இப்பதிவுடன் சம்பந்தம் உடைய சுட்டிகள்:
1
2
3
4
What cannot be cured must be endured என்று ஆங்கிலத்தில் ஒரு சொலவடை உண்டு. கஷ்டம் என்று வந்து விட்டால் அதற்காக புலம்பி ஒன்றும் ஆகப்போவது இல்லை என்பதே அதன் பொருள். அதை ஏற்றுத்தான் ஆகவேண்டும் என்பது ஒரு காலத்தின் கட்டாயம். சொல்வதற்கு எளிமையாக இருந்தாலும் இதை செயல்படுத்துவது கஷ்டம்தான்.
அறுபதுகளின் துவக்கத்தில் ஹவாய் சப்பல்கள் என்னும் பெயரில் செருப்புகள் சந்தைக்கு வந்தன. சிங்கப்பூர் செருப்பு என்றும் அதை கூறுவார்கள். அவை வந்ததில் செருப்பு ரிப்பேர் செய்யும் தொழிலாளிகளின் வாழ்வில் பிரச்சினை வந்தது. தோல் செருப்புகளையே கையாண்டு பழகிப் போன அவர்கள், இவ்வகை செருப்புகள் வந்ததும் திக்கு முக்காடி போயினர். அக்காலக் கட்டத்தில் விகடனில் ஒரு கருத்து படம் கூட வந்தது. காலையில் தொழிலுக்கு கிளம்பும்போது செருப்பு தைக்கும் தொழிலாளி தெருவில் ஒரு ஒற்றை சிங்கப்பூர் செருப்பைப் பார்த்து "சே இன்னிக்கு சகுனமே சரியில்லை" என நொந்து கொள்கிறான்.
ஆனால் சிலர் சற்று வித்தியாசமாக சிந்தித்தனர். என்னதான் இருக்கிறது அவற்றில் என்று ஆராய்ந்ததில் தங்கள் தொழிலுக்கு தோதான சில புது வழிமுறைகளையும் கண்டனர். மேல் வார்ப்பட்டை சர்வ சாதாரணமாக அச்செருப்புகளில் வெளியில் வந்து விடும். அதை மறுபடி உள்ளே நுழைக்க ஒரு கம்பியை பயன் படுத்தினர். அதை குத்துவதற்கும் ஒரு லாகவம் தேவைப்பட்டது. வார்ப்பட்டை சேதமடையாமல் செய்ய வேண்டும். ஆக அவர்களுக்கு ஒரு புதிய வேலை வாய்ப்பு கிடைத்தது. இன்னும் சிலர் வார்ப்பட்டைகளை மட்டும் தனியே விற்க ஆரம்பித்தனர். அதன் உற்பத்தியே ஒரு குடிசைத் தொழிலாக உருவெடுத்தது.
மேலே கூறியது ஒரு உதாரணம் மட்டுமே. தங்கள் கட்டுப்பாட்டுக்கு மீறிய ஒரு விஷயம் நடந்தால் அதற்காக புலம்பாமல் அதிலுள்ள தங்களுக்கு சாதகமான விஷயங்களை தேடி எடுப்பதே புத்திசாலித்தனம். அதையும் முதலில் ஒருவர் செய்யும்போது அவருக்கு கிடைக்கும் வாய்ப்புகள் அலாதியானவை.
இப்போது இருக்கும் நிலையில் எந்த தொழில் நுட்பமும் நிரந்தரமாக இருப்பதில்லை. பல மாற்றங்கள் வருகின்றன. சில சமயங்களில் வேறு துறைகளில் மாற்றம் வரும்போது சம்பந்தப்பட்ட தொழில் நுட்பமே தேவையற்று போய் விடுகிறது. இது சம்பந்தமாக விகடனில் நான் படித்த கதையொன்று ஞாபகத்துக்கு வருகிறது.
ஒரு ஹோட்டல் முதலாளி மனித நேயம் மிக்கவர். கிரைண்டர்களை தன் ஹோட்டலில் வைக்கவில்லை. காரணம் கேட்கிறார் ஹோட்டல் தொழிலாளர் யூனியன் தலைவர் (அவர் ஒரு கிரைண்டர் கம்பெனியின் ஏஜென்ஸியை தன் மனைவி பெயரில் நடத்தி வருபவர்). முதலாளி கூறுகிறார், "அது ஒண்ணும் இல்லை சார், என் கிட்ட சீனுன்னு ஒரு பையன் வேலை செய்யறான். சற்றே மூளை வளர்ச்சி குறைவு. மாவரைக்கத்தான் அவனுக்கு தெரியும். இப்ப கிரைண்டரை வாங்கி போட்டுவிட்டால் என்னிடம் வந்த்து மலங்க மலங்க முழிச்சுண்டு நிற்பான்". ஆகவே அவர் சீனு தன்னிடம் வேலைக்கு இருக்கும் வரை கிரைண்டர் வாங்குவதாக இல்லை.
சீனு அதிர்ஷ்டம் செய்தவன். மனித நேயம் கொண்ட முதலாளி கிடைத்தார். அதே சமயம் முதலாளிக்கும் அதிகம் நட்டம் இல்லை. மாறாக லாபமே. ஏனெனில் கையால் மாவாட்டும் மாவுக்கு தனி ருசி என்று பலர் நினைப்பதால் அந்த ஹோட்டலுக்கு வரும் கும்பலுக்கு குறைவில்லை. மின்சார தட்டுப்பாடு வரும்போது அவரது இட்டலி வியாபாரமும் பாதிக்கப்படாது. ஆக எல்லோருமே இதில் பயனடைந்தனர். ஆனால் அது எப்போதுமே நடக்குமா? வேறு வகை உபகரணங்களை கையாளும் திறனை பெறுவதே புத்திசாலித்தனம்.
வாழ்க்கையின் எல்லா பகுதிகளிலும் நான் கூறியதற்கான உதாரணங்களை பார்க்கலாம். எனது மொழிபெயர்ப்பு துறையையே எடுத்து கொள்ளுங்கள். நான் ஆரம்பத்தில் பேப்பரில் கையால் எழுதிய மொழிபெயர்ப்புகளை தட்டச்சு செய்வித்து, பிழை திருத்தி வாடிக்கையாளரிடம் கொடுத்து வந்தேன். தட்டச்சு இயந்திரம் வாங்கவில்லல. தொழில் முறை தட்டச்சுக்காரர்களை பயன்படுத்திக் கொண்டேன். அதற்கான கட்டணம் அதிகம் இல்லை. அதற்கு மாறாக நானே தட்டச்சு செய்திருந்தால் நேரம் அதிகம் பிடித்திருக்கும். அந்த நேரத்தில் மொழி பெயர்ப்பு செய்திருந்தால் பல மடங்கு பணம் சம்பாதிக்க முடியும். ஆக, எனக்கும் தட்டச்சு செய்பவர் ஆகிய இருவருக்குமே லாபம். தட்டச்சு செய்பவர்கள் சரியாக அமையாத போது கைப்பட எழுதித்தான் மொழி பெயர்ப்பை அளிக்க முடியும் என்ற நிலை வந்தது. அதற்குள் எனக்கு தில்லியில் மொழிபெயர்ப்பாளனாக நல்ல பெயர் கிடைத்து விட்டதால் அதையும் ஒத்து கொண்டனர் வாடிக்கையாளர்கள்.
மேலும் வாடிக்கையாளர் அலுவலகத்துக்கே சென்று பணியாற்றியதால் தட்டச்சு செய்யும் வேலையை வாடிக்கையாளரின் டைப்பிஸ்டே பார்த்து கொண்டார். எல்லாம் சரிதான். ஆனால் இப்போது? நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. கணினிகள் உபயோகத்துக்கு வந்து விட்டன. தட்டச்சு செய்வதில் தவறு ஏற்பட்டாலும் சுலபமாக திருத்த முடிகிறது. இப்போது நான் யுக்தியில் மாறுதல் செய்ய வேண்டி வந்தது. நானே நேரடியாக கணினியில் தட்டச்சு செய்து விடுவதாலும், பிழை திருத்தங்கள் அவ்வளவாக எனது தட்டச்சில் இல்லததாலும் நேரம் மிச்சப்பட்டது.
மாற்றங்களுக்கு உட்பட மாட்டேன் என இருந்தால் பிரச்சினை நமக்குத்தான். மற்றவர்கள் நம்மிடத்திற்கு வந்து தீர்வு கொடுப்பார்கள் என எதிர்பார்ப்பது அறிவீனம்.
வேலை போய் விட்டதா, கவலை வேண்டாம் என கூறும் நிலை வேண்டுமானால் பல திறமைகளை வளர்த்து கொள்வது முக்கியம். நான் விருப்ப ஓய்வு பெறும் சமயம் மற்றவர்களைப் போல வேறு வேலை ஒன்றும் கைவசம் இல்லை. எனது மொழிபெயர்ப்பு திறனும் நான் வேலையில் இருந்த போதே தேடிக் கொண்ட எனது இந்த வேலைக்கான வாடிக்கையாளர் பட்டியலுமே எனக்கு துணையாக இருந்தன. வேலையை விட்டு மேலும் கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் தில்லியிலேயே நன்கு பிழைக்க முடிந்தது. சென்னைக்கு வந்து ஆறு சொச்ச ஆண்டுகளிலேயே நான் தில்லியில் 20 ஆண்டுகள் இருந்து சம்பாதித்ததை விட மூன்று மடங்குக்கு மேல் சம்பாதிக்க முடிந்தது. இதெல்லாமே புது நிலைமைகள் உருவாகும் சமயம் நமக்கு சாதகமான விஷயங்களை தெரிவு செய்து கையகப்படுத்துவதாலேயே சாத்தியமாயிற்று.
உலகமயமாக்கல் நல்லதா கெட்டதா என வாதம் செய்வதில் என்ன உபயோகம்? அதெல்லாம் தியாகுகளும் அசுரர்களும், ராஜா வனஜ்களும் செய்யும் வேலை. வந்து விட்ட உலகமயமாக்கலை தவிர்க்க முடியாது என்னும் பட்சத்தில் அதன் மூலம் வாடிக்கையாளர் பட்டியலை பெருக்கிக் கொள்வது டோண்டு ராகவன், அதியமான், ஜெயகமல்களின் வேலை.
ஆகவே கூறுவேன்: "What cannot be cured must be taken advantage of".
அன்புடன்,
டோண்டு ராகவன்
அன்றாடத்தில் இருந்து பறந்தெழுதல்…
-
நாம் இந்த ஒரு தலைமுறைக்காலமாகத்தான் அடிப்படைப் பொருளியல் விடுதலையை
அடைந்துள்ளோம். நம் முந்தைய தலைமுறைக்கு அன்றாடமே வாழ்க்கை. உழைப்பே அதன்
நடைமுறை. நிரந்தரம...
4 hours ago
20 comments:
////What cannot be cured must be endured என்று ஆங்கிலத்தில் ஒரு சொலவடை உண்டு. கஷ்டம் என்று வந்து விட்டால் அதற்காக புலம்பி ஒன்றும் ஆகப்போவது இல்லை///
Try to solve the problem; Or try to live with the problem
நல்வாழ்க்கையின் முதல்படி இதுதான்
//ஆகவே கூறுவேன்: "What cannot be cured must be taken advantage of".//
டோண்டு அய்யா,
மிகவும் சரியான அறிவுரை.ஆனால் சில சமயம் இந்த மாறி செய்து பயன் பெறுவது சாத்தியமில்லை என்று தோன்றுகிறது.உதாரணத்துக்கு,லக்கி,வெளியே மிதக்கும் அய்யா,பெ மகேந்திரன்,சிவபாலன்,கோவி.(முண்டக்)கண்ணன் போன்ற கருமாந்திரங்களையெல்லம் என்
ட்யூர் செய்ய வேண்டியிருக்கிறது?But how to convert these chronic diseases and problems that infect tamil society,into opportunities?கொஞ்சம் வழி காட்டுங்கய்யா.
பாலா
வாருங்கள் சுப்பையா அவர்களே. பிரச்சினையை தீர்ப்பது என்று படித்ததும், அப்பிரச்சினையை கையாள வேண்டும் என்ற நினைப்பு வேறு வந்து தொலைத்து விட்டது. ஆகவே எனது இப்பதிவு ஞாபகத்துக்கு வந்துவிட்டது. பார்க்க: http://dondu.blogspot.com/2006/10/blog-post_14.html
எல்லாம் இந்த ஹைப்பர் லிங்குகள் செய்யும் வேலைதான். என்ன செய்ய. :)
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஏங்க இன்னும் உங்களுக்கு போலியோட மிரட்டல் இருக்கா?
ஏன்னா சொந்த ஐடியில கமெண்ட் போடத்தான் கேக்குறேன். இல்லன்னா என் பரம்பரையையே கேவலப்படுத்திருவான். எனக்கு உங்களைவிட போலியிடம் தான் பயம் :)).
சும்மா லூலூலூ
பின்னூட்டப் புயல் பாலா அவர்களே,
கோவி கண்ணன் ஒரு மரியாதைக்குரிய பதிவர். அவர் பெயரை சிதைப்பதை நான் மிகவும் ஆட்சேபிக்கிறேன்.
மற்றப்படி அவர்கள் எழுதுவது நமக்கு பிரச்சினையாக இருந்தால் அவர்கள் என்ன செய்ய இயலும்? இருப்பினும் சில சமயம் ரொம்ப பிரச்சினையானாலும் அதிலும் லாபம் பெற இயலும்.
இப்பதிவின் நான்காம் சுட்டியில் உள்ள பதிவின் கடசி பத்தியை பார்க்கவும். அதாவது:
"என்னை உசுப்பிவிட்டு என்னை அவமானப்படுத்துவதாக நினைத்து எனது போராட்ட உணர்ச்சியைத் தூண்டிவிட்ட என் முக்கிய எதிரிக்கும் அவரது கூட்டாளிகளுக்கும் நன்றி. இன்னும் தமிழ்மணத்திலேயே இருந்து படுத்துவேன் என்றும் கூறி வைக்கிறேன்".
அன்புடன்,
டோண்டு ராகவன்
பாலா ஒரு சோலோ
Actually, all this cheap internet, blogging and cellphones are products of the much maligned globalisation. but for it, less employment and wealth creation would have happenned in India, as it was until 1980s. Our socialsit govts (until 1991) threw out IBM in 1977 and refused to allow foreign companies from setting up factories here then. the mantra was import-substitution and self-reliance, which actualy helped lousy quality products and shortages due to lack of competition for our local companies. imagine Nokia, Motorolo not being allowed to manufacture here or sell their cheap products here. or Google, Grundfoss pumps, MS, ABB, EDS, Verizon not being allowed here. then all this blogging thru cheap internet would have been impossible and we would be at the mercy of the BSNL monopoly with its corrupt inefficency. (like until 1990s)
Thirupur textile exports too are a product of this globalisation. until 1980 there was no such exports while the manufacturers produced low end inner garments for local markets ; with limited employment and prosperity.
IT boom, and all types of sector are booming now due to this liberalisation, privatisation and globalisation. service industry is booming and about 50 % of our GDP is from this sector while there was no such contribution or employment until the 70s..
poverty ratio is dropping and at least 10 % of the population has been lifted out of poverty since 1990s.
only the blind and unrealistists still oppose globalisation. They, who refuse to listen, hark back to the 'good old days' of socialistic license raaj and controls, with its corruption, crony capitalism and high rates of taxation and price rise - inlfation...
those who pretend to sleep cannot be woken up...
நிச்சயமாக அதியமான் அவர்களே.
தூங்குவது போன்று பாவனை செய்பவர்களை எழுப்புதல் இயலாத காரியமே. நாம் நம் வேலையை கவனிப்போம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
சூழ்நிலைக்கேற்றவாறு நிறம் மாறுவது பச்சோந்தி.அந்தப் பச்சோந்தியையும் விஞ்சியவர் எங்கள் இடோண்டு.
புத்திசாலி பச்சோந்தி. இல்லாவிட்டால் கவண்கல்லை வைத்து கொண்டு அலையும் அரை டிரௌசர் பசங்க கிட்டேயிருந்து எப்படி தப்பிப்பதாம்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
When I saw the title I thought you were referring to yourself. Those who cannot endure you have to cure themselves or get resigned to the fact or simply quit. The problem is there are bloggers who can be
neither cured nor endured. So better keep a distance from them.
Although it could be said that the crisis proviodes an opportunity the ground reality is more complex.
What differentiates a person like you from many others is you are
smart enough to use opportunities.
But many others are unable to overcome the crisis or ill-equipped to face them and find
opportunities. Most artisans lack knowledge about opportunities nor
get the much needed guidance and
help, So what you say is true to some extent one cannot over-generalize that. Hence "What cannot be cured must be taken advantage of" is not always possible or desirable. Many times
there may be nothing advantageous in what cannot be cured of (e.g. a chronic disease) but one can try to mitigate the negative impacts.
It is globalization that creates jobs for Asurans and Raja Vanajs but their perception is clouded by the biases in their understanding.
Hence they are struck in rhetoric and naive thinking or have blind faith in some ideology.
//When I saw the title I thought you were referring to yourself. Those who cannot endure you have to cure themselves or get resigned to the fact or simply quit.//
இதையெல்லாம் ரூம் போட்டு யோசிப்பாங்க போலிருக்கு. :)
//Many times
there may be nothing advantageous in what cannot be cured of (e.g. a chronic disease) but one can try to mitigate the negative impacts.//
நீரிழிவு நோய் உள்ளவர்கள் நல்ல முறையில் செயல்பட்டு நோய் இல்லாதவர்களை விட சிறந்த முறையில் வாழ இயலும். அதில் அவர்கள் பெறும் வெற்றி வாழ்க்கையில் அவர்கள் செய்யும் மற்ற முயற்சிகளுக்கு தூண்டுகோலாக இருக்கும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஏங்க இன்னும் உங்களுக்கு போலியோட மிரட்டல் இருக்கா?
ஏன்னா சொந்த ஐடியில கமெண்ட் போடத்தான் கேக்குறேன். இல்லன்னா என் பரம்பரையையே கேவலப்படுத்திருவான். எனக்கு உங்களைவிட போலியிடம் தான் பயம் :)).
சும்மா லூலூலூ
சத்தியமாக இந்த நினைப்புடன் தான் வந்தேன்,சொந்த மாக போடலாமா? வேண்டாமா? என்று.அதை அனானியே கேட்டுவிட்டார்.
நடப்பது நடக்கட்டும்.
அந்த காலகட்டத்தில் சிங்கப்பூர் செருப்பு பற்றி கேள்விப்பட்டேனே தவிர அப்படி ஒரு பிரச்சனை இருந்தது பற்றி அறியேன்.விளையாட்டு பருவம்.
வடுவூர் குமார் அவர்களே,
இனிமேல் பிரச்சினை இருக்கக் கூடாது. மேலும் எவ்வளவு நாளைக்குத்தான் அடாவடிக்கு பயப்படுவீர்கள்? அதை எதிர்த்து செயல்படும்போது வரும் தன்னம்பிக்கைக்கு ஈடே இல்லை. ஆக இந்த கொடுமையிலிருந்தும் கூட பலன் பெறுவதுமே நான் இட்ட இப்பதிவின் கருத்து பொருளுக்கு ஒரு உதாரணம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அன்புள்ள டோண்டு,
இப்படி பாஸிட்டிவ்-ஆன விஷயங்களை எளிய நடையில் எழுதுவதால்தான் உங்களுக்கு என்று வாசகர் வட்டம் தொடர்ந்து இருந்து வருகின்றது.
வாழ்த்துக்கள்!!!
அன்புடன்
அரவிந்தன்
டோண்டு சார்... தங்கள் பிளாக்குகளை படித்து விட்டு என் தந்தையிடம் டிச்கசன் செய்வேன். அவர் 'நேரு மற்றும் இந்திரா காந்தி அவர்களுக்கு Ego and Superiority Complex ஜாஸ்தி. அதனால்தான் பிராக்டிகலாக வெற்றி பெறாது/நிறைவேற்ற முடியாது என அவர்கள் அறிந்தவற்றை (Socialism, Emergency etc) பிடிவாதமாக தெரிந்தே Implement செய்தனர்' என்று.
உண்மையா? தங்கள் கருத்து என்ன?
சிங்கமுத்து
//'நேரு மற்றும் இந்திரா காந்தி அவர்களுக்கு Ego and Superiority Complex ஜாஸ்தி.//
நேருவுக்காவது பிடிவாதம் இருந்தாலும் நாட்டு நலனில் அக்கறை இருந்தது. என்ன, அவர் தெரிவு செய்த வழிகள்தான் சரியில்லை.
ஆனால் இந்திராவோ சுயநலத்தின் மறுவடிவம். அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பின் விளைவுகளிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள நாட்டையே எதேச்சதிகாரத்தின் கீழ் கொண்டு வந்த புண்ணியவதி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
சிங்கப்பூர் செருப்பு உதாரணம் கூறினீர்கள். மேலும் பல நன்மைகள் செருப்பினால் உண்டு....
தமிழ் கலாசாரத்தை பாதுகாக்க உதவும் (செருப்பு + விளக்குமாறு combination )
பகுத்தறிவை வளர்க்க உதவும் ( கடவுள் படத்துக்கு செருப்பு மாலை)
சிங்கமுத்து
//எனது மொழிபெயர்ப்பு திறனும் நான் வேலையில் இருந்த போதே தேடிக் கொண்ட எனது இந்த வேலைக்கான வாடிக்கையாளர் பட்டியலுமே எனக்கு துணையாக இருந்தன.//
urupadiya office velai paarkaama sontha velai paarthuttu irunthathan munnera mudiyum pola irukku..
பச்சோந்திக்கு அந்த குணம் இருப்பதால் தான் அதனால் வாழமுடிகிறது. நாணல் போல வழைந்துகொடுத்து வாழ்ந்தால்தான் வாழ்க்கை நிம்மதியாக போகும், இல்லாவிட்டால் தென்னை போல வெள்ளத்தைல் அடித்து செல்லப்படவேண்டியதுதான். வறட்டு கெளரவமும், வெறுமனே வளைந்து கொடுத்தலுமே புத்திசாலித்தனமாகிவிடாது அவைகளை சூழ்நிலைக்கேற்ப பயன்படுத்துவதிலேயே புத்திசாலித்தனம் அடங்கியுள்ளது.
-Kumar
Post a Comment