சென்னையிலேயே பிறந்து 25 வயது வரை வளர்ந்த நான் 1971-ல் மத்தியப் பொதுப்பணித் துறையில் போஸ்டிங் பெற்று பம்பாய் சென்ற போது பலவித உனர்ச்சிகளுக்கு ஆளானேன். டிகிரி பெற்று ஒரு வருடம் காத்திருந்த பிறகு வேலை கிடைத்தது சந்தோஷம்தான் என்றாலும் சென்னையை விட்டு பிரிய வேண்டியிருக்கிறதே என்ற வருத்தமும் அடைந்தேன். எப்போது சென்னைக்கு மாற்றம் கிடைக்கும் என ஆவலுடன் எதிர்ப்பார்த்து 1974-ல் சென்னைக்கு மாற்றம் பெற்று வந்தபோது மிக மகிழ்ச்சியடைந்தேன்.
ஆனால் அதுவே 1991-ல் ஐ.டி.பி.எல்.லில் என்னை சென்னைக்கு ட்ரான்ஸ்ஃபரில் அனுப்ப முயன்றபோது மேலே விழுந்து அதைத் தடுத்தேன். அதற்குள் சென்னை பிடிக்காமல் போய்விட்டதா என்ன? அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. விஷயமே வேறு. டில்லியில் என்னுடைய மொழிபெயர்ப்பு வேலைகள் அமோகமாக நடந்து கொண்டிருந்தன. தலைநகரானதால் இங்கு அன்னிய மொழிகள் மொழிபெயர்ப்பு வேலைகளுக்கு அதிக சாத்தியக்கூறுகள் அவ்வளவுதான். சென்னையில் அந்தக் காலக் கட்டத்தில் அவ்வளவு வாய்ப்புகள் இல்லைதான். ஆகவே 1993-ல் விருப்ப ஓய்வு பெற்றாலும் டில்லியிலேயே 2001 வரை என் மொழிபெயர்ப்பு வேலைகளை மட்டும் நம்பி செயல்பட முடிந்தது.
2001-ல் சென்னைக்கு போகலாம் என்று முடிவெடுத்தபோதும் மனதுக்குள் சிறு உதறல்தான். சென்னையில் இவ்வளவு வேலை கிடைக்குமா என்ற ஒரு சிறு உறுத்தல். இருந்தாலும் சொந்த வீட்டுக்குத்தானே வருகிறோம், டில்லியில் கொடுத்த 5000 ரூபாய் வாடகை மிச்சம், மேலும் மாதம் 5000 கொடுத்தால், தான் சிக்கனமாகக் குடும்பம் நடத்திக் காட்டுவதாக என் வீட்டம்மா வேறு உறுதியளித்தார். இதே மாதிரி உறுதி மொழியை அவர் 1993-லும் கொடுத்ததன் பேரிலேயே நான் விருப்ப ஓய்வு எடுத்திருந்தேன். ஐ.டி.பி.எல்.-ல் கடைசியாக பெற்ற மாத சம்பளத்தை விட மிக அதிகமாகவே ஒவ்வொரு மாதமும் பொருள் இட்ட முடிந்ததை நினைவில் கொண்டு இப்போதும் செயல்பட்டேன். இம்மாதிரி விஷயங்களில் என் வீட்டாம்மா என்னுடைய much much better-half.
இங்குதான் உலகமயமாக்கம் என் துணைக்கு வந்தது. நான் சென்னை போகப் போகிறேன் என்பதை என்னுடைய மிகப்பெரிய டில்லி வாடிக்கையாளரிடம் கூறியபோது அவர் அதிர்ச்சி அடைந்தார். "என்ன ராகவன் இவ்வாறு முடிவெடுக்கிறீர்கள், இப்போதுதானே ஒரு பெரிய ஆர்டருக்கு சான்ஸ் இருக்கிறது" என்று அவர் ஆதங்கத்துடன் கூற, அவரிடம் நான் மின்னஞ்சல் முகவரி பெர்று அவருடன் தொடர்பு கொள்வேன் என உறுதியளித்தேன். இதில் வேடிக்கை என்னவென்றால் எனக்கு கணினி அறிவு அப்போது பூஜ்யமே. எலிக்குட்டியை பிடித்துக் கூட பார்த்ததில்லை.
சென்னைக்கு வந்த அரை மணிக்குள் என் மருமாள் எனக்கு தன் கணினியில் வைத்து yahoo முகவரி வாங்கிக் கொடுத்தாள். Raghavan Translator Interpreter என்ற சொற்களிலிருந்து raghtransint@yahoo.co.in என்ற முகவரியை பதிவு செய்தேன். டில்லி வாடிக்கையாளருக்கு அதை தெரிவிக்க அவரும் மூன்று நாட்களுக்குள் ஒரு பெரிய கோப்பை அனுப்பினார். எங்கள் குடும்ப நண்பரின் மகன் உதவியுடன் கணினியில் தட்டச்சு செய்வித்து டில்லி வாடிக்கையாளருக்கு அனுப்ப வேலை சூடு பிடித்தது. பிப்ரவரி 2002-ல் நானே கணினி வாங்கி, டயல் அப் இணைய இணைப்பை பெற்று என் வேலைகளைத் தொடர முடிந்தது. 2004 இறுதி வரை டில்லி வேலைகள்தான் பாதிக்கு மேல். சென்னை வாடிக்கையாளர்கள் லிஸ்ட் மிக மெதுவாகத்தான் வளர்ந்தது. டில்லி ஆதரவின்றி நான் சென்னை வந்திருந்தால் முதலில் மிகவும் கஷ்டப்பட்டிருப்பேன். இணையத்தின் தயவால் பிழைத்தேன். இணையத்தின் வளர்ச்சி உலகமயமாக்குதலுக்கு ஆதாரமா அல்லது உலகமயமாக்கல் இணயத்தின் வளர்ச்சிக்கு வழிகோலியதா என்று பார்த்தால், இரண்டு பக்கமாகவும் பேசலாம். ஆனால் எனக்கு அதற்கெல்லாம் நேரமில்லை. எது எப்படியானால் என்ன, முன்னேற்றம்தான் முக்கியம்.
இப்போது? அகலப்பட்டை இணைய இணைப்பு, Windows XP, பல மென் பொருள்கள், கூகள், ஆன்லைன் பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலிய அகராதிகள், இத்யாதி இத்யாதி. உலகமயமாக்கலால் பல வேலைகள் இந்தியாவுக்கு வந்துள்ளன. அவற்றில் மொழிபெயர்ப்பு ரொம்பவும் முக்கியமானது. சில நாட்களுக்கு நியூயார்க்கில் உள்ள ஒரு பாகிஸ்தானியரால் நடத்தப்படும் ஏஜென்ஸிக்கு ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்து கொடுத்தேன். பணத்தை அவர் இந்திய ரூபாயாக Money Gram-ல் அனுப்ப அடுத்த பத்து நிமிடத்தில் பணம் சென்னைக்கு வந்தது.
அயர்லாந்தில் உள்ள ஒரு நிறுவனம் தன்னுடைய ஜெர்மன் கூட்டாளியிடமிருந்து ஜெர்மன் மொழியில் வரும் மின்னஞ்சல்களை மொழிபெயர்க்க என்னைத் தேர்ந்தெடுத்துள்ளது. தினம் பகல் 2 முதல் 10 மணி வரை வேலை. மின்னஞ்சல்கள் வர வர அவற்றை ஜெர்மனிலிருந்து ஆங்கிலத்துக்கோ அல்லது எதிர்த்திசையிலோ மொழி பெயர்க்க வேண்டியிருக்கும். இதன் அர்த்தம் என்னவென்றால் அயர்லாந்து கம்பெனி ஒரு முழுநேர மொழிபெயர்ப்பாளரை வேலைக்கு வைத்துக் கொள்ளத் தேவையில்லை. எனக்கு என்ன பலன்? ஸ்டெடியான வேலை, அதற்கேற்ப சம்பளம். இருவருமே பயன் பெறுகிறோம். இதுதான் உலகமயமாக்கல். விளையாட்டாகத் தமிழ்மணம் பார்த்துக் கொண்டிருக்கும்போது கூகள் டாக்கிலிருந்து மின்னஞ்சல் வருவது பலூன் போல மேலெழும்ப உடனே அந்த வேலையை பார்க்க வேண்டியதுதான், அயர்லாந்துக்காரர்களும் அடுத்த சில நிமிடங்களுக்குள் மொழிபெயர்ப்பை பெற முடிந்ததில் மிக மகிழ்ச்சி அடைகின்றனர்.
இப்போது வரும் மெடிகல் ட்ரான்ஸ்க்ரிப்ஷன்ஸ்களும் இம்மாதிரி வேலைகளே. கால் செண்டர்களும் அவ்வண்ணமே. ஆகவே நாமும் நம்மை காலத்திற்கேற்ப மாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. இல்லாவிட்டால் நிகழ்வுகள் நம்மை ஓரம் கட்டிவிடும். இதை உணர்ந்து இப்போதே முன்னேறிய நாடுகளில் உள்ள அரசியல்வாதிகள் புலம்ப ஆரம்பித்துவிட்டனர்.
ஜெர்மனியில் ஒரு தேர்தல் கோஷம் "Kinder statt Inder". (நிறையக் குழந்தைகள்தான் நமக்குத் தேவை, இந்தியர்கள் அல்ல). இதன் பின்புலன். ஜெர்மனியில் மென் பொருள் நிபுணர்களுக்கு பஞ்சம். இந்தியர்களுக்கு இதில் திறமை அதிகம். ஆகவே ஒரு ஜெர்மானிய மந்திரி இந்தியர்களுக்கு சலுகையளித்து கூப்பிட்டிருந்தார். இது அங்கிருந்த எதிர்க்கட்சிகளுக்கு பிடிக்கவில்லை, அவ்வளவுதான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
என்.கல்யாணராமனுக்கு அ.முத்துலிங்கம் விருது
-
அசோகமித்திரன், பூமணி, பெருமாள் முருகன், தேவிபாரதி ஆகியோருடைய
மொழிபெயர்ப்பாளரான என்.கல்யாணராமனுக்கு விஜயா வாசகர் வட்டம் வழங்கும்
அ.முத்துலிங்கம் விருது 2024...
5 hours ago
8 comments:
வல்லான் பொருள் குவிக்கும் தனியுடைமை (பார்க்க http://dondu.blogspot.com/2005/10/blog-post_17.html) வந்து வெகு நாட்களாகி விட்டன. அதை நாம் நமக்கு சாதகமாக்கிக் கொள்வதில்தான் வெற்றி அடங்கியிருக்கிறது.
அதை விடுத்து என்னமோ இதுபற்றி எழுதும் நாம்தான் அதை ஜஸ்டிஃபை செய்கிறோம் என்ற ரேஞ்சுக்கு இடதுசாரி சிந்தனையாளர்கள் எழுதுகிறார்கள். அதில் ஒருவர் கோயம்பேடு மார்க்கெட்டையெல்லாம் வேறு இழுத்து பேசுகிறார். காலம் அவர்களை ஒதுக்கிச் செல்லும் என்பதே நிஜம்.
இதில் ஒரு விசேஷம் என்னவென்றால் தனிப்பட்ட முறையில் வல்லானாக இருந்து கொண்டு பொருள் ஈட்டியவர்கள் பலர் மற்ற யாரும் அம்மாதிரி வல்லானாக வரக்கூடாது என்ற சிந்தனையில் செயல்படுகிறார்கள் என்றுதான் தோன்றுகிறது. (அதில் அந்தக் கோயம்பேட்டுக்காரரும் அடக்கம்). அதனாலேயே மற்றவர்கள் மட்டும் பின்பற்ற வேண்டுமென்று பல இடது சாரி சிந்தனை முத்துக்களை தெளித்து வருகின்றனர்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இணையத்தின் வளர்ச்சி உலகமயமாக்குதலுக்கு ஆதாரமா அல்லது உலகமயமாக்கல் இணயத்தின் வளர்ச்சிக்கு வழிகோலியதா என்று பார்த்தால், இரண்டு பக்கமாகவும் பேசலாம். //
ரொம்ப கரெக்ட் சார். இணையத்தின் வளர்ச்சி உலகமயமாக்கலுக்கு நிச்சயம் உதவியிருக்கிறது.
இதே போல தமிழ்ப்பதிவுகள் போடும்வரை நான் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும்போது தமிழில் கையால் எழுதி, அதை தட்டச்சு செய்வித்துக் கொண்டிருந்தேன். இப்போது, இகலப்பை வந்தது, மைக்ரோசாஃப்டின் எல்லா மென்பொருள்களிலும் தமிழ் யூனிகோடில் அடிக்க முடிகிறது. நியூயார்க்கில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கும் குறைந்த காலக் கட்டத்தில் சேவை அளிக்க முடிக்கிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
முதலில், உங்கள் வீட்டு நிதி மந்திரிக்கு பாராட்டுதல்கள்....
"முதலில், உங்கள் வீட்டு நிதி மந்திரிக்கு பாராட்டுதல்கள்...."
Thanks.
Dondu N.Raghavan
Dondu sir,
thanks for visiting my blog and comments point agreed.
About this article -WWW has helped for phenomenal I18N.
I read u r article in tamil- interacting with cutomers 2 cents.
Also i read u r blog post saying it was not widely received. sorry about it.i really liked it.
I am learning to type in tamil. soon i would :-)
கார்த்திக் அவர்களே,
118N என்றால் உலகமயமாக்கல் என்பதை உங்களது இந்தப் பின்னூட்டத்திலிருந்துதான் அறியப் பெற்றேன் நன்றி. அதை கூகளில் இட்டுப் பார்த்தால் 7,900,000 பக்கங்கள் வருகின்றன. அவற்றில் முதன்மையானது இதோ:
Introduction to i18n - [Diese Seite uebersetzen]This document describes basic concepts for i18n (internationalization), how to write an internationalized software, and how to modify and internationalize a ...
www.debian.org/doc/manuals/intro-i18n/index.en.html - 15k - Im Cache - aehnliche Seiten
அன்புடன்,
டோண்டு ராகவன்
The Ink Fades on a Profession as India Modernizes
G. P. Sawant, 61, estimates that he has written more than 10,000 letters for people who were unable to do so.
By ANAND GIRIDHARADAS
Published: December 26, 2007
MUMBAI, India — G. P. Sawant never charged the prostitutes for his letter-writing services.
Not long after the women would descend on this swarming, chaotic city, they would find him at his stall near the post office, this letter writer for the unlettered. They often came hungry, battered and lonely, needing someone to convert their spoken words into handwritten letters to mail back to their home villages.
The letters ferried false reassurances. The women claimed they had steady jobs as shopkeepers and Bollywood stagehands. Saying nothing of the brothels, beatings and rapes they endured, they enclosed money orders to remit rupees agonizingly acquired. Many called Mr. Sawant "brother" and tied a string on his wrist each year in the Hindu tradition.
Sometimes, suspicious parents boarded a train to Mumbai and turned up at Mr. Sawant's stall, which a daughter had listed as her address. Mr. Sawant greeted them kindly but disclosed nothing about the woman's work or whereabouts.
Such is the letter writer's honor code: When you live by writing other people's letters, you die with their secrets.
But now the professional letter writer is confronting the fate of middlemen everywhere: to be cut out. In India, the world's fastest-growing market for cellphones, calling the village or sending a text message has all but supplanted the practice of dictating intimacies to someone else.
And so Mr. Sawant, 61, and by his own guess the author of more than 10,000 letters of others, was sitting idly at his stall on a recent Monday, having earned just 12 cents from an afternoon spent filling out forms, submitting money orders, wrapping parcels — the postal trivialities that have survived the evaporation of his letter-writing trade.
But this is not the familiar story of the artisan flattened by the new economy, because, it turns out, his family has gained more from that economy than it has lost.
Three of Mr. Sawant's four children are riding the Indian economic boom, including a daughter, Suchitra, who works at Infosys, the Indian technology giant. In the very years that a telecommunications revolution was squashing her father's business, it was plugging India into the global networks that would allow her industry to explode. Suchitra now earns $9,000 a year, three times as much as her father did at his peak.
Globalization is said to create winners and losers. For the Sawants, it created both. And that duality reflects the furious pace at which entire professions are being invented and entire professions destroyed in the rush to modernize India.
There is, on one hand, a national quest under way to excise inefficiencies — to cut out middlemen. As go the letter writers, so go bank tellers as India adopts A.T.M.'s, phone-booth operators as cellphones spread, and rural moneylenders as new Western-style supermarket chains start trading directly with farmers.
But for every occupation that vanishes, another is born. There are now mall attendants in a nation that until lately had no malls, McDonald's cashiers in a country where cows are sacred, and Porsche sales executives in a land where most people still walk. It used to be hard to obtain a computer or telephone line in India; the country now has more software engineers and call-center operators than just about anywhere else.
G. P. Sawant entered the letter-writing trade in 1982 when he won a government contract for a coveted stall inside the post office headquarters. Before long, he earned a reputation among illiterate migrants as a gifted writer of letters.
Many of the letters were instructions from urban breadwinners on how to spend the money they were remitting to the countryside. They included expressions of affection for family members for whom they toiled in Mumbai but whom they rarely saw. They warned relatives not to squander money. They asked about the health of the aged and the infirm.
There were some letters Mr. Sawant would not write. He refused, for example, to trade in romantic love. Love is fickle and dangerous, he said. Lovers lie; they cheat; they offer their love and rescind it. He refused to engage in chicanery on other people's behalf.
Though hardly a literary man, with schooling only up to the 10th grade, Mr. Sawant described himself as a fastidious editor. He chopped pitilessly from his customers' dictations, rendering long speeches into short, punchy, to-the-point missives. (His customers were illiterate, so it was not as if he was going to get caught.)
The early years were bliss. But, in 1995, the post office was declared a historical site and the entire letter-writing squad, including Mr. Sawant and four assistants, was relocated across the street to where they are now, at the base of a gnarled tree, under a tarpaulin mat that shields them from the ceaselessly defecating pigeons that flutter among the branches.
As Mr. Sawant remembers it, 1995 happened to be the year when everything began to change.
India was emerging at that time from a long spell of economic self-sufficiency and stagnation, in which one had to reserve long-distance telephone calls as if they were tables at a fancy restaurant, days in advance. With the land-line infrastructure so dreary, the mobile phone was greeted with special enthusiasm when it arrived in India in the 1990s. Cellphone companies, seeking to tap a vast market of 1.1 billion Indians, innovated to drop their prices to as low as 1 cent a minute. It did not take long for the personal letter to become obsolete.
Mr. Sawant mourns the demise of the letter culture. After dropping a letter in the box, he used to imagine its winding journey. Someone far away would open what he had written on someone else's behalf; the reader would savor its kind words or its little secrets, then maybe file it away in a box, and perhaps revisit it weeks later in a burst of nostalgia.
But Mr. Sawant is not bitter. He said he was happy to stay behind if his country advanced. "With mobiles, India wins," he said. "For other people, it may be difficult. But I'm happy."
He is happy, of course, because his four children, all of whom he sent to private school using the proceeds from letter writing, have pulled the family into the upper middle class. His son works at a bank; one daughter works as a civil engineer in Denmark; another daughter is studying computers in college; and there is Suchitra, who is currently in New Jersey on assignment for Infosys.
Mr. Sawant's mention of New Jersey prompted a suggestion. A producer making a Web video for this article was about to return to New York, not far from where Suchitra is working. Did Mr. Sawant want to scribble a letter to his daughter for him to hand-deliver?
His answer was instantaneous.
"Why would I send her a letter?" he asked, perplexed. "I'll just call her on the phone."
http://www.nytimes.com/2007/12/26/world/asia/26india.html?_r=2&pagewanted=all&oref=slogin
Post a Comment