எனக்கு வந்த மின்னஞ்சலை என்னால் இயன்ற அளவு தமிழில் மாற்றித் தருகிறேன். அலுவலகத்தில் சாதாரணமாகப் பேசும் வரிகளுக்குள் நடுவே படித்தால் என்ன ஆகும்?
அதன் ஆங்கில மூலத்தைப் பார்க்க இங்கே சொடுக்கவும்.
அலுவலக மொழி .... ... இது எப்படி இருக்கு? ........ .
1."நாம அதை கண்டிப்பா செய்வோம்"
"நீதாண்டா அதை செய்யப் போறே சோம்பேறி"
2."ரொம்ப நல்லா வேலை செஞ்சீங்க"
"இதோ இன்னும் அதிக வேலைகள் உன் தலையில்தான், இளிச்சவாயா"
3."நாங்க அந்த வேலையைத்தான் பாத்திட்டிருக்கோம்"
"இன்னும் அதை பாக்கவே ஆரம்பிக்கவில்லை ஐயா தொந்திரவு பண்ணாம போய்ச்சேர் அப்பேன்"
4."நாளைக்கு முதல் வேலையா இதுதான்"
"இன்னிக்கு எப்படியும் அதை செய்யறதா இல்லை, அதாவது நாளை வரைக்கும் இதான் நிலைமை, ஹி ஹி!"
5."விவாதம் செய்வோம், தீர்மானிப்போம் - மற்றவர் கருத்து எனக்கு முக்கியம்"
"நான் ஏற்கனவே முடிவு செஞ்சாச்சு, நீ என்ன செய்யணும்னு நான் அப்புறம் சொல்றேன்டா வெண்ணை".
6."தகவல் பரிமாற்றம் செய்வதில் சற்றே பின்னடைவு"
"நாங்க பொய் சொன்னோம்"
7."எல்லோரும் சேர்ந்து மீட்டிங் போட்டு பேசுவோம்"
"இப்போ பேசறதுக்கு எனக்கு நேரம் இல்லை (தமிழ்மணம் பாக்கணும்)"
8."எங்களால் இதை கண்டிப்பாக செய்ய முடியும்"
"எங்களால் இதை நேரத்துக்கு செய்ய இயலவில்லை"
9."நாங்க சரியான பாதையிலேதான் போயிட்டிருக்கோம் ஆனாக்க டெட்லைனை கொஞ்சம் தளர்த்தணும்"
"சொதப்பிட்டோம் வாத்தியாரே, சொன்ன நேரத்தில் வேலையை முடிக்க முடியாது."
10."சிறு கருத்து வேறுபாடு"
"குடுமிப்பிடி சண்டை போட்டோம்"
11."என்னென்ன வேலைகளெல்லாம் செய்யணும்னு லிஸ்ட் போடவும். உனக்கு நான் எப்படி உதவலாம்னு பார்க்கிறேன்"
"நீயே ஏதாவது பாத்து செய்யப்பா, என்னைத் தொந்திரவு பண்ணாதே, ஆளை விடு"
12."முன்னாலேயே இதை நீ எனக்கு சொல்லியிருக்கணும்"
"அப்படியே சொல்லியிருந்தாலும் ஒண்ணும் கழட்டியிருக்க முடியாதுங்கறது வேற விஷயம்!"
13."இந்தப் பிரச்சினையின் முக்கிய காரணத்தைக் கண்டு பிடிப்போம்"
"நீ எங்க கோட்டை விட்டேங்கறதை நான் அப்புறம் சொல்லறேன், வெண்ரு"
14."குடும்பம்தான் முக்கியம், உன்னுடைய லீவை சாங்ஷன் செய்யறேன். வேலை பாதிக்காமல் இருக்கும்படி மட்டும் பார்த்து கொள்ளவும்,"
"இந்த வேலையை முடிக்காமல் வெளியே போனால் காலை ஒடச்சுடுவேன், படவா"
15."நாம் ஒரு குழுவா செயல்படணும்,"
"சொதப்பிட்டேன், அதுக்கான தர்ம அடியில் எல்லோருக்கும் பங்கு"
16."இது ஒரு நல்ல கேள்விதான் நீ கேட்டது"
"அதப்பத்தி எனக்கு ஒண்ணுமே தெரியாதுடா டோமரு"
17."All the Best"
"உனக்கு சங்குதாண்டி"
ஆங்கில மொக்கையை தமிழில் மொக்கியது,
அன்புடன்,
டோண்டு ராகவன்
என்.கல்யாணராமனுக்கு அ.முத்துலிங்கம் விருது
-
அசோகமித்திரன், பூமணி, பெருமாள் முருகன், தேவிபாரதி ஆகியோருடைய
மொழிபெயர்ப்பாளரான என்.கல்யாணராமனுக்கு விஜயா வாசகர் வட்டம் வழங்கும்
அ.முத்துலிங்கம் விருது 2024...
5 hours ago
10 comments:
நல்ல காமெடி இது!
ஆங்கிலத்தில் வந்தது நன்றாக மொழி பெயர்திருக்கிறீர்கள்
வால்பையன்
நன்றி வால்பையன். எதற்கும் இருக்கட்டும் என்று ஆங்கில மூலத்துக்கும் சுட்டி கொடுத்துள்ளேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Soooper!
டோண்டு இந்த பதிவு மட்டுமல்ல. நீ போடுவது எல்லாமே மொக்கை தான்.
கோமணகிருஷ்ணன்
15."நாம் ஒரு குழுவா செயல்படணும்,"
"சொதப்பிட்டேன், அதுக்கான தர்ம அடியில் எல்லோருக்கும் பங்கு"
இதுதான் டோண்டு.
//."ரொம்ப நல்லா வேலை செஞ்சீங்க"
"இதோ இன்னும் அதிக வேலைகள் உன் தலையில்தான், இளிச்சவாயா"
//
ஹலோ எப்படிங்க??? இப்படி ஏத்தி வுட்டு ஏத்தி வுட்டே நம்மள ரணகளமாக்கி வச்சிருக்காங்க..
எல்லாமே அருமையா இருந்தது.. மொழிபெயர்ப்பும் நல்லா இருக்கு..குறிப்பா கீழே இருப்பது எனது பேவரைட்..
//16."இது ஒரு நல்ல கேள்விதான் நீ கேட்டது"
"அதப்பத்தி எனக்கு ஒண்ணும தெரியாதுடா டோமரு"//
நீங்க பேசாம இந்த மாதிரி வாரத்துக்கு மூணு "மொக்கை" போடலாம்.. நீங்க சோ பத்தியெல்லாம் எழுதுவதை விட இது பத்தாயிரம் மடங்கு நல்லாவே இருக்கு
//டோண்டு இந்த பதிவு மட்டுமல்ல. நீ போடுவது எல்லாமே மொக்கை தான்.
கோமணகிருஷ்ணன்//
ம.க.இ.க மடையா, இன்னிக்கு உண்டி குலுக்கி எடுத்த பிச்சையில் கலெக்சன் எப்படி ? அதுவும் மொக்கையா.
உனக்கு ம.க.இ.க சாப்பாடாவது போடுராங்களா?
//டோண்டு இந்த பதிவு மட்டுமல்ல. நீ போடுவது எல்லாமே மொக்கை தான்.//
உனக்கு அறிவு துளி கூட இல்லையா.
//டோண்டு போடுவது எல்லாமே மொக்கை தான்.//
இவருதான் போய் பாத்தாரு.
//டோண்டு இந்த பதிவு மட்டுமல்ல. நீ போடுவது எல்லாமே மொக்கை தான்.
கோமணகிருஷ்ணன்
//
dondu avargale, intha comment pottathu naan illai. naan immaathiri orumaiyil ungalai pesa matten.
komanakrishnan
Post a Comment