட்டுகிறார்கள். கலப்பு மணத்தால் கஷ்டம் வரும் என்று எழுதப்போகிறேன் என்று சொன்னவனை கல்லால் அடித்து வாயை கட்டுகிறார்கள். சரி, அவன் எழுதட்டுமே, இது நல்ல வாய்ப்பாக்கி கலப்பு மணத்தின் நன்மையை எழுதி அதை நிறுத்துகிறேன் என்று தோன்ற மாட்டேன் என்கிறது.
என் பார்வையில் இவர்களுக்கு தேவை சச்சரவு. கிண்டலுக்கும், கிக்குக்காகவே உலாவும் இந்த இளவட்டங்களை எப்படி நாம் எடுத்துக்கொள்வது என்று ஓகை சொன்ன பல உத்திகள் மிகவும் சரியாகத்தான் தோன்றுகிறது.
இணைய கருத்து வியாபாரத்தில் ஜெயிப்பது ஒரு பிரமை.
என் “ரசிகர்களை” நான் ஏமாற்றிவிட்டேன் என்று சொல்லி அவர் ஏகத்துக்கு தூக்கிவிட்டார். என்னிடம் சொல்லவேண்டிய நிறைய கருத்துக்கள் இருக்கின்றன் என்றும் தீர்மானமாக சொன்னார். இப்படி முகஸ்துதியில் மனுஷர் என்னை என்ன பண்ணப்பார்க்கிறார் என்று அப்பப்போது சந்தேகம் வந்தது.!!
நான் உங்களை பல கேள்விகள் கேட்க வேண்டும் என்று இருந்தேன். பலரை பார்த்த பேச்சு சுவாரசியத்தில் எல்லாம் விட்டேன். ஆனாலும், நான் கேட்ட ஒரு கேள்வி ‘பலர் விரும்புகிறார்கள் என்று தெரிந்தால், நீங்கள் தமிழ்மணத்தை விடத்தயாரா’ என்று. நீங்கள் சொன்ன நீண்ட பதிலின் விடை ‘முடியாது’ என்றே நினைக்கிறேன்.
போட்டோ போட, தனிப்பட்ட முறையில், எனக்கு ஒரு ஆட்சேபணையும் இல்லை. ஆனால், போடுவதால் ஒரு பிரயோசனமும் ஏற்பட போவதில்லை என்றே தோன்றுகிறது. வந்தவர்களுக்கு புகைப்படம் தேவையில்லை. வராதவர்களுக்கு இதில் ஆவலில்லை.
நேற்று எல்லோரும் என்னை மறுபடியும் எழுதக்கூப்பிட்டார்கள். என் ஈகோவிற்கு சந்தோஷமாய் இருந்தது. இருந்தும், எனக்கு என்ன பண்ணுவது என்றே தெரியவில்லை. இப்போதைக்கு, நான் ‘தொலைந்து போனால் ரொம்ப சந்தோஷம்’ என்று பின்னூட்டம் போட்டவர்களின் சந்தோஷத்தை நான் மேலும் அதிகப்படுத்துவேன் என்றுதான் தோன்றுகிறது.
டோண்டு மாமாவின் புதிய அவதாரத்தை நான் அனுபவிக்க ஆர்வமாய் இருக்கிறேன். வாழ்த்துக்கள்.
இதை எப்படி நடைமுறைப்படுத்த போகிறீர்கள் என்று தெரியவில்லை. ஒருவேளே, ஒவ்வொரு பதிவு போடும் முன்னும் நான் போடட்டுமா என்று கேட்டு, ஒரு வாக்கெடுத்து, எல்லோரும் போடலாம் என்று சொன்னால் பதியலாம் என்று தோன்றுகிறது. இல்லையென்றால், இந்த கிழவன் ஒரு இந்து-துரோகி என்று அர்ச்சனை கிடைக்கும்.
வாருங்கள் ஜயராமன். சொன்னாலும் சொன்னீர்கள், திருவாசகமாக சொன்னீர்கள்.
//இல்லையென்றால், இந்த கிழவன் ஒரு இந்து-துரோகி என்று அர்ச்சனை கிடைக்கும்.//
கிழவன் என்பது யார் என்பதில்தான் குழப்பமே. :)))))))))
//போட்டோ போட, தனிப்பட்ட முறையில், எனக்கு ஒரு ஆட்சேபணையும் இல்லை.//
இன்னும் ஓகை அவர்களின் கருத்து மட்டும் பாக்கி. ஜயகமல் ஆம் என்று கூறிவிட்டார். அவர் சொன்னால் சரவணனும் சொன்ன மாதிரித்தேன்.
//நீங்கள் தமிழ்மணத்தை விடத்தயாரா’ என்று. நீங்கள் சொன்ன நீண்ட பதிலின் விடை ‘முடியாது’ என்றே நினைக்கிறேன்.//
நினைக்கவே வேண்டாம். முடியாது என்றுதான் கூறினேன். விடுவதற்காகவா நான் இத்தனை பாடுபட்டேன்?
இன்னும் சப்ளிமெண்டரி பின்னூட்டங்கள் எதிர்பார்க்கிறான் இந்த பேராசை பிடித்த டோண்டு ராகவன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//‘ஏற்கனவே நிரம்பி தளும்பும் கப்பில் டீ ஊற்ற முடியாது!’ என்று. (அவர் சொன்னது ஆங்கிலத்தில்.)
அந்த ஜென் கதை எனக்கும் தெரியும். அது வேறு அர்த்தத்தில் கூறப்பட்ட வாக்கியம்.
அந்த கப்பை நான் காலி செய்ததால்தான் என்னால் அதில் புதிதாக டீ ஊற்ற முடிந்தது. நான் உங்கள் எல்லோரிடம் இரண்டு மூன்று முறை இப்பதிவை கோடி காட்டிய போது கப்பிலிருந்து மெதுவாக பழைய தேனீரை ட்ரெயின் செய்து கொண்டுதான் இருந்தேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
========
//இல்லையென்றால், இந்த கிழவன் ஒரு இந்து-துரோகி என்று அர்ச்சனை கிடைக்கும்.//
கிழவன் என்பது யார் என்பதில்தான் குழப்பமே. :)))))))))
========
ஐயா,
'கிழவன்' என்றும் ஒரு அர்ச்சனை கிடைக்கும் என்றுதான் சொல்லியிருக்கிறேன். தங்களை அப்படி சமீபத்தில் வசை பாடிய பதிவுகளை நான் அறிந்திருக்கிறேன். மற்றபடி தங்களை அவ்வாறு சொல்வது கொஞ்சமும் பொருத்தமில்லை தான்.
நன்றி
//மோகினிகள் கழகம் said...
//நடேசன் பூங்கா said...
இவர்கள் நேற்று நிஜமாகவே சந்திப்பு நடத்தினார்கள் என்று உறுதி செய்கிறேன்
//
ஆமாம்! பூங்கா சொல்வது உண்மை!
//
:) :)
jayaraman, even the feedback had your style of flow. Pls start writing again. A small comparison - if anyone (including the children of the so called intelligent bloggers, anti Hindus, anti humanistic bloggers) reads these intelligent blogs after few years, they themselves may shun such writers, I am sure this would not happen to yours or mine. In that context, pls continue to write.
Chandrasekaran
One more thing I forgot. Natarajan is really a man with rich knowledge in literature and history. I take him with most heritage tours we go through our REACH foundation. Pls read http://reachhistory.blogspot.com
மரபூராருக்கு நன்றி,
நேற்று நீங்கள் அவசரமாக போய்விட்டதால் நிறைய பேச வேண்டும் என்ற என் ஆசை நிறைவேறவில்லை. திடீரென்று வெளியே போய்விட்டீர்கள். எங்கே என்று தேடினால், நீங்கள் ஏதோ மாலை வாங்க போயிருப்பதாக சொன்னார்கள். சரி, டோண்டுவுக்கு போடப்போகிறீர்கள் போலிருக்கு என்று நினைத்தால் பின்னர் ரத்னா கபே வாசலிலும் காணும். மீண்டும் சந்திப்போம்.
நன்றி
போட்டோ போடப்பட்டுள்ளது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நான் வருகிறேன் என்று பின்னோட்டம் போட்டதுமோ என்னவோ ஜோசப் சார் கழண்டுகொண்டார். :-) எனக்குத்தான் அதிர்ஷ்டமில்லை.//
நிச்சயமாக இல்லை ஜயராமன் சார்.
ஏனோ வேண்டாம் என்று தோன்றியது. அவ்வளவுதான். இதுவும் நிரந்தரமான முடிவு அல்ல என்று ஏற்கனவே தெரிவித்திருந்தேன்.
நான் சாதாரணமாகவே யாருடனும் மோதலையோ, அபிப்பிராய பேதங்களையோ ஏற்படுத்திக் கொள்வதை விரும்பாதவன். அப்படியொரு சூழல் ஏற்படும் பட்சத்தில் அந்த இடத்தைவிட்டே விலகிவிடுவேன். அதைத்தான் மீண்டும் செய்திருக்கிறேன்..
காலப்போக்கில் இந்த முடிவு மாறலாம்..
உங்கள் மீது எனக்கு எப்போதுமே மதிப்புள்ளது. இப்படியொரு சூழலில்தான் சந்திக்க வேண்டும் என்பதில்லையே.. தமிழ்மணத்தில் அறிக்கை என்று ஒன்று விடாமலே சந்திக்க இயலாதா என்ன..
தனிப்பட்ட நட்பு என்றுமே எல்லோருடனும் வைத்துக்கொள்வதை விரும்புவன் நான்.. நிச்சயம் சந்திப்போம்..
"அடடா"வும் டோண்டுவும் ஒன்றல்ல.
அப்படி சொல்லுறவங்களுக்கு மூளையில்ல :-)
ஐ... கவிதை கவிதை.. !!!!
நான் தங்கி இருந்த மேன்ஷன் ரத்னா கபேக்கு கூப்பிடு தூரம். வாரா வாரம் போய்ட்டு இருந்தேன். இப்போ :-( ரத்னாகபே இட்லி சாப்பிட்டு வருஷம் 2 ஆகுது.
எதிரே முருகன் இட்லி கடையையும் முயற்சி பண்ணுங்க.
Post a Comment