3/15/2008

பத்திரிகைகளும் காப்பிரைட் சட்டமும்

பேராசியர் கல்கி அவர்கள் இறந்ததும் ஆனந்த விகடனில் "கல்கி வளர்த்த தமிழ்" என்ற தொடரில் அவர் ஆனந்த விகடனின் ஆசிரியராக இருந்த காலக்கட்டத்தில் அவர் எழுதி விகடனில் வெளிவந்த கதை கட்டுரைகளை வெளியிட்டு நிறைய காசு பார்த்தது. அதிலிருந்து கல்கி அவர்களின் வாரிசான கி.ராஜேந்திரனுக்கு ஏதும் பணம் தந்ததாகத் தெரியவில்லை. அப்போதெல்லாம் அப்படித்தான். விகடனில் வெளியாகும் எல்லா பிரசுரங்களுக்கும் காப்பிரைட் தன்னிடம்தான் உள்ளது என அது அறிவிப்பே செய்ததாக ஞாபகம். உண்மையான காப்பிரைட் விதிகளை யாரும் மதித்ததாகத் தெரியவில்லை.

எனக்கு தெரிந்தவரை கதையோ, கட்டுரையோ அதை எழுதியவருக்குத்தான் காப்பிரைட் என்றுதான் சட்டம் சொல்கிறது. இதைக்கூட சாவி அவர்கள் அப்போதைய விகடன் ஆசிரியரிடம் கூறவேண்டியிருந்தது. அவரது "வாஷிங்டனில் திருமணம்" என்னும் நகைச்சுவைத் தொடரின நாடகமாக்க உரிமையை சாவியைக் கேட்காமலேயே யாருக்கோ விற்று விட்டதாம் விகடன். சாவி சட்டத்தை எடுத்துக் கூறியதும், விகடன் ஆசிரியருக்கு சங்கடமாகி விட்டதாம். விற்றுவிட்டேனே என்ன செய்வது என்று கையைப் பிசைய, அதை மட்டும் சாவி விட்டு கொடுத்திருக்கிறார். இதையெல்லாம் சாவி அவர்களே எழுதி நான் படித்துள்ளேன்.

இப்போது இதையெல்லாம் கூற என்ன காரணம்? இந்த வாரத்து விகடனில் சமீபத்தில் 1981-82 காலக்கட்டத்தில் ஆனந்த விகடனில் வந்த சுஜாதா அவர்களின் கிரிக்கெட் பற்றிய நகைச்சுவைக் கட்டுரையை சுஜாதா சுவடுகள் என்ற வரிசையில் மீண்டும் வெளியிட்டது. இது ஒரு வரிசையாக வரும்போல தோன்றுகிறது. இதற்கான சன்மானத்தை விகடன் மீண்டும் சுஜாதா அவர்களது வாரிசுகளுக்கு தர வேண்டியிருக்கும். தருகிறதா என்பதுதான் கேள்வி. தருகிறது என்றால் மகிழ்ச்சியே. எனது இந்த புரிதல் சரிதானா என்பதை யாராவது வழக்கறிஞர் நண்பர்கள் கூறினால் நன்றியுடையவனாக இருப்பேன்.

கல்கியில் "மத்யமர்" என்ற வரிசையில் வந்த பல கதைகள் பிறகு குங்குமத்தில் மீண்டும் வந்தன. ஆனால் அப்போது சுஜாதா அவ்ர்கள் உயிருடன் இருந்தார், ஆகவே அவரே அதை பார்த்து கொண்டிருப்பார். ஆனால் இப்போது விஷயம் வேறு. ஆகவே இப்பதிவு.

பத்திரிகை உலகில் வேறுவகையிலும் மோசடிகள் நடக்கின்றன. இது பற்றி நான் ஏற்கனவே போட்ட பதிவிலிருந்து:

"பல மாத நாவல்கள் வெளி வருகின்றன.அவற்றில் கணிசமானவை ஏற்கனவே பத்திரிகைகளில் தொடர்கதையாக வெளி வந்தவையே. ஆனால் சம்பந்தப்பட்ட மாத நாவலில் அதை பற்றி ஒன்றும் கூற மாட்டார்கள். தலைப்பை வேறு மாற்றி விடுவார்கள்.

இந்தப் பழக்கத்துக்கு ஒரு மோசமான உதாரணம் திரு. சாவி அவர்கள். அவருடைய தொடர் கதை "ஓ" மாத நாவலாக உருவான போது "அன்னியனுடன் ஒரு நாள்" என்றப் பெயரில் வந்தது. நல்ல வேளையாக நான் அதை வாங்கி ஏமாறவில்லை. ஓரு சைக்கிள், ஒரு ரௌடி, ஒரு கொலை" என்று 1978-ல் வெளியான தொடர் கதை தொண்ணூறுகளில் வேறு பெயரில் வந்தது. இந்த முறை ஏமாந்தேன். ஆனால் முதல் பாரா படிக்கும் போதே ஏற்கனவே படித்த கதை என்றுத் தெரிந்துப் போயிற்று. சாவியின் இம்முயற்சிகள் எல்லாம் அவருடைய சொந்தமான மோனா பப்ளிகேஷனில் வெளியாயின. ஆகவே அவர் பொறுப்பு இதில் இரட்டிப்பு ஆகிறது.

சாவியின் எழுத்துக்கள் மட்டும் இம்மாதிரி முயற்சிகளில் ஈடுபடுத்தப் பட்டன என்றுக் கூற முடியாது. பால குமாரன், ராஜேஷ் குமார் ஆகியவர்கள் புத்தகங்களும் இம்மாதிரியான முயற்சிகளிலிருந்துத் தப்பவில்லை.

ரயில் மற்றும் பஸ் நிலையங்களில் அவசர அவ்சரமாய் பிடித்த எழுத்தாளர்களின் புத்தகங்களை வாங்கிக் கொண்டு வண்டி ஏறுகிறோம். வண்டி கிளம்பிய பிறகு ஏமாந்தது தெரிந்து ஙே என்று விழிக்கிறோம்.

ஏற்கனவே ஒரு புத்தகம் தொடர்கதையாகவோ அல்லது புத்தகமாகவோ வெளியாகி விட்டது என்றுக் கூறுவது சட்டப்படி பதிப்பாளரின் கடமை அல்லவா? பிறகு எந்தத் தைரியத்தில் இந்த நாணயமற்ற வேலை நடக்கிறது"?

அன்புடன்,
டோண்டு ராகவன்

30 comments:

சரவணன் said...

கொஞ்சம் சம்பந்தமில்லாததுதான் என்ற அறிவிக்கையோடு: copyright -இதற்குத் தமிழில் 'பதிப்புரிமை' என்றால் copyleft- இதற்கு என்ன? 'பொதுவுரிமை' எனலாமா? copyleft என்பதில் உள்ள கவித்துவம் இதில் இல்லையே?

dondu(#11168674346665545885) said...

நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது plead என்ற சொல் கற்று தந்தார்கள். plead என்றால் beg என்று பொருள் தரப்பட்டது. நான் ஆசிரியரிடம் அப்படியானால் pleader என்றால் beggar என்று கூறலாமா என்று கேள்வி கேட்டதற்காக வகுப்பிலிருந்து வெளியேற்றப்பட்டேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

கூடுதுறை said...

தங்கள் பூனைக்கு மணிக்கட்ட முயற்சி செய்துள்ளிர்கள். நல்முயற்சி...

RATHNESH said...

நல்ல கருத்துள்ள பதிவு.

தமிழ் இலக்கிய / பத்திரிகை / பதிப்பக உலகத்தில் நிலவிவரும் ஒரு பரவலான கருத்து, "ஓரத்தில் எங்கேயோ அடையாளம் தெரியாமல் எழுதிக் கொண்டிருந்தவரை நாங்கள் தான் பிரபலப்படுத்தி விடுகிறோம்; இவரை விட்டால் எங்களுக்கு வெளியிட படைப்புகளா இல்லை? வரிசையில் காத்திருக்கிறார்கள்!" என்பது.

தன்னுடைய படைப்புக்கு உரிய சன்மானத்தைக் கேட்பதற்குப் பல படைப்பாளிகள் தயங்குவதற்கு இந்த தன்னம்பிக்கை அற்ற நிலையும் ஒரு காரணம்.

பத்திரிகைகள் படைப்பு கேட்கும் போது முதலில் சன்மானத்தைப் பற்றிப் பேசுங்கள் என்று வெளிப்படையாக சுகி.சிவம் போன்ற மிகச் சிலர் தான் கூறுகிறார்கள். சுகி.சிவத்தின் படைப்புகளைப் பல பத்திரிக்கைகள் வெளியிடுவதில்லை. ("சம்பளம் பேசவே தெரியாது அவருக்கு; ஏதாவது பார்த்துக் கொடுங்க என்பார்" என்று சுஜாதா குறித்து ஷங்கர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது)

இலக்கிய உலகில் பிரபலமானவர்கள் பலரின் பின்கதை இதுதான். நமது படைப்புலகில் எழுத்தை மட்டும் நம்பி வாழ்க்கையை ஓட்ட முடியாத நிலையும் இதனால் தான். படைப்புகள் மிக உயர்ந்த தரத்துடன் வெளிவரமுடியாமல் போவதற்கான காரணமும் இது தான். (எப்போதாவது வயிறு நிறைந்த திருப்தியிலோ, சுய கஷ்டம் எதையும் கண்டுகொள்ளாத தன்னிலை மறந்த நிலையிலோ தான் கொஞ்சநஞ்ச உயர்தராப் படைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன). பிரபஞ்சன், தன்னுடைய சில எழுத்துக்கள் பற்றியே கீழ்க்கண்டவாறு கூறுவார்: "இதெல்லாம் உப்பு புளி மிளகாய் வத்தல் படைப்புகள்" என்று.

இத்தகைய சூழலில் காப்பியாவது ரைட்டாவது சட்டமாவது!

Anonymous said...

ஒப்பந்தம் மூலம் பதிப்புரிமை வெளியிட்ட பத்திரிகைக்கு மாற்றப்படாத வரை பதிப்புரிமை
படைத்தவருடையது.பத்திரிகை
தருவது சன்மானம்.அது வேறு,
பதிப்புரிமையை விட்டுக் கொடுப்பது
வேறு.ஆனால் ஒரு பத்திரிகையில்
வேலை செய்பவரது படைப்புகளின்
பதிப்புரிமை பத்திரிகைக்கு சொந்தம்
என்று ஒப்பந்தம் இருந்தால், அப்போது
நிலைமை வேறு. சாவி, கல்கி போன்றவர்கள் எந்த நிபந்தனைகளை
ஏற்று விகடனில் வேலை செய்தார்கள்
என்பது நமக்குத் தெரியாது.
freelancer, பத்திரிகையில் வேலை
செய்பவர் இருவரின் நிலை, ஒப்பந்த
விதிகளைப் பொருத்து பதிப்புரிமை
மாறுபடலாம்.ஆனால் நடைமுறையில்
படைப்பாளிகள் கை தாழ்ந்துள்ள
நிலையில் வல்லான் வகுத்ததே
வாய்க்கால் என்ற நிலைதான்
இருக்கிறது. இன்று விகடனுக்கு
எழுத்தாளர்கள் தேவையில்லை,
பத்தியாளர்கள் போதும், பிரபலங்கள்
சொல்வதன் அடிப்படையில் தொடர்
எழுதுபவர்கள் போதும். சுஜாதா
உயிரோடு இருந்திருந்தால் அவருக்கு
ஒரளவு மதிப்பு கொடுக்க விகடன்
தயங்காது, ஆனால் பிற எழுத்தாளர்களை அது அதே போல்
மதிக்குமா என்பது சந்தேகமே.

Anonymous said...

copyleft - அளிப்புரிமை

Doctor Bruno said...

எங்களின் கல்லூரி மலரின் (நான் வடிவமைத்தபோது) போட்ட காப்பிரைட் வசனம் இது தான்

Notice:
The authors and the publisher of this volume have taken care to make certain that the details provided are correct and compatible with the standards generally acceptible at the time of publication.
However Medicine is an ever-changing subject and the authors and publisher disclaim all responsibility for any liability, loss, injury or damage incurred as a consequence, directly or indirectly, of the use and application of any content of this manual.
Any comments regarding the authencity of the articles are to be directed to the authors. The jokes, especially MEDIJOKES, are to be taken in a lighter vein and laughed at.

© 2001 : Copyright not reserved by TvMC Students Association.
No rights reserved. This book is not protected by copyright. This book, or any parts thereof, may be used or reproduced in any manner whatsoever without the written permission. Howewer the Title "Dreams" is copyright of 'Masters of the Millennium.'

Previous Releases: 1987,1989,1997,2000.
First Edition

This book has been published with the intention that it can, may and shall be read, lent and circulated freely among other college students, friends and relatives

Circulation territory: College, Hospital, GH, LH, Homes and Other Colleges and Hostels

Printed in India under arrangement with Students Association, TvMC.

Published by Tirunelveli Medical College and printed in Palayamkottai

dondu(#11168674346665545885) said...

டாக்டர் அவர்களே,
உங்க பின்னூட்டம் எனக்கு இந்த ஜோக்கை ஞாபகப்படுத்திடுத்து.

ராமு: நம்ம பத்திரிகையாசிரியர் கந்தசாமி துவக்கி இருக்கிற அச்சுக்கூடத்தில் ஏன் இத்தனை கும்பல், எல்லோரும் ஏன் கோபமா இருக்காங்களாம்?

சோமு: அதெல்லாம் ஒண்ணுமில்லை, ஒரு கல்யாண பத்திரிகையை அச்சடிச்சு கொடுத்திருக்கார் சார். அதில கீழ பழக்க தோஷத்திலே இப்பத்திரிகையில் வரும் எல்லா பெயர்களும் கற்பனையானவையே, உயிரோடு இருப்பவர்களையோ, இறந்தவர்களையோ குறிக்காதுன்னு போட்டுட்டாராம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Doctor Bruno said...

காப்புரிமை குறித்து இந்தியாவில் யாரும் கவலைபடுவது கிடையாது.

ஏர்போர்ட் படம் பார்த்திருக்கிறீர்கள் தானே :) :) :)

அதே போல் தான் பத்திரிகைகளும்.

பல பதிப்பகங்களில் காப்புரிமை ஒப்பந்தத்தில் உரிமை ஆசிரியருக்கு என்று பெருந்தன்மையாக இருக்கும். ஆனால் இரண்டு ஷரத்துக்கள் கழித்து பதிப்பாளரின் எழுத்து பூர்வ சம்மந்தம் இன்றி அந்த படைப்பை வேறு யாருக்கும் எழுத்தாளர் அளிக்க முடியாது என்று போட்டிருப்பார்கள்.

வார பத்திரிகைகளை பொறுத்தவரை தேர்ந்தெடுக்கப்படும் படைப்புகளின் உரிமை இதழுக்கு என்பது சாதாரண விஷயம்.

பதிப்புரிமை சரி, எழுத்தாளர் எழுதாததை அவர் பெயரில் வெளியிடுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்.

Anonymous said...

டோண்டு சார், ஜோக் சூப்பர் :) :) :)

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...

dear sir,
thank you for visiting my blog and registering your comment.it's a frantic,fanatic and a foolish effort of a grief ridden mother to make her son immortal.he will be remembered momentarily at least when the blog is read.my mother's grief is never diminishing and ever increasing .your kind words and sharing the grief is like the stars trying to brighten the world on a new moon day.though the result is feeble ,it's the most needed.please keep writing.
thankfully,
sweetest karthikeyan

dondu(#11168674346665545885) said...

Sweetest Karthikeyan,

I fully comprehend the sorrow and the attempts of a bereaved mother in keeping her son alive.

In our translators' portal Proz.com, I am known as Narasimhan Raghavan and people there call me as Narasimhan. I do not try to dissuade them, as I feel that in that way my father late Narasimhan is still there guiding me through the thick and thin of life.

May God bless you!

Regards,
Dondu N.Raghavan

வஜ்ரா said...

//
ஏற்கனவே ஒரு புத்தகம் தொடர்கதையாகவோ அல்லது புத்தகமாகவோ வெளியாகி விட்டது என்றுக் கூறுவது சட்டப்படி பதிப்பாளரின் கடமை அல்லவா? பிறகு எந்தத் தைரியத்தில் இந்த நாணயமற்ற வேலை நடக்கிறது"?
//

வாங்கி ஏமாந்துவிட்டு, கேஸ் போட்டு அந்த பப்ளிஷரை கோர்டுக்கு இழுத்து நாறடிக்காமல் போகும் கேணைகள் நிறையவே இருக்கிறார்கள் என்ற தைரியத்தில் தான்.

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

ஆனால் அவர்கள் அதையே புத்தகமாக போடும் போது அதையும் நம்மிடம்(காபி ரைட்டயும் ) கணக்கு பண்ணி காசு கறந்து விடுவார்கள். அவர்கள் புத்தகமும் மார்கெட்டை விட ஒரு ரூபாய் எப்பவும் விலை ஜாஸ்தி .
பாஸ்கர் .

Doctor Bruno said...

//ஏற்கனவே ஒரு புத்தகம் தொடர்கதையாகவோ அல்லது புத்தகமாகவோ வெளியாகி விட்டது என்றுக் கூறுவது சட்டப்படி பதிப்பாளரின் கடமை அல்லவா? பிறகு எந்தத் தைரியத்தில் இந்த நாணயமற்ற வேலை நடக்கிறது"?//

சாவி விஷயம் தெரியாது, ஆனால் ஜீ.யே புக்ஸ், பக்கெட் நாவல், போன்ற மாத நாவல்களில் ஏற்கனவே தொடர்கதையாக வந்தது என்ற விபரம் உள்ளே தரப்பட்டிருக்கும் (ஒன்று பதிப்பகதாரின் மடலில், அல்லது ஆசிரியரின் மடலில்)

ஆனாலும் அதை கடையில் வைத்து யாரும் பார்க்க முடியாது. என்வே அட்டையிலேயே போட்டால் உத்தமம் என்பது என் கருத்து.

Sridhar V said...

//சம்பளம் பேசவே தெரியாது அவருக்கு; ஏதாவது பார்த்துக் கொடுங்க என்பார்" என்று சுஜாதா //

இயக்குனர் ஷங்கர் சொன்னது சுஜாதாவுக்கும் அவருக்கும் உள்ள உறவு நிலையைப் பற்றி என்று நினைக்கின்றேன். அவர் சினிமாவில் பணியாற்றியது வெறும் வசனகர்த்தாக மற்றும் அல்ல. ஒரு கிரியேட்டிவ் ஹெட்-ஆகவும் இருந்தார்.

தமிழ் சினிமாவில் கதையாசிரியர்களுக்கு பங்களிப்பு பற்றி சரியான புரிதல் இல்லாத நிலைமையில் அவர் வெகு சில படைப்பாளிகளுடன் அவர்களின் நட்புக்குபாற்ப்பட்டு பணி புரிந்தார்.

மற்றபடி ஆனந்த விகடன் இப்படியாகப்பட்ட copyright infringment செய்ய மாட்டார்கள் என்பதுதான் எனது துணிபு. அந்த கடடுரைகளின் பதிப்பக உரிமை அவர்களிடம் இருந்திருக்க வேண்டும். அல்லது அதற்கு உண்டான சன்மானத் தொகை சுஜாதா அவர்களின் குடும்பத்துக்கு அளித்திருப்பார்கள்.

dondu(#11168674346665545885) said...

//மற்றபடி ஆனந்த விகடன் இப்படியாகப்பட்ட copyright infringment செய்ய மாட்டார்கள் என்பதுதான் எனது துணிபு. அந்த கடடுரைகளின் பதிப்பக உரிமை அவர்களிடம் இருந்திருக்க வேண்டும். அல்லது அதற்கு உண்டான சன்மானத் தொகை சுஜாதா அவர்களின் குடும்பத்துக்கு அளித்திருப்பார்கள்.//
அப்படி நிஜமாகவே இருந்தால் மகிழ்ச்சி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

K.R.அதியமான் said...

From the style of writing in that thodar in aa-vi, i guess it is re-written by Desikan (with the permission of Mrs.Sujatha). Sujatha Sir had already given a blanket permission to Desikan some time back to write his biography in first person itself.

this thodar is not the exact replica of the old story from Srirangathu devadaihal. hence...

dondu(#11168674346665545885) said...

இல்லை அதியமான் அவர்களே. தொடர் அப்படியே சுஜாதா அவர்களின் கதையைத்தான் எடுத்துள்ளது. இப்போதுதானே சமீபத்தில் 1981-82-ல் படித்தேன். பல வாக்கியங்கள் இன்னும் நெட்டுருவாகவே உள்ளன.

அதே சமயம் தேசிகன் அவர்கள் இதில் ஈடுபட்டுள்ளார் என்றால் இரட்டிப்பு மகிழ்ச்சி. சுஜாதா அவர்கள் குடும்பத்தாருக்கு கிடைக்கும் சன்மானங்கள் தவறாமல் இருக்க அவர் பார்த்து கொள்வார் என்னும் நிம்மதி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

kalaignarin ezuththukkalil irunthum neriya per copy adiththullaargal. aanaal avar athai perunthanmaiyaaga kandu kolla maattar. ungal pondru kooppadu poda maattar

komanan

Anonymous said...

நல்ல பதிவு. வாழ்த்துகள்.


குமார்.
www.tamilradio.co.nr

வால்பையன் said...

//ஓரு சைக்கிள், ஒரு ரௌடி, ஒரு கொலை" என்று 1978-ல் வெளியான தொடர் //

சமீபத்தில் விட்டுடீங்களே சார்

வால்பையன்

Anonymous said...

//kalaignarin ezuththukkalil irunthum neriya per copy adiththullaargal. aanaal avar athai perunthanmaiyaaga kandu kolla maattar. ungal pondru kooppadu poda maattar

komanan//

காப்பி அடிப்பாவன் தனது கேன சித்தாந்தங்களை இலவசமாக பரப்புகிறான் என்பதால் விட்டுவிட்டார். அது பெருந்தன்மை கிடையது சுயநலம்தான்.

Techie said...

17th March 2008
04:50 PM IST
IP: 59.92.64.160

வணக்கம் ராகவன் ஸார், இது சிந்தனையை தூண்டும் நல்ல பதிவு. மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு தரப்படும் தரவு அல்லது

வார்த்தைகளுக்கு வேண்டுமானல் காப்புரிமை இருந்து தொலைக்கட்டும் . இறை வாக்கு அல்லது வார்த்தைகளுக்கு இந்நிலை சற்றும் பொருந்தாது

அல்லவா? ஏனெனில் உலகின் முதல் திற மூல கருத்துகள் (Open Source) என்பது இறைவன் மனிதர்களுக்கு அளித்த வேதங்களான புனித பகவத்

கீதையில் இருந்து தொடங்கி (இப்பொழுது உள்ளதில் இது தான் வயதில் மூத்தது) புனித பைபிள் வாயிலாக புனித குர் ஆன் வரை (இப்பொழுது

உள்ளதில் இது தான் வயதில் இளையது) இறைவனின் வாக்குகள் தாம். இவற்றை எந்த தனி நபரும் தன்னுடையது என சொந்தம் கொண்டாட

இயலாது. நானொரு முஸ்லிம். நான் குர் ஆன், பைபிள் மற்றும் பகவத் கீதை அனைத்தும் தமிழில் படிப்பதுண்டு. ஆனால் மனிதர்கள் இதை

பதிப்பிக்கும்போது காப்புரிமை தங்களுக்கே என்று முதல் மூன்று பக்கங்களில் ஒன்றில் அச்சடித்து விடுவது ஏன்? ஒரு வேளை மூல மொழியில்

இருந்து அதனை மொழி மாற்றம் செய்த காரணத்தினால் அவையனைத்தும் இவர்களுக்கே சொந்தம் என கருதி விட்டார்களா? ஏனெனில் நான் சிறு

வயதில் ஓதிய (Recite) அரபி குர் ஆனில் இந்த காப்புரிமை சமாச்சாரம் எல்லாம் பார்த்ததாக ஞபாகம் இல்லை. மேலும் சமஸ்கிருத பகவத்

கீதையும், எபிரேய பைபிளும் நான் பார்க்க இயலவில்லை. அப்படியே பார்த்தாலும் இரு மொழிகளும் எனக்கு தெரியாது. ஆகவே மொழிபெயர்ப்பு

தொழில் செய்யும் தாங்கள் இந்த மொழிபெயர்ப்பு வழியாக வரும் காப்புரிமை பற்றி விளக்கினால் தன்யனாவேன்.


இந்த காப்புரிமை தலைவலி எங்களுக்கு ஒருங்கிணைந்த ஆழிப்பேரலை கண்காணிப்பு சேவையை (Integrated Tsunami Watcher Service -

http://www.ina.in/itws/) துவக்கிய பொழுது வந்தது. இதனால் தான் நாங்கள் இந்த காப்புரிமை தலைவலியை அப்துல் கலாம் பாணியில் கையண்டோம்.

உலக கடிகார மேல் வரிசையை காலக்கிரமப்படி புனித காசியில் ஆரம்பித்து புனித ஜெருஸலம் மற்றும் புனித பெத்லேகம் வழியாக புனித மக்கா

வந்து நின்றோம். இது கிட்டதட்ட பொதுச்சுவரில் சிறுநீர் கழிந்து நாசப்படுத்துபவர்களிடம் இருந்து காப்பற்ற அதில் புனிதமனவற்றை வரைந்து

வைப்பது போன்றது. இதுவரை யாரும் தொல்லை கொடுக்கவில்லை. எங்களின் இந்திய தொழில்நுட்பவியாலர்களின் மண்டலத்தில் (Indian Techies

Zone) உள்ள கடவுள்மறுப்பு கொள்கை உடையோர் கூட இதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. அதில் உள்ள அனைவரும் திற மூலத்திற்க்கு ஆதரவு

தருபவர்கள். அனைவரின் சிந்தனையும் மனித குலத்திற்க்கு உதவுவது தான். இறைவன் எப்பொழுதும் தன் படைத்த 'ஒரு செல் உயிரி

அமீபாவிற்க்கும் அல்லது ஒரு சில டன் எடை கொண்ட திமிங்கலத்திற்க்கும்' இடையே பாகுபாடு பார்ப்பது இல்லை.

எங்களின் நாகை மாவட்டத்தை ஆழிப்பேரலை தாக்கிய போது அது அனைத்து படைப்பினங்களின் மீதும் ஓரே வேகத்தில் தான் தாக்கியது.

ஆனால் மனிதன் மட்டும் ஏன் பாகுபாடு பார்க்கின்றான்? இயற்கை பேரழிவு காலங்களில் இருந்த ஒற்றுமை அதற்கு பிறகு காணமல் போவதேன்?

கீழே உள்ள காப்புரிமை குறித்த அறிவிப்பில் உள்ள ஆறு மற்றும் ஏழாவது வரிகள் இந்த வகை மனிதர்களிடம் இருந்து எங்களை

காத்துகொள்ளதான்.

Copyright © All rights reserved to The Almighty - Creator and Protector of All. Our rights are left. No rights reserved. Use as you desire and

demand as per all holy scriptures. Full source available here. But we respect the trademark rights of others. So all other trademarks and logos

are the property of their respective owners. Page created by Nvu. Site best viewed in 1024x768 resolution with Firefox browser. Get the

Firefox here. http://www.getfirefox.com Last Updated on 16 March 2008 @ IST 04:44.


அன்புடன்,
--
Muhammad Ismail .H
Chief Executive,
Digital Net Services,
India - 611 002.
Direct : +91.98424.96391
"Truth Always Triumphs, (but it will take some time)"
http://infoismail.blogspot.com

dondu(#11168674346665545885) said...

முகம்மத் இஸ்மாயில் அவர்களே,

காப்புரிமை பற்றி போடுவது பழக்க தோஷமே. ஆனால் ஒன்று, என்னிடம் ஒரு கோப்பு மொழிபெயர்க்க என்று வருகிறது என்று வைத்து கொள்வோம். அதன் மூல மொழியில் எழுதப்பட்டதற்கான காப்புரிமை மூல ஆசிரியருக்கே. ஆனால் அதன் மொழிபெயர்ப்பின் காப்புரிமை என்னுடையது. என்ன, இதை ரொம்ப சொல்லிக் கொண்டிருக்க முடியாது. உதாரணத்துக்கு எனது சுனாமி பற்றிய பதிவில் தமிழ் மூலத்துக்கான காப்புரிமை கவிஞர் எழிலனிடம், அதன் ஆங்கில மொழிபெயர்ப்புக்கான காப்புரிமை இந்த டோண்டு ராகவனிடம். பார்க்க: http://dondu.blogspot.com/2008/02/blog-post_06.html

ஆனால் பைபிள், குரான், பகவத் கீதை ஆகிய விஷயங்களில் சற்றே மாற்றி பார்க்க வேண்டியுள்ளது. உதாரணத்துக்கு குறளோவியத்தின் காப்புரிமை கலைஞர் அவர்களிடம், ஆனால் பரிமேலழகர் உரை? மேலும் இந்த காப்புரிமை விவகாரங்கள் முதல் குறிப்பிட்ட (50?) ஆண்டுகளே. பிறகு ஆட்டமேட்டிக்காக்க பொது சொத்தாகின்றன. இசாக் அசிமோவ் பிரத்தியேகமாக தனது பழைய வேலைகளுக்கு மறு காப்புரிமை பெற்றது இதனால்தான். அமாதிரி புதுப்பிப்பதற்கும் காலக்கெடு உண்டு என அறிகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//எங்களின் நாகை மாவட்டத்தை ஆழிப்பேரலை தாக்கிய போது அது அனைத்து படைப்பினங்களின் மீதும் ஓரே வேகத்தில் தான் தாக்கியது.//

தெரு நாய்கள் எல்லாம் சுனாமியை அறிந்து முன்னாடியே ஏரியாவை காலி செய்துவிட்டு கும்பலாக தப்பிவிட்டதாமே.

Anonymous said...

//இப்போதுதானே சமீபத்தில் 1981-82-ல் படித்தேன். பல வாக்கியங்கள் இன்னும் நெட்டுருவாகவே உள்ளன.//

யோவ்! அவனவன் மறதிக்கு மாத்திரை சாப்பிடும் நேரத்தில் இது கொஞ்சம் ஓவரா இல்ல? what is the secret of your memory? kindly share with us :)

Techie said...

Mr.Name censored by Dondu,


Sorry for typing in English. I am fare away from my Tamil Net 99 keyboard. Not only street dogs escaped from tsunami attack. Also other animals too escaped from tsunami. They are already sensed about earth quake and after the tsunami hit. But only who have claim having sixth sense is are badly affected by tsunami. Why? That is a BIG Question? You can googling this word without quotes “animals escaped from tsunami”. You will find the truth about our capability. The reason is human can’t sense below 20Hz infra waves and above 20Khz ultra wave forms. While earthquake two types of waves are traveling around the globe. The waves are named P wave and S wave. Both waves are lower than 20Hz.

Moreover in USA a project called Pet Quake is on going for Predicting Earthquakes by Tracking Strange or Atypical Animal Form. The site is http://www.petquake.org/ . The truth is about out current capability is we can’t predict the next coming earth quake. Only able to act after the earth quake. But the quake already made severe damage to us. That’s is right situation.

What a shame? I don’t know why your name was edited by Mr. Narasimhan Raghavan? This name is much worst than an anony name? But I can able to understand your real intension about the question and not bother about you. My aim only who have reading this text are must aware about the issue. That’s all.

With love and care,
~Muhammad Ismail .H, PHD.,

dondu(#11168674346665545885) said...

முகம்மது இஸ்மாயில் அவர்களே,

நான் பெயரை சென்சார் செய்ய வேண்டியதன் காரணமே, அது "எனது நாயின் பெயர் xxxx xxx" என்று இருந்ததே காரணம். அதுவும் பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்றவரின் பெயர் இதில் இழுக்கப்பட்டிருந்தது.

சுனாமி, நிலநடுக்கம் ஆகியவற்றை ஐந்தறிவு உயிர்கள் முன்கூட்டியே உணர்ந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் என்பதை ஏற்கனவே நான் படித்தவன். அந்த செய்திக்காக இப்பின்னூட்டத்தை இடவேண்டியதாயிற்று. அதே சமயம் பெயரையும் தணிக்கை செய்ய வேண்டியதாயிற்று.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//நான் பெயரை சென்சார் செய்ய வேண்டியதன் காரணமே, அது "எனது நாயின் பெயர் xxxx xxx" என்று இருந்ததே காரணம். அதுவும் பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்றவரின் பெயர் இதில் இழுக்கப்பட்டிருந்தது.//

நன்றி! நன்றி!

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது