பாலா:
1. சாதி வெறி பிடித்து அலையும் உயர் சாதி திராவிடர்கள்,ஆயிரம் ஆண்டுகளாக ஆதிக்க சக்திகளாக அரசு,மற்றும் நில புலன்,வியாபாரம் என்று எல்லா துறைகளிலும் முன்னணியில் இருந்தார்கள்.இருந்தும் கூட தங்களை பிற்படுத்தப்பட்டவர்கள்/ஒடுக்கப்பட்டவர்கள் என்று வெட்கமில்லாமல் கூறிக் கொள்வது அரசியலுக்காகவா அல்லது இந்த மூஞ்சிகள் உண்மையிலேயே மிகவும் கீழ்த்தரமான,அறிவே இல்லாத காட்டுமிரண்டி கும்பலா?
பதில்: உண்மையிலேயே வெட்கக்கேடுதான். வன்கொடுமைகள் எல்லாம் இன்னும் செய்து கொண்டு, அதே சமயம் தங்களை பிற்படுத்தப்பட்ட சாதியினர் எனக் கூறிக் கொண்டு பல சலுகைகளையும் கேட்பவர்கள் அனேகம். கூர்ந்து பார்த்தால் வலங்கையினர் இடங்கையினர் என்றெல்லாம் பாகுபாடு கொண்டு பல நூற்றாண்டுகளாகவே சாதிக் கொடுமை செய்திருக்கிறார்கள். பிரபஞ்சன் அவர்களது 'மானுடம் வெல்லும்' புதினத்தில் இவை நன்றாகக் கையாளப்பட்டுள்ளன. ஆனந்தரங்கம் பிள்ளை என்னும் பிரெஞ்சு <> தமிழ் மொழிபெயர்ப்பாளரது (துபாஷ்) நாட்குறிப்பில் அக்காலக் கட்டத்தில் நேரடியாகக் குறிக்கப்பட்ட குறிப்புகள் சுவாரசியமாகவே உள்ளன. அப்புத்தகத்தை இப்போது மறுவாசிப்பு செய்து வருகிறேன். சீக்கிரம் ஒரு பதிவு போடுகிறேன்.
வால்பையன்
அரசியல் கேள்விகள்
1.இடது சாரி, வலது சாரிகளுக்கு உள்ள வேறுபாடு என்ன? அவர்களின் முக்கிய கொள்கைகள் என்ன?
பதில்: "இடதுசாரிகள்" என்றால் சோஷலிச சிந்தனைக்காரர்கள் என்றும் "வலதுசாரிகள்" என்பவர்கள் கன்சர்வேடிவ்கள் என்றும் பொருள் கொள்ளப்படுகிறது.
விக்கிபீடியாவில் அவை இவ்வாறு கூறப்படுகின்றன.
இடது சாரியினர்
வலது சாரியினர்
1789-ல் பிரெஞ்சு புரட்சிக் காலத்தில் தேசீய பாராளுமன்றத்தில் பொதுமக்களின் பிரதிநிதிகள் சபாநாயகரின் இடப்பக்கத்திலும் பிரபுக்களின் பிரதிநிதிகள் சபாநாயகரின் வலப்புறத்திலும் அமர்ந்தனர். ஆகவே அவர்கள் முறையே இடதுசாரிகள் மற்றும் வலதுசாரிகள் என்றும் அறியப்பட்டனர். இந்தியாவில் சாதாரணமாக ஆளும் கட்சிகள் வலப்புறத்திலும் எதிர்க்கட்சிகள் இடப்புறத்திலும் அமர்வர். மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் அப்படிப் பார்த்தால் இடதுசாரிகள் வலதுசாரிகளே. என்ன தலை சுற்றுகிறதா?
2.முந்தைய ஜெ ஆட்சி, இப்போதைய கருணாநிதி ஆட்சி, வேறுபாடு என்ன?
பதில்: ஊழல், பத்திரிகைகளை பயமுறுத்துவது, அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றில் ஒரு வேறுபாடும் இல்லை. ஒரே ஒரு வேறுபாடு தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்துவதின் அணுகுமுறையில் மட்டும் உள்ளது. அதில் ஜெயலலிதா கலைஞரை விட ரொம்பவுமே அதிகச் சிறப்பாகவே செயல்படுகிறார்.
3.குடும்ப அரசியலை விமர்சிக்கும் விஜயகாந்த் தன் மனைவியை முன்னிறுத்துவது ஏன்?
பதில்: ஊரோடு ஒட்டி வாழ் என்னும் கோட்பாட்டினால்தான். :))
மொக்கை கேள்விகள்
1.அனைவரையும் கவருவது போல் தலைப்பு வைப்பது எப்படி?
தமிழ் வலைப்பூக்களில் வரும் தலைப்புகள் மாதிரி வைக்கலாமே. என்ன, சற்றே படிப்பவர்களின் ஆவலைத் தூண்ட வேண்டும்.
நான் அம்மாதிரி வைத்த சில தலைப்புகள்: 'சோவும் மோடியும்' 'எம்ஜிஆருக்கும் எனக்கும் என்ன பிரச்சினை'? 'நபியில்லாமல் டோண்டு இல்லை', 'சரோஜாதேவி புத்தகங்களும் இன்னும் பிற இலக்கியங்களும்', 'கலைஞர் செய்வது சரியே, அதை நான் ஆதரிக்கிறேன்','நான் அமெரிக்க ஆதரவாளன்','கள்ளா வா புலியைக் குத்து' 'டோண்டு ராகவன் தமிழ்மணத்தை விட்டு விலகுவானா,' 'மச்சமச்சினியே,'ஆகியவை.
2.உங்களுக்கு பைக் ஓட்ட தெரியுமா? சின்ன வயதில் எந்த பைக் உங்களுக்கு மிகவும் பிடிக்கும்?
நான் ஓட்டிய டூ வீலர்கள் எல்லாம் சைக்கிள்களே. ஸ்கூட்டரோ பைக்கோ ஓட்டத் தெரியவே தெரியாது. ஒரே முறை ஸ்கூட்டர் ஓட்டிய அனுபவம் உண்டு. அது பற்றியும் எழுதியுள்ளேன்.
3.கிரிக்கெட் ஜென்டில்மேன் விளையாட்டா அல்லது பணம் காய்க்கும் விளையாட்டா?
பதில்: பணம் காய்க்கும் விளையாட்டாக மாறிப் போனதால் ஜெண்டில்மேன் விளையாட்டு என அழைக்கப்படும் தகுதியை அது இழந்து விட்டது.
எல்.எல்.தாசு:
1. 16/03/08 துக்ளக் முதல் பக்கத்தில் சோ ..
கனகசபை (அர்த்த மண்டபம்)யில் நின்று , தீட்சிதர்கள் தினமும் பூஜையில் ஒரு பகுதியாக தேவாரம் இசைத்துதான் வருகிறார்கள். அதே பத்திரிகையில் 8 ஆம் பக்கத்தில் ...
கோவிலில் கனகசபை தவிர எங்கு வேண்டுமானாலும் பக்தர்கள் தேவாரம் , திருவாசகம் பாட எந்த தடையும் இல்லை. பிறகு ஏன் பிரச்சினை?
பதில்: முதலில் கூறியது சோவின் தலையங்கம், இரண்டாவது இதயா என்பவரது ரிப்போர்ட். இருப்பினும் இரண்டிற்கும் நடுவில் ஒரு முரண்பாடும இல்லை. தேவாரம், திருவாசகத்தை தீட்சிதர்களே கனகசபையில் பாடுகிறார்கள், அதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதிலும் கல்யாணம் ஆன தீட்சிதர்களுக்குத்தான் அந்த உரிமை. கிராப் வைத்துள்ள தீட்சிதர்களுக்கும் அனுமதி இல்லை. மற்றப்படி பக்தர்கள் (தீட்சிதர் அல்லாதவர்கள் என்றுதான் இங்கு பொருள் கொள்ளவேண்டும்) கனகசபை தவிர மீதி எல்லா இடங்களிலிருந்தும் பாடலாம். கனகசபையில் ஆறுமுகசாமியை பாடவைத்தது அரசின் அடாவடிச் செயல். இவ்வாறு செயல்படும் அரசு இசுலாமியர் ஒருவர் மசூதிகளில் தமிழில் பாடுவேன் என்றால் அக்கோரிக்கையை நிறைவேற்றுமா? அவ்வாறே பாடிய பலர் தேவார வார்த்தைகள் தெரியாது பேப்பர் வைத்து பாடியதையும் வார்த்தைகளை முழுங்கியதையும் பற்றி கூடத்தான் அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சும்மா ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பது போல அரசு நடந்து வருகிறது. அந்த அரசை நடத்துபவர் ஹிந்து என்றால் திருடன் என்று கூறினார். அப்படியானால் அவரும் ஹிந்துதானே என்று மட்டும் கேட்டு நிறுத்துகிறேன். பகுத்தறிவாளர்கள் மேலே கூறட்டும்
சர்வேசன்:
1. இந்த கேள்விகளில் எத்தனை மற்றவர்களிடமிருந்து பெறப்பட்டது. எத்தனை, தனக்குத்-தானே அடிப்படையில் உங்களை நீங்களே கேட்டுக் கொள்வது? :)
பதில்:
உண்மையான பதில் இது வரைக்கும் எல்லா கேள்விகளுமே மற்றவர் கேட்டதுதான் என்பதே. ஆகவேதான் வரப்போகும் வாரத்துக்கான கேள்விகள் முதலிலேயே வெளியிடப்படுகின்றன. உங்களது இக்கேள்வியும் அப்படித்தான். கூறுபவர்களுக்கு என்ன, விட்டால் சர்வேசன்தான் டோண்டு என்றும் கூறலாம். அதியமான் டோண்டு ராகவனே என்று ஒரு கோஷ்டி கூறிக்கொண்டு திரிந்தது. என்ன ஆயிற்று?
எல்.எல். தாசு:
1) சில மேல்நாட்டு பெயர்களை தமிழ் சிறப்பெழுத்து 'ழ'வுடன் தொடங்குகிறார்களே. அது எப்படி சரியான மொழிபெயர்ப்பாகும்?
பதில்: Jeanne, Jean, Janvier முதலிய பெயர்களை ழான்ன், ழான், ழான்வியே என்றெல்லாம் உச்சரிப்பார்கள். அதிலும் முதலில் இருக்கும் எழுத்தின் ஒலி 'ழ'வும் 'ஜ'வும் கலந்த ஒலி. அதை நாம் வடிவுக்கு கொண்டுவர இயலாததால்தான் வெறுமனே ழ போடுவோம்.
இப்படித்தான் சாதாரணமாக Hoechst என்னும் பெயரை ஹெக்ஸ்ட் என்று கூறுமாறு அந்த கம்பெனியே விளம்பரம் செய்தது. ஏனெனில் ஒவ்வொருத்தர் அதை ஹோக்கஸ்ட், ஹோச்சஸ்ட் என்றெல்லாம் உச்சரித்து பிராணனை வாங்கினார்கள். 'ஆகவே ஐயா சாமி ஹெக்ஸ்ட்' என்றாவது கூறுங்கள் என்று கெஞ்ச வேண்டியதாயிற்று. மற்றப்படி அவ்வார்த்தையின் உச்சரிப்பை தமிழில் எழுதுவது கடினம். இருந்தாலும் முயற்சிக்கிறேன். Hoechst-ல் வரும் oe-ஐ o என்று உச்சரித்து அப்படியே e-ஐயும் சேர்த்து கூற வேண்டும். என் போன்ற கூட்டாளிகள் ஒரு நிமிடமும் தயங்காமல் கூற இயலும். சுமாராக ஹோயிக்ஸ்ட் என்பது போல வரும். நான் அக்கம்பெனிக்கு சென்றபோது அக்கம்பெனி நிர்வாகி ஒருவரிடம் (அவர் ஜெர்மானியர்) நான் அவ்வாறே உச்சரிக்க, அருகில் இருந்த இந்திய அதிகாரி என்னை ஹெக்ஸ்ட் என்று கூறுமாறு திருத்தி மேலே குறிப்பிட்ட கம்பெனி விளம்பரத்தைப் பற்றியும் கூறினார். நான் அதற்கு மேலே சொன்ன ஜெர்மன் மொழியின் உச்சரிப்பு விதிகளை பற்றி பேசி அவர் கூறியதுபோல சொல்ல ஏலாது என்று மறுத்துவிட, ஜெர்மானியர் நான் கூறியதை இந்திய அதிகாரியிடம் உறுதி செய்தார். அது சரி, Hoechst அல்லது Höchst என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? அது Hoch Höher Höchst (High Higher Highest) என்று வரும் டிக்ரீஸ் ஆஃப் கம்பேரிசனில் வருகிறது.
இன்னொரு விஷயம், நீங்கள் கூறுவதுபோல ழான்ன் என்றெல்லாம் உச்சரிப்பதோ எழுதுவதோ மொழிபெயர்ப்பு அல்ல, அது ஒரு மொழி சொல்லை உச்சரிப்பது பற்றிய விஷயம். தமிழில் ழான்ன் என்று எழுதுவதை Transliteration என்று கூற வேண்டும்.
2) ஒவ்வொரு பெயர்சொல்லையும் அதன் உரிமையாளர் உச்சரிப்பது போல் உச்சரிக்கவேண்டும் . உ.தா திருவல்லிக்கேணியை ட்ரிப்ளிக்கேன் என அவன் உச்சரிக்க முடியாமல் சொன்னான். ஆனால் நாம் ஏன் 'இங்லீஷ்' என்ற பெயர்சொல்லை ஆங்கிலம் என மொழிபெயர்த்துள்ளோம்.
இதற்கு ஒரு பெரிய பாரம்பரியமே உண்டு. இங்லீஷை ஆங்லே என்று பிரெஞ்சுக்காரரும், இங்லேஸ என்று இத்தாலியரும் கூறுவர். அதாவது வேற்றுமொழிச் சொல்லை இன்னொருவர் தம் தாய்மொழியில் கூறும்போதோ எழுதும்போதோ அந்த தாய்மொழியின் விதிகளுக்குட்படுத்துதால் உலகளாவிய செயல். நான் போய் ஜெர்மன் மொழியை உங்களிடம் டாய்ட்ச் என்று கூறினால், 'வந்துட்டாண்டா அல்டி மயிராண்டி, இவனுக்கு ஜெர்மன் தெரியுங்கறதை சொல்லறதை எப்போத்தான் நிறுத்தப் போறானோ' என்று நீங்கள் நினைத்தால் நான் உங்களிடம் தவறு காண இயலாது. (விஷயம் என்னவென்றால் சமீபத்தில் 1969-ல் ஜெர்மன் படிக்க ஆரம்பித்தபோது அவ்வாறு கூற நான் சொன்ன அதே நீதிக்கதையை கூறி உதை வாங்கிய என் நண்பன் ஆர்.எஸ். ராமநாதன் அப்படித்தான் சொன்னான்). அதே போலத்தான் ம்யூனிக்கை ம்யுன்ஷன் என்று கூறுவதும். ஆனால் Hoechst-ஐ மட்டும் சரியாகத்தான் உச்சரிப்பேன். ஏன்? அதுதான் டோண்டு ராகவனின் முரண்பாடு. அதேபோல Volkswagen-ஐ வோக்ஸ்வாகன் என்று கூற மாட்டேன் ஃபோக்ஸ்வாகென் என்றுதான் கூறுவேன் (மக்கள் கார்). ஓக்கே?
Triplicane என்றதும் எனது இந்தப் பதிவின் பின்னூட்டம் ஞாபகத்துக்கு வருகிறது. CPWD-ல் பில்கள் அனுப்பும்போது கவரிங் லெட்டர் என்பதன் வாசகங்கள் ஒரு டெம்பிளேட் போல மனதில் அமைந்து விட்டன. உதாரணத்துக்கு: Please find herewith enclosed in triplicate, the cc3 and final bill for the work of .... (cc --> contractor current) என்று வாசகம் ஆரம்பிக்கும். பிறகு என்னென்ன இணைத்துள்ளோம் என்றெல்லாம் எழுதி அனுப்ப வேண்டும். இதிலும் ஒரு குறும்பு செய்தேன். அதாவது, மேலே கூறிய வாசகத்தை இவ்வாறு மாற்றினேன்: Please find herewith enclosed in triplicane, the cc3 and final bill for the work of .... என்று மாற்றினேன். அவ்வாறு பல பில்கள் சென்றிருக்கின்றன. ஒரு தடவை கூட ஏண்டா பாவி இப்படியெல்லாம் படுத்துகிறாய் என்று என்னை யாருமே கேட்கவில்லை. பிறகு பல ஆண்டுகள் கழித்து சம்பந்தப்பட்ட கிளர்க்கிடம் இதை கேட்க, அவர் கூறினார், "சார் எனக்கு இது முதலிலேயே கண்ணில் பட்டது, ஆனால் ராகவன் சார் தப்பாக எழுத மாட்டார், ஆகவே எனக்குத்தான் தெரியவில்லை என விட்டு விட்டேன்" என்று கூற. நான் கொஞ்சம் ஃபீலிங்ஸாகி விட்டேன். அது ஒரு தமாஷ் காலம்.
செந்தழல் ரவி:
1. இதுவரை வாழ்க்கையில் எதையாவது சாதித்ததாக எண்ணுகிறீர்களா? அப்படி என்றால் அதில் முதலில் நிற்கும் சாதனை எது?
பதில்: ஒவ்வொரு மனிதனுக்கும் வேலையிலிருந்து ஓய்வு பெறுவது என்பது டென்ஷனை வரவழிக்கும் விஷயமே. அது பற்றி நான் இப்பதிவிலும் எழுதியுள்ளேன். இப்போது சுயமாக மொழிபெயர்ப்பு வேலைகள் எடுத்து செய்வதால் அந்த ஓய்வு என்பது என் வாழ்க்கையில் இப்போதைக்கு இல்லை. அதுதான் என் வாழ்க்கையில் நான் செய்த பெரிய சாதனை.
கடைசி நிமிடம் வரை வேலை செய்ய வேண்டும். கடைசி மொழிபெயர்ப்பை அதன் பில்லுடன் சேர்த்து மின்னஞ்சல் மூலம் அனுப்பிய பிறகு தட்டச்சு பலகை மீது விழுந்து பிராணன் போவதுதான் என்னைப் பொருத்தவரை உயர்ந்த சாவு. சங்கராபரணம் சங்கர சாஸ்திரிகள் பாடல் மேடையில் உயிர் விட்டது இன்றும் என் கண்ணுக்குள்ளேயே உள்ளது.
2. தமிழ் சமுதாயத்துக்கு இதுவரையில் நீங்கள் செய்த பெரிய தொண்டு என்ன? தானம் தருமம் செய்வதில் ஆர்வம் உண்டா?
பதில்: ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லைதான். தான தர்மம் செய்வதில் ஆர்வமேல்லாம் இதுவரை இல்லை.
3. இளமைப்பருவத்தில் காதலித்ததுண்டா? யாரை? அந்த கதையை சொல்லமுடியுமா?
பதில்: சமீபத்தில் 1953-லிருந்து நான் எனக்காக நிச்சயம் செய்து கொண்ட பெண்ணை காதலிக்க ஆரம்பித்தேன். எனக்கு வயது 7 அவளுக்கு 4. பிறகு 21 ஆண்டுகள் கழித்து அவளையே கல்யாணம் செய்து கொண்டு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் மறுபடியும் அவளைத் திருமணம் புரிந்து கொண்டேன். எங்கள் பக்கத்தில் அதை சஷ்டியப்தபூர்த்தி (மணிவிழா) என்பார்கள்.
4. மோடியை நேரில் சந்தித்தால் என்ன கேட்பீர்கள்?
சென்னைக்கு வந்தால் அவருக்காக மொழிபெயர்க்கும் வாய்ப்பை கேட்பேன். அதுவும் துக்ளக் ஆண்டுவிழா பொதுக்கூட்டத்தில் குருமூர்த்தி அவர்கள் மோடிக்கு மொழிபெயர்ப்பை செய்ததைப் பார்த்ததும் இதுதான் தோன்றியது. குருமூர்த்தி அவரிடம் ஆங்கிலத்தில்தான் பேசியிருப்பார் என நினைக்கிறேன். நான் அவரிடம் ஹிந்தியில் பேசியிருந்திருப்பேன்.
5. தமிழ்மணத்தில் எழுத வரவில்லை என்றால் என்ன செய்துகொண்டிருப்பீர்கள்?
பதில்: தமிழ்மணம் என்பது ஒரு திரட்டி மட்டுமே. அதில் எழுதுவது என்ற எண்ணமே உண்மைக்கு புறம்பானது. நான் எழுதும் பதிவுகள் அதனால் திரட்டப்படுகின்றன அவ்வளவே.
6. கொலைவெறியோடு பின்னூட்டம் போட்டுத்திரியும் பாலா என்பவர் யார்?
பதில்: தெரியாது.
அனானி (விக்ரம் பெயரில் வந்தவர்)
1) பொருளாதாரம் பற்றிய விழிப்புணர்வு தொடர் நீங்கள் ஆரம்பித்தால் என்ன?
பதில்: அவ்வளவு அறிவு எனக்கில்லை என்றுதான் நான் நினைக்கிறேன்.
2) www.dondu.com தளம் ஆரம்பிக்கும் எண்ணம் உண்டா?
பதில்: இல்லை.
3) உங்களை திராவிடம் பேசுபவர்கள் அடிக்கடி கருத்து தாக்குதல் நடத்துவது ஏன்? அப்படி என்ன செய்துவிட்டீர்கள்?
பதில்: சாதாரணமாக பார்ப்பனர்கள் தாக்கப்பட்டால் பதில் கூறாது நகர்ந்து விடுவார்கள். தங்களைப் பார்த்து பயந்துதான் அவ்வாறு செல்கிறார்கள் என்று இவர்களும் சந்தோஷப்பட்டு கொள்வார்கள். முதன் முறையாக நான் வந்து 'ஆ ஊ என்றால் பாப்பானை குறை சொன்னால் இந்த பாப்பான் வந்து கேட்பான்' என்று நான் எதிர்த்து நிற்பதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கும் என நினைக்கிறேன்.
அருண்
1. 'சோ' அவர்களுக்கு பிறகு துக்ளக் நாளேடு எப்படி இருக்கும். நானும் சோ வின் விசிறி தான். அதனால் தான் கவலையோடு இந்த கேள்வியை கேட்கிறேன்?
பதில்: கல்கி போனப்புறமும் கல்கி இருக்கிறதே. துக்ளக்குக்கும் யாராவது வராது போய்விடுவார்களா என்ன?
2. நீங்கள் ஏன் நல்ல ஆங்கில புதினங்களை தமிழில் மொழி பெயர்க்க கூடாது? பணம் அதிகமாக வராது என்பது மட்டும்தான் காரணமா?
பதில்: அதிகமாக வராதா? ஒருவரும் என்னை கமிஷன் செய்யாமல் நான் பாட்டுக்கு ஆங்கில புதினங்களை மொழிபெயர்த்தால் பணம் வரவே வராது ஐயா. அப்படியே பணம் வந்தாலும் கொஞ்சமாகத்தான் வரும் என்பது பற்றி எனது ஜெயா டி.வி. பேட்டியிலேயே இது பற்றி பேசியுள்ளேன். இது முதல் பகுதி. மொத்தம் நான்கு பகுதிகள் உள்ளன.
அனானி (24.03.2008-ல் கேள்வி கேட்டவர்)
1. பெண்களைக் கவருவது எப்படி?
பதில்: சமீபத்தில் 1954-ல் வந்த மிஸ்ஸியம்மா படத்தில் எனது அபிமான நடிகர் ஜெமினி கணேசன் வாயசைக்க ஏ.எம். ராஜா பாடுவதையே இங்கு பதிலாக வைக்கிறேன்.
முடியும் என்றால் படியாது
படியும் என்றால் முடியாது
வஞ்சியரின் வார்த்தையிலே
அர்த்தமே வேறுதான்
அர்த்தமெல்லாம் வேறுதான்
அகராதியும் வேறுதான்.
அலுக்குக் குலுக்கி ஒதுங்கி நின்றால்
அருகில் ஓடி வாரும் என்றே
வலியப் பேசி வாரும் என்றால்
வந்த வழியைப் பாரும்- என்றே
வஞ்சியரின் வார்த்தையிலே
அர்த்தமே வேறுதான்
அர்த்தமெல்லாம் வேறுதான்
அகராதியும் வேறுதான்.
Indian
1. நேபாள மக்களின் உரிமைக்காக சமீபத்துல பொங்கியெழுந்து சென்னையில் போராட்டம் நடத்தின அசுரன், தியாகு, ஸ்டாலின் வகையறாக்கள் திபெத் விவகாரத்துல கள்ள மவுனம் சாதிப்பதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? (என்னதான் 'முதலாளித்துவ' சீனாவை எதிர்க்கிறோம் என்று பீலா விட்டாலும் பூனைக்குட்டி வெளியே வந்திடுச்சே)?
பதில்: 1962-ல் இந்தியாதான் சீனாவைத் தாக்கியது என்று கூறும் புண்ணியவான்கள் வேறு எப்படி ரியேக்ட் செய்வார்கள் என எதிர்ப்பார்க்கிறீர்கள்? இந்த அழகில் அமெரிக்கா இதை பற்றி பேச ஆட்சேபம் தெரிவிப்பது இதே கம்யூனிஸ்டுகள்தான்.
வேல்பாண்டி:
1. பெரியாரின் பூணூல் அறுப்பு மற்றும் கொண்டை அறுப்பு போராட்டத்துக்கு பிராமணர்கள் எவ்விதம் எதிர்ப்பு தெரிவித்தார்கள்?
பதில்: பெரியாரின் இச்செயல்பாடுகளெல்லாம் தனியாக மாட்டிக் கொண்ட சில நோஞ்சான் பார்ப்பனர்களிடம்தாம் நடந்தது. மற்றப்படி ரொம்ப பரவியதாக நினைவில்லை. யாருக்காவது இதற்கு மாற்று கருத்து இருந்தால் கூறலாம். நானும் தெரிந்து கொள்வேன்.
2. காஞ்சி சங்கர மட கொலை வழக்கில் உங்கள் "தீர்ப்பு" எப்படி இருக்கும்?
பதில்: கேஸ் விவரங்கள் சரிவரத் தெரியவில்லை. ஆகவே கருத்து கூறுவதற்கில்லை.
3. காஞ்சி ஜெயேந்திரர் பற்றி சில வார்த்தைகள்...
பதில்: நேர்மையானவராக இருந்தால் மட்டும் போதாது அவ்வாறு இருக்கும் தோற்றமும் அளிக்க வேண்டும் என்று உயர் பொறுப்பில் உள்ளவர்களைப் பற்றி கூறுவார்கள். அக்கருத்தின்படி பார்த்தால் ஜெயேந்திரர் தேறவில்லை என்றுதான் கூறவேண்டும். சந்தேகம் அவர்பேரில் அழுத்தமாகவே விழுந்துள்ளது. கேஸ் நடந்து முடிந்தால்தான் தெளிவு பிறக்கும். மூன்று ஆண்டுகள் கடந்த நிலையிலும் தெளிவு இல்லாமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானதே.
4. அப்துல் கலாம் - பிரதீபா பட்டீல் ஒப்பிடுக.
பதில்: இதை விட அப்துல் கலாமை யாராவது அவமானப்படுத்த இயலுமா?
எம்.கண்ணன், பாங்காக்
1. 108 திவ்யதேசங்களில் எத்தனை திவ்யதேசங்களுக்குச் சென்றுள்ளீர்கள் ? தரிசனம் செய்துள்ளீர்கள் ? ஏதாவது இண்டரஸ்டிங் அனுபவம்?
பதில்: கிட்டத்தட்ட 90 திவ்யதேசங்கள் பார்த்திருப்பேன் என நினைக்கிறேன். அவற்றில் ஒன்றுதான் தென்திருப்பேரை. என் வீட்டம்மா என்னை விட அதிகம் பார்த்திருப்பார். மலை நாட்டு திருப்பதிகள், நைமிசாரண்யம், முக்திநாத் ஆகிய தலங்களைப் பார்க்க வேண்டும்.
2. நரசிம்மம் என்பதை ந்ருசிம் 'ந்' எழுத்தில் துவங்குகிறார்களே சிலர்? ஏன்? (சமஸ்கிருதம் மட்டும் காரணமாக இருக்காது என நினைக்கிறேன்)
பதில்: நரசிம்மஹ, நாரசிம்மஹ, ந்ருசிம்மஹ ஆகிய மூன்று முறைகளிலும் இப்பெயரைக் கூறலாம். எல்லாவற்றுக்கும் ஒரே பொருள்தான். சுலோகங்களில் வரும்போது யாப்பு, சந்தி, எதுகை, மாத்திரை ஆகிய தேவைகளுக்கேற்ப வெர்ஷன்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். ஆக வடமொழியின் இலக்கணத் தேவைகளே இதற்கு காரணம் என்றெல்லாம் என்னிடம் கூறியவர் சென்னை பல்கலைக்கழக வைஷ்ணவத் துறையின் தலைவர் டாக்டர் வி.கே.எஸ்.என். ராகவன் அவர்கள்.
3. எந்தெந்த வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கிறீர்கள் ? சுவையான அனுபவம்?
(இதுவரை செல்லவில்லையெனில் - எந்த நாடுகளுக்குச் செல்ல விருப்பம்? ஏன்)
பதில்: பாஸ்போர்ட்டே இல்லாத நிலையில் எங்கு போவது? அப்படியே கிடைத்தாலும் வெளிநாட்டு பயணங்களில் மோகம் ஒன்றும் இல்லை. என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில் என்றிருப்பதே சுகமாக இருக்கிறது. அமெரிக்காவோ, பிரிட்டனோ, பிரான்ஸோ, ஜெர்மனியோ எந்த நாடாக இருந்தாலும் அங்கு தினசரி வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதை என்னால் கற்பனை செய்ய முடிகிறது. அது ஒன்றும் விரும்பத்தக்கதாக இல்லை.
அப்படியும் நான் போக வேண்டும் என்று விரும்பும் நாடு ஒன்றே ஒன்றுதான். அதுதான் இஸ்ரேல். இஸ்ரவேலர்களிடம் எனக்கு இருக்கும் ஈடுபாட்டை ஒரு பூர்வ ஜன்ம பந்தமாகவே பார்க்கிறேன்.
4. வாழ்க்கையில் இன்னும் அடையவேண்டிய லட்சியம் ஏதாவது உண்டா?
பதில்: மொழிபெயர்ப்பு துறையில் செய்ய வேண்டியவை ஏராளம்.
5. விவேக்- வடிவேலுக்குப் பிறகு யாரும் பெரிய நகைச்சுவை நடிகர்கள் வரவில்லையே ஏன்?
பதில்: வருவார்கள். லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வருவார்கள்.
அனானி1 (26.03.08 அன்று கேட்டவர்)
1. ப்ளாக்கர்களில் மிக அருமையாக எழுதக்கூடியவர் என்று யார் யாரை கருதுகிறீர்கள்?
பதில்: மா.சிவக்குமார், பத்ரி, ஜெயமோகன், பா.ராகவன், நேசமுடன் வெங்கடேஷ், என்றென்றும் அன்புடன் பாலா
2. dogma என்பதற்கான சரியான தமிழ் வார்த்தை என்ன?
பதில்: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக அருங்கலைச்சொல் அகரமுதலியில் கொடுக்கப்பட்ட பொருள்கள்: உறுதிக் கோட்பாடு, வறட்டியம். மொண்டித்தனம் என்றும் கூறலாம். நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள்தான் என்று கூறுவதையும் இதில் சேர்க்கலாம்.
Vajra
1. வலைப்பதிவுகளால் தமிழ் ஊடகத்திற்கு என்ன நன்மை?
பதில்: பலருக்கு எழுத வாய்ப்பளிக்கிறது. ஆகவே புதிய எழுத்தாளர்கள் வருபவார்கள். அதுதான் நன்மை.
2. ஆங்கில வலைப்பதிவுகள் அச்சு ஊடகங்கள், தொலைக்காட்சி ஊடகங்களுடன் போட்டி போட்டுக்கொண்டு மக்களை அடைவது போல், தமிழ் வலைப்பதிவுகள் இருப்பதில்லையே. என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?
பதில்: இப்போதைக்கு இல்லைதான். ஆனால் பின்னால் நிலைமை சீராகும் என்ற நம்பிக்கை உண்டு.
3. அச்சு ஊடகங்கள் அதிகப்படியான left of centre கண்ணோட்டத்தையே கொண்டவையாக இருப்பதாக என் எண்ணம்? தங்கள் கருத்து?
பதில்:
என் கருத்தும் அதுவேதான். எல்லோரையும் பணக்காரர்களாக ஆக்குவதை விட எல்லோரையும் ஏழைகளாக ஆக்குவது எளிது என்ற சோஷலிச கோட்பாடே பணக்காரர்களை பார்த்து பொறாமைப்பட மட்டும் ஊக்குவிக்கிறது. ஜெமினி வாசன் எடுத்த படங்களில் ஏழைகள் எல்லோரும் நல்லவர்கள், பணக்காரர்கள் கெட்டவர்கள் என்ற கருப்பு வெளுப்பு சிந்தனைதான் மேலோங்கி நிற்கும். ஆனால் வாசன் பெரிய பணக்காரரே, அதுவும் இம்மாதிரியான படங்கள் எடுத்தே அவர் மேலும் பணக்காரர் ஆனார். அதே லாஜிக்கால்தான் அச்சு ஊடகங்கள் இடது சாரி சிந்தனைகளில் உள்ளன.
அனானி2 (26.03.2008 அன்று கேட்டவர்)
(கடலோர பகுதிகளிலும், கடற்கரைகளிலும் பொது மக்களை எச்சரிக்க (Public Address System) எதுவும் நிறுவபடாமலே இருக்கும்போது, ஹைதிராபாத்தில் ஒரு காலி பில்டிங்கை திறந்துவைத்துவிட்டு சுனாமி எச்சரிக்கை சிஸ்டெம் நிருவிவிட்டதாக பொய் சொல்லிக்கொண்டு திரிகிறது இந்திய அரசு).
கேள்விகளுக்கு வருகிறேன்..
1. இந்தியாவுக்கு சுனாமி எச்சரிக்கை சிஸ்டம் எப்போது நிறுவப்படும் ? (உண்மையான எச்சரிக்கை செய்யும் சிஸ்டமாக இருக்க வேண்டும், பொது மக்களை உடனடியாக எச்சரிக்கை செய்யும் அளவுக்கு திறன் இருக்க வேண்டும்)
பதில்: அம்மாதிரி எச்சரிக்கை அளிக்கும் ஏற்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும்? கண்டிப்பாக கடலே இல்லாத ஹைதராபாத்தில் காலிக் கட்டிடமெல்லாம் இதில் சேராது. வேறு எப்படி இருக்க வேண்டும்?
ஒரு சிறு கற்பனை செய்வோமா? பூகம்பம் 7 ரிக்டர்களுக்கு மேல் போனால், சுனாமி வரும் சாத்தியக்கூறு அதிகரிக்கிறது. கடைசியாக வந்த சுனாமி நிலநடுக்கம் வந்த ஓரிரு மணி நேரத்தில் வந்தது. அப்போதும் தகவல் கொடுக்க முயன்றிருக்கிறார்கள். ஆனால் அந்த நேரத்தில் எச்சரிக்கையை சீரியசாக எடுத்து துடியாகச் செயல்பட வேண்டிய யாருமே டியூட்டியில் இல்லை. பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற நிலைமைதான்.
ஆகவே இதற்காக எச்சரிக்கை மையம் ஒன்றை 24 மணி நேர வேலையாக நிறுவ வேண்டும். கடற்கரைகளில் பல இடங்களில் ஒலி பெருக்கிகள் எப்போதும் மின்சார விநியோகம் தடைபடாது இருக்க வேண்டும். சாத்தியக் கூறு விதிகள்படி சுனாமி வரும் வாய்ப்பு ஒன்றின் கீழ் பல ஆயிரங்கள் என்ற கணக்கில் இருக்கும். அப்படியே எல்லாம் அமைத்தாலும் யார் அதையெல்லாம் மானிட்டர் செய்யப் போகிறார்கள்? அவர்களுக்கு யார் சம்பளம் கொடுப்பது? அதுதான் முக்கிய வேலையாக வைப்பது பிராக்டிகலாக இருக்குமா? கொஞ்ச நாளைக்கு வேலை பார்ப்பவர்களாக இருக்கும், பிறகு சுனாமியெல்லாம் வராது என்ற அசட்டையுடன் தமிழ் வலைப்பூக்களை மேயச் செல்ல மாட்டார்களா?
2. இப்படி பொது மக்கள் நலன் பற்றி கவலைபடாமல் இருக்கும் அரசு, அரசியல்வாதிகள் மற்றும் அரசு ஊழியர்கள்/ விஞ்யானிகளுக்கு சம்பளத்தை குறைக்காமல் ஏன் உயர்த்த வேண்டும்?
பதில்: சுனாமி எச்சரிக்கை போன்றவை பலரது ஒருங்கிணைந்த செயலாக்கத்தால்தான் வரும். அதில் தனிப்பட்ட யார்மீதும் பொறுப்பை நிர்ணயிக்க இயலாது. ஆகவே நீங்கள் நினைப்பது கற்பனைக்கு நன்றாக இருப்பினும் நிஜமாகும் சாத்தியக்கூறு குறைவுதான்.
அனானி (Competition is Liberty என்னும் பெயரில்)
1. When will the Monopoly of The Hindu end?
ஹிந்துவின் பலம் சென்னையில் இருக்கும் வரை அப்படித்தான் இருக்கும். நல்ல போட்டி வந்தால் மோனாபிளி நிலைமை மாறிவிடும். அது வரை இழுபறிதான்.
அனானி (26.03.08 அன்று கேள்வி கேட்டவர்)
1. என்ன சார், லக்கிலுக் பதிவை தமிழ்மணத்தை விட்டு தூக்கியிருக்கிறார்கள். நீங்க ஒண்ணுமே சொல்லலையே? உங்களுக்கு ஜெயா டிவி சிடி எல்லாம் கொடுத்த நண்பர் ஆச்சே?
பதில்: அவர் திரும்ப வரவேண்டும் என்று விரும்புவதாலும், நான் ஏதாவது இப்போது கூறப்போக அவ்வாறு நடக்காமல் போகக்கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாலும், இப்போதைக்கு அது பற்றி பேசப்போவதில்லை. எப்படியும் வரும் ஞாயிறன்று அவரை மெரினா கடற்கரை பதிவர் சந்திப்பில் பார்க்கத்தான் போகிறேன். அப்போது நேரில் சில விஷயங்களை வாய்ப்பு கிடைத்தால் அவருடன் விவாதிக்க ஆசை. பிறகு பார்க்கலாம்.
அடுத்த வாரத்துக்கான கேள்விகளை இப்பதிவில் பின்னூட்டமாக இடவும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
என்.கல்யாணராமனுக்கு அ.முத்துலிங்கம் விருது
-
அசோகமித்திரன், பூமணி, பெருமாள் முருகன், தேவிபாரதி ஆகியோருடைய
மொழிபெயர்ப்பாளரான என்.கல்யாணராமனுக்கு விஜயா வாசகர் வட்டம் வழங்கும்
அ.முத்துலிங்கம் விருது 2024...
8 hours ago
40 comments:
1)பூஜை புனஸ்காரங்களில் நம்பிக்கை உண்டா? அதாவது rituals?தினப்படி செய்யும் வழக்கம் உண்டா?
2)Art Of LIving பற்றி உங்கள் கருத்து.?
உங்கள் ஜெயா டிவி பேட்டி பார்த்தேன்.நன்றாக இருந்தது.:)
பாராட்டுக்கு நன்றி ராதா ஸ்ரீராம் அவர்களே. உங்கள் கேள்விகள் அடுத்த கேள்வி பதில் பதிவின் வரைவுக்கு சென்று விட்டன.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இம்புட்டு கேள்வியும் ஒரெ பதிவுல போட்டா, தாவு தீருது படிச்சு முடிக்க..
பல பதில்கள், சுவாரஸ்யம் குறைந்து காணப்படுகின்றன. நறுக்ணு இருக்க முயற்சிக்கவும்.
:)
கேள்வி 1
இனிமேல் வாரத்துக்கு ஒரு பதிவுதான் எழுத திட்டமா? IDPL அனுபவங்கள், முரட்டு வைத்தியமெல்லாம் பரணில் தூக்கி வைத்து விட்டீர்களா? :-(
ஒன்று வேணுமானால் செய்யலாம். பத்து கேள்விகள் சேர்ந்ததும் ஒரு பதிவைப் போடலாம், அதாவது பத்து கேள்விகள் அல்லது வெள்ளிக்கிழமை, எது முதலில் வருகிறதோ. இது எப்படியிருக்கு?
அன்புடன்,
டோண்டு ராகவன்
too much boring.....Many thanks Raja
கலைஞரிடம் பிடித்தது என்ன?
(ஜெ மாதிரி குடும்ப பாசம் என்று சொல்ல வேண்டாம்.)
பத்து கேள்விகள் சரியா வரும்.
ஆனா, அடிக்கடி போட்டாலும், இதன் சாராம்சம் குறைந்து விடும்.
பத்து-நச் கேள்விகள் வாரம் ஒருமுறை ஓ.கே.
என் கேள்வி. இந்த சர்வே முடிவுகள் பற்றி கருத்து என்ன? - http://surveysan.blogspot.com/2008/03/blog-post_20.html
(சுய வெளம்பரம் :) )
மிக அருமையான எழுத்துத் திறமை இருந்தும், வலைப்பதிவுகளில் இருந்து முற்றிலும் விலகி, எழுதுவதையே நிறுத்திவிட்டவர்களில் ஒருவரை மீண்டும் எழுதவேண்டும் என்று நீங்கள் அழைப்பீர்களேயானால் அவர் யாராக இருக்கும்?
என்னை மாதிரி வேலையத்துப் போயி உங்க கேள்வி பதிலை/blog படிக்கும் - comment ஏதும் போடாதவர்களை பற்றி?
நடராஜன்
//ஆகவே இதற்காக எச்சரிக்கை மையம் ஒன்றை 24 மணி நேர வேலையாக நிறுவ வேண்டும். கடற்கரைகளில் பல இடங்களில் ஒலி பெருக்கிகள் எப்போதும் மின்சார விநியோகம் தடைபடாது இருக்க வேண்டும்.//
ஆம் ஆபத்தில் இருந்து தப்ப வேண்டும் என்றால் 24 மணி நேர வேலையாகதான் செய்ய வேண்டும். 24/7 சேவையில் என்ன பிரச்சனை என்று எனக்கு புரியவில்லை.
//சாத்தியக் கூறு விதிகள்படி சுனாமி வரும் வாய்ப்பு ஒன்றின் கீழ் பல ஆயிரங்கள் என்ற கணக்கில் இருக்கும். //
அவ்வளவு குறைவாக இருக்கும் என தோணவில்லை.
For example in South China Sea.
>7.5 magnitude earthquake has 60 % probability of tsunami
>8.0 magnitude earthquake has 70 % probability of tsunami
http://www.hko.gov.hk/publica/reprint/r686.pdf
//அப்படியே எல்லாம் அமைத்தாலும் யார் அதையெல்லாம் மானிட்டர் செய்யப் போகிறார்கள்? // & //சுனாமி எச்சரிக்கை போன்றவை பலரது ஒருங்கிணைந்த செயலாக்கத்தால்தான் வரும். அதில் தனிப்பட்ட யார்மீதும் பொறுப்பை நிர்ணயிக்க இயலாது.//
ஒரு பிரஜையின் உயிரை காப்பது அரசின் அடிப்படை கடமை. அதற்காக தான் அரசை உருவாக்கியுள்ளான் மனிதன்.
//அவர்களுக்கு யார் சம்பளம் கொடுப்பது? //
பிறகு ஏன் பட்ஜெட்டில் 2006-07 மற்றும் 2007-08 க்கும் 95 கோடி மற்றும் 35 கோடி ரூபாய்கள் சுனாமி எச்சரிக்கைக்கு ஒதுக்க வேண்டும்.
http://indiabudget.nic.in/ub2007-08/eb/sbe29.pdf
//அதுதான் முக்கிய வேலையாக வைப்பது பிராக்டிகலாக இருக்குமா? கொஞ்ச நாளைக்கு வேலை பார்ப்பவர்களாக இருக்கும், பிறகு சுனாமியெல்லாம் வராது என்ற அசட்டையுடன் தமிழ் வலைப்பூக்களை மேயச் செல்ல மாட்டார்களா?//
சுனாமி எச்சரிக்கை போல புயல் எச்சரிக்கை வேலைகளும் இவர்கள் பொறுப்பில் உண்டு.
அவர்களுக்கு மற்ற சம்பந்தபட்ட வேலைகளும் கொடுக்கலாம்.
கடலூர் மற்றும் நாகபட்டினத்தில் சில கிராமங்களில் சுனாமி எச்சரிக்கைக்கு Public Address System நிறுவபட்டுள்ளதாக U.N ரிபோர்ட் தெரிவிக்கிறது. இது உண்மையா?
இது பற்றி மேலும் தகவல்கள் இருந்தால் பதிவுலக நண்பர்கள் தெரிவிக்கலாம்.
மற்ற ஊர்களில் Public Address System நிருவமாட்டர்களா ? மற்ற ஊர்களில்/ கடலோர பகுதிகளில் இருப்பவன் எல்லாம் என்ன கேனையா? அவன் உயிருக்கு மதிப்பில்லையா?
1. "Microsoft Encarta" தமிழர்கள் கீழ்சாதி மக்கள் என உள்ளதை பற்றி உங்கள் கருத்து?
2. "Prof. Paul Courtright" என்பவரது புத்தகத்தில் விநாயகர் சொல்ல வியாசர் பாரதம் எழுதியதாக உள்ளதை பற்றி உங்கள் கருத்து?
3. "Microsoft Encarta" சிவபெருமான் பிரும்மதேவரின் பிள்ளை என என உள்ளதை பற்றி உங்கள் கருத்து?
ராகவன் Sir, எனது பெயரை அனானி என்று போடாமல் அருண் என்று போட்டதற்கு நன்றி. துக்ளக் - கல்கி போன்று ஆகும் என்று நான் எண்ணவில்லை.
சுனாமி எச்சரிக்கை பற்றி எனது கருத்து.
பொதுவாகவே நமது கடற்கரைகள் பாதுகாப்பு அற்றதாகவே இருகின்றன.
அதனால் கடற்கரை பாதுகாப்பு மையம் என்று ஒன்றை எல்லா பெரிய கடற்கறையிலும் நிறுவலாம். அவர்களது பணி என்பது சுனாமி எச்சரிக்கை தவிர்த்து ஆபத்து காலங்களில் உதவுதல், கடற்கரை ரோந்து....etc போன்று பல பணிகளை கொடுக்கலாம். ஆனால் இதெற்கெல்லாம் நல்ல proactive thinking உடைய அதிகாரிகளும், அரசியல் வாதிகளும் தேவை. நம் சட்டமன்றத்தில் நமீதா இடுப்பு வளைத்து டான்ஸ் ஆடுவதை பற்றி பேசி கொண்டு இருக்கிறார்களே.
இவர்களையெல்லாம் 400 பெரியார் வந்தாலும் திருத்த முடியாது. :)
அருண்
"Microsoft Encarta" மற்றும் "Prof. Paul Courtright" கூறியவற்றைப் பற்றிப் பேச வேண்டுமென்றான் இடம் பொருள் ஏவல் எல்லாம் தெரிய வேண்டும். ஏதேனும் சுட்டி உண்டா?
ஏதும் இன்றி பதில் சொல்ல இயலாது. கொடுப்பீர்கள் என்ற எண்ணத்தில் கேள்விகளை அடுத்த பதிவுக்கான வரைவில் சேர்த்துள்ளேன். ஆவன செய்ய முயற்சிக்கவும். அனானியாகவே வந்தாலும் பெயரையாவது கூறவும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//சுனாமி எச்சரிக்கை பற்றி எனது கருத்து.
பொதுவாகவே நமது கடற்கரைகள் பாதுகாப்பு அற்றதாகவே இருகின்றன.
அதனால் கடற்கரை பாதுகாப்பு மையம் என்று ஒன்றை எல்லா பெரிய கடற்கறையிலும் நிறுவலாம். அவர்களது பணி என்பது சுனாமி எச்சரிக்கை தவிர்த்து ஆபத்து காலங்களில் உதவுதல், கடற்கரை ரோந்து....etc போன்று பல பணிகளை கொடுக்கலாம்.ஆனால் இதெற்கெல்லாம் நல்ல proactive thinking உடைய அதிகாரிகளும், அரசியல் வாதிகளும் தேவை. நம் சட்டமன்றத்தில் நமீதா இடுப்பு வளைத்து டான்ஸ் ஆடுவதை பற்றி பேசி கொண்டு இருக்கிறார்களே.
இவர்களையெல்லாம் 400 பெரியார் வந்தாலும் திருத்த முடியாது. :)
அருண்//
அருண், கருத்துக்கு நன்றி..
Microsoft Encarta is a digital multimedia encyclopedia published by Microsoft Corporation.
On the CD/DVD version (maybe on the web version too) lookup the articles on Tamil People & Hinduism and you will find the "facts" I mentions earlier. I found it in the 2002/2003/2004 versions of it, maybe they have changed it by now (I use Wikipedia now) but I am sure they have not.
As for "Paul Courtright" he is the person who published this book. The Mahabaratha "fact" is found in this book.
http://sankrant.sulekha.com/blog/post/2003/12/courtright-twist-and-academic-freedom.htm
டோண்டு சார்,
1)2020ற்குள் இந்தியா வல்லரசு ஆகுமா?
2)இல்லையென்றால் நாம் எது எதில் பின் தங்கியிருக்கிறோம்?
http://video.google.com/videoplay?docid=3369102968312745410&hl=en
இதைப்பற்றிய உங்கள் கருத்து ?
நான் கொடுத்த சுட்டிய உடனடியாகக் கிளிக் செய்து பார்த்துவிடவும்,
இஸ்லாமிய ஜனநாயக வாதிகளும், இடது சாரி இம்சைகளும் இணைந்து அந்தப் படத்தை இண்டர் நெட்டைவிட்டே தூக்க பெரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
வஜ்ரா அவர்களே,
அந்த 17 நிமிடப் படம் ஒரு நிமிடத்துக்கு மேல் டௌன்லோட் ஆக மறுக்கிறது. பை தி வே, அதன் சுருக்கத்தை கூறவும். வேறு ஏதாவது சுட்டி?
அன்புடன்,
டோண்டு ராகவன்
அந்தப்படத்தைப் பற்றிய விக்கிப்பீடியா சுட்டி
http://en.wikipedia.org/wiki/Fitna_(film)
So the Muslims suceeded in getting the film off the air!!!
Regards,
Dondu N.Raghavan
Not yet, its still available as torrents download in mininova
http://www.mininova.org/tor/1278746
And Google video's has not removed it officially. Youtube also is hosting the video.
Dravidian fascists will soon take this issue and join hands with islamo-fascists and froth anti-western sentiments in their news papers and blogs.
கர்ப்பிணி பெண்களை கூட கொன்றவர்கள் (அதை ஒப்புக்கொண்டப்பின்) கைது செய்யப்படாமல் சுதந்திரமாக நடமாடும் அளவிற்கு சில மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளதே. இப்படி இருந்தால் இந்தியா எப்படி முன்னேறும்
தமிழ் பொழி கடவுளிற்கு புரியாது என்று கூறும் கோ ஏன் சமஸ்கிருதத்தில் பத்திரிகை நடத்தாமல் தமிழில் (அவரது கூற்றுப்படி நீச மொழியில்) நடத்துகிறார்
சிங்கப்பூருக்கு இரண்டு டிக்கெட் இலவசமாக கிடைத்தால் பாஸ்போர்ட் எடுப்பீர்களா ?
has left a new comment on your post "டோண்டு பதில்கள் - 28.03.2008":
//
கர்ப்பிணி பெண்களை கூட கொன்றவர்கள் (அதை ஒப்புக்கொண்டப்பின்) கைது செய்யப்படாமல் சுதந்திரமாக நடமாடும் அளவிற்கு சில மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளதே. இப்படி இருந்தால் இந்தியா எப்படி முன்னேறும்
//
திராவிட குஞ்சு, தெஹல்கா எத்தகையதொரு பிரச்சாரப் பேப்பர் என்பதை அறிந்தால் இப்படி பேசமாட்டாய்.
காங்கிரஸ் சோனியாவின் கைப்பாவை தெஹல்காவின் ஆசிரியர். அவர்கள் செய்த கூத்து back fire ஆகி இன்று மோடி வெற்றிபெற்று முதலமைச்சராக இருக்கிறார். நீர் மூடிக் கொண்டு இருப்பதே சாலச்சிறந்தது. இல்லையென்றால் இதே போன்ற தர்மசங்கடக் கேள்விகள் திராவிடர்கள் ஆட்சிக்காலத்தில் நடந்தத்தை வைத்து கேள்வி வரும்.
திராவிட வெறியர்களைக் கண்டிக்கும் சங்கம்
//தமிழ் பொழி கடவுளிற்கு புரியாது என்று கூறும் கோ ஏன் சமஸ்கிருதத்தில் பத்திரிகை நடத்தாமல் தமிழில் (அவரது கூற்றுப்படி நீச மொழியில்) நடத்துகிறார்//
தமிழ் பொழி என்றால் என்ன ?
கோ என்றால் யார் ?
அவர் நடத்தும் பத்திரிக்கை பெயர் என்ன ?
கோ என்பவர் தமிழ் ஒரு நீச மொழி என்று எங்கு, எப்போது, இயம்பியிருக்கிறார் ?
திராவிட வெறியர்களைக் கண்டிக்கும் சங்கம்
தமிழ் பொழி கடவுளிற்கு புரியாது என்று கூறும் சோ ஏன் சமஸ்கிருதத்தில் பத்திரிகை நடத்தாமல் தமிழில் (அவரது கூற்றுப்படி நீச மொழியில்) நடத்துகிறார்
Hi,
Poi edhavadhu vellai vetti parunga da ,,dondu retired kelam adhu eadho time pass pannudhu ningalam eaan unga time vesatu panddringal.
Regards
Raja
1. நீங்கள் ஏன் ஒரு முறை கூட வெளி நாடு செல்ல முயற்சிக்கவில்லை ?
2. ஜெர்மன், ஃப்ரெஞ்சு மொழிகள் கற்ற நீங்கள், அவர்க நாகரீகங்களைக் கற்காமல் மொழி பெயர்ப்பு செய்ய முடியாது என்பதை அறிவீர்கள். அவர்கள் நாகரீகங்களை நன்கு அறிய ஒரு முறையாவது ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளுக்குச் செல்ல விருப்பம் ஏற்பவில்லையா ?
அனைத்து சிறந்த விஞ்ஞானிகளும் நீயுட்டன் தொடங்கி ராமானுஜம் வரை, ஐயந்தைன் தொடங்கி ஹௌகின்ஸ் வரை இறை நம்பிக்கை உள்ளவர்களாக தான் இருந்துள்ளார்கள். அப்படியிருக்க என் இந்த பகுத்தரிவு கூட்டம் மட்டும் இப்படி அலைகிறது?
\\தமிழ் பொழி கடவுளிற்கு புரியாது என்று கூறும் சோ ஏன் சமஸ்கிருதத்தில் பத்திரிகை நடத்தாமல் தமிழில் (அவரது கூற்றுப்படி நீச மொழியில்) நடத்துகிறார்//
ஏண்டா இப்டி வெளங்காத்தனமா கேள்வி கேக்குற? சோ எப்பவோ ஏதோ சொன்னத இன்னும் ஏண்டா புடிச்சுத் தொங்குற? அது சரி, துக்ளக் யாரு படிக்கிறா?
டோண்டு சார்,
தமிழ்நாட்டுல சட்டம் ஒழுங்கு கெட்டுப் போச்சு, அதுனால எல்லாரும் மூணு அங்குலத்துல கத்தி வச்சிருக்கணும், அத எப்படி யூஸ் பண்ணத் தெரிஞ்சிருக்கணும்னு தா. பாண்டியனும், நல்ல கண்ணுவும் சொல்லீருக்காங்களே? ஆயுதப்பயிற்சி வேணும்னு இப்படி கூவுறவுங்க, ஆர் எஸ் எஸ் ல தற்காப்புக்காக சொல்லித் தர்ற தற்காப்புக் கலைகளை விமர்சனம் செய்யிறாங்களே? இது இவர்களின் இரட்டை நிலையை விளக்கவில்லையா? இதை பர்றி உங்கள் கருத்து என்ன?
சென்னை வந்தால் உங்களை சந்திக்கலாமா என்று அனுமதி கேட்ட அனானி.
Dear Mr. Raghavan,
I can not type in tamil because i dont have that software installed. I have a question for you though.
Why Srivaishnavites (hardcore Iyengars) do not go to Shiva temples?
When you remove the Ego (basic thing) then only you can have Moksham. The moment Srivaishnavites say Lord Narayana is supreme, the Ego comes.
If only Lord Narayana can give Moksham only Iyengars will be in Vaiguntam. This seems to be not alright.
Would you share your thoughts if you have any?
//
அனைத்து சிறந்த விஞ்ஞானிகளும் நீயுட்டன் தொடங்கி ராமானுஜம் வரை, ஐயந்தைன் தொடங்கி ஹௌகின்ஸ் வரை இறை நம்பிக்கை உள்ளவர்களாக தான் இருந்துள்ளார்கள். அப்படியிருக்க என் இந்த பகுத்தரிவு கூட்டம் மட்டும் இப்படி அலைகிறது?
//
யாரிடம் எது இல்லையோ அதை இருப்பதாக அனைவரிடம் மறுபடியும் மறுபடியும் சொல்லி ஏமாற்றுபவர்கள் தான் கலியுகத்தில் வாழ்கிறார்கள்.
பத்துப் பைசா பிரயோசனமில்லாதவன் தான் ஒரு மிகப்பெரும் பணக்காரன் என்று சொல்லி ஏமாற்றுவான். அவனைப் போலுள்ளவனை தமிழ் சினிமா ஹீரோவாகச் சித்தரிக்கும்.
தங்கள் மதம் தான் உண்மையான மதம், சத்தியமார்க்கம், அமைதி மார்க்கம் என்று சொல்லிக் கொண்டு ஒரு கூட்டம் அலையும். ஆனால் அமைதி, உண்மை, சத்தியம் போன்ற வார்த்தைகளுக்கும் அந்த மதத்திற்கும் உள்ள வேறுபாட்டை உணற நாம் குறைந்த பட்சம் முக்கால் குருடனாக இருந்தாலே போதும்.
ஏழ்மையை ஒழிப்பதே முழுமுதற் கொள்கை எனக்கூறிக் கொண்டு செங்கொடி தாங்கி ஒரு கூட்டம் அலையும். அதன் கொள்கைகள் ஒவ்வொன்றும் ஏழ்மையை மக்களுக்கும், செல்வத்தை தங்களுக்குள்ளும் பங்கு போட்டுக்கொள்வார்கள்.
மதச்சார்பின்மை என்று சொல்லிக் கொண்டு அலையும் மதவாதக் கும்பல் போலத்தான் பகுத்தறிவுக் கொள்கை என்று சொல்லிக் கொண்டு அலையும் கூட்டமும். பகுத்து அறியும் அறிவு கிஞ்சித்தும் இல்லாமல் இருப்பவர்களே பகுத்தறிவு வாதிகள்.
"பெண்களைக் கவருவது எப்படி?" என்கிற கேள்விக்கு டோண்டுசித்தன் எழுதிய பாடல், பல அப்பாவி இளைஞர்களுக்குப் புரியவில்லை. புரியும்படி பதில் தரவும்.
> dondu(#11168674346665545885) said...
>So the Muslims suceeded in getting the film off the air!!!
>Regards,
>Dondu N.Raghavan
http://video.google.com/videoplay?docid=3369102968312745410&hl=en
http://wikileaks.org/wiki/Fitna_anti-islam_movie_by_Geert_Wilders
தமிழ் வலைப் பதிவுகள் அனைத்தும் தமிழ்மணத்தில் இடம் பெறுமா? தமிழ் மணம் என்பது என்ன என்றே ஒன்றும் புரியவில்லை. வலைப்பதிவுலகத்தைப் பற்றிய அறிவில் ஒரு நிரட்சர குட்சி என்றே வைத்துக் கொண்டு பதில் கூறவும். (மற்றதில் மட்டும் என்ன வாழ்கிறதாம் என்று கேட்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன்)
டோண்டு சார்,
இதுவரை உங்கள் பதிவுகளுக்கு வந்த பின்னூட்டங்களின் எண்ணிக்கை எவ்வளவு? ஏதாவது கணக்கெடுத்து வைத்திருக்கிறீர்களா?
அன்புடன் அனானி (இனிமேல் இப்படியே குறிப்பிடுகிறேன்).
Post a Comment